Pages

Friday, December 31, 2010

நிர்வாணமாக போஸ் கொடுக்க ஒருகோடி..


பிரபல ஹிந்தி நடிகையும் மாடலுமான யானா குப்தா என்ற நடிகைக்கு, நிர்வாண போஸ் கொடுக்க ஒரு கோடி சம்பளம் கொடுக்க ஒரு பத்திரிகை முன்வந்துள்ளது.


இங்கிலாந்து நாட்டில் வெளியாகும் ஆண்களுக்கான ஒரு பாத்திரிக்கையின் முன் பக்கத்தில் நிர்வாண போஸ் கொடுக்க இந்த தொகை பேசப்பட்டதாக தெரிகிறது..


மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் .

மேலே உள்ள படங்களைப் பார்த்தால் ஏற்கனவே நிர்வாண போஸ் கொடுத்தாகிவிட்டது..இதற்க்கு மேல் என்ன இருக்கிறது ஒரு கோடிக்கு என்று தோன்றுகிறதல்லவா?

தமிழனுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து...!


இதோ ஆங்கில வருடம் 2010 முடிந்து 2011 வது வருடம் வருகிறது....

ஒவ்வொரு வருடம் ஜனவரி முதல்நாள் வருடப்பிறப்பாக பரவலாக கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவர்களின் வருடப்பிறப்பாக இருந்தாலும் அனைத்து மதத்தினரும் கொண்டாடுகின்றனர். டிசம்பர் 31ஆம் நாள் இரவும் முழுவதும் முழித்திருந்து இரவு 12 மணியானவுடன் வெடி முழக்கத்துடன் கொண்டாட்டம் களைகட்டுகிறது. கிளப்,கலையரங்குகள் என்று பல இடங்களில் ஆண்களும் பெண்களும் இணைந்து நடத்தும் கூத்துக்களுக்கு அளவில்லை. இறக்குமதி செய்யப்பட்ட இக்கூத்துகள் மேலை நாட்டவர்களைவிட படுமோசமாக அரங்கேறுகிறது. நடனஅரங்குளில் மதுக்கள் பரிமாறப்படும் நிகழ்வுகள் சாலைகளில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் உறுமிக் கொண்டு அடுத்தவர் களின் தூக்கத்தை கெடுக்கும் இளைஞர்கள் என்று ஏராளமான சீரழிக்கும் நிகழ்வுகள். இதைத்தவிர வருடப்பிறப்பு கொண்டாடத்தின் மூலம் இவர்கள் சாதித்தது என்ன? டாஸ்மாக் கடைகளில் கொடிகட்டிகப்பறக்கும்  வியாபாரமும் ஒழுக்க கேடான நடனங்களைத் தவிர வேறு என்னதான் இந்த கொண்டாட்டங்களில் கிடைத்தது?
அந்நிய அடிமைத்தனத்தின் வெளிப்பாடாக, நட்சத்திர ஹோட்டல்களிலும், ரேசார்ட்டுகளிலும், கால் சென்டர்களிலும் அதற்கான ஏற்ப்பாடுகளை மும்முரமாக செய்ய தயாராக இருக்கிறார்கள்..

ஸ்லீவ் லெஸ் அழகிகளும், குறுந்தாடி அழகன்களும் ஏதோ புதிய மாற்றத்தை உருவாக்குவதைப் போல அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்..


வருடக்கடைசியில் 31 ம்தேதி 12 மணிக்கு பீர் பாட்டில்களையும் சாராய பாட்டில்களையும் ஏந்திக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துக் கூறி கூச்சலிட்டுக்கொண்டு கூத்தடிப்பதை ஏதோ புதிய சாதனை செய்வதுபோல கொண்டாடுகிறார்கள்..

அடுத்தநாள் கோயில்களிலும் சர்சுகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம்..

புதிய உறுதிமொழிகள்...சிகரெட் பிடிக்கமாட்டேன், சாராயம் குடிக்கமாட்டேன் என்று , சிகரெட் பிடித்துக்கொண்டும், சாராயம் குடித்துக்கொண்டும் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்...

பிறகு....?

வழக்கம்போல குவாட்டருக்கும் துண்டு சிகரெட்டுக்கும் அலையும் எந்த்தனையோ அடிமைகளில் ஒருவராகிவிடுகிரார்கள்...

வேறு புத்தாண்டே இல்லையா?

தமிழ் தமிழ் என்று பீற்றிகொண்டிருப்போரே...உங்களின் தமிழ் புத்தாண்டு தினத்தில் இதெல்லாம் செய்கிறீரோ?

சாராயம் குடிக்கிறீர்களா?


அழகிகளுடன் கும்மாளம் அடிக்கிறீர்களா?

ஆபாச நடிகைகளுக்கு லட்சக் கணக்கில் கொட்டிக் கொடுத்து ஆபாச வியாபாரம் செய்யும் நட்சத்திர ஹோட்டல்களில் குடித்துவிட்டு கும்மாளமிடுவீர்களா ?


மெரீனா பீச்சில் பைக் சர்கஸ் செய்கிறீர்களா?


போக்குவரத்து விதிகளை மீறுகிறீர்களா?


குடிக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்கிறீர்களா?


நைட் பார்ட்டிக்கு சென்றவன் நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேருவானா  என பெற்றவர்களை வீட்டில் தவிக்க வைக்கிறீர்களா?

அப்புறம் எப்படியடா நீங்களெல்லாம் தமிழர்கள்...

ஓஹோ..ஆங்கிலேயனுக்கு அடிமைப்படுவதுதான் தமிழ் பற்றோ?

அப்படி என்றால்...

" wish you a happy new year தமிழா! "

Thursday, December 30, 2010

தொலைக் காட்சிகளின் நம்பிக்கை வியாபாரம் !


மக்களின் நம்​பிக்​கையை வைத்து லாப​கர​மாக வியாபாரம் செய்வது எப்படி என்பதை நமது தொலைக்​காட்சி சானல்க​ளைப் பார்த்​துத்​தான் கற்​றுக்​கொள்ள வேண்​டும். காலை​யில் எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைக​ளைப் பள்​ளிக்கோ கல்லூ​ரிக்கோ தயார் செய்து அனுப்பி​விட்​டுக் கணவரை அலுவலகத்​திற்​குப் புறப்படச் செய்வதற்​குள் குடும்பத்தலைவிக​ளுக்கு போதும் போது​மென்​றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட நேரம் இருப்ப​தில்லை என்ப​தால், தொலைக்​காட்சி​யின் பக்கம் கவனம் செலுத்துவது என்​கிற பேச்​சுக்கே இட​மில்லை.​ அத​னால்​தான் பெரும்​பா​லான சானல்க​ளில் ஆன்மிகம், செய்திகள் போன்ற அனைவ​ருக்​கும் பொது​வான நிகழ்ச்சிகள் அந்த நேரத்​தைப் பங்கு​போட்​டுக் கொள்​கின்றன.
இந்தக் காலை​நேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்​காட்சி​யைத் திருப்​பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குத​லைத் தொடங்கு​கின்றன நமது சானல்கள். பொது​வாக, ஒவ்​வொரு குடும்பத்தி​லும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்த கவலை குடும்பத் தலைவிக​ளுக்கு இருப்ப​துண்டு. இந்தக் கவலை​யைத் தங்க​ளுக்​குச் சாதகமாகப் பயன்ப​டுத்தி, அவர்களது அறியாமையை​யும் நம்​பிக்கையை​யும் காசாக்க முயல்​கின்றன சில வர்த்தக நிறுவனங்கள். உங்கள் பிரச்னை தீர​வேண்​டுமா? இந்தக் கல்லை வாங்​குங்கள், அந்தக் கவசத்தை வாங்​குங்கள் என்று சானல்க​ளில் ஜோராகக் களை கட்டுகிறது இந்த நம்​பிக்கை வியாபாரம். காசு ஒன்றே குறி என்​கிற உன்னத​மான குறிக்கோ​ளோடு, கண்ணை மூடிக்​கொண்டு சானல்க​ளும் இதற்​குத் துணை போவது கொடுமையி​லும் கொடுமை!

