Pages

Wednesday, March 31, 2010

அழிந்து வரும் சிட்டுக் குருவி இனம்..

பறவை இனங்களில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், அதில் சிட்டுக்குருவி இனம் மட்டும் மனிதர்களை சார்ந்து வாழக்கூடியது. அதனால்தான், அதை அடைக்கல குருவி என்று அழைக்கிறார்கள். மனிதர்களின் அடைக்கலத்தில்தான் அவை வாழும்.

மற்ற பறவைகள் எல்லாம் காடுகளிலும், மரங்களிலும் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டவை. ஆனால், சிட்டுக் குருவி வீடுகளில் உள்ள பொந்துகளிலும், உத்திரத்தின் மேலும், போட்டோக்களுக்கு பின்புறமும் கூடுகளை அமைத்துக்கொண்டு, மனிதர்கள் உட்கொள்ளும் தானியங்களை உண்டு வாழும்.

அதனால் இந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிகளுக்கு யாரும் தொந்தரவு கொடுக்க நினைக்க மாட்டார்கள். கிராமங்களில் உள்ள வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தால், கூட்டைக் கலைக்கக் கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால், சிட்டுக் குருவியை வீட்டைவிட்டு விரட்டினால், தனது குடும்பமும் பிரிந்துவிடும் என்று இன்னமும் நம்புகிறார்கள்.

அதனால்தான், கிராமங்களில் எந்ததவித தொந்தரவும் இல்லாமல், "கீச்..கீச்.." என்ற மெல்லிய சத்தத்துடன் துருதுரு என்று சிட்டுக் குருவிகள் பறந்து திரியும். சுறுசுறுப்புக்கு கூட கிராமத்தில் சிட்டுக்குருவியைத்தான் இன்னும் உதாரணமாக சொல்வார்கள்.

சிட்டுக்குருவியை வைத்து சினிமாக்களில் கூட பாட்டுக்கள் எழுதுகிறார்கள்..."சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு...", சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..", "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது..", .. " ஏ குருவி..சிட்டுக் குருவி.." என்று எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்..

ஆனால், இந்த சிட்டுக் குருவிக்கு செல்போன் கோபுரம் என்ற எமன் வடிவில் ஆபத்து வந்துள்ளது.

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சு, சிட்டுக் குருவியின் இதயத்தை தாக்குகிறது. இதனால், சிட்டுக் குருவி சுருண்டு விழுந்து சாகிறது...செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது.

ஒருகாலத்தில் கிராமம், நகரம் என்று எங்கு பார்த்தாலும் சிட்டுக் குருவியைப் பார்க்கலாம். ஆனால், தற்போது நகரங்களில் சிட்டுக்குருவிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சென்னை நகரில் சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் மைனா உட்பட ஒரு சில பறவைகளைத்தான் காண முடிகிறது.

மேலும், சிட்டுக்குருவிகளுக்கு கூடுகட்ட தேவையான இடங்கள் தற்போது இல்லை. ஏனென்றால், கூரை வீடுகள் எல்லாம் கான்க்ரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. விவசாய பயிர்களுக்கு நாம் தெளிக்கும் மருந்துகளும் சிட்டுக் குருவி அழிவுக்கு ஒரு காரணம் ஆகும்.

இதே நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் குழந்தைகளுக்கு சிட்டுக் குருவிகளை படங்களில் மட்டும்தான் காட்டமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, சிட்டுக்குருவி இனங்களை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பறவை ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும், கோரிக்கைவைத்துள்ளனர்.

தினத்தந்தியில் வந்த ஒரு கட்டுரை...நமது பதிவர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்..

இந்த கட்டுரையால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்று தெரியும்..ஏனென்றால் இதன் காரணமாக நாம் செல்போன் பேசுவதை நிறுத்திவிடபோகிறோமா? அல்லது சிட்டுக்குருவிகளுக்கு கூடுதான் கட்டிதரப் போகிறோமா...

ஒரு ஏழைக்கு உணவு கொடுக்க மறுக்கும் பணகாரவர்கத்தினர் , தங்களது நாய் செத்துவிட்டால் "obituary" காலத்தில் விளம்பரம் கொடுத்து அழுவார்கள்..அவர்களுக்கு இந்த பரிதாபத்திற்குரிய  சின்னஞ்சிறிய பறவைகள் எல்லாம் ஒரு பொருட்டா?

Tuesday, March 30, 2010

பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள்..!!!

பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் மெதுவாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 7 வது சுற்றின்படி தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் 32 ஆயிரத்து 250 ஓட்டுக்கள் பெற்று தற்போது பா.ம.க., வேட்பாளரை விட 19 ஆயிரத்து 595 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார். 7 வது சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 32 ஆயிரத்து 250 ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 12 ஆயிரத்து 655 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 11 ஆயிரத்து 441 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 4 ஆயிரத்து 506 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.அ.தி.மு.க., வை பின்னுக்கு தள்ளிய பா.ம.க., : எந்த தேர்தலிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது தி.மு.க, அல்லது அ.தி.மு.க., என முன்னிலையில் முன்னும், பின்னுமாக இடம் பிடிக்கும். இந்த பென்னாகரம் தேர்தலை பொறுத்த மட்டில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிட்ட பா.ம.க., 6 வது சுற்று வரை 2 வது இடத்தை பிடித்து வருகிறது. . அ.தி.மு.க, இது வரை அறிவிக்கப்பட்ட சுற்றில் பா.ம.க., வேட்பாளரை விட ஆயிரம் , 500 ஓட்டுக்கள் குறைவாக பெற்று பின்தங்கி வருகிறார். இத்தொகுதியில் பா.ம.க., வின் வன்னியர்கள் ஓட்டு பலம் சற்று கூடுதலாக உள்ளதே இதற்கு காரணம்.

தபால் ஓட்டில் தி.மு.க., முந்தியது : முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டில் தி.மு.க.,வுக்கு 32 ஓட்டுக்களும், அ.தி.மு.க.,வுக்கு 3 ஓட்டுக்களும், பா.ம.க.,வுக்கு 2 ஓட்டுக்களும் கிடைத்தன. 2 வது சுற்று அடிப்படையில் தி.மு.க., சுமார் 5 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது 4 வது சுற்று எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சுற்று வாரியாக விவரங்களை அறிவிக்கவில்லை. சற்று காலதாமதம் செய்தனர். அவசரப்படாமல் தெளிவாக எண்ணப்பட்டு டேலி ஆனவுடன் அறிவிப்போம் என்றனர். இதனால் அங்கு இருக்கும் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இந்த தேர்தலில் இன்பசேகரன், ( தி.மு.க.,), அன்பழகன் ( அ.தி.மு.க.,) , தமிழ்க்குமரன் (பா.ம.க.,) காவேரி வர்மன் ( தே.மு.தி.க., ) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 31 பேர் போட்டியிட்டனர். அனைத்து கட்சியினரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். கட்சியின் தகுதிக்கு ஏற்றவாறு வாக்காளர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது . கடந்த 27 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. மேச்சேரியில் கார் உடைப்பு தவிர பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லாமல் முடிந்தது.


மக்கள் சாரை, சாரையாக வந்து ஓட்டு போட்டனர் 84.95 சதவீதம் பதிவானது. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 755 ஓட்டுகள் பதிவாகின.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலை விட, 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்னனு ஓட்டு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தர்மபுரி அரசு கல்லூரியில் வைக்கப்பட்டது. இங்கு இன்று காலை 8. 25 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. 14 டேபிள்கள் மூலம் 18 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு சுற்று முடிவுகள் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பதால், பகல் 12 மணிக்குள் வெற்றி வேட்பாளர் யார் என்பது தெரிந்து விடும்.

அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த திருமங்கலம் . வந்தவாசி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் தி.மு.க., தான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசே முட்டுக்கட்டை..

காலையில் அந்த செய்தியை, செய்திதாள்களில் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்...ஒரு அரசாங்கம் இப்படியெல்லாம் பண்ணுமா? தமது மக்களின் வளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இப்படியெல்லாம் ஒரு முட்டுக்கட்டை போட முடியுமா?

எந்த தைரியத்தில் ஹைகோர்ட்டில் அப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்யலாம்?

நளினி என்பவள் யார்? எப்பேற்பட்ட தியாகி?

அவளை விடுதலை செய்ய முடியாது என்று சொல்கிற தைரியம் எப்படி இந்த அரசுக்கு வந்தது?

தமிழகம் ஒரு அமைதிப்பூங்காவாக இருந்தது...ராஜீவ் காந்தி வாக்கு சேகரிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார்..

அவரை மனித வெடிகுண்டு வைத்து கொன்றுவிட்டு, அவ்வளவு பிரச்சினையிலும் கொலையாளி முருகனுடன் இன்பமாக இருந்து ஒரு குழந்தையும் பெற்று அவளை லண்டனில் வளர்த்து வரும் ஒரு மாபெரும் தியாகத்தை செய்து வரும் நளினியை இன்னுமா சிறையில் வைத்து கொடுமைப் படுத்துவது..

அவளை உடனேயே விடுதலை செய்து விட இங்குள்ள ஓநாய்கள் ஓலமிட்டுகொன்டிருந்தன..

இவள் விடுதலை ஆனால் உடனேயே தமிழகத்தில் மாபெரும் தொழில் புரட்சி ஏற்பட்டுவிடும், வறுமை நீங்கிவிடும், வேலை வாய்ப்பு பெருகிவிடும்...இன்னும் எல்லா வளங்களும் தமிழ்நாட்டை வந்தடைந்து இந்தியாவே சுபிட்சமாகி விடும் எனபது போலவும் அந்த கைக்கூலிகள் ஒப்பாரியிட்டுக்கொண்டிருந்தன..

சோனியா காந்தி புண்ணியத்தில் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பிய நளினி, தனது ஆயுள் தண்டனை முடிந்து விட்டதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனு செய்திருந்தாள்..ஆனால் தமிழக அரசு சரியான ஒரு முடிவு எடுத்து அவள் விடுதலை செய்யப் பட வேண்டியவள் அல்ல என்று கூறி இருக்கிறது..

எத்தனையோ அப்பாவிகள், இன்னும் குற்றம் நிரூபிக்கப் படாமலேயே, ஏன் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும்போது, இங்குள்ள சில ஓநாய்கள் ஏன் நளினியை மட்டும் விடுதலை செய்ய ஆலாய்ப் பறக்கின்றன?

தமிழ்நாட்டிலேயே அவள் மட்டும்தான் சிறையில் அவதிப்படுகின்றாளா? இவள் விடுதலையாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அவளுக்கு வக்காலத்து வாங்கும் தேச துரோகிகளுக்கு வேண்டுமானால் கல்லா நிறையலாம்...

இவளுக்காக ஓலமிடும் அந்த ஓநாய்கள் சிந்திக்கட்டும், ராஜீவ் காந்தி மட்டும் கொல்லப்படவில்லை..சுற்றி இருந்தவர்களும் அவருக்கு காவலிருந்த ஏராளமாக காவலர்கள், பொதுமக்களும் மாண்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் உண்டு, குழந்தைகள் உண்டு, ஆசைகள் உண்டு.. அவர்களும் மனிதர்கள்தான்..!

Monday, March 29, 2010

வாழ்க்கை இனிக்க !!!

காத‌ல் வ‌ங்‌கி‌த் துவ‌க்க வே‌ண்டிய அள‌வி‌ற்கு காதலு‌க்கு‌ப் ப‌ஞ்ச‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விடுமோ எ‌ன்று அ‌ஞ்ச வே‌ண்டிய ‌நிலை வ‌ந்து‌வி‌ட்டது. த‌ற்போ‌திரு‌க்கு‌ம் கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பு ஏ‌ற்படு‌ம் ‌சில பல ‌பிர‌ச்‌சினைக‌ளினா‌ல் குடு‌ம்ப உறவுக‌ள் த‌விடுபொடியா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது.


இத‌ற்கெ‌ல்லா‌ம் அடி‌ப்படை‌‌க் காரண‌ம் தா‌ம்ப‌த்‌திய உற‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ச‌ரிவு ‌நிலை எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

எ‌ந்த ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் மரு‌த்துவரை அணுகு‌‌ம் த‌ம்ப‌திக‌ள், தா‌ம்ப‌த்ய உற‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு மரு‌த்துவரை அணுக பெ‌ரிது‌ம் த‌ய‌ங்கு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் மரு‌த்துவ‌ர்களே, இதுபோ‌‌ன்ற ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ‌விள‌க்க‌ம் சொ‌ல்ல மு‌ன்வரு‌‌‌கி‌ன்றன‌ர்.

அதாவது ‌சில ‌விஷய‌ங்களை மா‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் எ‌ன்பதே அவ‌ர்களது முத‌ல் ஆலோசனை. ‌சில‌ த‌ம்ப‌திக‌ள் எ‌ப்போது‌ம் இர‌வி‌ல் ம‌ட்டுமே உறவு கொ‌ள்வா‌ர்க‌ள். தூ‌க்க களை‌‌ப்‌பிலு‌ம், உடலு‌க்கு உற‌க்க‌ம் தேவை‌ப்படு‌ம் நேர‌த்‌திலு‌ம் உறவு கொ‌ள்வதா‌ல் அ‌தி‌ல் ஒரு ச‌லி‌ப்பு ஏ‌ற்படலா‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் காலை‌யி‌ல் கு‌ளி‌த்து முடி‌த்து உடலு‌ம், மனமு‌ம் உ‌ற்சாகமாக இரு‌க்கு‌ம் போது உறவு கொ‌ள்வ‌தி‌ல் ‌நி‌ச்சய‌ம் புது‌விதமான மா‌ற்ற‌த்தை உணர முடியு‌ம்.


அது போலவே, இரு‌ட்டி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள், ‌சி‌றிது வெ‌ளி‌ச்ச‌த்‌திலு‌ம், வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள் லேசான இரு‌ட்டிலு‌ம் உட‌ல் உறவு கொ‌ள்ளலா‌ம்.

எ‌ப்போது‌ம் ஒரே முறை‌யிலான உட‌ல் உறவு கூட ச‌லி‌ப்பை ஏ‌ற்படு‌த்தலா‌ம். எனவே உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் முறைக‌ளிலு‌ம் மா‌ற்ற‌ங்களை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம்.அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக..
உட‌ல் உறவு எ‌ன்றது‌ம் ஒரு ‌சில ‌நி‌மிட‌ங்களே போது‌ம் எ‌ன்று ‌நினை‌க்காம‌ல், அத‌ற்காக அ‌திக நேர‌த்தை ஒது‌க்‌கி கணவ‌ன் - மனை‌வி இருவருமே த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக நட‌ந்து கொ‌ள்வது ந‌ல்லது. உட‌ல் உறவு கொ‌ள்ள இ‌ந்த நா‌ட்க‌ள் ம‌ட்டுமே எ‌ன்று ப‌ட்டிய‌ல் போ‌ட்டு‌க் கொ‌ள்ளாம‌ல் த‌ம்ப‌திக‌ளி‌ன் ஆசை‌‌க்கே‌ற்ப உட‌ல் உறவு வை‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்ல த‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ற்கு வ‌ழிகோலு‌ம்.

