Pages

Tuesday, July 24, 2012

வாங்குன காசுக்கு நல்லாதாண்டா கூவுறான்..இந்தியாவில் நடந்த படு பயங்கர சம்பவங்களான...

பத்மநாபா கொலை பற்றி கவலை இல்லை..

சென்னை ஏர்போர்டில் குண்டுவெடித்து பல அப்பாவி தமிழ் மக்கள் செத்தது பற்றி கவலை இல்லை..

மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது பற்றி கவலை இல்லை..

அதே குண்டு வெடிப்பில் மாண்ட பல தமிழர்கள் பற்றி கவலை இல்லை...

பாபர் மசூதி இடிப்பு பற்றி கவலை இல்லை ..

அதை தொடர்ந்து முஸ்லீம்கள் மீதான கட்டவிழ்த்துவிடப்பட்ட  பயங்கரவாதம் பற்றி கவலை இல்லை.

பம்பாயில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகளைபற்றி கவலை இல்லை..

கோயமுத்தூரில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் பற்றி கவலை இல்லை...

இன்னும் குற்றப்பத்திரிக்கைகள் கூட வழங்கப்படாமல் பலவருடங்களாக குடும்பங்களை பிரிந்து சிறையில் வாடும் அப்பாவி முஸ்லீம்களைப் பற்றி .. அக்கறை இல்லை..

பயங்கரவாத மிருகம் மோடியால் ஏவப்பட்டு குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் பற்றி கவலை இல்லை..

ஏனென்றால் இந்தியாவிலும் தமிழகத்திலும் ஓட்டுப்பிச்சை மட்டும்தான் கிடைக்கும்.

இலங்கைகையை சேர்ந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளுக்காக குறைத்தால் விடுதலைப்புலிகளிடம் இருந்து நெறைய பிச்சை பணமாக கே கிடைக்கும்..அதில் கிடைக்கும்  பணத்தை வைத்து இந்தியாவில் தமிழகத்தில் இன்னும் அரசியல் பண்ணலாம்...தமிழ்பற்று வியாபாரம் பண்ணலாம்..

ராஜீவ் காந்திய கொலையாளிகளுக்காக காஸ்ட்லியான வக்கீல்களை வைத்து வாதாடலாம்.

எவனாவாது தீக்குளிச்சு செத்தால் அவர்கள் வீட்டுக்கு சென்று விடுதலைப்புலிகள் இட்ட பிச்சை காசில் நிதியுதவி அளித்து தற்கொலையை ஊக்குவித்துவிட்டு வரலாம்

அதற்குதான் இங்குள்ள தமிழ்பற்று வியாபாரிகள் - இலங்கையில்  பயங்கரவாதங்களுக்கு எதிராக நடந்த போருக்கு கறுப்புநாளாக  அனுஷ்டிக்கின்றன..

வாங்குன காசுக்கு மேலகூவுராண்டா... ..
Friday, July 13, 2012

இந்தியர்களில் எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் ? -அரசின் சமீபத்திய தலைவலி ..இரண்டு நண்பர்கள் பலவருஷங்களுக்கு அப்புறம் சந்தித்துக்கொண்டார்கள்...
பரஸ்பரம் (பரஸ்பரம் என்றால் என்ன?)  நலம் விசாரிப்புகளுக்கு அப்புறம்  "எத்தன பசங்கடா?

"ஒண்ணுதாண்டா.."
"என்ன வயசு?
"20 ,,தாண்டிடுச்சு,,,"
"ஹ்ம்ம் கூடிய சீக்கிரம் தாத்தாவாகப்போரே..." நண்பன் வெறுப்பேற்றுவதாக நினைத்து கிண்டல் செய்கிறான்..
"அப்படி நடந்தா ரொம்ப சந்தோஷப்படுவேனே...ஆனா ஒரு பெரிய சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா.."
"என்னடா சிக்கல்?
"எனக்கு பெண் குழந்தை ன்னா ரொம்ப பிடிக்கும்டா  ..ஆனா எனக்கு பிறந்தது ஆண் குழந்தைங்கன்னு சொல்லி இருக்காங்க..இல்லை எனக்கு பிறந்தது பெண் குழந்தைதாணு நிரூபிக்கிரதுக்காக..நான் கேஸ் போட்டு இருக்கேண்டா...!"