விஜய் தொலைக்​காட்சி​யில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை செய்வதற்​காக வரும் நகைக்க​டைக்காரர், போக​ரின் பாஷா​ணம், சித்தர் திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு தங்க​மாக மாறுவது (தெரிந்​தால் இவரே தங்கம் தயா​ரிக்க வேண்டியது​தானே!) என்பது போன்ற ஒன்​றுக்​கொன்று சம்பந்த​மில்​லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்​புப்ப​டுத்​திப் பேசி​யும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்​யூச்சராலஜி, நியூமராலஜி என்று ஏகப்பட்ட 'லஜி'களைக் கூறி​யும், ஏற்கெனவே குழப்பத்​தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்​தில் ஆழ்த்தி​னார்.உங்கள் ஜாதகத்துடன் நகைக்க​டைக்​குள் செல்வது, மாஸ்டர் செக்கப்​பிற்​காக மருத்துவம​னைக்​குச் செல்வ​தைப் போன்றது என்று தனது வியாபாரத்​திற்கு வலு சேர்க்​கும் இவர் சொல்ல வருவது என்ன​வென்​றால், 'எங்கள் கடை​யில், நாங்கள் கூறும் ரத்தினக் கற்களை வாங்கி அணி​யுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்​தும் தீர்ந்துவி​டும்' என்பது​தான். கல் ஒன்று, மாங்​காய் இரண்டு என்பது பழ​மொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து​கொண்ட புது​மொழி!

அதிர்ஷ்டக்கல் வியா​பாரி தனது வியாபாரத்தை முடித்து​விட்​டுச் சென்றவுடன் அந்த இடத்தை விரைந்து நிரப்புகி​றார் கட​வுள் பெய​ரில் கவச விற்பனை செய்​யும் சாமி​யார் வேட​மிட்ட ஒரு வியா​பாரி.​ செல்வச் செழிப்பு, புகழ், நோயற்ற ஆரோக்​கிய வாழ்வு ஆகியவற்​றோடு எதிரிகளை வீழ்த்துவது, விபத்திலி​ருந்து காப்பது, வழக்குக​ளில் வெற்றி பெற வைப்பது போன்ற உப பலன்களை​யும் நல்குகிற​தாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன ஓட்டிகள், வழக்குறைஞர்கள் கவ​னிக்க)​. குழந்தைக​ளுக்​குப் பள்​ளிக் கட்டணம் கூடக் கட்ட முடி​யாத நிலை​யில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்​கிய பின்னர் (கவசம் வாங்க மட்​டும் காசு எங்கி​ருந்து வந்த​தென்று தெரிய​வில்லை!) செல்வச் செழிப்​பில் திளைப்பதாகப் பேட்டி​யும் உண்டு.இதைத் தொடர்ந்து - கண் திருஷ்​டியிலி​ருந்து காக்​கும் மெகா சுரக்ஷா கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளி​லும் குரானி​லும் கூடக் குறிப்பிடப்பட்டி​ருப்பதாகக் கூறித் தங்கள் வியாபாரத்​திற்கு வலு சேர்த்​தார்கள் இந்நிகழ்ச்சி​யில். கல்யாணமா​காத பெண்கள் இதை வாங்கி​னால் உடனே திருமணம் நிச்சயமாகு​மாம் (பலன​டைந்தவ​ரின் பேட்டி​யும் உண்டு). இத்த​னைக்​குப் பிற​கும் நீங்​கள் ஏமாளியாகாமல் இருந்​தால் ஆச்சரியம்​தான்!

மக்கள் தொலைக்​காட்​சிப் பக்கம் போனால், 'உங்க​ளைச் சொட்டை, வழுக்கை, கிரிக்​கெட் கிர​வுண்டு என்று கிண்டல் செய்கி​றார்களா? கவ​லைப்​பட வேண்​டாம், எங்க​ளுக்கு போன் செய்​யுங்கள்' என்று அழைத்​துக்​கொண்டி​ருந்​தார் ஒருவர். ஏதோ காவல்துறையின​ரின் அறி​விப்பு இது என்று நினைத்​தால், அது உங்கள் தவறு. குறிப்​பிட்ட தைலத்தை வாங்​கிப் பூசி​னால், இத்த​கைய கிண்டல் பேச்சுகளிலி​ருந்து தப்​பும் அள​விற்கு உங்கள் சொட்டை, வழுக்கை​யெல்​லாம் மறைந்து முடி கருகரு​வென்று வளரு​மாம். மக்க​ளின் பலவீனங்க​ளில் இது​வும் ஒன்றல்லவா? அதைக் காசாக்க முயல்பவர்க​ளுக்கு உத​விக்​கொண்டி​ருந்தது மக்கள் தொலைக்​காட்சி. நீங்க​ளுமா?

மெகா தொலைக்​காட்சி​யிலோ, கருப்பானவர்க​ளைச் சிவப்​பாக மாற்​றும் மந்திரக் களிம்பு விற்பனை... அந்தக்​கால முனிவர்க​ளின் கடுமை​யான உழைப்​பின் பல​னாம் இது (முனிவர்கள் இதற்காகத்​தான் கடுந்தவம் புரிந்​தார்கள் போலி​ருக்கிறது!). ஜெயா, ராஜ், பொதிகை எனப் பெரும்பா​லான சானல்களை ஆக்கிர​மித்​துள்ள இந்த வியா​பார வில்லங்கங்கள் எவ்வளவு விபரீதமானவை என்பது பற்றி யாருக்​கென்ன கவலை? Magical remedy பற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்று, ஏதோ விதி இருப்ப​தாக, எப்​போதோ, யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம்! அப்படி ஏதாவது இருக்​கும் பட்சத்​தில், அந்த விதி எங்கே தூங்​கிக்​கொண்டி​ருக்கிறது என்ப​தைக் கண்டுபி​டித்​துக் கொடுப்பவர்க​ளுக்​குப் பரிசு அறி​விக்க​லாம்!

கல், தகடு, அதிர்ஷ்டம் என்ற நம்​பிக்கைகள் ஒருபுறம் என்​றால், பங்​குச்சந்தை மீதான நம்​பிக்கை மறுபுறம். இந்த நம்​பிக்கை​யைப் பங்கு​போட்​டுக்​கொண்டு விற்பதி​லும் சளைத்தவையல்ல நமது சானல்கள். வணிகம் வசப்ப​டும் (கலைஞர்), வளாகம் (மக்கள்), வர்த்தக உலகம் (சன் நியூஸ்), மார்க்​கெட் டிப்ஸ் (ஜெயா பிளஸ்) என்று எல்​லாச் சானல்களி​லும் ஏதாவது ஒரு வடி​வில் நுழைந்து விடுகிறது பங்​குச்சந்தை.

எந்தப் பங்கை வாங்க​லாம்? என்ன விலைக்கு வாங்க​லாம்? சந்தை ஏறுமா, இறங்​குமா? என்பது போன்ற கேள்விக​ளுக்​குப் பதில​ளிக்கக் காத்தி​ருக்கி​றார்கள் பங்​குச் சந்தை வல்லுனர்கள். குடுகு​டுப்​பைக்காரன் குறி சொல்வது போல இவர்கள் கொடுக்​கும் பரிந்து​ரையை நம்பி, பங்​குச் சந்தை​யில் பணம் போடுபவர்க​ளைப் பார்த்​துப் பரிதாபப்படாமல் வேறென்ன செய்ய? பங்​குச்சந்தையை​யும் பரிந்துரைகளை​யும் நம்பு​வோர் இருக்​கும் வரை, இந்நிகழ்ச்சிகளை வழங்​கும் சானல்க​ளின் வியாபாரம் அமோகம்​தான்!

