Pages

Friday, October 29, 2010

எந்திரன் கதை என்னுடையது!!!


பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் என்பவர், சமீபத்தில் வெளியாகிய எந்திரன் என்ற திரை படத்தின் கதை தன்னுடைய கதை என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இவர் குமுதம் பத்திரிகை குழுமத்தின் "மாலைமதி" என்ற பத்திரிகையில் 1995  ஆம் ஆண்டு எழுதிய ஒரு கதையைத்தான் இப்போது எந்திரன் என்ற  பெயரில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அதன் ஒரிஜினல் பிரதி தம்மிடம் இல்லை என்பதனால் இத்தனை நாட்களாக வழக்கு தொடரமுடியவில்லை என்றும், அது தற்சமயம் அவருக்கு கிடைத்துவிட்டதனால் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்றுதான், இரு நாட்களுக்கு முன்பு ஒருவர், எந்திரன் கதை தன்னுடையது என்றும் வழக்கு தொடுத்திருந்தார்..

ஒரு படம் பிரபலமானால் அது என்னுடைய கதை என்று கிளம்புவது இப்போது பேஷனாகி விட்டது..அது அவர்களது பிரபலத்திருக்கோ, அல்லது படத்தை மேலும் பிரபலமாக்குவதர்கான தந்திரமோ தெரியவில்லை..


ஹ்ஹ்ம்ம் இதுமாதிரி தெரிந்திருந்தால் நானும் ஒரு 10  வருடங்களுக்கு முன்பே எந்திரன் என்று ஒரு கதையை எழுதி இருக்கலாம்...பிரபலமாகியாவது இருப்போம்..!!!


Wednesday, October 27, 2010

பெண்கள் படிக்ககூடாத (பெண்களை பற்றிய) ஒரு பதிவு!

பெண்கள் பற்றியது ஆனால் பெண்கள் படிக்ககூடாத பதிவு என்றால்..உங்கள் ஆர்வம் புரிகிறது...அதற்கான பதிலை கீழே விளக்குகிறேன்..

அருந்ததி ராய் என்றொரு எழுத்தாளர்,  மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளர்அவர் சமீபத்தில் பேசிய பேச்சுக்கள் தான் இப்போது ஹாட் டாபிக்..."காஷ்மீர்  இந்தியாவின் ஒரு அங்கமாக எப்போதும்  இருந்தது  கிடையாது" என்றொரு வாதத்தை வைத்திருக்கிறார்..

ஏறத்தாழ ஒரு  60  வருட காலமாக இந்தியாவின் அங்கமாக இருக்கும் காஷ்மீரை இந்தியாவின் அங்கமல்ல என்று சொல்லவைக்கும் தைரியம் அவருக்கு  எங்கே இருந்து வந்தது.?.ஒருவர் பிரபலாகிவிட்டால் அவர் உளறுவதெல்லாம் அறிவுக்கு ஏற்ற பேச்சு கிடையாது..இது தமது பிரபலத்தை தக்கவைக்கும் ஒரு உளறல்..ஆனால் அது நாட்டுக்கு ஊரு விளைவிக்கும் வண்ணமாக அமைந்துவிட்டதுதான் ஆபத்தாகிவிட்டது..

இப்படித்தான் குஷ்பு என்றொரு நடிகை, "திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்" என்றதொரு ஆபாசமான கருத்தை முன் வைத்து நாறிப் போனது நமக்கெல்லாம் தெரியும்..

அவள் ஜஸ்ட் ஒரு நடிகை, உடலைக் காட்டி, கண்டவனுடன் நடுரோட்டில் கட்டிப் புரண்டு, காசுக்காக மானமிழந்து நடித்து பிரபலனானவள்..இவளை போய் இது போன்ற கலாச்சாரம் சம்பந்தப்பட்ட கேள்வி கேட்பவன் உலகமகா முட்டாள்...

அந்த குஷ்பு கூடத்தான் நமது சாரு நிவேதிதா என்றொரு உலகம் போற்றும் (?) எழுத்தாளர்,  மாமேதை ஞானி போன்றோர் "out look"   என்றோதொரு பத்திரிகை நடத்திய விவாத மேடையொன்றில் பங்கேற்று பெருமை அடைந்துள்ளனர். அதுவும் சாரு அதை தனது வெப் சைட்டில் வெளியீட்டு ஜென்ம பலனை அடைந்து விட்டார்.

அந்த விவாதத்தில் சாரு பேசிய ஆங்கிலம் கிண்டலுக்கானது எனபது பற்றிய ஒரு பெண் எழுதிய கடிதத்திற்கு - பாவம் அந்த பெண்ணை சாரு உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார்.
தமிழை தாய் மொழியை கொண்டவன் தமிழில் பிழையாக  பேசினால்தான் தவறு..ஆனால் ஆங்கிலத்தில் பிழையாக பேசிவிட்டால் ஏதோ உலகமகா ஜோக்கை கேட்டது போல விழுந்து விழுந்து சிரிக்கிறோம்..

ரோட்டில் வசிப்பவன் பேசும் கேவலமான  பேச்சை எல்லாம் "சென்னை தமிழ்"  - (அதாவது "மெட்ராஸ் பாஷையாம்") என்று கொண்டாடும் நாம் தமிழை திருத்த வக்கற்று ஆங்கிலத்தில் இலக்கணப் பிழை காணுவது இன்னும் நாம் ஆங்கில அடிமைத்தனத்தில் இருந்து மீளவில்லை என்றே தோன்றுகிறது..

ஆனால் அது ஒரு புறம் இருக்கட்டும்

தனது ஆங்கிலத்தை குறை கூறிய அந்த பெண்ணிற்கு பதிலடி என்ற பெயரில் சாரு எழுதி இருக்கும் பதில் - எந்த ஒரு ஆபாச கட்டுரைக்கும் - சளைத்ததல்ல..
இந்த கட்டுரை மூலம் சாரு மிகவும் தரம் தாழ்ந்து இருக்கிறார். அவர் உபயோகப் படுத்தி இருக்கும் வார்த்தைகள் ஒரு ஆபாச எழுத்தாளன் மட்டுமே அல்லது சாலையில் "மெட்ராஸ் பாஷை" பேசும் பொறுக்கிகள் மட்டுமே 
 உபயோகிக்கும் வார்த்தைகள் .

