Pages

Thursday, October 14, 2010

அரசியல் கூத்துக்கள்...

கருணாநிதி - ராமதாசு சந்திப்பு..


தோ நேர்மையும் - நியாமும் நிறைந்த அரசியல்வாதி மருத்துவர் இராமதாசு, அவரைவிட நியாயவானும் , நேர்மையும் நிறைந்தவரும்  ஜனநாயகத்தை காப்பவருமான கருணாநிதியை சந்தித்துவிட்டார்..சாதிவாரி கணக்கெடுப்புக்கு மனு கொடுப்பதற்காக முதல்வரை சந்தித்ததாக இவர் புருடாவிட்டிருக்கிறார்..இவரது இந்த புருடா ஜால்ரா பத்திரிக்கைகளின் முதல் பக்க செய்திக்கு வேண்டுமானால் பயன் பட்டிருக்கலாம்..
ஆனால் உள்நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே..
கருணாநிதியின் வாரிசுகள் மட்டும்தானா சம்பாதிக்கவேண்டும்..பாவம் ராமதாசும் அன்புமணியும் பிழைப்புக்கு என்ன  பண்ணுவார்கள்? அவர்கள் வருமானத்திற்கு என்ன வழி? கருணாநிதி மனசு வைத்தல் ஏதோ ஒரு எம் பி போஸ்ட், ஒரு மந்திரி போஸ்ட் கிடைக்கும்..வயிற்று பிழைப்புக்கு உதவும்..பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்..?
காடுவெட்டி குரு கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் எவ்வளவு கேவலமாக பேசினால் என்ன? ஒட்டு விழுகிறதா? வருமானமா வருகிறதா..? அப்புறம் மானமாவது ரோசமாவது...கூட்டணிய சேருடா..அது போதும்.!
சோனியா சூசகமாம்..


திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, "இந்த கூட்டணி மகிழ்ச்சி அளிக்கிறது" என்றுதான் சொன்னார்..
அதற்குள் இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் "சோனியா சூசகம்" என்று ஏதேதோ கற்பனைகளை எழுதி சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டன..
சோனியா பேசியது அவருக்குத்தானே தெரியும்...இங்குள்ள வாரமிருமுறை ஆபாசபத்திரிக்கைகள் எப்படி அவரது மனதை படித்தன?  
எதுவும் ஆபாச செய்தி இந்த வாரம் கிடைக்கவில்லை போலும்..எவளாவது நடிகை மார்பையும் தொப்புளையும் காட்டிக்கொண்டிருப்பாள்..அவளை பேட்டி எடுத்து போடுங்கடா.. இல்லை ரஜினிகாந்த் எங்காவது இமயமலைப்பக்கம் போவான்..அதை ஏழு பக்கம்  செய்தியாக்கி சம்பாதிங்கடா...இப்படி தேவையற்ற கற்பனைகளை எழுதி மக்களை ஏமாற்றவேண்டாம்.

சர்கஸ்காரன் எடியூரப்பா..
லகிலேயே மிகக் கேவலமான ஒரு கட்சி எதுவென்றால்  ஆர் எஸ் எஸ்இன்  கைக்கூலிகளால் நடத்தப்படும் பார"தீய" ஜனதா என்ற பயங்கரவாத கட்சிதான்..அவர்கள் இந்தியாவை ஆண்டு அசிங்கபடுத்தியது போதாதென்று, கர்நாடகாவிலும் தமது சர்கஸ் வேலைகளை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்...இந்த எடியூரப்பா என்பவனின் கட்சிக்காரனெல்லாம் "குரங்கு குப்பன்" வம்சாவளி போலும்..ஒவ்வொரு நாளும் ஒரு பல்டி அடிக்கிறானுங்க...
ஓட்டுபோட்டு ஆட்சியைக்கொடுத்த மக்களை கவனிக்காமால் இப்படி ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள நாட்களை வீணடிக்கும் இந்த கொள்ளைக்கூட்டம் கர்நாடகாவை ஆண்டுதான் ஆகவேண்டுமா..இந்த வானரங்களை ஏன் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கலைத்து விரட்டியடிக்காமல்  வேடிக்கை பார்கின்றன என்றுதான் புரியவே இல்லை..

ஜெயலலிதாவும் மிரட்டல் கடிதங்களும்...
வர் மிகப் பிரபலமான ஒரு அரசியல் கட்சியின் தலைவி...எதிர்க்கட்சி தலைவிகூட..அவருக்குதான் தினமும் ஒரு மிரட்டல் கடிதம் வருகிறதாம்..இன்னுமா காவல்துறை கண்டு பிடிக்காமல் இருக்கிறது?...
ஏராளமான மிரட்டல்  கடிதங்களுக்கு போலீஸ் தரப்பில் எந்த முடிவும் தெரியாததால், இப்போது போன் மூலம் மிரட்டல் வருகிறதாம்....இன்றைய செய்தித்தாள்களில் பார்த்தது..அப்படியும் நடவடிக்கை இல்லை என்றால்..நேரிலேயே வந்து மிரட்டிவிட்டு  போவானோ...ஹ்ம்ம் அரசியல் ஸ்டண்டுகளுக்கும் ஒரு அளவில்லையா....? 

4 comments :

முசமில் இத்ரூஸ் said...

Annan marmayogie s.s.chandran idathai neengal nirappi viduveergalpola ungal karuthukkal samibakaalamagave romba kaattama irukku


rajni ungalidam thodarnthu seruppadi vaangi varugiraar.pavam rajniyai marmayogiyidmirundhu kaapatra avarin(rajni) kadavul pal thackarey marmayogie kannai kutthattum.hee.hee.hee

மர்மயோகி said...

@முசமில் இத்ரூஸ்
நண்பர் முசமில் இத்ரூஸ் அவர்களே,
எஸ் எஸ் சந்திரன் என்பவன் ஒரு தரங்கெட்ட பேச்சாளன்,
அவனுக்கு எம். பி பதவி கொடுத்ததன் மூலம் ஜெயலலிதாவின் தரமும் தெரிந்தது,
எம் பி பதவியும் கேவலம் அடைந்தது..
தயவு செய்து அவனுடன் என்னை ஒப்பிடவேண்டாம்..
(இறந்து போனவர்களைப்பற்றி தவறாக பேசவேண்டாம் என்று சொல்வார்கள்..
அது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும்...).

மங்குனி அமைசர் said...

என்ன இருந்தாலும் ராமதாஸ் போடறோ நல்லோரை திட்டுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

மர்மயோகி said...

@மங்குனி அமைசர்
அதுனாலதான் எனக்கு ஒட்டு விழவே மாட்டேங்குதோ?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?