Pages

Tuesday, December 31, 2013

மூடர் கூடம் - முட்டாள்களின் தேசம்சன் லைப் தொலைக்காட்சியில் பழைய படங்களை பார்ப்பது அலாதியான சுகம்தான்....
அப்படித்தான் எம்ஜியார் நடித்த  "நீரும் நெருப்பும்"  என்ற படமும், சிவாஜி கணேசன் நடித்த "திரிசூலம்" என்ற படமும் பார்க்க நேர்ந்தது....

அந்தகாலத்தில் சீரியசாய் பார்க்கப்பட்ட படங்கள் இன்று  விழுந்து விழுந்து சிரிக்கும்  விதாமாக இருப்பதுதான் வேடிக்கை...
நீரும் நெருப்பும் படத்தில் - இரட்டையர்களாக பிறந்த இரண்டு எம்ஜியாரில் அண்ணனனுக்கு அடித்தால் தம்பிக்கு வலிக்குமாம்...
அதிலும் அசோகனின் நடிப்பு உச்சக்கட்ட காமெடி....."இங்கே வாடா " என்று சொல்வதற்கு கூட 70 mm  அளவுக்கு வாயை இளிப்பது மகா கொடுமை...

ஆனால் எம்ஜியார் படங்களில் ஒரு குறிப்பிட்ட பார்முலாவை கடைபிடித்தே வந்து இருக்கிறார்...எக்காரணத்தை கொண்டும் தனது கைகளால் வில்லனை  - அவன் எப்படிப்பட்ட நரேந்திர மோடி (பயங்கரவாதி)யாக  இருந்தாலும்கூட தன்  கைகளால் கொலை செய்ய மாட்டார் ....ஒன்று அவனாக விபத்தில் சிக்கிக்கொள்ளவேண்டும்...அல்லது போலிஸ் கைது செய்து சட்டத்தின்படி தண்டிக்க படவேண்டும்...

அப்படித்தான் அவரது பெரும்பாலான திரைப்படங்களில் - இறுதிக்கட்ட காட்சியில், ஏராளமான டிரம்கள் அடைக்கப்பட்ட கிடங்குகளில் - சர்கஸ் போல குட்டிகாரணம் அடித்து போலிஸ் வந்தவுடன் அவைகள் கையில் ஒப்படைக்கும் வண்ணமாகதான் இருக்கும்...

வில்லன் என்பவன் எல்லாவிதமான அநியாயங்களும் செய்பவனாகவும், கதாநாயகன் என்பவன் தன்னை கடிக்கும் எறும்புக்கும் துரோகம் செய்யாதவனாகவும் - படங்களில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கான்பவனாகவுமே உருவாக்கம் செய்யப்பட்டார்கள்....(இந்த பார்முலா மட்டும் இன்றுவரை கடை பிடிக்கப்படுகிறது ) அதாவது கதா நாயகிகோ, அல்லது வேறு எவருகோ  பிரச்சினை எனில், படம் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் கூட கதாநாயகன் வரமாட்டான என்று நினைக்க வைக்கப்பட்டுள்ளோம்....இது தமிழனின் அனிச்சை செயலாகவே மாறிவிட்டது...அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, அண்ணா , கருணாநிதி  எம்ஜி ஆர், ஜெயலலிதா போண்டோரால் முதல்வராக ஆக முடிந்தது... இன்னும் சினிமா கூத்தாடிகள்தான் நாளைய முதல்வராக வரவேணும் என்று டாஸ்மாக் அடிமைகளின் லட்சியமாகவும் ஆனது.....

உலகத்திலேயே நல்லவன் மற்றும் மாவீரன் கதாநாயகன் மட்டும்தான்   என்ற பிம்பம்  சிறிதளவு சிதைக்கப்பட்டது சிவாஜி கணேசனின் படங்களில்.
கோழையாகவும், முட்டாளாகவும் , குடிகாரனகாவும், திருடனாகவும் கதாநாயகன் இருக்கலாம் என்று சிவாஜி கணேசன் படங்களில் காட்சிபடுத்தப்பட்டன..அதை சிவாஜி படங்களில் மட்டும் ஏற்றுக்கொண்ட - மறத் (துப்போன)தமிழன்  - அப்படி எம்ஜியார் நடித்ததாலோ நிராகரிக்க தயங்கவில்லை...

போறபோக்கில் திரிசூலத்தை மறந்து விட்டேன்.....

சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற படம் "திரிசூலம்"- 1980 களில்  மிக பரபரப்பாக பேசப்பட்ட படமும்கூட...

அதிலும் நாங்களெல்லாம் சிறு பிள்ளைகளாக  இருக்கும்போது, - சிறிய குதிரை வண்டிகளில் திரிசூலம் படத்திற்கான விளம்பரம் மிக பரப்பாக இருக்கும்.  "சிவாஜி - K.R. விஜயா "- தொலைப்பேசி காட்சிகளை பார்க்க தவறாதீர்கள் என்று விளம்பரம் செய்வார்கள்....

உணர்ச்சி பிழம்பாக சித்தரிக்கப்பட்ட அந்த காட்சியை சமீபத்தில் பார்க்கும்போது வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை....
"சுமதீ " என்று நடிகர்திலகம் சொன்னவுடன், டெலிபோன் ரிசீவரை தூக்கி போட்டு விட்டு அதைபிடிக்க முடியாமல் "K.R. விஜயா" துடிப்பது  நம்பர் ஒன்  நகைச்சுவை....

மீதி உள்ள இரண்டு சிவாஜிகள் அண்ணன் தம்பிகள்..அதில் ஒரு சிவாஜி குரும்புக்காரராம்...குறும்பு என்றால் முகத்தை அஷ்டகோணலாக அடிக்கடி மாற்றிகொள்ளவேண்டுமாம்...சகிக்க முடியவில்லை...
தனது தொப்பையை தூக்க முடியாமல் - காதல் காட்சிகளில் நடிப்பதை அந்தக்கால தமிழன் எப்படித்தான் சகித்துகொண்டானோ தெரியவில்லை....(அப்போது இப்போது உள்ளமாதிரி டாஸ்மாக் கடைகளும் அவ்வளவாக இல்லை...கள்ளுக்கடைகள்தான்  )

அதிலும் அந்த இறுதிக்காட்சி ..இதுபோன்ற வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவை காட்சி வேறு எந்த படத்திலும் வந்திருக்குமா எனபது சந்தேகமே...

இரண்டு சிவாஜிகளின் தாய் தந்தை, மற்றும் ஒரு சிவாஜியின் காதலி ஆகியோரை வில்லன்கள் கடத்திக்கொண்டு வைத்துக்கொண்டு, .மிரட்டுவார்கள்...அவர்களை காப்பாற்ற செல்லும் இரண்டு சிவாஜிகளும், "இரண்டு கைகள் நான்கானால் - இருவருக்கேதான் எதிர்காலம்" என்று பயங்கர ஜால்லியாக பாட்டுப்படிக்கொண்டு செல்வார்கள்.. தாய் தந்தையை காப்பாற்ற செல்லும் லட்சணம்...

படத்தின் காட்சிகள் டெல்லி மற்றும் காஷ்மீர் என்று சொல்லப்பட்டாலும், வில்லன், கதாநாயகன்,  கதாநாயகி,போலிஸ் என்று அனைவரும் தமிழில்தான் பேசிக்கொண்டு இருகிறார்கள்... ஒருவேளை  - ராஜ ராஜ சோழன் கிமு 25000 த்திலேயே காஷ்மீரை ஆண்டு கொண்டு தமிழை ஆட்சி மொழியாக்கி வைத்திருந்தானோ என்னவோ..யார் கேட்பது ..உட்டு  அடிக்க வேண்டியதுதானே....

இப்படி சிவாஜி எம்ஜியார் சகாப்த காலங்களிலேயே தொடர்ந்து  கமல் , ரஜினி என்ற கூத்தாடிகளின் காலங்களில் காதலில் காமத்தை அதிகம் வெளிப்படுத்துவதால் கமலஹாசன் காதல் மன்னன் என்னவும், சாராயத்தையும் , சிகரெட்டையும் பிரபலப்படுத்தி தமிழ்நாட்டு குடிகார இளைஞர்களை மேலும் பொறுக்கிகளாக மாற்றியதால் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் எனவும், தமிழக குடிகாரர்களாலும், ஆபாச பத்திர்க்கை நாய்களாலும் கொண்டாடப்பட்டனர்...

