Pages

Saturday, February 18, 2012

இவர்கள் மீது ஜூவி கூட் டத்துக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது?கேள்வி: திகார் சிறை யில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆ.ராசா ஹிந் துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தொழிற் சாலையைப் புனரமைக்க வேண்டும் என்று மத்திய கனரகத் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பிரஃபுல் படேலுக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறாரே!
பதில்: இதுக்கு பேரு தான் ஃபிலிம் காட்டுறதா?
- ஜூனியர் விகடன் 19.2.2012
சிறையில் இருக்கும் ஒருவர் தன் தொகுதி சம் பந்தப்பட்ட பிரச்சினையின் மீது அக்கறை கொள்கிறார் என்பது இந்தப் பார்ப் பனர்களின் பார்வையில் ஃபிலிம் காட்டுவதாகத் தெரிகிறது. இவாளின் லோக குரு சங்கராச்சாரி யார் மாதிரி சிறையில் இருக்கும்போது கூட  மலஜலம் கழிக்கக்கூட வாழையிலை கேட்கும் வெட்டி சம்பிரதாயத்தைப் பற்றி ஒருவரி எழுதிய துண்டா?
பிணையில் வெளி வந்து சாட்சிகளை கலைப் பது குறித்து கால்வரி எழுதியதுண்டா?

ஆ.ராசாவுக்குப் பதில் பார்ப்பனர் இது மாதிரி முயற்சியில் ஈடுபட்டு இருந்தால் அடேயப்பா எப்படியெல்லாம் தங்கள் பேனா முனைகளைச் சது ராடச் செய்திருப்பார்கள்?
சிறையில் இருந்த போதும் என்னே கடமை உணர்வு!  மக்கள்மீது எந்த அளவு அக்கறை? தொழி லாளர்களின் தோழன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! எத் தனை ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் மீது கவனம் செலுத்துகிறார் என்று ஒரு தனிப் புராணமே எழுதித் தள்ளி இருக்க மாட் டார்களா?
உதகை ஃபிலிம் தொழிற்சாலையில் பணி யாற்றுவோரில் பெரும் பாலோர் அப்பகுதி ஒடுக் கப்பட்ட மக்கள் தானே! தோடர்களும், குரும்பர் களும், இருளர்களும் பழங் குடி  மக்களும் (66 விழுக் காடு அளவுக்கு) தானே! தொழிற்சாலையை இழுத்து மூடினால் இந்தப் பஞ்ச மர்களும், சூத்திரர்களும் தானே பாதிக்கப் பட்டு நடுத் தெருவில் நிற்பார்கள்? இவர்கள் மீது ஜூவி கூட் டத்துக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது? இதில் முக்கியமாகக் கவனிக்கத் தக்கது என்ன தெரியுமா? இராசா அவர்கள் சிறையிலிருந்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியது ஒன்றும் வீண் போய்விடவில்லை. கைமேல் பலனும் கிடைத்திருக்கிறது.
அந்தத் தொழிற்சாலை யின் புத்தாக்கத்துக்காக ரூ.272 கோடி வழங்கிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனைப் பாராட்ட மனம் வருமா பார்ப்பன வட்டாரத்துக்கு? ஆம். ஆ.ராசா தாழ்த்தப்பட்ட குடி மகன்தானே! அவர் என்ன செய்தாலும், இவாளுக்குப் ஃபிலிம் காட்டுவதாகத் தானே இருக்கும்?
பார்ப்பனர் என்ன எழுதினாலும் அதற்கொரு இனப் பார்வை, வருணப் பார்வை இருக்கும் என்ப தற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டே!


நன்றி  :  மயிலாடன் -  விடுதலை 

Thursday, February 16, 2012

இதற்கு பதில் சொல்லுங்கள் மேதாவிகளே...
திராவிடம் மற்றும் நாத்திகம் பேசும் சில மேதாவிகள், - மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கூக்குரலிட்டு வருகின்றனர்..இதற்க்கு மனிதாபிமானம் ஒன்றும் காரணம் இல்லை...விடுதலைப்புலிகள் விட்டெரியும் பிச்சைக்காசுக்காக அவர்களை காப்பாற்ற இந்த உலகம் முழுவதும் மரணதனடனையை ரத்து செய்ய அலறி வருகின்றனர்..

