Pages

Friday, March 5, 2010

சாத்தானின் வேதம்

நித்யானந்தன் என்கிற சாமியாரைப்பற்றி சன் டி வி இலும், தினகரன், மற்றும் நக்கீரன் பத்திரிக்கைகளிலும் கடந்த இரண்டு நாட்களாக படங்களாகவும் , வீடியோக்களாகவும், செய்திகளாகவும் போட்டு நாறடித்து விட்டாகிவிட்டது. ஏறக்குறைய ஒரு நீலப்பட ரேஞ்சுக்கு இருக்கும் அந்த ஆபாசத்தை, எல்லார் வீட்டுக்கும் கொண்டு சென்றாயிற்று. இவர்களது இந்த சேவைகள் எல்லாம் முடிந்த பின்பு, நமது தமிழக முதல்வர் ஒரு அறிக்கை விடுகிறார்..

அதாவது அருவருப்பான காட்சிகளை பத்திரிக்கைகளிலோ, டி விக்களிலோ அடிக்கடி ஒளிபரப்பபடுவதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இது இளைஞர்களின் மனதில் ஒருவித மாறுதலை ஏற்படுத்திவிடும் என்று ஒரு அறிக்கை..! முத்தமிழ் அறிஞருக்கு, இந்த சாமியாரின் வீடியோ மட்டும்தான் அருவருப்பாக தெரிகிறது போலும்..

வரிவிலக்கு பெறுவதற்காக, பெயரை மட்டும் தமிழில் வைத்துக்கொண்டு வரும் திரைப்படங்களின் ஆபாசம் அருவருப்பாகத் தெரியவில்லை.

தனக்கு நடக்கும் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்ள வரும் நடிகைகள் உடுத்தி வரும் உடைகள் அருவருப்பாகத் தெரியவில்லை..

இவருக்கு நடக்கும் (எப்போதும் நடந்து கொண்டே இருக்கும்) பாராட்டு விழாக்களில் நடனமாடும் நடிகர் நடிகைகளின் ஆபாச அசைவுகள் நடனங்கள் அருவருப்பாகத் தெரியவில்லை..

இவருடைய டி வி யில் ஒளிபரப்பாகி வரும் "மானாட மயிலாட" என்னும் ஆபாச நிகழ்ச்சி அருவருப்பாகத் தெரியவில்லை..

இப்போது இந்த சாமியாரின் வீடியோ மட்டும் அருவருப்பாக உள்ளதாம்...

அதுவும் மூன்று நாட்கள் நன்றாக ஒளிபரப்பி காசு பார்த்த பின்புதான் அது அருவருப்பாக உள்ளதாம்..அப்படியென்றால் அதன் மூலம் வந்த வருமானத்தை என்ன செய்வார்களாம்..?

நல்லாதான்யா ஆடறாங்க நாடகம்..

கலைஞரே ஒரு கதாசிரியர்தானே..!!

4 comments :

ttpian said...

hi...hi...lot of dust in yellow towel!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கலைஞர் வாழ்க

மர்மயோகி said...

நன்றி உலவு.காம் மற்றும் ttpian...

தமிழ் உதயம் said...

இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். கலைஞர் டிவி "இது நமக்கு தோணாம்ம போச்சே"ன்னு வருத்தத்துல இருக்கிறதா வதந்தி.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?