ஒருவ‌ர் உட‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் போதோ, அ‌திக களை‌ப்படை‌ந்‌திரு‌ந்தாலோ அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உட‌ல் உற‌வி‌ற்கு அழை‌ப்பதை துணைவ‌ர் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உ‌ங்களது ஆதரவு‌ம், அ‌ன்பு‌ம் அவரு‌க்கு‌த் தேவை எ‌‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம்.

‌பி‌ரி‌ந்‌திரு‌ந்தாலு‌ம் பலன‌ளி‌க்கு‌ம்...

ஒரு ‌சில‌ த‌ம்ப‌திக‌ள் ஒரே அலுவலக‌த்‌தி‌ல் ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் எ‌ப்போது‌ம் கூடவே இரு‌ப்பதா‌ல் ஒரு ச‌லி‌ப்பு ஏ‌ற்படுவது‌ம் உ‌ண்டு. இ‌ப்படியான‌வ‌ர்க‌ள் ‌சில நா‌ட்களு‌க்கு ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது‌ம் (ச‌ண்டை போ‌ட்டு அ‌ல்ல) பெ‌ண் தா‌ய் ‌வீ‌ட்டி‌லோ அ‌ல்லது தோ‌ழி‌யி‌ன் ‌வீ‌ட்டிலோ செ‌ன்று த‌ங்‌‌கி‌யிரு‌க்கலா‌ம்.‌ ‌சில நா‌ட்களு‌க்கு கணவ‌ன் - மனை‌விய‌ர் ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது அ‌ன்பை‌க் கூ‌ட்டவு‌ம் செ‌ய்யு‌ம்.

‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் நா‌ட்க‌ளி‌ல் ம‌ணி‌க்கண‌க்‌கி‌ல் போ‌னி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்காம‌ல் முழுவதுமாக ஒருவரை ஒருவ‌ர் சுத‌ந்‌திரமாக ‌வி‌ட்டு‌விடுவது‌ம் அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌‌க்கு‌ம் அ‌ன்பை ஒருவரு‌க்கொருவ‌ர் பு‌ரிய வை‌க்க ஏதவாகு‌ம்.

கால‌ம் கட‌ந்தவ‌ர்க‌ள்..

தாம்ப‌த்ய‌த்‌தி‌ல் வெறு‌ப்படை‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் த‌ம்ப‌திக‌ள் ஒருவரு‌க்கொருவ‌ர் பே‌சி, ஒரு ‌சில நா‌ட்க‌ள், வார‌ங்க‌ள், மாத‌ம் என ஒரு கால‌க் க‌ட்ட‌த்தை ‌நி‌ர்ண‌யி‌த்து‌க் கொ‌‌ண்டு அதுவரை தா‌ம்ப‌த்ய‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல்லை எ‌ன்று முடிவெடு‌ங்க‌ள். ஆனா‌ல், இ‌ந்த சமய‌த்‌தி‌ல் எ‌ல்லா‌ம் த‌னி‌த்த‌னியாக இரு‌ந்து ‌விடாம‌ல் ஒருவரை ஒருவ‌ர் ‌சீ‌‌ண்டி‌க் கொ‌ண்டிரு‌‌க்கலா‌ம். இதனா‌ல் தா‌ம்ப‌த்ய‌த்‌தி‌ன் ‌மீது ஒரு ஏ‌க்‌க‌ம் ‌பிற‌க்கு‌ம். ஒரு வேளை இ‌ந்த முய‌ற்‌சி‌யினா‌ல், கால‌க் கெடு வரை கா‌த்‌திரு‌க்க முடியாம‌ல் கூட ‌சில த‌ம்ப‌திக‌ள் த‌ங்களது தா‌ம்ப‌த்ய‌த்தை அனுப‌வி‌க்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படலா‌ம்.

எனவே எதையு‌ம் முழு ரசனையோடு‌ம், அ‌ன்போடு‌ம் செய‌ல்படு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் துணை வா‌ழ்‌க்கை‌த் துணையாகு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

இதனாலெல்லாம் சரியாகவில்லை என்றால்..கவுண்டமணி செந்தில் ஜோக்கை போல..ஒரு முழம் மல்லிகைப்பூவும், கால் கிலோ  அல்வாவும்...கொண்டு போங்க..உறவு வந்துச்சா இல்லை உதை விழுந்துச்சான்னு பின்னூட்டத்தில சொல்லுங்களேன்...

                                                                                                              -     நன்றி யாஹூ...

Saturday, March 27, 2010

குஷ்புவின் வெற்றியும் சட்டத்தின் தோல்வியும்...!!

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று பிரபல விபச்சாரி நடிகை குஷ்பு சொன்னதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த நடிகைக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தெரிவித்திருக்கிறார்..காசுக்காக உடலைக்காட்டி, கண்டவனுடன் கட்டிப் புரண்டு நடித்துவிட்டு, பிரபலாமாகி விட்டதால், இந்த கழிசடைகள் ஒன்றும் அறிவாளிகள் இல்லை...கேவலமான வழியில் காசு வந்துவிட்டதால் எதையும் பேசலாம் என்று நினைத்து, திமிர்த்தனமாக பேசி வாங்கிகட்டி கொண்டாள் இவள்.. கதாநாயகனின் மார்பில், தனது மார்பகங்களை ஓங்கி இடிக்கும் ஆபாசக் காட்சியை தமிழ் படங்களில் தொடங்கிவைத்தவள் இந்த கேவலம் பிடித்த குஷ்புதான்... இவளது இந்த பேட்டி வெளியாகி பிரச்சினையாகிக் கொண்டிருக்கும்போதுகூட சிலம்பரசன் என்னும் ஒரு நடிகனுடன் ஹோட்டலில் தங்கி இருந்ததாகக் கூட அந்த சமயம் செய்தி வெளியானது..  இந்த ஈனப் பிறவிக்கு, தமிழக இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் முழு ஆதரவு வேறு...இதனால்தான் இது போன்ற கழிசடைகள் கொழுப்பெடுத்து அலைகின்றன..

சரி மேட்டர் என்னன்னு பார்ப்போம்..

சுந்தர் சி என்பவனுடன் பல நாள் அலைந்து திரிந்துவிட்டு, (அதற்கு முன்பும் அவள் பலருடன் தொடர்பு வைத்திருந்தவள்தான் - அப்படிப் பட்டவள்தான் நடிகையாக முடியும் ) குழந்தை பிறப்பது உறுதியான பிறகு கல்யாணம் செய்துகொண்டவளிடம் வேறு எந்தமாதிரி செய்தியை எதிர்பார்க்க முடியும்..? பத்திரிகை என்ற பெயரில் ஆபாச வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு கேவலம் கெட்ட ஒரு ஜென்மம் இவளிடம் இந்த கேள்வியைக் கேட்டு இருந்து இப்படி ஒரு பதிலை பெற்று அதன் மூலம் வருமானம் பார்த்தான்..

