Pages

Saturday, April 16, 2011

செயலிழந்ததா தேர்தல் ஆணையம்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட கெடுபிடிகள், வழிநெடுக சோதனைகள்..பணப்பட்டுவாடா தடுக்கப்பட்டது, ஆளும் அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை இடுவதாக புலம்பல்கள்.

முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த முறை தேர்தல் பிரச்சாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன..பெரிய பெரிய கட் அவுட்களை காண முடியவில்லை.

இரவு முழுவதும் காட்டுக்கத்தல்கள் இல்லை, பொறுக்கிகளின் கூச்சல்கள் இல்லை..வீட்டுச் சுவர்களை அசிங்கப்படுத்தும் சுவர் விளம்பரங்கள் இல்லை..

ஓட்டுப் போடுவதற்கு பிச்சை போடுவதற்காக கொண்டுசெல்லப்பட்ட பெரும் பெரும் தொகைகளாக பணங்கள் பிடிபட்டன, வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன, அமைச்சர்கள், தொழிலதிபர்களின் வீடுகள் பாரபட்சமின்றி சோதனை செய்யப்பட்டன..

இந்த முறை பெரும்பாலான மக்கள் ஒட்டு போடுவதற்கென்றே ஊருக்கு புறப்பட்டு சென்ற ஆச்சரியமான காட்சியும் நடந்தது..


பொறுக்கிகளால் கள்ள வோட்டு போடா முடியவில்லை..மொத்தத்தில் இந்த ஆண்டு சட்டபேரவை தேர்தல் நம்பமுடியாத அளவுக்கு அமைதியாக நடந்தது..78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..

தேர்தல் ஆணையத்தின் செயலபாடுகள் பெருமளவில் பாராட்டப்பட்டன..
 
ஆனால் சினிமாக்கூத்தடிகள் விசயத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மிகவும் கேலிக்குரியதாக இருந்தது..


ரஜினிகாந்த் என்றொரு நடிகர் ஓட்டுப்போட வருவது ஏதோ வேற்று கிரகவாசி ஒருவன் வந்ததுபோல அவரின் அடிவருடிகள் அந்த வாக்குச்சாவடிக்குள் வந்து வால்பிடித்ததும் ஆபாச வியாபாரிகளான பத்திரிக்கைகளும்  ஏதோ அதிசய காட்சிபோல் அதை படம்பிடித்ததும் மிகவும் கேவலம்.

இந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? ரஜினி மக்களில் ஒருவர்தானே..

சாதாணமாக மக்கள் ஓட்டுபோட செல்லும்போது வெளியே நில்லுங்க சார், மொபைல் போனை ஆப் செய்யுங்கள் என்று கெடுபிடி செய்யும் இந்த அதிகாரிகள், ஒருவர் ஓட்டுப்போட வரும்போது இத்தனைபேரை காட்டுக்கூச்சளுடன் உள்ளே அனுமதித்தது சரியா? இதுதான் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டங்களா?

அதுவும் அந்த நபர் யாருக்கு ஒட்டுபோடுகிறார் என்பதை கூட தெளிவாக படமெடுக்கும் அளவுக்கு பத்திரிக்கையாளர்களையும் அந்த நடிகரின் அடிவருடிகளையும் வாக்குச்சாவடி உள்ளே அனுமதித்ததின் மூலம் தேர்தல் ஆணையம் தனது சட்டவிதிகளில் இருந்து தடுமாறி உள்ளதா?

இதற்கு ஆபாச தினத்தந்தியின் தலைப்பு என்னதெரியுமா?

ரஜினிகாந்தின் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவா? என்று தலைப்பிட்டிருக்கிறான்? இதையும் இந்த தேர்தல் ஆணையம் தட்டிகேட்குமா? ரஜினிக்கென்று  தனி வாக்குச்சாவடி அமைத்தது யார் ?
தேர்தல் ஆணையமா..அல்லது தினத்தந்திகாரனா?
 

12 comments :

அலைகள் said...

ரஜினி மட்டும் என்ன பெரிய பருப்பா ?!

