Pages

Saturday, December 22, 2012

மோடி ஒரு மாயத்தோற்றம் - மார்க்கண்டேய கட்ஜு.............!!குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ள நிலையில், இந்திய ஊடகக் குழுமத் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ மோடி பற்றிய சில கருத்துரைகளையும், பரப்புரைகளையும் கேள்விக்கு ஆளாக்கியுள்ளார். 

தனது ஆக்கமொன்றில் கட்ஜூ கூறுகையில் மோடி பற்றி கருத்தளிக்குமாறு நான் ரொம்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டாலும், என் கருத்து குஜராத் தேர்தலில் எந்தவிதத்திலும் பிரதிபலித்துவிடக்கூடாது என்பதால் தவிர்த்துவந்தேன். ஆனால் குஜராத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது என் கருத்தைச் சொல்லலாம் என்று கருதுகிறேன்,

எந்த ஒரு அமைப்பையும் அரசையும் உரசிப்பார்க்க அதிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும். சந்தேகமில்லாமல் மோடி தன் தலைமையின் கீழ் குஜராத் ஒளிர்கிறது என்கிற பிம்பத்தை வெற்றிகரமாக உருவாக்கி உலா விட்டிருக்கிறார். ஆனால் பளிச்சிடும் யதார்த்தம் வேறுவிதமாக உள்ளது
2002 ஆம் ஆண்டு சிறுபான்மை முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை குறிப்பிடாவிட்டாலும், வேறு சிலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும்,


குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நாட்டின் தேசிய சராசரியைக் காட்டிலும் குஜராத்தில் மிகவும் அதிக அளவில் இருக்கிறது. அங்கே 48%சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் அவதியுறுகின்றனர். பஞ்சமும் பட்டினியும் தாக்கியுள்ள சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் கூட 33% சத குழந்தைகளே ஊட்டச்சத்தின்றி துன்பப்படுகின்றார்கள். ஆனால் குஜராத்தில் இது 48% என்றால்... எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அந்தக் குழந்தைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்கள். இது பற்றி மோடியிடம் கேட்டபோது அவர் எப்படியெல்லாம் மழுப்பினார் தெரியுமா? குஜராத் பெண்கள் குண்டாகிவிடும் பயத்தினால் பால் அருந்துவதில்லை; ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை, மக்களில் பெரும்பாலோனோர் சைவ உண்ணிகள் என்றெல்லாம் அபத்தக் காரணங்களைத் தான் அடுக்கினார்.

குஜராத்தில் தொழிற்சாலைகளும், சாலைகளும் மின்சார வசதிகளும் பெருகட்டும் ஆனால் பச்சிளம் குழந்தைகளால் அதையா அருந்த முடியும்? சிசு இறப்பு விகிதம் 1000க்கு 48 என்ற விகிதத்தில் குஜராத்திலுள்ளது. இந்தியாவிலேயே 10 ஆவது மோசமான நிலை குஜராத்தில் நிலவுகிறது. குஜராத் ஆண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உடல்நிறை குறியீட்டெண்18.5 க்கும் குறைவாகவே உள்ளது. இதுமிகவும் மோசமான நிலையாகும். பிரசவ நேர இறப்புகளும் குஜராத்தே முன்னிலை வகிக்கிறது.

கல்வி, சுகாதாரம், வருமானம் போன்றவற்றில் எட்டு மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தான் குஜராத் வருகிறது. குஜராத்தின் கிராமப்புறத்தில் வறுமை 51 சதவீதம் உள்ளது. அதில் பழங்குடியினர் 57%, தாழ்த்தப்பட்டவர்கள் 49% , மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் 42% வறுமையில் வாடுகிறார்கள்.

நிலமும், மின்சாரமும், சாலைவசதிகளும் பெரிய தொழிலகங்களுக்கு மோடி வாரிவழங்குவது உண்மைதான். ஆனால், மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருக்கிறது என்பதையல்லவா நாம் கவனிக்கவேண்டும்? " என்று கேள்வி எழுப்பியுள்ள கட்ஜூ "குஜராத் மக்கள் என்றேனும் ஒருநாள் விழித்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.

நன்றி : இந்நேரம்

Friday, December 7, 2012

காந்தி தேசத்தந்தையா இல்லையா?மத்திய அரசுக்கு தண்ணி காட்டிய பத்து வயது பள்ளி மாணவி!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த 5 ம் வகுப்பு பயிலும் ஒரு பத்து வயது பள்ளி மாணவியான ஐஸ்வர்யா பராஷர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியுள்ளது மத்திய அரசு.

ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார். அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .

இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இச்சம்பவம் நடந்தது கடந்த மார்ச் மாதம் .


இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.


இந்திய வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது 1944 ம் ஆண்டு ஜூலை மாதம் 6 ம் தேதி சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையில் காந்தியடிகளை முதன்முதலில் தேசத் தந்தை எனக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

நன்றி : கவிதா தமிழ் (பேஸ்புக்)

Friday, November 23, 2012

"துப்பாக்கி" - சங்பரிவாரின் "ஸ்லீப்பர் செல்"


இந்த படம் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஒரு பயங்கரவாத செயலை செய்திருக்கிறது என்ற விமர்சனங்கள் வரத்தொடங்கியபோதே, இந்த பன்னாடைகளின் படத்திற்கு ஏன் போகவேண்டும் என்று இந்த படத்தை பார்க்காமல் தவிர்த்து விட்டேன்..

அர்ஜுன், விஜயகாந்த், கமலஹாச்சன் போன்ற கூத்தாடிகளின் துரோகத்தை இந்த ஆபாசப்பட விஜய் என்ற கூத்தாடியும் தொடங்கிவிட்டான் ..எதற்கு இந்த குப்பையை பார்க்கவேண்டும் என்று வாலாவிருந்துவிட்டேன். 

"ஏழாம் அறிவு" என்ற தனது முந்தைய படத்திலேயே தான் ஒரு சிற்றறிவு படைத்தவன்  என்று நிரூபித்த முருகதாஸ் என்ற கூத்தாடிக்கும் , முட்டைபரோட்டா, குத்து பரோட்டா என்று பெற்ற தாயுடன் ஆபாசப் பாடல் பாடி கூத்தடித்த நீலப்பட புகழ் கூத்தாடி விஜய் என்ற  கூத்தாடிக்கும், விடுதலைப்புலிகளின் தயவில் தோல்விப்படங்களை மட்டுமே தயாரித்து வந்த எஸ் தாணு என்ற விளம்பரப்பிர்யனுக்கும் ஒரு வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில், சாதாரண , மகா மட்டமான ஒரு கதையை, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து ஒரு வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் இப்படி ஒரு கேவலமான வேலையில் இறங்கி இருக்கிறார்கள்...

விடுமுறையில்  - பெண் பார்க்க வரும் ஒரு இராணுவ வீரன், குண்டு வைக்கும் தீவிரவாதிகளை கண்டு பிடிப்பதை - இஸ்லாமியர்களுக்கெதிராக படமெடுத்து நடித்த இந்த கூத்தாடிகளின் பண வெறிக்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தீவிரவாதிகளாக் சித்தரிக்கும் தைரியம் வந்திருப்பதற்கு காரணம் இன்னமும் இஸ்லாமிய சமுதாயம் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை பொறுமையுடன் சகித்து வந்திருப்பதுதான் காரணம்.

இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பு தீவிரமானதும், முஸ்லிம் சமுதாயத்தினரை புண்படுத்தும் காட்சிகளை நீக்கிவிட்டதாக இந்த கூத்தாடி கூட்டம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் "அப்பட்டமாக" நடித்ததை நம்பி இந்த படத்தை பார்க்கபோனால், இந்த ஆபாசக்கூத்தாடிகள் எப்படி முஸ்லிம்களை ஏமாற்றி இருகிறார்கள் என்று புலப்படுகிறது.

இஸ்லாத்திற்கெதிரான பகுதிகளை நீக்கி விட்டிருந்தால், நீலப்பட புகழ் விஜயும் - காஜல் அகர்வாலும் காதல் என்ற பெயரில் காம வெறி  பிடித்து அலையும்  காட்சிகள் மட்டுமே மிஞ்சி  கூத்தாடி விஜயின்  நீலப்பட லிஸ்ட்டில் இன்னொன்று கூடி இருக்கும் ...

ஆரம்பம் முதல் கடைசிவரை இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை இந்த ஆபாசக்கூட்டம் செய்து விட்டு அடுத்த படத்தில் நீலப்படப்புகழ்  விஜய் இஸ்லாமியனாக " நடிப்பானாம்".. யாருக்கடா வேண்டும் உங்கள் நடிப்பு...
நீ இஸ்லாமியனாக நடித்துவிட்டால் இஸ்லாத்திற்கு என்ன பெருமை கிடைத்து விடப்போகிரதுடா மடையா ? உனது கூத்தடிக்கும் படங்களில் இன்னொன்று கூடுமே ஒழிய யாருக்கும் எந்த உபயோகமில்லை எனபது தெரியாதா ?

அல்லது நீ கூத்தடிக்கும் அடுத்த படத்தில் வில்லன்களின் பெயர்களை ஏ ஆர் முருகதாஸ் , எஸ் எ சந்திரசேகரன் எஸ் தாணு என்று பயங்கரவாத வில்லன்களுக்கு பெயர்  வைத்துவிடேன் பார்ப்போம்..?

நீ நடிகன்..கூத்தாடி.!.இஸ்லாம் உண்மை..உன் நடிப்பு எங்களை ஒன்றும் கிழித்து விடாது..

இவன் பன்னிரண்டு பேரை - தீவிரவாதிகள் என்று சுட்டுகொள்ளும் காட்சிகளை பார்த்தால் இந்த பன்னாடைகள் எவ்வளவு மத வெறியை தூண்டும் நாய்கள் எனபது புரியும்...
இஸ்லாமிய மக்கள் அதிகமாக புழங்கும் இடத்தில் தீவிரவாதிகளை இஸ்லாமியர்களாக காட்டி தனது மத வெறி அரிப்பை  இந்த கூத்தாடிகள் தீர்த்துகொள்கின்றன..

இவன் இராணுவ அதிகாரி மட்டும் இல்லையாம்,,,இந்தியாவையே காக்கவந்த  பெரிய லடாவாம்... மூசிய இஞ்சி தின்ற குரங்காட்டம் வைத்துக்கொண்டு, பல்லை கடித்துக்கொண்டுதான் பேசுவாராம். வில்லன்களை பிடித்து வைத்து ஜெயிலில் அடைக்க மாட்டாராம்.தனது வீட்டில் அலமாரியில் வைத்து பூட்டி வைப்பாராம். இன்னும் எவ்வளவுதாண்டா ஏமாத்துவீங்க ?

"ஆயிரம் பெற கொல்றதுக்கு அவங்களே சாகும்போது நாம ஏன் நாட்டுக்காக சாகக்கூடாது?" என்று இந்த பன்னாடை இரண்டு காட்சிகளில் தனது மதவெறி அரிப்பை சொல்கிறது..ஆனால் நாட்டுப்பற்று என்கிற பெயரில் காஜல் அகர்வாலிடம் காம பிச்சை எடுத்து அலைகிறது.

இதில் உயர் அதிகாரியிடம் காமெடி என்ற பெயரில் அராத்து செய்து பார்ப்பவனை எல்லாம் சாகடிக்கிறது.
காஜல் அகர்வாலை தனக்கு பிடிக்கவில்லை என்று நீலப்படப்புகழ்  விஜய் நிராகரித்துவிட, அடுத்த காட்சியில் பெண்களுக்குரிய லட்சனமாக, அந்த பெண் தன தந்தையை கன்னத்தில் அறைகிறாள்,  அரைகுறை ஆடை அணிந்து வெளியே செல்கிறாள், குத்துசண்டை போடுகிறாள், கைபந்து விளையாடுகிறாள், இன்னும் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுகிறாள், - தன்னை அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் தம்மடிப்பேன், தண்ணியடிப்பேன்  என்று சொல்கிறாள்..இதுதான் ஒரு பெண்ணுக்கான திருமணம் செய்வதற்கான தகுதியாடா நாய்களா.? 

இன்னொரு காட்சியில் ஒரு முக்கால் கிழவனை ஒரு அழகி பணத்திற்காக திருமணம் செய்வதாக காட்டி, பெண்களை கேவலப்படுத்துவதை - பெண்ணுரிமை அமைப்புகள் ஏன் கண்டுகொள்ளவில்லை?.காரணம் மத துவேசம் அவர்களது மூளையை மலுங்கடித்துவிட்டதுதான். 
மதவெறியன் நீலப்படப்புகழ் விஜய்  மென்ட்டலாகும் நகைச்சுவை காட்சி ..
இறுதிகட்ட காட்சியில் இந்த நீலப்பட புகழ் விஜய் பண்ணும் அலப்பறை..இவனை கட்டிப்போட்டு அடித்து கையை உடைத்த பிறகு இந்த கூத்தாடி தன்னை அவிழ்த்து விடுமாறு குரைக்கிறது..அவிழ்த்து விடப்பட்டவுடன் அவன் உடைந்து போன கைகளை சரிசெய்துகொள்ளும் காட்சி உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை காட்சி..இவன் என்ன இயந்திரனா? 
அங்கேயே குதித்து குதித்து - ஒரு பைத்தியக்காரனைப்போல தன்னே குணப்படுத்தி பிறகு வில்லனை கொல்கிறான்..

பார்பவனை கேனயனாக்க - படம் முழுவதும் இஸ்லாத்திற்கெதிரான - துவேசத்தை பரப்பி ஒரு பயன்கரவாத்தத்தை செய்யும் இந்த கூத்தாடிகூட்டம், இன்னும் கேனத்தனமாக இந்த இறுதிக்காட்சியை காட்டி ரசிகர்களை நீங்கள் எல்லாம் முட்டாள்கள்தான்..நாங்கள் இப்படிதான் படம் எடுப்போம்..டிவியில் பெரிய பருப்பு மாதிரி பேட்டி கொடுப்போம்..நீங்கள் வந்து பார்த்துதான் ஆகா வேண்டும்..இந்துதான் உங்கள் தலை எழுத்து என்று சொல்கின்றன..