எல்லா நம்​பிக்கைக​ளும் ஏதோ ஒருவகை​யில் வியாபாரமா​கிக் கொண்டி​ருக்க, ஜனநாயகத்​தின் மீது மக்கள் கொண்டி​ருக்​கும் நம்​பிக்கை​யும் வியாபாரமா​கிக் கொண்டி​ருந்த​தைச் செய்திக​ளில் பார்க்க முடிந்தது. வாக்காளர்க​ளுக்கு மதுபானம், வேட்டி சட்டை வழங்கப்பட்டதை ஒரு சான​லில் பார்த்த அதிர்ச்சி அடங்​கும் முன்​னரே, வாக்காளர்க​ளுக்கு வழங்குவதற்​காக வைக்கப்பட்டி​ருந்த கட்​டுக்கட்​டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது மற்​றொரு சான​லில் ஒளிபரப்பானது. கட்சிகளுடன் சானல்க​ளும் சேர்ந்து செய்த தேர்தல் வியாபார​மும், நேயர்க​ளின் நம்​பிக்​கையை அடிப்படையாகக் கொண்டதே என்ப​தைச் சொல்லத் தேவை​யில்லை.

என்றே​னும் ஒரு​நாள், இவை​யெல்​லாம் மாறக்கூ​டும்... நம்​பிக்கை வியாபாரிகளிடம் சிக்​காத நாள் கூட வர​லாம்...​ நம்​புங்கள்...!
Wednesday, December 29, 2010

ஆப்பிள் சாப்பிட போறீங்களா ? (கவனமாக இருக்கவும்)

நீங்கள் பேருந்து நிலைய வழியாகச் செல்லும்போது அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் கூடைகூடையாக ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இறங்கும். பழங்களெல்லாம் பாதுகாப்பாய் வைக்கோலால் பொதியப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். மொத்த விற்பனையாளர் அந்தப் பழங்களை இறக்கி, சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகித்துக் கொண்டிருப்பார்.


முன்பு நாம் பார்த்த பழங்கள் மெருகு குலையாதவை. இன்றைய பழங்கள் மெழுகு குலையாதவை. அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மையோடு தீமையையும் செய்து கொண்டிருக்கின்றன.

இன்று பழம் விளைகிற ஊரில் பழத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை. விளைகிற ஊரிலிருந்து பழங்கள் வாகனங்கள், ரயில், விமானமென ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து உலகின் எந்த மூலைக்கோ பயணப்படுகிறது.

வழக்கமாக அமெரிக்கா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, டிராகன், கிவி போன்ற பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.

அந்தப் பழம் கெட்டுப் போகாமல் அது பயணப்படும் காலத்தையும் கால நிலையையும் தாங்கிக் கொள்ளும் விதமாக அது பதப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக பார்க்கப் பளபளப்பாக இருக்கும் விலை உயர்ந்த ஆப்பிள் பழங்கள் ரசாயன மெழுகால் பூசப்பட்டு பொதியப்பட்டவை. கையால் அப்பழத்தைச் சுரண்டிப் பார்த்தாலே அந்தப் பழத்திலிருந்து மெழுகு உதிர்வதைக் காணலாம். பெரும்பாலானவர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களின் பளபளப்பில் அதுவே தரமான ஆப்பிளாகக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். அந்த ஆப்பிள் பழத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு இயற்கைத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட உண்ணத் தகுந்தவையா, ரசாயனப் பூச்சா என யாராலும் பகுத்தறிய இயல்வதில்லை.


ரசாயனப் பூச்சு மெழுகும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்த முறையான ஆய்வும் இல்லை. மக்களுக்கும் அது குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லை.

பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.

இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் தூரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.

மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.

நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர்.

சுத்தப்படுத்தப்பட்ட மெழுகானது சுவையற்றது, மணமற்றது, விஷமற்றது. ஆனால், இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கே உரிய மெழுகைத்தான் இந்த வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை.

பழங்களுக்கு மெழுகு பூச்சிடுவதால் வணிகர்களுக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மெழுகிடுவதால் பழங்களின் எடைக்குறைவைத் தவிர்க்க இயலும்.

பளபளப்பான தோற்றம், பழத்தின் இளமையைக் கூட்டுதல், பழத்தின் நீர்மம் ஆவியாகாமலும் பழம் சுருங்கிவிடாமலும் தடுத்தல், பழத்தின் பருமனைப் பெருக்கிக் காட்டுதல், பூச்சிகளிலிருந்தும் மற்ற காரணங்களாலும் பழம் பழுதடையாமல் காத்தல் என பல அம்சங்கள் அவர்களை இந்த மெழுகிடும் வேலையைச் செய்விக்கின்றன.

உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத பூச்சிடத்தகுந்த சாதனங்கள் விலை அதிகமானவை. அதனால் தரங்குறைந்த மெழுகுகளால் மெழுகப்பட்ட பழங்கள் பல பெரிய நிறுவனங்களின் அலமாரிகளை பளபளப்புடன் அலங்கரிக்கின்றன. அந்தப் பழங்களுக்கு மெழுகோடு ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பெயர்களும் பெருமையுடன் சூட்டப்படுகின்றன.

மெழுகிடப்பட்ட இந்தப் பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்புடைய நோய்களுக்கு வழிவகுப்பதோடு, புற்று நோய்க்குக்கூடக் காரணமாகிவிடும் என்ற மக்களின் அச்சத்துக்கு வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இன்னொரு பக்கம் கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. பணமே முக்கியமாகிவிட்டது. நாட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை.

அந்தந்த ஊரில் விளையும் கொய்யா, மாங்காய், பப்பாளி, வாழை, திராட்சை போன்றவற்றிலேயே நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. அதைப் பறித்த குறைந்த கால அளவுக்குள் அந்தந்த ஊர் மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் உட்கொள்ளலாம்.

பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமிலவாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.

சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தைவிட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறதாம்.

ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம்.

இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.

இந்நிலையில் நாகரிக உலகத்தைப் பார்த்து ஆப்பிளும் மெழுகைப்பூசி தன் அழகை மெருகேற்றிக் கொண்டதோ?

நன்றி "வெளிச்சம்"

Tuesday, December 28, 2010

காதலிக்கு காதலன் தரும் பரிசு..


ஒரு அலுவலகத‌்‌தி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் மேல‌திகா‌ரி, எ‌ப்போது‌ம் சக ஊ‌ழிய‌ர்களை‌த் ‌தி‌ட்டி‌க் கொ‌ண்டே இரு‌ப்பா‌ர். எத‌ற்கு எடு‌த்தாலு‌ம் எ‌ரி‌ந்து ‌விழு‌ந்து கொ‌ண்டு‌ம், ‌வா‌ய்‌க்கு வ‌ந்தபடி த‌ி‌ட்டி‌க் கொ‌ண்டு‌ம் இரு‌ப்பா‌ர். இதனா‌ல் அவருட‌ன் ப‌ணியா‌ற்று‌ம் ஊ‌ழிய‌ர்க‌ள் எ‌ப்போது‌ம் மன வருத்த‌த்துட‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள்.


