Pages

Saturday, March 26, 2011

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடா?


தேர்தல் என்று அறிவுப்பு வந்துவிட்டாலே, மாநிலக்கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம்தான்..அதில் சில பல கவர்ச்சித் திட்டங்கள் இடம்பெற்றிருந்தாலும், மக்கள் நலத்திட்டங்களே முதலிடம் பிடிக்கும்..

ஆனால் தற்போதைய காலகட்டங்களில், மக்கள் நலத்திட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, வெறும் கவர்ச்சித்திட்டங்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன..அத்தனையும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள்..

ஒட்டு வாங்குவதற்கு இந்த அரசியல் வியாதிகள் சொல்லும் அறிவுப்புகளைப்பார்த்தால், தமிழகம் மட்டுமே ஏழைகளும், பிச்சைக்காரர்களும் நிறைந்த ஒரு மாநிலம்போல காட்டபடுகிறது..
தமிழகமக்கள் எல்லாரும் இலவசத்துக் அலைவதுபோலவும்

ஒவ்வொருவரின் தேர்தல் அறிவுப்பும் உள்ளது..இந்த இலவசத்திர்காக, ஒரு அரைமணிநேரம் செலவழித்து ஒட்டுபோட்டுவிட்டு ஐந்தாண்டுகள் அடிமையாகவும், ஒட்டாண்டியாகவும் வாழ பெரும்பாலும் தமிழர்களும் தயாராகத்தான் உள்ளனர்.

ஏழைமக்கள் படிக்க வரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட "மதிய உணவுத்திட்டம்" எம்ஜியாரால் "சத்துணவு திட்டம்" என்ற கவர்ச்சி திட்டமாக மாற்றப்பட்டு, அசைக்கமுடியாத முதலமைச்சராக இருந்தார்..மற்றபடி எம்ஜியார் எந்த ஒரு நன்மையையும் தமிழகத்திற்கு செய்ததாகத் தெரியவில்லை..

சினிமாக்காரர்களின் அடிமைகளாகிவிட்ட தமிழர்கள் இன்றுவரை அந்த மாயைகளிலிருந்து விடுபட்டதாக தெரியவில்லை..சினிமாவில் சற்று பிரபலாகிவிட்டால் எப்போ அரசியலில் குதிப்பாய் என்று பத்திரிக்கைக்காரன் கேட்பதும், அதைப் பற்றிய செய்திகளாக வெளியிட்டு காசு பார்ப்பதும், இங்குள்ள முட்டாள்களும் எதோ அவன் அரசியலுக்கு வந்துவிட்டால் இந்தியாவே வல்லரசாகிவிடும் என்பது போலவும் அவன் பின்னால் நாயாய் அலைவதும், இது தமிழ்நாட்டின் சாபக்கேடாகி விட்டது.

சினிமாவில் கண்ட கண்ட நடிகைகளுடன் கூத்தடிக்கும் நடிகன், என்னத்தை புடுங்கிவிடப்போகிறான் என்ற சிறு அடிப்படை அறிவுகூட இல்லாததால்தான், அரசியலுக்கு வரும் அனைவரும் சினிமாக்காரனாகமட்டுமே இருக்கிறான்..

அவன்தான் படம் எடுக்கிறான், அவன்தான் விநியோகம் செய்கிறான், அவன்தான் தொலைகாட்சி நடத்துகிறான் இப்படி ஊடகம் மற்றும் பொழுதுபோக்குகள் சம்மந்தப்பட்ட அனைத்தும் அரசியல்வாதி மற்றும் சினிமாக்காரர்களின் கைகளில் சென்றுவிட, தொழில்செய்யும் ஒவ்வொருவனும் சினிமாக்காரன் பின்னாடியும் அரசியல்வாதிகள் பின்னாடியும் ஏவல்காரனாக மண்டியிட்டு கிடக்கும் அவலம் தமிழகத்தில் மட்டுமே பார்க்கமுடியும்..

இதன் மூலம் கொள்ளை கொள்ளையாக கொள்ளையடித்த கூட்டங்கள்தாம் இன்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, இலவச திட்டங்களை அறிவிக்கின்றன....

இப்படி அறிவித்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் இவரகளது உள்நோக்கம் என்னவாக இருக்கும்? தமிழ்நாட்டுக்காரனை பிச்சைக்காரனாக்கி, இன்னும் சுரண்டுவதர்க்குதானே..ஹொகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டில் பிச்சை எடுக்கும் இவர்களுக்கு இந்த இலவசங்களுக்கு மட்டும் எங்கே இருந்து பொருளாதாரம் வருகிறது..?

எல்லாம் கருணாநிதி வீட்டு பணமும், ஜெயலலிதா வீட்டுப் பணமுமா?


அதனால்தான் கருணாநிதி அறிவிக்கும் இலவசங்களை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் அதற்க்கு போட்டியாக இன்னும் இலவசங்களை ஜெயலலிதா அறிவிக்கிறார்..

ஊரெங்கும் சாராயக்கடைகளை திறந்து வைத்து எல்லாரையும் குடிகாரனாக்கி அதிலிருந்து வருமானம் பெற்று நமக்கே திரும்பத்தரும் ஏமாற்று வேலை..


இன்னும் அனைத்து தொழில் துறைகளிலும் அரசியல்வாதிகளின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தை புகுத்தி கோடிகோடியாக சம்பாதிக்கின்றார்கள்..இன்னும் எங்கும் லஞ்சம் ஊழல் என்று நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது..

காங்கிரசின் அனைத்து மிரட்டல்களுக்கும் பணிந்து..இன்று கூனிக்குறுகி நிற்கிற திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்ச்சிப்பது ஏன்?

கருணாநிதியிடம் இருந்து ஆட்சியைப் பறிக்க ஜெயலலிதா என்னன்னேம்மோ செய்கிறார்..கஜானா காலி என்று சொல்லிக்கொண்டே இலவச திட்டங்களை அறிவிப்பது ஏன்?

மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒருபக்கம் நடவடிக்கை அதே கட்சியுடனேயே பிடிவாதமாக காங்கிரஸ் கூட்டு வைப்பது ஏன்?

பூரண மதுவிலக்கு கொண்டுவர வற்புறுத்துவோம் என்று சொல்லிக்கொண்டே பாமக திமுகவுடன் கூட்டணி அமைப்பது ஏன்?

அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட்டுகளுக்காக ஜெயலலிதாவின் வீடு தேடி விஜயகாந்த் செல்வது ஏன்..?

இதில் மக்கள் நலம் என்று என்ன உள்ளது..

அனைவரும் கொள்ளைக்காரர்கள்தான்..ஏமாற்றுக்காரர்கள்தான்..

இறுதியில் இலவசங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களை நிரந்தர சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கிவிட முயற்ச்சிக்கும் இந்த அரசியல்வியாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு எப்போதுதான் விடுதலை?