'தசாவதாரம்' என்றொரு படம்..
அந்த கதையில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு நடிகர் நடித்திருந்தால் மிக சாதாரணமான் படம்தான்..ஒவ்வொரு நடிகனும் பத்து நிமிடங்கள்தான் படத்தில் தோன்றி இருக்க முடியும்..அதையே கமலஹாச்சன் என்ற நடிகன் பத்து பாத்திரங்களில் செய்ததால், கதைகளன் பின்னுக்கு தள்ளப்பட்டு பிரம்மாண்டம், பத்து வேடம் என்று ரசிகன் மூளைச்சலவை செய்யப்பட்டு அதுவொரு வெற்றிப்படம்..

அதே தந்திரத்தை இந்த "சிற்றறிவு" கூட்டம் செய்திருக்கிறது..ஒரு இராணுவ வீரன் தீவிரவாத கும்பலை பிடிக்கும் வழக்கமான - அர்ஜுன், விஜயகாந்த் போன்ற குப்பைகளின் கதைதான்..அதையே இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து ரசிகனை மூளை சலவை செய்து கவனத்தை திருப்பினால்? 
அதுதான் சங்பரிவாரின் கட்டளைக்காக காத்திருந்த - "சிற்றறிவு"  எ ஆர் முருகதாஸ், "நீலப்படப்புகள்" விஜய் போன்ற கூத்தாடிகளின் "துப்பாக்கி"

ஸ்லீப்பர் செல் என்றால் பயங்கரவாதிகளின் கட்டளைகளுக்காக காத்திருக்கும் பயங்கரவாத கூட்டம் என்று இந்த சிற்றரிவுகூட்டம் சொல்கிறது...மொத்ததத்தில் துப்பாக்கி - பயங்கரவாத சங்பரிவாரின் "ஸ்லீப்பர் செல்" களின் தயாரிப்பு..
 

Wednesday, November 21, 2012

மதவெறி பால் தாக்கரேயும் - ஊடகங்களும்..


மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே.

இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் ப
ோலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்.

பால்தாக்கரே என்ற இவர் தலைமையேற்று நடத்திய கலவரங்கள் கொஞ்ச நஞ்சமா? அதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்துவிட்டனவா?

மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து, “மும்பையில் பிறந்தவர்களுக்குத்தான் மும்பை சொந்தம்” என்ற ஊர் வெறி கோசத்தை முன்வைத்து, மும்பையில் வாழ்ந்த பிற மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தி சிவசேனா பால்தாக்கரே நடத்திய கலவரங்களையும், அந்த கட்சியின் தீவிரவாதத் தொண்டர்கள் தமிழர்களுடைய சொத்துக்களை சூறையாடியதையும், அதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழ்நாட்டிற்கு ஓடி வந்ததும் இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா?

1993ஆம் ஆண்டு இவர் தூண்டிவிட்டதன் அடிப்படையில் மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே! அந்த கோர சம்பவங்கள்தான் இவர் செய்த தேசத் தியாகமா? அதனால்தான் இவருக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதையா?

பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் நிறுவனங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன . மும்பை கலவரம் குறித்து விசாரணை நடத்திய கிருஷ்ணா கமிஷன், கலவரத்திற்கு காரணம் பால்தாக்கரே என்றும் கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் தன்னை கைது செய்தால் மும்பை நகரம் பற்றி எரியும் என்று இவர் மிரட்டினாரே! இப்படி காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சவால் விட்டதால்தான் இவருக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதையா?

பத்திரிக்கையாளர்களை தாக்கி தீவிரவாதத்தை வெளிக்காட்டிய பால்தாக்கரேயின் தீவிரவாத முகம் அதற்குள்ளாகவா ஊடகங்களுக்கு மறந்துவிட்டது?

மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பீகார்காரர்களையும், வட மாநிலத்தவர்களையும் உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள் என்று கூறி விரட்டிவிரட்டி அடித்தார்களே சிவசேனா தீவிரவாதிகள். ஒரு ஆட்டோ டிரைவர் கூட பிற மாநிலத்தவராக இருந்தால் இங்கு இருக்கக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனச்சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர்தான் ஊடகங்களின் பார்வையில் தேசத்தியாகியா?

மும்பையின் முதலாளிகளை அன்ன தாதாக்கள் என்றும், தென்னிந்தியர்களை லுங்கிவாலாக்கள், கிரிமினல்கள், குண்டர்கள், சூதாடிகள் என்றும் கூறி மும்பை நகரத்தில் கூட்டம், கூட்டமாக நகரை விட்டு தென்னிந்தியர்களை கருவறுத்ததால்தான் தமிழகத்து ஊடகங்கள் இவருக்கு பாராட்டு மழை பொழிகின்றனவா?

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் ஊடகங்களைப் பார்த்து நாம் கேட்க வேண்டியுள்ளது.

இந்த லட்சணத்தில் ஊடகங்களுக்கு இவர் செய்த அநியாயங்களை பட்டியல் போடுவதற்குத்தான் திராணி இல்லை; வாய்மூடி மௌனமாகவாவது இருந்துவிட்டுப் போகலாமல்லவா? அதைவிட்டு விட்டு இவர் செய்த அனைத்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அனைத்து ஊடகங்களும் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளன.

எந்த அளவிற்கென்றால், முதன் முதலில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலைப்படையை 2002 ஆம் ஆண்டு உருவாக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர்தான் இந்த பால்தாக்கரே என்றும், மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முதன்முதலில் முன்வைத்தவர் இந்த பால்தாக்கரேதான் என்றும், இந்த ஊடகம் நடத்துபவர்கள் புகழ்ந்து தள்ளுகின்றார்கள் என்றால் இவர்களை என்னவென்பது?

அதுமட்டுமல்லாமல், இதுவரைக்கும் சுதந்திர இந்தியாவில் பொது இடத்தில் வைத்து எவரது உடலும் தகனம் செய்யப்பட்டதில்லையாம். இந்த தியாகி(?) உடைய உடல் மட்டும்தான் சுதந்திர இந்தியாவில் பொது இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டுள்ளது என்றும் புகழாரம் சூட்டியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், பால்தாக்கரே எந்த அரசாங்கப் பொறுப்பிலும் இருக்கவில்லை. மாறாக அரசாங்கத்திற்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் போர் தொடுத்தார். அப்படிப்பட்டவருக்கு நாட்டின் தேசியக் கொடியை போர்த்தி அழகு பார்த்ததை கண்டிக்க எந்த ஒரு ஊடகங்களுக்கும் துப்பில்லை.

அதிலும் இவருக்கு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலியாம். இதுவரைக்கும் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத ஒரு நபருக்கு அரசு மரியாதையோடு உடல் தகனம் செய்வது இதுவே முதல் முறை என்றும் அதையும் புகழ்ந்து எழுதியுள்ளன நம் நாட்டு காவி கரை படிந்த ஊடகங்கள்.

விட்டால் இவருக்கு தேசத்தியாகி என்ற பட்டம் கொடுத்து இவரது வாழ்க்கையை பாடப் புத்தகங்களில் தனியொரு பாடமாக்கி விடுவார்கள் போலத் தெரிகின்றது.