எந்த ஒரு நல்ல பெண்ணும் கேட்டால் அருவருப்படையும் வார்த்தைகள். பெண்கள் படிக்கூடாத பதிவுதான் அது.(ஸ்ஸ்ஸ் ...அப்பாடா..தலைப்பைக் கொண்டு வந்தாச்சு...) 

சரி..நிஜமாகவே பெண்கள் படிக்கூடாத ஒரு ஜோக்....

மகள் : அம்மா..அந்த ஆள் அந்த மரத்தில் ஏற சொல்லி பத்து ருபாய் கொடுத்தாம்மா..
அம்மா : இடியட்..அவன் உன் பாண்டீஸ் பாக்குறதுக்காக அப்படி பண்ணி இருக்கான்..
மகள்: ஆனால் நான் முட்டாள் இல்லைம்மா..அதுனாலதான் பாண்டீஸ் போடல..Monday, October 25, 2010

செல் போன் அவஸ்தைகள்..


நினைத்து பாருங்கள்...90 களில்..அப்போதெல்லாம் செல் போன் நமது நாட்டில் புழக்கத்தில் இல்லை...அப்போதும் எல்லா வேலைகளும் நடந்து கொண்டுதானிருந்தன..நல்ல செய்திகளாகட்டும், துயரமான செய்திகளாகட்டும், நம்மை வந்தடைந்துகொண்டுதானிருந்தன.. ஒன்றும் ஆகிவிடவில்லை. பின் எப்படி செல் போனின் சேவை அதிகரித்தது? அதனால் என்ன பெரிதான உபயோகம் ஆகிவிட்டது...

சொல்லப்போனால்  சண்டைகளுக்கும், வீண் பேச்சுக்களுக்கும், வதந்திகளுக்கும், கள்ள உறவுகளுக்கும்தான் அது பெரும்பாலும் உபயோகப்பட்டதே தவிர, வேறு பெரிய அளவிலான உபயோகம் ஏதும் இல்லை..அப்படி அதனால் மிகப்பெரிய பலன் அடைந்ததாக சொல்வோருக்கு, அது இல்லாமலும் அந்த பலன் கிட்டி இருக்கும்..இந்த செல் போன்களால் மிகப்பெரிய அளவில் பலன் அடைந்தவர்கள் அதன் உரிமையாளர்கள்தான்...

செல்போனுக்கு முன்னாள் பேஜர் என்றொரு சாதனம் வந்தது..அது ஜஸ்ட் ஒரு வருடம்தான் பரபரப்பாக இருந்தது....செல்போன் உபயோகம் பரவலான பிறகு அதுவும் குப்பைத்தொட்டிக்கு போகவேண்டிய ஒரு சாதனம் என்ற அளவுக்கு கேவலப்பட்டது..ஒரு மாபெரும் தொலை தொடர்பு சாதனங்கள், மிகச்சாதாரண நிலைக்கு ஆளாகியது நமது நாட்டில் மட்டும்தான்..நானும் பல நாடுகளில் பார்த்து இருக்கிறேன்..அப்படி யாரும் மணிக்கணக்கில் செல் போன் பேசுவது இல்லை..இன்னும் சொல்லப்போனால் அவைகள் அவர்ளுக்கு ஒரு போலுதொபோக்கு சாதனமாகவே அதாவது கேம்ஸ் விளையாடும் சாதனமாகவே உள்ளது...அவர்கள் பேச வேண்டும் என்றால்தான் மொபைல் போன் எடுத்து பேசுகிறார்கள்..இல்லையென்றால் அது அவர்களது ஹான்ட் பேக்கில் தூங்குகிறது...நம்மைப்போல நொடிக்கொருதரம் எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருப்பதில்லை..நாம்தான், யாரவது மிஸ் கால் கொடுத்து இருக்கிராகளா, ஏதாவது எஸ் எம் எஸ் வந்து இருக்கிறதா என்று..தூக்கத்தில்  கூட எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்...வித விதாமான் ரிங் டோன், விதவிதமான காலர் டோன் என்று எல்லாவற்றிலும் காசு பார்கிறார்கள்..

போதாதற்கு, கால் செண்டர் அழகிகளின் தொல்லைகள் வேறு.
பைக்கில் போகும்போதுதான் தொடர்ந்து கால் செய்து, லோன் வாங்குங்க , எங்க கிளப்ல மெம்பராகுங்க என்று கொல்கிறார்கள்..

செல்போனே அறிமுகமான காலகட்டத்தில், அவுட் கோயிங் காலுக்கு ` 16 ம் இன் கம்மிங் காலுக்கு ` 8 ம் இருந்தது..அப்போதாவது வீண் பேச்சுக்கள் இல்லை..ஆனால் இப்போது...?வீட்டிலிருந்து  படிக்கட்டில் இறங்கும்போதே ஏதாவது வேலை சொல்கிறார்கள்.,,,நொடிக்கொருதரம் தேவையற்ற வேலைகள் சொல்கிறார்கள்..

வீண் டென்சன் மன உளைச்சல் தான் இந்த செல்பேசிகளால் 
எனக்கு தெரிந்து செல்போன் அட்டன் பண்ணக்கூடாத நேரங்கள் :
சாப்பிடும் நேரம் - ஏனெனில் சாப்பாட்டின்  சுவையே தெரிவதில்லை..
பாத்ரூம் செல்லும் நேரம்  - போன பேசி முடித்தபிறகு எங்கே வைப்பது என்ற பிரச்சினை .
தூங்கும்போது போனை அணைத்து விடுவது நல்லது - ஒருதரம் முழிப்பு வந்துவிட்டால் மீண்டும் தூங்குவது எவ்வளவு கஷ்டம் எனபது அனுபவிததவருக்கு தெரியும்..
பைக்கிலும் காரிலும் நாம் ஒட்டிக்கொண்டு  செல்லும்போது - இதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும்..
முக்கியமான விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதுஇப்படி பல தருணங்கள்..


