Pages

Tuesday, January 31, 2012

முரண்

 முன்குறிப்பு : இதை ஒரு சினிமா விமர்சனம் என்று நீங்கள் கருதினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல ....என்று தட்டி கழிக்க மாட்டேன்..நான்தான் பொறுப்பு..கீழே உள்ள படம் தான் காரணம்..ஹிஹி...

நெடுநாட்களாகிவிட்டது தமிழ் வாரந்திர பத்திரிக்கைகளை படித்து...அவைகளில் வெறும் ஆபாச செய்திகளே கொட்டிக்கிடக்கிறது என்பதைத்தவிர வேறு என்ன உள்ளது..
இருந்தாலும், சமீபத்தில் ஒரு நீண்ட - ஏறக்குறைய 36 மணி நேர இரயில் பயணம் என்பதாலும், செல்வது வடஇந்தியா என்பதாலும் ஒரு சில தமிழ் பத்திரிக்கைகளை வாங்கி வைத்துகொள்ளலாம் என்றுதான் குமுதம் மற்றும் ஆனந்த விகடன்  என்ற பலான பத்திரிக்கைகளை வாங்கினேன்.

உலகமே தமிழ்தான் என்று பீற்றிகொள்ளும் இவர்களுக்கு - இந்தியாவில் அதுவும் சென்னையில் சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டாலே தமிழுக்கு இனி வேலையே இல்லை எனபது போல்தான்..எங்கும் ஹிந்தி, உருது, தெலுங்கு போன்ற மொழிகள்தான் ---
தமிழ், விடுதலைப்புலிகளுக்கும், முல்லைப்பெரியாருக்கும் தான் பயன்படுகிறது,,,அதுவும் அரசியல் வியாபாரிகளுக்குமட்டும்..,,- இந்திய தேசப்பற்று கிரிக்கெட்டில் மட்டும் வெளிப்படுவதுபோல...

இதில் என்ன முரண் என்றால்...தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைக்கும் விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள், முல்லைப்பெரியாறு விசயத்தில் கேரளா அரசு சுப்ரீம் கோர்ட் ஆணையை மீறிவிட்டது என்று கூக்குரலிடுகின்றன...
அதே கைக்கூலிகள், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுபேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய ஓலமிடுகின்றன..

அது ஒரு பக்கம இருக்கட்டும்,

ஆனந்த விகடன் என்ற பலான பத்திரிகையில், திமுக இளைஞர் அணித்தலைவராக ஐம்பது வயதைக்கடந்த முக ஸ்டாலின் இருக்கலாமா என்று கேலி செய்துவிட்டு, ரஜினி என்ற அறுபத்த்டைந்து வயது கிழ நடிகருக்கு  சிறு சிறு  வயது  நடிகைகளை கூட்டிக்கொடுக்க போட்டி போடுகின்றன.

 குமுதம் அதைவிட ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதை அப்பட்டமாக நிரூபிக்கிறது...
சுகாசினி என்ற நாற்பது வயதை கடந்த ஒரு நடிகைக்கு, இளைஞர்களை ஜோடி சேர்க்க வேண்டுமாம்..

ஒரு மேடையில் இதை சொன்ன ஒரு நடிகை அதைவிட ஒரு கேவலமான ஒரு விசயத்தையும் போது மேடையில் சொல்லி இருக்கிறாள்...கணேஷ்  வெங்கட் ராம் என்ற ஒரு நடிகருக்கு தனது தோழிகளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்றிருக்கிறாள்..இதற்க்கு என்ன அர்த்தம்?
இதை குமுதம் வெளியிடுவதின் நோக்கம் என்ன?

முன்பு குஷ்பு என்ற நடிகை திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்ற ஆபாசக்கருத்தை வெளியிட்ட போது ஓலமிட்ட தமிழ் வீரர்கள் இப்போது என்னத்தை புடுங்கிக்கிகொண்டிருக்கிரார்கள்?

பத்திரிக்கையை ஒருவன் காசுகொடுத்து வாங்குவது இதுபோன்ற வெறும் குப்பைகளுக்காகவும், விபச்சாரத்தை பரப்பவும் அல்ல..

இவைகளையே செய்திகளாக வெளியிட்டு பத்திரிக்கை விபச்சாரம் செய்யும் பலான பத்திரிக்கைகளுக்கு, அரசையும், காவல் துறையையும், சட்டத்தையும் விமர்சனம் செய்யும் தகுதி சிறிதாவது  இருக்கிறதா என்று நாம் சிந்திக்கவேண்டும்.. 

Tuesday, January 17, 2012

நண்பன் - சரக்கு தீர்ந்தவர்களின் சரணாலயம்.ப்ளாக் புதிதாக எழுத ஆரம்பித்த கால கட்டங்களில் மளமளவென்று எழுதி தீர்த்து தள்ளுவோம்..ஒரு காலகட்டத்தில், தினமும் என்றிருந்தது, வாரத்திருக்கொரு பதிவு என்று மாறும்,  பின் மாதம் ஒன்று என்று குறைத்துகொள்வோம், சில நேரங்களில் சப்ஜெக்டே தோன்றாது..ஏதாவது ஒரு பதிவை காப்பி பேஸ்ட் செய்து பதிவு செய்து ஓட்டுவோம்..
அப்படித்தான்...