நாளைக்கு ஆளுக்கொரு கார், பஸ், டிரையின் இன்னும் விமானம் என்று இலவச அறிவிப்பு செய்துவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது..இந்த தேர்தலைப் பற்றிய ஒரு பத்திரிக்கையாளரின் கூற்று :

"இது ஒரு விசித்திரமான தேர்தல்! விவஸ்தை இல்லாத தேர்தல்! வடிகட்டிய சுயநலம் நிறைந்த தேர்தல்! அரசியல்வாதிகளின் முகத்திரையை அக்குவேறு ஆணி வேராகக் கிழித்தெரிகிற தேர்தல்! பசுத்தோல்களை உரித்துக் காட்டுபுலிகளை அடையாளம் காட்டும் தேர்தல்!


வஞ்சகமும், சூழ்ச்சியும், சதியும் துரோகமும் மலிந்துபோன தேர்தல். மனிதனில் மறைந்திருக்கும் அத்தனை குணக்கேடுகளையும் அம்பலமாக்கும் தேர்தல்.

உருட்டல் மிரட்டல், பிளாக்மெயில், கெஞ்சல் போன்ற எல்லாவிதமான நடைமுறைகளும் இதுவரை எந்த தேர்தலிலும் இந்த அளவிற்கு அரங்கேறியது கிடையாது.

இந்த தேர்தல் வர்த்தக சூதாடிகளின் வியாபாரமாகிவிட்டது. பலமடங்கு லாபத்தை ஈட்டும் குதிரைப்பந்தயமாகிவிட்டது. பொய்யையும் புனை சுருட்டையும் பேசத்தெரியவேண்டும். வார்த்தை ஜாலங்களால் வாக்காளர்களை வருடத்தெரியவேண்டும். வாக்குறுதிகளை பஞ்சமே இல்லாமல் வாரி இறைக்கவேண்டும். கட்டியுள்ள துணிகூட களவு போவது தேறாத வகையில் அவனை ஏமாற்றதெரிந்திருக்க வேண்டும்.

இதுதான் ஜனநாயகம் என்றால் இந்த போலி ஜனநாயகம், இந்த ஏமாற்று ஜனநாயகம், இருப்பதையும் பறித்து செல்லும் சுயநல ஜனநாயகம் நமக்கு வேண்டாம்."

Thursday, March 24, 2011

சிங்கம் புலி - அருவருப்பான வியாபாரம்!


சமீபத்தில் சிங்கம் புலி என்ற படத்தை பார்க்க நேர்ந்தது..

பொழுதுபோக்கிற்காக நாம் எடுக்கும் சிலமுடிவுகள் பெரும் தலைவலியை உண்டுபண்ணிவிடும்..அதில் இது ஒரு ரகம்..

படத்தின் இயக்குனரோ, கதாசிரியரோ..காய்கறி கடை வைத்து நடத்தி இருக்கவேண்டும்...

படத்தின் கிளைமாக்சில் கதாநாயகனின் தந்தை "யார் யாரோ விதைக்கும் காய்கறிய தரம்பிரிக்கிற எனக்கு, நான் விதைத்தத தரம்பார்க்க தெரியலையே " என்று சொல்லுவார்..இந்த ஒரு வசனத்திற்காக எடுக்கப்பட்ட படம்போலத்தான் இருக்கிறது..மற்றபடி, பெற்றோர்கள் காதலர்களை சேர்க்க ஒப்புக்கொள்ளாத போது சில வசனங்களை நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது..அதையும் அங்கங்கே சேர்த்து வைத்திருக்கிறார்கள்..

உருவத்தில் ஒரே தோற்றமுடைய அண்ணன் தம்பிகள்..முரட்டுகுணம் உடைய அண்ணன் - ஆனால் நேர்மையானவனாம்..

சாதுவான தம்பி அதற்க்கு நேர்மாறான பொம்பளை பொறுக்கி மற்றும் கொலைகாரன்..

அண்ணன் மீன் வியாபாரம் செய்கிறான்..அவனது முரட்டுத்தனம் பிடிக்காத பெற்றோர் அவனை வெறுத்து ஒதுக்கின்றனர்.

தம்பி வக்கீல்..பொறுக்கி..ஆனால் வீட்டில் அநியாயத்துக்கு அப்பாவி..இதுபோன்று சினமாவில் மட்டுமே நடிக்கமுடியும்..அறிமுக காட்சியில் மட்டும் அப்பாவியாக கட்டிவிட்டு படம் முழுவதும் அவன் செய்யும் அநியாயங்கள் அவன் பெற்றோருக்கு தெரியவே தெரியாதாம். மகா லூசுத்தனமான கற்பனை.

இதில் தம்பியிடம் ஏமாந்த ஒரு பெண் இறந்து விடுகிறாள். அதாவது தற்கொலை என்று செய்தி..இதற்கு தம்பிதான் காரணம் என்று தெரியவரும் அண்ணன் - தம்பி மீது வழக்கு தொடுக்கிறான்..வக்கீலான தம்பி சாதுர்யமாக தப்பி விடுகிறான். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை தம்பி கொலை செய்தது அண்ணனனுக்கு தெரியவர - மீண்டும் அண்ணன் வெகுண்டு எழுகிறான்..தான் கொலைகாரன் எனபது அண்ணனுக்கு தெரிந்துவிட்டதை அறிந்த தம்பி தனக்கு தெரிந்த பொறுக்கிகளை வைத்து அண்ணனை போட்டுத்தள்ள முயல்கிறான்..

இறுதியில் அந்த முயற்சியில் அவனே கொல்லப்படுகிறான்..பெற்றோருக்கு உண்மை தெரிகிறது..உடனேயே மேற்கண்ட வசனம்..

தாய்லாந்தில் பட்டாயா என்றொரு இடம் உண்டு. விபச்சாரத்திற்கு மிகவும் புகழ்பெற்ற இடம்..


அந்த ஊரில் உள்ள ஐட்டங்களை வைத்து ஒரு பாட்டு காட்சியை எடுத்து, அந்த நடிகனை அழகிகள் எல்லாரும் விரும்புவதுபோல் காட்டி இருப்பது விபச்சார வியாபாரம் போல உள்ளது..

அதுபோல காய்கறி வாங்க வரும் ஒரு பெண்ணை - அவர் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி - செக்ஸ் வைத்துகொண்டு விடுகிறான்..பிறகு அந்த வீட்டிற்கு வரும் அந்த பெண்ணின் மகளை ஏற்கனவே அவன் அனுபவித்து விட்டான் என்று காட்டுவதோடு, ஒருவன் ஒரு பசுவையும் கன்றையும் ஒட்டிசெல்வதுபோல் காட்டி இருப்பது மகா அருவருப்பு. இது நகைச்சுவையாம்...இந்த காட்சிக்காகவே இந்த நாய்களை தூக்கில் போடவேண்டும்..உன் அம்மாவையும் தங்கச்சியையும் ஒருவன் இப்படி செய்தால் சந்தோசப்பட்டு சிரிப்பானா இந்த எருமை?

படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் வந்து போவது போலவே உள்ளது..படு செயற்கைத்தனம்..

