Pages

Saturday, April 30, 2011

"வானம்" - அமிலமழை


குப்பத்தில் வசிக்கும் கேபிள் டிவி பணம் வசூலிக்கும் ஒரு இளைஞன் - தன தகுதிக்கு மீறிய ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். அவளிடம் நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, தான் ஒரு பணக்காரன் என்று நம்ப வைக்கிறான். அதற்காக, தான் வேலை செய்யும் முதலாளியிடம் பணம் ஏமாற்றுகிராரன், இன்னும் ஏராளமான தகிடுதத்தம் செய்கிறான். நியூ இயர் சாராய பார்ட்டிக்கு காதலி பாஸ் எடுக்க சொல்கிறாள். அதற்க்கு நாற்பது ஆயிரம் கட்டணம். அதற்காக சாலையில் பெண்களிடம் செயின் திருடும் அவன் போலீசிடம் சிக்குகிறான்.

கிராமம் ஒன்றில் கந்து வட்டி கடன்காரனிடம் அடிமையாக இருக்கும் தனது குழந்தையை மீட்க, கிட்னி விற்க வரும் ஏழை தாயும் அவரது மாமனாரும், கிட்னி ஆபெரசன் செய்யப்பட்டு ஒரு மருத்துவமனையில் இருக்கிறார்கள்.


இராணுவத்தில் உயிரை இழந்த ஒருவரின் மகன், வெறும் கிதார் வாசித்து சாதிப்பேன் - இராணுவத்தில் சேரமாட்டேன் என்று கச்சேரி செய்வதற்காக தனது பரிவாரங்களுடன் சென்னை வருகிறான். வரும் வழியில் அவன் மனிதாபிமானம் என்னவென்று உணர சில சம்பவங்கள். அதன் காரணமாக ஒரு விபத்து ஒன்றில் அடிபட்டு இருக்கும் கர்ப்பிணி பெண் ஒருத்தியை காப்பாற்றி மருத்துவமனை வருகிறான்.

தனது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் கருத்தரிப்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் வரும் முஸ்லிம் ஒருவர் - விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் பொறுக்கிகளால் தாக்கப்படுகிறார் . அவருக்கு உடந்தையாக போலிஸ் அதிகாரி ஒருவரும் இவரை தீவிரவாதி என்று குற்றம் சாட்டுகிறார். இந்த சம்பவத்தால் அவரது மனைவியின் கர்ப்பம்  கலைகிறது. இதனால் பாதிக்கப்பட்டு அவரது தம்பி தலைமறைவாகிறான். தனது தம்பி சென்னையில் இருக்கிறான் என்பதை அறிந்து அவனை தேடி வருகையில் - ஏற்கனவே சந்தித்த அதே போலிஸ் அதிகாரி அவரை ஒரு தீவிரவாதி என்று பொய் கேஸ் போட்டு சிறையில் தள்ளுகிறார். இதில் தப்பிக்கு முயற்ச்சிக்கும் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார்.

ஒரு விபச்சாரி, போலீசிடம் தப்பி தனியாக "கம்பெனி" தொடங்கலாம் என்று சென்னை வருகிறார். அங்கே அவளுக்கு தொடர் தொல்லைகள். இதிலிருந்து தப்பிக்கும்போது, தனக்கு துணையாக வரும் - திருநங்கைக்கு - கத்திகுத்து காயத்தால் அதே ஆஸ்பத்திருக்கு கொண்டுவரப்படுகிறாள்.


கேபிள் டிவி பணம் வசூலிப்பவன், தனது காதலியுடன் பார்ட்டிக்கு செல்ல பணம் புரட்ட முடியாமல் இறுதியில் - கிட்னி ஆபரேசன் செய்யப்பட்டு கிடக்கும் அந்த பெண்ணின் பணத்தை பறித்துக்கொண்டு ஓடுகிறான்..ஹோட்டலில் பணம் கட்டும்போது மனசாட்சி உறுத்த - திரும்பவும் அந்த மருத்தவமனைக்கே வந்து- அவர்களிடம் பணத்தை ஒப்படைக்கிறான்...

இப்படியாக ஐந்து கிளைக்கதைகளும் - இறுதியில் ஒரு மருத்துவமனையில் ஒன்று சேருகின்றன..

ஒரு காட்சியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை போலிஸ் விசாரிக்கும்போது , அந்த இளைஞர்கள், ஐதராபாத், அஜ்மீர், ராஜஸ்தான் , டெல்லி, மும்பை, போன்ற இடங்களில் வெடித்ததுபோல சென்னையிலும் குண்டு வெடிக்கும் என்று சொல்கிறார்கள்..

மேற்கண்ட இடங்களில் குண்டுவைத்தது இந்துத்துவா பயங்கரவாதிகள் என்று புலனாய்வு விசாரணையில் உண்மை வெளிவரும் வேளையில் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களையே தீவிரவாதிகள் எனக்காட்டும் இந்த - சினிமா பயங்கரவாதிகளைதான்  - முதலில் உள்ளே தள்ள வேண்டும்..

ஐந்து கதைகளை வைத்துக்கொண்டு, என்னசெய்வது என்று தெரியாமல் இறுதியில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அவர்கள் இரக்கமற்றவர்கள் என்று சொல்வதற்காகவே கதை எழுதி படம் எடுக்கும் இந்த கூத்தாடிகள்தான் நிஜ பயங்கரவாதிகள்..