"என்னடா ஒளர்றே..?"
"அமாண்டா எனக்கு பொறந்தது பெண் குழந்தைன்னு நிரூபிக்க ரசாயன பரிசோதனைக்கு அனுப்பினேன்..நாலைஞ்சு வருஷம் கழிச்சு அது ஆண் குழந்தைன்னு ரிசல்ட் வந்துச்சு..விடுவேனா...கோர்ட்ல கேஸ் போட்டேன்...பத்து வருஷம் கழிச்சு அதுலேயும் ஆண் தான்னு சொன்னாங்க....விடுவேனா..இப்போ ஹை கோர்ட்டுல கேஸ் பைல் பண்ணி இருக்கேன்...."

இப்படி ரெண்டு பேர் பேசிக்கொண்டு இருந்தால் நாம என்ன நெனப்போம்? நிச்சயமா ரெண்டு கிறுக்கனுங்க பேசிக்கிட்டு இருந்க்கானுங்கன்னுதான் நெனப்போம்..

இப்படித்தான் இருக்கு இந்த "விளயாட்டு வீராங்கனை (?) பிங்கி என்பவரது வழக்கும்...

இவர் மேல இவர் ஆண் அப்படீன்னு ஒரு பெண் வழக்கு போட்டு அவரை கைது பண்ணாங்க...இருபத்து அஞ்சு நாள் கழிச்சு ஜாமீன்ல வெளிவந்த பிங்கி தன்னை போலீசார் ரொம்ப கொடுமை படுத்துனாங்கனு கண்ணீர் வடிக்கிறாங்க...
அதை விட கொடுமை என்னன்னு சொன்ன..இன்னும் அவர் ஆணா பெண்ணான்னு இன்னும் கன்பார்ம் பன்னால...ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி இருக்காங்களாம்...

ம்...அப்புறம் ஹை கோர்டுக்கு போவாங்க...ஒரு பத்து வருஷம் கேஸ் நடக்கும்..அதுக்கும் மேல சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் அங்கே ஒரு இருபது வர்சோம் கழிச்சு..அங்கேயும் சாதகமான தீர்ப்பு வரலையின்னா...ஜனாதிபதி கருணை மனுவுக்கு அப்ளை பண்ணி "அய்யா நான் பொம்பள புள்ளதான்னு சொல்லி கருணை காட்டுங்கைய்யான்னு" கெஞ்சுவாங்கலோ ?

இந்த பிங்கி பல விளையாட்டு போட்டியில கலந்துக்கிட்டு பல பரிசுகளை ஜெயுச்சு இருக்காங்க..அப்போவெல்லாம் போட்டியில கலந்துகிரதுக்கு முன்னாடி எந்த டெஸ்டும் பண்ண மாட்டாங்களா? ஆணா பொண்ணான்னு கூட கேக்க மாட்டாங்களா? என்னடா இது கேனத்தனமா இருக்கு? 

ஒரு நபரை ஆணா பொண்ணான்னு கண்டு பிடிக்கிறது அவ்வளவு கஷ்டமா ?

அப்படீன்னா நம்ம நாட்டுல உள்ள நூறு கோடிக்கும் மேல உள்ள மக்கள் தொகைல ஒவ்வொருத்தரையும் இனம் பிரிக்கிறதுக்கு ரசாயன பரிசோதனை பண்ணிக்கிட்டு இருந்தா என்ன ஆகும்...தலை சுத்துதுங்க ....