சமீபத்த்தில் ஒரு பள்ளிமாணவன் ஒரு ஆசிரியை கொன்றபோதுகூட, அவனுக்கு தூக்கு வழங்கவேண்டும் என்றபோது, சில மேதாவிகள், இதற்க்கு காரணமான ஆசிரியைக்கு என்ன தண்டனை, பெற்றோருக்கு என்ன தண்டனை, அந்த பள்ளிக்கு என்ன தண்டனை என்ற ரீதியில் தர்க்கம் பேசினார்.

மரணத்திற்கு மரணம்தான் தண்டனையா  என்று கேட்கும் மேதாவிகளுக்கு ...
இப்படியே கொலைகாரர்களுக்கும், குற்றவாளிக்க்ளுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருந்தால் குற்றங்கள் குறைவதுதான் எப்போது..
பத்தாதற்கு, கொலையாளியான அந்த மாணவனை - சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருப்பதாக செய்தித்தாள்களில் வருகிறது..இதைப்பார்த்து - இன்னும் சிலர் ஆசிரியர்களை மிரட்டி வருவதாக இன்றைய செய்திகளில் வந்து இருக்கிறது..

"மருது பாண்டியர் அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று காலை 9.25 மணிக்கு, பிரேயர் நடந்தது. பிளஸ் 2 மாணவர்கள் இருவர் பிரேயருக்கு வராமல், வகுப்பறையில் பெஞ்சில் தாளம் போட்டு இடையூறு செய்தனர். இதை ஆசிரியர் சுப்பிரமணி கண்டித்தார். அப்போது சென்னையில் ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்றது போல் இங்கும் நடந்து விடும்,என, மாணவர்கள் மிரட்டினர். இதை தொடர்ந்து ஆசிரியர்கள், உயிருக்கு பாதுகாப்பு இல்லை, எனக் கூறி, வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால், பள்ளியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தலைமையாசிரியர் உஷா சாந்த ஜாய் கூறுகையில், செய்முறை தேர்வு நடந்ததால், பிரச்னைக்குரிய மாணவர்களை தேர்விற்கு அனுமதித்தோம், என்றார். ஆசிரியர் சுப்பிரமணி புகார்படி, திருச்சுழி டி.எஸ்.பி., மோகன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் சண்முகம், மாணவர்களை கைது செய்து, அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் . சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்."

உலகமக்களை காக்கவந்த மனிதாபிமானிகள் இதற்க்கு பதில் சொல்லட்டும்..


Tuesday, February 14, 2012

விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.


உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது.

இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.

# முத்தமிடுவோர் தினம்,

# நிர்வாணமாக இருப்போர் தினம்,

# இறுகக் கட்டியணைப்போர் தினம்,

# ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,

# பாலுணர்வைத் தூண்டுவோர் தினம்

என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு கருதுகின்றது.

கடந்த ஜனவரி மாதத்தில் நிர்வாணமாக இருப்போர் தினம் என்றொன்றை ரஷ்ய மக்கள் கொண்டாடியதும், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் நிர்வாணமாக காட்சி தந்ததையும் மிகப் பெரிய சாதனையாக ஊடகங்கள் கொண்டாடின.

அதே ஜனவரி மாதத்தில் முழு உடம்பையும் காட்டிக் கொண்டு திரியும் சுமார் இருபத்தி ஐயாயிரம் பெண்களை ஓரிடத்தில் கூட்டி உலகிலேயே அதிகமான நிர்வாணிகள் ஒன்றினைந்த இடம் என்ற உலக சாதனையை(?) படைத்தமை ஒழுக்க விழுமியங்களை பேணிப் பாதுகாப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.

இது வரைக்கும் பல நாடுகளிலும் ஒழுக்க சீர் கேட்டை ஆதரிக்கும் தருதலைகள் முன்வைத்த ஒரு கோரிக்கைகளில் ஒன்றுதான் பாலியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதில் ஆண் பெண் வித்தியாசமின்றி பாலியல் தொடர்பான செய்திகள் செயல்பாட்டுடன் விபரிக்கப்பட வேண்டும் என்பது.

பல நாடுகளும் இந்தக் கோரிக்கையை கண்டு கொண்டாலும், வெளிப்படையாக அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்தன. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் பாலியல் தொடர்பான கற்கைகள் மற்றும் செயல்பாட்டு விளக்கம் கொடுக்கும் கல்லூரியை ஒரு பெண் ஆசிரியர் (?) ஆரம்பித்துள்ளார்.

