Pages

Wednesday, September 29, 2010

அகராதி

தற்கால தமிழ் பத்திரிக்கைகளை படிக்கும்போது சில வார்த்தைகளுக்கு இதுதான் அர்த்தமாக இருக்குமோ என்று தோன்றியது..அதுதான் அகராதியாக கீழே..

அழகி = விபச்சாரம் செய்பவள் 
 வி ஐ பி = சினிமாவில் கூத்தடிப்பவன் 
பொது மக்கள்.= அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பைனான்ஸ்காரனிடம் ஏமாந்துவிட்டு போலிஸ் நிலையத்தை முற்றுகை இடுபவன்  .

குடிமகன் = குடித்துவிட்டு நடுரோட்டில் பொறுக்கித்தனம் பண்ணுபவன்  
ரசிகன் = எவனோ ஒருத்தன் காசு வாங்கி நடிக்க, பெற்றோரை மறந்து சினிமா சினிமா என்று அலையும் பொறுக்கி 
முஸ்லிம் தீவிரவாதி வைத்திருக்கும் பயங்கர ஆயுதங்கள் = கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், வயர், ஸ்க்ரூ டிரைவர் 
அரசியல்வாதி, தலைவன் = கோடி கொடியாக கொள்ளையடிப்பவன், லஞ்சம் வாங்குபவன் 
ஊழல் அதிகாரி = நூறு, ஆயிரம் லஞ்சம் பெறுபவன் 
தொழிலதிபர் = சினிமா நடிகையை திருமணம் செய்பவன்
ஜட்ஜ் = ஆபாச டி வி நிகழ்ச்சி நடுவர்
கெமிஸ்ட்ரி, கோரியக்ராபி = ஆண் பெண்களை ஆபாசமாக ஆடவிட்டுட்டு சொல்வது..
வாலிபர் = நாற்பது வயதைக் கடந்தவன் 
சூப்பர் ஸ்டார் = அறுபது வயதைக் கடந்தவன்
வருங்கால முதல்வர் = நேற்று நடிக்க வந்தவன் 
 பிரபல ரவுடி = என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பொறுக்கி 
கவிஞர் = கேவலமான பாட்டு எழுதுபவன் (குத்துப்பாட்டு) 
பெரிய கவிஞர் = அரசியல்வாதிகளையும், சினிமாக்கூத்தாடிகளையும் அதிகமாக புகழ்ந்து வாழ்பவன்
இலக்கியவாதி = ஜோல்னாபை, தாடி,கண்ணாடி அணிந்து, சாராயக்கடைகளில் விவாதித்துக்கொண்டிருப்பவர்கள்.. 
சினிமாக்கதாசிரியர் = ஹோட்டலில் ரூம் போட்டு குடிப்பவன் 
டி வி கதாசிரியன் = விதவிதமான கள்ளகாதல்களை கண்டுபிடிப்பவன்
 சினிமா காமெடியன் = சினிமாவில் எல்லாவற்றுக்கும் குவாட்டர் ஆப் அடிப்பவன்.
பிரம்மாண்டமான இயக்குனர்  =தயாரிப்பாளரை போன்டியாக்கும் இயக்குனர்
யதார்த்த  இயக்குனர் = ஆபாசமாக படம் எடுப்பவன்
தேச பக்தன் =  கோடி கோடியாக சம்பளம் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாடுபவன்

நடிகைகளின் கலைச்சேவை = வெளிநாடுகளில் ஆபாச நடனம் ஆடுவது
சிறந்த ஆங்கிலப்படம் = இருட்டில் எடுக்கப்படும் ஆங்கிலப்படம் 
சிறந்த கேமராமன் = விலை உயர்ந்த கேமரா மூலம் படம் பிடிப்பவன் 