கமல், ரஜினி வரிசையை தொடர்ந்து, வில்லனாகவும், குடிகாரர்களாகவும் அறியப்பட்ட  விஜயகாந்த்,சத்யராஜ் போன்றோர்கள் மக்களுக்கு நல்லது செய்யும் உத்தமர்களாக - அதாவது குடிகாரனாக இருந்தாலும், திருடனாக இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும்,  - கதாநாயகன் என்றால் அவன் செய்யும் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே என்று முட்டாள் தமிழன் மூளை சலவை செய்யப்பட்டான்....

அந்த ஊடக பயங்கரவாதத்தின் தொடர்ச்சிதான், இன்று டாஸ்மாக்கில்  மூழ்கி,அரிவாளை தூக்கிக்கொண்டு வீரவசனம் பேசும் பொறுக்கிகள்தான் படத்தை தாங்கும் கதாநாயகனாகவும், அவனை உருகி உருகி காதலிக்கும் கதாநாயகி பேரழகியாகவும், இருக்கிறார்கள்....

2013 ஆம் வருஷத்தின் டாப் 10 மனிதர்கள் என்றதலைப்பில் - நீதிபதி சந்துரு அவர்களை குறிப்பிடும் அதே ஆபாச விகடன்,  "சிவகார்த்திகேநயன் என்ற கூத்தாடியையும் அதே லிஸ்டில் கொண்டு வந்து தனது ஆபாச அரிப்பை தீர்த்து கொண்டிருக்கிறான்...

NDTV  எனும் மிகக்கேவலமான டிவி சேனல் - சிறந்த மனிதர் என்று குடிகார கூத்தாடிகள்  ரஜினி, ஷாருக்கான் போன்றவர்களுக்கு இந்தியாவின் ஜனாதிபதியை வைத்து விருது வழங்கி தனது விபச்சார புத்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறான்.

ஒரு வருட இறுதி என்றாலே சினிமாதான் என்று தமிழனை மூளைச்சலவை செய்து அவனை மூடனாக்கி கொண்டிருக்கும் ஆபாசப்பத்திரிக்க்காகளும் இந்த முட்டாள் தேசத்தின் நான்காவது தூணாக ஆராதிக்கப்படும் அவலத்தை என்னவென்று சொல்லலாம்?

தாம் செய்வது தேச துரோகம் என்று கூட விளங்காமல், விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்காக ஊளையிடும்  தன்மான(மிழந்த) தமிழன்,  சாலைகளில் சக தமிழனைப் பார்த்து முதலில் பேசும் வார்த்தையே "ங்கோ ...தா....தே .....யலே  " என்ற தமிழ் தேசிய வார்த்தைகள்தான் என்பதை  எத்தனை டாஸ்மாக் அடிமைகள் உணர்ந்திருக்கிறார்கள்?

இதோ தமிழ்பற்றை வளர்க்க, 2014 ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்க டாஸ்மாக் கடைகளை நோக்கி விரைந்து விட்டான் மரத்துப்போன தமிழன்.....

நாளைமுதல் குடிக்கமாட்டேன் என்று சபதமெடுக்க போகிறான்....
கோவில்களிலும் சர்ச்சுகளிலும் அதிகாலையிலேயே நின்று தனது பக்தியை வெளிப்படுத்திவிட்டு எப்போதடா மாலை வரும் டாஸ்மாக் கடைக்கு செல்லாமாமே என்ற எண்ணத்தில் புத்த்டாண்டை துவக்கும் அனைத்து டாஸ்மாக் தமிழனுக்கும் .....WISH YOU HAPPY NEW YEAR.. வாழ்க தமிழ்....


Tuesday, December 24, 2013

போதையில் கரையும் தமிழ் சினிமா... !தள்ளாடும் தமிழகம்
சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவன் சொல்வான். மணி ஒன்பது அம்பதாச்சு. பத்து மணிக்கு கடை மூடிருவான்.

தியேட்டரில் ஒரே விசில் சத்தம், கைத்தட்டல். உயிரே போனாலும் பத்து மணிக்குள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வேண்டும் என்ற அவனின் சின்சியாரிட்டிக்கு ரசிகர்கள் செய்த மரியாதைதான் அந்த விசிலும், கைத்தட்டலும். அதிக ரசிகர்களை ஈர்க்க வேண்டும், கமர்ஷியலாக பல மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதிக சிரமமில்லாமல் தங்களின் நோக்கத்தை நிறைவு செய்யவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் எளிதாக ரசிகர்களை பரவசப்படுத்த இயக்குனர்கள் இப்போது அதிகம் நம்புவது டாஸ்மாக் காட்சிகளைதான். பிராந்தி பாட்டிலை காண்பித்தாலே திரையரங்குகள் ஆர்ப்பரிக்கின்றன.

இருபது வருடங்களுக்கு முன் குடி ஒரு மோசமான செயலாக நமது சமூகத்தில் பார்க்கப்பட்டது. அன்று திரைப்படங்களில் குடி என்பது ஒருவரின் குணத்தை வெளிப்படுத்தும் விஷயமாக கையாளப்பட்டது. அதாவது வில்லன்கள் மட்டுமே எப்போதும் மதுக்கோப்பைகளுடன் இருந்தார்கள். கதாநாயகன் தவறு செய்வதாக காட்சி வந்தால் குடி போதையில் அந்தத் தவறை செய்வதாக காட்டினார்கள். அதாவது போதைதான் அவனை தவறு செய்ய வைத்தது என்பதாக. நடைமுறை வாழ்க்கையிலும் இன்று போல் குடி இயல்பான ஒன்றாக ஆகியிருக்கவில்லை. குற்றவுணர்வுடனே மதுவிடுதிகளை அன்று நாடினர்.

கடந்த இருபது ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் மதுவை ஒரு அத்தியாவசிய பண்டமாக ஆக்கிவிட்டார்கள். ஒரு தலைமுறையை குடிகாரர்களாக மாற்றிய பெருமை இரு திராவிட காட்சிகளுக்குமே உண்டு. சமூக அளவில் மது குறித்து இருந்த மனத்தடைகளையும், குற்றவுணர்வுகளையும் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள் இல்லாமலாக்கிவிட்டன. குடி இன்று ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.

1983ல் மது விற்பனை 180 கோடியாக இருந்தது. இருபது வருடங்களில் அதாவது 2003ல் அது 3,600 கோடியாக உயர்ந்தது. 2013ல் 22,000 கோடிகள். உலகில் எந்தவொரு வியாபாரமும் இப்படியொரு வளர்ச்சியை கண்டதில்லை. தமிழகத்தைவிட ஒன்றரை மடங்கு ஜனத்தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் மதுவினால் கிடைக்கும் வருவாய் 11,500 கோடிகள். தமிழகத்தில் அதுவே 22,000 கோடிகள். தமிழ்நாட்டின் குடிவெறிக்கு இதுவொரு சின்ன உதாரணம். 


குடியே கூடாது என்று சொல்லும் ஒழுக்கவாதியோ, மதுவை அறவே தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் காந்தியின் லட்சியவாதியோ கிடையாது நாம். அதேநேரம் இந்தப் பழக்கத்தின் அசுர வளர்ச்சி அச்சப்படுத்துகிறது. 

குடி ஒரு பழக்கமாகிவிட்டது என்றோம். அதுதான் பிரச்சனையின் அடிப்படை. பழக்கம் என்பது நாம் சிந்தித்து நடைமுறைப்படுத்துவது இல்லை. அது நம்மையறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொள்வது. இருபது வருடங்களுக்கு முன் மெழுகுவர்த்தி ஊதி அணைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது அரிது. ஆனால் இன்று அந்த சம்பிரதாயத்தை கடைபிடிக்காத குடும்பங்களே இல்லை. 