அதுமட்டுமல்லாமல், குறிப்பாக நமது தமிழகத்து ஊடகங்களுக்கு கொஞ்சம் மொழிப்பற்று(?) அதிகம்.
பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப்பார்வையும்

தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! என்றெல்லாம் வெட்டி பந்தா காட்டுவார்கள்.

பால்தாக்கரே தமிழர்களை கருவறுத்த செய்திகளையாவது குறைந்தபட்சம் இவர்கள் சுட்டிக்காட்டுவார்களா என்று பார்த்தால், அவர்களிடத்திலுள்ள மதவெறி அவர்களது மொழிவெறியை மறைத்துவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழர்கள் குறித்தும் எந்த ஊடகமும் வாய்திறக்கவில்லை.

தமிழனத் தலைவர்(?) என்று பீற்றிக்கொள்ளும் கருணாநிதியும் இவருக்கு இரங்கல் தெரிவித்து புகழாரம் சூட்டி தான் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார்.

இப்படி ஊடகத்துறையே ஒன்று சேர்ந்து தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக களம் கண்ட ஒருவருக்கு ஆதரவாக, அவரைத் தேசத்தியாகியாக சித்தரித்து செய்திகள் வெளிவந்த நிலையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் நமக்கு ஆறுதல் தந்தது.

ஆம்! இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக உள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விடுத்த அறிக்கைதான் அந்த ஆறுதலான விஷயம்.

மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து இந்திய நாட்டினரை துண்டாட முயன்று தேசத்துரோகத்தைச் செய்த பால்தாக்கரேக்கு இரங்கல் தெரிவிக்க இயலாது என்றும், இறந்துவிட்டார் என்பதால் அவரைப்பற்றி நல்ல வார்த்தை கூற தன்னால் இயலாது என்றும் மார்க்கண்டேய கட்ஜு துணிச்சலாக அறிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜுவைப் போல துணிச்சலாக உண்மையைப் போட்டு உடைக்கும் தன்மை அனைத்து ஊடகங்களுக்கும் வரவேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் கோட்சே கூட தேசத்தியாகியாக மாறினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


இன்னும் திருந்தாதா கூட்டம் :

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடக்கையில் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் அவர் கவலைக்கிடமாக இருந்த நாட்களிலும் பதற்றம் காணப்பட்டு மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டே இருந்தன. இது குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினரின் மருத்துவமனையை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

பால்தாக்கரே மரணமடைந்ததையடுத்து மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருந்ததாவது,

தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் லைக் கொடுத்திருந்தார்.

இந்த கருத்து வெளியான 'பேஸ் புக்' கணக்கின் முகவரி ஒரு மூட்டு சிகிச்சை மையத்தின் பெயரில் இருந்தது. இதை மோப்பம் பிடித்த சிவசேனா குண்டர்கள் அந்த மருத்துவமனைக்குத் திரண்டு சென்றனர்.

யார் ஃபேஸ் புக்கில் இந்தக் கருத்தை எழுதியது என்று கேட்டு மிரட்டவே, 21 வயது பெண் ஒருவர் வந்து, 'என் மனதில் பட்டதை தவறுதலாக பேஸ் புக்கில் வெளியிட்டேன். அந்த கருத்தை நீக்கி விடுகிறேன்'. என்று கூறி வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இருந்தாலும் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்தக் கருத்தை ஆமோதித்து 'லைக்' கொடுத்த இன்னொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். 2 பெண்கள் மீதும், மத உணர்வுகளை காயப்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமெண்ட் போட்ட பெண் அதை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டபோதிலும் பால்கர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் மருத்துவமனையை சுமார் 2,000 சிவசேனா தொண்டர்கள் சேர்ந்து அடித்து, நொறுக்கியுள்ளனர்.

பால்தாக்கரே செய்த தேச விரோதச் செயல்களை அந்தப் பெண் பட்டியல் போடவில்லை. இவர் இறந்ததற்கு எதற்கு கடையடைப்பு நடத்த வேண்டும் என்று கேள்வி கேட்ட பெண்ணையும், அதை லைக் என்று கிளிக் செய்த பெண்ணையும் மாநில அரசாங்கம் கைது செய்துள்ளது.

அந்த அப்பாவிப் பெண்கள் மீது எந்தப் பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர் என்பதைக் கேட்டால் உலகமே காரித்துப்பும். அதாவது மத உணர்வுகளை காயப்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அந்த அப்பாவிப் பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குப்போட்டுள்ளார்களாம்.

சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேயும், அவர்களது காட்டுமிராண்டி தொண்டர்களும் எத்தனை பேருடைய மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பார்கள்? அது இந்த மாநில அரசுக்குத் தெரியவில்லை. மாறாக அந்தப் பெண் கேட்ட நியாயமான கேள்வி இவர்களது மனதை புண்படுத்திவிட்டதாம்.

இவ்வளவுக்கு அந்தப் பெண் தான் எழுதியதற்காக மன்னிப்புக் கேட்ட பிறகும் அந்தப் பெண்ணின் உறவினரது மருத்துவமனையை சூறையாடியுள்ளனர் இந்த குண்டர்கள்.

அதே நேரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய சண்டாளர்களை காவல்துறை ஒன்றும் செய்யவில்லை. இத்தகைய மிகக்கேவலமான நிலைதான் இந்நாட்டில் நிலவுகின்றது எனும்போது இன்னும் பல கோட்சேக்கள் தேசத்தியாகிகளாக ஆவதற்கு இந்நாட்டில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

கோட்சேக்களுக்கு கொண்டாட்டம்தான்.

நன்றி : www.facebook.com/islmapj

டிஸ்கி :

இன்னமும் தினத்தந்தியை தமிழ் பற்று இதழ் என்று யாரும் நம்பினால் அவரைப்போன்ற முட்டாள் இல்லை என்றுதான் கூறவேண்டும்:
தமிழர்களை விரட்டுவதற்காகவே சிவசேன என்ற இயக்கத்தை தொடங்கிய மும்பை ரவுடி பால் தாக்கரேவுக்கு தேர்தல் கமிஷன் - 1999 முதல் 2005 வரை தேர்தலில் நிற்கவோ, வாக்களிக்கவோ தடை விதித்திருந்தது..

இவ்வளவு கேவலப்பட்டு போன அந்த ரவுடியைத்தான் ஒரு தேசிய தலைவரைப்போல இந்த கீழ்த்தரமான தினத்தந்தி தாங்கி பிடித்திருகிறது

"தேர்தல் கமிஷன் - 1999 முதல் 2005 வரை தேர்தலில் நிற்கவோ, வாக்களிக்கவோ தடை விதித்திருந்தது....அதே தேர்தல் கமிஷனே 2005 ஆம் ஆண்டு அந்த தடையை விளக்கி கொண்டது" என்று முட்டாள்தனமாகவோ அல்லது ஒரு கருத்து திணிப்பாகவு இந்த செய்தியை அந்த தினத்தந்தி என்கிற ஆபாச பத்திரிகை வெளியிட்டு தன அரிப்பை தீர்த்துக்கொள்கிறது .