தினப் பத்திரிகை :  கொலை, கொள்ளை, கள்ளத்தொடர்பு, விபத்து செய்திகளை வெளியிடுவது
வாரப் பத்திரிகை : சினிமா நடிகையின் ஆபாசப்படம், அவளது படுக்கை அறை விசயங்களை வெளியிடுவது
வாரமிருமுறை பத்திரிகை : விபச்சாரிகள், கொலைகாரர்கள், பொறுக்கிகளை நியாயப்படுத்தி போலிசுக்கு எதிராக எழுதுவது
இளம் காதலர்கள்  = ஓடிப்போகிரவர்கள்
காதலர்கள் = தற்கொலை செய்துகொள்பவர்கள்
கள்ளக்காதலர்கள் = கொலை செய்பவர்கள்
தமிழ்பற்று : இந்திய விரோதிகளுக்கு ஆதரவளிப்பது
தமிழக முதலமைச்சர் :  அதிகமாக சினிமா விழாக்களில் கலந்துகொள்பவர்.
 எதிர்க்கட்சி தலைவர்  = தினம் ஒரு போராட்டம் அறிவிப்பவர் 
தமிழக மக்கள் : எந்திரன் படம் பார்பதற்காக காத்துக் கொண்டிருப்பவர் 
தமிழ் ப்ளாக்கர்ஸ் = எந்திரன் படத்துக்கு இலவச விளம்பரம் செய்பவர் 

Monday, September 27, 2010

பாடும்...! பாடித்தொலையும்...!!

எங்கோ கேட்ட வசனம் போல் இருக்கும்...இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில், புலிகேசி மன்னனாக நடிப்பவனிடம், புலவன் ஒருவன், பாடுவதற்காக வருவான்..

எதற்காக இங்கே வந்தாய் என்று மன்னன் கேட்பான்.

அதற்க்கு அந்த புலவன், "தங்களை புகழ்ந்து பாடி, பரிசில் பெறவே வந்தோம்!" என்பான்..

அதற்கு மன்னன் வேண்டா வெறுப்பாக சொல்லும் பதில்தான் மேற்கண்ட தலைப்பு "பாடும்...! பாடித்தொலையும்...!!"

தமிழ் தமிழ் என்று தமிழை வாழவைப்பதாக அலறும் அனைவரும் அந்தகாலத்து புலவர்களை இந்த லெவலில் தான் வைத்துள்ளனர்..அதாவது, புலவர் என்பவர் வறியவர் என்றும், அவர் வேறு எந்த வேலையும் செய்யத்தெரியாதவர் என்றும், அவர்களது வேலையே, ஒவ்வொரு ஊராகச் சென்று, அந்த பகுதியின் குறுநில மன்னனை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து, ஏதாவது பரிசு பெற்று வருவது..இப்படித்தான் சங்க கால இலக்கியங்கள், தமிழ் வளர்க்கும் புலவர்களை இந்த அளவு கேவலப்படுத்தியே சித்தரித்து வந்துள்ளன..

சரி அவர்கள்தான் அவ்வாறு இருந்துள்ளனர், வறியவர்கள் என்று நினைத்தால், தற்காலத்து புலவர்களும் அவ்வாறே உள்ளனர். இவ்வளவுக்கும் அவர்கள் நல்ல செல்வ செழிப்போடும், ஆளும்கட்சிகளின் அரவனைப்போடும்தான் உள்ளனர்..

அந்த நிலையில் உள்ள புலவர்கள்தான், ஆளும் கட்சி மேடைகளிலும், கவியரங்குகளிலும், முதலமைச்சரையும், மற்றும் அவர் சார்ந்த கூட்டத்தினரையும் தேவைக்கு அதிகமான புகழ்ந்து பாடும் அவல நிலையில் உள்ளனர்..

மனிதன் அனைத்து தேவைகளையும் பிறர் துணை இன்றி செய்ய முடியாத நிலையில் உள்ளான்..ஒவ்வொருவனும் ஒவ்வொருவனை ஏதாவது ஒரு வகையில் சார்ந்தே இந்த உலகம் இயங்குகிறது..அப்படிப் பட்ட மனிதர்களை, கடவுளுக்கு நிகராகவும், இன்னும் கடவுளுக்கு மேலேயும் வைத்து துதி பாடும் கேவலம் இங்கே தமிழகத்தில் தான் அதிகம்..
 