கேக், மெழுகுவர்த்தியுடன் தலையில் வைக்கும் குல்லா முதற்கொண்டு அதற்கான எக்ஸ்ட்ரா தளவாடங்கள் விற்பனை இன்று மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கிறது. இன்று நாம் விரும்பாவிட்டாலும் அந்த சம்பிரதாயத்தை செய்ய வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். பழக்கத்தினால் வரும் முக்கியப் பிரச்சனையே அதுதான். நாம் விரும்புகிறோமா இல்லையோ அதை நாம் செய்ய பழக்கப்படுத்தப்படுகிறோம்.இன்று குடியை நாடும் பெரும்பாலான இளைஞர்கள் குடியை தேர்ந்தெடுத்தவர்கள் என்பதைவிட குடிக்கு பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் சரி. சென்ற தலைமுறையை ஓரளவு குடிப்பழக்கத்திலிருந்து தடுத்தது, சமூகம் குடி குறித்து உருவாக்கி வைத்திருந்த, குடி மோசமான செயல் என்ற மதிப்பீடும், அந்த மதிப்பீடு உருவாக்கிய குற்றவுணர்வும்தான். அதனை இல்லாமல் செய்ததில் கடந்த இருபதாண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

சினிமாவுக்கும் அதில் கணிசமான பங்குண்டு. நிஜத்தைதானே சினிமாவில் காண்பிக்கிறார்கள் என்று சப்பைகட்டு கட்ட முடியாது. நிஜத்தை சினிமா பிரதிபலிக்கிறதா இல்லை சினிமாவைப் பார்த்து நிஜத்தை உருவாக்குகிறார்களா என்பது பதில் கிடைக்காத கேள்வி. ஆறு இரு கரைகளையும் இணைக்கிறதா இல்லை பிரிக்கிறதா என்பது போல. கரைகளை பிரிப்பதும் ஆறுதான், இணைப்பதும் ஆறுதான். குடி விஷயத்தில் யதார்த்தமும், சினிமாவும் ஒன்றையொன்று ஒத்திசைந்து தம்மை வலுப்படுத்திக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற தலைமுறை சினிமாவில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிற, கொலை செய்கிற வில்லன்கள்தான் மது அருந்தினார்கள். மது கெட்ட மனிதனின் அடையாளமாக இருந்தது (குடிப்பவர்கள்தான் மோசமானவர்கள் அல்லது மோசமானவர்கள்தான் குடிப்பார்கள் என்ற அந்தக்கால சினிமா பார்வையிலும் நமக்கு உடன்பாடில்லை). பருந்து பார்வையில் சொல்வதானால் ஒருவன் கெட்டவன் என்பதை காண்பிக்க அவன் கையில் மதுக்கோப்பையை தந்தார்கள். ஆனால் இன்று காட்சிகள் மாறிவிட்டன. படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் அறிமுகமாவதே டாஸ்மாக் கானா பாடலில்தான்.

படத்தில் வரும் இளைஞன் ஏதாவது சாதித்தால் டாஸ்மாக்... காதலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக்... தோல்வி அடைந்தால் டாஸ்மாக்... காமெடி என்றால் டாஸ்மாக்... கானா பாடல் என்றால் டாஸ்மாக்... விழுந்தாலும் எழுந்தாலும் டாஸ்மாக். இன்றைய இளைஞனின் தவிர்க்க முடியாத உறுப்பாக டாஸ்மாக்கை மாற்றிவிட்டது தமிழ் சினிமா.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் விளம்பரங்கள் எப்படி நம்மை கன்ஸ்யூமராக மாற்றுகிறது என்பது பற்றி அலசப்பட்டது. அதில் பேசிய ஒரு இளம்பெண், சாக்லெட்டை கண் மூடி சுவைப்பதை பெருமையாக குறிப்பிட்டார். விளம்பரத்தில் கண்களை மூடி சாக்லெட்டை சுவைக்கும் பெண்ணை அவர் இமிடேட் செய்கிறார் என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. 

அந்த இளம்பெண்ணைப் போல இன்னதென்று அறியாமலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிற இளைஞர்கள்தான் இன்று அதிகம். சிந்தித்துப் பார்க்காமல் எதையும் சுவீகரித்துக் கொள்ளும் சமூகத்தை குடியிலிருந்து ஓரளவு தடுத்து நிறுத்துவது குடி குறித்த குற்றவுணர்வுதான். அந்த குற்றவுணர்வை நமது சினிமா இல்லாமலாக்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் குடியை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. அதன் இன்னொரு பக்கத்தை காட்டியதில்லை. குடி குறித்த குற்றவுணர்வை இல்லாமலாக்கியதற்கான பரிசுதான் திரையரங்குகளில் டாஸ்மாக் காட்சிகளுக்கு கிடைக்கும் விசிலும் கைத்தட்டல்களும்.தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்டால் வேறு எந்த மொழி திரைப்படமும் இப்படி குடியில் விழுந்து கிடக்கவில்லை. பெரும் குடிகாரர்கள் நிறைந்த கேரளாவிலும்கூட குடி சம்பந்தமான காட்சிகள் கதையோட்டத்தின் தேவையை முன்னிறுத்தி மட்டுமே வைக்கப்படுகின்றன. குடிக்காக காட்சிகள் அமைப்பது தமிழ் சினிமாவில் மட்டும்தான். ஒரு பள்ளி மாணவன் எவ்வித உறுத்தலும் இன்றி டாஸ்மாக்கில் மது அருந்துவதற்கான மனப்பக்குவத்தை தந்ததில் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.


இருபத்தைந்தாயிரம் கோடி இலக்கு நிர்ணயித்து சாராயம் விற்கும் நாட்டில் குடி குறித்த குற்றவுணர்வை இனி எதிர்பார்ப்பதற்கில்லை. குடியை வைத்து கைத்தட்டல் வாங்குகிறோமே என்று ஏதாவது இயக்குனர்களுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டால்தான் உண்டு.  

Thursday, October 24, 2013

ஆறு மெழுகுவர்த்திகள் - ஆண்மை தவறேல்.


ஒரு குழந்தையை தவற விட்டவனின் தவிப்பை அருமையாக சொல்லி இருக்கும் ஒரு படம்....

சில நாட்களுக்கு முன் ஆண்மை தவறேல் என்றொரு படம் வந்திருந்தது...ஏறக்குறைய அதே கதையம்சம்தான் படத்தில்....இறுதிக்காட்சியில் கூட தன்னை காப்பாற்றவரும் காதலனை "ஏன்டா இவ்வளு லேட்" என்று ஆண்மைத்தவறேல் படத்தில் கதாநாயகி கேட்பதுபோல, இப்படத்திலும் தன்னை காப்பாற்றவந்த தந்தையை " ஏம்ப்பா இவ்வளவு நாள் ?"  என்று இப்படத்தில் மகன் கேட்கிறான்.....அதில் பெண்களை கடத்தும் கதையை சொல்லி இருந்தாலும் பெண்களை எப்படி கடத்துவது என்பதை விலாவாரியாக சொல்லப்பட்டு இருந்தது...அனால் இதில் முழுமையாக குழந்தை கடத்தும் பயங்கரவாத நெட்வொர்கிங் மறுபக்கம் இரக்கமின்மை, மனிதாபிமானமின்மை போன்ற கோரங்களை இந்த படம் வெளிக்கொண்டு  வருகிறது...

படம் பார்க்கும் ஒவ்வொரு தாயும் தந்தையையும் பயம் கொள்ள வைக்கிறது.....

சில சினிமாத்தனங்கள்  இருந்தாலும், நன்றாக ஓடி இருந்தால் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கும்...

ஆனால், தறுதலை தனுஷையும் சொறிநாய் சூரிகளையும் , சிவகார்த்தி கேனயன்களையும்  , குடிகார நாய்களையும் ரசிக்கும் டாஸ்மாக் தமிழனுக்கு இதெல்லாமா முக்கியம்..?

Monday, October 14, 2013

நய்யாண்டி - விமர்சனம்...

எனக்கு சினிமா பார்ப்பதில் அவ்வளவாக ஆர்வமும் கிடையாது, நேரமும் கிடையாது.


ஆனாலும், ஒருவித எதிர்பார்ப்புடன் (நீங்களாகத் தொப்புளை நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாகமுடியாது)..…..