ஹிந்தியில் தர்மேந்திரா நடித்த "ஜுகுனு" என்ற படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க "குரு" என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது..அந்த படத்தின் அப்பட்டமான தழுவல்தான் ஷங்கரின் முதல் படமான "ஜென்டில் மென்" ..முதல்பதிவே..சாரி முதல் படமே காப்பி அண்ட் பேஸ்ட் செய்த ஷங்கர், தொடர்ந்து ஊழல் பற்றிய கதைகளையே எடுத்து காலத்தை ஓட்டினார்...முதல்வன் படம் வரை அவரிடம் இருண்ட சரக்கு தீர்ந்துவிட, தொடர்ந்து அந்நியன், சிவாஜி, எந்திரன் என்ற போலி வெற்றி படங்களை தந்து தான் ஒரு தோல்விப்பட இயக்குனர் என்று நிரூபித்தார். சிவாஜி மற்றும் எந்திரன் படங்களிலேயே ஷங்கரிடம் சரக்கு இல்லை என்று தெரிந்து விட்டது....அந்த படங்களின் வெற்றி என்பது கூட, ஒரு தோற்றுவிக்கப்பட்ட பிம்பம்தான் என்பதும் உண்மையிலேயே அவைகள் படுதொல்விப்படங்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதனால்தான், ரஜினியும், ஷங்கரும் மீண்டும் இணையவிரும்பவில்லை என்பதும் அப்பட்டமான உண்மை.
எனவே தான், இதற்குமேலும், தனது பருப்பு வேகாது என்றுணர்ந்த ஷங்கர், மீண்டும் காப்பி அண்ட் பேஸ்ட் போல ஹிந்தியில் வெற்றி கண்ட த்ரீ இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்து தன இருப்பை மீண்டும் உறுதிபடுத்திகொள்ள முயற்ச்சித்தார்.

 அதேபோல, கில்லி படத்திற்கு அப்புறம் எத்தனையோ ரீமேக் படத்தில் நடித்தும் அனைத்தும் படு தோல்வி படங்களாகவே அமைய, விஜய்க்கும் ஒரு வெற்றிப்படம் தேவைப்பட்டது..
ஸ்ரீகாந்த், சத்யராஜ் போன்றோருக்கும் இதே நிலைதான்..

சரி படத்தின் கதைக்கு வருவோம்.
பெரிய ஜாமீன் ஒருவரின் மகனின் பெயருக்கு பின்னால் டிகிரி வாங்குவதற்காக - அவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து படிக்கவரும் ஒரு பிராடு ஒருவன் அந்த காலேஜின் பாடத்திட்டங்களி சாடுவதும் அந்த காலேஜ் பிரின்சிபாலின் மகளையே காதலிப்பதும் பிறகு நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடி விடுவதும், அந்த நண்பர்கள் பத்துவருடங்கள் கழித்து சந்திப்பதும், அதுவரைக்கும் அவனும், அவன் காதலியும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு கோமாளித்தனமான கதையே இந்த இடியட்..நண்பனின் கதையும்.

பாண்டிச்சேரி அமைச்சர் ஒருவர்  பத்தாவது தேர்வுக்கு ஆள் மாறாட்டம் செய்து தலைமறைவாக இருக்க, ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாண்டுகள் ஆள்மாறாட்டம்  செய்து, டிகிரியும் வாங்கி, அதன் பிறகும் மாபெரும் விஞ்ஞானியாக அந்த பிராடு இருப்பதை ஏதோ ஒரு தியாகம் போல் காட்டும் இந்த ஏமாற்றுக்கார கூத்தாடிகள் நம்மைதான் முட்டாள்களாக்கி இருக்கிறார்கள்..
கதாநாயகியாக வரும் இலியானா என்பவர் ஒல்லியாக இருப்பதை தவிர வேறு எந்த சிறப்பும் அவருக்கு இல்லை..தந்தையிடம் கல்லூரி அறையின் சாவியை திருடுவதற்காக அவள் குடித்துவிட்டு வருவதாக காட்டுவது கேவலத்திலும் கேவலம்..
அந்த நடிகையின் உடம்பை துகிளுரித்துக்காட்டுவதர்காக, இந்தி படத்தில் இல்லாத ஒரு எக்ஸ்ட்ரா பாடல் காட்சி..அந்த காட்சியில் அந்த நடிகையை தவிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட இடை அழகிகளின் ஆபாச நடனம் இவர்கள்  ஒருக்காலத்திலும் நல்ல படம் எடுக்கமாட்டார்கள் என்பதை காட்டுகிறது.
பிரின்சிபாலாக வருபவர் ஏதோ எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் போல மாணவர்களை அடிக்கிறார்...