தாய்ப் பாலில் “ஐஸ் க்ரீம்”

குழந்தைக்காக தாயிடம் இருந்து கிடைக்கும் தாய் பாலை விற்பனைப் பொருளாக ஆக்கிய கொடுமையை தற்கால நவீன (?) யுகத்தில் நாம் பார்க்கக் கிடைக்கிறது எவ்வளவு பெரிய அவலம்?

ஆம் தாய்ப் பால் மூலம் செய்யப்பட்ட “ஐஸ் க்ரீம்” ஆஸ்த்ரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. வெட்கக் கேட்டின் உச்சத்திற்கே மேற்கத்தேயம் சென்று விட்டது.

விபச்சாரத்திற்கு துணை போகும் பெற்றோர்கள்.

மேற்கு நாடுகளின் தற்போதைய நிலை எந்தளவுக்கு மோசமான காலாசாரத்தை தோற்றுவித்துள்ளது என்றால், ஒரு பெண் பிள்ளை சக மாணவர்களுடன் சுற்றுலா செல்கிறாள் என்றால் குறிப்பிட்ட பிள்ளையின் பெற்றோர் பிள்ளையில் கைப் பையில் (ஹேன் பேக்) கருத்தடை மாத்திரைகளை வைத்து அனுப்ப வேண்டும். இல்லாத பட்சத்தில் அரசாங்கம் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும்.


நவீனம் என்ற பெயரில் ஒழுக்க நாகரீகம் கேள்விக் குறியாக்கப்படும் அவலம் நிகழ்வதை எத்தனை பெற்றோர்கள் உணர்கிறார்கள்?

கழிசடைகளுக்கு ஒரு தினமா?

கலாசார சீர்கேட்டுக்கு தினங்களை உண்டாக்கிய கழிசடைகள் சிலர் பெப்ரவரி 14ம் தேதியை காதலர்கள் தினம் என்று அழைக்கிறார்கள்.

கிறித்தவ மத போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு காதலியே இல்லையா? நீயேல்லாம் வாழ்ந்தே பயனில்லை என்று நண்பர்கள் (?) பேசிக்கொள்ளும் அளவிற்கு முக்கியமான விஷயமாக மாறி விட்டது.

மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை  பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க  யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
செல்போனும் குழந்தைச் சீரழிவும்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளாக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் என்ற சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. இதன் காரணமாக தற்காலத்தில் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசிட் ஊற்றினான் போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு  ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை”  அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு  தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக்  கொண்டிருப்பதினால்  தான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14  ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது.

அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல்  கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

நன்றி : http://www.rasminmisc.blogspot.in/

Monday, February 13, 2012

தோனி - திரைப்பட விமர்சனம்முதலில் நண்பர் ஜெய்லானிக்கு ஒரு விளக்கம், வெறும் டிரைலர் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதவில்லை...படம் பார்த்துவிட்டுத்தான் முதலில் விமர்சனம் எழுதலாம் என்றுதான் நினைத்து வந்தேன்..எல்லா படங்களைப்போல இதற்க்கு விமர்சனம் எழுத முடியவில்லை..காரணம் இதுவரை குப்பை படங்களையே பார்த்து வந்ததால் அவைகளின் குறைகளை சுலபமாக சொல்ல முடிந்தது.முதன் முறையாக ஒரு தரமான, ஆபாசமற்ற, யதார்த்தமான ஒரு படத்தை பார்த்த உணர்வு.

பிரம்மாண்டம் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகள் இல்லை, யதார்த்தம் என்ற பெயரில் போரடிக்கவும் இல்லை..கதையில் என்ன சொல்ல வந்தார்களோ அதை நேரடியாக நெத்தியடியாக சொல்லி இருக்கும் பாங்கும், கமர்ஷியல் என்ற பெயரில் எந்த விதமான சமரசமும் செய்துகொள்ளாமல் ஆபாசகலப்பில்லாமல் கதை சொல்லி இயக்கி இருக்கும் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

இதுவரை உலகத்தரம், இந்தியத்தரம், என்ற பெயரில் ஏமாற்றிக்கொண்டிருந்த அத்தனை ஆபாச பட இயக்குனர்களுக்கும், பெரிய இயக்குனர்கள் என்ற பெயரில் இருட்டிலும், பிரம்மாண்டம் என்ற பெயரில் வெளிநாடுகளையும் - செயற்கையான செட்டுகளையும்  காட்டி எமாற்றிகொண்டிருந்த அனைத்து இயக்குனர்களும் இந்தப்படத்தைபார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். 
இத்தனை நாளாக மக்களை ஏமாற்றியதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்..