அப்புறம் நாம் போன் செய்யக்கூடாத நேரங்கள்..

சாப்பிடும் முன்பும் 
தூங்குவதற்கு முன்பும்
பாத் ரூம் போவதற்கு முன்பும்
குளிக்க போவதற்கு முன்பும் 
பைக்கோ, காரோ ஓட்டுவதற்கு முன்பும்..

ஏனென்றால் நாம் இவைகளுக்கெல்லாம் முன்பு  போன் செய்வோம், சம்மந்தப்பட்ட நபர் அப்போது போனை எடுத்திருக்க மாட்டார்..பிறகு நாம் இந்த வேலைகளை ஆரம்பிக்கும்போது அவர் போன பண்ணுவார்..மிகப்பெரிய தொல்லையாக இருக்கும்.


எனவே மிக அவசியமான தேவைகளுக்கு மட்டுமே செல்போன்களை உபயோகப் படுத்த நம்மை  பழக்கி கொள்வது நன்மையாக இருக்கும் என நினைக்கிறேன்.
Saturday, October 23, 2010

வலைப்பூ தரவரிசையில் முன்னேறுவது எப்படி?வலைப்பூ தரவரிசையில் முன்னேறுவது எப்படி என்பதை ஆராய்வதற்கு முன்பு, ஒரு "கிசு கிசு" ஒன்றை தெரிந்து கொள்வோம்.

"அவர் ஒரு பிரபல பதிவர். "ம" வில் ஆரம்பித்து "கி" யில் முடியும் மர்மமான மனிதர் அவர். அவருக்கும், "ம" வில் ஆரம்பித்து "ர்" இல் முடியும் அமைச்சர் பதிவர் ஒருவருக்கும்தான் எப்போதும் போட்டி. இருவரும் எந்த வேலையை செய்கிறார்களோ இல்லையோ, காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரின் பதிவையும் பார்த்து, இவன் எத்தனாவது "rank"  இருக்கிறான் என்று  பார்த்துவிடுவது இருவரின் வழக்கம். மொக்கை பதிவாகவே போட்டு தரவரிசை ஏற்றிக்கொண்டே போகும் அமைச்சர் பதிவரும், அவரை முந்த விடக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கும் மர்ம பதிவருக்கும் ஒருவரை ஒருவர் தரவரிசையில் முந்தவேண்டும் என்பதிலும், அதிக "hits" பெறவேண்டும் என்பதிலுமே எப்போதும் போட்டா போட்டி...!"


ஆரம்பத்தில் "ரேங்க்" பட்டையைப் பற்றி அறியாமால் நெடுநாள் இருந்து விட்டேன்..

இன்னொரு நலம் விரும்பி பதிவர் சொன்ன பிறகுதான் சரி நாமும் நமது வலைப்பூவில் ஒரு ரேங்க் பட்டையை போட்டு வைப்போமே என்று அந்த ரேங்க் பட்டையை இணைத்தேன்..ஆரம்பத்தில் ஒரு 300  ரேங்குக்கும் மேலாகத்தான் இருந்தது..அது நாளடைவில் பார்ப்போர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து "ரேன்க்" குறைய ஆரம்பித்த பிறகுதான் ஆஹா இதை மைண்டைன் பண்ணனுமே என்று கவலை கூட ஆரம்பித்து விட்டது...


இதை இப்படியே கண்டினியூ பன்னனனும்னா ஏதாவது பதிவு போட்டுக்கொண்டே இருக்கவேண்டும்..என்ன பண்ணுவது..கண்டதெல்லாம் கிறுக்க ஆரம்பித்துவிட்டாகிவிட்டது.

போட்டியாக அந்த அமைச்சர் பதிவரும், மீள் பதிவு, கீழ் பதிவு, மேல் பதிவுன்னு அவரும் பழைய பதிவெல்லாம் தூசு தட்டி போட ஆரம்பித்து விட்டார்...

ஆகவே, அவர் மட்டும் தரவரிசையில் முந்தக்கூடாது, பதிவர்கள் அனைவருமே நல்ல தரவரிசையை அடைய வேண்டும் என்பதன் நோக்கமே இந்த பதிவு...

ஆகவே,
அன்பார்ந்த பதிவர்களே
பதிவுல நண்பர்களே..
நல்லமனம் படைத்தோர்களே...

வலைப்பூவில் தரவரிசையில் முன்னேறுவது எப்படி? 
-
-
-
-
 என்று யாருக்காவது தெரிந்தால்...
தயவுசெய்து சொல்லுங்களேன்..பிளீஸ்.......
பின்குறிப்பு (அல்லது டிஸ்கி ) : இதுபோன்ற மொக்கை பதிவுக்கு எனக்கு அனுபவம் பத்தாத காரணத்தால் "மொள்ளமாரித்தனம், பயபுள்ளே, 
சின்னபுள்ளதனமா இருக்கு, ஆணி புடுங்குறது.இன்னும் இதுபோன்ற சம்பிராதய வார்த்தைகளை தேவையான இடங்களில்   சேர்த்துக்கொள்ளவும்..

Thursday, October 21, 2010

ரவுடியின் கூச்சல்

மும்பையின் பிரபலமான ரவுடி, "ரஜினிகாந்தின் கடவுள்" பால்தாக்கரே என்பவன்.

இவன் தமிழர்களை மும்பையில் இருந்து விரட்டுவதற்காகவே சிவசேன என்கிற கட்சியை ஆரம்பித்து, தனது குடும்பத்தினருக்கும் ஆளுக்கொரு கட்சியை வைத்து ரவுடித்தனம் பண்ணிக்கொடிருப்பவன்.

இவனது கிறுக்குத்தனமான கட்டுரைகளை வெளியிடுவதற்கென்றே "சாம்னா" என்ற பத்திரிக்கையை நடத்தி வருகிறான். இதில் இவன் எழுதும் கட்டுரைகள்தான் பெரும்பாலும் மும்பையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கெல்லாம் காரணமாக  அமைந்து வருகிறது.