காதலிக்காக திருடும் குப்பத்து இளைஞனும், - இந்திய ராணுவத்தால் என் தந்தையை இழந்தேன், அதனால் நான் இராணுவத்தில் சேரமாட்டேன், பாரிலும், பப்பிலும் கிதார் வைத்துகொண்டு டான்ஸ் ஆடுவேன்...என்னை உலகம் புகழும் என்று சொல்லும் பொறுப்பற்ற இளைஞர்கள் இறுதியில் அனைவரையும் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது போலவும், தீவிரவாதத்தை உண்மையாகவே வெறுக்கும் முஸ்லிம், - தன்னை தீவிரவாதி என்று சித்தரித்த போலிஸ் அதிகாரியை மட்டும் காப்பாற்றுவது போலவும் காட்டும் இந்த கூத்தாடிகள்தான் இந்த நாட்டை சுடுகாடாக்க முயலும் துரோகிகள்..

வானம் - முஸ்லிம்கள் மீது அமிலமழை பொழியும் துரோகம்..

Friday, April 29, 2011

ரஜினி படங்களின் வெற்றி - யார் காரணம்? ஒரு அலசல்..!

எந்திரன் என்ற "திணிக்கப்பட்ட" திரைப்படத்திற்கு பிறகு, ரானா என்றதொரு படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்..

இனி பத்திரிகை விபச்சாரம் கொடிகட்டி பறக்கும்...தீபிகா படுகோனே என்றொரு நடிகை கஷ்டப்பட்டு கொண்டு வந்தாயிற்று..பத்தாதற்கு அவருக்கு இவள் மட்டும் ஜோடி அல்ல இன்னும் பல நடிகைகள் என்று அனைத்து நடிகைகளையும் கூட்டி கொடுக்க மாமா வேலை பார்க்கும் அனைத்து ஆபாச பத்திரிக்கைகளும் தயார்..வேறு வேலை?

மேலும், வலைப்பதிவிலும் அனைத்து விசயங்களும் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்டு, இனி ரஜினியின் அடுத்த படம் பற்றிய கற்பனைகளே முன்னிலை வகிக்கும்..விமர்சிப்பவருக்கும் சரி, ஜால்ராக்களுக்கும் சரி,  இதுதான் வேலையாக இருக்கும்

அதிர்ஷ்டம் மட்டுமே மூலதனமாகக்கொண்டு வெற்றிபெறுபவர்கள் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

மக்களுக்கு ஆபாசத்தையும்  அருவருப்பான விசயங்களையும் திணிக்கும் இந்த கேவலமான பிழைப்புக்கு திறமை ஒரு சதவீதம் இருந்தால் போதும்..வெறும் கேளிக்கை ஆட்டங்களினால் மட்டுமே பெரும் பிரபலமாகிவிடலாம் என்பதற்கு இக்கால கேடுகெட்ட சினிமாக்களே சாட்சி.

ஆரம்ப காலங்களில் வில்லனாகவும்,  பிறகு, தாய் தந்தையரை கொன்ற வில்லனை முப்பது வருடங்கள் கழித்து பழிவாங்கும் எம்ஜிஆர் கதைகளிலும் நடித்து வந்த ரஜினி, பிறகு, இந்தியில் வந்த அமிதாப்பின் மொக்கை படங்களில் நடித்து பிரபலமானார்.

முன்பு தினமலர் வாரமலர் என்ற பத்திரிகையில், கோ. பி. சி. நிருபர் என்று சிலரை குறிப்பிடுவார்கள்..அதாவது கோழி பிரியாணி சினிமா நிருபர் என்று பெயர்..இவர்களுக்கு, கோழி பிரியாணியும் சாராயமும் வாங்கிகொடுத்துவிட்டால் எப்பெற்பட்டவனையும் புகழ்ந்து அவனை பெரிய ஆளாக காட்டி விடுவார்கள்..

ஆப்படி வளர்ந்தவர்தான் ரஜினி..அவரது எந்த படங்களும் தரமானவை அல்ல..சிகரெட் பிடிப்பதும், சாராயம் குடிப்பதும் மட்டுமே அவர் படங்களில் மக்கள் அறிந்த்தது..

ரஜினியின் ஆரம்பகால திரைப்படங்களிங் பெயர்கள்கூட, போக்கிரி ராஜா, பொல்லாதவன், குப்பத்துராஜா, காளி, பில்லா, ரங்கா என்று பொறுக்கித்தனமான பெயர்களே.

ஆட்டோ சங்கர், சந்தனக்கடத்தல் வீரப்பன், விடுதலைப்புலி பிரபாகரன்  போன்ற கொடிய குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கிய ஆபாச பத்திரிக்கைகளான நக்கீரன், ஆபாச விகடன், குமதம் போன்றவைகள்தான் இதுபோன்ற சீர்கேட்டுகளுக்கும் விளம்பரம் அளித்து பிரபலப்படுத்தின..இதுபோன்ற அவலங்கள் பொறுக்கிகளுக்கு வேண்டுமானால்  உற்சாகம் அளிக்கலாம்..ஆனால் மக்களுக்கு?

சமீபகாலமாக இவரது வெற்றிபடங்களுக்கான காரணங்களும் இவரல்ல எனபது கோழி பிரியாணி மற்றும் சாராய நிருபர்களுக்கு தெரிந்ததுதான்..ஆனால் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல், இந்த கேவலமான பின்னனி உள்ளவரை தமிழகத்தின் முதல்வராக்கவும் துணிந்துவிட்டனர்.

இதற்க்கு  ஆபாச விகடன், நடிகைகளின் படுக்கையறை குமுதம், நக்கீரன் போன்ற ஆபாச பத்திர்க்கைகளும் உடந்தை.

அண்ணாமலை என்ற படத்தை அப்போது, வசந்த் என்ற இயக்குனர் இயக்க மறுத்துவிட்டதால், சுரேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கினார்.