1999 லிருந்து  2005 வரை ஆறு வருடங்கள் ஆனதால் அது இயற்கையாகவே அந்த தடை நீங்கி விடுகிறது..மக்களை முட்டாலாக்குவதர்க்காக, தமிழின விரோதியை ஒரு வெற்றி வீரனாய் காட்டுவதால் தினத்தந்திக்கு தமிழை விட மத வெறிதான் முக்கியம் என்று தெரிகிறது.

இவன் வேலை கள்ளத்தொடர்பு செய்திகளையும் கொலை கொள்ளை செய்திகளும் நடிகைகளின் அந்தரங்க செய்திகளும் தானே..? மும்பை ரவுடி இரண்ட்ததர்க்கு எதற்கு தமிழ்நாட்டில் பரபரப்பு செய்தி?

Friday, November 16, 2012

அம்மாவின் கைப்பேசி - நாட் ரீச்சபிள்


பணத்திற்கு பேராசைப்பட்டு,  தீயவர்களுடன் சேர்ந்து - கொலை செய்து - பணத்தை கொள்ளையடித்துவிட்டு   - அதன் காரணமாக மனது உறுத்தி பணத்தை  உரியவர்களிடம் சேர்த்துவிட்டு பிரயாச்சித்தம் தேடும் ஒரு படிக்காதவனின் கதை.

ஆரம்பகட்ட காட்சிகளில் வெளிப்படும்  செயற்கை தன்மை, மற்றும் நாடகத்தன்மை, படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை குலைத்துவிடுகிறது.

நடிகர்கள் தேர்விலும் - நடிப்பிலும் படு செயற்கை..

கதாநாயகனாக வரும் தங்கர் பச்சான் படம் முழுவதும் ஒரு பேக்கில் நெறைய பணத்தை வைத்துக்கொண்டு அலைகிறார்..
தங்கர் பச்சானின் ம மனைவியாக வரும் மீனாள் , சிலநேரம் அழுதுகொண்டும் சிலநேரம் கணவனிடம் சண்டையிட்டுக்கொண்டும் ஒரு கவர்ச்சிப்பாட்டும் பாடிவிட்டு செல்கிறார்

திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு, ஊரை விட்டு விரட்டப்படும் சாந்தனு, நடிக்கத்தெரியாமல் பலரிடம் வேலை செய்து பணக்காரராக உயர்கிறார்.

கல் குவாரி முதலாளியாக வரும் அழகம் பெருமாள் ஏமாந்த சோனகிரியாக இருக்கிறார்.

கல்குவாரி முதலாளியை ஏமாற்றும் குவாரி சூப்பர்வைசராக வரும் வடநாட்டு வில்லன் ஒருவர் ஆரம்ப காட்சியில் பெரிய மைனராகவும் இறுதியில் ஒரு வழிப்பறி திருடனாகவும் ஆகிறார்.

அம்மாவின் கைப்பேசி என்ற தலைப்பிற்காக - வயதான பெண் ஒருவருக்கு அவர் மகன் செல்போனே ஒன்றை அனுப்பி - ஒருகாட்சியில் அவருடன் பேசிவிட்டு மற்ற காட்சிகளில் தனது மாமன் மகளும், முன்னாள் காதலியும் தற்சமயம் திருமணம் ஆனவருமான ஒரு பெண்ணுடன் பேசி அழுது  கொண்டிருக்கிறார்கள்

அழகி, சொல்லமறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் போன்ற படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிஜம்.

அம்மாவின் கைப்பேசி - நாட் ரீச்சபிள்..

Tuesday, October 30, 2012

டுவீட்டர்கள் என்றால் கூச்ச்சளிட்டுக்கொண்டிருப்பவர்களா?


1. அழகிய ஆபத்து - நடிகை அனுஷ்காவின் பேட்டி
2. அழகானவர்களின் சாய்ஸ் - ஹிந்தி நடிகை பிபாஷா பாசுவின் பேட்டி 
3. முகத்தின் முகவரி - நடிகை ஹன்ஷிகா மோத்வானி பேட்டி 
4. உதடுதான் அழகை கூட்டிக்காட்டும் - நடிகை தீபாஷா பேட்டி 
5. பாலிவுட் பியூட்டி - நடிகை தீபிகா படுகோனே பேட்டி
6. எண்ணெய் பசை உஷார் - நடிகை மல்லிகா ஷெராவத் பேட்டி 
7. கால் அழகு - நடிகை பிரியங்கா சோப்ரா பேட்டி 
8. மரு போயே போச்சு - நடிகை கரீனா கபூர் பேட்டி 
9. உடையழகு - நடிகை கஜோல் பேட்டி 
10. சிவாஜி எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்? - நடிகர் பாண்டு பேட்டி 
11. கண்களில் நாட்டியம் ஆடுங்கள் - நடிகை ஜனனி அய்யர் பேட்டி 
12.  டாப் 10 பியூட்டி மாடல்கள் என்று ஆங்கில மாடல் அளழிகளின் ஆபாச படங்கள்.
13. புடவை கட்டினால் நீங்களும் தேவதைதான் - நடிகை நந்திதா பேட்டி 
14. ஆண்களுக்கு பிட்னெஸ்தான்  அழகு - நடிகர் கணேஷ்ராம் பேட்டி 
15. புன்னகைதான்  பெண்ணுக்கு அழகு - நடிகை சோனா பேட்டி 

இடையிடேயே நிறைய விளம்பரங்கள், ஒரு சாமியார் (சாய்பாபா)  பற்றி நல்லவிதமாகவும், இன்னொரு சாமியார் (நித்யானந்தா - மதுரை ஆதீனம் ) பற்றி விமர்சித்து ஒரு பக்கமும், மேலும் ஒன்றிரண்டு ஒருபக்க கதைகள் - மற்றும் ஜோக்குகள்..இதுதான் இந்த வார குமுதம் ..

1. பீட்சா - சினிமா விமர்சனம்
2. சிக்ஸ் பேக் சிங்கம் சைஸ் ஜீரோ ஹீரோ - நடிகர் மனோபாலா பேட்டி 
3. ஜெயலலிதாவின் ரசிகன் என்பதற்காக நான் வெட்கப்படவில்லை - நடிகர் சரத்குமார் பேட்டி 
4.  ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை - சினிமா இயக்குனர் முருகதாஸ் பேட்டி..
5. அடியே எங்கே கூட்டிப்போறே - நடிகை கார்த்திகாவின் இரண்டு பக்க படங்கள்..
6. இன்பாக்ஸ் - நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகள் 
7.  பிரியமானவர்களின் பிரியம் வேண்டும் - நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி 
8. வாசகர் கேள்வி - பாக்யராஜ் பதில்கள் - நடிகர் இயக்குனர் பாக்யராஜ் பதில்கள் 
9.  முகம் - பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை சைனா நேஹ்வால் பேட்டி 
10. சின்மயி vs கீச்ச்சர்கள் - சினிமாபாடகி சின்மயி - டுவீட்டேர்கள் பற்றிய செய்தி...

இடையிடையே இலக்கியம் என்ற பெயரில் யாருக்கும் புரியாத கதைகள் கட்டுரைகள் , பொக்கிஷம் என்ற பெயரில் பழங்காலத்து சாமியார் ஒருவரைப்பற்றிய கட்டுரை..இது ஆனந்த விகடன்..