இதுபோ‌ன்ற சூ‌ழ்‌நிலை‌யி‌ல், ஒருவ‌ர் பு‌திதாக ப‌ணி‌க்கு சே‌ர்‌ந்தா‌ர். அவரையு‌ம் அ‌ந்த மேல‌திகா‌ரி ‌தி‌ட்டி‌த் ‌தீ‌ர்‌த்தா‌ர். ஆனா‌ல், பு‌திய இளைஞ‌னி‌ன் முக‌த்‌திலோ எ‌ந்த பத‌ற்றமு‌ம் இ‌ல்லை, கவலையு‌ம் இ‌ல்லை. எ‌ப்போது‌ம் போல தனது வேலையை அவ‌ர் ச‌ெ‌வ்வனே செ‌ய்து வ‌ந்தா‌ர்.இதனை‌க் க‌ண்டது‌ம் ம‌ற்ற ஊ‌ழிய‌ர்களு‌க்கு ‌மிகவு‌ம் ‌ஆ‌ச்ச‌ரி‌ய‌ம். எ‌ன்ன‌ப்பா அவ‌ர் உ‌ன்னை அ‌ப்படி ‌தி‌ட்டு‌கிறா‌ர். ஆனா‌ல் அதை ‌நீ க‌ண்டுகொ‌ண்டதாக‌க் கூட தெ‌ரிய‌வி‌ல்லையே. எ‌ப்போது‌ம் முக‌த்தை ‌சி‌ரி‌த்தபடியே வை‌த்து‌க் கொ‌ண்டு வேலை செ‌ய்ய உ‌‌ன்னா‌ல் ம‌ட்டு‌ம் எ‌ப்படி முடி‌கிறது எ‌ன்று கே‌ட்டா‌ர்க‌ள்.
இத‌ற்கு அ‌‌ந்த ஊ‌ழிய‌ர் அ‌ளி‌த்த ப‌தி‌ல், அந்தத் தெருவின் முனையில் இரு காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை சுட்டிக் காண்பித்து ‘‘அங்கே பாரு‌ங்க‌ள்! புரியும்’’ என்றார்.அங்கே பார்த்தும் புரியாத விழிகளோடு ‘‘புரியவில்லையே!’’ எனக் குழப்பமாகச் சொன்ன ஊ‌‌ழிய‌ர்‌க‌ளிட‌ம் கேட்டார், ‘‘அந்தக் காதலன் தன் காதலியிடம் ஏதோ ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்கின்றான், தெரிகின்றதா?’’‘‘ஏதோ பரிசுப் பொருள் போல் தெரிகிறது. ஏதோ கோபம் காரணமாக காதலன் எவ்வளவுதான் கொடுக்க முயற்சி செய்தாலும் காதலி அந்தப் பரிசுப்பொருளைப் பெற்றுக்கொள்ளவேயில்லை.’’பு‌திய இளைஞ‌ன் கூ‌றினா‌ன், ‘‘அந்தப் பெண் அந்தப் பரிசை வாங்காதவரை அந்தப் பரிசுப் பொருள் யாருக்குச் சொந்தம்?’’‘நிச்சயம் அது அந்தக் காதலனுக்குத்தான் சொந்தம்’’என்றுசொன்னார்க‌ள்ம‌ற்றவ‌ர்க‌ள்.அப்போது...இந்தப் பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே சொன்னார்.

அதேதான் என் கதையிலும்... மேல‌திகா‌ரி தனது மூர்க்கத்தனத்தையும், கோபத்தையும் என்னிடம் தருவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நான் அதை வாங்கிக் கொள்ளவேயில்லை. அதனால்தான் நான் அ‌ந்த கோப வா‌ர்‌த்தைகளா‌ல் கவலையுற‌வி‌ல்லை. அவ‌ர் எ‌ன்‌னிட‌ம் தந்த கோபத்தை நான் வாங்கிக்கொள்ளவேயில்லை ’’என்றார். இதை‌க் கே‌ட்ட ம‌ற்ற ஊ‌ழிய‌ர்க‌ள் ‌திகை‌த்து‌ நி‌ன்றன‌ர். எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம், அத‌ன் ‌மீது நா‌ம் கா‌ட்டு‌ம் ஆ‌ர்வ‌த்தை‌ப் பொறு‌த்தே அமையு‌ம். எதையு‌ம் நா‌மாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளாம‌ல் ந‌ம்‌மிட‌ம் வ‌ந்து சேராது. அது ‌தி‌ட்டாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி..

நன்றி "வெளிச்சம்" 

Monday, December 27, 2010

இந்த பதிவு பிடித்திருந்தால் சிரியுங்கள்...

அந்த கல்யாணம் திடீரென்றுதான் நடைபெற்றது...


எனக்கு தெரிந்த ஒருவரின் திருமணம்தான்....எனக்கு ஆச்சரியம்...திடீர் கல்யாணம் செய்வதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்...விசாரித்ததில் தான் தெரிந்தது அவனது தாயார் நோய் வாய்ப்ட்டிருக்கிறார்..மரணம் நெருங்கிவிட்டது என்று அஞ்சுகிறார்..எனவே தன மரணத்திற்கு முன்பு தன மகனை ஒரு சொந்தத்தில் மணமுடித்து வைக்க ஆசைப் படுகிறார் என்றும் தெரிந்தது..

எனவே அவசர அவசரமாக அவர் தாயார் விரும்பியபடியே திருமணம் முடிந்ததது..

இது முடிந்து ஏறக்குறைய ஒருமாதம் இருக்கும்.

இது பற்றிய பேச்சு நண்பர்களிடேயே வந்தபோது ஒருவன் சொன்னான்.."ஆமாண்டா..அவங்க அம்மா இறந்து போறத்துக்கு முன்னாடியே அவனுக்கு மேரேஜ் பண்ணிபாக்கனும்னு ஆசைப்பட்டாங்க. அதுதான் அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டாங்க..!"

அடுத்தது இன்னொருத்தன் கேட்டத்துதான் காமெடியா டிராஜடியா என்று தெரிய வில்லை...

"அதுதான் மேரேஜ் முடிஞ்சுடுச்சே ..அவங்க அம்மா ஏன் இன்னும் இறந்து போகலே? "


Wednesday, December 22, 2010

பெற்றோர் கவனத்திற்கு...

ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படும். இதனால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். சிலர் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்று கவலைப்படுவார்கள். முதலில் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.பொதுவாக குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் போதோ, கோபத்தில் இருக்கும் போதோ அவர்களுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களாகிய நாமே கோபத்தில் உள்ளபோது உண்ண மாட்டோம். குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. குழந்தை சாப்பிடவில்லையென்றால் உடனே குழந்தையை சில தாய்மார்கள் மிரட்டுவார்கள். சிலர் பயம் காட்டுவார்கள், சிலர் அடித்து சாப்பாடு ஊட்டுவார்கள்.


குழந்தைகளை மிரட்டும்போது அவர்கள் மன நெருக்கடியும், டென்சனையும் அனுபவிக்க நேரிடும். இதனால் குழந்தைகள் உணவை அறவே வெறுப்பார்கள். அந்த நேரத்தில் எந்த உணவை வாயில் வைத்தாலும் துப்பி விடுவார்கள். அதுபோல் குழந்தை களுக்கு அவசர அவசரமாக உணவு ஊட்டக்கூடாது.


தாயின் அவசரத்திற்கு தகுந்தபடி குழந்தையால் மின்னல் வேகத்தில் சாப்பிட முடியாது. சிறிதளவு உணவு கொடுத்தாலும், பொறுமை யாகவும், நிதானமாகவும் ஊட்ட வேண்டும். முன்பெல்லாம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பாட்டி கதைகள் கூறுவார்கள். (அதற்காக பொய் சொல்லக்கூடாது) குழந்தைகளும், ஓடி, ஆடி விளையாடி உணவருந்தும். ஆனால் இன்று பாட்டியும் இல்லை, கதை சொல்ல யாரும் இல்லை.


தொலைக்காட்சியும், சி.டியும், வீடியோ கேம் தான் பாட்டியாக உள்ளது. பொருள் தேடுவது அவசியம்தான். ஆனால் குழந்தை வளர்ப்பு அதைவிட அவசியம். குழந்தைகளை இயந்திரமாக நினைக்காமல் அவர்களை ஜீவன்களாக நினைத்து உணவு முதல் எல்லாவற்றிலும் அக்கறை எடுத்துக்கொண்டால் தான் எதிர்கால குழந்தை ஆரோக்கிய மானதாகவும், அற்புத குணம் கொண்டதாகவும் வளரும்.


ஒரு வயது ஆரம்பம் முதல் ஒருநாளைக்கு 4 முதல் 5 முறை வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 1 வயது முதல் குழந்தைகளுக்கு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் அதன் சுவையை அறியாமல் குழந்தை சாப்பிடாமல் துப்பும் அல்லது வாந்தி எடுக்கும். இதனால் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்று எண்ணி பழக்கப்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது.

பொறுமையோடு மீண்டும் மீண்டும் கொடுத்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் அதன் சுவை குழந்தைக்கு பிடித்து விருப்பத்தோடு சாப்பிட ஆரம்பிக்கும். உணவை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். இந்த திடமான உணவுகள் குழந்தைக்கு செரிமானம் ஆக 3 மணி நேரமாவது ஆகும். எனவே அடிக்கடி உணவைத் திணிக்கக் கூடாது. ஆவியில் வேகவைத்த மாவு உணவுகள், அதாவது இட்லி, இடியாப்பம், வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, நன்கு வேகவைத்த முட்டை, ஆவியில் வேகவைத்த நேந்திரம் பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.