முக்கால்வாசி படம் ஒயின் ஷாப்பிலும் பாரிலும் சென்று விடுகிறது..இனிமேல் திரைப்படங்களில் நடிகர்கள் பெயர் டைட்டிலில் போடும்போது டாஸ்மாக், மற்றும் பார் என்ற பெயர்களையும் சேர்த்துவிடலாம்..


இவங்களெல்லாம் எதற்கு சினிமா எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை..


Wednesday, March 23, 2011

ரஜினிகாந்துக்கு ஜப்பான் பிரதமர் அனுப்பிய கடிதம்..!

ஜப்பானின் ஏற்பட்ட பெரும் பாதிப்பு சாதாரண மக்கள் அனைவருக்கும் கொஞ்சமாவது மனத்துயரத்தை ஏற்படுத்தி இருக்கும்..

பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்ட நாடு, அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் நாடு, சுறுசுறுப்புக்கும், மனிதாபிமானத்திற்கும் பெரிதும் பேசப்படும் நாடு..

எந்த ஒரு பாதிப்பிலிருந்தும் மீண்டுவிடும் தன்னம்பிக்கை மிகுந்த மக்கள்..

அந்த நாட்டில், நேற்று வரை வீட்டில் சகல வசதிகளோடு சந்தோசமாக வாழ்ந்து வந்த மக்களில் பெரும்பாலோனோர் இன்று அடிப்படை வசதிகூட இல்லாமல் அவதிப்படுவது எந்த நெஞ்சையும் கரையவைக்ககூடியது..

ஆனால் அதிலும் விளம்பரம் தேடிக்கொள்வதுதான் இந்த சினிமாக்கூத்தடிகளின் வழக்கம்போலும்..

ரஜினிகாந்த் என்பவரது ஒரு படம் ஜப்பானில் சற்று பிரபலமாகியிருந்தது..அதை வைத்து இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் அவருக்கு ஜப்பானே அடிமையாகிவிட்டதுபோல செய்திகள் வெளியிட்டு கல்லாகட்டின..

இப்போது ஏற்பட்ட பூகம்பம் சுனாமி, மற்றும் அணு உலை வெடிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளினால் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு முடிந்தால் இந்த சினிமாக்கூத்தாடிகள் பொருளாதார உதவி செய்யட்டும்..

அதைவிடுத்து இந்த நடிகர் அந்த பிரதமருக்கு வெறும்  கடிதம் எழுதினாராம்..

விடுதலைப்புலிகள் பிரச்சினையில் பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதினால் மட்டும் எல்லா பக்கமும் எரியும் தமிழ்க் காவலர்கள்,
இந்த கூத்தாடி விசயத்தில் மட்டும் எல்லா பக்கமும் பொத்திக் கொண்டிருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை..


அந்த பிரதமரும் இவரை உடனே ஜப்பான் வாருங்கள் என்று அழைத்தாராம்..

எவ்வளவு நம்மை முட்டாள் என்று இந்த கூத்தாடிகள் நினைத்திருக்கின்றான் பாருங்கள்..


பெரும் பாதிப்புள்ளாகி இருக்கும் நாட்டுக்கு இந்த நடிகன் போனால் எல்லாம் சரியாகிவிடுமா?

இதை எப்படி நிவர்த்தி செய்வது என்று அந்த நாடு பிரதமர் நினைப்பாரா

இல்லை ஒரு கூத்தாடியை இங்கே வந்துட்டு போ என்று அழைத்துக் கொண்டிருப்பாரா? இதுவா அவருடைய வேலை?

அதுவும் இந்தியா அரசு ஜப்பானுக்கு இப்போது போக வேண்டாம் என்று அறிவித்திருக்கும் வேளையில் இப்படி ஒரு புருடாவை விட்டு தப்பிக்க பார்க்கிறது இந்த கூத்தாடி..

ஏற்கனவே நதி நீர் இணைப்புக்கு ஒருகோடி தருவேன் என்று அறிவித்தவர்தான் இவர்...அதுக்கப்புறம் மூடிக்கொண்டு இருந்துவிட்டார்..


நானும்தான் என் அனுதாபக் கடிதம் ஒன்றை இமெயிலில் ஜப்பான் பிரதமருக்கு அனுப்பிவைத்தேன்..(பெரிய அளவில் பொருளாதார உதவி செய்ய இயலாத நிலையில்)

எனக்கு வந்த கடிதம்தான் கீழே..

"We acknowledge receipt of your message. Best regards, E-mail Team, Cabinet Secretariat, Government of Japan "

எனக்கு என்னமோ இந்த மாதிரி வந்த பதிலைத்தான் வைத்துக்கொண்டு, இவர்கள் புருடா விட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது..

மற்றபடி இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலே - வேலை செய்வதற்கென்றே பிறந்த - ஜப்பானியர்களின் பிரதமர் ஒருவர், எதற்கும் உபயோகமற்ற கூத்தாடிகளை அழைக்கும் அளவுக்கு முட்டாள் அல்ல என்றுதான் நினைக்கிறேன்..

டிஸ்கி.: நடிகர்களை அவன் இவன் என்று சொல்லிவிட்டாலே வரிந்துகட்டிக்கொண்டு வரும் சினிமா பைத்தியங்களுக்கு......உங்கள் ஆசைப்படி அவர் என்றே குறிப்பிடிருக்கிறேன்..சந்தோஷமா?

Tuesday, March 22, 2011

பார"தீய" ஜனதா பயங்கரவாதிகளின் போக்கிரித்தனம்..

சென்ற 2008 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக காங்கிரஸ் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் வாபஸ் பெற்றன..ஆட்சிக்கு நாக்கை தொங்கப்போட்டு அலைந்து கொண்டிருந்த பார"தீய" ஜனதா என்கிற பயங்கரவாத கட்சி எதிர்கட்சிகளை சேர்த்துக்கொண்டு நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டுவந்தது..அந்த சமயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றிபெற்றது....பதவி வெறிகொண்டு அலைந்த பார"தீய" ஜனதா என்கிற பயங்கரவாத கட்சி மூக்குடைபட்டு நின்றது..

அடுத்த வந்த தேர்தலிலும் அந்த பயங்கரவாதிகள் படுதோல்வி கண்டன..

சென்றவாரம் விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் காங்கிரஸ் கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எம்பிக்களுக்கு லஞ்சம் வழங்கியதாக செய்தி வெளியிட்டது..


மக்கள் பணத்தை வீணடிக்கும் இந்த வீணர்கள் கூட்டம், இதையும் ஒரு காரணமாக கொண்டு பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் வெறியாட்டம் போட்டன..இதோ விக்கிலீக் இந்த பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை போட்டுடைத்துள்ளது."அணு ஒப்பந்த விவகாரத்தில் தங்களது கூக்குரல் வெறும் அரசியல்தான்..அமெரிக்கா அரசு அதை கண்டுகொள்ள வேண்டாம்.." என்று அந்நாட்டு தூதுவரிடம் சொன்ன செய்திகளை விக்கிலீக் வெளியிட்டுள்ளது..ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த வெறியாட்டம், மசூதிகளை உடைப்பது, பாராளுமன்றத்தை முடக்குவது - ஆட்சியை பிடித்தால் ஊழலில் முதலிடம் வகிப்பது (உதாரணம் பங்காரு லட்சுமணன், எடியூரப்பா), மதக்கலவரத்தை உண்டாக்கி அப்பாவிகளை கொல்வது - உதாரணம் பயங்கரவாத வெறியன் நரேந்திர மோடி..