அந்த சமயத்தில் குஷ்பு என்ற ஆபாச நடிகையை அதில் நடிக்கவைத்து, ஆபாச கவிஞர் வைரமுத்து என்பவர் "கொண்டையில் தாழம்பு, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ..குஷ்பூ" என்ற அருவருப்பான பாடலும் எழுதி படத்தை பரபரப்பாக்கி விற்றனர்.

ஏற்கனவே ரஜினி நடித்து வெளிவந்த "நல்லவனுக்கு  நல்லவன்" என்ற படத்தின் மறு பிரதிதான்  அந்த படம்.

அதன் பிறகும் ரஜினியை முன்னிறுத்தி வெளிவந்த "உழைப்பாளி"  வீரா போன்ற படங்கள் எடுபடவில்லை.

பிறகு வெளிவந்த பாட்சா என்றபடத்தில் அப்போது பரபரப்பான கவர்ச்சி நாயகியாக வலம்வந்த நக்மா என்ற நடிகையை நடிக்கவைத்து ஒட்டினர்.
இந்த படம் கூட அமிதாப் பச்சன், கோவிந்தா மற்றும் ரஜினி நடித்த "ஹம்" என்ற ஹிந்திப்படத்தின் தழுவல்தான்.

போயஸ் கார்டனில் அப்போது முதலமைச்சர் ஆக ஜெயலலிதா இருந்ததால் அதே போயஸ் கார்டனில் குடியிருந்த ரஜினிக்கும் சில கெடுபிடிகள் இருந்தன. அந்த கோபத்தை, பாட்சா படத்தின் 175  ஆவது நாள் விழாவில் ரஜினி காட்ட, அதை இந்த கோ.பி.சி.நிருபர்கள் பெரிது படுத்தி வருங்கால முதல்வர் என்ற ரேஞ்சுக்கு கொண்டு சென்றதால் பாட்சா படம் இன்னும் பிரபலமானது.

அதன் பிறகு அவரே கதை வசனம் எழுதி நடித்த  வள்ளி   என்ற படம் ஊற்றிக்கொண்டதும் ஊரறிந்த செய்தி..

எ.ஆர் . ரஹ்மானின் பிரபலத்தை வைத்து, மலையாளத்தில் வெளிவந்த ஒரு படத்தை முத்து என்ற பெயரில் வெளியிட்டு சுமாராக ஓடியது. அந்த படம் ஜப்பானில் பிரபலமானதர்க்குகூட அதி நடித்த மீனா என்ற நடிகையே காரணம் என்பதையும் இந்த கோ.பி. சி. நிருபர்கள்  வசதியாக மறைத்துவிட்டு, எல்லா வெற்றிக்கும் ரஜினியே காரணம் என்று குட்டிகரணம் அடித்து வந்தனர்..அதன் பிறகு ரஜினி நடித்த எந்த படமுமு ஜப்பானில் எடுபடவில்லையே ஏன்?

முத்துவிற்கு பிறகு வந்த அருணாச்சலம் ரஜினியை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதால் தோல்வியையே தழுவியது.

படையப்பா அப்போது ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் அவரது கதாபாத்திரத்தை  பிரதிபலித்த ரம்யா கிருஷ்ணன் என்ற நடிகையின் நடிப்பால் பிரபலமானது.

படையப்பா வுக்கு பிறகு ஜால்றாக்களினால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட "பாபா" வின் பரிதாப நிலை எல்லாரும் அறிந்ததுதான்.

அதன் தோல்வியினால் துவண்டு கிடந்த ரஜினிக்கு, "சந்தரமுகி" என்றபடம் சற்று தெம்பளித்த்தது..இருந்தும் அப்படத்தின் வெற்றிக்கும் ரஜினிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..காரணம் அந்த பாத்திரத்தில்  தோல்வி படங்களுக்காக  நடித்துகொண்டிருக்கும்   "அருண் பாண்டியன்" அல்லது அப்பாஸ், அல்லது சாம், போன்ற நடிகர்கள் நடித்திருந்தாலும் படம் ஓடி இருக்கும்..அதன் வெற்றிக்கு காரணம் வடிவேலுவின் காமெடியும், ஜோதிகாவின் நடிப்பும்தான் எனபது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை..

அதன் பிறகு பெரிதும் எதிர்பார்த்த மலையாள காப்பி படமான "குசேலன்" அல்வா கொடுத்ததும், "சிவாஜி"  சிரிப்பாய் சிரித்ததும், எந்திரன்  எதிர்பார்புகளை ஏமாற்றியதும் தமிழ்நாட்டு மக்களின் மழுங்கி போன
மூளைக்கு  சான்று..


Monday, April 25, 2011

ஓட்டுப்பிச்சை எடுக்கும் ஓநாய்கள்


தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டது..

தேர்தலுக்கு முன்பு இலங்கை பிரச்சினையை கிளப்பி ஒட்டு பிச்சை எடுக்க அரசியல் ஓநாய்கள் செய்த கூத்தெல்லாம் முடிந்து விட்டது..

தேர்தல் முடிவுகள் வர இன்னும் கால அவகாசம் இருப்பதால் இந்த அரசியல்"வியாதிகள்" வேறுமாதிரி கணக்கில் ஈடுபட ஆராம்பித்து விட்டன..


தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற சந்தேகத்தில், தமிழ் பற்று நாடகம் நடத்தி இந்த சாக்கடைகள் இப்போதே அறிக்கை அரசியலை தொடங்கிவிட்டன.