அந்த பொறுக்கியின் சமீபகால கட்டுரைதான் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை தடை செய்யவேண்டும் என்பதாகும்.

இந்த முட்டாள் அதற்க்கு கூறும் காரணம் மகா மடத்தனமாக உள்ளது. 

"சாந்தாகுரூசில் வி.என்.தேசாய் மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண்குழந்தையை கடந்த பதினைந்தாம் தேதி பர்தா அணிந்த ஒரு பெண் திருடிச் சென்று விட்டாராம் . இதன் காரணமாகத்தான் திருட்டிற்குப் பயன்படும் பர்தா எனும் ஆடையை தடைசெய்ய வேண்டும்" என்று கிறுக்குத்தனமாக உளறியுள்ளான்.
 
அடப் பொறுக்கியே, 

எத்தனையோ சாமியார்கள் காவி உடை அணிந்து கயவாளித்தனம் செய்கிறான்..அதற்காக காவி உடையை தடை செய்ய சொல்லுவியா?

எத்தனையோ திருடர்கள் போலீஸ் உடை அணிந்து திருடுகிறார்கள்...அதற்காக போலிஸ் உடையை தடை செய்ய சொல்லுவியா?

எத்தனையோ கொள்ளைக்காரர்கள் அதிகாரிகள் போல உடை அணிந்து திருட்டுத்தனம் செய்கிறார்கள் அதற்காக அதிகாரிகள் அணியும் உடையை 
தடை செய்ய சொல்லுவியா?

ஏன் இரண்டு நாட்களுக்கு முன்புகூட, ஒரு முன்னாள் எம் எல் ஏ - இன்கம் டாக்ஸ் அதிகாரிபோல சென்று திருடி இருக்கிறான்.

இப்படி ஒவ்வொரு காரணத்திற்காகவும், சீருடைகளையே தடை செய்ய சொல்லுவானா இந்த லூசு?

பிரான்சில் பர்தா தடை செய்யப் பட்டுள்ளதாம்..
இந்த லூசுப் பயலை போய் தலைவன் என்று கொண்டாடுகிறார்கள்..

பிரான்சில் தடை செய்யப்பட்டது பர்தா அல்ல...முகத்தை மறைக்க கூடாது என்றுதான் தடை செய்யப்பட்டுள்ளது..உடலை மறைப்பதற்கு தடை இல்லை..

பத்தாதற்கு பள்ளிவாசல்களில் பாங்கு (தொழுகைக்காக ஐந்து நேரம் அழைப்பது ) கூறப்படுவதையும் தடை செய்ய சொல்கிறான்.

காரணம் அதிகாலையில் தூங்குவதற்கு இடைஞ்சலாக உள்ளதாம்.
அதிகாலையில் எழுந்திருப்பதை உலகமே ஆரோக்கியமாகக் கருதிக்கொண்டிருக்கும்போது இந்த லூசுக்கு மட்டும் தூங்கணுமாம்.....

இப்படி கேனத்தனமாக உளரும் ரவுடிகள்தான் இன்று ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள்..

ஹ்ம்ம்ம்....

 

Wednesday, October 20, 2010

தொட்டில் பழக்கம்....

1980 களில் ஆனந்த விகடன் என்ற பத்திரிகையில் வெளியான ஒரு ஜோக்..

மேடையில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளைப் பற்றி கீழே அமர்ந்திருக்கும் மக்களில் இருவர் பேசிக்கொள்வதாக அது அமைந்திருந்தது..

"ஒருவன் : இங்கே மேடையிலே இருக்கிறவர்களில் யார் எம் எல் ஏ. யாரு மந்திரி ?
இரண்டாமவன் : அதோ பிக்பாக்கெட்காரன் மாதிரி இருக்காரே அவர்தான் எம் எல் ஏ. முகமூடி கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறவர்தான் மந்திரி."
மேற்கண்ட நகைச்சுவை வெளியான சமயம் எம். ஜி ஆர், முதலமைச்சர், சபா நாயகராக பி ஹெச் பாண்டியன். இந்த நகைச்சுவை அப்போது பெரும் பிரச்சினையை கிளப்பை அந்த வார இதழின் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டு அப்புறம் பத்திரிக்கையாளர்களின் பெரும் போராட்டத்தின் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டதெல்லாம் நடந்தது..
இப்போது இந்த செய்தியை படியுங்கள்..
சென்னை மேற்கு மாம்பலம் மூர்த்தி தெருவில் வசிப்பவர் வெங்கட்ராமன் (83). இவர், பொதுப் பணித்துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று பிற்பகல் 12 மணிக்கு தனது மனைவி வேதவள்ளி (73), மருமகள் ராதா (40) ஆகியோருடன் வீட்டில் இருந்தார். அப்போது 2 பேர் பைக்கில் வந்து, தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி அடையாள அட்டையைக் காட்டியுள்ளனர்.
பின் ‘நீங்கள் வருமானத்துக்கு ஏற்றார்போல கணக்கு காட்டவில்லை. வீட்டை சோதனையிட வேண்டும்’ என்று கூறி சோதனையிட்டுள்ளனர். பின் ‘நீங்கள் அதிகமாக வருமான வரித்துறையை ஏமாற்றியுள்ளீர்கள். அதனால், வீட்டில் உள்ள 25 சவரன் நகை,  ` 20  ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முறையான கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து காட்டுங்களp://3.bp.blogspot.com/_IAE�்று கூறி விட்டு பைக்கில் புறப்பட்டனர்.