இப்படி அடுக்கடுக்காக வெறியாட்டம் நடத்தும் இந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் கட்சி நடத்ததான் வேண்டுமா?

Monday, March 21, 2011

நடிகைகள்..ஒப்பனையுடனும் - ஒப்பனை இல்லாமலும்...


இதுவரைக்கும் சூடாகவே பதிவுகள் இட்டுக்கொண்டிருப்பதால் சற்று இளைப்பாறவே இந்த பதிவு..
 
 

                                                                    கரீனா கபூர்

                                                   கேத்ரீனா கைப்


                                                           தீபிகா படுகோனே
ராணி முகர்ஜி


 
                                                    சோனம் கபூர்

                                                            பிரியங்கா சோப்ரா                                                              கஜோல்

                                                           ராக்கி சாவந்த்


Saturday, March 19, 2011

வெட்கம், மானம், சூடு , சொரணை = பணம், பதவி, ஆசை, பேராசை!

இங்கே அரசியல்வாதியாக இருக்கவேண்டிய தகுதி, வெட்கம் மானம் சூடு சொரணை இழந்து, எதற்கும் எவனையும் காலைபிடிக்க தயாராக இருக்கவேண்டும், பதவிக்காக எந்த ஒன்றையும் இழக்க தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போதும், ஓட்டுப் பிச்சை எடுக்க அரசியல் கூட்டணி வைத்துக்கொள்ள இந்த அரசியல் கருங்காலிகளின் கூத்தை பார்க்கும்போது, இவர்களா நம் ஆட்சியாளர்கள் என்று நினைக்கும்போது கூனிக் குறுகி நிற்கிறோம்..

தன்மானம் தமிழ் மானம் என்று கூவிக்கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் இன்று, கூட்டணிக்காகவும், அரசியல் பேரத்திர்க்காகவும் , ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காகவும் மானம் வெட்கம் தன்மானம் இழந்து ஒவ்வொரு கட்சி அலுவலகத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இவர்களா மக்கள் நலனை சிந்திக்கிறார்கள்? இவர்களா நாளை நல்லாட்சி தரப்போகிறார்கள் என்ற எண்ணம் எழாமல் இல்லை..

முதலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக , காங்கிரசின் போக்கில் சந்தேகமடைந்து, அவசர அவசரமாக - பல நல்ல திட்டங்களையெல்லாம் வரவிடாமல் தடுத்த- பாமக வுடன் தொகுதிப் பங்கீடு செய்தது..

அதை அறிந்த காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து, திமுகவை அதிக தொகுதி பங்கீடு கேட்டு மிரட்டியது.

இரண்டு மூன்று நாட்கள் தன்மான நாடகம் ஆடிய திமுக, இறுதியில் காங்கிரசிடம் சரணாகதி அடைந்து, அதன் பிறகும், தொகுதி பிரித்துக் கொடுப்பதில் பிரச்சினையாகி, இன்று பல்வேறு உள்குத்து நாடகங்கள் முடிந்த நிலையில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது..

சென்ற தேர்தலில் "கதாநாயகனாக" இருந்த தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் "கதாநாயகியாக" இருக்குமாம்..இப்படி மக்களை நேரடியாக முட்டாள்கள் என்று சொல்லும் வார்த்தையையும் நாம் கேட்டுக் கொண்டுதானிருக்கிறோம்..இந்தியப் படங்களில் "கதாநாயகிகளின்" முக்கியத்துவம் என்ன எனபது, முட்டாளுக்கு கூட தெரியும். அதாவது இந்த தேர்தல் அறிக்கை வெறும் கவர்ச்சி அறிக்கைதான் என்று சொல்கிறார் போலும்..

எந்த பிரச்சினை உண்டானாலும், எல்லாவற்றிலும் இருந்து தப்பி விடுவார் நமது பிரதமர், அதாவது கை சுத்தமாம்..ஆனால் இன்று அந்த "கை" யும் கறைபடிந்து நிற்கின்ற பரிதாப காட்சிதான், - நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தில் வாக்களிக்க எம்பிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்..

அடுத்தும் மக்களோடும், கடவுளோடும் மட்டுமே கூட்டணி என்று கூட்டத்திற்கு கூட்டம் ஓலமிட்டுக்கொண்டிருந்த விஜயகாந்த், ஜெயலலிதா முன்பு பம்மிக்கொண்டிருந்த காட்சி கண்கொள்ளா காட்சி..

அதோடு மட்டும் முடிந்ததா கதை..?

தொகுதி பங்கீடு முடிந்த கையோடு ஜெயலலிதா தன்னிஷ்டத்திருக்கு வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியில் தனக்கு உள்ள அதிகாரத்தை நிலை நாட்டினார்..


ஜெயாவின் அடிமைகள் வைக்கோல் மற்றும் நாஞ்சில் சம்பத் என்ற இருவர் மட்டுமே உள்ள ஒரு மதிமுக என்றதொரு கட்சி இருப்பதாகவே அவர் பொருட்படுத்தவில்லை..

இன்னும் ஜெயலலிதாவின் ஒரிஜனல் ஜால்ரா தா பாண்டியன் போன்றோருக்கு தொகுதிகள் வழங்கினாலும், நாம் என்ன செய்தாலும் கேட்பதற்கு அவர்களுக்கு மானம் ரோஷம் இருக்கிறதா என்ற அளவிற்கு எதைப் பற்றியும் கவலைப் படாமல் வேட்பாளர்களை அறிவித்தார்.

உடனேயே இந்த மக்கள் நலம் விரும்பிகள் கொதித்து எழுந்தனர்..

234 தொகுதிகளிலும் செல்வாக்கு உள்ளதென்று சொல்லும் விஜயகாந்த் - எதெற்கு குறிப்பிட்ட தொகுதிதான் வேண்டும் என்று சொல்லணும்?

கம்யூனிஸ்டுகள், ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி என்றால் அது அதிமுகவை எதிர்த்து வெற்றி பெற்ற தொகுதிகள்தான்..அதாவது அது அதிமுக தொகுதிகள்தான்..அதுதான் வேண்டுமாம்..மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எல்லா தொகுதிகளையும் சமமாகத்தான் பார்பார்கள்..

உடனேயே மூன்றாவது அணி என்றொரு நாடகம்,

சன் டிவி, கலைஞர் டிவி போன்றவை - உருவ பொம்மை எரிப்பு என்ற விளையாட்டு நிகழ்ச்சிகளை பெரிது படுத்தி குளிர்காய நினைத்தன..

மிரட்டல் அதிகமானதும், ஜெயலலிதாவும் இறங்கி வந்து இருக்கிறார்..பைசா பெறாத கட்சிகளையெல்லாம் அழைத்து அழைத்து தொகுதி உடன்பாடு செய்கிறார்..
இனிமேல் கூட்டணியே கிடையாது என்று சொன்ன தா. பாண்டியன் ஜெயலலிதா வீட்டு வாசலில்..