நையாண்டி படத்தையும் நஸ்ரியாவையும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்து- பார்த்துமாகிவிட்டது.

விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுந்த கதைதான்.

தனுஷுக்கு நஸ்ரியா மேல காதல். இவங்க ரெண்டு பேரும் சந்திச்சு, வழக்கம்போல நண்பர்கள் உதவியோட சினிமாத்தனம் பண்ணி…….. இவங்களுக்குள்ளே லவ் ஸ்டார்ட் ஆகிறதுக்குள்ள, நமக்குத் தூக்கம் ஸ்டார்ட் ஆகிடுது

ஒரு வழியாக் கல்யாணத்தை முடிச்சு வீட்டுக்கு வந்தா.... இன்னொரு பிராப்ளம். தனுஷுக்கு ரெண்டு அண்ணன்கள். நாற்பது வயசைத் தாண்டியும் கல்யாணம் ஆகாதவர்கள்.


அவங்களுக்கு மத்தியில….. நஸ்ரியாவைத் தன்னோட மனைவின்னு சொல்லாம வேறு பொய்யைச் சொல்லித் தங்கவச்சிட்டுப் பாத்தா……

மைதா மாவாட்டம் இருக்கிற நஸ்ரியாவைப் புரோட்டவாப் போட்டுச் சாப்பிட்டா எப்படி இருக்கும்கிற ஆசை அண்ணன்களுக்கு வத்துவிட….. தம்பி பதற….. கதை நத்தை மாதிரி நகறுது.

பாவம் நஸ்ரியா…. பாரம்பரியமிக்க, கட்டுக்கோப்பான ஒரு குடும்பத்திலிருந்து நடிக்க வந்த பெண் என்பதால்- தனுஷைக் கட்டிப்பிடிக்கிறார். முத்தம் கொடுக்கிறார். காமம் பொங்க ஒட்டி அணைக்கிறார். முழங்காலுக்கு மேலே புடவை பறக்க ஆடுகிறார். முன்னாலே பாடலுக்கு மட்டும் டூப் போடாத தொப்புளைக் காட்டுகிறார். மற்றபடி ஒன்றும் தப்பாக நடித்துவிடவில்லை.

படம் சரியான மொக்கை….. ஓடாது என்று உறுதியாகத் தெரிந்துகொண்டுதான்- தொப்புள் விளம்பரம் செய்திருப்பார்கள் போல.

படம் பார்க்க நினைப்பவர்கள்…..

பக்கத்துத் தியேட்டரில் ஓடும் ராஜா ராணிக்கோ அல்லது ஓநாயும் ஆட்டுக்குட்டிக்கோ போங்க….

தண்டணையிலிருந்து தப்பிச்சுக்கலாம்!.
 
(இது பேஸ்புக்கில் சுட்டது.....நான் படம் பார்க்கவில்லை...)

நன்றி - உதயசூரியன் (பேஸ்புக்)

Monday, September 23, 2013

தமிழ் பற்று வீரர்கள் நிறுத்தவேண்டியவை...


நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..

1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

2.யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும்.

3.எதற்காக இதை படிக்கிறோம் என்று தெரியாமலேயே உயர் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும்.

4.நம் வசதிகளுக்காக,நம் தேவைகள் சுலபமாக நிறைவேற அரசாங்க அலுவலங்களில் ஐந்து ,பத்து கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

5.படிப்பறிவு இல்லாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் நம் புலமையையும், வீரத்தையும் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

6.கேள்வி கேட்க வேண்டிய இடங்களில் கேட்காமல் இருப்பதை நிறுத்த வேண்டும்.

7.தாய் மொழி பேசுவது வெட்கம் என்றும், அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது பயனற்றது என்றும் நினைப்பதை நிறுத்த வேண்டும்.

8.டாஸ்மார் ன் வருமானத்தை கோடிக்கணக்கில் உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.

9.பெண்களை சோப்பு சீப்பு பவுடர் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை, சிகப்பு தான் அழாகான நிறம் என்ற முட்டாள் தனமான விளம்பரங்களை
மக்களிடம் திணிப்பதை நிறுத்த வேண்டும்.


10.ஆணாதிக்கம், பெண்ணடிமை, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளின் புரிதல் இல்லாமல் தொட்ட தொண்ணூறுக்கும் அவைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

11.ஆன்மிகத்தின் அர்த்தம் அறியாமல் அதை ஆயுதம் ஆக்குவதை நிறுத்த வேண்டும்.

12.கலாச்சார காவலர்கள் என்று பேர் வைத்துக் கொண்டு கலாச்சாரத்தை பாதுகாப்பது போலவே சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.

13.சினிமாவால் வாழ்க்கை பாதிக்க படாமல் இருக்க , முகநூலால் சுய முன்னேற்றம் முடங்காமல் இருக்க, எதற்குமே அடிமை ஆவதை நிறுத்த வேண்டும்.

# அவனை நிறுத்த சொல்லு , நான் நிறுத்தறன்னு சொல்லாம , நாம மாறினா இங்கு நிறையவே மாறும்.


நன்றி : Aathika Ashreen (facebook) 

Monday, September 16, 2013

முட்டாள்களின் மூடர் கூடமும், வருத்தப்பட வைத்த வாலிபர் சங்கமும்....!!!வலைத்தளங்களில் எவ்வளவுதான் பதிவர்கள் பல்வேறு பதிப்புகளிட்டாலும், புதிய புதிய பதிவர்கள் வந்து கொண்டிருந்தாலும் பெரும்பாலும்  சினிமா சம்மந்தப்பட்ட பதிவுகளே அதிகமதிகம் பார்க்கப்படுகின்றன எனபது வருந்தத்தக்க விஷயம் .

தமிழகத்தில் என்னதான் தமிழ் கலாசாரம், தமிழர் பண்பாடு என்று வாய்கிழிய சிலர் காட்டுக்கத்தல் போட்டுக்கொண்டிருந்தாலும், தமிழர் பண்பாடு, தமிழ்பற்று  எனபது சினிமாவிலிருந்து மட்டுமே வியாபாரத்திற்காக பயன்படும் வார்த்தைகளாகத்தான் இருக்கின்றவே ஒழிய நடைமுறையில் அவனவன் மேலைநாடுகளின்  காப்பியடித்த காலாசார வித்தகர்களா கவே இருக்கின்றனர்...

ஒன்றே  ஒன்று...தமிழ்பற்று எனபது விடுதலைபுலிகள்  எந்த மாபாதகசெயல்கள்  செய்தாலும் அது தவறல்ல என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும், இந்தியாவை காட்டிக்கொடுக்கும் தேச துரோகம் என்பதும் தான் இங்குள்ள அரசியல் வியாதிகள் இந்த டாஸ்மாக் தமிழர்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர்...

அதேபோல , தமிழ்நாட்டின் முதல்வனாக சினிமாக்கூத்தாடிதான் வரவேண்டும் என்பதும், முதல்வராக மட்டுமல்ல, எதிர்கட்சியாக , எதிர்கட்சியின் எதிர் கட்சியாக இன்னும் அனைத்து கட்சிகளுமே சினிமாக்கூத்தாடிகளை முன்னிறுத்தியே இருக்க வேண்டும்  என்பதும் இந்த டாஸ்மாக் தமிழகத்தின் தலைஎழுத்தாகிவிடது நமது சாபக்கேடுதான்....

அதனால்தான் பயங்கரவாதி  மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த சங்க்பரிவார பயங்கரவாதிகள் ரஜினி எந்த கூத்தாடியிடம் மண்டியிட்டுள்ளனர்....

இதற்க்கு முன் நான் "ஒரு நல்ல செய்தி ..ஒரு கெட்ட செய்தி..!" என்று எழுதிய ஒரு அரசியல் பதிவு, அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை எனபது இதற்க்கு நல்ல உதாரணம்....

ஆனால் இந்த பதிவு அதிகம் வாசிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது...காரணம் இதில்.."மூடர் கூடம்" மற்றும் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" ஆகிய சினமா பற்றிய விமர்சனங்கள் இடம்பெறுகின்றன....