இந்த நடிகை மீது இப்போது வழக்கு நடந்து கொண்டிருந்தாலும், டெல்லி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, இவளை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று சொல்லிவிட்டார்...அவரைச் சொல்லி குற்றமில்லை..காரணம் சட்டப்படிதான் அவரால் தீர்ப்பு சொல்ல முடியும்..

நமது சட்டத்தில் தான் இதுபோன்ற பிறவிகளை தண்டிக்க இடமில்லை..அதனால்தான் தீர்ப்பு அவளுக்கு சாதகமாக வரும்...

இந்த ஓட்டையைப் பயன்படுத்திதான் லேட்டஸ்ட் ஹீரோ நித்யானந்தன் "தான் சட்டத்துக்கு புறம்பான எந்த தவறையும் செய்யவில்லை" என்று ஸ்டேட் மென்ட் கொடுக்க முடிந்தது..

எனவே நமது அரசுதான் இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் விதமாக கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்..

இல்லையென்றால், நமது இந்திய அரசியலின் முன்பு, ஈனப்பிறவிகளான குஷ்பு போன்ற நடிக நடிகைகளும், நித்யானந்தன் போன்ற சாமியார்களும் வெற்றிபெற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்..நமது சட்டம் இவைகள் முன்பு தலைகுனிந்து நிற்கும்...!!!

Friday, March 26, 2010

பிணந்தின்னிகள்..!!!
இன்று உலகெங்கும் தீவிரவாத அச்சுறுத்தல் ஆட்கொண்டிருப்பதர்க்கு காரணத்தை நாம் ஆராய்ந்தால் அதில் ஒரு உண்மையை -

உலக நாட்டாமை என்று தன்னை எண்ணிக்கொண்டிருக்கிற அமெரிக்க ஆட்சியாளர்கள்தான் காரணம் என்பதை மிகத்தெளிவாக உணரலாம்..!

தனது ஆயுத வியாபாரத்திற்காக ஒவ்வொரு அண்டை நாட்டிற்கும் பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த ரவுடிக்கூட்டம்தான், இந்திய பாக்கிஸ்தான், இரான் இராக், பாலஸ்தீன் இஸ்ராயில், மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இன்றுவரை தீராத பிரச்சினைக்கெல்லாம் அடிப்படைக்காரணம்..

இன்னும் இதன் மூலம் ஆதாயம் அடைந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்த பிரச்சினைகள் தீராத வண்ணம், பேச்சு வார்த்தைகளை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றன..இந்தியாவுக்குள் பாகிஸ்தான்காரன் நுழைந்தால் அவனை தாக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு.. பிறகு ஏன் அவன் அமெரிக்காவின் கட்டளையை எதிர்பார்க்கிறான்? பாகிஸ்தானைப் பற்றி இந்தியா ஏன் அமெரிக்கனிடம் புகார் பண்ணவேண்டும்..இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறும் என்று அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை என்று இங்குள்ள அமெரிக்கா அடிமைகளாக வேலை பார்க்கும் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகிறான்..ஏன் இந்தியாவில் உளவுத்துறை இல்லையா? அவர்கள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இப்படி ஒரு செய்தியை வெளியிட ஒரு இந்தியன் நிச்சயம் வெட்கப்படவேண்டும்...இது நமது உளவுத்துறையை அவமானப்படுத்துவது போல இருக்கிறதல்லவா?


இன்னும் ஆப்கானிஸ்தான், இராக், போன்ற நாடுகளில் நடக்கும் வன்முறைகள்- அது அந்நாட்டவரின் உரிமைப்போர்..காரணம் அங்கே அமெரிக்கா ரவுடி அத்துமீறி நுழைந்து, அவனுடைய அடிமைகளை ஆட்சியாளர்களாக வைத்து இருக்கிறான்..அந்த போராளிகளை இங்குள்ள அடிமைப் பத்திரிக்கைகள் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் வர்ணிக்கிறான்..இவன் கூற்றுப்படி பார்த்தால் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவன் தீவிரவாதியா? .உண்மையில் அங்கு தீவிரவாதியும், பயங்கரவாதியும் அமெரிக்கன்தான்..

இதற்கும் முன் "சினிமா நடிகனெல்லாம் தலைவனா?" என்றொரு பதிவில், வைகோ என்பவன் ஒரு தேச துரோகி என்பதை சுட்டிக்காட்டி இருந்தேன்..அதற்கு ஒரு நண்பர் - அவர் பெயர் marutheesan - நீ LTTE விசயத்தில் விமர்சிக்காதே என்று பின்னூட்டமிட்டிருந்தார்...


இலங்கையில் நடக்கும் உரிமைப்போருக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம்? இந்திய ஒரு அண்டை நாடு என்பதால், அங்கு நடுக்கும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கலாம்..அவ்வளவுதான்..அவன் உள்நாட்டுப் பிரச்சினையில் எப்படி தலையிட முடியும்?

இந்த விடுதலைப்புலிகளுக்கு இந்தியா உதவப்போய் நாம் கண்ட பலன்கள் என்ன தெரியுமா?


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டுகள் வைத்து பல அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது..

கோடம்பாக்கத்தில், சகோதர இயக்கத்தைச் சேர்ந்த பத்மநாப உட்பட பல தமிழர்களை சுட்டுக் கொன்றது..

பாண்டிபஜாரில் உமா மகேஸ்வரனுடன் துப்பாக்கி சண்டை நடத்தி பெரும் பீதியைக் கிளப்பியது..

1980 களில் கீழே கிடக்கும் பைகளை எடுத்துவிட வேண்டாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கப் பட்டிருந்தனர்..காரணம் வெடிகுண்டு பயம்தான்..இதற்கும் காரணம் விடுதலைப்புலிகள்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் பிரதம வேட்பாளரான ராஜிவ்காந்தியையும் மற்றும் ஏராளமான தமிழர்களையும், போலீசாரையும்  மனித வெடிகுண்டு வைத்து கொன்றது., அதுவும் அமைதிப்பூங்கா என்று வர்ணிக்கப்பட்ட தமிழகத்திலேயே இதை நடத்திக்காட்டியது யார்? இவர்கள்தானே...

கேட்டால் "அது ஒரு துன்பியல் நிகழ்வாம்!"

அப்படி என்றால் அமைதிப்படையின் தவறையும் "துன்பியல் நிகழ்வு!" என்று எடுத்துகொண்டிருக்கவேண்டியதுதானே?சொந்த நாட்டில் போராடுபவனை, தீவிரவாதி என்றும் வர்ணிக்கும் இந்த அமெரிக்கா அடிமைப் பத்திரிக்கைகள் - இந்தியாவில் கொலைபாதக செயல்களைப் புரிந்த விடுதலைப் புலிகளை - போராளிகள் என்று வர்ணிக்கின்றன..(ராஜீவ் காந்தியை கொன்றதில் அமெரிக்காவின் "CIA" பங்கு உண்டென்பதும் இந்த அடிமைகளுக்குத் தெரியும்).வைகோ என்பவன்,தான் சார்திருந்த கட்சிக்கும், தனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கும், தனது சொந்த நாட்டிற்கும் துரோகம் செய்து, கள்ளதோணி மூலம் விடுதலைப்புலிகளை சந்திக்கச் சென்றான்...இவன் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அன்றைய திமுக தனது ஆட்சியை இழந்தது..ராஜீவ் காந்தியை கொன்றதின் பயனை அந்த விடுதலைப் புலிகள் இன்று அனுபவித்தனர்..அவர்களது போராட்டம் அடக்கப்பட்டது, பிரபாகரன் கொல்லப்பட்டான்...

