கூடாநட்பு 1.
---------------------
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, சிபிஐ யால் விசாரணைகுட்பட்ட ஆ. ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
சாதிக் பாட்சா ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் வேகமாக முன்னேறி நல்ல நிலைக்கு வந்தவர். அதிக ஆசை, அரசியல்வாதிகளின் நட்பு போன்றவை இதுபோன்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது.
இதே போன்றுதான் சில வருடங்களுக்கு முன்பு, முக ஸ்டாலின் நண்பர் ஒருவர் தூக்குபோட்டுக்கொண்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது..
பிரபலங்கள் சிக்கும்போது, அவர்கள் நண்பர்கள் இதுபோன்ற முடிவெடுத்து வழக்குகளின் போக்கை திசை திருப்பும் நிகழ்வுகள் நடைபெற்று, குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது..
இறுதியில் இறந்தவர்களின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலை வருகிறது..
கூடா நட்பு 2
--------------------
2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கண்ட காட்சிகள் இந்த தேர்தலில் தலைகீழாக நடப்பது கண்கொள்ளா காட்சி..அப்போதெல்லாம் கூட்டணியின் தலைவராக கருணாநிதிதான் இருந்தார்..அவரை சந்திக்க அறிவாலயத்துக்கே சோனியாகாந்தியும், வந்தார்..
கருணாநிதி சொன்ன சீட்டுக்களை ஒப்புக்கொண்டு நின்றார்கள்..ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசின் கை மேலோங்கியது.
63 சீட்டுக்கள்தான் தந்தாகவேண்டும் என்ற காங்கிரசின் பிடிவாதத்தால், "சுயமரியாதையை" இழக்க விரும்பாத கருணாநிதி, 63 சீட்டுக்களையே கொடுத்து தனது "சுயமரியாதையை" காத்துக்கொண்டார்.
ஹ்ம்ம்..எல்லாம் ஸ்பெக்ட்ரம் படுத்தும்பாடு..
கூடாநட்பு 3
----------------------
சென்ற தேர்தலில் கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவன் விடுதலைப் புலி வைக்கோல்.
விடுதலைப் புலிகள் ஆதரவு விவகாரத்தில், ஜெயலலிதாவால் பொடாவில் உள்ளே சென்று கலி தின்றுகொண்டிருந்தவனை, ஒட்டு வியாபாரத்திற்காக வெளியில் கொண்டுவந்தவர் ஊழல் மன்னன் கருணாநிதி.
தாய் நாட்டிற்கே துரோகம் செய்பவனுக்கு , கருணாநிதிக்கு துரோகம் செய்வது பெரிய விசயமா?
22 சீட்டுக்கள் தன தன்மானத்திற்கு இழுக்கு என்று 35 சீட்டுக்கள் வாங்�கு வ�லலிதாவிடம் அடிமையாக சென்றான். அன்று ஜெயலலிதாவிற்கு ஒரு அடிமை தேவைப்பட்டது..சேர்த்துக்கொண்டார்.
இன்று 21 சீட்டுக்களாவது கொடுங்கள் என்று கெஞ்சி, "சுயமரியாதையை" தக்கவைத்துக்கொள்ள முயன்றான்.
ஜெயலலிதாவிற்கு தெரியாதா அந்த கட்சியில் அத்தனை ஆட்கள் இருக்கிறார்களா என்று?
ஒன்பது சீட்டுக்களுக்கே ஆட்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை..
கடைசியில் வைக்கோல் தனித்து விடப்பட்டான்..
வைக்கோல் இனி யாழ்ப்பாணத்தில் தனது அரசியலை செய்யலாம்..
கூடாநட்பு 4
---------------------
இன்னொரு தன்மான சிங்கம் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக்.
அவரும் ஜெயலலிதா தனக்கு தொகுதிகள் வழங்குவார் என்று தன்மானத்தோட காத்திருந்தார்.. கடைசிகட்டம்வரை அவரது "தன்மானம்" ஒர்க் அவுட் ஆகவில்லை..
பார்த்தார்,
சாத்தான்குளம், கடலாடி, சமயநல்லூர், சேரன்மாதேவி போன்ற தொகுதி மறுசீரமைப்பில் இல்லாமல் போன ஐந்து தொகுதிகள் (?) உட்பட நாற்பது தொகுதிகளில் தமது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் அணிந்துகொண்டு, பேட்டிகொடுக்கும் கார்த்திகைப் பார்த்தல் பரிதாபமாக உள்ளது..