மிளகு கலந்து குழைய வேகவைக்கப்பட்ட வெண்பொங்கல், குழைத்த சாதத்துடன், மோர், இரசம், பருப்பு, கடைந்த கீரை இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து கொடுக்க வேண்டும். வேகவைத்து மசித்த காய்கறிகள், வேகவைத்த காரட், வேகவைத்த ஆப்பிள் போன்றவற்றை கொடுக்கலாம். இரவில் காய்ச்சிய பால் கொடுக்க வேண்டும். ஒன்றரை வயதுக்கு மேல் நன்கு வேகவைத்த ஆட்டிறைச்சி, ஈரல், மீன் போன்ற மாமிச உணவுகளை சிறிதளவு கொடுக்கலாம்.


சப்பாத்தி, ரொட்டி, பிரட் போன்றவற்றை குறைந்த அளவு கொடுக்கலாம். குழந்தைக்கு பல் முளைத்து மென்று சாப்பிடும் அளவு வந்தவுடன் வேகவைத்த பருப்புகள், தானிய வகைகளைக் கொடுக்க வேண்டும். காரட், காலிபிளவர், பசலை கீரை, வேகவைத்த முட்டை தொடர்ந்து கொடுக்க வேண்டும். பழத்துண்டுகள் தோல் நீக்கி கொடுக்க வேண்டும். பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றையும் கொடுக்கலாம். சாப்பிட மறுக்கிறார்கள் என்பதற்காக செயற்கையாக சுவைகூட்டிய துரித உணவுகளை தொடர்ந்து கொடுத்து வந்தால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுத்த பெற்றோர்களாக நாம் ஆகிவிடுவோம் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

நன்றி :  "வெளிச்சம்"Tuesday, December 21, 2010

பிரபல நடிகை சுற்றிவளைப்பு...!!!

இவர் யார் தெரிகிறதா?
இவர்தான் முஹம்மத் ஹனீப்..இந்தியரான  இவர் ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் தீவிரவாதி என்று தவறுதலாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து இந்தியாவுக்கே திருப்பி அனுப்பபட்டார்..

இதோ இன்று எல்லாமே சரியாகி விட்டது..மீண்டும் முஹம்மது ஹனீப் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்...ஏறக்குறைய ஒரு மில்லியன் டாலர் நஷ்ட ஈடு தருவதாக ஆஸ்திரேலியா அரசு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இன்று ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்காக சென்றுவிட்டார்..

இது முடிந்து போன விஷயம்..

அடுத்த விசயத்துக்கு வருவோம்...மாலைமலர் என்ற பத்திரிகையில் வந்த ஒரு செய்தி.


"விக்கி லீக் நிறுவனர் அசாங்கேயின் காதல் லீலை: 16 வயது பெண்ணை கர்ப்பம் ஆக்கினார்"

உலக நாடுகளுக்கெல்லாம் ரவுடியாக இருந்து, அணு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக ஒவ்வொரு நாட்டிலும் அத்துமீறி அராஜகம் பண்ணிக்கிட்டு இருந்த அமெரிக்காவின் பொறுக்கித்தனங்களையும், தூதர்கள் என்ற பெயரில் ஒவ்வுறு நாட்டிலும் உளவு வேலை செய்து வந்ததையும் ஆதாரத்தோடு வெளியிட்ட அசாங்கேயை உலகமே ஆச்சரியாமாக பார்க்கும்போது, இங்குள்ள ஆபாசப் பத்திரிகைகளுக்கு கிடைத்த தலைப்பை பார்த்தீர்களா?அமெரிக்காவின் அராஜகங்களையும் அத்துமீறல்களையும் ஒரு செய்தியாகக் கருதாமல், அசாங்கேயைப் பற்றிய செய்தி உண்மையா, இல்லை அமெரிக்க அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையா என்று கூட ஆராயாமல் அவனது கைக்கூலி போலவே செய்தி வெளியிடும் இந்த ஆபாச பத்திரிக்கைகளால் நாட்டுக்கு என்னதான் பிரயோஜனம்?

நாட்டில் விலைவாசி, ஊழல், ரவுடியிசம், , விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம், ஆர் எஸ் எஸ் மதவெறி பயங்கரவாதம் என்று எவ்வளவோ பிரச்சினைகள்  இருக்க..இப்படி அடுத்தவன் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் கேவலத்தை இந்த பத்திர்க்கைகள் செய்கின்றன..

 

ஓகே இப்போ முக்கியமான தலைப்புக்கு வருவோம்...(???)"பிரபல நடிகை முற்றுகை..!!! தர்கா முன் கார் சேதம்..! " இது நான் இன்று இதே மாலை மலர் பேப்பரில் முக்கிய செய்தியாகப் பார்த்தேன்...

சும்மா தலைப்புக்காகத்தான் இதையும் வைத்தேன்..(சீரியஸா தலைப்பு வெச்சா யாரும் பாக்குறது இல்லை..நடிகைன்னா நிச்சயமா வருவீங்கதானே) மற்றபடி இந்த நடிகைக்கும் அந்த தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை.. 

Monday, December 20, 2010

நாளிதழில் இடம்பெற்ற பயனுள்ள செய்திகள்.

1. கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மொபைல்போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


இதுகுறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது:மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.


ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.இவ்வாறு லீகா கூறினார்.

-------------------------------------------------------------------------------------------------------------
2. திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் பெறும் மாறுதல் ஏற்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிரா பட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.


திருமணத்திற்கு முன், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஆண்கள், திருமணத்திற்கு பின், அந்த செயல்களை அறவே தவிர்க்கின்றனர். அவர்களிடம் உள்ள முரட்டுத்தனம் மாறி, மென்மையானவர்களாகவும், இனிமையாக பழக கூடியவர்களாகவும் மாறுகின்றனர். பொய் சொல்வதை தவிர்க்கின்றனர்.பிறர் தவறு செய்யும் போது, அதை மன்னிக்கும் பக்குவமும் அவர்களிடம் வந்து விடுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற திருமணமாகாத 29 வயது ஆண்களில் 1.3 சதவீதம் பேர் முரட்டுத்தனமாகவும், சமூக விரோத போக்கை கடைபிடிப்பவர்களாகவும் இருந்தனர். அதே வயதில் திருமணமான 0.8 சதவீதம் பேர் மட்டுமே இந்த குணங்களை கொண்டிருந்தனர்.பரம்பரை மற்றும் வளர்ப்பு சூழல் காரணமாகவும் குழந்தையிலிருந்தே முரட்டுதனமான குணங்களை கொண்டிருந்தவர்களும் திருமணத்திற்கு பிறகு மாறுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து, இந்த ஆய்வில் பங்கேற்காத அல்பேனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரெயான் கிங் கூறியதாவது:திருமணத்திற்கு பின், ஆண்கள் மாறுகின்றனர் என்பது உண்மை தான் என்றாலும், அதற்கான காரணம் தான் புரியவில்லை. திருமணத்திற்கு முன்பு ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது உள்ளிட்ட பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். முரட்டுத்தனமான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் இதுவே காரணம். அவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இந்த தொடர்புகளை அவர்கள் துண்டித்து கொள்கின்றனர். எனவே, அவர்களின் குண மாற்றத்திற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ரெயான் கிங் தெரிவித்தார்.