கக்கு - மாணிக்கம் said...

//சாதாணமாக மக்கள் ஓட்டுபோட செல்லும்போது வெளியே நில்லுங்க சார், மொபைல் போனை ஆப் செய்யுங்கள் என்று கெடுபிடி செய்யும் இந்த அதிகாரிகள், ஒருவர் ஓட்டுப்போட வரும்போது இத்தனைபேரை காட்டுக்கூச்சளுடன் உள்ளே அனுமதித்தது சரியா? இதுதான் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டங்களா?
அதுவும் அந்த நபர் யாருக்கு ஒட்டுபோடுகிறார் என்பதை கூட தெளிவாக படமெடுக்கும் அளவுக்கு பத்திரிக்கையாளர்களையும் அந்த நடிகரின் அடிவருடிகளையும் வாக்குச்சாவடி உள்ளே அனுமதித்ததின் மூலம் தேர்தல் ஆணையம் தனது சட்டவிதிகளில் இருந்து தடுமாறி உள்ளதா?//தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள் பற்றி பாராட்டி பதிவு வேறு போட்டுவிட்டேன். ரஜினி ஒட்டு போடும் விஷயத்தில் ஏன் இந்த கேவலம் நடந்தது என்றே தெரியவில்லை. யாருடைய கவனக்குறைவு என்றும் தெரியவில்லை. அங்கிருந்த Proceeding Officer ரஜினி என்றதும் வாய் பிளந்துகொண்டு நின்றது கண்டிக்கக தக்கது. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் சறுக்கி விழுந்துள்ளது உண்மை.

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

saravanakumar said...

I am not a fan of rajnikanth. but why should we blame him for what happened there. its a mistake of photographers, press and the security officers who failed to stop them. But your wordings are against rajni more than the press who is responsible for this. Actors are behaving like god in tamilnadu, i accept. But press people who made them like that. And people like you are using every situation to point actors. They are your servants or what? go ask the politions who are actually your servants and who are questionable.

பாலா said...

இது நடக்காமல் தடுத்திருக்கப்பட வேண்டும். கண்டிக்கத்தக்க நிகழ்வு.

விக்கி உலகம் said...

தவறான நிகழ்வு நண்பா கண்டிக்கப்படவேண்டிய ஒன்று

vinai.theer said...

Have you noticed one thing in the news. When Karunanithi came to vote, no officers stood up. The same thing happened for Jayalalitha also. But when M.K.Azhagiri came to vote, all the officials(Men & Women) stood up.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள்
அலைகள்
கக்கு மாணிக்கம்
அருள்
saravanakumar
பாலா
விக்கி உலகம்
vinai.theer
ஆகியோருக்கும் இன்னும் பார்த்து சென்ற அனைவருக்கும்
நன்றி

Kumaran said...

its not wrong with dhinathanthi. dhinakaran dinamalar has also put the same topic. because as usual they want to use some name to get fame. even praveen kumar also using the same as topic when they discuss about this with central election commission

Sankar Gurusamy said...

இதுபோன்ற ஒரு கலாச்சாரத்தை நாம் ஏற்படுத்தி வைத்திருப்பது வருந்தத் தக்கது. நம் நாட்டில் யாராக இருந்தாலும் வருசையில் வரவேண்டும் என்ற நியதி எப்போது ஏற்படுமோ ??

http://anubhudhi.blogspot.com/

அதிரை புதியவன் said...

கூத்தாடிகளின் கூத்துக்களை கண்டும் காணமல் இருக்கும் .தேர்தல் ஆணையத்தை வன்மையாக கண்டிக்க வேண்டும் .

Jeyan Paarthasarathy said...

சில சினிமா கூத்தாடிகள் தமிழ் நாட்டின் சாபக்கேடு. இவர்களைப் பற்றி புதிதாக கதைப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் மக்கள் மனம் மாற வேண்டும். அப்பொழுதுதான் இந்த கூத்தாடிகளுக்கும், அடிவருடிகளுக்கும் தகுந்த பதில் கிடைக்கும்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?