இலங்கை எனபது அந்நிய நாடு. அண்டை நாடு. அங்கு வசிக்கும் சில தீவிரவாத குழுக்கள் அந்நாட்டில் மட்டுமல்ல  , அண்டை நாடான இந்தியாவிலும் அராஜகம் செய்தன..அதை அந்த நாடு அடியோடு நசுக்கியது. அது இங்குள்ள - தேச துரோகிகளுக்கு பொறுக்கவில்லை..வருமானம் போய் விட்டது..எனவே அதை வைத்து இங்கு அரசியல் செய்ய குரைத்து குரைத்து ஓய்ந்துவிட்டாலும், ராஜ பக்சேயை தூக்கில் போடு, சர்வதேச கோர்ட்டில் நிறுத்து என்று அலறும் இந்த சாக்கடைகளுக்கு ஒரு கேள்வி..குஜராத் இந்தியாவில்தானே இருக்கிறது..?

அங்கு நரபலி நாய் நரேந்திர மோடி என்ற மிருகம் அப்பாவி மக்களை கொன்று குவித்தானே, கொல்லப்பட்டவர்கள் மக்கள் இல்லையா?

நரேந்திர மோடி இன்னும் இந்தியாவில்தானே இருக்கிறான்.

அவனை அரசியல் புரோக்கர் சோ என்பவன் விழாவுக்கு வரவழைக்கிறான்

ஜெயலலிதா விருந்து கொடுத்து மகிழ்கிறார்...

கருணாநிதி கைகுடுத்து போஸ் கொடுக்கிறார்.

ஊழலை ஒழிக்க பிரிந்த அன்ன ஹசாறேவுக்கு பயங்கர வாதத்தை ஒழிக்க மனமில்லாமல் அவனை பாராட்டுகிறார்..

இங்கே ராஜ பக்சேயை மட்டும் குறிவைக்கும் வெறி நாய்களுக்கு நரேந்திர மோடியை தண்டிக்க சொல்ல ஏன் மனமில்லை..

அதற்க்கு ஏன் கூட்டம் போடவில்லை..

அவனை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை..

குஜராத் என்ன அந்நிய நாடா?

இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மட்டும்தான் உனக்கு உலகத்தில் மனிதர்களாக தெரிகிரார்களோ?

குஜராத்தில் கொல்லப்பட்டவர்கள், சிதைக்கப்பட்டவர்கள், குழந்தைகள், கருவருக்கப்பட்டவர்கள், கற்பழிக்கபட்டவர்கள் உங்களுக்கு மனிதர்களாக தெரியவில்லையோ?

அந்நிய நாட்டில் நடவடிக்கை எடு என்று ஓலமிடும் முட்டாள்களே, குஜராத் இந்தியாவில்தான் இருக்கிறது, அதை ஆளும் அரக்கன் நரேந்திரன் அனைத்து நாடுகளாலும் விரட்டப்பட்ட ஒரு கொடிய மிருகம்,

மோடி நடத்திய கொலைவெறி தாண்டவத்திற்கு, தெஹல்கா இணையதளத்தின் ஆதாரம் உள்ளது..இன்னும் அடுக்ககடுக்கான சாட்சியங்கள் வந்து கொண்டே இருக்கின்றன..

தன் நாடு அமைதியாக இருக்கவேண்டும் என்று தீவிரவாதத்தை ஒடுக்கிய ராஜபக்சேயை தூக்கிலிட சொல்லும் தேசதுரோக நாய்களே,


குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதை தடுக்காதீர்கள், அதை கண்டுகொள்ளாதீர்கள் என்று சொன்ன நரேந்திரன் என்ற மிருகத்தை என்ன செய்யலாம்?

 
அவனை எதிர்க்க திராணியற்று, நடக்கமுடியாத ஒரு விஷயத்தை செய்ய சொல்லி - விடுதலைப்புலிகளிடம் வாங்கிய காசுக்கு - இந்தியாவுக்கு தேச துரோகம் செய்யும் துரோகிகளே...

பயங்கரவாதி என்று விசா ரத்து செய்யப்பட்டு, விசா மறுக்கப்பட்ட ஒருவன் தூக்கிலிடப்பட வேண்டியவனா? இல்லையா?


இந்தியாவில் தேடப்பட்டுவந்த ஒரு பயங்கரவாதியை தனது தலைவன் என்று சொல்வது தேச துரோகமா? தமிழ்பற்றா?


கொஞ்சமாவது மனித நேயத்தோடு சிந்தியுங்கள்..


Saturday, April 23, 2011

எங்கேயும் காதல்!ஒரு சின்சியரான தொழிலதிபர், விடுமுரைக்கொண்டாட்டத்திற்காக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, பல பல பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆபாசக் கதைக்கு பெயர்தான் எங்கேயும் காதல்..

தலைப்பு மகா பொருத்தம்..காரணம், காதல் என்றாலே காமம்தான்.

அது என்ன சின்சியரான தொழிலதிபர்..? அவன் வேலையை அவன் பார்க்காமல் வேறு யார் பார்பார்கள்?

இங்கே சின்சியராக இருப்பானாம்,...வெளிநாட்டில் பெண்களை அனுபவிக்க நாயைப்போலஅலைவானாம்..இந்த கேடுகெட்ட விஷயத்தை ஒரு கதையாக சொல்வதில் இங்குள்ள ஆபாச வியாபாரிகளுக்குதான் எவ்வளவு பெருமை?

வெளிநாட்டுக்காரிகள் இந்த கூத்தாடிகளுக்காக மட்டும் அலைவதுபோல் காட்டியிருப்பது மகா கேவலம். விபச்சாரிகள் யாரிடமும் பணத்துக்காக படுக்கைகளை பகிர்ந்து கொள்வார்கள்..இதை காதல் என்று சொல்வதன் மூலம் காதல் என்றால் காமம் என்பதை நிரூபணம் செய்கிறார்கள்..

ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய பெண்ணை சந்தித்து அடுத்தடுத்த காட்சிகளில் அவளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் கதாநாயகன், பிறகு பிரிந்துகொள்வதற்கு பார்ட்டி வைத்து பிரிகிறார்கள்..

இதற்கிடையே இன்னுமொரு கதை..அதாவது கதாநாயகனுடைய தந்தையின் காதல் கதை..

அவரது காலத்தில் காதலியை பார்பதற்கே நாள் கணக்கிலும், அவளுடன் பேசுவதற்கு மாதக்கணக்கிலும் காத்திருக்கவேண்டியதையும் காட்டுகிறார்கள்..

இந்த காலம் போல் செல்போன் வசதியோ, மற்ற தொடர்பு வசதிகளோ கிடையாது..அவளை பார்க்கவேண்டுமென்றால் அவளது ஊருக்கு ரயில் பிடித்து சென்று நாள்கணக்கில் காத்திருந்து அவள் எப்போது வெளியே வருவாள் அவள் வரும்போது தன்னை கவனிக்க வைக்க என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் விளக்கி,

இன்றைய காதல் "எல்லாவற்றையும் முடித்த பிறகுதான்" அந்த பெண்ணுடைய பேரையே கேட்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்..

அதே போல ஒரு பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு பிறகு அவளிடம் "உன் பெயர் என்ன?" என்று கேட்கும் ஒரு அருவருப்பான காட்சியும் உண்டு..


கடைசியில் பிரிந்த இருவரும் தங்கள் பழகிய நாட்களை எண்ணி வேதனை அடைகிறார்கள்..அந்த கதாநாயகிக்கு திருமணம் ஆனாலும் தன காதலனை (தன்னுடன் முதலில் (?) உடலுறவு கொண்டவனை) மறக்க முடியவில்லை..தனது கணவனிடம் சொல்லிவிட்டு இவனை தேடி வருகிறாள்..

அவனும் அதே போல இவளை தேடி வர, இருவரும் இணைகிறார்கள்..

இந்த கேவலமான கதை "லவ் ஆஜ் கல்" என்னும் ஹிந்திப் படத்தின் கதை.

எங்கேயும் காதல் என்ற தமிழ்படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது இந்த படத்தின் அப்பட்டமான காப்பி போல தெரிகிறது..

ஏதோ சொந்தமாக கதை எழுதி இயக்கியதுபோல "பிணத்துக்கு ஆடும்" கூட்டத்தை சேர்ந்த இயக்குனர் பிரபுதேவா சொல்லிவருகிறார்ர்ர்...

படம் வந்தால் இவங்களது சாயம் வெளுத்துவிடும்..

Friday, April 22, 2011

மக்கள் தொகைகளில் பெண்கள் அதிகமா?

சமீபத்தில் இந்தியாவுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெண்கள் ஆண்களை விட குறைவாக இருக்கிறார்கள் என்றதொரு செய்தி..

அதற்குகூட காஷ்மீரை சேர்ந்த ஒரு முட்டாள் அமைச்சர் ஒருவன், இதனால் ஹோமோ செக்ஸ் அதிகரிக்கும் என்று ஒரு கிறுக்குத்தனமாக பேசி இருக்கிறான்..


ஆனால் எனக்கு என்னவோ பெண்கள் தொகை அதிகரித்திருப்பதாகவே படுகிறது..டிவியை திறந்தால் பெண்கள்தான் கொடகொட வென்று பேசிக்கொண்டிருகிரார்கள்..

அவர்கள்தான் எல்லா நிகழ்ச்சியிலும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்..

டிவி சீரியல்களில் கதாநாயகியும் வில்லியும்தான் இருகிறார்கள்.. ஆண்கள் ஒப்புக்கு சப்பாணிதான்

சினிமாக்களில் தேவையில்லா விட்டால்கூட வலுக்கட்டாயமாக வருகிறார்கள்.

ஒரு காய்கறி மார்கெட் என்றால் கண்டிப்பாக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் அங்கே குத்தாட்டம் போடவேண்டும்..

எந்த பத்திரிக்கை எடுத்தாலும், அட்டைப்படத்தை சினிமாக்காரிகள்தான் ஆக்கிரமிக்கிறார்கள்..

ஆனந்த விகடன் குமுதம் போன்ற ஆபாச பத்தரிக்கைகள் நடிகைகளின் படுக்கை அரை ரகசியங்களை வெளியிடுவதை ஒரு கடமையாகவே செய்து வருகின்றன.

சென்னையில் மழைபெய்தால் இளம் பெண்கள்தான் குடை பிடித்தபடி செல்வதாக பத்திரிக்கைகாரன் படம் போடுகிறான்

வெய்யில் அடித்தாலும் அவர்கதான் முகத்தை மூடிக்கொண்டு செல்கிறார்கள்.

மெரீனா பீச்சில் காலை நனைத்துகொண்டிருப்பதும் பெண்கள்தான்

பரீட்சை எழுதுவதும் அவர்கள்தான்

ரிசல்ட் வந்தால் பாசானதர்க்கு இனிப்பு கொடுப்பதும் பெண்கள்தான்

ஹோலிபண்டிகை அன்று முகங்களில் சாயம் பூசிக்கொண்டு போஸ் கொடுப்பதும் பெண்கள்தான்

சினிமா நடிகனை ச்சோ ச்வீட் என்று ஜொள்ளு பேட்டி கொடுப்பதும் பெண்கள்தான்

ஏதாவது ஒரு பொருள் விளம்பரத்துக்கு அரைகுறை ஆடையுடன் சிபாரிசு செய்வதும் பெண்கள்தான்

கிரிகெட் நடைபெறும் ஸ்டேடியங்களில் முகத்தில் தேசியக்கொடியை வரைந்துகொண்டு அக்குள் தெரிய கொடியை ஆட்டிகொண்டிருப்பதும் பெண்கள்தான்

தேர்தல் காலங்களில் ஒட்டுபோட்டுவிட்டு கைவிரலில் உள்ள மையை காட்டி போஸ் கொடுப்பதும் பெண்கள்தான்..