ஆனாலும்,  வைகோ போன்ற துரோகிகள் இன்னும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறான்..இதன் மூலம் இவன் என்ன சொல்ல வருகிறான்..இப்படி சொன்னால் இவனுக்கு ஒட்டு விழும் என்று எதிர்பார்கிரானா?இல்லாத பிரபாகரனை வைத்து, இந்த வைக்கோவும், குமுதம், ஆனந்த விகடன், நக்கீரன் போன்ற ஆபாசப் பத்திரிக்கைகளும், வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன..அல்லது இந்திய அரசாங்கம்தான் என்ன செய்து கொண்டிருக்கின்றது?பிரபாகரன் இந்திய அரசால் தேடப்பட்டுவரும் ஒரு கொலைக் குற்றவாளி..அவன் இருக்குமிடம் தெரியும் என்று கூறிக்கொண்டிருக்கும் வைகோவை ஏன் இன்னும் கைது செய்து விசாரிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள்? அல்லது அவன் பைத்தியகாரன் போல் உளறுகிறான் என்றால் எதாவது ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் பார்க்கலாம்.

இப்படி தேடப்படும் குற்றவாளிகளை எல்லாம் நமக்கு தெரியும், ஆனால் சொல்லமாட்டேன் என்று ஒரு சாதாரண பொது ஜனம் சொன்னால் இந்த அரசு சும்மா விட்டு விடுமா?

இவனைக் கைது செய்து கடுமையான விசாரணை செய்ய நிறைய ஆதாரங்கள் உள்ளன...விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய கருணாவே தனது கையால் இந்த துரோகிக்கு பணம் கொடுத்ததாகச் சொல்லி இவனை அடையாளம் காட்டி இருக்கிறான்..

ஏனென்றால்..இவனது இரட்டைவேடம் சுலபமாக புலப்படும்...விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்க்கும் ஜெயலலிதாவுக்கு அடிமைச் சேவகம் செய்துகொண்டே இவன் விடுதலைப் புலிகளிடம் பணம் பெறுகிறான்.

இந்தியாவில் ஓட்டுப் பிச்சை எடுத்து, இலங்கை பிரச்சினையை பேசுகிறான்,, உள்நாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு இவனுக்கு ஓட்டுபோடும் மக்களுக்கும் துரோகம் செய்கிறான்..

இது போன்ற பிணந்தின்னிகளை நாம் அடையாளம் கண்டு விரட்டியடித்தால்...இந்தியாவின் ஒருமைப்பாடு நிச்சயமாக காக்கப்படும்..!!

Thursday, March 25, 2010

உலகம் முழுவதும் பள்ளிகளில் பெப்சி (PEPSI) விற்பனை நிறுத்தம்

பெப்சிகோ (புகழ்பெற்ற குளிர்பானம் பெப்சியை தயாரிக்கும் நிறுவனம்) உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இனி தனது கேடு விளைவிக்கும் சக்கரை கலந்த உணவு பொருட்களின் விற்பனையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.உணவு தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் நிறுவனம் பெப்சிகோ. (முதல் இடம் கோக்கோ-கோலா என்பது குறிப்பிடத்தக்கது.) மிரிண்டா(Mirinda), செவென்-அப்(7up), லேஸ்(Lays), க்வார்க்கர்(Quarker) போன்றவை இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் சர்க்கரை கலந்துள்ள பொருட்களை உலகில் 200 நாடுகளின் உள்ள பள்ளிகளில் விற்பனை செய்வதை நிருத்தப்பூவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் இந்த உணவு பொருட்களை உட்கொள்வதினால் பள்ளி பயிலும் குழந்தைகள் அதிக பருமானாதல், சர்க்கரை நோய், இருதய பிரச்சனைகள் போன்ற உடல் கேடுகள் அடைகிறார்கள் என உலக இருதய ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் சக்கரை கலக்காத உணவு பொருட்களான அக்வா ஃபினா (Aqua fina), பால் போன்றவற்றின் விற்பனை தொடரும்.உலக இருதய ஆராய்ச்சிக்கழகம் சென்ற ஆண்டு அறிவுறித்தியதை தொடர்ந்து அமெரிக்க பள்ளிகள் இந்த விதிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன.இந்த விதிமுறையை தொடர்ந்து கோக்க-கோலா நிறுவனமும் எந்த பள்ளியிலும் பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தால் தவிர கலோரி, மற்றும் சக்கரை கலந்த உனையு பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று இம்மாதம் முடிவு செய்துள்ளது ஆனால் அது மேல்நிலை பள்ளிகளுக்கு பொருந்தாது. ஆனால் உலக இருதய ஆராய்ச்சி நிறுவனம் எல்லா கலோரி, மற்றும் சக்கரை கலந்த பொருட்களையும் பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்த அறிவுறித்தியுள்ளது.பெப்சிகோ (புகழ்பெற்ற குளிர்பானம் பெப்சியை தயாரிக்கும் நிறுவனம்) உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இனி தனது கேடு விளைவிக்கும் சர்க்கரை கலந்த, அதிக கலோரியுள்ள உணவு பொருட்களின் விற்பனையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.


உணவு தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் நிறுவனம் பெப்சிகோ. (முதல் இடம் கோக்கோ-கோலா என்பது குறிப்பிடத்தக்கது.) மிரிண்டா(Mirinda), செவென்-அப்(7up), லேஸ்(Lays), க்வார்க்கர்(Quarker) போன்றவை இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாகும்.

இந்த நிறுவனத்தின் சர்க்கரை கலந்துள்ள மேலும் அதிக கலோரியுள்ள பொருட்களை உலகில் 200 நாடுகளின் உள்ள பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் இந்த உணவு பொருட்களை உட்கொள்வதினால் பள்ளி பயிலும் குழந்தைகள் அதிக பருமானாதல், சர்க்கரை நோய், இருதய பிரச்சனைகள் போன்ற உடல் கேடுகள் அடைகிறார்கள் என உலக இருதய ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் சக்கரை கலக்காத உணவு பொருட்களான அக்வா ஃபினா (Aqua fina), பால் போன்றவற்றின் விற்பனை தொடரும்.

உலக இருதய ஆராய்ச்சிக்கழகம் சென்ற ஆண்டு அறிவுறித்தியதை தொடர்ந்து அமெரிக்க பள்ளிகள் இந்த விதிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன இந்த விதிமுறையை தொடர்ந்து கோக்க-கோலா நிறுவனமும் எந்த பள்ளியிலும் பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டால் தவிர அதிக கலோரி, மற்றும் சர்க்கரை கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று இம்மாதம் முதல் முடிவு செய்துள்ளது ஆனால் அது மேல்நிலை பள்ளிகளுக்கு பொருந்தாது.

ஆனால் உலக இருதய ஆராய்ச்சி நிறுவனம் எல்லா கலோரி, மற்றும் சக்கரை கலந்த பொருட்களையும் பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்த அறிவுறித்தியுள்ளது.
 
இதைத்தான் நமது கிரிக்கெட் மாவீரர்களும், அகில உலக சினிமா சூப்பர் ஸ்டார்களும் ( கோடி கோடியாய் பணத்தை பெற்றுக்கொண்டு ) நம்மை குடிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள்...!!!

அசினுடன் என் முதல் அனுபவம்!!!

