Pages

Sunday, March 21, 2010

மீண்டும் மீண்டும் கெட்டுப்போக அலையும் இளசுகள்..

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த பரபரப்பான செய்திகளில் "சினிமா பயிற்சிப் பள்ளி" நடத்திவரும் ஒரு சினிமா இயக்குனரிடம் ஏமாந்த செய்தியும் ஒன்று.

ஒவ்வொருவராக புகார் கொடுக்க வருகிறார்கள்..

சினிமாவில் நடிக்கவைப்பதாகவும், வடிவேல் அளவுக்கு புகழ் பெற வைப்பதாகவும் ஒருவரும், இன்னும் சில பெண்கள் நல்ல வேடம் தருவதாக ஏமாற்றி விட்டதாகவும் பாலியல் தொல்லை தந்ததாகவும் புகார் அளித்து வருகிறார்கள்..

அத்தனை பேரும் அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள்..எதற்காக? சினிமாவில் நடித்தால் நிறைய சம்பாரிக்கலாம், உல்லாசமாக வாழலாம் என்கிற பேராசைதான் காரணம்.

சினிமா எனபது கேவலமாக கருதப்பட்ட காலத்தில், நடிப்பவருக்கு சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தார்கள்..பிறகு கதாநாயகனுக்கு வரும் ரசிகரின் ஆதரவை வைத்து ஒவ்வொரு சினிமா தயாரிப்பாளனும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு இன்று கோடி கோடியாகக் கொடுத்து அத்தனைக்காசையும் மக்களிடம் இருந்து கறந்து விடுகிறான். இப்படி சினிமாக்காரனின் படோபகமான வாழ்கையைப்பார்த்து தாமும் அதுமாதிரி சம்பாதிக்கலாம் என்ற பேராசையில் எதையும் இழக்கத் துணிந்துவிட்டு, ஏமாந்தவுடன் போலீஸ் நிலையம் முற்றுகை, கமிஷனரிடம் புகார், பத்திரிக்கைக்காரனிடம் பேட்டி என்று கண்ணீர் விடுகின்றனர்..

சினிமாவில் சம்பாதித்தவன் சொற்பமே நபர்கள்தான்,,,ஆனால் அந்த கேவலமான தொழிலால் மானம், வெக்கம், இன்னும் வாழ்கையை இழந்தவர் எத்தனை பேர் எனபது கோடம்பாக்கத்தில் இரண்டு நாள் இருந்தால் தெரிந்துகொள்ளலாம்..

சினிமா வாய்ப்பு தேடி வரும் படித்த இளைஞர்கள் ஒரு கூலித் தொழிலாளியைவிட கேவலமாக நடத்தப்படுவதும், அதே போல் சினிமா ஆசையால் வீட்டை விட்டு வாய்ப்பு தேடி வரும் பெண்கள் சீரழிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளி விடப்படுவதும்தான் சினிமாத் தொழிலின் அன்றாட இயல்பு..இதற்கு கலை என்றொரு பெயரை வைத்துக் கொண்டாடுகிரார்கள்..

இன்னும் சில பெண்கள் பெற்றவர்களாலேயே இது போன்ற கேவலங்களுக்கு தள்ளிவிடப்படுவதும் நாம் அன்றாடம் செய்த்திதாள்களில் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

இப்படி இருந்தும் தொடர்ந்து படித்தவர்களும், மற்றவர்களும இந்த சாக்கடையில் போய் விழுவதின் காரணம், இங்குள்ள பத்திரிக்கைகள் தரும் அனவாசிய முக்கியத்துவமும், அதை ஒரு கவர்ச்சியாக காட்டுவதும்தான்..

ஆனால் இங்குள்ள டி விக்களும், பத்திரிக்கைகளும், ஏன் அரசாங்கமும் இதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நிச்சயம் ஒரு பெரும் சீரழிவுக்கு காரணமாகவே இருக்கின்றன..

நான்காவது தூணாக தங்களை பற்றி பீற்றிக்கொள்ளும் இந்த பத்திரிக்கைகள், இந்த சினிமாக்களையும் அதன் கேவலங்களையும் வெளிக்கொண்டுவந்து பொறுப்புடன் நடந்துகொண்டால், மக்கள் கொஞ்சமாவது விழிப்புணர்வு பெற வாய்ப்பு உண்டு.

ஆனால், இங்குள்ள ஆபாசப் பத்திரிக்கைகளுக்கு அந்த தைரியம் உண்டா?

2 comments :

கக்கு - மாணிக்கம் said...

//ஆனால் இங்குள்ள டி விக்களும், பத்திரிக்கைகளும், ஏன் அரசாங்கமும் இதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நிச்சயம் ஒரு பெரும் சீரழிவுக்கு காரணமாகவே இருக்கின்றன..//

சாமியாரிடம் போவதற்கும் ,சினிமா ஆசையால் அங்கு ஓடுவதற்கும் என்ன பெரிய வித்யாசம்?
ஆண்களை விட பெண்கள் இதில் மிக மிக பலவீனமாகிவிட்டனர்

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் ?
பெரசென்ட் சார்
aama இந்த போட்டோலாம் என்கையா புடுச்ச ?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?