ஐந்து ரூபாய் குளோசப் பற்பசைக்காக ஆணிடம் மயங்குவதும் பெண்தான்

ஐம்பது காசு மின்ட் சாக்லேட்டுகாக ஆண் பின்னாடி போவதும் பெண்தான்

பாடி ஸ்ப்ரே அடித்துவரும் ஆணிடம் படுக்க அழைப்பதும் பெண்தான்

டச் ஸ்க்ரீன் மொபைல் போன் வைத்திருக்கும் ஒருவனுக்கு, சில்லறை இல்லை என்பதற்காக ஆணுறை கொடுத்து விபச்சாரத்திற்கு அழைப்பதும் பெண்தான்

தந்தையிடம் மொபைல் வாங்கி - சினிமாவிற்கு காதலனை கள்ளத்தனமாக அழைப்பதும் பெண்தான்.

மாதவிடாய்க்கான நாப்கினை அணிந்துகொண்டால் இந்த உலகையே மாற்றிக்காட்டுவேன் என்று சொல்வதும் பெண்கள்தான்.


இப்படி எல்லாவற்றிலும் பெண்கள் ஆக்ரமித்துகொண்டிருக்க - பெண்கள் குறைவு என்று இவர்கள் எப்படி சொல்கிறார்கள்?

Saturday, April 16, 2011

செயலிழந்ததா தேர்தல் ஆணையம்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட கெடுபிடிகள், வழிநெடுக சோதனைகள்..பணப்பட்டுவாடா தடுக்கப்பட்டது, ஆளும் அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை இடுவதாக புலம்பல்கள்.

முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த முறை தேர்தல் பிரச்சாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன..பெரிய பெரிய கட் அவுட்களை காண முடியவில்லை.

இரவு முழுவதும் காட்டுக்கத்தல்கள் இல்லை, பொறுக்கிகளின் கூச்சல்கள் இல்லை..வீட்டுச் சுவர்களை அசிங்கப்படுத்தும் சுவர் விளம்பரங்கள் இல்லை..

ஓட்டுப் போடுவதற்கு பிச்சை போடுவதற்காக கொண்டுசெல்லப்பட்ட பெரும் பெரும் தொகைகளாக பணங்கள் பிடிபட்டன, வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன, அமைச்சர்கள், தொழிலதிபர்களின் வீடுகள் பாரபட்சமின்றி சோதனை செய்யப்பட்டன..

இந்த முறை பெரும்பாலான மக்கள் ஒட்டு போடுவதற்கென்றே ஊருக்கு புறப்பட்டு சென்ற ஆச்சரியமான காட்சியும் நடந்தது..


பொறுக்கிகளால் கள்ள வோட்டு போடா முடியவில்லை..மொத்தத்தில் இந்த ஆண்டு சட்டபேரவை தேர்தல் நம்பமுடியாத அளவுக்கு அமைதியாக நடந்தது..78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..

தேர்தல் ஆணையத்தின் செயலபாடுகள் பெருமளவில் பாராட்டப்பட்டன..
 
ஆனால் சினிமாக்கூத்தடிகள் விசயத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மிகவும் கேலிக்குரியதாக இருந்தது..


ரஜினிகாந்த் என்றொரு நடிகர் ஓட்டுப்போட வருவது ஏதோ வேற்று கிரகவாசி ஒருவன் வந்ததுபோல அவரின் அடிவருடிகள் அந்த வாக்குச்சாவடிக்குள் வந்து வால்பிடித்ததும் ஆபாச வியாபாரிகளான பத்திரிக்கைகளும்  ஏதோ அதிசய காட்சிபோல் அதை படம்பிடித்ததும் மிகவும் கேவலம்.

இந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? ரஜினி மக்களில் ஒருவர்தானே..

சாதாணமாக மக்கள் ஓட்டுபோட செல்லும்போது வெளியே நில்லுங்க சார், மொபைல் போனை ஆப் செய்யுங்கள் என்று கெடுபிடி செய்யும் இந்த அதிகாரிகள், ஒருவர் ஓட்டுப்போட வரும்போது இத்தனைபேரை காட்டுக்கூச்சளுடன் உள்ளே அனுமதித்தது சரியா? இதுதான் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டங்களா?

அதுவும் அந்த நபர் யாருக்கு ஒட்டுபோடுகிறார் என்பதை கூட தெளிவாக படமெடுக்கும் அளவுக்கு பத்திரிக்கையாளர்களையும் அந்த நடிகரின் அடிவருடிகளையும் வாக்குச்சாவடி உள்ளே அனுமதித்ததின் மூலம் தேர்தல் ஆணையம் தனது சட்டவிதிகளில் இருந்து தடுமாறி உள்ளதா?

இதற்கு ஆபாச தினத்தந்தியின் தலைப்பு என்னதெரியுமா?

ரஜினிகாந்தின் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவா? என்று தலைப்பிட்டிருக்கிறான்? இதையும் இந்த தேர்தல் ஆணையம் தட்டிகேட்குமா? ரஜினிக்கென்று  தனி வாக்குச்சாவடி அமைத்தது யார் ?
தேர்தல் ஆணையமா..அல்லது தினத்தந்திகாரனா?
 