மூடர்கூட ம் என்ற படம் மூடர்களால் எடுக்கப்பட்ட படம்தான் என்பதுடன், இதை விட மெதுவாக நகரும் படங்கள் வங்காள மொழியில்  கூட வந்திருக்காது .. இந்த படத்தை  எடுத்த முட்டாள்கள், அவர்கள் முட்டாள்களாக இருப்பதுடன், படம்பார்க்க வந்த அனைவரையும் முட்டால்களாக்கி  இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்...

திருடர்களை கதாநாயகர்களாக்கி,  இறுதியில் அவர்கள் நல்லவர்களாககாட்டும் இந்த மூடர்கள்,   இன்னுமொரு சமுதாய சீர்கேட்டை இந்த படத்தின் மூலம் விதைத்திருக்கிறார்கள் ....

நான்கு திருடர்களில் , சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்த திருடன், படம் முழுவதும் மெதுமெதுவாக பேசி அட்வைஸ் என்ற பெயரில் அறுத்துத் தள்ளுகிறான்....திருட்டுதொழிலை நியாயப்படுத்தி பேசுகிறான்....

சென்ட்ராயன் என்பவன் பார்க்க சகிக்கமுடியாத பொருக்கி மாதிரி இருக்கிறான்... அவனிடன் இப்படத்தின் இயக்குனர் எவ்வளவு காசு லஞ்சம் வாங்கினானோ தெரியவில்லை...அவனுக்கு கிளி மாதிர ஒரு அழகியுடன் டூயட் மட்டுமிலாமல், காட்டிப்பிடிக்கவும் வாய்ப்பு வழங்கி தனது மாமா விசுவாசத்தை காட்டுகிறான்....
அந்த குரங்கு ஒரு தமிழ்பற்று வசனம் ஒன்று பேசி விட்டு செல்கிறது.....

அடுத்த காட்டுமிராண்டிக்கு "முட்டாள்" என்று சொன்னால் மட்டுமே கோவம் வருமாம் ...

கதாநாயகனாக வரும் இயக்குனன்  தன்னை  10 வயதுகூட நிரம்பி இராத ஒரு சிறுமி காமம் வயப்படுவதாய் காட்டி தனது ஈனத்தனத்தை காட்டி தமது அரிப்பை தீர்த்துக்கொள்கிறான் ..

இன்னொருவன் தனது மாமன் வீட்டில் கொள்ளையடிக்க மற்ற மூன்று பொறுக்கிகளையும் கூட்டி செல்வதுதான் இப்படத்தின் மையக்கரு...

அவன் தனது  மாமன் மகளை ஒரு "பாய்" பையனுடன் அனுப்புவதுடன்  , அவன் ஒரு " பாய் " பெண்ணை காதலித்து தோல்வியடைந்ததாய்  ஒரு முன் கதை வேறு...

இதே போன்ற உப்புச்சப்பில்லாத முன்கதைகள் படத்தில் வரும் அனைத்து பொறுக்கிகளுக்கும் உண்டு....

வடநாட்டு பொருக்கி ஒருவனை பயங்கர வில்லன் போல காட்டி அவன் மூலம் தமிழ் பற்று வியாபாரம் செய்ய முயர்ச்சிப்பதுதான் உலகமாக நகைச்சுவை....

அதாவது இந்தியா முழுதும் அனைத்து மாநில மக்களும் ஹிந்தியை கற்றுக்கொண்டு தாய் மொழியை மறந்து விட்டார்களாம்,,,,தமிழ்நாடு மக்கள்தான் இன்னும் தமிழை  பேசிக்கொண்டிருக்கிறார்களாம் என்ற ஒரு காமெடி..

இயக்குனர் தமிழ நாட்டுக்கரந்தான என்ற சந்தேகம் வருகிறது...இங்குள்ள தமிழன்தான் டாஸ்மாக் கடைகளில் உருண்டு பெரண்டு ஆங்கில அடிமைகளாகி இருப்பது தெரியவில்லை போலும்,,,,அல்லது விடுதலைபுலி பயங்கரவாதிகளின் தமிழ்நாட்டு அடிமைகள் சிலரை திருப்தி படுத்த இந்த வசனத்தை சேர்த்திருக்கலாம்....

அடுத்து "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ற டுபக்கூர்ர் படம்

இதில் நடித்திருக்கும் சிவா கார்த்திகேயன் மற்றும் சூரி என்பவர்கள் இதற்க்கு முன் என்ன புடுங்கினார்கள் என்று தெரியவில்லை..இந்த படத்தில் இந்த பொறம்போக்குகளுக்கு அவ்வளவு பில்ட் அப்....

சிவகார்த்தி "கேனயன்"  நடந்து போகும்போது ஹார்ன் அடித்தால் அவன் மணல் கொள்ளை  என்று போட்டுக்கொடுத்துவிடுவாராம்....
தான் சைட் அடிக்கும் டீச்சருக்கு லவ் லட்டர் கொடுக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றதும் மைனர் பெண்ணுக்கு திருமணம் என்று போலீசில் புகார் செய்து திருமணத்தை நிறுத்து விடுவானாம்..
கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நடத்துவதற்கு முன்னின்று வேலை செய்வானாம்....

அடுத்து இந்த சூரி என்பவன்...இஞ்சி தின்ற குரங்குமாதிரி இருந்துகொண்டு இவன் காமெடி என்ற பெயரில்  படம் பார்க்கும் அனைவரையும் சாகடிக்கிறான்....

ஏதோ ஒரு படத்தில் பரோட்டா காமெடியை பார்த்து ரசித்த பாவத்திற்காக நிறைய படங்களில் இந்த மூதேவியின்  அறுவையை  பார்த்து தொலைக்க வேண்டியுள்ளது...

மற்றபடி மார்கெட் இழந்த சத்யராஜ் என்ற நடிகர் படம் முழுவதும் உர்ரென்று வருகிறார், இறுதிக்காட்சியில் அவரும் ஒரு கேனயன் என்று காட்டி (நகைச்சுவையாம்) இந்த படத்தை (அப்படா) முடிக்கிறார்கள்....

மொத்தத்தில்...குறும்படம் எடுப்பவன் குறும்படம் மட்டும் எடுத்து யு டியூபில் மட்டும் பார்த்து ரசித்துக்கொள்ளட்டும்...ஏன் மற்றவர்களையும் காசை வாங்கிகொண்டு  "கொல்ல " வேண்டும்...? ஊடக விபாச்ச்சரிகள் இதை ஏன் ஊக்குவிக்கவேண்டும்?

இந்த மூடர் கூடமும், வருத்தப்படாத வாலிபர் சங்கமும் ஒன்றாய் ஒரே இடத்தில் பார்த்திருக்கிறீர்களா ? 

நேற்றைய தினம் (15.08.2013) வெறும் கற்சிலைகளை கரைக்கும் மூடர்கூட்டத்தில் குடித்துவிட்டு கும்ம்மாலமடிக்கும் வாலிபர்களைப்பார்த்தல் இந்த ஞாபகம்தான் வந்தது....

Saturday, September 14, 2013

ஒரு நல்ல செய்தி..! ஒரு கெட்ட செய்தி.....!!!


நேற்றும் இன்றும் செய்தித்தாள்களில் பரபரப்பாக பேசப்படும் இரு வேறுபட்ட செய்திகளில் இந்திய மக்களின் செம்மறியாட்டு மன நிலையும்  கேடுகெட்ட ஊடக விபச்சாரிகளின் பயங்கரவாத முகமும் தெள்ள தெளிவாக காணக்கிடைக்கிறது ..

முதலில் நல்ல செய்தி எனபது நல்ல செய்தியா என்று பாப்போம்....

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் நான்கு பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வந்திருக்கிறது...

இது போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனைதான் சரியான தீர்ப்பு என்றாலும் நமது நாட்டு சட்டத்தில் அதற்கான தீர்வு இல்லை..கற்பழிப்பு குற்றத்திருக்கு 7 வருடங்கள்தான் தண்டனை....அப்படியே அந்த பெண் இறந்ததால் இது கொலை வழக்காக மாற்றப்பட்டாலும், வரும் காலங்களில் இந்த குற்றவாளிகள் மேல் முறையீடு செய்யும்போது தாங்கள் கொலை செய்யும் நோக்கத்தில் இந்த குற்றத்தை செய்யவில்லை என்று வாதிட்டு தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புகள்தான் உண்டு..

