Pages

Saturday, April 24, 2010

ஒட்டு வாங்கிக் குவிக்கும் மொக்கைகள்..!!!

ஒட்டு வாங்குவது ஒரு கலை, நான் கலைஞரைச் சொல்லவில்லை..அழகிரியைப் பற்றியும் சொல்லவில்லை...நமது பதிவர்கள் ஒட்டு வாங்க அலையும் போக்கைத்தான் சொல்கிறேன்..

இந்த பிளாக்கர்களுக்கு இணையத்தளம் ஒரு சரியான வடிகாலாக இருக்கிறது..நன்றாக எழுதுபவர்களாகட்டும், எழுத ஆசைப்படுபவர்களாகட்டும்...சுமாராக எழுதுபவர்களாகட்டும் எல்லாரது ஆசையும் தீர்த்துவைத்துவிடுகிறது இந்த ப்ளாகர்ஸ் பக்கம்..

தமிழ்மணத்திலும், தமிளிஷிலும் ஒட்டு வாங்க,, நிறைய நண்பர்களைப் பிடித்து வைத்திருந்தால் போதும்..அவர் எப்படி எழுதி இருந்தாலும், இறுதியில் ஓட்டுப்போடுங்க நண்பரே என்ற குறிப்பு மறக்காமல் எழுதிவிடுகிறார்கள்...நண்பர்பகளும் ஓட்டுப் போட்டுவிட்டு கடமை முடிந்துவிடுகிறது என்று சென்று விடுகிறார்கள்..இதனால் பல நல்ல பதிவுகள் படிக்கபடாமலேயே போய் விடுகின்றன.. இது ஒரு மோசமான வியாபாரமாகிவிடும் அபாயம் உள்ளது..

ஒட்டு வாங்குவது ஒரு "adiction " ஆகி விட்டது..எனக்கும் கூட தமிளிஷ்இல் இருந்து ஈமெயில் வந்தால் ஏதோ ஒரு உற்சாகம் மனதுக்குள் வந்து விடுகிறது..நான் பெரும்பாலும் அதிக ஒட்டு வாங்கிய பதிவுகள் இன்னும் எனக்கு திருப்தி அளிக்காதவைதான்..

நண்பர்களே, நல்ல, தரமான பதிவுகளை தேர்ந்தெடுங்கள்...ஒட்டு போடுவதைவிட பின்னூட்டம்தான் ஒரு பதிவரை மேலும் கவனம் செலுத்த வைக்கும்...எல்லாவற்றுக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டைப் போடுவதால் பல நல்ல பதிவுகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன..பதிவர்களும் உற்சாகம் இழந்துவிடுகிறார்கள்..மொக்கை போடுபவர்களும், இப்படித்தான் எழுதவேண்டும் போல என்று கண்டதையும் எழுதிவைக்கிரார்கள்..

இப்போது டி விக்களாலும், கம்ப்யூட்டர், போன்றவைகளாலும் எழுதும் மற்றும் படிக்கும் பழக்கும் ஒழிந்துவிடுமோ இன்று அஞ்சிக்கொண்டிருக்கையில், இந்த ப்ளாக்கர்ஸ் மூலம் மீண்டும் எழுதும் மற்றும் படிக்கும் பழக்கம் அதிகமாகி உள்ளது..அது மேலும் தொடர, நல்ல இடுகைகளுக்கு ஆதரவு அளியுங்கள்.. மொக்கைகளை விமர்சியுங்கள், அதிகமதிகம் பின்னூட்டமிடுங்கள். இதனால் மொக்கை போடுபவர்களும் தங்களது திறமையை வெளிக்கொண்டுவர வாய்ப்புண்டு, நன்றாக எழுதுபவர்களும் இன்னும் எழுத ஆர்வம் கொள்ளுவார்கள்..

நான் சற்று அதிகமாக சொல்லியிருந்தால்..பின்னூட்டமிடுங்களேன்.....என்னையும் நான் திருத்திக்கொள்வேன்...ஹி ஹி...