அப்போது அவர்கள் மீது சந்தேகம் வந்ததால், மருமகள் ராதா வீட்டில் இருந்து வெளியில் வந்தார். 2 பேரும் பைக்கில் ஏறி புறப்பட்டனர். அவர்கள் மீது பாய்ந்து சென்ற ராதா, பின்னால் அமர்ந்திருந்தவரின் சட்டையை மட்டும் கொத்தாக பிடித்துக் கொண்டு, திருடன் திருடன் என்று சத்தம்போட்டார்.
அதற்குள் பைக் புறப்பட்டதால், பைக்கில் இருந்தவர் நகை, பணத்துடன் தப்பிச் சென்றார். பின்னால் இருந்தவர் பிடிபட்டார். அதற்குள் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடி வந்து கொள்ளையடித்தவரைப் பிடித்து, அசோக்நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
பிடிபட்டவர் பெயர் ரவிசங்கர் (42). இவர், விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ. இவர் கடந்த 6 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:
விளாத்திகுளம் எம்எல்ஏவாக 1996ம் ஆண்டு இருந்தேன். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை எதிர்த்து வெற்றி பெற்றேன். சிறிய வயதில் எம்எல்ஏவாக இருந்ததால் பரபரப்பாக பேசப்பட்டேன். பின் எனக்கு இலங்கையைச் சேர்ந்தவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனால் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த ஆரம்பித்தேன். அதில் வருமானம் வந்ததால் தொடர்ந்து அந்த வேலையில் ஈடுபட்டேன்.
அதன்பின் 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி ` 10  கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டேன். ஓராண்டு சிறையில் இருந்தேன். 2004ம் ஆண்டு நெல்லையில் உள்ள ஒரு வழக்கில் ஆஜராவதற்காக போலீசார் என்னை  அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசில் பிடியில் இருந்து தப்பினேன். கடந்த 6 ஆண்டுகளாக  தலைமறைவாக இருந்தேன். சென்னை போரூர் காட்டுப்பாக்கம் இந்திரா நகரில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். இப்போது வருமானமும் இல்லை. போலீசாரும் ஒரு பக்கம் தேடுகின்றனர்.
இதனால், என்னுடைய தம்பி இளஞ்செழியன் (38) என்பவருடன் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கொள்ளையடிக்க ஆரம்பித்தேன். சென்னையில் பல இடங்களில் அதுபோல கொள்ளையடித்துள்ளேன். இப்போது பொதுமக்கள் பிடித்துக் கொடுத்ததால் போலீசில் சிக்கிக் கொண்டேன். பைக்கில் தப்பிய என் தம்பியிடம்தான் நகை, பணம் உள்ளது.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் ரவிசங்கர் கூறினார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் ரவிசங்கரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கண்ட நகைச்சுவை இப்போது முற்றிலும் பொருந்துகிறதல்லவா?
பின்குறிப்பு : இந்த முன்னாள் எம். எல். ஏ பற்றி செய்தி வெளியிட்ட தினகரன், தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகள் இவன் - எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் -  எந்த கட்சியைசெர்ந்தவன் என்பதை மறைத்து விட்டன..இதிலிருந்தே தெரிகிறது இந்த கொள்ளைக்காரன் எந்த கட்சியை சேர்ந்தவன் என்று..


Monday, October 18, 2010

ராம் லீலா

முதலில் ஒரு குட்டிக்கதை.

அமெரிக்க ட்வின் டவர் இடிக்கப்பட்ட வழக்கு வருகிறது. வழக்குத் தொடர்ந்தவர் ஜார்ஜ் புஷ். இடித்தவர் ஒசாமா பின்லாடன்.  ட்வின் டவர் இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற அந்த வழக்கு  பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட பின்பு, அதற்கான தீர்ப்பு வழங்கப்படுகிறது. 
நீதிமன்ற தீர்ப்பில் தனக்கு நியாயம் கிடைக்கும்..சட்டப்படி அது தனக்குத்தான் சொந்தம் என்ற எதிர்பார்ப்பில் புஷ் காத்திருக்க, ஒசாமாவோ அதைப்பற்றி துளியும் கவலை கொள்ளாமல் சாதாரணமாக இருக்கிறார்..
தீர்ப்பு வழங்கப்படுகிறது...

தீர்ப்பைக்கேட்ட ஜார்ஜ் புஷ் அதிர்ச்சி அடைகிறார்..ஒசாமாமோ இனிப்பு வழங்கி "இந்த தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு தெரியும்" என்று கொண்டாடுகிறார்..அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறார். அந்த விளக்கம் கடைசியில்.

ராம் லீலா நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

அதன் முடிவில் ஒரு அநியாயமும் நடந்தது.

ராம் லீலா எனபது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொண்டாடும் நிகழ்ச்சி. அது அவர்களது தனிப்பட்ட உரிமை.
ஆனால், ராம் லீலா நிகழ்ச்சியில் சிலர் ராமன், சீதை மற்றும் அனுமான் போன்ற வேடமணிந்து வந்தனர், அவர்களை, இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கும் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் , பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி போன்றோர் வணங்கி தமது மதசார்பையும், அறிவு முதிர்ச்சியற்ற தன்மையையும் காட்டியுள்ளனர்.

கடவுள் என்பவன் பிறப்பதில்லை.
அப்படி இருக்கும்போது, அந்த வேடமிடுவதால் வேடமிட்டவர்கள் எப்படி கடவுளாவார்கள்..?
இப்படித்தான் இருக்கிறது இந்தியாவில் மதச்சார்பின்மை..

தீபாவளிக்கு போனஸ் வழங்குகிறார்கள்.. 
திருவிழாக்களுக்கு சிறப்பு ரயில்கள் பஸ்கள் விடப்படுகின்றன
அரசு அலுவலகங்களில் சாமிபடங்கள் பூஜை செய்யப்படுகின்றன.

இப்படி ஒரு குறிப்பிட்ட மதச்சடங்குகளை பின்பற்றிக் கொண்டு மதச்சார்பற்ற நாடு என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள்..

இந்த ராமனால்தான் இந்தியாவில் பெரும்பாலான குழப்பங்கள்

மதக்கலவரங்கள், குண்டு வெடிப்புக்கள், ரயில் கவிழ்ப்புக்கள், மசூதி இடிப்புகள், நீதிபதிகளின் தடுமாற்றம், 
இன்னும் தமிழ் நாட்டின் முக்கிய ஒரு திட்டமான சேது சமுத்திர திட்டத்திற்கு பெரும் இடையூறாக இருப்பது ராமர் பாலம் என்ற ஒரு கற்பனைப் பாலமே..அப்படி அது உண்மையாக இருந்தாலும் ஒரு நல்ல திட்டத்திற்காக அதை இடித்ததால்தான் என்ன? 