இன்றைக்கு தமிழ்பற்று எனபது - தேச துரோக செயல்களான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளிப்பதும், கூடங்குளம் மின் நிலையத்தை செயல்படாமல் தடுப்பதும், அதுபோக பாடகி சின்மயி பற்றி விமர்சிப்பதும்தான் என்று டாஸ்மாக் புகழ் தமிழ்நாட்டு தமிழ்பற்று வியாபாரிகள் தத்தமது நேரத்தை செல்வழித்துக்கொண்டிருக்க, 

தமிழின் நம்பர்  ஒன என்று பீற்றிக்கொள்ளும் ஆபாச ஆனந்த விகடனும், தமிழர்களின் இதயத்துடிப்பு என்று ஓலமிடும் ஆபாச குமுதம் இதழ்களும் சிநிமாக்கூத்தாடிகளின் ஆலோசனைகளைத்தான் நீங்கள் படிக்கவேண்டும் என்று ஒவ்வொரு இல்லங்களிலும் ஆபாசைத்தை புகுத்தி தமிழனை சீரழித்துக்கொண்டிருக்கின்றன..

மேற்கண்ட குறிப்புகளெல்லாம் இந்த சிநிமாக்கூத்தாடிகள் சொன்னால்தான் மக்களிடம் போய் சேரும் என்றும் இந்த ஆபாச வியாபாரிகள் வியாக்கியானம் கூறுவார்கள்..தமிழ்பற்று வியாபாரிகளும், தமக்கு பொழுது போக டுவீட்டரிலும், பேஸ்புக்கிலும் தமக்கு பிடிக்காதவர்களை தமிழின விரோத முத்திரை குத்தி எழுதிவிட்டு, வீட்டுக்குள்ளேயே தமிழனின் மூளையை மழுங்கடிக்கும் இதுபோன்ற  ஆபாச  புத்தகங்களை ஆவலோடு வாங்கி படித்து புலன்காகிதமடைவார்கள்..

அதுவும் இந்த ஆபாச விகடனை பாருங்கள்..
சின்மயி  vs  கீச்ச்சர்கலாம்..அதாவது டுவீட்டேர்களை கீச்ச்சர்கள் என்று மொழிப்படுத்தி இவர்கள் எல்லாம் வீணாக கூச்ச்சளிட்டுக்கொண்டிருப்பவர்கள்தான் என்று நக்கலடிக்கிறான்..

சிக்ஸ் பேக் சிங்கம் சைஸ் ஜீரோ ஹீரோ,  ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை , இன்பாக்ஸ் என்றெல்லாம், ஆங்கிலத்தலைப்பில் வைத்துவிட்டு, டுவீட்டர்களை மட்டும் கீச்ச்சர்கள் என்று சொல்வதன் மூலம் இவன் தமிழை வளர்க்கிறானா  இல்லை தனது ஜாதி விசுவாசத்தை காட்டுகிறானா..?

டாஸ்மாக்கில் குவாட்டர் அடித்துவிட்டு, டுவீட்டரிலும், பேஸ்புக்கிலயும் தமிழ்பற்று வியாபாரம் செய்யும் தமிழ் வீரர்கள் பதில் சொல்லட்டுமே...


Saturday, October 27, 2012

"போடா நாயி..!"- பத்திரிக்கையாளர்களுக்கு விஜயகாந்த் கொடுத்த பட்டம்...இன்று விமானநிலயத்திர்க்கு வந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்தை மறித்து - நேற்றும் இன்றும் அவர்கட்சி எம் எல் ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்தது தொடர்பான கேள்விகளுக்கு ஆவேசமான விஜயகாந்த், நிதானமிழந்து - பத்திரிக்கையாளர்களைப்பார்த்து "போடா நாயே....உன் பத்திரிக்கையாட எனக்கு சம்பளம் தருது?" என்று ஆவேசமாக நிதானம் இழந்து  கூச்சல் போட்டார்..

வெறும் நடிகனாக வந்த விஜயகாந்தை, ஒருபடத்தில் "கேப்டன்" என்று அழைக்கப்பட்டதால் (கேப்டன் பிரபாகரன்) இன்றுவரை கேப்டன் என்ற அடைமொழியை வைத்துக்கூப்பிட்டு, சினிமா நடிப்பை நிஜ வாழ்க்கையில் நுழைத்தும் மக்களை மூளைச்சலவை செய்துவந்த பத்திரிக்கைகளுக்கு - கொடுத்த காசுக்கு -நாய் போல  நன்றியை காட்டிய பத்திரிக்கையாலர்களுக்க் இன்று விஜயகாந்த் "போடா நாயே" என்று விளித்ததின்  மூலம் உண்மையை மக்களுக்கு சொல்லிவிட்டார்,,,

இந்த விஜயகாந்த் என்னத்தை கிழித்தார் என்று இவருக்கு "கேப்டன்" பட்டம் கொடுத்தார்கள்? பத்திரிக்கையாளன் கவர் வாங்கிக்கொண்டு தன நன்றி விசுவாசத்தை காட்டியதால்தான் இன்று இந்த விஜயகாந்த் இந்த நிலைக்கு வரமுடிந்தது. அதே நேரம் காசுக்கு கூழைக்கும்பிடு போடுபவன் - ஒரு நேரத்தில் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்.இன்று நாய் என்று அழைக்கப்பட்டது அதன் விளைவே..

இருந்தாலும் - ஆனந்த விகடனுக்கு - இன்னும் அதிக விசுவாசம் போல...விஜயகாந்த் ஜெயா  டிவி நிருபர்களை திட்டியதை  மட்டும் வெளியிட்டு - மற்ற செய்திகளை எடிட் செய்து தனது விசுவாசத்தை காட்டிக்கொண்டான். நாளைக்கு இதற்கும் வேறு ஏதோ விளக்கம் கொடுத்து தான் என்றும்  - எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் நாய்தான் என்றும் நிரூபிப்பான்.

அது கிடக்கிறது ...மக்கள் நலனில் அக்கரைகொண்டா அந்த எம் எல்  ஏக்கள் ஜெயாவை சந்தித்தார்கள்? ..விஜயகாந்த்தின், மூர்க்கமான ஜெயா எதிர்ப்பு நிலையால், மற்ற எம் எல்  ஏக்களை போல தாமும் சம்பாதிக்க முடியவில்லையே என்ற சுய விருப்பன்றி வேறு என்ன இருக்க முடியும்? 

விஜயகாந்த் தன்னால்தான் வெற்றிபெற்றார் என்று எண்ணிக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் பழிவாங்கும் முயற்சி இந்த அளவில் வெற்றி பெறுவதற்கு காரணமும் இந்த பணத்தாசை  - பேராசை பிடித்த அரசியல் வியாதிகளுக்கு இருக்கிறது. இதை இந்த பத்திரிக்கைகள் வெளிகொண்டுவருமா? 
ஆனால் அரசியல் வியாதிகள் விட்டெறிந்த எலும்புத்துண்டுக்கு - வாலாட்டியே பழக்கப்பட்டுப்போன இந்த ஆபாச ஊடகங்கள்- நாளை இவர்கள் நிலையையும் நியாயப்படுத்தியே செய்தி வெளியிட்டு - தமது விசுவாசத்தை காட்டி, விஜயகாந்த் கொடுத்த பட்டத்திற்கு தாம் ஏற்றவர்கள்தாம் என்று எப்போதும் நிரூபித்துகொண்டுதானிருக்கும் .Thursday, October 25, 2012

மாமியார் உடைத்தால் மண்குடம்..சின்மயி உடைத்தால்...?