அதோடு, சினிமாக் கூத்தடிகளையும் இவர்கள் புகழ்ந்து தம்மையே கேவலப்படுத்திக் கொள்கின்றனர்.


சினிமா எனபது ஒரு ஆபாசங்கள் அருவருப்புக்கள் நிறைந்த கேவலமான வியாபாரம்..அதில் நடிப்பவன்- just  நடிக்கிறான்..அவ்வளவுதான், அதை மிஞ்சி அவனால் ஒன்றும் கிழித்து விட முடியாது..நடிப்புக்குப் பின்னரும், முன்பும் உள்ள அவனது நிஜ வாழ்க்கை மிகவும் கேவலமானது..வாய்ப்புக் கொடுப்பவனிடம் கூழைக்கும்பிடு போடவேண்டும்..

அந்த கேவலமான நடிகனையும் இந்த கவிஞர்கள் என்று அழைத்துக்கொள்ளும் போலிகள் அளவுக்கு அதிகமாக புகழ்வது அருவருப்பை தருகின்றது..

அமெரிக்காவின் ஒபாமாவை பார்க்க ரஜினி என்ற நடிகனும், அமிதாப் என்ற நடிகனும் சென்றார்களாம்..


ஒபாமா ரஜினி என்பவனை கண்டு கொண்டானாம், அமிதாப்பை தெரியவில்லையாம்..


அதே இருவர் வாட்டிகனில் உள்ள போப் ஆண்டவரை சந்திக்க சென்றார்களாம்..அவரும், ரஜினி என்ற நடிகனை மட்டும் அடையாளம் கண்டு கொண்டு பேசினாராம்..அதை விட கொடுமை, அமிதாப் என்ற நடிகனிடம் அருகில் உள்ளவன் கேட்டானாம்," ரஜினியை தெரிகிறது..அவருடன் பேசிக்கொண்டிருக்கும் (போப்) நபர் யாரென்று தெரியவில்லையே " என்றானாம்..

இதை சமீபத்தில் வைரமுத்து என்பவர் ஒரு மேடையில் சொல்லி தன்னை கேவலப் படுத்திக்கொண்டார்..
 
இவர்களைப் போன்றவர்களைத்தான் அந்த மன்னன் அவ்வாறு சொல்லி இருப்பான்..

"பாடும்..! பாடித்தொலையும்...!!

Friday, September 24, 2010

வெட்கக்கேடு..!!!


காமன்வெல்த் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 3ம்தேதி முதல் தொடங்கி நடக்கவிருக்கின்றன..

இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தபோகும் ஒரு நிகழ்வாக இருக்கவேண்டிய இந்த விளயாட்டுபோட்டிகள், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளாலும், பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் போட்டியை விட்டு விலகிக் கொண்டிருப்பதாலும் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக மாறும் சூழல் உருவாகி வருகிறது..


தகுதியற்றவர்களால் நிர்வாகிக்கபட்டதால், இன்று பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றதொடல்லாமல், விளையாட்டுப் போட்டிகள் நடக்குமா என்றதொரு கேள்வி எழும்பும் வண்ணம் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன..அதேசமயம், இவைகள் - அதாவது நடைபாதை இடிந்து விழுவது, அயல் நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குமிடம் பற்றிய சர்ச்சை, போன்றவை- பெரிய விசயமா, அல்லது சாதாரண சிறு சிறு தவறுகளா என்று விளங்கவில்லை..ஏனென்றால்..பத்திரிக்கைகள் அதுவும் இந்திய பத்திரிக்கைகள் எப்போதும் பரபரப்பான செய்திகளுக்காக அலைந்து கொண்டிருக்ககூடியவைகள்..அவைகளுக்கு ஏதாவது ஒன்றை பரபரப்பாக்கி காட்டி வியாபாரம் செய்யவேண்டும்..அதற்காக எந்த கேவலங்களுக்கும் தயார்..அதனால்தான் சந்தேகமாக உள்ளது...இந்தியாவுக்கு ஒரு கேவலம் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் இவைகள், அமெரிக்கா ஒபாமா வருகிறான், ஜார்ஜ் புஷ் என்ற பயங்கரவாதி வருகிறான் என்றால் கொண்டாடுகின்றன..

