Pages

Thursday, February 16, 2012

இதற்கு பதில் சொல்லுங்கள் மேதாவிகளே...
திராவிடம் மற்றும் நாத்திகம் பேசும் சில மேதாவிகள், - மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கூக்குரலிட்டு வருகின்றனர்..இதற்க்கு மனிதாபிமானம் ஒன்றும் காரணம் இல்லை...விடுதலைப்புலிகள் விட்டெரியும் பிச்சைக்காசுக்காக அவர்களை காப்பாற்ற இந்த உலகம் முழுவதும் மரணதனடனையை ரத்து செய்ய அலறி வருகின்றனர்..

சமீபத்த்தில் ஒரு பள்ளிமாணவன் ஒரு ஆசிரியை கொன்றபோதுகூட, அவனுக்கு தூக்கு வழங்கவேண்டும் என்றபோது, சில மேதாவிகள், இதற்க்கு காரணமான ஆசிரியைக்கு என்ன தண்டனை, பெற்றோருக்கு என்ன தண்டனை, அந்த பள்ளிக்கு என்ன தண்டனை என்ற ரீதியில் தர்க்கம் பேசினார்.

மரணத்திற்கு மரணம்தான் தண்டனையா  என்று கேட்கும் மேதாவிகளுக்கு ...
இப்படியே கொலைகாரர்களுக்கும், குற்றவாளிக்க்ளுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருந்தால் குற்றங்கள் குறைவதுதான் எப்போது..
பத்தாதற்கு, கொலையாளியான அந்த மாணவனை - சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருப்பதாக செய்தித்தாள்களில் வருகிறது..இதைப்பார்த்து - இன்னும் சிலர் ஆசிரியர்களை மிரட்டி வருவதாக இன்றைய செய்திகளில் வந்து இருக்கிறது..

"மருது பாண்டியர் அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று காலை 9.25 மணிக்கு, பிரேயர் நடந்தது. பிளஸ் 2 மாணவர்கள் இருவர் பிரேயருக்கு வராமல், வகுப்பறையில் பெஞ்சில் தாளம் போட்டு இடையூறு செய்தனர். இதை ஆசிரியர் சுப்பிரமணி கண்டித்தார். அப்போது சென்னையில் ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்றது போல் இங்கும் நடந்து விடும்,என, மாணவர்கள் மிரட்டினர். இதை தொடர்ந்து ஆசிரியர்கள், உயிருக்கு பாதுகாப்பு இல்லை, எனக் கூறி, வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால், பள்ளியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தலைமையாசிரியர் உஷா சாந்த ஜாய் கூறுகையில், செய்முறை தேர்வு நடந்ததால், பிரச்னைக்குரிய மாணவர்களை தேர்விற்கு அனுமதித்தோம், என்றார். ஆசிரியர் சுப்பிரமணி புகார்படி, திருச்சுழி டி.எஸ்.பி., மோகன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் சண்முகம், மாணவர்களை கைது செய்து, அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் . சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்."

உலகமக்களை காக்கவந்த மனிதாபிமானிகள் இதற்க்கு பதில் சொல்லட்டும்..


2 comments :

அலைகள் said...

கழிசடைகளுக்கு ஒரு தினமா?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.மர்மயோகி,
மிகவும் அருமையான பதிவு.

///கொலையாளியான அந்த மாணவனை - சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருப்பதாக செய்தித்தாள்களில் வருகிறது..///---மோசமான முன்னுதாரணம்.

இன்னும் நிறைய மாணவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது. குறைந்த பட்சம் வெயிலில் ஒரு மணிநேரம் முட்டியாவது போடும் தண்டனை அல்லது நாப்பது தோப்புக்கரணம் போடும் தண்டனையாவது தந்து இருக்கலாம். எதுவுமே இல்லை என்றால் கேவலமா இருக்கிறது.

அந்த கொலைகாரனை,

சினிமாவுக்கு அனுப்பி தனி ரூம் கொடுத்து கண்டுக்காமல் இருந்து இப்படி ஒழுங்காக ஒழுக்கமாக வளர்க்காத பெற்றோர் முதல் குற்றவாளிகள். அடுத்து வன்முறையை போதிக்கும் படத்தை தணிக்கை செய்யாத தணிக்கை அதிகாரிகள், அதை அப்படியே திரையிட்ட திரை அரங்குகள், இது போன்ற கேவலமான சினிமா எடுக்கும் படவுலக பயங்கரவாதிகள், இவர்களை ஆதரவு கொடுத்து உயிர் கொடுத்து தூக்கிவிடும் ஊடகங்கள், இவர்களை எல்லாம் அப்டியே அனுமதிக்கும் அரசு என எல்லாருமே குற்றவாளிகள். தண்டிக்க பட வேண்டியவர்கள்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?