Pages

Monday, April 26, 2010

ஐ பி எல், ஜென்டில்மேன்கள், அடிமைகள்.

"இனிமேலும் கிரிக்கெட்டை "ஜென்டில்மேன்களின் விளையாட்டு" என்று சொன்னால் இதை கண்டுபிடித்த வெள்ளைக்காரன் நம்மை உதைக்க வரமாட்டானா? "

ஆபாச வியாபாரம் செய்யும் ஆனந்த விகடன் ஐ பி எல்லை பற்றிய சமீத்திய தலையங்கம் இது .  இந்திய ஐ பி எல் விளையாட்டில் ஊழல் வெளிவந்து விட்டதாம்..இனிமேல் கிரிக்கெட்டை ஜென்டில்மேன்கள் விளையாட்டு
 என்று சொன்னால் வெள்ளைக்காரன் நம்ம அடிக்க வந்துவிடுவானாம்..அட பன்னாட...

இன்னுமா உன் அடிமை புத்தி போகல...சுதந்திரம் வாங்கி அறுபது வருடங்களுக்கும் மேல ஆயாச்சு,, வெள்ளக்காரன நாம் தொரத்தி அடிச்சாச்சி..ஆனா இந்த பார்ப்பன ஆனந்த விகடன், தன் பரம்பரை அடிமைத்தனத்தையும் விசுவாசத்தையும் இன்னும் விடாம, கிரிகெட்டை ஜென்டில்மேன் விளையாட்டுன்னு சொன்னா  வெள்ளைக்காரன் அடிக்க வந்துடுவான்னு சொல்றானே..

வெள்ளைக்காரன் சொல்லிட்டா அது ஜென்டில்மன் விளையாட்டா? வெள்ள டிரஸ் உடுத்திட்டா அது ஜென்டில்மேன் விளையாட்டா..யாருடா சொன்னது?
இரயில் பாதைகளை அமைத்தது வெள்ளைக்காரன்தான் என்று சொல்லுவார்கள் (ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் ஆட்சி செய்தாலும் அந்தக்கால தேவைகளை பூர்த்தி செய்தே ஆகவேண்டும்)...அப்படிஎன்ற ரயில் ஆக்சிடென்ட் ஆனால் வெள்ளைக்காரன் வந்து உதைக்கிரானா?



சில கட்டிடங்களை கட்டி வைத்து இருந்தான்..அதை இடித்திருக்கிறோம்..அப்போது வந்து என்னத்தை புடுங்கினான் ?

வெள்ளைக்காரன் காலத்தில் உள்ள விசயங்களில் இந்திய நிறைய மாறுதல்களைச் சந்தித்து வருகிறது...அவனுக்கு அடிமை என்கிற மனோபாவம் மட்டும் இன்னும் மாறவில்லை..அதற்கு ஆனந்த விகடன் போன்ற அடிமைகளும் அடிக்கடி இது போல தூபமிட்டு வருவதும் ஒரு காரணம்..


கிரிக்கெட் முட்டாள்களின் விளையாட்டுன்னு அவங்க வெள்ளைக்காரனே சொல்லிட்டானே அது தெரியாதா  இந்த ஆபாச வியாபாரிக்கு?

பந்தை சேதபடுத்தினார்கள், பிட்சை சேதப்படுத்தினார்கள், சூதாட்டம் விளையாண்டார்கள்..

கண்ட கண்ட நடிகைகளுடன் சுற்றினார்கள்..விளம்பரத்தில் அந்நிய பொருட்களை வாங்க சொன்னார்கள்..எல்லாம் செய்து விட்டு நாட்டுக்காக விளையாடுகிறேன் என்று சொன்னார்கள்..அப்போதெல்லாம் தெரியவில்லையா இது ஒரு ஏமாற்று வேலை என்று?

 ஐ பி எல் வந்தது..

ஆடம்பரம் செய்தார்கள்... நான்கு ரன்கள். ஆறு ரன்கள் எடுக்கும்போதும், மற்றும் அவுட் ஆகும்போது, அழகிகளை விட்டு ஆபாச நடனம் ஆடச் செய்தார்களே அப்போது தெரியவில்லையா இது ஒரு கேவலமான விளையாட்டு வியாபாரம் என்று?

