Pages

Wednesday, September 29, 2010

அகராதி

தற்கால தமிழ் பத்திரிக்கைகளை படிக்கும்போது சில வார்த்தைகளுக்கு இதுதான் அர்த்தமாக இருக்குமோ என்று தோன்றியது..அதுதான் அகராதியாக கீழே..

அழகி = விபச்சாரம் செய்பவள் 
 வி ஐ பி = சினிமாவில் கூத்தடிப்பவன் 
பொது மக்கள்.= அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பைனான்ஸ்காரனிடம் ஏமாந்துவிட்டு போலிஸ் நிலையத்தை முற்றுகை இடுபவன்  .

குடிமகன் = குடித்துவிட்டு நடுரோட்டில் பொறுக்கித்தனம் பண்ணுபவன்  
ரசிகன் = எவனோ ஒருத்தன் காசு வாங்கி நடிக்க, பெற்றோரை மறந்து சினிமா சினிமா என்று அலையும் பொறுக்கி 
முஸ்லிம் தீவிரவாதி வைத்திருக்கும் பயங்கர ஆயுதங்கள் = கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன், வயர், ஸ்க்ரூ டிரைவர் 
அரசியல்வாதி, தலைவன் = கோடி கொடியாக கொள்ளையடிப்பவன், லஞ்சம் வாங்குபவன் 
ஊழல் அதிகாரி = நூறு, ஆயிரம் லஞ்சம் பெறுபவன் 
தொழிலதிபர் = சினிமா நடிகையை திருமணம் செய்பவன்
ஜட்ஜ் = ஆபாச டி வி நிகழ்ச்சி நடுவர்
கெமிஸ்ட்ரி, கோரியக்ராபி = ஆண் பெண்களை ஆபாசமாக ஆடவிட்டுட்டு சொல்வது..
வாலிபர் = நாற்பது வயதைக் கடந்தவன் 
சூப்பர் ஸ்டார் = அறுபது வயதைக் கடந்தவன்
வருங்கால முதல்வர் = நேற்று நடிக்க வந்தவன் 
 பிரபல ரவுடி = என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பொறுக்கி 
கவிஞர் = கேவலமான பாட்டு எழுதுபவன் (குத்துப்பாட்டு) 
பெரிய கவிஞர் = அரசியல்வாதிகளையும், சினிமாக்கூத்தாடிகளையும் அதிகமாக புகழ்ந்து வாழ்பவன்
இலக்கியவாதி = ஜோல்னாபை, தாடி,கண்ணாடி அணிந்து, சாராயக்கடைகளில் விவாதித்துக்கொண்டிருப்பவர்கள்.. 
சினிமாக்கதாசிரியர் = ஹோட்டலில் ரூம் போட்டு குடிப்பவன் 
டி வி கதாசிரியன் = விதவிதமான கள்ளகாதல்களை கண்டுபிடிப்பவன்
 சினிமா காமெடியன் = சினிமாவில் எல்லாவற்றுக்கும் குவாட்டர் ஆப் அடிப்பவன்.
பிரம்மாண்டமான இயக்குனர்  =தயாரிப்பாளரை போன்டியாக்கும் இயக்குனர்
யதார்த்த  இயக்குனர் = ஆபாசமாக படம் எடுப்பவன்
தேச பக்தன் =  கோடி கோடியாக சம்பளம் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாடுபவன்

நடிகைகளின் கலைச்சேவை = வெளிநாடுகளில் ஆபாச நடனம் ஆடுவது
சிறந்த ஆங்கிலப்படம் = இருட்டில் எடுக்கப்படும் ஆங்கிலப்படம் 
சிறந்த கேமராமன் = விலை உயர்ந்த கேமரா மூலம் படம் பிடிப்பவன் 

தினப் பத்திரிகை :  கொலை, கொள்ளை, கள்ளத்தொடர்பு, விபத்து செய்திகளை வெளியிடுவது
வாரப் பத்திரிகை : சினிமா நடிகையின் ஆபாசப்படம், அவளது படுக்கை அறை விசயங்களை வெளியிடுவது
வாரமிருமுறை பத்திரிகை : விபச்சாரிகள், கொலைகாரர்கள், பொறுக்கிகளை நியாயப்படுத்தி போலிசுக்கு எதிராக எழுதுவது
இளம் காதலர்கள்  = ஓடிப்போகிரவர்கள்
காதலர்கள் = தற்கொலை செய்துகொள்பவர்கள்
கள்ளக்காதலர்கள் = கொலை செய்பவர்கள்
தமிழ்பற்று : இந்திய விரோதிகளுக்கு ஆதரவளிப்பது
தமிழக முதலமைச்சர் :  அதிகமாக சினிமா விழாக்களில் கலந்துகொள்பவர்.
 எதிர்க்கட்சி தலைவர்  = தினம் ஒரு போராட்டம் அறிவிப்பவர் 
தமிழக மக்கள் : எந்திரன் படம் பார்பதற்காக காத்துக் கொண்டிருப்பவர் 
தமிழ் ப்ளாக்கர்ஸ் = எந்திரன் படத்துக்கு இலவச விளம்பரம் செய்பவர் 

12 comments :

ஜீவன்பென்னி said...

//தமிழ் ப்ளாக்கர்ஸ் = எந்திரன் படத்துக்கு இலவச விளம்பரம் செய்பவர்//

திரும்பிய பக்கமெல்லாம் இதுதான் நடந்துகிட்டு இருக்கு. திரட்டிகளும் அந்தப்பதிவுகளுக்கு அதிகமா முக்கியத்துவன் தருகிறார்கள்.

ஷர்புதீன் said...

தமிழ் ப்ளாக்கர்ஸ் = எந்திரன் படத்துக்கு இலவச விளம்பரம் செய்பவர்


wow!!

மங்குனி அமைசர் said...

ஹா.ஹா.ஹா,,,,,
மர்மயோகி= ரூம் போட்டு இதையெல்லாம் தீவிரமாக சிந்தித்து எழுதுபவர்

முசமில் இத்ரூஸ் said...

Arumai.....Arumai
sila karuthukkal sattru nerudalaga ulladhu.

வால்பையன் said...

ரொம்ப அகராதி பிடிச்சவர் தல நீங்க!

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்
திரு ஜீவன் பென்னி
திரு ஷர்புதீன் (யோவ் எங்கேய்ய இருக்கே?)
திரு மங்குனி அமைச்சர்
திரு முசமில் இத்ரூஸ்
திரு வால் பையன்
அனைவருக்கும் நன்றி

Anonymous said...

மர்மயோகி அகராதியில் விளக்கங்கள் எல்லாமே வில்லங்கமாக இருக்கும் போல..

மர்மயோகி said...

நன்றி இந்திரா மேடம்...
அகராதி ஏறக்குறைய பொருந்துகிறதா இல்லையா..அதை சொல்லுங்கள்..

தனி காட்டு ராஜா said...

சிப்பு சிப்பா வருது தல ...

மர்மயோகி said...

நன்றி தனிக்காட்டு ராஜா.

thameem said...

yosithu yosithu mudiponathuthan michaqm

எஸ்.கே said...

நல்ல அகராதி!!!

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?