இவைகளில் தவறுகள் நேர்ந்து இருக்கலாம்.. ஊழல் நடந்து இருக்கலாம்தான்....


அதேசமயம், விபாச்சார வழக்குகளில் சிக்கும் பெண்களை முகத்தை மறைத்து பெயரை மாற்றி செய்திகள் தருவதில் காட்டும் அக்கறையை, இந்தியாவின் மானம் சம்மந்தப்பட்ட விசயங்களிலும் காட்டலாம்தானே...
பல்வேறு உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் தள்ளாடிக் கொண்டிருக்கும்போது  இந்தியா அவை எல்லாவற்றையும்  தாண்டி பல்வேறு துறைகளில் முன்னேறிக்கொண்டிருக்கின்றது..உலகநாடுகள் வியந்துகொண்டிருக்கின்றன..இதை விரும்பாத நாடுகள்  இந்தியாவின் நற்பெயரைக் குலைப்பதற்கான  சதியாகக் கூட இருக்கலாம் ...!

அதற்கு  இங்குள்ள பத்திரிக்கைகளும்  துணைபோவதுதான் அவலம்

அந்நியனுக்கு அடிமைச்சேவகம் புரியும் இவர்கள், இந்தியாவைக் கேவலப்படுத்துவதில் முந்திக்கொண்டிருப்பதுதான் வெட்கக்கேடு..

Tuesday, September 21, 2010

எச்சரிக்கையா..? மறைமுக தூண்டுதலா?

ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் ஒரு வழக்கு..பாப்ரி மஸ்ஜித் இருக்கும் இடம் யாருக்கு சொந்தம் என்பது..!

இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இருந்த புனிதத்தலங்களுக்கான இடம் அவைகளுக்கே சொந்தம் என்றொரு சட்டம் இயற்றபட்டும், அப்போதிருந்த ஆட்சியாளர்களின் சட்ட முறைகேடுகளால் இந்த வழக்கு இன்றும் தொடர்கிறது.


அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்த ஆர் எஸ் எஸ் மத வெறியர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்பதையும் இங்குள்ள ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் பெரும் அவலம்..
 
வரும் செப்டெம்பர் 24 ம் தேதி இந்த வழக்கு முடிவுக்கு வரும் - ஒரு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது..


தீர்ப்பு எப்படி இருப்பினும் ஏற்றுக்கொள்கிறோம் என்று இந்தியாவின் இறையாண்மையை பேணும் அனைவரும் எற்றுகொண்டிருக்கின்றனர்..சில மத வெறியர்கள்தான், அது இராமன் பிறந்த இடம் அது எங்களுக்குத்தான் சொந்தம் என்று இன்றும் அலறிக்கொண்டிருக்கின்றன...பாபரி மஸ்ஜிதை இடித்த
 பயங்கரவாதிகளில் ஒருவன்

உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல்தான் 1992 ம் ஆண்டு அநியாயமாக பாபர் மஸ்ஜிதை இடித்து தள்ளி, இங்குள்ள மதவெறி மிருகங்கள் வெறியாட்டம் போட்டு, இந்தியாவின் மதிப்பை வெளிநாடுகளில் சீர்குலைத்தன..அந்த மிருகங்கள் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தும் அவர்களின்
ஆசைப்படிகூட, அந்த இடத்தில் கோவில் கட்டமுடியவில்லை..காரணம் அந்த மிருகங்களுக்கூட தெரிந்திருக்கிறது..அது ராம ஜென்ம பூமி அல்ல என்று..அப்படி இருந்தும் அப்பாவி மக்களின் உணர்ச்சியை தூண்டி, மத வெறியைத்தூண்டி மிருக
வெறியாட்டம்  போட்டு ஓட்டுப்பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றன அத்வானி, நரேந்திர மோடி போன்ற நர வெறி மிருகங்கள்..