--------------------------------------------------------------------------------------------------


3, மாற்றுத் திறனாளியான மேடைப் பேச்சாளர் பெனோசெபின்: நான் பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி என்பதால், எனக்கான உலகம் எப்போதும் கறுப்பாகவே உள்ளது. பெற்றோர், அக்கா, மாமா, ஆசிரியர்கள், நண்பர்கள் இல்லையெனில், நான் வெளிச்சத்திற்கு வந்திருக்க முடியாது.லிட்டில் பிளவர் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில், பார்வையற்றோர் பிரிவில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்தேன். ஆனால், அதற்கான அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவில்லை. மற்ற மாணவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டங்கள் தான் எங்களுக்கும். அவற்றைப் படித்து, மாநிலத்திலேயே முதல் இடம் பிடிப்பது என்பது பெரிய விஷயம்.இது குறித்த கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தேன்; நான் அங்கீகரிக்கப்பட்டேன். பின், அமெரிக்காவில் நடந்த இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றேன். அந்த மாநாட்டில் பங்கேற்ற ஒரே மாற்றுத் திறனாளி நான் தான். பார்வையற்ற முதல் இளம் தலைவராகவும், என்னைத் தேர்ந்தெடுத்தனர்.அங்கு, சுற்றுச் சூழல், கல்வி, இந்தியக் கலாசாரம் ஆகியவற்றை குறித்த என் பேச்சிற்கு, நல்ல வரவேற்பும், மரியாதையும் கிடைத்தது. அது என்னை இன்னும் உத்வேகம் கொள்ள வைத்தது. கல்லூரியில் சேர்ந்த பின், தமிழ் மீதும், ஆங்கிலம் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. அதுவரை பொழுது போக்கிற்காக படித்தாலும், இலக்கிய வகுப்பில் சேர்ந்தபின், இரண்டு மொழி படைப்புகளையும் பொருத்திப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இரண்டிலும் நல்ல ஆளுமை பெற்றேன்.இதுவரை, 120 மேடைகளுக்கு மேல் உரை நிகழ்த்தி இருக்கிறேன். மாநில அளவில் தமிழ் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள் தேசிய அளவில் அவ்வளவாக நடத்தப்படுவது இல்லை என்றாலும், காத்திருக்கிறேன். நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு தயாராகி வருகிறேன்.

------------------------------------------------------------------------------------------------------

4. ரயில்வே கண்காணிப்பு துறை வேண்டுகோள்: "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் அனுமதி இல்லாத ஏஜென்டுகளிடமும், இடைத்தரகர்களிடமும் டிக்கெட் வாங்கி பயணம் செய்தால், கண்காணிப்பு சோதனையில் மாட்டிக் கொண்டு, அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அனுமதி இல்லாத ஏஜென்டுகள் மற்றும் இடைத்தரகர்களிடம் டிக்கெட் வாங்கி, ரயிலில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்' என்று தெரிவிக்கப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------

5. தமிழக பள்ளிகளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் சினிமா "குத்து டான்ஸ்'களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. மாணவர்களிடம் மாறுதலை ஏற்படுத்தும் இதற்கு, பள்ளிக்கல்வித்துறை தடை விதிக்க வேண்டும். தற்போதைய சினிமா பாடல்களில் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாடல்களே பள்ளிகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் அதிகம் இடம்பெறுகின்றன. பிஞ்சுகளிடம் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ள சினிமா பாடல்களுக்கு, பள்ளி மாணவர்களை நடனமாட வைக்கும் போக்கிற்கு தடை விதிக்க வேண்டும். அறிவுக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சிகளை பயன்படுத்த வேண்டும். இது தவிர பல திறமைகள் வெளிப்படுத்துதல் போன்றவற்றை வளர்க்க முன் வர வேண்டும்.


"இலவச" மோசடிகள்.. !!!

உலகில் எங்கேயும் இல்லாமால் இந்தியாவில்தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் இலவசத்துக்கு அலையும் மக்கள் இருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்லலாம்..இங்கேதான் எல்லாவிதமான ஏமாற்று வேலைகளையும் செய்துவிட்டு, இலவசங்களைக் கொடுத்து ஆட்சியை பிடிக்க முடிகிறது..

இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச ரேசன் பொருட்கள், மற்றும் இலவச நிலம் என்று நமது பணத்தை நமக்கே கொடுத்து நம்மை ஏமாற்றி வரும் ஆட்சியாளர்கள் ஒரு புறம் என்றால்...

தமிழகத்தின் ஆபாசப் பத்திரிக்கைகளும் அதையேதான் செய்து வருகின்றன..

தினத்தந்தி வாங்கினால் காலண்டர் இலவசம் என்கிறான்,,,தினகரன் வாங்கினால் காலண்டர் இலவசம் என்கிறான்..சரிதான் என்று பேப்பர் வாங்கினால் மூன்று ருபாய்க்கு விற்கும் தினத்தந்தி அன்று மட்டும் ஏழு ரூபாயாம்,..இரண்டு ரூபாய்க்கு விற்கும் தினகரன் ஏழு ரூபாயாம்..ஏன் இந்த விலையேற்றம் என்றால் இலவசமாக காலண்டர் கொடுக்கிறானாம்..அப்போ என்ன மயிருக்கு இலவசம் என்று அறிவிக்கிறாய்..இல்லே உன் கிட்டே எவனாவது காலண்டர் கொடுடான்னு கேட்டாங்களா...

இப்படிதான் சினிமாக்காரிகளின் ஆபாசப் படங்களைப் போட்டு பிழைப்பு நடத்தும் ஆனந்த விகடன் குமுதம் போன்ற ஆபாச பத்தரிக்கைகள் தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் அதிக பக்கம் அதே விலை என்று ஒரு ஏமாற்று விளம்பரம் கொடுத்து வியாபாரம் செய்வான்..


என்னடா அதிக பக்கங்களில் ஏதாவது நல்ல செய்தி இருக்குதா என்று பாரத்தால், அது அத்தனையும் விளம்பரம்தான்..இன்னும் சொல்லப்போனால்
மற்ற நாட்களில் வரும் செய்திகளை விட மிகவும் குறைவான பக்கங்களில்தான் செய்திகளும் இருக்கும்..மற்ற பக்கங்களில்
செய்திகள் எல்லாமே எவளாவது சினிமாக்காரி தொறந்து போட்டுக்கிட்டு, நான் சாதிச்சுட்டேன் (இது சாதனையா? ) என்று பேட்டி (பெட்டி?) கொடுப்பாள்...இதே மாதிரி நீங்களும் நாரிப்போங்க என்று இவன் சொல்லாமல் சொல்லி அவளுக்கு விளம்பரம் கொடுப்பான்..

இவைகள்தான் இன்றைய பத்திரிக்கைகளின் மக்கள் சேவை..


இலவசம் என்பதே ஒரு ஒட்டுமொத்தமான ஏமாற்று வேலைதான்..

Saturday, December 18, 2010

போலீஸ்காரராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்..

கு‌ற்ற‌ச் செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடுபவ‌ர்களை ‌திரு‌த்‌தி ந‌ல்வ‌ழி‌க்கு கொ‌ண்டு வருவதுதா‌ன் கா‌வ‌ல் துறை‌யின‌ரி‌ன் வேலை... ஆனா‌‌ல் அ‌ந்த‌க் காவல் துறையே இ‌ப்படி நட‌ந்து கொ‌ண்டா‌ல் எ‌‌ப்படி?
சே‌த்து‌‌ப்ப‌‌ட்டு ‌ஹாரிங்டன் ரோடு சி‌க்ன‌ல் அருகே ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்தபோது ‌த‌ண்‌ணீ‌ர் கே‌ன்களை ஏ‌ற்‌றி‌க் கொ‌ண்டு ஒரு ‌மி‌னி டெ‌ம்போ வ‌ந்தது.அ‌ப்போது ஓ‌ய்வறை‌யி‌ல் ஓ‌ய்வு எ‌‌டு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர் ஒருவ‌ர்,அ‌ந்த ‌மி‌னி டெ‌ம்போவை பா‌ர்‌த்து‌வி‌ட்டா‌ர். ஓடோடிச் செ‌ன்று அ‌ந்த வாக‌ன‌த்தை ம‌றி‌த்து,மிர‌ட்டு‌ம் தொ‌னி‌யி‌ல் ஒரு த‌‌ண்‌‌ணீ‌ர் கேனை கொடு‌த்து‌வி‌ட்டு செ‌ல் (இலவசமாக) எ‌ன்று சொ‌ன்னது‌ம், வ‌ண்டி‌யி‌ல் இரு‌ந்த வா‌லிப‌‌ர் ஒருவ‌ர் ஒரு த‌ண்‌ணீ‌ர் கேனை தனது தோ‌ளி‌ல் சும‌ந்தபடி அ‌ந்த ஓ‌ய்வறை‌யி‌ல் வை‌‌த்து ‌வி‌ட்டு செ‌ல்‌கிறா‌ர். இது  நே‌ரி‌ல் க‌ண்ட ஒரு    கா‌ட்‌சி.

