முதல்வன் என்ற திரைப்படம் கடந்த ஞாயிறன்று தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.
"தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் புகழேந்தி ஆகிய நான் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, எனது சுய வெறுப்பு விருப்புக்களுக்கு அப்பாற்பட்டு, பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே ஆட்சியை நடத்துவேன்!"
தனது தாய் தந்தையரை பாம் வைத்துக் கொன்ற எதிர்க்கட்சி தலைவரை - உணர்ச்சி வேகத்தில் கொல்ல புறப்பட்டு வரும் கதாநாயகன், மேற்கண்ட உறுதிமொழி நினைவிற்கு வந்தவுடன் தன்னை கட்டுபடுத்தி கொள்வதாக ஒரு காட்சி வரும்..
ஜெயலலிதாவின் அடிமையாக இருந்த இயக்குனர் ஷங்கர் கருணாநிதியின் இதற்க்கு முந்தைய ஆட்சி காலத்தில் இந்த படத்தை எடுத்திருந்தார்..அச்சமயம், மதுரையில் இப்படம எல்லா கேபிள் சேனல்களிலும் ஒளிபரப்பட்டு பரபரப்பாகி இருந்தது..
அதற்க்கு முன்பு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கவர்னராக இருந்த சென்னா ரெட்டி போன்ற ஒரு பாத்திரத்தை வில்லனாக சித்தரித்து ஷங்கரால் எடுக்கப்பட்ட படம் "காதலன்."
இப்படி சுய விருப்பு வெறுப்புக்களை தம் படங்களில் திணித்து வந்த ஷங்கரின் படத்தில்தான் இது போன்ற வசனம்..சரி சரி..அவர்கள் வியாபாரிகள்..அவர்களது நோக்கம் வியாபாரம்தான்..
ஆனாலும் "முதல்வன்" திரைப்படத்தில் இந்த காட்சியை பார்த்தபோது தற்போதைய ஜெயலலிதாவின் ஆட்சியையும் அவரது நடவடிக்கைகளும் இப்படிதான் இருக்கிறதா என்ற ஒப்பீடு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை..
தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது, பலநாடுகளாலும் விரட்டியடிக்கப்பட்ட பயங்கரவாதி நரேந்திர மோடி என்பவனை பதவி ஏற்ப்பு விழாவுக்கு அழைத்தது - முதல் கோணலாக அமைந்த அவரது ஆட்சி தொடர்ந்து அவரது சொந்த விருப்பு வெறுப்புக்களால் தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்...
மக்களில் கோடிக்கணக்கான வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்தது...
சமச்சீர் கல்வி குளறுபடி...
பதவி ஏற்பு விழாவிற்கு புறப்பட்ட ஒரு அமைச்சரே விபத்தில் மரணமடைந்தார்..அவரது மரணம் கொலையா விபத்தா எனபது இன்னும் குழப்பமாக உள்ளது..லாரியை பிடித்தோம் என்றார்கள்..ஓட்டுனரை பிடித்தோம் என்றார்கள்..அதற்குமேல் என்ன நடவடிக்கை எனபது இன்று வரை தெரியவில்லை..

தனது முதல் வேலையே சட்டம் ஒழுங்கை சரிசெய்வதுதான் என்று உறுதிமொழி எடுத்த ஜெயலலிதாவின் இரண்டு மாத கால ஆட்சியில் மட்டும் ஏராளமாக கொலைகளும், கொள்ளைகளும் நடப்பதை பார்க்கும்போது..., மேற்கண்ட உறுதிமொழி, சினிமா வசனம் - சினிமாவிற்காக எழுதப்பட்ட வசனம் எனபது போல அவர் நினைத்திருப்பதுபோல தெரிகிறது..
மின் வெட்டுக்கு காரணம் கருணாநிதிதான் என்று ஓலைமிட்டவர்களின் ஆட்சியில்தான் முன்பை விட மின்வெட்டு அதிகரித்துள்ளது...அதை மாற்ற என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை
கலைஞர் காப்பீட்டு திட்டம்..பெயரை மாற்றி இருக்கலாம்....ஆனால் திட்டத்தையே ரத்து செய்திருப்பது கலைஞர் என்று பெயரிட்டதினால்தான்..
தான் வெற்றிபெற்றது - மக்கள் கருணாநிதியின் - சொந்த விருப்பு மற்றும் வெறுப்புக்களால் - வெறுப்படைந்த மக்களின் கோபத்தின் வெளிப்பாடுதான் என்பதை அவர் சுத்தமாக மறந்து விட்டு வெற்றி மமதையில் இருக்கிறார்...
போகிற போக்கில் கருணாநிதி ஆட்சி காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் செல்லாது, அவரது ஆட்சி காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை குடியுரிமை கிடையாது, படித்த படிப்பு, வாங்கிய டிகிரி, வேலை, சம்பளம் எதுவும் செல்லாது என்ற அறிவிப்பு வந்தாலும் வரலாம்..

தட்டிகேட்கவேண்டிய "ஜனநாயகத்தின் நான்காவது தூண்களும்" ஆபாச பத்திரிக்கைகளாகி, பத்திரிகை விபச்சாரத்தில் மும்முரமாக இருக்கின்றன..
எதிர்க்கட்சிகளோ, ஜெயலலிதாவை எதிர்க்க திராணி இன்றி அவரது அப்பாயின்ட்மென்ட்டுக்காக இரண்டுமாதங்கள் வெட்டியாக காத்திருந்து சந்தித்த மகிழ்ச்சியில் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்க, விடுதலைப்புலிகளின் அடிமைகளான "புதிய தமிழ் பற்று வியாபாரிகளோ" தமிழ்நாட்டில் வேறு பிரச்சினையே கிடையாது எனபது போல இலங்கை பிரச்சினையை வைத்து மெரீனா பீச்சில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக்கொண்டு விளம்பரம் தேடிக்கொண்டிருக்கின்றன ..
தினசரிகளோ பிரபல நடிகனின் அடுத்த படத்தைப் பற்றியும், அவர் அடுத்த வாரம் வருவார், அடுத்த மாதம் வருவார் என்று அலறிக்கொண்டிருக்கின்றன..
அது போக, தயாநிதி மாறனின் பதவி பற்றியும், கருணாநிதியின் டெல்லி பயணம் பற்றியுமே எழுதி பரபரபூட்டுகின்றன..
உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இந்த குளறுபடிகளையும் தைரியமாக கேட்க வேண்டும்
இவைகளால் பாதிக்கப்படும் சராசரி தமிழனோ, டாஸ்மாக் கடைகளிலும், சினிமா தியேட்டர்களிலும், டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் தன காலங்களை கழித்துக் கொண்டிருக்கிறான்..