Pages

Monday, March 8, 2010

தம்பிக்கு இந்த ஊரு - விமர்சனம்

முன்குறிப்பு : சினிமாக்களால் நன்மை ஏதும் கிடையாது என்கிற கட்சி நான்..!

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பர்களுடன் ஏதாவது ஒரு சினிமாவுக்கு போயி ஆகவேண்டிய கட்டாயம்..பொதுவாக தமிழ் படங்களை தவிர்த்து விடுகிறேன்..எதுவுமே தேறுவதில்லை..எனவே ஹிந்தி அல்லது ஆங்கிலப்படங்கள்தான். அப்படித்தான் நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் ஞாயிறு எதாவது ஒரு சினிமாவிற்கு போகலாம் என்று பார்த்தால் எந்த படத்திற்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.."தம்பிக்கு இந்த ஊரு" என்ற படத்திற்கு மட்டும் மாயாஜால் தியேட்டரில் டிக்கெட் அவைலபிள் ஆக இருந்தது. பரத் நடித்தது.அதுவும் ஞாயிற்றுக் கிழமை டிக்கெட் கிடைக்கும்போதே நான் உஷாராக இருந்திருக்க வேண்டும்..ஹ்ம்ம் தலை எழுத்து.. விதி யாரை விட்டது.?

ஒரு கால் மணி நேரம் தாமதமாகத்தான் போக நேர்ந்தது..!

கதை இதுதான்..



சிங்கப்பூரில் ஹோட்டல் வைத்து நடத்தும் பரத்..சனாகானை கண்டவுடன் வழக்கம்போல் காதல் கொள்கிறான். அவளை அடைவதற்காக பல கேனத்தனமான வழிகளில் முயற்சி செய்து அவள் காதலைப் பெறுகிறான். இதற்கிடையே அவனது தந்தையும்(நிழல்கள் ரவி) , தந்தையின் நண்பரும் சேர்ந்து, அவனுக்கு கல்யாணம் நிச்சயம் செய்கிறார்கள்..பெண் தந்தையின் நண்பரின் மகள். பரத் தன் காதலைப்பற்றி சொல்கிறான். ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, பரத் - வேறு ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவன் என்றும் அவன் தாய் தந்தை இந்தியாவில் வசிக்கிறார் என்ற உண்மையை போட்டுடைக்கிறார்.

சென்னைக்கு வந்த பரத், தன் பெற்றோரை தேடுகையில். ஒரு ரவுடிக்கூட்டத்தினரிடம் இருந்து தனது காதலியை காப்பற்றபோய், (அந்த கூட்டத்தின் தலைவன் பிரபு) பிரபுவின் பகையை சம்பாதிக்கிறான். . - பரத்தை தேடி வரும் பிரபு அவன் நிழல்கள் ரவியின் மகன் என அறிந்து (நிழல்கள் ரவி ஏற்கனவே பிரபுவின் எதிரி) அவனை பழி வாங்க பரத்திற்கு உதவுவது போல நடிக்கிறான். எப்படி? பரத்தின் காதலியை சேர்த்துவைத்து (பரத்தின் காதலி - சனாகான்- பிரபுவின் மற்றொரு எதிரியின் மகள் ) கல்யாணம் செய்து வைப்பதாகக்கூறி நிழல்கள் ரவியையும் அவன் மனைவியையும் இந்தியாவிற்கு வர வைக்கிறாராம்..

இறுதியில் பரத் தனது பெற்றோர் என்று ஒரு சாலையோர பொறுக்கியை (தலைவாசல் விஜய்) சந்திக்கிறான். அந்த பொறுக்கி தனது சேரி புத்தியைக் காண்பித்து, அவனிடம் காசு பறிக்கிறான். இவனது நாய் புத்தியை அறியும் விவேக் (கதாநாயகனின் நண்பன்) அவனிடம் விசாரித்ததில், அந்த பொறுக்கி, பரத்தை ஆஸ்பத்திரியில் இருந்து திருடி நிழல்கள் ரவியிடம் விற்ற உண்மையைச் சொல்கிறான். அவனுக்கு உடந்தை இன்னொரு பெண். இவளும் அந்த சேரியைச் சேர்ந்தவள்தான்.

கடைசியில் பரத் தான் பிரபுவின் மகன் என்ற உண்மையை அறிகிறான். வழக்கம் போல கிளைமாக்ஸில் ஒரு சண்டை இப்படி முடிகிறது கதை.

என்ன தலை சுற்றுகிறதா..உங்களுக்கே இப்படி என்றால் பார்த்த எனக்கு?

அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்கள் இருக்கும்வரை இது போன்ற புளித்துப்போன திரைப்படங்கள் வந்து கொண்டுதானிருக்கும்..


நடிகன்களும் காசை வாங்கிக்கொண்டு, ஒரு குப்பையான கதையில் ஆபாச நடிகைகளுடன் காட்டிபுரண்டால் போதும் என்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்..இவர்களை புறக்கணிக்க வேண்டும்..

பரத், சனாகான் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அபத்தத்தின் உச்சம். விவேக் கொஞ்சம் சிரிக்கவைத்தாலும், வெறுப்புத்தான் மிஞ்சுகிறது. கேணத்தனமான கதை.

இந்தப் படம் மூன்று நாள் ஓடினாலே அதிசயம்.

சேரியைச் சேர்ந்தவர்களைப் பற்றிய உண்மையை விளக்கும் காட்சி மட்டும் ஓகே.பிறந்த குழந்தையை விற்கும் கொடியவர்கள்தான் என்றும் .பிளாட்பாரத்தில் வசிப்பவர்களும், சேரியில் வசிப்பவர்களும், காசுக்காக எதையும் செய்யும் கேவலமானவர்கள் என்ற உண்மையையும் விளக்குகிறது. அவைகள் மனித ஜென்மத்தில் சேராதவை என்றும் நாய்களை விட கேவனமானவர்கள் என்றும் விளக்குகிறது..

மற்றபடி படத்தில் ஒன்றும் இல்லை..

பாரக்காவிட்டால் டிக்கெட் காசும், நேரமும், தலைவலிக்கான செலவும் மிச்சம்..

2 comments :

Kolipaiyan said...

ok all right. you saved my 100 rupees. thanks

மர்மயோகி said...

நன்றி கோழிப் பையரே ....(அது என்னங்க கோழிப் பையன்?)

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?