பண்டைய காலங்களில் மன்னர்கள் அடிமைகளை ஏலம் எடுப்பதுபோல விளையாடுபவர்களை கோடி கணக்கில் ஏலத்தில் எடுத்தார்களே அப்போது தெரியவில்லையா இது ஒரு அடிமைகளின் விளையாட்டு என்று..?

அந்த அணிகளின் முதலாளிகள் யார்? சாராயம் விற்பவன், சினிமாவில் கூத்தடிப்பவன், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள்தானே...அப்போது தெரியவில்லையா இது ஒரு விபச்சாரிகளின் கூட்டம் என்று?

ஒரு பக்கம் சாருக்கான் நின்று கொண்டு ஆடுகிறான், ஒரு பக்கம் ப்ரீத்தி ஜிந்தா வர்றவன் போறவனை எல்லாம் கட்டி பிடித்துக்கொண்டு இருக்கிறாள்..இன்னொரு பக்கம் சில்பா செட்டி கண்டவனுடன் போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கிறாள், விஜய் மல்லையாவின் மகன் தீபிகா படுகோனே என்ற நடிகையுடன் அலைகிறான்.அம்பானியின் மகளை ஹர்பஜன் சிங் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகிறான் (கொண்டாட்டமாம்)

.அப்போது தெரியாதா இது ஒரு அசிங்கமான விளையாட்டு என்று?


லலித் மோடி ஊழல் செய்தான், சசி தரூர் அதிகாரத்தை பயன் படுத்தினான், பெண்களும் நடிகைகளும் பகடைக்காய்களாக  இருக்கிறார்கள்...

இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது...

இதே லலித் மோடியை வைத்து
 "எப்படி ஜெயித்தார்கள்"  என்று கட்டுரை எழுதி இளைஞர்களின் வழிகாட்டியாக, ஒரு மாபெரும் சாதனையாளனாக  இந்த ஆபாச பத்திரிக்கைகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லையா?

பாரம்பரிய பத்திரிகை என்று பீற்றிகொள்ளும் இந்த மாங்கா மடையனுக்கு இதைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லையா இது ஒரு ஏமாற்றுபவர்களின் சூதாட்டம் என்று?

இப்போது இந்த ஐ பி எல் விவகாரத்தை வைத்து இந்த பன்னாடைகள் என்னத்தை கிழிக்கப்போகின்றன...வியாபாரம் அவ்வளவுதான்..

பெங்களூரு ஸ்டேடியத்தில் குண்டு வைத்ததுகூட இந்த ஊழலை மறைக்க இந்த பண முதலைகளே நடத்தி இருக்கலாம்..


 
வழக்கம்போல டெஸ்டு கிரிகெட்டும், ஒன் டே கிரிக்கெட்டும், டி 20 கிரிக்கெட்டும் நடந்து கொண்டுதான் இருக்கும். பண முதலாளிகளும், கிரிக்கெட் பெருச்சாளிகளும், விளையாடும் அடிமைகளும், ஆட்டம் போடும் ஆபாச கூத்தாடி முதலாளிகளும், ஊடகங்களும், சம்பாதித்துக்கொண்டுதான் இருப்பார்கள்..பத்திரிக்கைகள் இதை வைத்து பிழைத்துக் கொண்டிருப்பார்கள்....

வெக்கம்கெட்ட விகடன் உணர்ந்துகொள்ளட்டும் வெள்ளைக்காரன் அடிக்க வந்தால் செருப்படி வாங்குவான் என்று..அவன் மட்டுமல்ல அவனுக்கு வால்பிடித்து இன்னும் அடிமையாக  வாழும் .அவன் அடிமைகளும்தான் !

7 comments :

பித்தனின் வாக்கு said...

கிரிக்கெட் இங்கிலாந்தில் பிறந்தது, அது அவர்களின் தேசிய விளையாட்டு என்பது அனைவரும் அறிந்தது. நம் கபடி இப்ப விளையாட்டுகளில் சேர்த்த போது தமிழர் நாகரீக விளையாட்டு சந்திர மண்டலத்திற்குப் போனதாக பீத்திக் கொண்டேம். அதுபோல கிரிக்கெட் என்றால் அதை இங்கிலீஷ்காரனைக் குறிப்பிடுவது மரபு. இதன் அடிப்படையில் வந்த கட்டுரை. இது இப்ப மட்டும் அல்ல,ஆஸ்திரோலியர்கள் சிட்னியில் கேவலமாக நடந்த போது கூட இப்படித்தான் எழுதினார்கள். இதில் தவறாக என்ன உள்ளது?. இதில் எதுக்கு பொங்கும் கோபம் வேறு. செட்டியாரின் பத்திரிக்கையை வைத்து பார்ப்பன திட்டு வேற. என்ன ஆச்சு மர்மயோகி.