இந்த பழமொழி காலம்காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் அதைப் பற்றிய அனுபவம் ப்ளாக்ஸ் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களை பயன்படுத்தும்போது ஏற்பட்டது..

பேஸ் புக்கை பெரும்பாலும் ஆக்கிமித்திருப்போர் நாத்திகம் பேசுவோரும், தமிழ்பற்று வியாபாரிகளும்தான்..அவர்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாக என்னவேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளலாம. காரணம் கேட்டால் தமிழ்பற்று...அது வியாபாரம் என்று தெரியாத மூடர்களும் அதற்க்கு ஒத்தூதி வருகிறார்கள். பாடகி சின்மயி  மீனவர் பிரச்சினை பற்றி எழுதியது இன்று காவல்துறை தலையிடும் அளவுக்கு வந்து விட்டது..


நான் கேட்கிறேன்...எப்போதும் இலங்கை கடற்படை சுட்டுக்கொண்டுதான் இருக்கிறான்...இது தெரிந்தும் ஏன் இந்த மீனவர்கள் கடல் எல்லையை தாண்டவேண்டும் ....இங்குள்ள ஊடகங்களும் , அரசியல் வியாபாரிகளும் தமிழ்பற்று என்ற பெயரில் அவர்களை - உசுப்பேற்றி பெரும் உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றனர் என்றே கருதுகிறேன் .

இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினால் " இலங்கை கடற்படை அட்டூழியம்" என்றும் அதே சமயம் இலங்கை  மீனவர்கள் எல்லைமீறும்போது "இலங்கை மீனவர்கள் அத்துமீறல்" என்றும் தலைப்பிட்டு நமக்கு மட்டுமே சாதகமாக இந்த பத்திரிக்கைகள் எழுதுவதும் ஒரு காரணம்..

தமிழ் தமிழ் என்று அலறும் இந்த வியாபாரிகலேல்லாம் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள்..நமது மீனவர்கள் கடல் எல்லையை அத்துமீருவதால் பாதிக்கபடுவது சிங்கள மீனவர்கள் இல்லை - இலங்கையை சேர்ந்த, தமிழ் மீனவர்கள்தான் .பத்திரிகை முட்டாள்களும் அரசியல் முட்டாள்களும் இலங்கை எது செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு - கிறுக்குத்தனமாக அதை எதிர்த்து எழுதுவதென்றும் முடிவில் இருக்கிறார்கள் ..இது அப்பட்டமான வியாபாரம் என்று தெரிந்தும்  வலையுலக, மற்றும் சமூகவளைத்தள மேதாவிகளும் தமது அறிவு ஜீவித்தனத்தை வெளிக்காட்ட தமிழ்பற்று வியாபாரத்தை தொடர்கின்றனர்.

இதுகடக்கட்டும்  சமீபத்தில்  பேஸ்புக் வலைத்தளத்தில் ஒரு தோழி அறிமுகமானார்..தொலைபேசி எண்களை  பரிமாறும் அளவுக்கு நண்பர்களாகிவிட்ட நிலையில் திடீரென்று  அந்த தோழி என்னுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார் எனது பெயரையும் நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கிவிட்டார்..

காரணம் புரியாத நிலையில் தொடர்ந்து அவருக்கு எஸ் எம் எஸ் அனுப்பிய போதுதான் விஷயம் தெரிந்தது : நமது நாட்டில் நடைபெறும் மதம் என்ற பெயரில் மூடத்தனங்களும் சிலை வணக்கங்களையும் எதிர்க்கும்  இனைப்புகளை நான் தொடர்ந்து வெளியிட்டதுதான் காரணமாம்.

நாத்திகர்கள் , இலக்கியவாதிகள் என்று மக்களின் அறியாமையை கண்டித்தால் அதற்க்கு பெயர் பகுத்தறிவு..எம்மை போன்றவர்கள் கூறினால் நட்பு முறிவு 

இதைத்தான் மாமியார் உடைத்தால் மண்குடம் , மருமகள் உடைத்தால் பொன்குடம்  என்று கூறினார்களோ ? Monday, October 22, 2012

பேஸ் புக் கவலைகள்சிலவருடங்களுக்கு முன்பு நம்மை ப்ளாக்ஸ்பாட் என்னும் வலைத்தளம் ஆக்ரமித்திருந்தது என்றால் தற்போதைய காலகட்டங்களில் பேஸ்புக் என்ற சமூக இணையத்தளம் பெருமளவு நமது நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருப்பது கண்கூடாக தெரிகிறது..இதற்குமுன் வலைத்தளங்களில் எழுதிக்கொண்டிருந்த பெரும்பாலான பதிவர்கள் தற்போது பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் தத்தமது கருத்துக்களை பதிவதிலிருந்து இதை தெரிந்துகொள்ளலாம்.

காரணம் வலைத்தளங்களில் ஒரு பதிவை பதிவிட எடுக்கும் நேரம் அதிகம்..அனால் பேஸ்புக் வலைத்தளத்திலோ ஓரிரண்டு வரிகளில் சுலபமாக பதிந்துவிட்டு சென்றுகொண்டிருக்கலாம்.

ஆனால் ஒரு விசயம்தான்  புலப்படமாட்டேன் என்கிறது..முன்பு வலைப்பதிவர்கள், ஒட்டுப்போடுங்கள் என்று கேஞ்சிக்கொண்டிருந்ததுபோல தற்போது பேஸ்புக் கில், லைக் போடுங்க ஷேர்  பண்ணுங்க என்று கேஞ்சிக்கொண்டிருக்கிரார்க்க...இரண்டிலும் தாம் வெகுவாக அறியப்படவேண்டும் என்ற ஆவலே மிஞ்சி இருக்கிறது . ஷேர்  செய்வதில் கூட செய்தி பலரை சென்றடையும் என்றாலும் லைக் போடுவதால் என்ன பயன் என்று அறியமுடியவில்லை. யாரும் அறிந்திருந்தால் தயவு செய்து விளக்கவும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதிவிட்டு வருகின்றனர். காதல் கவிதைகள், காமகவிதைகள், சமூக கவலைகள், என்றாலும் பெரும்பாலும் தமிழ்பற்று - கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பு என்ற பெயரில் தேச துரோக ஆதரவாளர்களின் கூக்குரலை காணமுடிகிறது .. சந்தடி சாக்கில் சிலர் சாலையோர வாசிகளைப்பற்றிய அக்கறையையும் வெளியிட்டு தாங்கள் மனித உரிமைக்காவலர்கள் என்று பறை சாற்றுவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

அறிவாளிகள் என்று தம்மைத்தாமே நினைத்துக்கொண்டிருக்கும் இதுபோன்ற மனித உரிமைக்காவளர்கள் (?) சாலையோர வாசிகளைப் பற்றி கவலைப்பட்டால் போதும் என்று நினைத்துக்கொண்டு , அதே சாலையோர வாசிகளால் அவதியுறும் பெரும்பான்மை மக்களை அலட்சியபடுத்தி வருவதோடு சாலையோர வாசிகளின் இந்த நிலைக்கு அரசை குற்றம் சாடும் அரியாமையும் செய்து தம்மை அடையாளப்படுத்த முயல்வதுதான் வேடிக்கை.