இது ஒரு சாம்பிள்தான்! இ‌ப்படி செ‌ன்னை‌யி‌ல் எ‌த்தனையோ இட‌ங்க‌ளி‌ல் இத்தகைய விதவிதமான மிரட்டல் பறிப்புகள் நட‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு ஒரு ‌நிறுவன‌த்‌தி‌ல் இரு‌ந்து எ‌ண்ணெ‌‌ய் உ‌ள்பட அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்களை ஏ‌ற்‌றி‌க் கொ‌ண்டு செ‌ன்றது ஒரு ‌மி‌னி டெ‌ம்போ. அ‌ந்த வாகன‌‌த்தை ‌நிறு‌த்‌திய போ‌க்குவர‌‌த்து காவ‌ல‌ர் ஒருவ‌ர் 2 ‌லி‌ட்ட‌ர் எ‌ண்ணெ‌யை கொடு‌த்து‌வி‌ட்டு போ எ‌ன்ற ‌மி‌ர‌ட்ட, அதைத் தொட‌ர்‌ந்து அ‌ந்த ஓ‌ட்டுந‌ர் 2 ‌லி‌ட்ட‌ர் எ‌ண்ணெ‌ய் பா‌க்கெ‌‌ட்டை கொ‌டு‌த்து ‌வி‌ட்டு செ‌ன்று ‌வி‌ட்டா‌‌ர்.

ஓ‌சி‌யி‌ல் ‌தினமு‌ம் ‌பிழை‌ப்பு நட‌த்துவதுதா‌ன் பெரும்பாலான போ‌க்குவர‌த்து காவலர்க‌ளி‌‌ன் வேலை எ‌ன்று அ‌ந்த வாகன‌த்‌தி‌‌ன் ஓ‌ட்டுந‌ர் சொ‌ல்‌கிறா‌ர். பல மாத‌ங்களாக ‌இ‌ந்த ‌பிழை‌ப்பு நட‌த்‌‌தி வரு‌ம் அ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ரி‌ன் செயலை ‌நிறுவன‌த்‌திட‌ம் சொ‌ல்‌லி இரு‌க்‌கிறா‌ர் ஓ‌‌ட்டுந‌ர். ''இ‌னிமே‌ல் அ‌ந்த காவலரு‌க்கு எ‌ண்ணெ‌ய் கொடு‌க்க வே‌ண்டா‌‌ம்'' எ‌ன்று கூ‌றி அனு‌ப்‌பியது அ‌ந்த ‌நிறுவன‌ம்.

வழ‌க்க‌ம் போ‌ல் அ‌ந்த வாகன‌ம் கு‌றி‌‌ப்‌பி‌ட்ட‌இடத்‌தி‌ல் வரு‌ம் போது ‌நிறு‌த்திய அ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர், அதே 2 ‌லி‌ட்‌ட‌ர் எ‌ண்ணெ‌ய் கொடு டயலாக்கை எடுத்த்விட்டுள்ளார். ஆனால் கொடு‌க்க மறு‌க்‌கிறா‌ர் அ‌ந்த ஓ‌ட்டுந‌ர். உடனே ஆ‌‌‌த்‌திர‌த்‌தி‌ன் உ‌‌ச்‌சி‌க்கே செ‌ன்ற அ‌‌ந்த காவல‌ர், வ‌‌ண்டி‌யி‌ன் ஆர்சி பு‌க்,லைசெ‌ன்‌ஸ், இ‌ன்சுர‌‌ன்‌ஸ் பு‌க் ஆ‌கியவ‌ற்றை கொடு எ‌ன்‌கிறா‌ர்.அனை‌த்து‌ம் ச‌ரியாக இரு‌க்‌கிறது. ஒரு நா‌ள் ‌சி‌க்காமலா போவா‌ய் எ‌ன்று ‌மிர‌ட்டி அ‌‌ந்த வாகன‌த்தை அனு‌ப்‌பி வை‌‌த்து‌‌ள்ளா‌ர் அ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர்!

வசூ‌லி‌க்கவே ‌பிற‌ந்து‌ள்ளோ‌ம் எ‌ன்பதை போ‌ல் நட‌ந்து கொ‌ள்ளு‌ம் போ‌‌க்குவர‌த்து காவல‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் அடாவடிகளை யா‌ர் க‌ண்டு கொ‌ள்வது, த‌ட்டி கே‌ட்பது

சாலை ‌வி‌தி முறைகளை ‌மீ‌றியதாக கூ‌றி பண‌ம் வசூ‌ல் செ‌ய்யு‌ம் போ‌க்குவர‌‌த்து காவல‌‌ர்க‌‌ளி‌ன் தொ‌ல்லை சென்னை நகர‌த்‌தி‌ல் இரு‌ப்பதை ‌விட புறநக‌ர் பகு‌திக‌ளி‌ல் அ‌திகமாகவே உ‌ள்ளது. கொ‌ள‌த்தூ‌ர், அ‌ம்ப‌த்தூ‌ர், செ‌ங்கு‌ன்ற‌ம்,தா‌ம்பர‌ம், ‌‌திருவா‌ன்‌மியூ‌ர் உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் அ‌திகாலை நேர‌ங்க‌ளி‌ல் லா‌‌ரி போ‌க்குவர‌த்து அ‌திகமாக இரு‌க்கு‌ம். அ‌ப்போது வசூ‌ல் வே‌ட்டையை ஆ‌ர‌ம்‌பி‌த்து‌‌விடுவா‌ர்க‌ள் இ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர்க‌ள்.

கொடு‌க்க மறு‌க்கு‌ம் லா‌ரிக‌ள் ம‌ணி‌க் கண‌க்‌கி‌ல் சாலை‌யி‌ன் ஓர‌த்‌தி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதனை நா‌ம் ‌தின‌ந்தோறு‌ம் பா‌ர்‌க்க முடி‌கிறது. அ‌ப்படி ம‌ணி‌க் கண‌க்‌கி‌ல் கா‌த்‌திரு‌ப்பதை ‌விட கே‌ட்டது‌ம் பண‌த்தை கொடு‌த்து ‌வி‌‌ட்டு செ‌ல்லு‌ம் லா‌ரி ஓ‌ட்டுந‌ர்களு‌ம் இரு‌க்க‌த்தா‌ன் செ‌ய்‌கிறா‌ர்க‌ள். போ‌க்குவர‌த்து காவல‌ர்க‌ளி‌ன் இ‌ந்த அடாவடி செய‌ல்கள் பற்றி லா‌ரி ஓ‌ட்டுந‌‌ர்க‌ளிட‌ம் கே‌ட்டா‌ல், க‌ண்டபடி வசைமாரி பொழிகிறார்கள்.


இதேபோ‌ல்தா‌ன் த‌ற்போது செ‌ன்னை‌யி‌ல் போ‌க்குவர‌த்து காவல‌ர்க‌ள் நட‌ந்து கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்ட அடாவடி செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடு‌ம் போக்குவர‌த்து காவல‌ர்களு‌க்கு யா‌ர் கடிவாள‌ம் போடுவது. ‌திருடனா‌ய் பா‌ர்‌த்து ‌திரு‌ந்தா‌‌வி‌ட்டா‌ல் ‌திரு‌ட்டை ஒ‌ழி‌க்க முடியாது எ‌ன்ற பாட‌ல்தா‌ன் ‌நினைவு‌க்கு வரு‌கிறது.

போலீஸ்காரராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்..!!!