பொழுது நன்றாகத்தான் விடிந்தது...வழக்கம்போல ஜிம்முக்கு போய்விட்டு குளித்துவிட்டு, அலுவலகத்துக்கு வந்து, எல்லா வேலைகளையும் முடித்து மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பும்வரை எல்லாம் நன்றாகத்தான் நடந்தது..

அப்புறம்தான் என் நண்பன் ஒருவன் பார்க் ஹோட்டலில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு அழைத்தான்..சாதாரணமாக பார்ட்டியில் கலந்துகொள்ளுவதில் சற்று கூச்ச சும்பாவம் உடையவன் நான்..அதிலும் இந்த மாதிரி பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு வரும் நபர்கள் பயங்கர பருப்பு மாதிரி நடந்து கொள்ளுவார்கள்..இந்தியாவுக்கு சம்மந்தமில்லாத கோட்டும் சூட்டும் (அதுக்கு பேர் பார்மல் டிரஸ்ஸாம் ) போட்டுக்கொண்டு, ஏதோ இங்கிலாந்தில் இருந்து குதித்து வந்தமாதிரியும், தமிழ் அப்படீங்கற மொழியப் பத்தி தெரியாத மாதரியும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருப்பார்கள்...அங்கே போன சாராயம் குடிக்க வேண்டும்..அப்படி குடிக்காதவனை ஏதோ தீண்டத் தகாதவனை போல பார்ப்பதும் அந்த ஆங்கிலேய பருப்புகளின் வழக்கம்..

அதனால் நான் மறுத்தேன்..ஆனால் பெரிய பெரிய நடிக நடிகைகள் (அது என்ன பெரிய நடிகன், பெரிய நடிகை? நடிகன்னாலே கூத்தாடிதானே?) எல்லாம் வருவாங்க..என்றான்..என்னதான் கூத்தாடி என்றாலும் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது..சாராயம், சிகரெட் போன்றவைகளை வெறுக்கும் என்னால் இந்த ஜொள்ளு வகையிலிருந்து மட்டும்..ஹி ஹி...

வேற என்ன உடனேயே கிளம்ப வேண்டியதுதானே...

இருக்கிறதிலேயே ஒரு நல்ல டிரஸ்சை அணிந்து கொண்டேன்..அப்புறம் அந்த ஹோட்டலுக்கு உள்ளே போகனும்ன ஷூ போடணுமாம்...ஷூ இல்லே...சரி பரவாயில்லே..நண்பனே கொடுத்தான்..(ரொம்ப நல்லவனா இருக்கானே?)

ஹோட்டல் பிரம்மாண்டமாகத்தான் இருந்தது..இந்த ஹோட்டலில்தான் ஸ்னேஹா என்ற நடிகை அடிக்கடி போலீசில் சிக்குவாளாம் - மனோரமா என்னும் நடிகை..பெரிய அரசியல் தலைவர்களிடம் பேசி விடச் சொல்லுவாளாம்..- இதெல்லாம் என் கற்பனை அல்ல...குமுதம், ஆனந்த விகடன், நக்கீரன் போன்ற ஆபாசப் பத்திரிக்கைகளில் படித்தது..

பார்ட்டி நடக்கும் ஹாலுக்குள் சென்றோம்...ஏராளமான பருப்புகள்....அதுதான் இங்கிலாந்துக்காரனுக்கு பிறந்த (? ) கோட்டு சூட்டு ஆண்களும், கம்புகட்டு அழகிகளும் (ஸ்லீவ்லெஸ் சட்டை போடும் அழகிகள்) குழுமி இருந்தார்கள்..ஆண் பெண் என்ற பேதம் அங்கில்லை..நினைத்துக் கொண்டேன்..பண்பாடு, ஒழுக்கம் எல்லாம் நடுத்தர மக்களுக்குத்தான்..தரையில் வாழும் தரைப்படைகளுக்கும், (அதுதாங்க பிளாட்பாரத்தில் இருக்குமே சில ஜென்மங்கள்) பணத்தில் வாழும் வானரப்படைகளுக்கும் (தரையில் வசிப்பவன் தரைப்படை என்று சொன்னால் மாடியில் வசிப்பவன் வானரப்படைதானே?) இந்த கோட்பாடு பொருந்தாது...தரைப்படைகளுக்கு பக்கத்தில் படுப்பவள் (அல்லது படுப்பவன்)தான் மனைவி (அல்லது கணவன்) அது யாராக இருந்தாலும்....இந்த பணக்கார ஜென்மங்களும் முக்கால்வாசி அப்படித்தான் நடந்து கொள்கின்றன..

சரி அதை விடுவோம்..அந்த கூட்டத்தில் நான் ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டேன்..யாராவது பிரபலமான நடிகனோ நடிகையோ வருகிறார்களா என்று என் கண்கள் அலைந்து கொண்டிருந்தன..அவ்வளவாக நடிக நடிகையர் தென்படவில்லை என்றாலும்...அந்த கூட்டத்தில்..சற்று பளிச்சென்று..இருப்பது..எஸ்..அசின்தான்..நடிகை அசின்...அதுவும் என்னையே பார்த்துக்கொண்டு...நான் பின்னாடி பார்த்தேன்..யாரும் இல்லை..அவள் என்னைத்தான் பார்க்கிறாள்...ஐயோ சிரிக்கிறாள்....என் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்கிறது...எப்படி இது..? ஒரு பிரபல நடிகை என்னை மட்டும் பார்ப்பது எப்படி...நான் அவ்வளவு அழகா?...இப்போது அவன் என்னை நோக்கி வருகிறாள்..நான்.."சுட்டும் விழிச்சுடரே..." பாட்டை கற்பனை செய்து கொள்கிறேன்.....இப்போது என்னை நெருங்கிவிட்டால்...எனக்கு கை கால் நடுங்குகிறது..இது எனக்கு முதல் அனுபவம்..ஒரு நடிகை அதுவும் அழகான நடிகை...அசின் என்னிடம் பேச வருகிறாள்..கிட்டே வந்து .."ஏன் ஒதுங்கி இருக்கே? ...கம் ஆன் யா!" என்று ஏன் கையைபிடித்து இழுக்கிறாள்..எல்லாரும் என்னைப்பார்கிரார்கள்..எனக்கு கூச்சமாக இருக்கிறது....அப்போது அவள் மிகவும் என் அருகில் வந்து..(என்ன சென்ட் பூசுகிறாள்?) மணக்கிறது. உடம்பு நடுங்கிறது...காய்ச்சல் வருவது போல் இருக்கிறது..என்னை கட்டிபிடிக்கிறாள்....ஏன் நான் தடுக்கவில்லை? ..நடிகைகளை கேவலமாகபேசும் எனக்கு இப்போது அவள் அருகாமை கிடைத்ததும் எல்லாம் மறந்து விட்டது...இன்னும் அவள் என்னை நெருங்கி வரும்போது....

ட்ரின்க்க்...ட்ரின்ன்ன்னக்....என்ன அது என் செல் போனா..அதை எடுத்து ஆப் பண்ண முயல்கிறேன் முடியவில்லை....மீண்டும் மீண்டும் அது அடித்தக் கொண்டே இருக்கிறது..ஏன் என்னவாயிற்று எனக்கு.....

ச்சே..திடீரென்று முழித்து விடுகிறேன்..இவ்வளவு நேரம் சத்தமிட்டது அலாரமா...மணி என்ன....ஹ்ம்ம் காலை 8 மணி ஆகிவிட்டதா...அப்போ இவ்வளவு நேரம் எல்லாம் கனவா?

சரி விசயத்துக்கு வருவோம்..