இப்போது, தீர்ப்பு நெருங்கி வரும் வேளையில், இந்திய பிரதமர் முதல், தமிழக முதல்வர் வரையிலான அரசியல்வாதிகள், "பாபரி மஸ்ஜித் பற்றிய தீர்ப்பு வரும் நாளான, செப்டெம்பர் 24 ம் தேதி அன்றும், மக்கள் கலவரங்களில் ஈடுபடாமல் அமைதி காத்திட வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், அதை மதித்து நடக்க வேண்டும்" என்றும் அறிக்கைமேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்..


ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவேண்டியது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமை..அதுவும், இதியாவில் ஓட்டுப்பிச்சை வாங்கி, இந்திய அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வரும் அரசியல்வாதிகள் கட்டாயம் மதிக்கவேண்டும்...இதை பிரதமர், முதல்வர் சொல்லித்தான் ஆகவேண்டுமா?

இப்படித்தான் ஒவ்வொரு தீர்ப்புக்கும் இவர்கள் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிரார்களா?

இன்று அறிக்கை விடும் அனைவருக்கும் தெரியும் யார் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மிருகத்தனமும் பொறிக்கித்தனமும் செய்தார்கள் என்று..அந்த மிருகங்களை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்..

அதுமட்டுமல்ல, இன்றைய செய்திகளில், கலவரத்தை கட்டுப்படுத்த, சுமார் 72 கோடி ரூபாய்க்கு லத்திகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்று செய்திவேறு..

எந்தக்காலத்திலும் நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத இந்த மிருகங்கள், இவர்களது அறிக்கையை கேட்டு சும்மா இருந்த விடுவார்களா?

இவர்களின் அறிக்கை எச்சரிக்கையாகத்தோன்றவில்லை.. மாறாக, மறைமுக தூண்டுதலாகத்தான் தெரிகிறது..

Saturday, September 18, 2010

செம்பியன், இந்திரா, வள்ளி..

காலையில் செயத்தித்தாள்களை பிரித்ததாலே எரிச்சல் தான் வருகிறது..

ஏதாவது ஒரு உபயோகமான செய்திகள் உண்டா என்றால் துளியும் இல்லை..

தலைப்பு செய்தி என்று பார்த்தல் சத்துணவில் முட்டை போடுகிறார்களாம்..சரி...ஏதோ மக்களிடம் கொள்ளையடித்த காசு இப்படியாவது அவர்களுக்கு போய் சேருகிறதே என்று ஆறுதலாவகவாவது இருக்கிறது..அதில் ஹெட் லைனைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்..ஆனால் ஒரு முழுப்பக்க செய்தியாகப் போட்டு ஒரு கட்சிக்கு விளம்பரம் தருகிறார்கள்..அல்லது ஆளுங்கட்சிக்கு தங்களது விசுவாசத்தை காட்டுகிறார்கள் .

அடுத்து வரும் செய்திகள் தான் தாங்கமுடிவதில்லை..

நம்பர் ஒன் பேப்பர் என்று அலறிக்கொண்டு இருக்கும் தினகரனில் வரும் தலையங்கம் நிச்சயமாக ...ஒரு மண்ணாங்கட்டியும் புரிவதில்லை..

அப்புறம் நாம் காசுகொடுத்து வாங்கும் இவர்களது பேப்பரில் இவர்கள் நிறுவன செய்திகளாகவே இருக்கிறது..மக்களுக்கு உபயோகமான செய்தி என்று ஒன்றுமே இல்லை..