இன்று ஊடகங்களும், மேதாவிகளும் நீதி  கிடைத்தது என்று எக்காளமிட்டாலும், வடநாட்டு பெண் உரிமை அமைப்புகள்  தங்களுக்குள் இனிப்புகள் வழங்கிக்கொன்டாலும் இது வெறும் கண்துடைப்பு  தீர்ப்புதான் என்று அனைவருமே விளங்கி இருந்தும் இப்படி கூறிக்கொண்டிருப்பது கேலிக்கூத்தாகி இருக்கிறது...

ஏனெனில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ராஜிவ்காந்தி கொலைகாரர்கள்  விடுதலைப்புலிகளே இன்று ஊடக விபச்சாரிகளாலும், இந்திய தேச துரோகிகளாலும் தியாகிகளாக்கப்பட்டு கொண்டாடப்படுகிறார்கள்...இதைவிட ஒரு அவலம் வேறு என்ன வேண்டும்? நாளை இந்த கற்பழிப்பு பயங்கரவாதிகளும் தியாகிகளாக சித்தரிக்கப்படும் அவலமும் ஏற்படும் என்பதை மறுக்கத்தான் முடியுமா/?

சரி கெட்ட செய்தி?

வேறு என்ன...

மகாத்மா காந்தியை கொன்ற இயக்கம்....நான்கு முறை இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு.... இந்தியாவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மதக்கலவரங்கள், குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் உள்ள ஒரு அமைப்பு சங்க்பரிவார ஆர் எஸ் எஸ் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பு....
அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத கட்சிக்கு, பயங்கரவாதி ஒருவனை பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கக் கூறி நிர்பந்திக்கிறது...

அந்த பயங்கரவாதி எப்பேர்ப்பட்டவன்?

தமது சொந்த மாநில மக்கள் 2000 க்கும் மேற்பட்டவர்களை அநியாயமாக கொன்றவன்....போலி என்கவுண்டர்கள்  மூலமும் பலரை கொன்று இன்று குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு கேவலப்பட்டு நிற்பவன்...உலக பயங்கரவாதி அமெரிக்காவிநாளும் அவன் கூட்டாளி இங்கிலாந்தினாலும் விசா நிராகரிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டவன்...

தமது மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது என்றுநாள்தோறும்  பொய் மூட்டைகளை அள்ளிவீசி ..கேவலப்பட்டு நிற்ப்பவன்....

பாரதீய கட்சியின் தலைவர்களில் ஒருவரான - நாடெங்கும் மதக்கலவரங்களை தூண்டிவிட்ட இன்னொரு பயங்கரவாதி அத்வானியே அவனை வெறுக்கும்போது இவன் எவ்வளவு மாபாதகன் எனபது உள்ளங்கை நெல்லிக்கனி.....

அப்படிப்பட்ட ஒரு பயங்கரவாதியைத்தான்  - பார " தீய " ஜனதா கட்சி என்கிற தீய சக்திகள் பிரதம வேட்பாளருக்கு முன்மொழிந்துள்ளன.
இதை இங்குள்ள தமிழ் ஆபாச ஊடக விபச்சார நாய்கள் கொண்டாடி முன்னுரிமை செய்தியாக தருவது எவ்வளவு பெரிய கேவலம் எவ்வளவு பெரிய அவலம்?

ஆனாலும் எது எப்படியோ மேற்கண்ட எந்த விசயமும், நாம் நல்ல விஷயம் என்று கருதக்கூடிய மரணதண்டனையும் நிறைவேறப்போவதில்லை....

கெட்ட செய்தி என்று கருதும் பயங்கரவாதி மோடியும் பிரதமராக வரப்போவதில்லை...

எனினும் இதை பதிவு செய்து வைப்போமே..

Tuesday, September 10, 2013

சிங்கம் 2 - விமர்சனம்?சென்ற பதிவில்....ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கம் 2 விமர்சனம் பதிவேன் என்று சொன்னாலும் - வழக்கம்போல வேலைப்பளு (?)...போன்ற காரணங்களால் அந்த விமர்சனம் பதிவிட முடியவில்லை...
மேலும் சிங்கம் 2 பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டதாலும், அதை மீண்டும் நாமும் விமர்சிப்பதால் அதனால் பயன் இல்லை என்பதாலும் அதை விட்டுவிடலாம்....

ஒரு நண்பர் பாலா என்பவர் மட்டும், - அப்படத்தில் ஒரு முஸ்லிம் வில்லன் வருவதால் உங்களிடம் இருந்து நிச்சயம் விமர்சனத்தை எதிர்பார்த்தேன் என்று பின்னூட்டமிட்டிருந்தார்....
இதுபோன்ற அப்படத்தில் வருவதுபோன்ற வில்லன்கள் நிச்சயம் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்..அதை ஒரு பொருட்டாய் கருதுவதில்லை...இஸ்லாத்திற்கெதிரான - காரணமற்ற சுய வன்மங்களை சில கூத்தாடிகள் படமாய் எடுக்கும்போதுதான் நமக்கு கோபம் வருகிறதே தவிர, தனி மனிதன் எப்படியும் இருப்பான்....இதை அந்த நண்பர்  புரிந்துகொண்டால் நல்லது...

சிங்கம் படத்தை பொருத்தவரை அதில் பிரதானமாய் இருப்பது - கதாநாயகன் சூர்யாவின் காட்டுக்கத்தல்கள்தான் ....காமெடி என்ற பெயரில் விவேக் கின் அறுவைகளும், சந்தானத்தின் காப்பியடித்த காமேடிகளும்தான்....

கதாநாயகன் பைனாகுலரிலேயே கடத்தல்காரர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் (அவர்களது உரையாடல் உட்பட)  அறிந்து நடவடிக்கை எடுப்பதை காட்டுவது காமெடியிலும் காமெடி....

காதல் காட்சிகளில் - தன்னை ஒருதலையாய் காதலிக்கும் ஹன்சிகா மொத்வானிக்கு வண்டி வண்டியை அட்வைஸ் செய்வதும் இன்னும் ஒருவகை காமெடிதான்...
ஹன்சிகா மொத்வாணி பள்ளிக்கூட மாணவியை வருவது பள்ளிக்கூடக்காமேடி?

உள்துறை மந்திரியாய் வரும் - இயக்குனரின் மாமனார் - விஜயகுமார் - இவர் போலிசுக்கு உத்தரவிடுவதற்கு பதிலாய்..கதாநாயகனின் பேச்சை மட்டும் இவர் கேட்பதை காட்டுவதை காமெடியை விட வேறு ஏதாவது ஒன்று இருந்தால் அதற்க்கு ஒப்பிடலாம்...

மற்றபடி சிங்கம் - படத்தில் கதாநாயகியை வந்ததற்காக அனுஷ்காவை இதிலும் பாடல்களுக்கு மட்டும் உபயோகப்படுத்தி இருப்பதும், மற்ற நடிகர்கள் வந்து போவதுமாய் இருப்பதும்தான் விறுவிறுப்பு என்று மற்ற பதிவர்கள் கொண்டாடி இருப்பதும் - இணையதலக்காமேடியில் சேர்க்கலாம்....

சிங்கம் 2 - only sound....

 விமர்சனத்தை விட்டுவிடலாம் என்று சொல்லிவிட்டு  இந்த பதிவும் விமர்சனமாகிவிட்டது உச்சகட்ட வலைத்தள காமெடிதானே?

சொன்னதை செஞ்சுட்டோம்ல.....

Saturday, July 13, 2013

சிங்கம் II விமர்சனம் - விரைவில்...
ஏறக்குறைய  இரண்டு மாதங்களாகிவிட்டது பதிவுகளிட்டு....
வேலைப்பளு என்பதைவிட , பேஸ்புக்கில் - கவனம் சென்றுவிட்டதினாலும் , உண்மையிலேயே,  புதியதாக சில பொறுப்புகள் எற்றுக்கொண்டிருப்பதனாலும் பிளாக்கில் கவனமற்று இருந்ததினால்......பதிவுகளிடமுடியவில்லை என்பதுதான் உண்மை....