இனி குட்டிக்கதையில் ஒசாமா பின்லாடன் தந்த விளக்கம்.

"இந்த வழக்கில் ட்வின் டவர் இருந்த இடம் மூன்றில் இரண்டு பங்கு ஒசாமாவுக்கும், ஒரு இடம் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். காரணம் இதற்க்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள் அலஹாபாத் ஹை கோர்ட்டில் பாபரி மஸ்ஜித் நில வழக்கில் தீர்ப்பு வழங்கியவர்கள்.."

Thursday, October 14, 2010

அரசியல் கூத்துக்கள்...

கருணாநிதி - ராமதாசு சந்திப்பு..


தோ நேர்மையும் - நியாமும் நிறைந்த அரசியல்வாதி மருத்துவர் இராமதாசு, அவரைவிட நியாயவானும் , நேர்மையும் நிறைந்தவரும்  ஜனநாயகத்தை காப்பவருமான கருணாநிதியை சந்தித்துவிட்டார்..சாதிவாரி கணக்கெடுப்புக்கு மனு கொடுப்பதற்காக முதல்வரை சந்தித்ததாக இவர் புருடாவிட்டிருக்கிறார்..இவரது இந்த புருடா ஜால்ரா பத்திரிக்கைகளின் முதல் பக்க செய்திக்கு வேண்டுமானால் பயன் பட்டிருக்கலாம்..
ஆனால் உள்நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே..
கருணாநிதியின் வாரிசுகள் மட்டும்தானா சம்பாதிக்கவேண்டும்..பாவம் ராமதாசும் அன்புமணியும் பிழைப்புக்கு என்ன  பண்ணுவார்கள்? அவர்கள் வருமானத்திற்கு என்ன வழி? கருணாநிதி மனசு வைத்தல் ஏதோ ஒரு எம் பி போஸ்ட், ஒரு மந்திரி போஸ்ட் கிடைக்கும்..வயிற்று பிழைப்புக்கு உதவும்..பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்..?
காடுவெட்டி குரு கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் எவ்வளவு கேவலமாக பேசினால் என்ன? ஒட்டு விழுகிறதா? வருமானமா வருகிறதா..? அப்புறம் மானமாவது ரோசமாவது...கூட்டணிய சேருடா..அது போதும்.!
சோனியா சூசகமாம்..


திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, "இந்த கூட்டணி மகிழ்ச்சி அளிக்கிறது" என்றுதான் சொன்னார்..
அதற்குள் இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் "சோனியா சூசகம்" என்று ஏதேதோ கற்பனைகளை எழுதி சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டன..
சோனியா பேசியது அவருக்குத்தானே தெரியும்...இங்குள்ள வாரமிருமுறை ஆபாசபத்திரிக்கைகள் எப்படி அவரது மனதை படித்தன?  
எதுவும் ஆபாச செய்தி இந்த வாரம் கிடைக்கவில்லை போலும்..எவளாவது நடிகை மார்பையும் தொப்புளையும் காட்டிக்கொண்டிருப்பாள்..அவளை பேட்டி எடுத்து போடுங்கடா.. இல்லை ரஜினிகாந்த் எங்காவது இமயமலைப்பக்கம் போவான்..அதை ஏழு பக்கம்  செய்தியாக்கி சம்பாதிங்கடா...இப்படி தேவையற்ற கற்பனைகளை எழுதி மக்களை ஏமாற்றவேண்டாம்.

சர்கஸ்காரன் எடியூரப்பா..
லகிலேயே மிகக் கேவலமான ஒரு கட்சி எதுவென்றால்  ஆர் எஸ் எஸ்இன்  கைக்கூலிகளால் நடத்தப்படும் பார"தீய" ஜனதா என்ற பயங்கரவாத கட்சிதான்..அவர்கள் இந்தியாவை ஆண்டு அசிங்கபடுத்தியது போதாதென்று, கர்நாடகாவிலும் தமது சர்கஸ் வேலைகளை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்...இந்த எடியூரப்பா என்பவனின் கட்சிக்காரனெல்லாம் "குரங்கு குப்பன்" வம்சாவளி போலும்..ஒவ்வொரு நாளும் ஒரு பல்டி அடிக்கிறானுங்க...
ஓட்டுபோட்டு ஆட்சியைக்கொடுத்த மக்களை கவனிக்காமால் இப்படி ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள நாட்களை வீணடிக்கும் இந்த கொள்ளைக்கூட்டம் கர்நாடகாவை ஆண்டுதான் ஆகவேண்டுமா..இந்த வானரங்களை ஏன் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கலைத்து விரட்டியடிக்காமல்  வேடிக்கை பார்கின்றன என்றுதான் புரியவே இல்லை..

ஜெயலலிதாவும் மிரட்டல் கடிதங்களும்...
வர் மிகப் பிரபலமான ஒரு அரசியல் கட்சியின் தலைவி...எதிர்க்கட்சி தலைவிகூட..அவருக்குதான் தினமும் ஒரு மிரட்டல் கடிதம் வருகிறதாம்..இன்னுமா காவல்துறை கண்டு பிடிக்காமல் இருக்கிறது?...
ஏராளமான மிரட்டல்  கடிதங்களுக்கு போலீஸ் தரப்பில் எந்த முடிவும் தெரியாததால், இப்போது போன் மூலம் மிரட்டல் வருகிறதாம்....இன்றைய செய்தித்தாள்களில் பார்த்தது..அப்படியும் நடவடிக்கை இல்லை என்றால்..நேரிலேயே வந்து மிரட்டிவிட்டு  போவானோ...ஹ்ம்ம் அரசியல் ஸ்டண்டுகளுக்கும் ஒரு அளவில்லையா....? 