நல்லாட்சி தருவோம் என்று சொல்ல வக்கில்லாமல், காங்கிரஸ் திமுக ஆட்சியை விரட்டவே இந்த கூட்டணி என்று சொல்லும் அவலம்.

என்னை ஒரு கட்சியாக பார்க்க வேண்டாம் ஒரு அடிமையாகவாவது வைத்துக் கொள் என்று - ஜெயலலிதா உருவ பொம்மை எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்த வைக்கோலின் புலம்பல்..

தமது கட்சியை ஒரு கட்சியாக கருதாமல் விட்டதை கண்டிக்காமல், - நாங்கள் எவ்வளவு விசுவாசமாக இருந்தோம் என்ற இன்னொரு அடிமை ஆபாச பேச்சாளன்,நாஞ்சில் சம்பத்தின் வெட்கங்கெட்ட பேச்சு..

சாரயக்கடை வருமானம், இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி, காப்பீட்டு திட்டம் போன்றவை மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைத்துவிடும் என்று தைரியத்தில் ஒட்டுக்கேட்டு வரும் திமுக.

இவர்களில் யாருக்கும் மக்கள் நலனில் அக்கறை இல்லை...


பதவி அதிகாரம், இதன் மூலம் கிடைக்கும் அபரிதமான வருமானம்..இது ஒன்றே குறிக்கோள்..

நாளை இவர்கள்தான் நம்மிடம் ஓட்டுகேட்டு வருவார்கள்..

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தருவார்கள்..


ஏன் நமக்கு லஞ்சம் கொடுத்து ஒட்டு போடவும் சொல்லுவார்கள்..


நமது தொகுதி வேட்பாளர்களில் யார் மற்றவரைவிட, தவறுகள் குறைவாக செய்து இருக்கிறாரோ..(அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது) அவரைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்..நாளை அவனும் இதைவிட கூடுதல் குற்றம் புரிந்தவனாவான்..

இந்த நிகழ்வுகளுக்கு முடிவு கூற எனக்கு தெரியவில்லை..வேறு யாருக்காவது தெரியுமா?


பின்னூட்டமிடுங்களேன்..


வேறு வழி?

அப்புறம் ஒரு டிஸ்கி..:


தேர்தல் நெருங்கிவந்தவுடன், சன் பிக்சர் நிறுவனத்தின் எந்த படமும் வெளியாகவில்லை அல்லது எந்த படத்தையும் அவர்கள் அடாவடியாக வாங்கவில்லை கவனித்தீர்களா?


Thursday, March 17, 2011

கூடாநட்பு !


கூடாநட்பு 1.
---------------------

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, சிபிஐ யால் விசாரணைகுட்பட்ட   ஆ. ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

சாதிக் பாட்சா ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் வேகமாக முன்னேறி நல்ல நிலைக்கு வந்தவர். அதிக ஆசை, அரசியல்வாதிகளின் நட்பு போன்றவை இதுபோன்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது.

இதே போன்றுதான் சில வருடங்களுக்கு முன்பு, முக ஸ்டாலின் நண்பர் ஒருவர் தூக்குபோட்டுக்கொண்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது..

பிரபலங்கள் சிக்கும்போது, அவர்கள் நண்பர்கள் இதுபோன்ற முடிவெடுத்து வழக்குகளின் போக்கை திசை திருப்பும் நிகழ்வுகள் நடைபெற்று, குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது..

இறுதியில் இறந்தவர்களின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலை வருகிறது..

கூடா நட்பு 2
--------------------

2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கண்ட காட்சிகள் இந்த தேர்தலில் தலைகீழாக நடப்பது கண்கொள்ளா காட்சி..அப்போதெல்லாம் கூட்டணியின் தலைவராக கருணாநிதிதான் இருந்தார்..அவரை சந்திக்க அறிவாலயத்துக்கே சோனியாகாந்தியும், வந்தார்..

கருணாநிதி சொன்ன சீட்டுக்களை ஒப்புக்கொண்டு நின்றார்கள்..ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசின் கை மேலோங்கியது.

63 சீட்டுக்கள்தான் தந்தாகவேண்டும் என்ற காங்கிரசின் பிடிவாதத்தால், "சுயமரியாதையை" இழக்க விரும்பாத கருணாநிதி, 63 சீட்டுக்களையே கொடுத்து தனது "சுயமரியாதையை" காத்துக்கொண்டார்.

ஹ்ம்ம்..எல்லாம் ஸ்பெக்ட்ரம் படுத்தும்பாடு..

கூடாநட்பு 3
----------------------

சென்ற தேர்தலில் கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவன் விடுதலைப் புலி வைக்கோல்.

விடுதலைப் புலிகள் ஆதரவு விவகாரத்தில், ஜெயலலிதாவால் பொடாவில் உள்ளே சென்று கலி தின்றுகொண்டிருந்தவனை, ஒட்டு வியாபாரத்திற்காக வெளியில் கொண்டுவந்தவர் ஊழல் மன்னன் கருணாநிதி.

தாய் நாட்டிற்கே துரோகம் செய்பவனுக்கு , கருணாநிதிக்கு துரோகம் செய்வது பெரிய விசயமா?

22 சீட்டுக்கள் தன தன்மானத்திற்கு இழுக்கு என்று 35 சீட்டுக்கள் வாங்�கு வ�லலிதாவிடம் அடிமையாக சென்றான். அன்று ஜெயலலிதாவிற்கு ஒரு அடிமை தேவைப்பட்டது..சேர்த்துக்கொண்டார்.

இன்று 21 சீட்டுக்களாவது கொடுங்கள் என்று கெஞ்சி, "சுயமரியாதையை" தக்கவைத்துக்கொள்ள முயன்றான்.ஜெயலலிதாவிற்கு தெரியாதா அந்த கட்சியில் அத்தனை ஆட்கள் இருக்கிறார்களா என்று?

ஒன்பது சீட்டுக்களுக்கே ஆட்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை..

கடைசியில் வைக்கோல் தனித்து விடப்பட்டான்..

வைக்கோல் இனி யாழ்ப்பாணத்தில் தனது அரசியலை செய்யலாம்..கூடாநட்பு 4
---------------------இன்னொரு தன்மான சிங்கம் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக்.அவரும் ஜெயலலிதா தனக்கு தொகுதிகள் வழங்குவார் என்று தன்மானத்தோட காத்திருந்தார்.. கடைசிகட்டம்வரை அவரது "தன்மானம்" ஒர்க் அவுட் ஆகவில்லை..

பார்த்தார்,

சாத்தான்குளம், கடலாடி, சமயநல்லூர், சேரன்மாதேவி போன்ற தொகுதி மறுசீரமைப்பில் இல்லாமல் போன ஐந்து தொகுதிகள் (?) உட்பட நாற்பது தொகுதிகளில் தமது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் அணிந்துகொண்டு, பேட்டிகொடுக்கும் கார்த்திகைப் பார்த்தல் பரிதாபமாக உள்ளது..

