Pages

Monday, June 13, 2011

ஊழலை ஒழிக்க சுஷ்மா சுவராஜ் ஆடிய தேசபற்றுள்ள டான்ஸ்


ஏறக்குறைய மூன்றுமுறைகள் தடை செய்யப்பட ஒரு தேசவிரோத பயங்கரவாத இயக்கம்தான் ஆர் எஸ் எஸ்..
அந்த பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸின்  இன்னொரு பயங்கரவாத அரசியல் கிளைதான் பார"தீய" ஜனதா.

ஆர் எஸ் எஸ்ஸின் கைப்பாவை ராம்தேவ் பாபா உண்ணாவிரதம் என்ற பெயரில் ஆடிக்கொண்டிருக்கு நாடகத்திற்கு - அவனை கைது செய்ததற்காக - பார"தீய" ஜனதா - காந்தி சமாதியில் ஒரு ஆர்பாட்டம் நடத்தியது.
இந்த கேலிக்கூத்தை விமர்சித்து ஒரு பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் தாமதமாகி விட்டதாலும், அதைவிட ஒரு சிறந்த பதிவை நண்பர் ஒருவர் அனுப்பிவைத்திருந்ததாலும் - அந்த பதிவை அப்படியே தருகிறேன்..

நன்றி  "பயனுள்ள தகவல்கள்" :


ஜனநாயக படுகொலையை கண்டித்து சத்தியாகிரகம் நடத்துகிறார்களாம்? விளங்கிடும் ஜனநாயகம். அப்புடியே 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுங்க நாடாளுமன்றத்திலும் ஒரு குத்தாட்டம் பார்க்கலாம், உள்ளிருப்பு போராட்டம் நடத்துனா ஒரு குழு டான்ஸ் பார்க்க உதவும்ள்ள.



ஏற்கனவே வழுவான எதிர்கட்சி இல்லாமல் சிக்கி சிரழிந்து வரும் இந்திய ஜனநாயகத்தை தூக்கி நிறுத்துகிறேன் என்று ப.ஜா.க நடத்திய சத்தியாகிரகத்தில் நடந்த கூத்துதான் இந்த சம்பவம்.

ஏன் இந்த நடனம் என்று கேட்டால் "உயிருள்ளவரை தேசபக்தி பாடலை கேட்டால் டான்ஸ் ஆடிக்கொண்டே இருப்பேன்" என்று சொல்கிறார் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர்.


சுஷ்மா சுவராஜிடம் இவ்வளவு திறமை கொட்டிக் கிடப்பதை பாலிவுட் இதுவரை அறியாமல் போனது பெரும் இழப்பு. காந்தி சமாதியில் அவர் வெளிப்படுத்திய நளினமான நடன அசைவுகள் அங்கே திரண்டிருந்த பாரதிய ஜனதா கட்சிக்காரர்களை எந்த அளவுக்கு குதூகலிக்கச் செய்து கரகோஷமிட வைத்ததோ, அதற்கு சற்றும் குறைந்ததல்ல டீவியில் அந்த காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பும்போது பார்த்து ரசிக்கும் சாதாரண மக்களின் பாராட்டும்.

அதற்காக சுஷ்மாவின் கட்சியே நாட்டியக்காரர்களின் கட்சியாகி விட்டது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சொல்வதை ஏற்பதற்கில்லை. நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் இன்னும் பிற தலைவர்களிடம் மறைந்திருக்கக்கூடிய ஆற்றல் நாடறியாதது ?. காந்தியின் சமாதியில் ஆட்டமும் பாட்டமும் அடுக்குமா என்ற கேள்விக்கு சுஷ்மா காட்டமாக பதிலளித்திருக்கிறார். ‘தொண்டர்கள் கோரசாக தேசபக்தி பாடல்களை பாடினார்கள். அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆடினேன். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஆடுவேன். அது என் உரிமை’ என்கிறார். மாபெரும் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராயிற்றே, அவருக்கு இல்லாத உரிமையா?

இந்திரா காந்தி, சோனியா காந்தி இதுவரை ஆடவில்லையாக்கும் என்று பதிலுக்கு கேட்கிறார். அவர்கள் நாட்டுப்புற கலைஞர்களோடு கைகோர்த்து நடன அசைவுகள் கொடுத்ததை நாம் பார்த்திருக்கிறோம். காந்தி சமாதியில் போராடச் சென்று டான்ஸ் ஆடியதாக நமக்கு தகவல் இல்லை. ஆடுவது நமது கலாசாரத்தின் பிரிக்க முடியாத அம்சம்; அதில் இடம் பொருள் ஏவலுக்கு வேலையில்லை என்று பாடம் எடுக்கிறார் சுஷ்மா. சென்னை நகர வீதிகளில் இறுதி ஊர்வலம் செல்லும்போது வாகன ஓட்டிகளை மிரள வைத்து உற்சாக ஆட்டம் போட்டு செல்பவர்கள் சுஷ்மாவின் மேலான கருத்தை வரவேற்பார்கள்.

அகிம்சை போராட்டம் என்று அறிவிப்பு கொடுத்துவிட்டு ‘தொண்டர்கள் எல்லாரும் துப்பாக்கி ஏந்தி வாருங்கள், ராம்லீலா மைதானத்தில் நாம் ராவண லீலா அரங்கேற்றலாம்’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறார் காவியுடை தரித்த ஒரு பாபா. அவருக்கு ஆதரவு தெரிவிக்க காந்தி சமாதியில் புறப்பட்டு ஹரித்வார் ஆசிரமத்தை அடைந்திருக்கிறார் சுஷ்மா. யாத்திரையின் இலக்கு தெளிவாகவே தெரிகிறது.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள் ஏற்கனவே அழிந்துவரும் ப.ஜா.க கட்சியை இவர்போட்ட ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம்






1 comments :

மர்மயோகி said...

நன்றி திரு jesus Joseph

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?