Sunday, October 10, 2010

எந்திர(ன்) ஜாலம்ன் பிக்சர்சின் எந்திரன், சன் டி வி, கே டி வி, சன் நியூஸ் டி வி, சன் மியூசிக் டி வி, ஆதித்யா டி வி பத்தாதற்கு, தினகரன் நாளிதழ், குங்குமம், வண்ணத்திரை வார இதழ்கள் என்று அவர்கள் சம்மந்தப்பட்ட ஊடகங்களின் அலறல் ஒரு புறம், அவை அல்லாத, சினிமா செய்திகளுக்கென்றே அலையும் ரஜினி புராணம் பாடும் ஆபாச, மற்றும் ஜால்ரா பத்திரிக்கைகளின் ஊளைகள் ஒருபுறம், தமிழ் ப்ளாக்கர்ஸ் சிலரின் இலவச விளம்பரம், இப்படி ஆளாளுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருந்த எந்திரன் என்கிற திரைப்படம் ஒருவழியாக வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்டது.
டம்  முடிந்ததற்கான விழா, பாடல் கேசட்டுகள் வெளியீட்டுக்கான விழா, டிரைலர் வெளியீட்டுக்கான விழா, டிக்கெட்  கொடுப்பதற்கான விழா என்று எல்லா கருமாந்திரங்களுக்கு விழாவும் எடுத்து, ரஜினி ரசிகர்கள் என்ற முட்டாள்களிடம் கொள்ளையும் அடித்தாகி விட்டது.
கடந்த ஒருவாரங்களில் அவர்கள் செலவழித்த பணத்தை (ஏறக்குறைய நூற்றைம்பது கோடி ரூபாய்) எடுத்து இலாபமும் சம்பாதித்திருப்பார்கள்...
ஏனென்றால் ஒருவாரமாக சென்னையில் ஏன் தமிழ் நாட்டில் இந்த படத்தை தவிர வேறு எந்த படமும் ஓடவில்லை..
எந்திரன் திரைப் படத்தை பார்க்காதவன் தமிழ் நாட்டில் வசிக்கவே லாயக்கற்றவன் எனபது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் ஏறக்குறைய அனைவரையும் பார்க்கவைத்ததில் சன் பிக்சர்காரர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றுதான் சொல்லலாம்...
கடைசியில் அந்த கருமாந்திர படத்தை நானும்தான் பார்த்துவிட்டேன்..
ந்த ஆர்ர்ப்பாட்டமும் இல்லாமல் அறிமுகமாகிறார் ரஜினி என்று பத்திரிக்கைகள் பீற்றிக் கொள்கின்றன..ஆனால் அந்த கதாநாயகனை, அவன் உருவாக்கிய  ரோபோவை வைத்தே கடவுள் என்று சொல்லவைத்து பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறார்கள்..
அந்த வசீகரன் என்ற விஞ்ஞானிக்கு சந்தானம், கருணாஸ் ஆகிய இரோண்டு லூசு உதவியாளர்கள்..அந்த லூசு   உதவியாளர்களை வைத்துக்கொண்டா இவ்வளவு அறிவு வாய்ந்த ஒரு ரோபோவை அந்த விஞ்ஞானி உருவாக்கினார் என்று என்னும்போது டைரக்டரின் அறிவை எண்ணி மெய் சிலிரிக்கிறது..இந்தமாதிரி லூசு விஞ்ஞானிகள் எங்காவது இருக்கிறார்களா? 
அப்புறம் ரஜினி பத்து ஆண்டுகளாக அந்த ரோபோவை உருவாக்க ஆய்வுக்கூடத்திலேயே பத்து ஆண்டுகள் செலவளித்தார் என்றால் அவருக்கு என்ன வயது இருக்கும்? அவர் எப்போது ஐஸ்வர்யா ராயை காதலிக்க ஆரம்பித்தார்? 
ப்புறம் என்னமோ ஐஸ்வர்யா ராய் ரஜினிக்காகவே வானத்திலிருந்து வர வழைக்கப்பட்டவள் போல ரஜினிக்கு ஐஸ்வர்யா ஜோடி என்று இங்குள்ள மாமாப்  பத்திரிக்கைகள் குதூகலித்தன..ஏறக்குறைய பத்து வருடங்களாக, இந்த மாமாக்கள் அவளை ரஜினிக்கு கூட்டி  கொடுக்க அலைந்தன.
.அதற்குள் அவள், பிரசாந்த், அஜித், மம்மூட்டி, அப்பாஸ், மோகன்லால்,இன்னும் செந்தில், நாசர், எஸ் வி சேகர், விக்ரம், விவேக் ஓபராய், பிரிதிவி ராஜ் இன்னும் ஏன் இதே படத்திலேயே கலாபவன் மணி ஆகியோருடன் சேர்ந்து நடித்துவிட்டாள்..
அதுவும் ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் காதல் காட்சிகளில் நடிப்பது, நமக்கே ஒரு வித கூச்சம் வருகிறது..."ஹை ஸ்வீட் ஹார்ட்" என்று ரஜினி சொல்வது மிகக் கேவலமாக இருக்கிறது.. தனது தந்தையை விட அதிகவயதுள்ள ஒருவனுடன் நெருங்கும்போது எப்படி அவளால் ஒன்றி நடிக்க முடியும்? அதுதான் அவளுக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை..
ஏற்கனவே பாபா என்ற படத்தில் தான் நடிக்காததற்கு "பணம் முக்கியமில்லை..எனக்கு முக்கியத்துவம் தரவேண்டும்" என்று சவடால் விட்ட ஐஸ்வர்யா ராய், இந்த படத்தில் என்னத்தை கிழித்து விட்டார்..அதிகம் சம்பளம் பெற்றதைத்தவிர?