ஆரம்ப காலங்களில் இருந்த ஆர்வம் சற்று குறைந்துவிட்டதும் ஒரு காரணம்...முன்பு போல பல - சீனியர் பதிவர்களும் பேஸ்புக் பக்கம் கவனம் செலுத்துவதனாலேயோ  அல்லது அவர்களும் ப்ளாக்கில் இருந்து ஒதுங்கிவிட்ட காரணத்தினாலேயோ கூட எனது ஆர்வம் குறைந்து இருக்கலாம் என்றும் கருதுகிறேன்..

ஆனாலும் இந்த பிளாக்கை விட மனம் வரவில்லை. அப்பப்போ சிலருடைய பதிவுகளை படித்துகொண்டு இருக்கும்போது, நாமும் பதிவிடலாம் என்றும் தோன்றும்....சமீபத்தில் அதிகமதிகமாக எல்ல பதிவர்கலாலேயும் அளவுக்கதிகமாக பாராட்டப்பட்ட சிங்கம் II  என்ற திரைப்படம் பற்றிய விமரசனத்தொடு பதிவை மீண்டும் தொடரலாம் என்றிருக்கிறேன்...

விமர்சனம் எனபது - வெறும் பாராட்டாகவும் வீண் விளம்பரமாகவும் இருக்காமல் உண்மையான விமர்சனமாக இருக்கவேண்டும்...விமர்சனம் என்பதே குறைகளை கூறுவதுதான்...
எனது பார்வையிலான சிங்கம் II  விமர்சனம் எனது அடுத்த பதிவில்......

நன்றி...


Friday, May 3, 2013

விடை தெரிந்த கேள்விகள்...

1.டாக்டர் ராமதாஸ் கைது சம்பவம் எதிரொலியாக அவர் கட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் ஏரளாமான பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்...
இதற்க்கு பதிலாக, டாஸ்மாக் கடைகளை உடைத்து இருக்கலாம்....தமிழனுக்கு அப்போதாவது தன்னிலை திரும்பும்.. ஏன் செய்யவில்லை? 

2. பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி சரப்ஜித் சிங் - அந்நாட்டு அந்நாட்டு சிறையில் தாக்கப்பட்டு மரணமடைந்து விட்டார்..இதற்காக அவருக்கு வீரத்தியாகி பட்டம் மற்றும் அரசு மரியாதையோடு உடல் அடக்கம் என்றால் ..அவரை அந்நாட்டில் பயங்கரவாதம் செய்ய இந்திய அரசுதான் அனுப்பியதா? 

3. 2002...இல் அன்புமணி ராமதாஸ் ஏதோ பேசியதாக இப்போது வழக்கு போட்டு கைது செய்து இருக்கிரார்கள்..பத்து வருடங்களாக என்ன புடுங்கிக்கொண்டிருந்தார்கள்? 

4. தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைந்து ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஏதாவது ஒரு ஊரில் ஏதாவது ஒரு அமைப்பினர் அஞ்சலி செலுத்திக்கொண்டிருபதாக இன்றுவரை தினத்தந்தியில் செய்தி வந்துகொண்டிருக்கிறது...இந்த அமைப்பினருக்கு இவ்வளவு நாள் கழித்துதான் அவர் மறைந்தது தெரியுமா? Tuesday, April 30, 2013

விஸ்வரூபம் - இன்னொரு மன்மத அம்பு...இந்தபடத்திற்கு படம் வெளியான சூட்டோடு விமர்சனம் செய்திருக்கலாம்தான்..ஆனால் படம் வெளிவரும் முன்பே அதிகபட்ச எதிர்ப்புகளால், ஏகப்பட்ட விளம்பரம் அடைந்த விஸ்வரூபம், அச்சமயம் கமல் என்ற நடிகன் மீது ஏற்பட்ட அனுதாபத்தால், அனைத்து குறைகளும் நிறையாக பார்க்கப்பட்டு, அது ஒரு திரைப்படமாக - பார்க்கப்படாமல் கமலின்  பொருளாதாரப் பிரச்சினையாக பிரதானப்படுத்தப்பட்டு, வெளிவந்த விமர்சனங்கள்  அப்படத்திருக்கு சாதகமாக அமைந்துவிட்டது...

அப்படியும் சிலர் - இது அமெரிக்க அரசியலை தமிழகத்திருக்கு கொண்டு வந்து கமல் வியாபாரம் செய்கிறார் என்று விமர்சித்திருந்தாலும் - அந்த நேரங்களில் ஏற்பட்ட களேபரங்களில் இவை பின்னுக்கு தள்ளப்பட்டு - ஒரு வெற்றிப்படமாகியது....

முதலில் டிடிஹெச் பிரச்சினையால் தாமதப்பட்டாலும், பிறகு முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளினால் கமல் இந்த நாட்டை விட்டே ஓடிப்போகிறேன் என்று அழுத நாடகமும் , அவரது ரசிக சிகாமணிகள், படத்திற்கான டிக்கெட் பணத்தை அவருக்கே நேரடியாக அனுப்பிவைத்த கூத்தும் பிரமாதமாக நடந்து பத்திரிக்கைகளுக்கு வியாபாரம் செய்துகொள்ள வசதி செய்தன..

அந்த சமயங்களில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் விஸ்வரூப பிரச்சினை மட்டுமே அனைத்து தமிழ் ஆபாச பத்திரிக்கைகளிலும் முன்னுரிமை பெற்றதற்கு காரணம் டாஸ்மாக் தமிழனின் மூளை மழுங்கிய சினிமா அடிமைக்களுக்கு வேறு எல்லாவற்றையும் விட, சினிமாதான் வாழ்க்கை என்று அர்த்தம் என்பதை விட வேறென்ன?
ஒரு சமூகம் தாம் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து களம்  இறங்கி போராடியதால், விஸ்வரூபம் அடைந்த லாபம் , தமிழகம் - டாஸ்மாக் மற்றும் சினிமாவினால்தான் வாழ்கிறதா என்ற அச்சத்தையே ஏற்படுத்தியது...
இதற்காக தமிழக முதலமைச்சர், எதிர்கட்சிகள் சினிமாவை முழுமூச்சாக எதிர்பதாக காட்டிக்கொளும் அரசியல் வியாபாரிகள்,  சினிமாகூத்தாடிகள்  என்று ஒட்டு மொத்த - சமூகக்காவலர்களும் (?) இந்த படத்திற்கு ஆதரவாத குரல் எழுப்பியதால், 
டாஸ்மாக் தமிழனின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து , இந்த சினிமாவை பார்க்காவிடில், ஜென்ம சாபல்யம் கிடைக்காது என்ற ரீதியில் தியேட்டர்களிலேயே தவம் கிடந்தான்...

ஆகா.. சுமாராக ஓடி இருக்கவேண்டிய இந்த படம், இன்று முக்கி முனகி நூறாவது நாளை தொட்டுக்கொண்டிருப்பதர்க்கு முழுக்காரணம் , அந்த சினிமாவின் கதை அமைப்போ மற்ற அம்சங்களோ என்று சொல்லவேண்டியதில்லை...அதற்க்கு வெளியே நடந்த, உரிமைப்போர்களும், அதை எதிர்த்து ஊடகங்கள் நடத்திய வியாபார போட்டியும்தான் காரணம்...

அமெரிக்காவை காக்கஇந்தியி  இந்திய அதிகாரி செல்கிறானாம்...இங்கு குண்டு வெடிப்பு நடந்தவுடன் ஏற்கனவே அமெரிக்க  எச்சரித்தது என்று வெட்கமின்றி உளரும்  இந்தியாவிலிருந்து அமெரிக்காவை காக்க இந்தியன் செல்வதாக  காட்டி இருப்பது கேலிக்கூத்து...