தேர்தல் வரைமட்டுமல்ல..தேர்தல் முடிந்து, முடிவுகள் வந்தபிறகும் என்னென்ன கூத்துகள் அரங்கேறப் போகிறது என்று பார்க்கத்தானே போகிறோம்..

Wednesday, March 16, 2011

மாஞ்சாக் கொலைகள்

இந்த பயனுள்ள பதிவு "தமிழ்ச்சரம்"  என்ற வலைப்பதிவில் வெளியிடப்பட்டது. அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறேன்

வானத்தில் பட்டம் ஏற்றி விளையாடுவது என்பது நம்மில் பலருக்கு பரவசம் தரும் அனுபவம் ஆகும். சிறிய வயதில் காற்றாடி விடுவது என்பதே தொழில் என தெருவில் சுற்றித் திரிந்தது உண்டு. சென்னையின் வெயில் கால்களை சுட்டெரித்தாலும், புளியமர நிழலில் அமர்ந்து பட்டம் விடுவதற்க்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து வைத்திருப்போம். மாலை வேளை கொஞ்சம் சூரியன் தனது வெப்பத்தை இழக்கத் தொடங்கும் போது மைதானங்களை தேடிப் போய் வானத்தில் அவரவர் பட்டம் ஏற்றுவதும், அடுத்த ஏரியா பசங்களின் பட்டத்தை அறுக்க பெரும் போர் நடத்துவதும், அறுந்த பட்டத்தை முதலில் கைப்பற்றுபவனுக்கே சொந்தம் என்பதால், சீதையை கைப்பற்ற போன இராவணன் கணக்காக ஓடிப் போய் பிடிப்பதும் பால்ய கால நினைவுகளாகி விட்டது. ஆனால் அப்போது பட்டத்தின் நூலுக்கு மாஞ்சா போடுவது என்பது போர்களத்துக்கு போகும் வீரர்கள் ஆயுதங்களை புதுப்பித்தல் போல படுஜோராக நடக்கும். ஆரம்ப கால மாஞ்சாக்கள் என்பது இயல்பான பொருட்களின் கலவையாக இருந்தன.ஆனால் காலம் செல்ல செல்ல பட்டம் என்பது ஒரு வியாபார மயமாக்கப் பட்டது. அதனால் மாஞ்சா கலவையில் ரப்பர், கண்ணாடித் துகள்கள் என பலவற்றை சேர்க்கத் தொடங்கினர். இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது எனத் தெரியாது, ஆனால் அனைவரிடமும் இதுத் தொற்றிக் கொண்டது. கண்ணாடித் துகள்கள் சேர்க்கப் பட்ட மாஞ்சா நூலானது மிகவும் ஆபத்தானது அது கைகளை அறுத்துவிடும். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் பட்டம் விடும் வயதைக் கடந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டோம். ஆனாலும் மாஞ்சாவும், பட்டமும் இன்றளவும் தொடர்கிறது.


சென்னை நகரம் மரங்களையும், மைதானங்களையும் இழக்கத் தொடங்கியது. எங்கெங்கும் வீடுகள் பெருகின, புதிய மக்கள் குடியேறினார்கள். ஆனாலும் பட்டமும், மாஞ்சாவும் அழியவில்லை. கண்ணாடி துகள் கலந்த மாஞ்சா விற்கும் இடங்கள் சென்னையின் மையப்பகுதிகளில் இருந்தன. அவை சூடான வியாபாரத்தை நடத்தி வந்தன. பட்டம் விடுவதால் பல வேளைகளில் அந்த நூல் அறுந்து மரக் கிளைகளிலும், போஸ்ட் கம்பங்களிலும் சிக்கிக் கிடக்கும். கல்லூரிகளுக்கு செல்லும் காலத்தில் அந்த மாஞ்சா நூல்களில் சிக்கி சில குருவிகள் செத்துக் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். அந்த நூல்களின் ஆபத்து அப்போது தான் புரிந்தது. அவை பெரும்பாலும் எளிதில் மக்காது. மக்கள் நெருங்கிய இடங்களில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானதும் கூட. இதனைப் பற்றி பெரும்பாலானோர் கவலைப்பட்டதே கிடையாது.


இப்படியான மாஞ்சா நூல் காற்றாடிகள் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தையின் உயிரை வாங்கியதாக எனது நண்பர் மூலம் அறிந்துக் கொண்டேன். அதன் பின் சென்னை மாநகருக்குள் மாஞ்சா காற்றாடிகள் தடைசெய்யப்பட்டு விட்டது. ஆனால் அத்தடை ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

செரினா பானுவின் மரணம்:


இந்நிலையில் நேற்று சென்னை மெரினாக் கடற்கரையில் விளையாடி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் நான்கரை வயது சிறுமி செரினா பானுவின் கழுத்தில் எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிறு பாம்பினைப் போல சுற்றிக் கொண்டது. அதனை சில சிறுவர்கள் இழுக்கவும், அது அவளின் தொண்டைப் பகுதியை மேலும் இறுக்கியது. அப்பா என அலறியப் படி மயங்கி விழுந்தாள் செரினா பானு. இந்தச் சம்பவம் புதுப்பேட்டையில் உள்ள ஆதித்தனார் சாலையில் மாலை 5.30 மணிக்கு நடந்தது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர் அவளின் பெற்றோர் ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகம் முதலுதவிக் கூட செய்யாமல் அவளை அங்கு அனுமதிக்க மறுத்துவிட்டனர். பின்னர் அருகில் இருக்கும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் செல்லும்வழியிலேயே அச்சிறுமி இறந்துவிட்டாள்.


பெற்ற பிள்ளையின் இறப்பைத் தாங்கி கொள்ள முடியாமல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் பாத்திமா என சோகம் ததும்பிய கண்களோடு கூறினார் முகமத். இச்சம்பவம் புதுப்பேட்டை பகுதி வாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பின்னர் உள்ளூரில் உள்ள அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மாஞ்சா தடை செய்யப்பட்ட போதும், அத்தடையை நடைமுறைப்படுத்திய காவலரையும் மக்கள் வன்மையாக கண்டித்தனர். ஆனால் இனிமேல் செரினா பானுவின் உயிர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் இன்னொரு செரினா பானுவின் உயிரை இந்த மாஞ்சா குடிக்கும் முன் நாம் என்ன செய்யப் போகின்றோம் ?


மாஞ்சா என்றால் என்ன?

