அனுபவக்கவிதை....
-------------------------
"பிள்ளைகளை இரண்டு சக்கர வாகனத்தில்
அழைத்துச் செல்கையில்
அருகில், பின்னாடி, எதிரில் வரும்
அனைத்து வாகன ஓட்டிகளும்
ராட்சசர்களாகவே தெரிகிறார்கள்.!"
தப்பு செய்தால்....?
-----------------
கடந்த வாரத்தில் அண்ணா மேம்பாலத்தை கடக்கையில் அமெரிக்க துணை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அண்ணா மேம்பாலத்திலும் வரிசையாக போலீஸ் பூத்த்கள் போடப்பட்டு காவல் துறையினர் பாத்துகாப்பில் ஈடுபட்டிருந்தனர் ..இன்னும் சிறிது காலத்தில் அண்ணா மேம்பாலம் அமேரிக்கா மேம்பாலம் என்றுகூட அழைக்கப்படலாம்..(தமிழர்களுக்கு அடிமையாவதில் அவ்வளவு மகிழ்ச்சி..)
அதைப்பார்க்கையில் - "என்னதான் உலக வல்லரசாக இருந்தாலும் தப்பு செய்தால் - தான் ஆடாவிட்டாலும் தன சதை ஆடும்" என்றுதான் தோன்றியது ..
கேடுகெட்ட கலாசாரம்.
-----------------------------
இது நமதூர் அழகிகள் டிவியிலும் சினிமாவிலும் டிச்கொத்தேக்களிலும் அவுத்துப்போட்டு ஆடுவது பற்றியல்ல.
சின்னத்திரைகளில், சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர் போன்ற கூத்தடிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு ஓட்டுப்போட - எஸ் எம் எஸ் அனுப்பவும் இணையதளத்துக்கு சென்று வாக்களிக்கவும் என்றும் சமீபகாலமாக அவர்களின் பெற்றோர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள்..இன்னும் இவர்களின் பேராசை எதில் போய் முடியப்போகிறதோ... தெரியவில்லை...
5 comments :
கவிதை நன்று அன்பரே
நன்றி அகல்
நல்ல கவிதை...
நன்றி திரு திண்டுக்கல் தனபாலன்
அருமையான பகிர்வு
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?