Pages

Tuesday, March 2, 2010

நான் தீவிரவாதி அல்ல..

முதலில் ஒரு முக்கிய வேண்டுகோள்..
என்னதான் என் பதிவு பிடித்தாலும் இல்லாவிட்டாலும் பிளீஸ் நண்பர்களே..ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்களேன்..புண்ணியமாகப்போகட்டும்!

தலைப்பை பார்த்தவுடன் மை நேம் ஈஸ் கான் படத்தின் விமர்சனம் என்று நினைத்தால் ... நினைக்காதீங்க..

இருந்தாலும் மை நேம் ஈஸ் கான் திரைப்படம் இறுதிக்காட்சிகளைத் தவிர, ஒரு சிறந்த காட்சி அமைப்பு, திரைக்கதைகளை உள்ளடக்கிய படம்தான்..ஒரு குறிப்பிட்ட சிலர் செய்யும் தவறுகளால் ஒரு சமுதாயமே தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் அவலத்தை மிக சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள்..அப்புறம் எப்போதும் திரைப்படங்கள் நல்ல செய்தியை சொல்லுவதில்லை என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான்..எனவே..மேட்டர் அதுவல்ல...சாட்டிங் செய்வது பற்றி இணைய நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்..

சாட்டிங் செய்வதற்கு பெரிய திறமை ஒன்றும் தேவை இல்லை..எனக்குத் தெரிந்து எட்டாவது கூட தாண்டாத என் நண்பன் ஒருவன் சாட்டிங்கில் பைத்தியமாக கிடந்து மலேசிய அழகி ஒருத்தியை காதலித்து ஏமாந்த கதை தெரியும். அப்புறம் இன்டர்நெட் சென்ட்டர் வைத்து இருந்த இன்னொரு நண்பர் தன் வருமானம் முழுதும் சாட்டிங் அழகியுடன் (மலேசியாதான்) ஐ எஸ் டி பேசியே தன் கம்பெனியை மூடியதும் மறக்க முடியாத அனுபவம்தான்..

முதலில் ஒரு ஹாய் அப்புறம் asl (age sex location - னாம்) ..இப்படியே போய் என்ன தொழில், என்ன ஹாபீஸ் என்று சுவாரஸ்யமாக போய் (எல்லாம் பொய்தான்) நாளடைவில் தொலைபேசி எண்கள் பரிமாறுதலில் முடியும்..சிலபேர் (பெண்கள்) எவ்வளவு பழகினாலும் மொபைல் நம்பர் தரமாட்டார்கள்..(அவர்கள் நிச்சயம் எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆகத்தான் இருப்பார்கள்..முன்னெச்செரிக்கையாக இருக்கலாம்..

சிலபேர் பெண்களுடன் சாட் செய்து போன் நம்பெரெல்லாம் கொடுத்துவிட்டு...போன் வரும் வரும் என்று காத்திருந்து ஏமாந்து போவார்கள்...அல்லது போன் வரும்..எடுத்துப் பேசினால் ஆணாகத்தான் இருப்பான் ..இப்படி பெண்கள் பெயரில் சாட் செய்து சிலர் திருப்தி அடைந்து கொள்கிறார்கள்..

பெரும்பாலும் ஏமாற்றங்களே மிஞ்சினாலும் இதில் அனுபவம் பெற்ற நண்பர்கள் சிலர் அள்ளி விடும்போது நமக்கும் ஒரு நப்பாசைதான்..யாரவது பெண் நமக்கு கிடைக்கமாட்டார்களா ....

சரி நாமும் சாட் செய்துதான் பார்ப்போமே என்று யாகூ சாட்டுக்குள் நுழைந்து பார்த்தேன்..


சில பெண்கள் ஐ டி யை குறிவைத்து சாட் செய்து பார்ப்போமே...


கிடைத்தது..ஹாய், asl எல்லாம் கேட்டுகொண்டோம்..பிடித்த படங்கள்...பிடித்த நடிகர்கள்...

ஆமிர்கான், சாருக்கான், மாதவன், கமல், ரஜினி..அமிதாப்...அப்பாஸ் இப்படி...ஐ லவ் ஹிம்..என்று ஜொள்ளு வேறு...

கடைசியில் மாட்டருக்கு வந்துவிட்டார்கள்.. " ஆர் யு மாரிட்? "

நமக்குதான் பொய் சொல்லி பழக்கமில்லையே. ".எஸ்.!."


அதன் பிறகு..எந்த பதிலேயும் காணோம்.. என்னடா இது கிரகமே ...


இருந்தாலும் என் முயற்சியை கை விடவே இல்லை..ஆனால் ஒவ்வொரு முறையும் "ஆர் யு மாரிட்?" இந்தக் கேள்விக்கு மட்டும் என்னால் பொய் சொல்ல விருப்பம் இல்லை...என்ன செய்வது "எஸ்!" சொல்லி சொல்லி நெறய பெண்களை இழந்துவிட்டேன்..

இப்படியே போனாலும் ஒரு நாள் ஒரு பெண்மணி இந்த லெவல் வந்த பொது நேரிடையாகவே கேட்டேவிட்டேன்.." ஏன்டா மாரிட் ஆனா பேசமாட்டிங்களா?"

"ஆமா..உனக்குத்தான் மேரேஜ் ஆயிடுச்சே அப்புறம் ஏன் இன்னும் அலையுரே..?"

அது சரி...!

அப்புறம்தான் தோன்றியது..

இவளுங்க சொன்னாளுங்களே மாதவன் (மேடியாம்) ஆமிர்கான், சாருக்கான், கமல், ரஜினி..அமிதாப்...அப்பாஸ்..இந்தமாதிரி நடிகனுங்கனுங்கள லவ் பண்றேன்னு சொல்றதுல அவ்வளவு பெருமையடிச்சுக்கிரீன்களே..அதுக்கு பேரு அலையறது இல்லையா? இல்லை இவனுங்களுக்கெல்லாம் இன்னும் கல்யாணம் ஆகலையா? அவனுங்க இன்னும் இருபது வயசு இளைஞனுங்களா?

சினிமாக்காரனுங்களுக்கு ஒரு நியாயம்..எங்களுக்கு ஒரு நியாயம்களாங்க?

ரொம்ப நல்லாத்தான் இருக்கு..!!!

3 comments :

கோவி.கண்ணன் said...

//சினிமாக்காரனுங்களுக்கு ஒரு நியாயம்..எங்களுக்கு ஒரு நியாயம்களாங்க?

ரொம்ப நல்லாத்தான் இருக்கு..!!! //

அதானே !

:)

பித்தனின் வாக்கு said...

சரி சரி லூசுல விடுங்க. இந்தக் காலத்துப் பெண்ணுகளே லூசுக தானே. அப்புறம் போயி ஏன் சீரியஸ் ஆகிட்டு.

மர்மயோகி said...

ரொம்ப நன்றி திரு கோவி கண்ணன் மற்றும் திரு பித்தன் அவர்களே..
எவ்வளவுதான் கெஞ்சினாலும் ரெண்டு பின்னூட்டங்களுக்கு மேல வரலேயே...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?