மாஞ்சா என்பது கண்ணாடித் துகள்கள், மைதாமாவு போன்றவற்றை சேர்த்து செய்யும் ஒரு கலவை. பெரும்பாலும் இது கொதிக்கவைத்து கலக்கப்பட்டு பின்னர் பட்டம் விடும் நூல்களின் மீது பூசுவார்கள். இந்த மாஞ்சாவானது கைகளை அறுத்துவிடும் அபாயம் கொண்டவை. இது பறவைகள், மனிதர்கள், விலங்குகளுக்கு பலவகையில் எமனாக முடிந்துவிடுவது உண்டு. இந்த மாஞ்சாவானது வடநாட்டில் உருவாக்கம் பெற்ற தெற்காசியா முழுதும் பயன்பட்டு வருகிறது. ஆரம்பக் காலங்களில் மாஞ்சாவனது அரிசிமாவிலும், மரப்பட்டை சேர்த்து செய்யப்பட்டு வந்த்து, பின்னர் அதில் கண்ணாடி, ரப்பர், கெமிக்கல் பொருட்களை சேர்க்க ஆரம்பித்து விட்டனர். இதில் கலக்கப்படும் வஜ்ரம் என்னும் பொருள் போதை வஸ்துவாகவும் பயன்படுகிறது என்பது அதிர்ச்சித் தகவல்

சென்னையில் மாஞ்சா தடைசெய்யப்பட்டுள்ளதா?

கடந்த 2006ம் ஆண்டு எட்டு வயது சிறுவன் மாஞ்சா காத்தாடி நூலில் சிக்கி உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து சென்னைக் காவல்துறை சட்டம் பிரிவு 71-யின் கீழ் பொது இடத்தில் காற்றாடிப் பறக்க விடுவதும், மாஞ்சா விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், வியாபாரமும் குறைந்தபாடில்லை. கடந்த சனவரி முதல் குறைந்தது ஐந்து பேர் வரை மாஞ்சா நூலால காயமடைந்துள்ளனர்.


மாஞ்சாவை தடை செய்தாலும் மாஞ்சாவை வேறு மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்து சென்னையின் மத்தியப் பகுதிகளில் பல கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார்கள். அதே போல பல சிறுவர்கள் மாஞ்சாவை வாங்குவதை விடவும் தாமே தயார் செய்தும் விடுகின்றனர்.

பிரச்சனை :

பட்டம் விடுதல் நம் நாட்டில் காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். பட்டம் விடுதல் சிறுவர்களுக்கு முக்கியமானதொரு பொழுதுபோக்கு.


சென்னை நகரமயமாக்கலில் விளையாட்டு மைதானங்களை உருவாக்காமல் விட்டது பெரும் தவறு. சிறுவர்களுக்கான பொழுதுபோக்கில் அக்கறையில்லாமல் விட்டதும், பலவகைப்பட்ட விளையாட்டுகளை அறிமுகம் செய்யாமல் விட்டதும், விளையாட்டுக் கழகங்கள் ஒவ்வொரு பகுதியிலும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.

பட்டம் வியாபாரம் செய்பவர்கள் கொடிய கண்ணாடித் துகள்கள் கலந்த மாஞ்சாவை விற்பனை செய்தது. மாஞ்சா விற்பனை என்பது பல லட்சம் புரளும் ஒரு வியாபாரம் அதனை நடத்துவோர் முக்கியப் புள்ளிகள் என்பதால் அவற்றைத் தடை செய்யாமல் விட்டது. அலல்து தடை இருந்தும் தடை அமுலாக்கம் செய்யாமல் இருப்பது.

மாஞ்சா குறித்து போதிய பகுத்தறிவு பொதுமக்களிடம் இல்லாமல் இருப்பது. எந்த இடத்தில் எப்படியான விளையாட்டு விளையாட வேண்டும் என பிள்ளைகளை வளர்க்கத் தெரியாத பெற்றோர்கள் ஒரு காரணம்.

இப்படியான விபத்துகள் ஏற்படும் போது உடனடி முதலுதவி செய்யத் தெரியாத மருத்துவமனைகள், மருத்துவர்கள். அவசர சிகிச்சை உடனடியாக அனைவருக்கும் கிடைக்கும் வசதி இல்லாமை. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டு நிற்கும் அவலம்.

தீர்வுகள் :

மாஞ்சா நூல் மட்டுமில்லாமல் பட்டம் விடுதலை முற்றிலுமாக அரசால் தடைச் செய்யப்படல். தடையை அமலாக்கம் செய்யாது இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை.

தெருவில் செல்லும் போது காணப்படும் மாஞ்சா நூலை கண்டும் காணமலும் போகாமல், இந்த கயிறு நாளைக்கு நம் வீட்டு பிள்ளைக்கும் உயிராபத்து ஏற்படுத்தும் என்று எண்ணி அதனை உடனடியாக உள்ளூர் காவலில் முறையிடுதல்.

மாஞ்சா நூல் விற்கும் இடங்களைக் கண்டுபிடித்து அதனைத் தடுக்க மக்கள் நேரிடையாக ஒரு குழு அமைத்தல். ஒவ்வொரு பகுதியிலும் சிறுவர்கள் விளையாட போதிய மைதானங்கள் அமைத்தல். மாற்று விளையாட்டுகளை பயிற்றுவித்தல்.

பட்டம் விட செல்லும் உங்களது பிள்ளைகளுக்கு, இது போன்ற சம்பவங்களை எடுத்துக் கூறி அறிவுரைச் செய்தல். நெருக்காமன குடியிருப்புப் பகுதியில் முற்றிலுமாக பட்டம் விடுவதைத் தடைச் செய்தல். வேற்று மாநிலத்தில் இருந்து வியாபார நிமித்தம் பட்டம் விற்பனையை முற்றிலுமாக தடைச் செய்தல்.

இந்த செரினா பானுவின் மரணத்துக்கு சிறுவர்களும், காவலரின் கவனக்குறைவும், மாஞ்சா பட்டம் விற்பவரும், ஒழுங்கற்ற மருத்துவரும் மட்டும் காரணம் அல்ல. மாஞ்சா குறித்து ஒரு நடவடிக்கையையும் எடுக்கத் தவறிய நாம் அனைவருமே இதற்கு பொறுப்பாவோம்.

                                                                                 எழுத்து: தங்கபாண்டியன், சென்னை

                                                                                                    நன்றி   : தமிழ்ச்சரம்.காம்

Monday, March 14, 2011

ஒழுங்கீனத்தின் வெறியாட்டம்..வர வர தரைப்படைகளின் தொல்லைகள் தாங்க இயலவில்லை..

இன்று செய்தித்தாள்களில் அந்த செய்தியை படித்தபோது நெஞ்சம் பதறிவிட்டது..

தரைப்படை நாய்கள் சாலைகளில் காற்றாடி விடுகிறேன் என்று நூலில் மாஞ்சா தடவி பட்டம் விடுகின்றன..

நான்கு வயது செரின் பானு என்ற ஒரு பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்து உயிரைப் பறித்து விட்டது..

பட்டம் விடக்கூடாது என்று எவ்வளவோ தடைகள் இருந்தும் இந்த சாலையோர நாய்கள் அதை மதிப்பதே இல்லை..

இப்படி பல பேர் உயிரை குடித்தும் மனித ஜென்மம் இல்லாத அந்த நாய்கள் அதைப் பற்றி சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை..

காவல் துறையினரும் அதை இலட்சியம் செய்வதை தெரியவில்லை

இது போன்ற மிருகங்களை காற்றாடி விடும்போதே சுட்டுத்தள்ளவேண்டும்..