இதற்குமுன்பு நண்பன் என்ற  காப்பி அண்ட் பேஸ்ட் படத்தையே அதிலே அடிப்படையிலேயே பெரிய ஓட்டை இருந்தாலும், வானளாவப்புகழ்ந்த ஜால்ரா பதிவர்கள் இந்தப்படத்தை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்று பார்ப்போம்..

கிரிக்கெட் வீரானகவேண்டும், தோனியைப்போல பெரிய கிரிக்கெட் விளையாட்டு வீரனாக வரவேண்டும்  என்று ஆசைப்படும் சிறுவன் ஒருவன், தன்னைப்போல தன மகன் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் மகன் நன்றாக படித்து எம் பி ஏ பட்டம் பெற்று, நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு நடுத்தரவர்க்க தந்தை, கொள்ளை கொள்ளையாக டொனேசன் வாங்கி, தாய் தந்தைக்கு டெஸ்ட் வைத்து, யூ கே ஜி குழந்தைக்கும் என்டரன்ஸ் வைத்து, ஒழுங்காக படித்துக்கொடுக்காமல், மாணவனை மக்கு என்றும் - தமது பள்ளிக்கூடம் நூறு சதவீதம் மார்க் எடுக்கவேண்டும் என்ற சாதனை வெறியில் வகுப்பறையை சிறைக்கூடமாய் மாற்றும் கல்வி வியாபாரிகள் இவர்களுக்கிடையே நடக்கும் போராட்டம்தான்...அதை மிகைப்படுத்தாமல் நேர்மையான கதையாக சொல்லி இருக்கிறார்கள்..
கோமாவில் கிடக்கும் சிறுவன், வெறும் சுற்றுப்புற சூழ்நிலையால் மட்டும் கோமாவில் இருந்து மீளுகிறான் என்று வழக்கமான  சினிமாத்தனம் இல்லாமல், ஒரு அறுவை சிகிச்சைமூலமாக அவன் சுயநினைவுக்கு திரும்புவது என்று யதார்த்தமாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
இறுதிக்காட்சிகள் - முதலமைச்சரை கதாநாயகன் ஒரு போது நிகழ்ச்சியில் சந்தித்து, நியாயம் பெறுவது சற்று சினிமாத்தனமாக பட்டாலும், ஒரு குத்தில் ஒன்பதுபேரை ச்ச்சைக்கும் மடத்தனத்திர்க்கு இது எவ்வளவோ மேல்...
கதையில் ஒரே ஒரு பெண்தான் இருப்பதாக தெரிகிறது...அவர் ஒரு விலைமாது என்று காட்டுவது கூட மிகவும் நாகரீமாக காட்டி இருப்பது வரவேற்கலாம்... 

தோனி டெண்டுல்கர் போன்றவர்களை நாடு கடத்தணும், அவங்களுக்கென்ன, முன்னாடி ஒரு விளம்பரம் பின்னாடி ஒரு விளம்பரம் என்று கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று யதார்த்தத்தை சொல்லும் ஒரு தந்தையாக பிரகாஷ் ராஜ் பிரமாத ராஜ்.
படத்தில் வரும் நீயா நானா நிகழ்ச்சி கண்களை குளமாக்குகிறது..அதைத்தொடர்ந்து வரும் சம்பவங்களும் படு எதார்த்தம்..

நூற்றிப்பது கோடியில் பதினொன்று பேர் மட்டுமே விளையாட வாய்ப்புகிடைக்கும் கிரிக்கெட்டுக்காக - படிப்பை இழக்கும்  மாணவன்  என்ற உறுத்தலை தவிர, 
எனக்கு தெரிந்து, முதல் முதலான  ஒரு உருப்படியான சினிமா இதுதான் என்று சொல்லலாம்..

இதுவரை ஏமாற்றி வந்த தமிழ் இயக்குனர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது...


Sunday, February 12, 2012

தோனி - யதார்த்தமான ஒரு திரைப்படம்!

 
தமிழ்ப்படம் எடுக்கும் அனைவரும் வெட்கப்படும் அளவுக்கு மிக அருமையான ஒரு யதார்த்தமான ஒரு திரைப்படத்தை - தனது முதல் இயக்கத்திலேயே தந்திருக்கிறார் தோனி படத்தின் இயக்குனர் - நடிகர் பிரகாஷ்ராஜ்.
 

இதன் விமர்சனம் அடுத்த பதிவில்...

Thursday, February 9, 2012

இவனைப் போன்றவர்களுக்கு மரணதண்டனைதான் கொடுக்கவேணும் ....!!!
நினைக்கும்போது குலை நடுங்க வைக்கிறது....
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் - ஒரு பொருக்கி, ஒரு ஆசிரியரை கத்தியால் குத்தி படுகொலை செய்து இருக்கிறான்..
காரணம் அந்த ஆசிரியை பெற்றோர்களிடம் அடிக்ககடி புகார் செய்து வந்தாராம்..

ஹ்ம்ம்ம்..இப்படி கொலைவெறியுடன் அந்த ஆசிரியை கொலைசெய்த அந்த பயங்கரவாதியிடம் இனிமேல் காவல்துறை விசாரிக்கும், நீதிமன்றம் கூட்டி செல்வார்கள் கடைசியில் இவன் சிறுவன், மாணவன், எதிர்கால நலன் கருதி இவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைப்பார்கள்..
இதன்  மூலம் கொல்லப்பட்ட அந்த ஆசிரியையின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்படுமா என்றால் இல்லை..

முதலமைச்சர் வேண்டுமென்றால் தனது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குவார்..

ஆனால் குற்றம் செய்த அந்த கொலையாளி..? 
சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படும் அவனுக்கு, - அந்த ஆசிரியரை கொலை செய்ததை - ஏதோ படித்து பட்டம் வாங்கியதைப்போல - வெளியில் வந்து பெருமையாக சொல்லி, மேலும் ரவுடித்தனம்தான் செய்வான்..
இவன்தான் கொலையாளி என்று தெரிந்த  பின்பு இன்னும் ஏன் விசாரணை? 
மரணதண்டனை விதிக்க வேண்டியதுதானே?
சிலர் கிளம்புவார்கள்..மனித உரிமை என்ற பெயரில்..மாணவன் சிறுவன் என்று..
பத்திரிக்கைகளும் ஏதோ மாணவன், பட்டதாரி, எஞ்சினியரின் மாணவர், என்று சில சொற்பிரயோகங்களை வைத்து ஏதோ இவர்கள் அதிசய பிறவி போலவும், தவறு செய்தால் மன்னிக்க வேண்டும், அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் ஓலமிடும்..
இப்படி அந்த கொலையாளிகளை தப்பவிடுவதால் எந்த விதமான நன்மையையும் விளையப்போவதில்லை..மாறாக குற்றங்கள் இன்னும் அதிகம் பெருகும்..

இதற்க்கு காரணம் இன்றைய காலங்களில் வெளிவரும் சினிமாக்களும் டிவி சீரியல்களும்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆசிரியரை கேலி செய்யும் - கல்லால் அடிக்கும் மாணவனை - குறும்புக்காரன் என்று அந்த சம்பவங்களை நகைச்சுவையாக்கி இதுபோன்ற பயங்கரங்களை தூண்டுகின்றனர்.

ஆசியரை கிண்டல் செய்வது தவறல்ல எனபது போன்ற திரைப்படங்களே...சொல்லப்போனால் அப்படி செய்பவன்தான் ஹீரோ என்பதுபோல உயர்த்திக்காட்டி - சிறுவர்களை வழி கெடுக்கின்றன..

இந்த சிறுவயதிலேயே, எவ்வளவு வன்மம் மனதில் இருந்தால் அந்த பொருக்கி - கத்தியை பள்ளிக்கூடத்திற்கு எடுத்து வந்து ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு துணிந்திருப்பான்...
இவனை விசாரணை என்ற பெயரில் காலங்கடத்தாமல் மரணதண்டனை விதித்து கொல்வதே குற்றங்களை - கொஞ்சமாவது குறைப்பதற்கு வழிகோலும்.!