இன்று விமானநிலயத்திர்க்கு வந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்தை மறித்து - நேற்றும் இன்றும் அவர்கட்சி எம் எல் ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்தது தொடர்பான கேள்விகளுக்கு ஆவேசமான விஜயகாந்த், நிதானமிழந்து - பத்திரிக்கையாளர்களைப்பார்த்து "போடா நாயே....உன் பத்திரிக்கையாட எனக்கு சம்பளம் தருது?" என்று ஆவேசமாக நிதானம் இழந்து கூச்சல் போட்டார்..
வெறும் நடிகனாக வந்த விஜயகாந்தை, ஒருபடத்தில் "கேப்டன்" என்று அழைக்கப்பட்டதால் (கேப்டன் பிரபாகரன்) இன்றுவரை கேப்டன் என்ற அடைமொழியை வைத்துக்கூப்பிட்டு, சினிமா நடிப்பை நிஜ வாழ்க்கையில் நுழைத்தும் மக்களை மூளைச்சலவை செய்துவந்த பத்திரிக்கைகளுக்கு - கொடுத்த காசுக்கு -நாய் போல நன்றியை காட்டிய பத்திரிக்கையாலர்களுக்க் இன்று விஜயகாந்த் "போடா நாயே" என்று விளித்ததின் மூலம் உண்மையை மக்களுக்கு சொல்லிவிட்டார்,,,
இந்த விஜயகாந்த் என்னத்தை கிழித்தார் என்று இவருக்கு "கேப்டன்" பட்டம் கொடுத்தார்கள்? பத்திரிக்கையாளன் கவர் வாங்கிக்கொண்டு தன நன்றி விசுவாசத்தை காட்டியதால்தான் இன்று இந்த விஜயகாந்த் இந்த நிலைக்கு வரமுடிந்தது. அதே நேரம் காசுக்கு கூழைக்கும்பிடு போடுபவன் - ஒரு நேரத்தில் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்.இன்று நாய் என்று அழைக்கப்பட்டது அதன் விளைவே..
இருந்தாலும் - ஆனந்த விகடனுக்கு - இன்னும் அதிக விசுவாசம் போல...விஜயகாந்த் ஜெயா டிவி நிருபர்களை திட்டியதை மட்டும் வெளியிட்டு - மற்ற செய்திகளை எடிட் செய்து தனது விசுவாசத்தை காட்டிக்கொண்டான். நாளைக்கு இதற்கும் வேறு ஏதோ விளக்கம் கொடுத்து தான் என்றும் - எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் நாய்தான் என்றும் நிரூபிப்பான்.
அது கிடக்கிறது ...மக்கள் நலனில் அக்கரைகொண்டா அந்த எம் எல் ஏக்கள் ஜெயாவை சந்தித்தார்கள்? ..விஜயகாந்த்தின், மூர்க்கமான ஜெயா எதிர்ப்பு நிலையால், மற்ற எம் எல் ஏக்களை போல தாமும் சம்பாதிக்க முடியவில்லையே என்ற சுய விருப்பன்றி வேறு என்ன இருக்க முடியும்?
விஜயகாந்த் தன்னால்தான் வெற்றிபெற்றார் என்று எண்ணிக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் பழிவாங்கும் முயற்சி இந்த அளவில் வெற்றி பெறுவதற்கு காரணமும் இந்த பணத்தாசை - பேராசை பிடித்த அரசியல் வியாதிகளுக்கு இருக்கிறது. இதை இந்த பத்திரிக்கைகள் வெளிகொண்டுவருமா?
ஆனால் அரசியல் வியாதிகள் விட்டெறிந்த எலும்புத்துண்டுக்கு - வாலாட்டியே பழக்கப்பட்டுப்போன இந்த ஆபாச ஊடகங்கள்- நாளை இவர்கள் நிலையையும் நியாயப்படுத்தியே செய்தி வெளியிட்டு - தமது விசுவாசத்தை காட்டி, விஜயகாந்த் கொடுத்த பட்டத்திற்கு தாம் ஏற்றவர்கள்தாம் என்று எப்போதும் நிரூபித்துகொண்டுதானிருக்கும் .
1 comments :
பின்னூட்டம் போடத்தெரியாதவர்கள் படித்த பதிவு இது..
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?