Tuesday, April 12, 2011

மாப்பிள்ளை. - குப்பை


ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த மாப்பிள்ளை என்னும் படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள்..

ஒரு குப்பையை ரீசைக்கிள் பண்ணிலாவாது நல்ல பொருள்கள் கிடைக்கும்

ஏற்கனவே குப்பையாக இருந்த மாப்பிள்ளை, இந்த ரீமேக்கினால் இன்னும் குப்பையாக நாற்றமெடுக்கிறது..

பம்பாய் படத்தில் பார்த்த (முன்னாள்?) பேரழகி மனீஷா கொய்ராலாவை பார்த்தால் பயமாக இருக்கிறது..அந்த கால கட்டங்களில் மணீஷாவை நினைத்து கிறங்கி கிடந்தது இன்று நினைத்தால் - ஹ்ம்ம் இளமைதான் அழகு..
 
விவேக் காமெடி ரசிக்கும்படி இருந்தாலும், பெற்ற தந்தையை வாடா போடா என்று அழைத்து இது தெருப்பொறுக்கிகளுக்காக படம்தான் இது என்பதை மேலும் நிரூபிக்கிறார்கள்..

ஜே பி என்ற பெயரில் போலி தொழிலதிபராக வேடமிடும் விவேக்கிடம் - மிகப்பெரிய தொழில் அதிபர் மனீஷா கொய்ராலா ஏமாறுவதாகக் காட்டுவது சிறுபிள்ளைத்தனம்..


இதற்க்கு நித்யானந்தன் செக்ஸ் வீடியோ காட்சியை பயன்படுத்தி இருக்கிறார்கள்..எல்லாமே வலுக்கட்டாயமான திணிப்பாக தெரிகிறது..

மற்றபடி எந்த காட்சிகளும் எதனோடும் ஒட்டவில்லை..

கதாநாயகனை பொறுக்கியாகக்காட்டி பெருமையடிக்கும் காட்சிகள்தான் இதிலும் அதிகம்.

மனீஷா கொய்ராலாவை பழிவாங்கும் காட்சிகள் ..டைரக்டரின் கற்பனை வறட்சியை சொல்கிறது..

படம் முழுவதிலும் ஆபாச உடையணிந்து வரும் நாயகி கதாநாயகனை காதலிப்பதற்கான காரணங்களும் லூசுத்தனமான கற்பனையே..

ரீமேக் எனபது ஏற்கனவே செய்த தவறை திருத்தவதர்காக இருக்கலாம்..


ஆனால் அந்த குப்பையை மேலும் குப்பையாக காட்டி இருக்கிறார்கள்..
Monday, April 11, 2011

எப்படி இருந்த நான்.ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் எப்படி இருந்தன?
Monday, April 4, 2011

போட்டிபோட்டு விளம்பரம் செய்யும் டாஸ்மாக் விளம்பரதாரர்கள்..

முதலில் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தது..

விஜயகாந்த் குடித்து விட்டு சட்டசபைக்கு வருகிறார் என்று பரபரப்பை கிளப்பிவிட்டார்...

"அவர்தான் ஊற்றிக் கொடுத்தாரா?" என்று விஜயகாந்த் பதிலளித்தார்....

இன்று இந்த தேர்தல்களத்தில் எல்லா பிரச்சினைகளும் பின்னுக்குதள்ளப்பட்டுவிட்டு அவன் குடிக்கிறான், இவன் குடிக்கிறான் போன்ற அருவருப்பான விஷயங்களே பிரதானமாகிவிட்டன..

விஜயகாந்த் கருப்புக்கண்ணாடி போட்டுகொண்டு பேசும்விதம் சந்தேகத்தை உண்டுபன்னவே செய்கிறது..பத்தாதற்கு வேட்பாளரை பலர் முன்னிலையில் அடித்தது அது உறுதியாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது..

வடிவேலு போகும் இடமெல்லாம் விஜயகாந்தை பற்றி அவர் குடிகாரன் என்று சொல்வதற்கே இந்த பிரச்சாரத்தை பயன்படுத்திகொள்வது போலவும் இருக்கிறது..

விஜயகாந்த் குடிக்கிறார் என்று வடிவேலு சொல்ல., வடிவேலு குடிக்கிறார் என்று சிங்கமுத்து சொல்ல, வடிவேலு தனது பிரச்சார வேனுக்கருகில் நிற்பவர்கள் அதட்டுவதைகூட, வடிவேலு குடிபோதையில் திமுக தொண்டனை அடிக்கும் காட்சி என்று ஜெயா டிவி சொல்லிக்கொண்டிருக்கிறது.

கலைஞர் மற்றும் சன் டிவிகளோ, விஜயகாந்த் "உங்களுக்கு ஆப்பு வெக்கணும்னா.."ஆப்" அடிச்சாதான் சரியாவரும்" என்று சொன்னதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது..

தினகரனில் விஜயகாந்த் வாய் குளறுவதால் பேசுவது புரியவில்லை என்று எழுதி உள்ளார்கள்..
மொத்தத்தில் இந்த தேர்தல் பிரச்சாரம் சாரயத்திர்கான ஒட்டுமொத்த விளம்பரமாக இருக்கலாம் என்றுகூட ஐயம் ஏற்படுகிறது..