17 comments :

hayyram said...

ha ha ha..

regards
ram
www.hayyram.blogspot.com

ஜீவன்பென்னி said...

இங்க எல்லாத்துக்குமே விளம்பரம் தேவைப்படுதே. நல்ல இடுக்கைகளுக்குக்க்கூட சினிமா தலைப்ப கொடுத்து உள்ளார இழுக்க வேண்டிய நிலைமைதான் இங்க இருக்கு. ஆனால் அதனைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம நம்ம வேலைய செய்வதுதான் எனக்கு சரின்னு தோனுது.

ஜீவன்பென்னி said...

நன்றிகள் தங்கள் மின்னஞ்சலுக்கு. நீங்க எழுதுங்க நிச்சயமா நல்ல இடுக்கைக்கள் கவனிக்கப்படும். உங்கள் இடுக்கைகளை தொடர்ந்து படிப்பவன் தான். சில நேரங்களில் மறுமொழியிட்டும் பல நேரங்களில் இல்லாமலும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ok cool ottu pottuten

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம்
நானும்தான் ப்லோகரில் எளுதுகிறேன் யார் படிக்கிறா?? எனக்கு அந்த கவலையும் கிடையாது நான் எளுதுகிரத்தை எழுதுறேன் படிக்கிறவங்க படிக்கட்டும் மற்றவர்கள் அவங்களுக்கு பிடித்ததை படிக்கட்டும் ..உங்களுடைய இந்த இடுகை நல்ல இருக்கு நன்றி.

வெங்கட் said...

ரொம்ப நியாயமான வாதம்..
எங்க மனசுல இருக்கிறதை
அப்படியே புட்டு புட்டு
வெச்சிட்டீங்க..

தல..!
நீங்க ஏன் அரசியல்ல நிக்க கூடாது..?

ஜிஎஸ்ஆர் said...

நல்ல பதிவு நண்பரே நானும் இதை பற்றி நினைத்தேன்

வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

dheva said...

You are saying the truth my friend!

imran said...

என் மனதில் இருப்பதை அப்படியே எழுதிவிட்டீர்:)

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்

திரு heyyram
திரு ஜீவன் பென்னி
திரு ரமேஷ்
திரு hamaragana
திரு வெங்கட்
திரு ஜி எஸ் ஆர்
திரு dheva
திரு imran
ஆகியோருக்கு மிக்க நன்றி..

Robin said...

நல்ல பதிவுகள் தென்பட்டால் உடனே ஓட்டளித்துவிடுவது வழக்கம். ஆனால் நான் ஓட்டளிக்கும் பெரும்பாலான பதிவுகள் போதுமான ஓட்டுக்கள் வாங்காததால் பயனில்லாமல் போய்விடுகிறது. தரமான பதிவுகளை ஆதரிக்கவேண்டும் என்ற உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்.

infopediaonlinehere.blogspot.com said...

i agree with what you've said...it has become a mania

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நல்ல பதிவு நண்பரே வாழ்த்துகள்

ILLUMINATI said...

உண்மைதான் நண்பரே......
ப்ளாக் ஒரு போதை என்று என் நண்பன் சொன்னான்.நான் ஒத்துக் கொள்ளவில்லை.இப்போது நானே உணருகிறேன்.

மர்மயோகி said...

மேலும் பின்னூட்டமிட்ட நண்பர்கள்
திரு robin
infopediaonlinehere.blogspot.com
திரு மணி
திரு illuminati
ஆகியோருக்கும் மிக்க நன்றி

பாலமுருகன் said...

நல்ல கருத்து.

என்னங்க ரொம்ப நாளா எழுதுறதுக்கு இடைவேளை விட்டுடீங்க போல.

மர்மயோகி said...

நன்றி பாலமுருகன்..

மீண்டும் ஆரம்பிச்சுட்டோம்ல....
பின்னூட்டம் போடுங்கய்யா...பின்னூட்டம் போடுங்க...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?