Pages

Sunday, June 17, 2012

கலாம் என்றால் கலகம்
கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி சொல்வதில் தப்பே இல்லை என்றே தோன்றுகிறது..
ஏற்கனவே ஜனாதிபதி பதவியை அனுபவித்து, ஒவ்வொரு பள்ளிக்கூடமாக சென்று சிறுவர்களுடன் பொழுதை கழித்த அப்துல் கலாமை - மீண்டும் ஜனாதிபதியாக்க மம்தா முயல்கிறார்..மம்தாவின் எண்ணம் நிறைவேறாது என்று தெரிந்தும், கலாம் மௌனம் காப்பதின் அர்த்தம் என்ன? ...எனக்கு மீண்டும் அந்த பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டால் நிலைமை சீராகிவிடும்...தெரிந்தும் தனக்கு பதவி கிடைக்காதா என்ற பேராசையில் ஜனாதிபதி தேர்தலில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் இந்த வேளையிலும் தொடர்ந்து மௌனம் சாதிக்கும்  கலாமை கருணாநிதி அப்படி குறிப்பிட்டதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.

இதற்கும் முன்பு கலாமை  ஜனாதிபதியாக ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா, இந்த முறை - ஜனாதிபதவிக்கு ஆளாய் பறக்கும் சங்மாவை ஆதரிப்பதும் வேடிக்கை.. தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டை சேர்ந்த கலாமை இந்தமுறை ஜனாதிபதியாக ஆதாரிக்காமல் இருப்பதும், அதேபோன்று, மேற்கு வங்காள முதல்வர் மம்தா, மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க எதிர்ப்பு தெரிவிப்பதும் இவர்களின் ஈகோவை நமக்கு அறிய வைக்கிறது..

கருணாநிதியும் ஒன்றும் சளைத்தவரில்லை...எவ்வளவு கேவலப்படுத்தினாலும், ரஜினியை ஒரு அற்புதமாக இன்றுவரை போற்றி வரும் ஒரு பகுத்தரிவற்றவராகவே தோன்றுகிறார்...ஏதோ ரஜினி இருந்தால் தான் மீண்டும் பதவியை அடைந்துவிடலாம் என்று அவர் எண்ணுவது இவர் எப்படி இத்தனை காலம் அரசியலில் குப்பை கொட்டினார் என்று தோன்றுகிறது.

சன் குழுமத்திக்கும், கலைஞர் டிவிக்களுக்கும் ரஜினி படம் போடாவிட்டால் டிவியே நடத்த முடியாது போலிருக்கிறது..செல்லப்பிராணிகள் வாரம், கவர்ச்சி நடிகைகள் வாரம், ஸ்ரீதேவி வாரம், திகில் வாரம், என்று எந்த கருமாந்திர வாரம் என்று படம்போட்டாலும், அதில் கடைசியாக ரஜினி படம் போட்டு ஆகவேண்டும் என்று லூசுத்தனமான விதியே வைத்து இருக்கிறார்கள்..

இரட்டை இலைக்கு ஒட்டு போட்டுவிட்டு, நோய் வாய்ப்பட்டு படுத்திருந்தும் ஜெயலலிதாவுக்கு மறக்காமல் வாழ்த்து சொன்ன ரஜினி நேற்று கருணாநிதியை சந்திக்கும்போது கருணாநிதி முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...கேவலமாக இருக்கிறது. சினிமாக்காரர்களின் ஆதரவு,,,அது நடிப்பாக இருந்தாலும் கருணாநிதிக்கு தெம்பளிக்கிறது என்றால் இவர் எப்படி மக்கள் நலனில் அக்கறை உடையவராக இருப்பார்?

நேற்று படித்த இன்னொரு செய்தி :

தடகள வீராங்கனை (?) பிங்கி என்பவர் பெண்ணல்ல ஆண் என்றும அவர் தன வாழ்க்கையிலும் விளையாடி விட்டார் என்றும் ஒரு பெண்மணி புகார் கொடுத்து இருக்கிறார் .
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அவரை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பதை பார்த்தால் சிரிப்பாகத்தான் வருகிறது.
ஒருவர ஆணா அல்லது பெண்ணா என்று அறிவதற்கு எதற்கு  மருத்துவ பரிசோதனை?
அல்லது ஆசிய போட்டிகளின் போது இவருக்கு எந்த பரிசோதனையும் நடத்தாமல் "சும்மா" விளையாட விட்டார்களா?

Saturday, June 2, 2012

டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?ஒரு கன்னட நடிகை தமிழர்களை பற்றி பேஸ்புக் வலைத்தளத்தில் எழுதிவிட்டாளாம்..தமிழ் வியாபாரிகலேல்லாம் குதி குதி என்று குதிக்கிறார்கள்...
                                             வேற  போட்டோவே கெடைக்கல்லப்பா 
.
அதே நடிகையின் கவர்ச்சி படத்தை அட்டையில் போட்டு வியாபாரம் செய்யும் ஆபாச பத்திர்க்கைகளுக்கு கேட்கிறேன்..டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?

கன்னடத்தை சேர்ந்த ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்க ஆளாய் பறக்கும் ஆபாச பத்திரிக்கைகளையும், அரசியல் வியாதிகளையும் கேட்கிறேன் ..டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?

கன்னடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராயை ரஜினிக்கு ஜோடியாக போட்டு புளங்காகிதமடைந்த அதே ஆபாச  பத்திரிக்கைகளை கேட்கிறேன் டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?

ரஜினியுடன் ஒருதடவை நடித்தால் போதும் என்று கூறும் நடிகையை அட்டைப்படத்தில் போட்டு வியாபாரம் செய்யும் ஆபாசபத்திரிக்கைகளே...டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?

ஆதிக்க வெறிபிடித்து அலையும் அமெரிக்காவின் பயங்கர போர்க்கப்பளுக்கு கமலஹாசன் மட்டுமே சிறப்பு அழைப்பாளராம்..இதை பெருமையடிக்கும் மூடர்களே..டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?

முத்தம் கொடுத்து நடிப்பதை ஏதோ புண்ணியமான  காரியம் மாதிரி ஒரு பக்கம் செய்திபோடும் கேவலமான வியாபாரிகளே...டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?

இந்தியாவில் பயங்கரவாதம் புரிந்த விடுதலைப்புலிகளை கொண்டாடும் பயங்கரவாத தமிழ் பற்று வியாபாரிகளை இன்னும் கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறோமே...டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?

பெட்ரோலுக்கு லிட்டருக்கு ஏழு ரூபாய்க்கு மேல் ஏற்றி விட்டு, சிறிது நாள் கழித்து இரண்டு ரூபாய் குறைத்ததை மத்திய அரசு பணிந்தது என்று முட்டாள்தனமாக கொண்டாடுவோரே.  .டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?

பஸ் டிக்கெட்டுக்கு ஐம்பது பைசா ஏற்றினால் போராட்டம் என்று குதிக்கும்  வீரத்தமிழர்களே..தினமும் குவாட்டருக்கும் ஆப்புக்கும்...வாங்கும் சம்பளத்தை எல்லாம் செலவழிக்கும் குடிகாரர்களே..டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?

எவ்வளவு கேவலப்பட்டாலும் சரி...சினிமாக்காரனைத்தான் தமிழ்நாட்டுக்கு முதலமைச்ச்சராக்குவோம் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் தமிழர்களே...டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?


ஒரு நடிகை..அதுவும் உடம்பை காட்டி நடிக்கும் நடிகை கேவலமாக எழுதும் அளவுக்கு இருக்கும் தமிழர்களே... டேய்..உங்களுக்கு வெட்கமா இல்லை ?