நான் ஆணா பொண்ணா.?..கண்டுபிடிக்கிறதுக்கு யாராச்சும் ஐடியா கொடுங்கப்பா..

Monday, July 9, 2012

ஊழல் செய்யவில்லை என்றால் பதவிக்கே லாயக்கில்லை - பா ஜ க
பார " தீய " ஜனதா கட்சி கரநாடகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து - மூன்றாவது முதலமைச்சராக ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராகி உள்ளார்.

இதற்க்கு முன்பு ஊழல் குற்றசாட்டில் சிக்கிய எடியூரப்பா என்பவருக்கு பதிலாக ' சதானந்த கவுடாவை பார "தீய" ஜனதா கட்சி முதல்வராக நியமித்தது....இதற்க்கு அக்கட்சியின்  பாபர் மசூதி இடிப்பு குற்றவாளி அத்வானி, எடியூரப்பா போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததினால் பதினோரு மாதகாலம் ஆட்சியிலிருந்த சதானந்த கவுடா ராஜினாமா செய்துள்ளார்...

இதற்க்கு விளக்கம் கொடுத்த அந்த தீய கட்சியின் தலைவர் நிதின் கத்காரி " சதானந்த கவுடா தனது பதினோரு மாத கால ஆட்சியில் ஊழல் எதுவும் செய்யவில்லை..சட்ட ஒழுங்கு நன்றாக இருந்தது..எனினும் கட்சியின் நலன் கருதி அவர்  முதல்வர் பதிவியிலிருந்து விலகி உள்ளார்..இனி கட்சியில் உட்பூசல் நீங்கிவிடும்.." என்று தெரிவித்துள்ளார்..
இவர்கள் தங்கள் வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார்கள் தாங்கள் இந்த நாட்டிற்கு  தேவையற்ற கட்சி என்று..

அதாவது ஊழல் எதுவும் செய்யாமல் இருந்தால் அவன் ஆட்சி செய்வதற்கே லாயக்கு இல்லாதவன்  ..அது தமது கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று...இப்படிப்பட்ட பயங்கரவாதிகள்தான் நாளை இந்தியாவின் ஆட்சிக்கு கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்..ஹ்ம்ம் என்ன சொல்வது ?


Tuesday, July 3, 2012

மரணதண்டனை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது ?
தீவிரவாதிகளான விடுதலைப் புலிகள் அமைப்பினால் இந்திய நாட்டின் பிரதமர் வேட்பாளார்  ராஜுவ்காந்தி கொலை செய்யப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மரண தண்டனை நிறைவேற்றும் நிலை இருந்துவருகின்றது.

தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற அதிலும் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற வைக்கோ போன்றவர்கள் எடுத்துக் கொண்ட முக மூடிதான் மரண தண்டனை எதிர்ப்புக் கோஷம்.

ஒரு பக்கம் தீவிரவாதத்திற்கு எதிராக பேசுவதாகவும், பிரச்சாரம் செய்வதாகவும் நடித்துக் கொண்டிருக்கும் வைக்கோ போன்ற சைக்கோக்கள் கொலை, கொள்ளை, குண்டு வைப்பு, தீவிரவாதம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மறுபக்கம் வெற்றுக் கூச்சல் போடுகின்றார்கள்.

பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டியவர்கள் கருணை மனு என்ற பெயரில் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள். வைக்கோவின் உடன் பிறப்புகள் அல்லது சொந்தக் காரர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால் அல்லது குண்டு வெடிப்புக்களில் சிக்கி உயிரிழந்திருந்தால் அவர்களை இவர்கள் மண்ணிக்க வேண்டும் என்று பொதுக் கூட்டம் போடுவார்களா? மாநாடுகள் நடத்துவார்களா? மேடைகளில் முழங்குவார்களா?

மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்?


தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் (?) போராடிவரும் வேளையில், தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்று ஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒரு கருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய் வைத்துள்ளார் லகோதி.

“தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளில் எத்தனையோ அப்பாவிகள் உயிரிழந்து இருக்கின்றனர். அந்த அப்பாவி மக்களுக்கு இந்தத் தீவிரவாதிகளால் உயிர் கொடுக்க முடியுமா? கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மறந்து விட்டு தண்டனை பெறப்போகும் ஒரு நபரைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கும் நிலை உள்ளது” என்று கூறி தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் மனித உரிமை அமைப்புகளுக்கு விடையளிக்க முடியாத வினாவை எழுப்பியுள்ளார் லகோதி.

“ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு விடலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா?” என்று சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவனை தீவிரவாதச் செயலுக்குத் தூண்டிவிடும் நபரைப் பார்த்து கேட்க வேண்டும் என்றார் லகோதி. தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆதரவாக கருணை மனுபோடும் கண்ணியவான்கள் இந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்தை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஒருவன் பத்துப்பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையை சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், அதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விட்டால் குற்றாவளி தண்டிக்கப்பட மாட்டார். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டார்.

அது போலவே கொல்லவப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டச் சொல்லி சிலர் வேண்டியுள்ளனர். அதுபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல் புரிந்து மாட்டிக் கொண்ட ஒரு இந்தியரைத் தூக்கில் போட வேண்டாம் என்று இந்திய அரசே கருணை மனு போட்டுள்ளது. குறிப்பாக பி.ஜே.பி தலைவர் அத்வானி போன்றவர்கள் இதற்காக படுபிரயத்தனம் எடுத்துக் கொண்டார்கள்.

பாராளுமன்றத் தாக்குதலுக்கு உதவி புரிந்ததாக பேராசிரியர் ஜீலானி கைது செய்யப்பட்டவுடன், அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கர்ஜித்த இந்தப் புண்ணியவான்கள்(!) பாகிஸ்தான் நீதி மன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்தர் சிங்குக்கு தூக்கு கூடாது என்கிறார்கள்.

இவ்வாறு நாட்டுக்கு நாடு ஒரு நீதி. இனத்துக்கு ஒரு நியாயம் பேசும் அத்வானி வகையறா – லகோதியின் கருத்தைக் கேட்டாவது திருந்த வேண்டும்.

தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்த கன்றுக்காக தனது மகனையே பலி கொடுத்த மன்னனை மனுநீதிச் சோழன் என்று போற்றுகிறார்கள். ஆனால், இறந்து போன பசுவின் தோலை உரித்தெடுத்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்று குவித்த சண்டாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.

கொலையாளியை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தூக்குத்தண்டனை கூடாது என்று சொல்பவர்கள் கொலை செய்யப்பட்டவரையும், அவரது குடும்பத்தாரையும் கவனத்தில் கொள்ளட்டும். கொலையாளியைக் கொல்வதின் மூலம் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது என்கிறது இஸ்லாம். இந்தக் கருத்தை தனது பாணியில் உரக்கச் சொன்ன லகோதி உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் – பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ – இதைக் கவனத்தில் கொள்கிறது.

Sunday, July 1, 2012

சகுனிஇவர்கள் எந்த காலத்திலும் நல்ல படம் எடுப்பதாக தெரியவில்லை...
சரி ஏதோ "சகுனி அப்படீன்னு பேர் வெச்சு இருக்கிறானே..ஏதாவது அறிவுப்பூர்வமா ஐடியா வோட இண்டரெஸ்டிங்கா கதை இருக்கும்னு பாத்தா அதுவும் இல்லை...