ஒரு அறுபைத்தைந்து வயது கிழவன் நடிக்கும் எந்திரன் என்ற படம், சென்சார் ஆகிவிட்டதாம்...அதற்க்கு ஒரு நாள் செய்தி..

அப்புறம் அதன் டிரைலர் வெளியீட்டு விழாவாம்..அதருக்கு ஒரு நாள் செய்தி...அப்புறம் அதன் ரிலீஸ் பற்றிய செய்தி வேறு. அதற்க்கு ஒருநாள் செய்தி...என்று..பொறுக்கிகளாகத்திரியும் அந்த கிழவனின் ரசிகர்களுக்கு வேறு வேலை இல்லை என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் அதன் தயாரிப்பாளர்கள் நன்றாகவே காசு பார்கிறார்கள்..


.இதை விட்டு பார்த்தால்..

நமது தமிழக முதல்வரின் முக்கிய வேலை என்ன தெரியுமா?

அவர் கட்சியில் சமீபத்தில் சேர்ந்த ஒரு நடிகையின் கணவன் நடித்த படத்தின் பாடல் கேசட்டு வெளியிடுவதுதான்..

அந்த பாடலை அவர் கேட்டு இருப்பாரா என்றால் சந்தேகம்தான்..அப்படியும் அந்த பாடல்களை அவர் கேட்டு இருந்தால் நாம் ஒட்டு போட்டு தேர்ந்தேடுத்த ஒரு முதலவருக்கு மக்கள் நலப்பணிகள் என்று எவ்வளவோ இருக்க..இது போன்ற கேளிக்கைகளுக்கு அவர் நேரம் செலவிடுவது எவ்வவளவு பெரிய துரோகம்?

அப்புறம் மேற்சொன்ன செம்பியன், வள்ளி, இந்திரா என்ற பெயர்கள்..

வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் உள்ள புலிகளாம்..அதற்குதான் நமது முதல்வர் வேலைமெனக்கெட்டு போய் இந்த புலிகளுக்கு பெயரிட்டு வந்துள்ளார்..

புலிக்கு பெயரிடுவதுகூட நமது முதல்வரின் வேலையா?

பொதுமக்கள் இளிச்சவாயர்களாக இருந்தால் புலிக்கு மட்டுமல்ல....

எலிக்கும் பெயரிட்டு மக்கள் பணியாற்றுவதாக உடன்பிறப்புக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கலாம்..


சமீபகாலமாக உலாவரும் ஒரு குறுந்தகவல்..


"ஷங்கரின் இந்தியனுக்கும் எந்திரன் படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? "

"இந்தியனில் ஒரு இளைஞன் கஷ்டப்பட்டு வயதான கிழவனாக நடித்தான்...எந்திரனில் வயதான ஒரு கிழவன் கஷ்டப்பட்டு இளைஞனாக நடிக்கிறான்.."

ஒரு சந்தேகம்..:எந்திரனில் ரோபோவாக வரும்  நடிகர் எம் எஸ். பாஸ்கர்தானே? ரஜினி ரஜினி என்று சொல்லிகொண்டிருக்கிறார்களே தவிர ரோபோவாக நடித்த எம் எஸ் பாஸ்கரை பற்றியோ அவருக்கு ஜோடியாக வரும் ஐஸ்வர்யாராயின் பெருந்தன்மைப் பற்றியோ ஏன் அவ்வளவு செய்திகள் இல்லை?

Tuesday, September 14, 2010

காவி பயங்கரவாதம்

இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை..