தமிழ்மணம் இணையதளத்தில்..ஒட்டு வாங்க இது போன்ற மொக்கை (மொக்கைதானே? ) பதிவிட்டால்தான் முடியும் என்றார்கள்..அதுதான்..ஹி..ஹி... கன்பார்ம் பண்ணிக்கலாம்னுதான்....

Wednesday, March 24, 2010

நெஞ்சு வலிக்கான தீர்வு - எனக்கு தெரிந்தது..!!!

பச்சரிசியுடன் பாதியளவு உளுந்து, சிறிது தேங்காய் கூட்டி அரைத்து, மூன்றையும் கஞ்சி போலக் காய்ச்சி சர்க்கரையும், ஏலக்காயும் சேர்த்து குடித்து வர மார்பு வலி குணமாகும்.


உளுந்தம் மாவை களியாக கிண்டி சாப்பிட்டு வர நெஞ்சு வலி தீரும். மார்பு படபடப்பு குணமாகும். உடல் பலமடையும்.

உளுந்தம் பருப்பை வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், சேர்த்து பொடியாக்கி நெல்லிக்காய் பொடி சம அளவு சேர்த்து சாப்பிட்டு வர இளமையும், சுறுசுறுப்பும் உண்டாகும்.

இதனை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளும் பொடியாக தினமும் பயன்படுத்தி வர சிறந்த பலன் கிடைக்கும்.

உளுந்தை இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் அதிகாலையில் இந்த நீரை அருந்தி வர சிறுநீர் பெருகும். நீர் கட்டு, நீர்கடுப்பு, நீர் எரிச்சல், முதலியவை குணமாகும்.

உளுந்தின் வேரை நிர்விட்டு மைபோல அரைத்து சூடாக்கி, பொறுக்கக் கூடிய சூட்டில் வைத்துக் கட்டிவர மூட்டு வீக்கம் குணமாகும்.
                                                                       
                                                                                                             - நன்றி : யாஹூ தமிழ்
 
மேற்கூறிய உணவு முறைகளையும் மீறி - ஆஸ்பத்திரி பில்லைப் பார்த்தவுடன் வரும் நெஞ்சு வலிக்கு இந்த முறை அப்ளையாகுமா என்பது உங்களது பொருளாதார நிலையைப் பொறுத்தது..

Tuesday, March 23, 2010

நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!!

சினிமா நடிக நடிகையரின் அந்தரங்க விசயங்களை படிப்பெதேன்றால் நமக்கு அலாதி சுகம்தான்..அந்த வகையில் சிலம்பரசன் நயன்தாராவுக்கு அனுப்பிய சில SMS கள் கீழே..:

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....


2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
   காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?.......
 
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.


4) நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ.... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

5) மூன்று மொக்கைகள்:

 a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?


6) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....


7) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது.....


8) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்  எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

9) True GK Facts:

** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.

** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.

** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.

** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

10) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
 11) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

12) தத்துவம் 2010

"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


13) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!


14) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?


4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........


ஐயோ ஐயோ அடிக்க வராதீங்க...


இது சாதாரணமா எல்லாரும் அனுப்பிக்கிற SMS தான்.. ஆனா தலைப்பை கொஞ்சம் கவர்ச்சியா வெச்சாதானே நெறைய ஹிட்ஸ் வருது..என்னங்க பண்றது?.

Monday, March 22, 2010

கச்சேரி ஆரம்பம் - விமர்சனம்


வெளியூரிலிருந்து பெற்றோரிடம் கோவித்துக்கொண்டு சென்னை வரும் கதாநாயகன் (ஆமாம் எதற்கு வருகிறான்? ) ஒரு விபத்திலிருந்து கதாநாயகியால்  காப்பற்றப்படுகிறான்..அதிலிருந்து அவளையே சுற்றி சுற்றி வருகிறான்..அதன் பிறகு அவனுக்கும் அவன் பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை...பிறகு கதா நாயகி வில்லனால் கல்யாணம் செய்துக்க சொல்லி தொந்தரவு செய்யப்படுவதை அறிந்து அவளை வில்லனிடம் இருந்து காப்பாற்றி கல்யாணம் செய்து கொள்கிறான்..

ஒரு காமெடி காட்சி..அடிக்கடி நாம் டிவிக்களில் பார்க்கலாம்..வடிவேலும் இன்னொரு நடிகனும் நின்று கொண்டிருப்பார்கள்...அந்த வழியாக ஒருவர் உடம்பெல்லாம் இரத்தம் வழிய சென்று கொண்டிருப்பார்..."என்ன இப்படி போகிறாய்? " என்று வடிவேல் கேட்கும்போது, அந்த நபர் சொல்லுவார், "மேலே பிளைட்டிலிருந்து குதித்து விட்டதாக" சொல்லுவார்...வடிவேல் குழம்பிப் போய் நின்று கொண்டிருக்கும்போதே இன்னொரு நபர் கழுத்தெல்லாம் இரத்தமாக வருவான், அவன் சொல்லுவான் "ரயில் தண்டவாளத்தில் படுத்து இருந்ததாகவும், நான்கைந்து ரயில்கள் அவன் கழுத்தில் எறிச்சென்றதாகவும்" சொல்லிவிட்டு சாதாரணமாகப் போய்விடுவான்..அதே போல இன்னொருவன் உடம்பெல்லாம் சேறாக வந்து, தன மீது புல்டோசர் ஏறிச் சென்றதாகவும் சொல்லிவிட்டு செல்லுவான்..


இதுமாதிரி எவ்வளவு பயங்கரமாக தாக்கப்பட்டாலும், சாதாரணமாக எழுந்து வில்லன்களை தாக்கி வசனம் பேசும் ஒரு கதாநாயகன்...

(இந்த வில்லனின் அடியாட்களாக வரும் முட்டாள்கள் எத்தனை படங்களில் நடித்தாலும் திருந்தவேமாட்டான்கள்..எப்போவும் தனித்தனியாகத்தான் வந்து அடிவாங்குரானுங்க )

ஹீரோ எங்கேர்ந்து வந்தாலும் பரவாயில்லை..அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் உடனேயே லவ் பண்ணிவிடும் ஒரு கதாநாயகி..(அவள் கண்டிப்பாக பேரழகியாக இருக்கவேண்டும்)


சென்னையையே தன் கையில் வைத்திருக்கும் ஒரு வில்லன்,,,அழகான கதாநாயகியை பார்த்தவுடன்..வேற எந்த வேலையையும் பார்க்காமல் கதாநாயகியைச் சுற்றி சுற்றியே வருவது...கதாநாயகனை மட்டும் ஒன்றும் செய்யாமல் அவன் சொல்லுவதை எல்லாம் நம்பும் ஒரு முட்டாள் வில்லன்..

எவ்வளவு தான் டுபாக்கூராக இருந்தாலும் இப்படிதான் படம் எடுக்கும் உருப்படாத இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள்

 இப்படிதான் இருக்கும் என்று தெரிந்தும் வேலயத்துபோய் காசை செலவழித்து அந்த படத்தைப்பார்க்கும் ரசிகன் (நாமும்தான் ) .


யாரும் திருந்தபோவது இல்லை..

படத்தின் இறுதிக்காட்சியில் வில்லன் கதாநாயகனிடம் சொல்லும் ஒரு வசனம் :

"நீ கல்யாணம் பண்ணிக்கோ, நல்லா இரு நெறைய புள்ளங்கள பெத்துக்கோ ..ஆனா, அண்ணா சமாதிய பாக்கணும், எம் ஜி ஆர் சமாதியப்பாக்கனும்னு சென்னைக்கு மட்டும் வந்துடாதே"

அதோடு இன்னொரு வசனத்தையும் சேர்த்து இருக்கலாம்..