 அதைவிட ஒரு "கருத்து பயங்கரவாதம் " ஒரு வசனமாக வருகிறது. அதுவும்   அமெரிக்காவின் பரம வைரி  முல்லா  சொல்கிறார் " அமெரிக்க ராணுவம் குழந்தைகளையும்  கொல்ல  மாட்டார்கள்"  என்று... இந்த "கருத்து பயங்கரவாத" திணிப்பை எந்த ஆபாச ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என்பதிலிருந்து தெரிகிறது  " கலாசார பயங்கரவாதிகள்"  யார் என்று...

கதை என்று பார்த்தல் கமலும் முந்தைய படுதோல்வி  படமான "மன்மதன் அம்பு" படத்தின் மறு பிரதிதான் இது...

அதில் தன வருங்கால மனைவியை - கலட்டி விட காரணம் தேடி - துப்பறிய சொல்லும் கணவன்..இப்படத்தில் கணவனை  கழட்டிவிட்டு  தனது கள்ளக்காதலை தொடர நினைக்கும் மனைவி...

அதைத்தொடர்ந்து உண்டாகும்  குழப்பங்களை, இஸ்லாமிய சாயம் பூசி, அமெரிக்க தனது அடிமைத்தனத்தை காட்டும் இயக்குனர் கமலின் சாதாரண படம், விஸ்வரூபம்  காரணம் படத்திற்ற்கு அப்பாற்பட்டு ஏற்பட்ட அனுதாபமே தவிர, இவர்களின் திறமையால் அல்ல...

இப்படத்தின் வெற்றிக்கு உரிமை கொண்டாட கமலுக்கோ அதை சார்ந்தவர்களுக்கோ எந்ததகுதியும் இல்லை என்பதுதான் நிஜம்..

விஸ்வரூபம் - இன்னொரு மன்மத அம்பு...


Saturday, April 13, 2013

இவர்கள்தான் தமிழர்கள்....இதுதான் தமிழ்நாடு....!!!கடந்த பலவாரங்களாக நடந்து வந்த ஒரு தேச துரோகம்  சற்று ஓய்ந்திருக்கிறது ..ஊடகங்களில் அந்த செய்திகளை காணவில்லை ..
அதுதான் தமிழ்பற்று வியாபாரம் !!!

எவன் தீக்குளிப்பான் ...அவனை பயங்கரவாத விடுதலைப்புலிஆதரவாளனாக காட்டி அதன் மூலம் விடுதலைப்புலிகளிடம் பணம் பெறலாம் என்று காத்திருக்கும் வைகோ நெடுமாறன் போன்ற விடுதலைப்புலி கைக்கூலிகளின் சத்தத்தை காணோம் 

ஸ்ரீலங்காவிலிருந்து எவனாவது புத்த மதத்தை  வரட்டும்...அவன் வரும் பேருந்தை அடித்து நொறுக்கி அவர்களையும் ..தாக்கி .இலங்கையில் உள்ள தமிழனுக்கு இன்னும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றொரு இந்திய தேச துரோக கூட்டம் சீமானின் நாம் தமிழர்களின் பயங்கரவாதமும் அடங்கிவிட்டது 

ராஜினாமா நாடக கலைஞரின் தமிழ்பற்று வியாபாரமும் அவரது குடும்ப பிரச்சினைகளும் ஊடகங்களினால் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது 

காலேஜ் கட் அடிப்பு வீரர்களின் சத்தத்தையும் காணோம் 

தமிழ்பற்று வியாபாரிகளின் ஒலத்திர்க்கு  நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவதற்காக ஒருநாள் மட்டும்  உண்ணாவிரத நாடகம் ஆடும் கூத்தாடிகளும் தத்தமது படப்பிடிப்புகளுக்கு கிளம்பி விட்டனர் .

டாஸ்மாக்கில் வீழ்ந்து தன்மானம் பேசும் டாஸ்மாக் தமிழனும் இணையதள தமிழ்பற்று வீரர்களும் ஒவ்வொரு கூத்தாடிகளையும் கெஞ்சி இலங்கை தமிழனுக்கு ஆதரவு தாராத நீயெல்லாம் ஒரு கலைஞனா என்று பேஸ் புக்கிலும் டுவிட்டரிலும் எழுதி தமது தமிழ்பற்று வீரத்தை பறைசற்றிவிட்டு அமைதியாகிவிட்டனர் ..

இந்த தேச துரோக நிகழ்வுகள் தற்காலிமாக அடங்கிவிட்டதன் காரணம் ./என்ன


தமிழ்பற்று வியாபாரிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி ராஜபக்ஷே தண்டிக்கபட்டு விட்டானா ?

இல்லை ராஜிவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பி 
விட்டனரா ?
இல்லை விடுதலைப்புலிகளிடம் இருந்து வரும் பிச்சை காசு நின்றுவிட்டதா ? 

என்றால் இல்லை......


இந்த தேச துரோக நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதின் காரணம் என்ன தெர்யுமா ?

இங்கேதான் டாஸ்மாக் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.
அவனது தன்மானம் வெளிப்படுகிறது ...

நடிகை அஞ்சலி தலைமறைவாகி விட்ட பிறகு விடுதலைப்புலி எக்கேடு கெட்டால்  என்ன? 

அஞ்சலி காணாமல் போனபிறகு தமிழாவது ? தமிழ்பற்று வியாபாரமாவது ?


Monday, April 1, 2013

ஏப்ரல் - 1

இன்றைய நாளிதழ் செய்திகள்..!

1. குஜராத் பயங்கரவாதி மோடி பார தீயஜனதா கட்சியின் மேலிட குழு உறுப்பினராக நியமனம்.

2. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் சினிமா "நடிகர்கள்" செவ்வாய்க்கிழமை  உண்ணாவிரதம்.

3. கூடங்குளத்தில் அடுத்தகட்ட போராட்டம்  - கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் - அமெரிக்க ஆதரவாளர்கள்  அறிவிப்பு. 

4. மதவாதத்திர்க்கும் இனவாதத்திர்க்கும் இலங்கையில் இடமில்லை - ராஜ பக்ஷே 

5. காங்கிரசுக்கு எதிராக  அன்னா  ஹசாரே அமிர்தசரஸ் நகரில் பாதயாத்திரை தொடங்கினார்..

6. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடும் பணி தீவிரம் - சந்துல வெச்சு சாப்பிடுங்கடா டாஸ்மாக் வீரர்களா 

7. தமிழக, கேரள மீனவர்களை பாகுபடுத்தி பார்ப்பது நியாயம் தானா? மத்திய அரசுக்கு தமிழ்பற்று வியாபாரி கருணாநிதி கண்டனம்

8. -ஈழத்தமிழர்களுக்கு  - (விடுதலைப்புலிகளுக்கு ) ஆதரவாக மாணவர்கள் காலேஜ் கட் அடிப்பு  போராட்டம் நடத்தியதால் மூடப்பட்ட கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேட்டதற்கு இன்னும் தேதி முடிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்...


இன்று முட்டாள்கள் தினம் என்று ஞாபகம் வருவது தவிர்க்க முடியவில்லை..

Thursday, March 28, 2013

வாழ்க தமிழ்பற்று வியாபாரம்"வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" என்று பீற்றிகொள்கிறார்கள் ...ஐபிஎல் போட்டியில் விளையாட வந்தவர்களை விரட்டுகிராரர்கள்...சுற்றுலா வந்தவர்களையும் விரட்டுகிறார்கள்.

"சாதாரண பசு மாடு புகார் செய்ததற்காக (?) சொந்த மகனையே தேர் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன்: பரம்பரை என்று மார்தட்டுகிறார்கள். ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதிகளுக்காக உலகமெங்கும் மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அலறுகிறார்கள் ..

"முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் பரம்பரை" என்று எக்காளமிடுவோர்தான் ...தானமாக கொடுத்த கச்சத்தீவை மீட்போம் என்று கூக்குரலிடுகிறார்கள்.

"கொடிகாத்த குமரனின் வாரிசுகள் தேசபற்றுமிக்கவர்கள் நாங்கள்"  என்று ஏடுகளில் எழுதிவைத்துக்கொண்டு இந்தியாவில் பயங்கரவாதம் செய்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக "தேச துரோகம் செய்பவர்கள்தான்" தமிழர்களாம்.

வாழ்க தமிழ்பற்று வியாபாரம்.!!!