தேர்தல் வரைமட்டுமல்ல..தேர்தல் முடிந்து, முடிவுகள் வந்தபிறகும் என்னென்ன கூத்துகள் அரங்கேறப் போகிறது என்று பார்க்கத்தானே போகிறோம்..
9 comments :
அருமையா அலசி போட்டிருக்கீங்க..
கூடா நட்பு அரசியலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஆகவே! ஆகாது.
நல்லாத்தான் அலசி இருக்கீங்க!
நடத்துங்க ஒரே காமடி தான் போல!
பகிர்வுக்கு நன்றி நண்பரே
//விடுதலைப் புலி வைக்கோல்.//
:))
nalla karuthu
பின்னூட்டமிட்ட நண்பர்கள்
திரு வேடந்தாங்கல் கருன்
திரு "குறட்டை" புலி
திரு விக்கி உலகம்
திரு தனிக்காட்டு ராஜா
திரு Gunasekaran.s
ஆகிய அனைவருக்கும் மற்றும் பார்த்துசென்ற அனைவருக்கும்
நன்றி
பொதுவாக எல்லோரைப்பற்றியும் எழுதிக்கொண்டிருந்துவிட்டு, திடீரென வைகோவை மட்டும் ஒருமையில் திட்டி எழுதுவது தவறாகப்படுகிறது. ஓரளவாவது அரசியல் நேர்மையுடன் நடந்துகொள்ளும் தலைவர்களில் வைகோவும் ஒருவர்!
இந்தியாவில் அரசியல் நடத்திக்கொண்டு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு பிரச்சாரம் பண்ணுவதுதான் நேர்மையான அரசியலா?
தமிழ்நாட்டில் ஓட்டுப் பிச்சை எடுத்துவிட்டு, இத்தாலியின் முசோலினி, ரஷ்யாவின் ரூஸ்வெல்ட், இங்கிலாந்தின் சர்ச்சில் என்று பேசிவிட்டால் அவன் சிறந்த அரசியல்வாதியா?
ராஜீவ் காந்தியை கொன்ற பிரபாகரன் தேடப்படும் ஒரு பயங்கரவாதி..அவன் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறான் என்று சொல்லும் வைக்கோ அவன் எங்கு இருக்கிறான் என்று சொல்வதுதான் ஒரு இந்தியனின் கடமை..அப்படி செய்யாமல் இருப்பது தேச துரோகம்...இவன் எப்படி ஒரு நேர்மையான அரசியல் வாதி?
சுரேகா.. said...
பொதுவாக எல்லோரைப்பற்றியும் எழுதிக்கொண்டிருந்துவிட்டு, திடீரென வைகோவை மட்டும் ஒருமையில் திட்டி எழுதுவது தவறாகப்படுகிறது. ஓரளவாவது அரசியல் நேர்மையுடன் நடந்துகொள்ளும் தலைவர்களில் வைகோவும் ஒருவர்!
March 18, 2011 11:53 AM
மர்மயோகி said...
இந்தியாவில் அரசியல் நடத்திக்கொண்டு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு பிரச்சாரம் பண்ணுவதுதான் நேர்மையான அரசியலா?
தமிழ்நாட்டில் ஓட்டுப் பிச்சை எடுத்துவிட்டு, இத்தாலியின் முசோலினி, ரஷ்யாவின் ரூஸ்வெல்ட், இங்கிலாந்தின் சர்ச்சில் என்று பேசிவிட்டால் அவன் சிறந்த அரசியல்வாதியா?
ராஜீவ் காந்தியை கொன்ற பிரபாகரன் தேடப்படும் ஒரு பயங்கரவாதி..அவன் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறான் என்று சொல்லும் வைக்கோ அவன் எங்கு இருக்கிறான் என்று சொல்வதுதான் ஒரு இந்தியனின் கடமை..அப்படி செய்யாமல் இருப்பது தேச துரோகம்...இவன் எப்படி ஒரு நேர்மையான அரசியல் வாதி?//
உங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி.
ஒரு நல்ல அரசியல் தலைவரை காட்டுங்கள்.
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?