"இந்த படம் ஓடும் தியேட்டர் பக்கம் யாரும் வராதீங்க !" அப்படீன்னு..

Sunday, March 21, 2010

மீண்டும் மீண்டும் கெட்டுப்போக அலையும் இளசுகள்..

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த பரபரப்பான செய்திகளில் "சினிமா பயிற்சிப் பள்ளி" நடத்திவரும் ஒரு சினிமா இயக்குனரிடம் ஏமாந்த செய்தியும் ஒன்று.

ஒவ்வொருவராக புகார் கொடுக்க வருகிறார்கள்..

சினிமாவில் நடிக்கவைப்பதாகவும், வடிவேல் அளவுக்கு புகழ் பெற வைப்பதாகவும் ஒருவரும், இன்னும் சில பெண்கள் நல்ல வேடம் தருவதாக ஏமாற்றி விட்டதாகவும் பாலியல் தொல்லை தந்ததாகவும் புகார் அளித்து வருகிறார்கள்..

அத்தனை பேரும் அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள்..எதற்காக? சினிமாவில் நடித்தால் நிறைய சம்பாரிக்கலாம், உல்லாசமாக வாழலாம் என்கிற பேராசைதான் காரணம்.

சினிமா எனபது கேவலமாக கருதப்பட்ட காலத்தில், நடிப்பவருக்கு சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தார்கள்..பிறகு கதாநாயகனுக்கு வரும் ரசிகரின் ஆதரவை வைத்து ஒவ்வொரு சினிமா தயாரிப்பாளனும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு இன்று கோடி கோடியாகக் கொடுத்து அத்தனைக்காசையும் மக்களிடம் இருந்து கறந்து விடுகிறான். இப்படி சினிமாக்காரனின் படோபகமான வாழ்கையைப்பார்த்து தாமும் அதுமாதிரி சம்பாதிக்கலாம் என்ற பேராசையில் எதையும் இழக்கத் துணிந்துவிட்டு, ஏமாந்தவுடன் போலீஸ் நிலையம் முற்றுகை, கமிஷனரிடம் புகார், பத்திரிக்கைக்காரனிடம் பேட்டி என்று கண்ணீர் விடுகின்றனர்..

சினிமாவில் சம்பாதித்தவன் சொற்பமே நபர்கள்தான்,,,ஆனால் அந்த கேவலமான தொழிலால் மானம், வெக்கம், இன்னும் வாழ்கையை இழந்தவர் எத்தனை பேர் எனபது கோடம்பாக்கத்தில் இரண்டு நாள் இருந்தால் தெரிந்துகொள்ளலாம்..

சினிமா வாய்ப்பு தேடி வரும் படித்த இளைஞர்கள் ஒரு கூலித் தொழிலாளியைவிட கேவலமாக நடத்தப்படுவதும், அதே போல் சினிமா ஆசையால் வீட்டை விட்டு வாய்ப்பு தேடி வரும் பெண்கள் சீரழிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளி விடப்படுவதும்தான் சினிமாத் தொழிலின் அன்றாட இயல்பு..இதற்கு கலை என்றொரு பெயரை வைத்துக் கொண்டாடுகிரார்கள்..

இன்னும் சில பெண்கள் பெற்றவர்களாலேயே இது போன்ற கேவலங்களுக்கு தள்ளிவிடப்படுவதும் நாம் அன்றாடம் செய்த்திதாள்களில் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

இப்படி இருந்தும் தொடர்ந்து படித்தவர்களும், மற்றவர்களும இந்த சாக்கடையில் போய் விழுவதின் காரணம், இங்குள்ள பத்திரிக்கைகள் தரும் அனவாசிய முக்கியத்துவமும், அதை ஒரு கவர்ச்சியாக காட்டுவதும்தான்..

ஆனால் இங்குள்ள டி விக்களும், பத்திரிக்கைகளும், ஏன் அரசாங்கமும் இதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நிச்சயம் ஒரு பெரும் சீரழிவுக்கு காரணமாகவே இருக்கின்றன..

நான்காவது தூணாக தங்களை பற்றி பீற்றிக்கொள்ளும் இந்த பத்திரிக்கைகள், இந்த சினிமாக்களையும் அதன் கேவலங்களையும் வெளிக்கொண்டுவந்து பொறுப்புடன் நடந்துகொண்டால், மக்கள் கொஞ்சமாவது விழிப்புணர்வு பெற வாய்ப்பு உண்டு.

ஆனால், இங்குள்ள ஆபாசப் பத்திரிக்கைகளுக்கு அந்த தைரியம் உண்டா?

Friday, March 19, 2010

பிரபல நடிகையின் அந்தரங்க வாழ்க்கையும், ஆபாசப் படங்களும்..!!!

இந்த செய்தி உங்களுக்கு ஆச்சரியமாகவும் ஏன் அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம்..எப்படி இந்த விஷயம் வெளியானது என்று உங்களுக்கு ஒரு குழப்பம் கூட ஏற்படும்...

இப்படி ஒரு தலைப்பில் ஒரு போதும் நான் எழுதப்போவது இல்லை..எல்லாம் ஒரு ஆதங்கம்தான்...

"சினிமா நடிகனெல்லாம் தலைவனா?" என்று நான் இதற்கு முன் போட்ட ஒரு இடுகையை நிறையபேர் படிப்பார்கள், பின்னூட்டம் நிறைய  (ஆதரித்தோ, அல்லது விமர்சித்தோ) வரும் என்று நிறைய எதிர்பார்த்தேன்..ஆனால் வரவில்லை..

மன்னிக்கவும் நண்பர்களே..தயவு செய்து அந்த பதிவை படித்து உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்..நான் எழுதியது நியாயமானதா இல்லையா என்பதையும் தெரிவியுங்கள்..

நன்றி.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி..!!

எனக்கு வந்த ஒரு குறுந்தகவல் :

கீழ்க்கண்ட கணக்கை சரியாகச் செய்துவிட்டால் உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரை சரியாக கண்டுபிடிக்கலாமாம்..முதலில் : உங்கள் பெயரின் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கும் முதல் எழுத்தின் எண்ணை எடுத்துக்கொள்ளவும்..உதாரணமாக..m என்றால் 13 . இரண்டாவதாக : .இதனை ஒன்பதால் பெருக்கவும் ..

மூன்றாவதாக : வரும் எண்ணை ஒன்றாகக் கூட்டிக்கொள்ளவும்..(உதாரணம் 13 X 9 = 117, 1 + 1 + 7 = 9) ..

நான்கவதாக : வரும் விடையை 108 ஆல் பெருக்கவும்..

ஐந்தாவதாக : வரும் விடையை மீண்டும் 4802 ஆல் பெருக்கவும்

ஆறாவதாக : வரும் விடையுடன் 7008 ஐ கூட்டவும்

ஏழாவதாக : மொத்த எங்களையும் உங்கள் மொபைல் போனில் new messege பகுதியில் dictionary mode இல் tyep செய்தால் உங்கள் வாழ்க்கைத்துணையின் பெயரை நிச்சயமாகத் தெரிந்துகொள்ளலாம்...!

முயற்சி செய்து பிறகு வரும் விடையை பின்னூட்டத்தில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே..!!