Pages

Wednesday, March 17, 2010

கிரிக்கெட் கூத்துகள்..

ஐ பி எல் கிரிகெட் மேட்ச் தொடங்கி களைகட்ட ஆரம்பித்து விட்டது... அனைத்து மைதானங்களிலும் கூட்டமோ கூட்டம், உள்ளே ஆட்டம் பாட்டம், டாட்டூஸ் மங்கைகள், முக்கால் பேன்ட் இளைஞர்கள், வெளியே டிக்கெட் கிடைக்காதவர்களின் புலம்பல்.. இவ்வளவுக்கும் நேரில் பார்த்தால், யார் விளையாடுகிறார்கள், யார் பந்து போடுகிறார்கள், யார் கேட்ச் பிடிக்கிறார்கள் என்று கூட தெரியாது...அனாலும் இரு நூறு ருபாய் டிக்கெட்டை, ஆயிரம் ருபாய் கொடுத்து பார்பதற்கும் ஆளாய் பறப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..


நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது (ஏற்கனவே இரண்டு முறை டிக்கெட் கிடைக்காமலும், ஒரு தடவை டிக்கெட் கிடைத்தும் உள்ளே போகமுடியாமலும் ஆகிவிட்டதால்..) டி.வி தான் சரி...ஆக்சன் ரிப்ளே பார்க்கலாம்..அதிலும் வர்ணனைகள் இல்லாமல் பார்த்தால் அவ்வளவாக ரசிக்காது..ஆங்கிலம் புரியாவிட்டாலும் வர்ணனையோடு பார்பதுதான் நன்றாக இருக்கும்...

off the mark, galli போன்றவைகளுக்கு இன்றுவரை எனக்கு அர்த்தம் புரிவதில்லை .., அடிக்கபடாத பந்தை போட்டால், good bowling என்றும், ஒரு சிக்ஸரோ, போரோ போய்விட்டால் "குட் பேட்டிங் " என்று மட்டும்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.. ஒரு பவுலரின் ஐந்து பந்துகளை, பேட்ஸ்மேன் சிக்சும் போரும் ஆக நாரடித்திருப்பான், ஆறாவது பாலில் ஒரு ரன் எடுத்தால்..அந்த பவுலரைப் பற்றி "good come back" என்று சொல்கிறார்கள்..ரன் அவுட் நமக்கு நன்றாகத் தெரியும்..ஆக்சன் ரிப்லேயிலும் அப்படியே..ஆனாலும் இந்த மூணாவது அம்பயரா உக்காந்து இருப்பானுன்களே..அவுங்க எல்லாரும் கெளப் பசங்களா..இல்லே குருட்டுப் பசங்களா...ஏன் இவ்வளவு நேரம் எடுத்துகிரானுங்கன்னு தெரியல...ஒரு வேலை அந்த "decision board" ல ஒரு விளம்பரம் வருமே..அதுல காசு பாக்குரனுன்களா என்னமோ தெரியல..! பந்து ரொம்ப உயரத்தில் போகும்போதெல்லாம் வர்ணனையாளர் "இந்தியா!'' என்று கத்துவான்..ரொம்ப நாளாக எனக்கு ஒரு குழப்பம்..என்னடா இது..ஸ்ரீலங்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுங்களெல்லாம் விளையாடும் போது
 கூட "இந்தியா"ன்னு கத்துரானேன்னு ...அப்புறம்தான் ஒரு நண்பர் விளக்கினார்..அது "இந்தியா " இல்லே "in the air !" அப்படீன்னு...

அப்புறம், ஐ பி எல் 20 / 20 மேட்சுக்கு எப்படி வி வி எஸ் லட்சுமணன், ராகுல் டிராவிட், வாசிம் போன்ற அதிவேக பேட்ஸ்மேன்களை எப்படி  செலெக்ட் பண்ணாங்கன்னு இன்னை வரைக்கும் எனக்கு புரியல.. கிரிக்கெட் மேட்சை பார்க்கும் போது இதில் தனிப்பட்ட திறமை என்றும் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை..ஏனென்றால். ஒரு நாளைக்கு ஒழுங்காக விளையாடும் பேட்ஸ் மேன் மறுநாள் டக் அவுட் ஆகிறான்..அது போல பவுலரும் ஒரு நாள் விக்கெட் எடுக்கிறான் மறுநாள் சொதப்புகிறான்..கிரிக்கெட் அன்றைய தட்ப வெப்ப நிலைக்கு எற்றமாதிரிதான் அமைகிறது.ஏனென்றால்..டாஸ் போடுவதை ஏதோ விழா கொண்டாடுவதுபோல் பெரிதாகக் காட்டுகிறான்..அதுக்கு நாலு பேர் கோட்டு போட்டுக்கிட்டு வந்து ஆளாளுக்கு மைக்க புடிச்சுகிட்டு போஸ் கொடுக்கிரானுங்க...மழை பெய்தால் டக் வொர்த் லெவிஸ் முறைன்னு ஒரு லூசுத்தமான முடிவு வெச்சு இருக்கானுங்க..அந்த டக் வொர்த் லெவிஸ் மட்டும் கைல கெடச்சான் மவனே ...

அப்புறம் இந்த 50, 100 ஸ்கோர் எடுத்துட்டா பேட்ட தூக்கி காட்டுறதும், ஹெல்மெட்டை கலட்டி போஸ் கொடுக்கிறதும் கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது..

முன்பெல்லாம் ஒரு ஓவருக்கு (ஆறு பந்துகளுக்கு) இடையே விளம்பரம் போட்டார்கள்..இப்போது மூன்று பந்துகளுக்கு இடையே ஒரு விளம்பரம்..போகிற போக்கைபார்த்தால்..ஒவ்வொரு பந்துக்கு இடையேயும் விளம்பரம் வந்துவிடும் போலிருக்கிறது..


அதுவும் இந்த IPL போட்டி இடைவேளையில்  களைப்பாக வரும் விளையாட்டு வீரனை, (ஒருவன் முடியை தோள்பட்டை வரை வைத்துக்கொண்டிருக்கிறான்) கொஞ்சம்கூட அவனை ரெஸ்ட் எடுக்க விடாமல் மைக்கை பிடித்துக்கொண்டு தொண தொண வென்று பேசிக்கொண்டு பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறான்...

இவ்வளவு கேனத்தங்கள் இருந்தும் ,( நமது நேரத்தை சாப்பிட்டு சோம்பேறியாக்கும் கிரிக்கெட், அதில் கேம்ப்ளிங் வேறு)..அதில் ஒரு சுகத்தை நம் காசை கொடுத்து அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறோம்...

3 comments :

மங்குனி அமைச்சர் said...

எக்ஸாம் டைம் . பசங்க படிப்பு ???????

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க. என்னதான் இருந்தாலும் இதுவும் ஒரு வைரஸ் பீவர் மாதிரிதான். மிக்க நன்றி.

மர்மயோகி said...

நன்றி மங்குனி, பித்தனின் வாக்கு...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?