கல்லூரி விழா ஒன்றில் அவரையும் அமைச்சர் ஒருவரையும் ஒரு மாணவன் கேவலப்படுத்தி பேசுவது நகைச்சுவை என்ற பெயரில் படு ஆபாசம்.

இரவில் குடித்துவிட்டு திருட்டுத்தனமாக மாடி ஏறி வரும் கதாநாயகனுக்கு, கர்ப்பிணி பெண் தன வயிற்ரை காட்டி "ஆள் ஈஸ் வேல் " என்று சொல்லி தடவ சொல்கிறாள்..தன தங்கையை அவனுக்கு முத்தமிட கூட்டி கொடுக்கிறாள்..இது போன்ற கேவலமான குடும்பத்தின் தலைவர்தான் கல்லூர்ரி பிரின்சிபாலாம்..ஹ்ம்ம்ம்

ஏற்கனவே எந்திரன் என்ற படத்தில் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சி..இந்த படத்தில் பிராடு எஞ்சினியரின் மாணவன் பிரசவம் பார்க்கும் காட்சி..கப்பிக்குள் காப்பி..நல்ல காமெடி..
கதாநாயகன்  காணமல் போன பின் பத்து வருடமாக கல்யாணமே ஆகாமல் கதாநாயகி இருப்பதாக காட்டி இருப்பது நகைச்சுவை என்றால், கதானாயகனைப்பற்றி நண்பர்கள் அறிந்து தேடிப்போகும் வழியில் எந்த ஒரு விசாரணை இன்றியும், இரண்டு வசனங்களை மட்டும் பேசிவிட்டு கதாநாயகி அவர்களுடன் ஓடிப்போவதும் மகா கேவலம்..
இந்த படத்தை ஏன் புகழ்கிறார்கள் என்றே தெரியவில்லை..

நண்பன்....ஆள்மாறாட்டம் செய்த பிராடு. 


Friday, January 6, 2012

கொலையை கண்டித்து கொலை செய்யும் கொலைகாரர்கள்..ஒரு கொலையை கண்டித்து பல கொலைகள் செய்யும் அவலமும் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கமுடியாத, கையாலாகாத  சட்டமும் நமது நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது..
நேற்று சென்னை நகரத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டி, சட்டத்தின் அவல நிலையைத்தான் காட்டுகிறது.
ராஜீவ்காந்தி கொலையில் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளி பிரபாகரன் புகைப்படத்துடன், விடுதலைப்புலிகளுக்காக - வாழ வக்கின்றி கோழைத்தனமாக தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமார், வாசுகி போன்ற விடுதலைப்புலிகளை வீரர்கள் என்று வர்ணித்து ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டி அமைத்தவர்களை இன்னும் கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது கேவலத்திலும் கேவலம்.
உனக்கு தைரியமிருந்தால் ஒரு சிங்கள ராணுவ வீரனை கொன்றுவிட்டு செத்துப்போயிருக்கவேண்டும்..அதை விடுத்து, இந்தியாவில் தனது கோழைத்தனத்தை வீரம் என்று பேர் வாங்குவதற்காக தற்கொலை செய்து கொண்டவர்களை ஊக்குவிக்கும் ஒவ்வொரு பயங்கரவாதியும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே..
இந்திய குற்றவியல் சட்டப்படி, தற்கொலை முயற்ச்சி  செய்வது ஒரு தண்டனைக்குரிய குற்றம். அப்படி தற்கொலை செய்பவர்களை மாவீரனாக சித்தரித்து - விடுதலைப்புலிகளிடம் காசு பெற்று தற்கொலை செய்வதற்கு நிதி உதவி செய்து, தற்கொலைகளை தூண்டும் மாபெரும் குற்றத்தை இங்குள்ள சில தேச விரோதிகள் - விடுதலைப்புலிகளின் அடிவருடிகள் செய்து வருகின்றன. அதற்க்கு தமிழ்பற்று வியாபார போர்வையை போர்த்திக்கொண்டு செய்யும் இந்த தேச துரோகிகள் நாடு கடத்தப்படவேண்டியவர்கள்..

இதேமாதிரிதான், தவறான சிகிச்சை வழங்கியதால், தனது மனைவி இருந்ததற்கு காரணம் என்று டாக்டர் சேது லக்ஷ்மி என்பவரை ஒரு வெறியன் கொன்றிருக்கிறான். அதற்க்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..
ஆனால், இதை காரணம் காட்டி, தமிழகத்தில் மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திருப்பது உச்சக்கட்ட பயங்கரவாதம். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதினால் எத்தனை உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் எனபது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
இந்த கொலைக்காக வேலை நிறுத்தம் என்ற பெயரில் இவர்கள் செய்திருக்கும் இந்த மறைமுக கொலைகளுக்கு பழி  வாங்க என்று யாராவது புறப்பட்டால், தமிழ்நாட்டில் டாக்டர்களுக்கு பஞ்சம்தான் ஏற்படும்..

இந்த முட்டாள்தனமான செயலை செய்த மருத்துவர்கள்  அனைவரும் சட்டத்தின் முன் குற்றவாளிகளே..சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே.