Pages

Monday, April 26, 2010

ஐ பி எல், ஜென்டில்மேன்கள், அடிமைகள்.

"இனிமேலும் கிரிக்கெட்டை "ஜென்டில்மேன்களின் விளையாட்டு" என்று சொன்னால் இதை கண்டுபிடித்த வெள்ளைக்காரன் நம்மை உதைக்க வரமாட்டானா? "

ஆபாச வியாபாரம் செய்யும் ஆனந்த விகடன் ஐ பி எல்லை பற்றிய சமீத்திய தலையங்கம் இது .  இந்திய ஐ பி எல் விளையாட்டில் ஊழல் வெளிவந்து விட்டதாம்..இனிமேல் கிரிக்கெட்டை ஜென்டில்மேன்கள் விளையாட்டு
 என்று சொன்னால் வெள்ளைக்காரன் நம்ம அடிக்க வந்துவிடுவானாம்..அட பன்னாட...

இன்னுமா உன் அடிமை புத்தி போகல...சுதந்திரம் வாங்கி அறுபது வருடங்களுக்கும் மேல ஆயாச்சு,, வெள்ளக்காரன நாம் தொரத்தி அடிச்சாச்சி..ஆனா இந்த பார்ப்பன ஆனந்த விகடன், தன் பரம்பரை அடிமைத்தனத்தையும் விசுவாசத்தையும் இன்னும் விடாம, கிரிகெட்டை ஜென்டில்மேன் விளையாட்டுன்னு சொன்னா  வெள்ளைக்காரன் அடிக்க வந்துடுவான்னு சொல்றானே..

வெள்ளைக்காரன் சொல்லிட்டா அது ஜென்டில்மன் விளையாட்டா? வெள்ள டிரஸ் உடுத்திட்டா அது ஜென்டில்மேன் விளையாட்டா..யாருடா சொன்னது?
இரயில் பாதைகளை அமைத்தது வெள்ளைக்காரன்தான் என்று சொல்லுவார்கள் (ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் ஆட்சி செய்தாலும் அந்தக்கால தேவைகளை பூர்த்தி செய்தே ஆகவேண்டும்)...அப்படிஎன்ற ரயில் ஆக்சிடென்ட் ஆனால் வெள்ளைக்காரன் வந்து உதைக்கிரானா?சில கட்டிடங்களை கட்டி வைத்து இருந்தான்..அதை இடித்திருக்கிறோம்..அப்போது வந்து என்னத்தை புடுங்கினான் ?

வெள்ளைக்காரன் காலத்தில் உள்ள விசயங்களில் இந்திய நிறைய மாறுதல்களைச் சந்தித்து வருகிறது...அவனுக்கு அடிமை என்கிற மனோபாவம் மட்டும் இன்னும் மாறவில்லை..அதற்கு ஆனந்த விகடன் போன்ற அடிமைகளும் அடிக்கடி இது போல தூபமிட்டு வருவதும் ஒரு காரணம்..


கிரிக்கெட் முட்டாள்களின் விளையாட்டுன்னு அவங்க வெள்ளைக்காரனே சொல்லிட்டானே அது தெரியாதா  இந்த ஆபாச வியாபாரிக்கு?

பந்தை சேதபடுத்தினார்கள், பிட்சை சேதப்படுத்தினார்கள், சூதாட்டம் விளையாண்டார்கள்..

கண்ட கண்ட நடிகைகளுடன் சுற்றினார்கள்..விளம்பரத்தில் அந்நிய பொருட்களை வாங்க சொன்னார்கள்..எல்லாம் செய்து விட்டு நாட்டுக்காக விளையாடுகிறேன் என்று சொன்னார்கள்..அப்போதெல்லாம் தெரியவில்லையா இது ஒரு ஏமாற்று வேலை என்று?

 ஐ பி எல் வந்தது..

ஆடம்பரம் செய்தார்கள்... நான்கு ரன்கள். ஆறு ரன்கள் எடுக்கும்போதும், மற்றும் அவுட் ஆகும்போது, அழகிகளை விட்டு ஆபாச நடனம் ஆடச் செய்தார்களே அப்போது தெரியவில்லையா இது ஒரு கேவலமான விளையாட்டு வியாபாரம் என்று?

பண்டைய காலங்களில் மன்னர்கள் அடிமைகளை ஏலம் எடுப்பதுபோல விளையாடுபவர்களை கோடி கணக்கில் ஏலத்தில் எடுத்தார்களே அப்போது தெரியவில்லையா இது ஒரு அடிமைகளின் விளையாட்டு என்று..?

அந்த அணிகளின் முதலாளிகள் யார்? சாராயம் விற்பவன், சினிமாவில் கூத்தடிப்பவன், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள்தானே...அப்போது தெரியவில்லையா இது ஒரு விபச்சாரிகளின் கூட்டம் என்று?

ஒரு பக்கம் சாருக்கான் நின்று கொண்டு ஆடுகிறான், ஒரு பக்கம் ப்ரீத்தி ஜிந்தா வர்றவன் போறவனை எல்லாம் கட்டி பிடித்துக்கொண்டு இருக்கிறாள்..இன்னொரு பக்கம் சில்பா செட்டி கண்டவனுடன் போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கிறாள், விஜய் மல்லையாவின் மகன் தீபிகா படுகோனே என்ற நடிகையுடன் அலைகிறான்.அம்பானியின் மகளை ஹர்பஜன் சிங் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகிறான் (கொண்டாட்டமாம்)

.அப்போது தெரியாதா இது ஒரு அசிங்கமான விளையாட்டு என்று?


லலித் மோடி ஊழல் செய்தான், சசி தரூர் அதிகாரத்தை பயன் படுத்தினான், பெண்களும் நடிகைகளும் பகடைக்காய்களாக  இருக்கிறார்கள்...

இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது...

இதே லலித் மோடியை வைத்து
 "எப்படி ஜெயித்தார்கள்"  என்று கட்டுரை எழுதி இளைஞர்களின் வழிகாட்டியாக, ஒரு மாபெரும் சாதனையாளனாக  இந்த ஆபாச பத்திரிக்கைகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லையா?

பாரம்பரிய பத்திரிகை என்று பீற்றிகொள்ளும் இந்த மாங்கா மடையனுக்கு இதைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லையா இது ஒரு ஏமாற்றுபவர்களின் சூதாட்டம் என்று?

இப்போது இந்த ஐ பி எல் விவகாரத்தை வைத்து இந்த பன்னாடைகள் என்னத்தை கிழிக்கப்போகின்றன...வியாபாரம் அவ்வளவுதான்..

பெங்களூரு ஸ்டேடியத்தில் குண்டு வைத்ததுகூட இந்த ஊழலை மறைக்க இந்த பண முதலைகளே நடத்தி இருக்கலாம்..


 
வழக்கம்போல டெஸ்டு கிரிகெட்டும், ஒன் டே கிரிக்கெட்டும், டி 20 கிரிக்கெட்டும் நடந்து கொண்டுதான் இருக்கும். பண முதலாளிகளும், கிரிக்கெட் பெருச்சாளிகளும், விளையாடும் அடிமைகளும், ஆட்டம் போடும் ஆபாச கூத்தாடி முதலாளிகளும், ஊடகங்களும், சம்பாதித்துக்கொண்டுதான் இருப்பார்கள்..பத்திரிக்கைகள் இதை வைத்து பிழைத்துக் கொண்டிருப்பார்கள்....

வெக்கம்கெட்ட விகடன் உணர்ந்துகொள்ளட்டும் வெள்ளைக்காரன் அடிக்க வந்தால் செருப்படி வாங்குவான் என்று..அவன் மட்டுமல்ல அவனுக்கு வால்பிடித்து இன்னும் அடிமையாக  வாழும் .அவன் அடிமைகளும்தான் !

Saturday, April 24, 2010

ஒட்டு வாங்கிக் குவிக்கும் மொக்கைகள்..!!!

ஒட்டு வாங்குவது ஒரு கலை, நான் கலைஞரைச் சொல்லவில்லை..அழகிரியைப் பற்றியும் சொல்லவில்லை...நமது பதிவர்கள் ஒட்டு வாங்க அலையும் போக்கைத்தான் சொல்கிறேன்..

இந்த பிளாக்கர்களுக்கு இணையத்தளம் ஒரு சரியான வடிகாலாக இருக்கிறது..நன்றாக எழுதுபவர்களாகட்டும், எழுத ஆசைப்படுபவர்களாகட்டும்...சுமாராக எழுதுபவர்களாகட்டும் எல்லாரது ஆசையும் தீர்த்துவைத்துவிடுகிறது இந்த ப்ளாகர்ஸ் பக்கம்..

தமிழ்மணத்திலும், தமிளிஷிலும் ஒட்டு வாங்க,, நிறைய நண்பர்களைப் பிடித்து வைத்திருந்தால் போதும்..அவர் எப்படி எழுதி இருந்தாலும், இறுதியில் ஓட்டுப்போடுங்க நண்பரே என்ற குறிப்பு மறக்காமல் எழுதிவிடுகிறார்கள்...நண்பர்பகளும் ஓட்டுப் போட்டுவிட்டு கடமை முடிந்துவிடுகிறது என்று சென்று விடுகிறார்கள்..இதனால் பல நல்ல பதிவுகள் படிக்கபடாமலேயே போய் விடுகின்றன.. இது ஒரு மோசமான வியாபாரமாகிவிடும் அபாயம் உள்ளது..

ஒட்டு வாங்குவது ஒரு "adiction " ஆகி விட்டது..எனக்கும் கூட தமிளிஷ்இல் இருந்து ஈமெயில் வந்தால் ஏதோ ஒரு உற்சாகம் மனதுக்குள் வந்து விடுகிறது..நான் பெரும்பாலும் அதிக ஒட்டு வாங்கிய பதிவுகள் இன்னும் எனக்கு திருப்தி அளிக்காதவைதான்..

நண்பர்களே, நல்ல, தரமான பதிவுகளை தேர்ந்தெடுங்கள்...ஒட்டு போடுவதைவிட பின்னூட்டம்தான் ஒரு பதிவரை மேலும் கவனம் செலுத்த வைக்கும்...எல்லாவற்றுக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டைப் போடுவதால் பல நல்ல பதிவுகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன..பதிவர்களும் உற்சாகம் இழந்துவிடுகிறார்கள்..மொக்கை போடுபவர்களும், இப்படித்தான் எழுதவேண்டும் போல என்று கண்டதையும் எழுதிவைக்கிரார்கள்..

இப்போது டி விக்களாலும், கம்ப்யூட்டர், போன்றவைகளாலும் எழுதும் மற்றும் படிக்கும் பழக்கும் ஒழிந்துவிடுமோ இன்று அஞ்சிக்கொண்டிருக்கையில், இந்த ப்ளாக்கர்ஸ் மூலம் மீண்டும் எழுதும் மற்றும் படிக்கும் பழக்கம் அதிகமாகி உள்ளது..அது மேலும் தொடர, நல்ல இடுகைகளுக்கு ஆதரவு அளியுங்கள்.. மொக்கைகளை விமர்சியுங்கள், அதிகமதிகம் பின்னூட்டமிடுங்கள். இதனால் மொக்கை போடுபவர்களும் தங்களது திறமையை வெளிக்கொண்டுவர வாய்ப்புண்டு, நன்றாக எழுதுபவர்களும் இன்னும் எழுத ஆர்வம் கொள்ளுவார்கள்..

நான் சற்று அதிகமாக சொல்லியிருந்தால்..பின்னூட்டமிடுங்களேன்.....என்னையும் நான் திருத்திக்கொள்வேன்...ஹி ஹி...

Thursday, April 1, 2010

உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி எயிட்ஸ்

இன்று உலகை அச்சுருத்திக் கொண்டிருக்கும் கொடிய உயிர்கொல்லி எயிட்ஸ் எனும் தொற்று நோய் முதன் முதலில் 1981ல் அமெரிக்காவில் ஒருவரைத் தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டது.


அதற்கான மருந்தை கண்டு பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டும் முடியாமல் போகவே உயிர் கொல்லி எயிட்ஸின் வைரஸ் கிருமிகள் அசுர வேகத்தில் அமெரிக்காவின் மூலை, முடுக்குகளில் பரவத் தொடங்கியது.

அது முதல் இதுவரை அதற்கான மருந்தை கண்டுப் பிடிப்பதற்காக அமெரிக்காவுடன் உலக மருத்துவக் குழு முயற்சித்தும் முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றது.

இது முறையற்றப் பாலுறவின் பல வழிகளில் தொற்றுகிறது என்றும் இது தொற்று நோய் என்பதால் அதிகபட்சம் மேற்காணும் விலைமாதர்கள் மூலமே இதுப்பரவுகிறது என்றும், தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விடாது துரத்தும் என்றும் மருத்துவ ஆய்வறிக்கைகள் அன்றிலிருந்து இன்றுவரை எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

கொடிய உயிர் கொல்லி எயிட்ஸ் அமெரிக்காவில் பரவிக் கொண்டிருக்கும் தகவல் அறிந்து அமெரிக்காவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கு கடைவிரிக்கப்பட்டிருக்கும் விபச்சாரத்தில் விழாமல் கவனத்துடன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்காவிற்கு சென்று திரும்புபவர்கள் மிக கவனமாக திரும்பினாலும், அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் ஒன்றிரண்டுப் பேர் மூலமாக இக்கொடிய உயிர் கொல்லி எயிட்ஸ் நோய் அமெரிக்காவிற்கு வெளியிலும் பரவத் தொடங்கியது.

1981ல் அமெரிக்காவில் மட்டும் கண்டுபடிக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளி இன்று உலகின் ( விபச்சாரம் அனுமதிக்கப்படாத நாடுகளைத் தவிற ) பெரும்பாலான நாடுகளில் புற்றீசல்கள் போல் பெருகி விட்டனர்.

இக்கொடிய உயிர்கொல்லி நோய் தொற்று நோயாகவும் இருப்பதால் முறையற்றப் பாலுறவில் ஈடுபடும் சேடிஸ்டுகள் மட்டுமல்லாமல் இதில் அறவே சம்மந்தப் படாத எண்ணிலடங்கா அப்பாவிகளையும், குழந்தைகளையும் கூட காவு கொண்டிருக்கின்றது.

இக்கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் கவலை அடைந்த உலக சுதாதார மையம் ( W H O ) (The World AIDS Campaign) தொடர்ந்து உலகம் முழுவதிலும் கீழ்காணும் தலைப்புகளில்

Ø எயிட்சும், இளைஞர்களும்,

Ø எயிட்சும், பெண்களும்,

Ø எயிட்சும், குடும்பமும்,

Ø எயிட்சும், குழந்தைகளும்,

Ø பெண்களும், எச்.ஜ.வி யும்,

Ø சவாலை எதிர் கொள்,

Ø சமூகத்தின் ஈடுபாடு.Ø உரிமைகளும், பொறுப்புகளும்,

Ø ஒரு உலகம், ஒரு நம்பிக்கை,

Ø மாற்றத்திற்கான சக்தி,

Ø செவி கொடு, கற்றுக் கொள்,

Ø எயிட்சை மாற்றும் சக்தி,

Ø நான் பாதுகாப்புடன் நீ ?

Ø எயிட்ஸை நிறுத்து சத்தியத்தைக் காப்பாற்று,

இது போன்ற இன்னும் பல தலைப்புகளில் 1988 லிருந்து 2010 வரையிலும் எயிட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை சடவடையாமல் நடத்திக் கொண்டிருக்கின்றது. http://www.worldaidscampaign.org/இவ்வேளையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் உலகம் முழுவதிலிமிருந்து குவியவிருக்கும் பணக்கார ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக 40 ஆயிரம் விலைமாதர்கள் அங்கு குவிக்கப்படவிருப்பதாக அமெரிக்காவின் நியூயார்க் டெய்லி நியூஸ்; கூறுவதாக தினகரன் 10-03-2010 கூறுகிறது. ஓருப்பக்கம் எயிட்ஸின் தீமைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை உலக சுகாதார மையங்களும், தண்ணார்வ அமைப்புகளும் நடத்திக் கொண்டிருக்கையில் ஏற்கனவே 16சதவிகிதம் எயிட்ஸ் நோயாளிகள் நிறைந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு 40ஆயிரம் விலை மாதர்களை அனுப்பவிருக்கும் விபரீத முடிவை நாட்டு மக்களின் ஆரோக்கியம் கருதி தென்னாப்பிரிக்க அரசு முணைப்புடன் தடுத்து நிருத்த முன்வர வேண்டும்.

விலை மாதர்கள் அனுப்புவது நிருத்தப்பட வில்லை என்றால் உலக கோப்பை கால்பந்து போட்டியை தடை செய்வோம் என்று அறிவிக்க வேண்டும்.

இந்த போட்டிகள் நடத்தப்படும் நாடுகளே அதிகபட்சம் கப்புகளை வாங்கிக் குவிக்கும் அதனால் ஒரு சில நாட்கள் அந்த நாட்டின் வீர, தீர விளையாட்டுக்களைப் பற்றி உலகம் பேசும்.

அது அந்த ஓண்றிரெண்டு நாட்கள் மட்டும் பேசப்பட்டு முடிந்துவிடும் ஆனால் அங்கு பரப்பப்பட்ட கொடிய உயிர் கொல்லி எயிட்ஸின் வைரஸ் கிருமிகள் ஒருவர் மற்றொருவர் மூலமாக பரப்பி அதனால் நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் சிறிது, சிறிதாக அப்பாவி மக்கள் செத்து மடிந்து கொண்டிருப்பார்கள்.

ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் ஆஹா, ஓஹோ வென்று உலகம் புகழுகின்ற வெறும் புகழை நாட்டுக்கு சேர்க்க தென்னாப்பிரிக்க அரசு விரும்புகின்றதா ?

அல்லது

கொடிய உயிர் கொல்லி எயிடஸ் தொற்று நோயினால் சிறிது சிறிதாக மண்ணின் மைந்தர்கள் செத்து மடிந்துக் கொண்டிருக்கும் சங்கிலித் தொடர் மரணத்தை விரும்புகின்றதா ?

உலக சுதாதார மையமோ, தண்ணார்வ அமைப்புகளோ இதில் தலையிட்டு தடுத்து நிருத்த முடியாது அவர்களால் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும். இதைத் தடுத்து நிருத்தும் சக்தி தென்னாப்பிரிக்க அரசிடம் உள்ளது.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்துக் குவியும் ஓரிடத்திற்கு இப்படி ஒரு ஈனச்செயலை வருடந்தோறும் செய்து இன்னும் எயிட்ஸ் பரவாதப் பகுதிகளுக்கும் பரவச் செய்யும் நோக்கில் இந்த சேடிஸ்டுகள் செயல்படுவதால் உலகம் முழுவதிலும் உள்ள மக்களும் இதற்கு எதிராக களம் இறங்க வேண்டும்.
 
நல்லோர்களின் நடுநிலையாளர்களின் கவனத்திற்கு


Ø ஏற்கனவே இந்த விளையாட்டுக்களில் சூது கோலோச்சிக் கொண்டிருக்கின்றது, ஒவ்வொரு அணியினர் மீதும் கோடிக்கணக்கானத் தொகை பந்தயமாக கட்டப்படுகின்றது. Ø விளையாட்டு வீரரகளில் சிலர் இரகசியமாக ஊக்க மருந்துகளை உட்கொண்டு உற்சாகமாக ஓடி ஆடி விளையாடி இயற்கைக்குப் புறம்பான மோசடியில் ஈடுபட்டு தானும் கோடிக் கணக்கில் சுருட்டிக் கொண்டு, சூதாடிகளுக்கும் கோடிக் கணக்கில் ஈட்டிக் கொடுக்கின்றனர். Ø சில பிளேயர்கள் பணத்திற்காக, இன்னும் பல நோக்கத்திற்காக திறமை இருந்தும் வேண்டுமென்றே சொதப்பி நாட்டை தலைகுணியச் செய்யும் துரோகிகளாக மாறியும், மாறிக் கொண்டுமிருக்கின்றனர்.Ø இன்னும் இதில் மதம் புகுத்தப்பட்டு விளையாட்டு வீரர்கள் மதவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் விளையாடும் ஆடுகளம் கொத்தி சிதைக்கப்பட்டிருக்கின்றது,

உலகம் கண்டு களிக்கும் இந்த விளையாட்டுக்களில் புகுந்துவிட்ட மேல்படி தீமைகளை களைவதுடன், பலநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களின் ஆரோக்கியம் கெட்டு, தாய் நாட்டில் பிறருக்கும் பரவச் செய்யும் எயிட்ஸ் வைரஸ் கிருமிகளைப் பரப்பும் விபச்சாரம் தடுத்து நிருத்தப் பட்டால் தீமைக்கு அஞ்சும் மக்களும் அச்சம் தவிர்ந்து கண்டு களிக்கும் நிலை உருவாகலாம்.

இல்லையேல் தீமைக்கு அஞ்சும் நன்மக்கள் இதை வெறுத்து ஒதுங்கட்டும், பிறருக்கும் இதில் புகுந்து விட்டத் தீமைகளை விளக்கிக் கூறித் தடுக்கட்டும். நமக்கென்ன என்று விட்டு விட்டால் நமக்கும் இதுத் தொற்றும் அபாயம் உள்ளது.

அப்புறம் ஒரு சிறிய கேள்வி..


நீங்கள் ஆட்டோக்களின் பின்புறங்களிலும் மற்றும் எய்ட்ஸ் பற்றிய மற்ற விளம்பரங்களிலும் "ஒருவனுக்கு ஒருத்தி!" என்னும் விளம்பரங்களைக் காணலாம்..

ஒருவனுக்கு ஒருத்தி என்பதைவிட..

"ஒருத்திக்கு ஒருவன்!"

 என்பதே சரி என்பது எனது நிலைப்பாடு..

பிளீஸ் பதிவர்களே..இது பற்றிய உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்களேன்...

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...