நமது இந்தியாவின் உள்துறை அமைச்சர் திரு சிதம்பரம் அவர்கள் உச்சரித்த இந்த உண்மையான வார்த்தையைக்கேட்டு, இங்குள்ள மதவெறி நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன..ஆனாலும் திரு சிதம்பரம் தான் சொல்லிய "காவி பயங்கரவாதம்" என்கிற இந்த வார்த்தையை வாபஸ் பெற முடியாது என்று கூறியதுடன், அது ஆணித்தரமான உண்மைதான் என்றும் சொல்லிவிட்டார்..உண்மையில் சிதம்பரம் இந்த வார்த்தையை மிகவும் தாமதமாகத்தான் சொல்லி இருக்கிறார்..1947 இல் இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு, வழிபாட்டுத்தலங்கள் அந்த அந்த இடத்திலேதான் இருக்கவேண்டும் என்ற சட்ட திட்டங்களை மீறி, இங்குள்ள மதவெறி நாய்கள் ஐம்பது ஆண்டுக்கும் மேலாக பாபரி மஸ்ஜிதை குறிவைத்து இடித்து தள்ளின.

அத்வானி, உமாபாரதி, பிரவீன் தொகாடியா, வாஜ்பாய், இன்னும் ஏராளமான மதவெறி மிருகங்கள் தலைமையில் பாபரி மஸ்ஜித் இடித்து தள்ளப்பட்டது..அப்போதைய கையாலாகாத காங்கிரஸ் அரசு அதை வேடிக்கைப் பார்த்தது..அதற்க்கப்புறம் இந்தியாவில் நடைபெற்ற ஒவ்வொரு வன்முறை சம்பவங்களுக்கும், இங்குள்ள மத்திய மாநில அரசுகள்  இஸ்லாமிய தீவிரவாதம் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தன..அதற்க்கு பத்திரிகை வியாபாரிகளும் ஒத்தூதினார்கள்..

இல்லாத தீவிரவாத இயக்கங்களை இவர்களாக பெயர் வைத்தார்கள்..

ஆனால் ஒரிஜினல் பயங்கரவாத இயக்கமான ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கிளைகளான பார"தீய" ஜனதா, பஜ்ரங்தல், சிவசேன போன்ற மதவெறி இயக்கங்கள் செய்த அட்டூழியங்களை வெளிக்கொண்டு வர இயலாத கோழைகளாக இநருந்த இங்குள்ள பத்திரிக்கைகள்.


சுதந்திரம் அடைந்த நான்கு மாதங்களுக்குள் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்று மகிழ்ந்த ஆர் எஸ் எஸ் மிருகங்கள்தான் பார"தீய" ஜனதா என்ற பெயரில் இந்தியாவை சில காலம் ஆண்ட அவலம் நடைபெற்றது.

குஜராத்தில் அப்பாவி மக்களை அந்த மாநிலத்தின் முதலமைச்சன் மோடி என்ற மிருகத்தின் உத்தரவின் பேரில் மிருகங்கள் அட்டூழியம் செய்தன..வாஜ்பாய் கைகட்டி நின்றான். அதவானி வாய் மூடி நின்றான்..உமா பாரதி ஒரு சாமியாருடன் காதலில் இருந்தாள்.,, தொகாடியா என்றொரு மிருகம் இங்கே தமிழ்நாட்டில் திருசூலம் வழங்கி, முஸ்லிம் கிறிஸ்துவன், மற்றும் நாத்திகம் பேசுபவனை கொல் என்று குரைத்துவிட்டு சென்றது..

அப்போதும் இங்குள்ள பத்திர்க்கை வியாபாரிகள் ..சினிமாக்காரனுக்கும், கூத்தாடிகளுக்கும் சாமரம் வீசிக்கொண்டு, வாய்மூடி நின்றன...இதுவரை எந்த கோவில்களிலும் குண்டுகள் வெடிக்கவில்லை..மதுரை மீனாக்ஷி கோவிலில் குண்டு வெடித்தது..ஆபாசபத்திரிக்கைகள் அலறின..இஸ்லாமிய தீவிரவாதம் என்று.. ஆனால் காவல்துறை திறமையாக துப்பறிந்தது..கோவில் வளாகத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற சொந்த காரணங்களுக்காக வைக்கப்பட்ட அந்த குண்டுவெடிப்பை கண்டுபிடித்து, இஸ்லாத்திருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று அறிவித்தது..