நன்றி "வெளிச்சம்"


Friday, December 17, 2010

ஷங்கரின் சரக்கு - எந்திரனின் தந்திரம்..!

சமீபத்தில்தான் இந்த லிங்கை பார்க்க முடிந்தது...உலகப் புகழ் (?) பெற்ற எந்திரன் என்ற திரைப்படம் எங்கிருந்து சுட்டார்கள் என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளள்ளலாம்..

முதலில் கமலஹாசன் என்று ஆரம்பித்து, அப்புறம் அஜித், ஷாருக் கான் போன்றவர்கள் நிராகரித்த கதையைத்தான்..பாவம் ரஜினியை ஏமாற்றி நடிக்க வைத்திருகிறார்கள்..


முதல்வன் படத்துடன் ஷங்கரிடம் சரக்கு தீர்ந்து விட்டது...அந்நியன், சிவாஜி. எந்திரன் போன்ற படங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்..பிரம்மாண்டத்தை வைத்து ஏமாற்றும் வேலைதான் நடக்கிறது..

இப்போதோ கடைசியில் எல்லோரும் ஹிந்தியில் பார்த்து முடித்துவிட்ட த்ரீ இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்கிறார்..சரி விட்டுவிடுவோம்.


ஆனால் ரஜினியை முட்டாளக்கியது போல..தமிழ் மக்கள் அனைவரையும் சன் டிவி குரூப் முட்டாள்களாகளாக்கியதை எப்படி மன்னிக்க முடியும்..?

ஷங்கரின் ஏமாற்று வேலையை "இங்கே கிளிக்"  செய்து தெரிந்துகொள்ளலாம்..

Friday, December 10, 2010

சொந்த செலவில் சூனியம்...!!!ஸ்பெக்ட்ரம்..இந்த வார்த்தைதான் அதிகமதிகம் இப்போது ஊடகங்களில் அடிபடும் செய்தி..

ஜி 2 அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏறக்குறைய 1,76,000 கோடி ரூபாய் உத்தேச இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தணிக்கை குழு அதிகாரி சொன்னதை வைத்து, மதவெறி பி ஜே பி நாய்கள் இன்றுவரை நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் குரைத்துக் கொண்டு இருக்கின்றன..

இந்த ஊழலால் ஏற்பட்ட இழப்பை விட இந்த பொறுக்கிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் இன்னும் அதிகம்..

எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்கும் பத்திரிகைகள் இந்த விஷயத்தை கண்டுகொள்வதும் இல்லை..இப்படி வீண் சம்பளம் வாங்கி மக்கள் பணத்தை வீணடிக்கும் இந்த எருமைகள் பற்றி மக்களுக்கு அறியவைப்பதும் இல்லை..இன்னொரு மதவெறி நாய் சுப்ரமணியன் என்பவனும் பி ஜே பி யின் வாலாக ஆடிக்கொண்டு தினமும் உளறிக்கொண்டு வருகிறான்..தெகல்கா ஊழல், குஜராத் கலவரம், கார்கில் வீடு ஓதிக்கியத்தில் ஊழல் செய்த இந்த மத வெறி நாய்கள் ஆரம்பித்து வைத்ததுதான் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எனபது இப்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது..டாடா நிறுவன அதிபர் திரு ரத்தன் டாட்டா வின் கூற்றின்படி, பி ஜே பி ஆட்சிகாலத்தில் தான் இந்த அலைவரிசை ஒதுக்கீட்டில் அதிகமான முறைகேடு நடந்துள்ளது என்று அம்பலப்படுத்தியுள்ளார்.தமது ஊழலை மறைத்து - பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் குளிர் காய நினைத்து எதிர்கட்சிகளையும், சுப்பிரமணியன் என்கிற அமெரிக்க ஏஜென்டையும் தூண்டிவிட்ட பி ஜே பி - சொந்த செலவில் சூனியம் வைத்துகொண்டதாகவே தெரிகிறது..வினை விதைத்தவன்தான் வினையை அறுப்பான்....!

Thursday, December 9, 2010

பத்திரிகை "தர்மம்"


ஒருவர் : "கோவில் வாசலில் வைத்து எல்லாருக்கும் பேப்பர் கொடுக்குறான்களே..என்னவாம்?"


மற்றொருவர் : அதுதாங்க பத்திரிகை தர்மம்...!

எங்கோ படித்த நகைச்சுவை இது..


இந்த கட்டுரைக்கும் மேற்கண்ட நகைச்சுவைக்கும் சிறுதும் சம்மந்தமில்லை..

விஷயம் என்னவென்றால்..நேற்று ஸ்பெக்ட்ரம் புகழ் ராசா வீடுகளிலும் அவரது சொந்தபந்தங்களின் வீடுகளிலும் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது.

இந்த சோதனை நிச்சயம் ஒரு கண்துடைப்பாகத்தான் இருக்கும் எனபது அனைவரும் அறிந்ததே..

இதுவரைக்கும் ஏறக்குறைய இந்தியாவின் 60 ஆண்டுகால அரசியலில் எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த ஒரு குற்றசாட்டுக்களுக்காகவும், குற்றங்களுக்காகவும், தண்டனை அடைந்ததாக சரித்திரம் எனக்கு தெரியவில்லை..கேசு நடந்துகொண்டிருக்கும்...அவன்பாட்டுக்கு எம் எல் எ ஆவான், எம் பி. ஆவான் ஏன் அமைச்சராகக் கூட வருவான்..வழக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கும்.. செய்தித் தாள்களில் அவ்வப்போது சிறு சிறு செய்திகளாக வரும், ஒரு சமயத்தில் அவன் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்படுவான். இதுதான் நான் என் அனுபவத்தில் கண்டது..


மேற்கண்ட விசயத்திலும் இப்படித்தான் ஆகப் போகிறது.. இதிலும் பொருளாதார இழப்பு இந்த அரசியல் நாய்களுக்கு அல்ல.. மக்களுக்குத்தான்..


நேற்று நடைபெற்ற சி. பி ஐ சோதனையை செய்தியை மழுங்கடிக்கும் விதமாக வாரணாசியில் ஒரு குண்டு வெடிப்பு...வழக்கம்போல ஒரு முஸ்லிம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு..

ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் இப்படி ஒரு முஸ்லிம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதும், கடைசியில் விசாரணையில் ஆர் எஸ் எஸ் நாய்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதும் தெரியவரும்..

அஜ்மீர், ஹைதராபாத், மாலேகான் போன்றவைகளும் இப்படித்தான்..

சரி விசயத்துக்கு வருவோம்.

அரசியல்வாதிகளின் அல்லது சினிமாக்கூத்தாடிகளின் வீடுகளிலோ நிறுவனங்களிலோ இது போன்ற ஒரு சோதனை நடைபெறும்போது குதிக்கும் ஊடகங்கள் நேற்று நடந்த சம்பவத்தை மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டது சற்று அதிர்ச்சி அளிக்கும் விசயமே..

மக்களை முட்டாளாக்கிய எந்திரன் படத்துக்கு கிடைத்த பரபரப்பை விட இந்த நிகழ்வுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் வழங்காத பத்திரிக்கைகளின் மீது வர வர நம்பிக்கை குறைந்து வருகிறது..


நான்காவது தூண் என்று பீற்றிகொள்ளும் இந்த தூண்கள் துருப்பிடித்து வலுவிழந்து வருவதாகவே தோன்றுகிறது..


இதற்கு காரணம் பத்திரிகை தர்மமா அல்லது பத்திரிக்கைகளுக்கு எங்கிருந்தோ கிடைக்கும் தர்மமா...?

Wednesday, December 8, 2010

முன்னாள் அமைச்சர் ராசா வீட்டில் சி பி ஐ சோதனை !!ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சிக்கி ராஜினாமா செய்த தி மு க வின் அமைச்சர் ஆர் ராசாவின் சென்னை வீட்டில் இன்று காலையில் இருந்து சி பி ஐ சோதனை நடந்து வருகிறது..

நேரடி வருணனைகளுக்கு இந்த லிங்கை பார்க்கவும்   சி பி ஐ சோதனை