ஆனந்த விகடன் என்கிற ஆபாச விகடன் கூட, டாஸ்மாக் கடைகளுக்கு சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் ஏன் இன்னும் சப்ளை பண்ணிகொண்டிருக்கிறதே என்று கேட்கிறான்..அதே ஏன் ஜெயலலிதாவிடம் கேட்கவில்லை? ஏன் கருணாநிதி ஆட்சியில் சசிகாலாவின் கம்பெனி இன்னும் அவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள்?டிஸ்கி: கோடி கோடியாக கொடுத்தாலும் மதுபான விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று சொன்ன சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலககோப்பை வெற்றிக்கொண்டாட்டத்தில் ஷாம்பெயின் பாட்டிலை குலுக்கிக்கொண்டு பீய்ச்சி அடித்ததும், கோடிக்கணக்கானோர் பார்த்துகொண்டிருக்கும்போது குடித்துகொண்டிருந்ததும் கண்கொள்ளாகாட்சி..ஹ்ம்ம்ம்


Saturday, April 2, 2011

சுயநலவாதிகளின் ஆடுகளம்முன்பொரு பதிவில் குறிப்பிட்டது போலவே "இது ஒரு விசித்திரமான தேர்தல்! விவஸ்தை இல்லாத தேர்தல்! வடிகட்டிய சுயநலம் நிறைந்த தேர்தல்! அரசியல்வாதிகளின் முகத்திரையை அக்குவேறு ஆணி வேராகக் கிழித்தெரிகிற தேர்தல்! பசுத்தோல்களை உரித்துக் காட்டுபுலிகளை அடையாளம் காட்டும் தேர்தல்!"


இலவசத்தை எதிர்த்து இன்னொரு இலவசம்.

சலுகைகைகளை எதிர்த்து இன்னும் சலுகை

நடிகரை எதிர்த்து நடிகை

காமெடியனை எதிர்த்து இன்னொரு காமெடியன்

மதவாதியை எதிர்த்து மதவாதி

கிரிமினலை எதிர்த்து கிரிமினல்

ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரனை எதிர்த்து அதே ஜாதிக்காரன்.

தாழ்த்தப்பட்டவனை எதிர்த்து தாழ்த்தப்பட்டவன்..

பணத்தை எதிர்த்து பணம்

லஞ்சத்தை எதிர்த்து லஞ்சம்

வன்முறையை எதிர்த்து வன்முறை

ஆபாசத்தை எதிர்த்து ஆபாசம்


இப்படி கணக்குகளை வைத்தே ஒவ்வொரு தேர்தலும் நடக்கிறது. தேர்தல் அதிகாரிகள் என்னதான் கெடுபிடி செய்தாலும், அதை எதிர்த்தும் அரசியல் செய்ய இவர்களால் முடியும்..


ஜெயலலிதாவை அரசியலுக்கு வரவிடாமல் செய்ய கருணாநிதி எடுத்த முயற்சியால் அரசியலுக்கு வந்தவர்தான் ஜெயலலிதா.

திருமண மண்டபம் இடிபட்டதை பொறுக்க முடியாமல் அரசியலுக்கு வந்தவர்தான் விஜயகாந்த்

குடிகாரன் என்று வர்ணித்த ஜெயலலிதாவும், ஊற்றிக்கொடுத்தவர் என்று சொன்ன விஜயகாந்தும் கூட்டணி வைத்திருப்பது பொதுநலமா சுயநலமா?

நாட்டாமை படம் வீடியோ கேசட்டை சரத்குமாரிடம் இருந்து வாங்கி அவரிடம் சொல்லாமலேயே "ஜே ஜே" டிவியில் ஒளிபரப்பிய காரணத்தினால் திமுகாவுக்கு சென்ற சரத்குமார், அங்கே எம்பி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, என் இறுதி ஊர்வலத்தில் திமுக கொடிதான் போர்த்தப்படவேண்டும் என்று சொல்லிய அடுத்தநாளே ஜெயலலிதாவை சந்த்தித்து பிரிந்து சந்தித்து இன்று அவருடன் கூட்டணி வைத்து அவரை வானளாவப் புகழும் சரத்குமார் கூட்டணி வைத்தது பொது நலமா சுயநலமா?

கருணாநிதியின் திட்டங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவந்த ராமதாஸ், காடுவெட்டி குரு கருணாநிதியின் குடும்பத்தை கேவலமாக பேசியாதால் கூட்டணி பிரிந்தது பொது நலமா சுயநலமா?

அதே ராமதாசும் காடுவெட்டி குருவும் இன்று கருணாநிதியுட கூட்டு வைத்திருப்பது பொதுநலமா சுயநலமா?

தொகுதி உடன்பாடு காண்பதில் இரு கழகங்களும் கூட்டணிக்கட்சியினருடன் முரண்டு பிடித்ததும் பின்னர் பணிந்து சென்றதும் காரணம் பொதுநலமா சுயநலமா?

வடிவேலு திமுகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன் என்று விஜயகாந்தை காய்ச்சி எடுப்பதன் காரணம் பொதுநலமா சுயநலமா?

வடிவேலுவுக்கு எதிராக அதிமுகவிற்கு ஆதரவாக சிங்கமுத்து பாய்வது பொதுநலமா சுயநலமா?

தோல்விப் பட புகழ் டாக்டரு விஜய் - இன்று அதிமுகவிற்கு ஆதரவு என்கிறார்.

நாங்கள் மக்கள் நலனுக்காகத்தான் இந்த நிலையை எடுத்திருக்கிறோம் என்கிறார் அவர் தந்தை.

காவலன் படப்பிரச்சினைக்கு பிறகு மக்கள் நலம் பற்றி இவர்கள் சிந்திப்பது பொதுநலமா சுயநலமா?


இப்படி எல்லாவற்றிலும் ஆதாயம் தேடிவரும் இந்த கூத்தாடிகளின் ஆடுகளமாகிவிட்டது இன்றைய தேர்தல்கள்..