மர்மயோகி said...

நன்றி திரு பித்தனின் வாக்கு..
இன்னும் நாம் ஏன் ஆங்கிலேயன் வந்து அடிப்பான் என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? ஆங்கிலேயன் என்றால் ஏன் இன்னும் உயர்வாகவே நினைக்கவேண்டும்? அவன் சொல்லிவிட்டால் இது ஜென்டில்மன் விளையாட்டா? ஆங்கிலேயன் அனைவரும் ஜென்டில்மேனா? இது நமது மாறாத மனப்போக்கையே காட்டுகிறது..அதன் கோபம்தான் இந்த பதிவு.. ஆனந்த விகடன் எப்போதும் தன்னைப் பற்றி பெரிதாக பீற்றிக்கொண்டு ஆபாச வியாபார செய்வதாலும் வந்த கோபம்...மற்றபடி ஜாதிகளை சொல்லி திட்டுவதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்..மன்னிக்கவும்...

ஜீவன்பென்னி said...

இங்க பிரபலமாக இருக்கின்ற ஒரு விடயத்தை வைத்து அனைத்து ஊடகங்களும் காசு பார்க்கின்றன. அதில் ஒரு பிரச்சனை ஏற்படும் போது ஏற்கனவே அதனைப்பற்றி புகழ்ந்து எழுதியதைய்யெல்லாம் காற்றில் விட்டுவிட்டு எல்லோரும் நல்லபிள்ளையாகிவிடுகின்றார்கள். இதில் நம் மக்களும் விதிவிலக்கல்ல, நான் உட்பட.

பல வருடங்களுக்கு முன்பு என் தந்தை கிரிக்கெட் பற்றி சொன்னதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்றாது. நாம் தான் முட்டாளாக்கப்படுகின்றோம்.

மர்மயோகி said...

சரியாகச் சொன்னீர்கள் திரு ஜீவன் பென்னி..
ஒருவன் பிரபலமாகிவிட்டால் போதும்..அவனது பின்புலம் எதுவும் தேவை இல்லை..இவன் கண்டந்தவந்த பாதையை இவர்களாகவே கற்பனை செய்து இளைஞர்களுக்கு வழிகாட்டி எனப் புகழ்வதும், அவனது புகழ் சரியும்போது அதைவைத்தும் காசு பார்ப்பதும் இப்போதைய ஆபாச பத்திரிக்கைளின் வேலையாக இருக்கிறது..நன்றி திரு ஜீவன் பென்னி அவர்களே..

அன்புடன் நான் said...

கிரிக்கெட் எனக்கு பிடிக்கும்....

ஆனா நீங்க சொல்லுவதும் நியாயமாத்தான் இருக்கு.

பொன் மாலை பொழுது said...

ஆனந்த விகடன் கூட படிகிருங்களா என்னா?
யப்பா ....நான் அவைகளை கையால் தொட்டே நிறைய வருடங்கள் ஆகிறது.
காசும் மிச்சம்,எரிச்சலும் மிச்சம்.
நல்ல திறனாய்வு.

Jayadev Das said...

//பண்டைய காலங்களில் மன்னர்கள் அடிமைகளை ஏலம் எடுப்பதுபோல விளையாடுபவர்களை கோடி கணக்கில் ஏலத்தில் எடுத்தார்களே// ஏழாம் எடுத்தது என்னவோ நிஜம்தான், ஆனால் அடிமைகள் மாதிரி என்பது, சரியான ஒப்புமை இல்லை. அடிமைகள் ஆடு மாடுகள் மாதிரி தான் நடத்தப் படுவார்கள், அதாவது அவர்கள் சாகாமல், ஊழியம் செய்ய என்னென்ன வேண்டுமோ அந்த வசதிகள் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும். குடி, கூத்து, கும்மாளம், பொம்பிளை, கோடி கோடியாக சூதாட்டப் பணம், அப்புறம் ஏலத்தில் சொன்ன பணம் என்றெல்லாம் எந்த அடிமைக்குக் கிடைக்கும்?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?