ஒழுக்கமில்லாத இந்த நாய்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன?***************இலவசம் படுத்தும்பாடு..ஞாயிறன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் கண்ட ஒரு ஒழுக்ககேடான காட்சி.மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏதோ ஒரு பேக்கேஜ் டூர் சம்மந்தமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தியது..

அதில் பதிவு செய்பவர்களில் ஒருவருக்கு இலவச டூர் அந்நிறுவனமே தருமாம்..தமிழ்நாட்டுக்காரர்களுக்கு இலவசம் என்றால் போதுமே..கூட்டம் கூட்டமாக கூடிவிட்டனர்..

அதில் நிகழ்ச்சி நடத்தும் ஒரு பெண்மணி, - இளைஞர்கள் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்டோர் இருக்கலாம் - அவர்களை அழைத்து, நீங்கள் நடனமாடவேண்டும், என்று கேட்டுக்கொண்டாள் . அவர்களும் தயாராக இருக்க..எல்லாருக்கும் பெண்களும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று அபிப்பிராயப்பட்டனர் போலும்..

அந்த பெண்மணி, "கேர்ல்ஸ்" யாரவாது வாங்களேன் என்று அழைத்துப் பார்த்தார்..யாரும் வரவில்லை எனத்தோன்ற..

டான்ஸ் ஆடும் பெண்ணுக்கு கண்டிப்பாக கிப்ட் உண்டு என்றவுடன் ஒருத்தி நாக்கை தொங்கப்போட்டு கொண்டு வந்துவிட்டாள்...அந்த முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் கூட்டத்தில் கூச்சமின்றி இடுப்பை அசைத்து அசைத்து ஆடுகிறாள்..இதெல்லாம்வற்றையும் விட இன்னும் அருவருப்பான விஷயம் நடனம் முடிந்தவுடன், அந்த பெண்ணை அறிவிப்பாளினி கேட்கிறாள் நீங்கள் எந்த காலேஜ் என்று..அவள் சொல்கிறாள் நான் மாரிட் என்று..

ஒஹ்ஹ்ஹ..உங்க கணவர் வந்து இருக்காரா?

எஸ்..

அவனும் வெட்கமின்றி கூட்டத்தினுள் வருகிறான்..

இலவசத்திர்காக எதுவும் செய்யும் வெட்கங்கெட்ட கூட்டம் என்று கூட்டம் முனுமுனுக்கிறது..

Saturday, March 12, 2011

சினிமாக்காரர்கள் மனது..


எந்த ஒரு நிகழ்வுக்கும் உதாரணமாக, பூகம்பம், சுனாமி, கலவரம், போர் போன்ற பாதிப்பளுக்கு உள்ளான மக்களுக்கு - மற்றவர்கள் தங்கள் பணத்தையோ பொருளையோ உதவியாக வழங்குவார்கள்..

ஆனால் சினிமாக்காரர்கள் மட்டும், கோடி கோடியாக சம்பாதித்தாலும், கலை நிகழ்ச்சி என்ற பெயரிலே கூத்தடித்துவிட்டு, அதில் வரும் வருமானத்தை மட்டுமே அல்லது அதன் ஒரு பகுதியை மட்டுமே நிவாரண நிதி என்ற பெயரில் முதலமைச்சரிடமோ அல்லது வேறு யாரிடமோ கொடுத்து பல்லிளித்து போட்டோ எடுத்து விளம்பரம் செய்து கொள்வார்கள்..

நடிகர் சங்க கடனை அடைப்பதர்க்கே கூட தத்தமது பொருளாதாரத்தை வழங்காமல், மலேசியா போன்ற நாடுகளில் கூத்தடித்து பிச்சை பெற்ற பணத்தையே வழங்கினார்கள்..

சமீபத்தில் மும்பை பாந்த்ரா என்ற குடிசைப் பகுதியில் ஏற்பட்ட ஒரு தீவிபத்தில் பல குடிசைகள் நாசமாகின..அந்த பகுதியில் குடியிருந்தவர்களில் "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற படத்தில் நடித்த ரூபினா அலி என்ற சிறுமியின் குடிசையும் தீப்பிடித்தது..

எல்லா விசயங்களையும் விட்டு விட்டு இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் அந்த சிறுமி ஒரு நடிகை என்பதாலேயே அதற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து வெளியிட்டன..

இன்றைய செய்தி ஒன்று சினிமாக்காரர்களின் கோணல் புத்தியை வெளிக்காட்டுகிறது..

தீவிபத்தில் வீட்டை இழந்த நடிகை ரூபினா அலிக்கு நிவாரண உதவியாக ரூபாய் 50000 த்தை, சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் சிலம்பரசன் மூலம் வழங்கியுள்ளார்..அவருக்கு வழங்கியதை குறை கூறவரவில்லை..

இவர்கள் நினைத்தால் அந்த குடிசைப் பகுதி மக்களுக்கு புதிய இருப்பிடமே கட்டித்தர முடியும்..

அதாவது அந்த பெண் மட்டும்தான் பாதிக்கப்பட்டவள் எனபது போல செயல்பட்டிருப்பதுதான் இவர்களது வியாபார யுத்தியை காட்டுகிறது..

ஆஸ்கார் விருது பெற்றவர்களை நாளை நம் படத்தில் நடிக்கவைத்து விளம்பரம் செய்யலாமே என்பதற்காக இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை..


..


Friday, March 11, 2011

ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரழிவு.(படங்களுடன்)


பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜப்பான் இன்றையதினம் மிகப்பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது.

11 மார்ச் 2011 இன்று..டோக்கியோ துறைமுகத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தாலும் (ஏறக்குறைய 8.4 ரிக்டர் அளவு) 25 அடி உயரத்திற்கு ஏற்பட்ட சுனாமி பேரலைகளாலும் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.பெரிய பெரிய கட்டிடங்களும், பாலங்களும் இடிந்துள்ளன. நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்வால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தீப்பிடித்து எரிகின்றன..

சுனாமி அலைகளால் சாலைகள் எங்கும் வெள்ளமாக காட்சியளிக்கிறது..

கார்களும், பஸ்களும், கப்பல்கள், போட்கள் என்று பாரபட்சமின்றி வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுவிட்டன..

செண்டாய் விமான நிலையம் முழுதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது..


டோக்கியோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது..


ஜப்பான் முழுவதும் மின் இணைப்பு, மற்றும் தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து செயலிழந்து விட்டது..தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை அறியமுடியவில்லை.

எனினும் பெரிய அளவில் உயிரிழப்பு எற்பற்றிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது..

ஜப்பானில் மீட்பு பணியில் பங்கேற்க அந்நாட்டு மக்களை வேண்டியுள்ளார் அந்நாட்டு பிரதமர்..


900 மீட்ட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன..

உடனடியாக அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது
இதற்க்கு முன் டோக்கியோ நகரில் 1923 ம் ஆண்டு ஏற்ப்பட்ட பூகம்பம்தான் மிகப்பெரிய பூகம்பமாக இருந்தது..அந்த பூகம்பத்தில் ஏறக்குறைய 140000. க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது..

அதுபோல் இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் நம்மால் முடிந்த ஆதரவையும் வழங்க முயற்சிப்போம்..