"மனிதன் படைத்ததிலேயே உருப்படியான விஷயம் ரெண்டுதான்...ஒண்ணு நான், இன்னொன்னு நீ.." என்று ஒரு காட்சியில் ரோபோ உளறுகிறது..ரோபோவை ஒரு மனிதன்  படைத்ததாக காட்டுகிறார்கள்..இதில் ஐஸ்வர்யா ராயை யார் படைத்தது..என்ன ஒரு லூசுத்தனமான ஒரு வசனம்?
இப்படித்தான் "பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும்" என்று ஒரு வசனம் சிவாஜி படத்தில்(அப்போ இந்த படத்திற்ற்கு கூட்டம் கூட்டமாக போகிறவர்கள் எல்லாம் பன்னிகளா?  )...இதையும் இந்த மாமாப் பத்திரிக்கைகள் கொண்டாடின..அது ஏற்கனவே "கிரி" என்ற  படத்தில் அர்ஜுன் பேசும் வசனம்..அதை திருடி சிவாஜி படத்தில் சேர்த்து பேர் வாங்கிக் கொண்டார்கள்..
ஒளிப்பதிவை ஆகா ஓகோ என்று புகழும் முட்டாள்களா...அதற்குரிய கேமரா இருந்தால் நல்ல தெளிவான ஒளிப்பதிவு கிடைக்கும்,..இதற்ருக்கு கேமரா மேனுக்கு எந்த திறமையும் தேவையே இல்லை..
நூறு மனிதனுக்குள்ள அறிவும் திறமையும் உள்ள ரோபோவால், நூற்றுக்கணக்கான ரோபோக்களுக்குள் ஊடுருவி இருக்கும் மனிதனை ஸ்கேன் பண்ணி கண்டு பிடிக்கமுடியவில்லை...தலையை சுற்றவைத்து கண்டுபிடிப்பது பெரிய முட்டாள்தனமில்லையா?
அப்படி கண்டுபிடித்த பிறகும் அவனைக் கொல்வதர்க்குமுன் நம்பியார்போல வசனம் பேசிக்கொண்டிருப்பதும் தமிழ்படங்களில் காலங்கலாமாக ஒரு கேனத்தனமான வழக்கமாக உள்ளது..அதை அப்படியே இந்த படத்திலும் காப்பியடித்திருக்கிறார்கள். 
 அதே போல இறுதிக்காட்சியில் ரோபோ தன்னையே அழித்துக் கொள்வதும் டெர்மினேட்டர் என்ற படத்தின் அப்பட்டமான காப்பி...
இதை எப்படி புதுமை என்று வெட்கமில்லாமல் பேட்டி கொடுக்கிறார்களோ?
என்னமோ ஹாலிவுட் தரம் ஹாலிவுட் தரம் என்கிறார்களே..அது என்ன ஹாலிவுட் தரம்? 
கொரில்லா பெண்ணை காதலிப்பது,   காருக்கு பேய் பிடிப்பது இது மாதிரி லூசுத்தனம் தான் ஹாலிவுட் தரம்.  ஒருவனுக்காக ஊரையே அழிப்பது . இதைத்தான் பிரம்மாண்டம் ஹாலிவுட் தரம் என்று இந்த ஊரு அடிமைகள் கொண்டாடுகின்றன..ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை கொன்றதற்காக அந்த கதாசிரியரை முற்றுகை இட்டவர்கள்தான் அந்த அமெரிக்க முட்டாள்கள்..
எந்திரனிலும் அப்படித்தான்...ஒரு ஐஸ்வர்யா ராயை அடைவதற்காக, ஒரு ஊரையே நாசம் செய்கிறது அந்த ரோபோ..அது  பத்தாது என்று, அந்த ரோபோவை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும்ஆயிரக்கணக்கான  போலீஸ்காரர்கள் போய் ரோபோவுடன் மோதி சாகிறார்கள்..
மிக சாதாரணமான கதை, ஒரு பெண்ணுக்காக ஒரு ரோபோ ஊரையே நாசம் செய்யும் கதைதான்..அந்த ரோபோவை யாராரளும் வெல்லமுடியாது என்கிறார்கள்..விஞ்ஞானி வசீகரன் கண்டுபிடித்தது ஒரு எந்திரன்தான் - மந்திரன் அல்ல...அனால் அது செய்யும் கூத்தெல்லாம் மந்திரவாதிகளைப் போலத்தான் இருக்கிறது.தான் பத்தாண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய ரோபோ-வை, இராணுவத்திற்கு பயன்படுத்தப் போவதாக கூறும் விஞ்ஞானி, அதை ஐஸ்வர்யா ராயுடன் சும்மாவாவது அனுப்பி வைப்பது அசல் தமிழ் சினிமாத்தனம்..
அது தனது காதலியை காதலிப்பதாக தெரிந்தவுடன், அதை ஒரு சிறு ப்ரோக்ராம் மூலம் செயலிழக்க செய்துவிடலாம்..ஆனால் அதை ஆட்டை வெட்டுவது போல கோடாலியால் வெட்டுவது, அப்புறம் அந்த உபகரணங்களை வேறு ஒரு தயாரிப்புக்கு பயன்படுத்தாமல், கார்பொரேசன் குப்பைக்கு அனுப்புவது என்ன லாஜிக்கோ..அதுமட்டுமிலாமல் அதை தேடி, இன்னொரு பெரிய விஞ்ஞானி அந்த குப்பைக்கு போவது இன்னும் ஒரு முட்டாள்தனம்..
...
கடைசியில் நீதிமன்றக் காட்சியும் பழைய எம்  ஜி ஆர், சிவாஜி  போன்ற நடிகர்களின் படங்களில் வரும் மிக அரதப்  பழசான காட்சிதான்...
இப்படி ஒரு லூசுத்தனமான மிக சாதாரணமான ஒரு கதையை, பிரம்மாண்டம்  என்ற போர்வையிலும், கிராபிச்கிலும் , அதிகப்படியான விளம்பரத்திலும் மக்களை முட்டாளாக்கி விட்டார்கள்..
கடைசியாக எந்திரனைப் பற்றிய ஒரு குறுந்தகவல்...
காதலித்தால்..
ரோபோ என்றால்  கூட
கடைசியில் வருவது...
.
.
.
.
சாவுதான்..!