அதேபோல, தென்காசி ஆர் எஸ் எஸ் மதவெறி அலுவலகலத்தில் வெடித்த குண்டு..அதுவும் அந்த ஆர் எஸ் எஸ் மத வெறியர்கள் தாமாகவே வைத்துகொண்டு முஸ்லிம்கள் மீது பழிபோட செய்த நாடகம் என்று கண்டறிந்த காவல்துறை, அந்த வெறிநாய்களை கைது செய்தது. இதையும் இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் கண்டுகொள்ளவில்லை...அப்புறம் ஹைதேரபாத் மசூதி, மலேகன் மசூதி, அஜ்மீர் தர்கா போன்ற இடகங்களில் குண்டு வெடித்தபோதும், இங்குள்ள மூளை மழுங்கிய பத்திரிகைகள் அதையும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று அலறின..அந்த மடையர்களுக்கு தெரியாது..தனக்குத்தானே எவனாவது குண்டு வைத்து கொள்வானா என்று?

(காவி உடை அணிந்திருப்பவள்தான் மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணமான இந்திய தேச  துரோகி )

அப்போதுதான் மும்பையின் ஹேமந்த் கர்கரே, இந்த குண்டு வெடிப்புகளுக்கேல்லாம் காரணம் பிரக்ஞைய தாகூர் என்ற வெறிநாயின் தொடர்பை கண்டுபிடித்தபோதுதான் இந்த மிருகங்களின் முகத்திரை கிழிய ஆரம்பித்தது..ஆர் எஸ் எஸ், பார"தீய" ஜனதா, சிவசேன போன்ற மதவெறி இயக்கங்களைச் சேர்ந்த மிருகங்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவரது புலனாய்வு அறிக்கை விவரங்கள் வெளிவர ஆரம்பித்தது..மும்பை சம்பவம் நடைபெற்றது..மிருகங்கள் ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான ஒரு அதிகாரியை பலி கொண்டன...இதில் சந்தேகம் எழுப்பிய காங்கிரஸ் அமைச்சரின் பதவியே ஆட்டம் கண்டது..
                                                                                              

மோடி என்ற மிருகம் சம்மந்தம இல்லாமல் மகாராஷ்டிரா வந்து ஹேமந்த் கர்கரே குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுப்பேன் என்றது..ஆனால் தமது கணவரின் மரணத்துக்கு இந்த மிருகம் போன்றவர்கள்தான் காரணம் என்று அறிந்த திருமதி கவிதாகர்கரே அந்த அறிவிப்பை அவன் முகத்திலேயே தூக்கி எறிந்தார்..மோடி என்ற மிருகம் அவமானப்பட்டு ஓடியது..

குஜராத்தில் நடந்த பயங்கரவாதத்தை, நரேந்திர மோடி என்ற ஒரு மிருகத்தின் உத்தரவால்தான் அவனது அடிவருடி மிருகங்களும் அப்பாவி மக்களை கொன்றன என்ற உண்மையை வீடியோ ஆதாரமாக "தெகல்கா" இதழ் வெளியிட்டும்கூட அந்த மோடி என்ற மிருகம் இன்னும் குஜராத் முதல்வராக நீடிக்க முடிகிறது..பாபரி மஸ்ஜிதை இடிப்பதை தூண்டிய அத்வானி, வாஜ்பாயி, உமாபாரதி, தொகாடிய, கல்யாண்சிங் போன்ற ஜந்துக்களும் இன்னும் இன்னும் இந்தியாவில் சுதந்திரமாக அரசு சலுகைகளை அனுபவித்து வர முடிகிறது..

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக காவி பயங்கரவாதம் வெளிப்பட்டு வருகிறது..


இப்போது மத்திய அமைச்சர் காவி பயங்கரவாதத்தின் உண்மை சொரூபத்தை எடுத்துக்காட்டி விட்டார்..


இன்னும் ஆபாச வியாபாரிகள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதை "பத்திரிகை பயங்கரவாதம்" எனலாமா?