முதல் காட்சியிலேயே இந்த படத்தின் தரம் தெரிந்து விடுகிறது..
"பிஸி சிட்டி...பசி பீப்புள் " என்று தரைப்படையை சார்ந்த சாலையோர வாசிகளை காட்டுகிறார்கள்..கொழுப்பெடுத்து டெய்லி சாராயக்கடையில் காசை விடும் இந்த பொறுக்கிகள் பசி பீப்புல்சாம்..ஹ்ம்ம்


தனது பாரம்பரிய வீட்டை - ரயில்வே துறை இடிக்கப்போறாங்க, அதிலிருந்து அதை காப்பாற்றுவதற்காக அமைச்சரை பார்க்க வரும் கதாநாயகன் எப்படி அதை அரசியல்வாதிகளிடம் இருந்து மீட்கிறான் என்பதை - முட்டாள்தனமாக சொல்லி இருக்கிறார்கள்..

சென்னைக்கு வரும் கதாநாயகனுக்கு ஒரு ஆட்டோ  ஓட்டும்  நண்பன் கிடைக்கிறான்..அவன் வழக்கம்போல ஒரு காமெடியன்தான்.
அவனிடம் தனது ப்ளாஷ் பேக்கை சொல்லுவதற்கே இண்டர்வல் வரையிலும் ப்ளேடு போடும் கதாநாயகன் அதற்க்கு அப்புறம்தான் கதையின் (?)-  அப்படி ஒண்ணு இருக்கா? - விசயத்துக்கே வருகிறான்..

இந்த பிளாஷ்பேக்கை ஓட்டுவதற்காக ஏற்கனவே பிரபலமான அனுஷ்கா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகளை சில நேரம் காட்டுகிறார்கள்..
அதுபோக முக்கால்வாசி படம் சாராயக்கடைகளிலும் பார்களிலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது..

இடைவேளைக்கு பிறகு, வட்டிக்கு விடும் ரமணி ஆச்சியை (ராதிகா) சந்திக்கும் கதாநாயகன் அவளை கவுன்சிலருக்கு போட்டியிட சொல்கிறான்.  அறிமுகம் ஆகும்போது பயங்கர ரவுடியாக காட்டப்படும் ரமணி ஆச்சி அடுத்த காட்சியிலேயே இட்லி விற்கும் சாதாரண மனுஷியாக ஆகி விடுகிறார்.
அவரை கவுன்சிலர் தேர்தலில் கதாநாயகன் போட்டியிட செய்ததும் ஏதோ இன்னொரு இட்லிகடை வைப்பது மாதிரி ராதிகா போட்டி இடுகிறார்..ஒரு மயிறு லாஜிக்கும் இல்லை..அதுவும் பலம் வாய்ந்த முதலமைச்சரின் "கீப்" ஐ வெற்றி கொள்வது மட்டுமில்லாமல், அடுத்த காட்சியிலேயே மேயரும் ஆகி விடுகிறார்..

ஒரு காட்சியில் வாக்கு சாவடிக்கு செல்லும் தந்தையை மகன் கேட்கிறான்..: "யாருக்குப்ப ஒட்டு போடா போறே?
"ஏன்டா..யாருக்கு போடணும்?"
"ஆச்சிக்கு ஒட்டு போடுப்பா?..இல்லையின்ன இந்த பேட்டாலேயே உன் தலையில் போட்டு தள்ளிடுவேன்" அப்படீன்னு பொறுக்கித்தனம ஒரு சிறுவன் சொல்வதுபோல எடுத்து இருக்கும் இந்த பொருக்கி இயக்குனரை போட்டு தள்ளினால் என்ன? இது ஒரு காட்சியாடா? பொருக்கி நாய்களா...


அப்புறம் குடிகாரர்களுக்கு வக்காலத்து வாங்கும் சந்தானத்துக்காக குடியை குடிக்கசொல்லி ஒரு முழு நீள குடிகார பாட்டு வேறு...


அடுத்து முதலமைச்சரையும் இதே கதாநாயகன் உருவாக்கி - தனது எதிரியான முன்னாள் முதலமைச்சரை பழிவாங்கி வீட்டை மீட்கிறான்...தலையை சுற்றுகிறது...
இந்த குப்பையை ஒரு படம் என்று எடுத்து இருக்கிறானுங்க...ஹ்ம்ம்