வேலை செய்து வாழ்பவன் அனைவரும் உழைப்பாளிதான் இதில் கம்ப்யூட்டர் வேலை என்ன, தள்ளு வண்டி இழுக்கும் வேலை என்ன?அவனவன் தத்தமது திறமைக்கேற்ப உழைத்து வேலை செய்து சம்பாதிக்கிறான்.இதில் அலுவலகத்தில் ஏசி யில் அமர்ந்து வேலை செய்வதால் இவர்களுக்கேன் எரிகிறது?
சாலையோரத்தில் வசித்து கடினமான வேலைகளை செய்யும் அந்த ஏயை(?)கள்  செய்யும் அநியாயம் இவர்கள் கண்ணை மறைக்கிறதா அல்லது அதை கண்டுகொண்டால் தாம் அறிவாளி அல்ல என்று உணரபடுவோம் என்ற பயமா ?
நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டு வெளியே ஆக்கிரமித்துக்கொண்டு அரசின் இலவசங்கள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு - விலைவாசிக்கும் காரணமாவது மட்டுமல்லாமல் - திருட்டு மின்சாரம் திருடி தமது இலவசங்களை - டிவி மிசி கிரைண்டர் என்று நமது வரிப்பணத்தில் வாழும் இவர்களைவிட நடுத்தர மக்கள்தான் உண்மையில் அவதியுறுகிறார்கள் என்று இந்த மடையர்கள் உணர்வது எப்போது?

மீன்பாடி வண்டிகளையும் ரிக்ஷா   வண்டிகளையும் வாகனங்களுக்கு   இடையே  புகுத்தி பெரும் டிரபிக்க் நெரிசல்களுக்கு காரணம் இந்த சாலையோர வாசிகளின்  முரட்டுத்தனமான பொறுக்கித்தனம்தான் என்று   இந்த மாமேதைகளுக்கு ஏன் உரைக்க  மாட்டேன் என்கிறது?

நெரிசலான பகுதிக்குள் அதிகபாரம் ஏற்றிக்கொண்டு மாட்டுவண்டிகளையும், மீன்பாடி  வண்டிகளையும் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், மக்களையும் வாகனங்களையும் - இடித்து காயப்படுத்தியும் , பெரும் நெரிசலையும்  உண்டுபண்ணிவிட்டு கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமால் திமிர்த்தனமாக செல்வதற்கு என்ன பெயர் ?

இந்த மழைக்காலத்தில் சாலைகளில் சாக்கடைகள் தேங்கி நிற்பதற்கு யார் காரணம்? சாலைகளில் வசித்துக்கொண்டு அங்கேயே குளித்தும் அசுத்தம் செய்தும் குடித்தும் கும்மாளமிட்டும் - கோவில் திருவிழா என்ற பெயரில் முழு சாலைகளையும் ஆக்கிமித்துக்கொண்டும் அநியாயம் செய்வது யார்.

ஆயுத பூஜை என்ற பெயரில் - சாலைகளில் பூசணிகாயை உடைப்பது தேங்காயை உடைப்பதும் யார்?
 இதானால் ஏற்படும் விபத்துக்களுக்கும் உயிரிழப்புக்களுகும் காரணம் யார்?
எல்லவற்றையும் மறந்து அவர்கள் ஏயைகள்  (தரைப்படைகள் ஏழையை அவ்வாறுதான் அழைக்கும் ) என்று வக்காளத்து வாங்குவதால் நீங்கள் அறிவாளியாகிவிடமாட்டீர்கள் அறிவாளிகளே...

Friday, October 19, 2012

தந்தையும் மகளும் காதல் ஜோடியாக நடிக்கும் திரைப்படம் - இதைவிட கேவலம் உண்டா?எஸ் எ சந்திரசேகர் என்ற இயக்குனர் தனது மகனை நடிகனாக்க பல ஆபாச காட்சஈகளை புகுத்தி ஏறக்குறைய நீலப்படம் போன்றே பல தமிழ்படங்களை தந்தார்...


டி.ராஜேந்தர் தமது மகனை காதல் காட்சியில் நடிக்கவைத்து - தந்தைக்குரிய கடமையாற்றினார்...
பாக்யராஜ் தமது மகளையும், மற்றொரு நடிகனுடன் நடிக்கவைத்து புளங்காகிதமடைந்தார்..
ரஜினி என்ற வயதான ஒரு நடிகருடன் தனது மருமகள் கூத்தடித்ததை கைத்தட்டி மகிழ்ந்த சினிமா பாரம்பரிய பிக் பீ....அமிதாபட்சனை பார்த்தோம்..

அதுபோல தனது தோழியை தனது கணவனுடன் எவ்வளவு ஆபாசமாக நடிக்க வைக்க முடியுமோ அப்படி செய்த ரஜின்காந்தின் மகள் ஐஸ்வர்யாவை கண்டோம்..

சத்யராஜும் அவர் மகன் சிபியும் சேர்ந்து நமிதா என்ற நடிகையை ஜொள்ளுவிட்டு நடித்து கலைச்சேவை புரிந்து தமிழ் சேவையும் புரிந்து வருகிறார்கள்...

இதுபோன்ற கலை செவகர்களைஎல்லாம் விஞ்சிவிட்டார் ஒரு கன்னட படத்தயாரிப்பாளர்....

பி பி ஸ்ரீனிவாஸ் என்ற ஒரு கேவலமான ஒரு நடிகனே  "முஸ்சென்ஜெயா கெலாதி" என்ற கன்னடப்படத்தை தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து தான் பெற்ற மகளையே தனக்கு ஜோடியாக்கிக்கொண்டு கட்டிபிடித்து ஆபாச காட்சிகளில் நடித்து தந்தை மகள் உறவையே கேவலப்படுத்தி உள்ளான்..இதற்க்கு இவன் மகளான ஷாலினி என்பவளும் சேர்ந்து கூத்தடிப்பதுதான் அவலத்திலும் அவலம்...

ச்சே..எப்படி இந்த கூத்தாடிகளுக்கு பெற்ற மகளையே காமக்கண்ணுடன் பார்க்கும் மனம் வந்திருக்கிறது..கலை என்ற பெயரில் கூத்தடிக்கும் இந்த சினிமாகூத்தாடிகளின்  அந்தரங்கம் இதைவிட இன்னும் கேவலமாக இருக்கும் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? 

சினிமா உலகம் கேவலமான உலகம் மட்டுமல்ல - கேடுகெட்ட உலகம் என்பதையும் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பது தமிழ் மூடர்களின் தலைஎழுத்து...


Thursday, October 18, 2012

கமலஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதியா?
நடிகர் கமலஹாசனின் இயற்பெயர் யாருக்காவது தெரியுமா ?

இத்தனை நாட்களாக அவர் பெயர் கமலஹாசன் என்றே நினைத்திருந்தேன்...

ஆனால் அவர் இயற்பெயர் "பார்த்தசாரதி"யாமே?

இந்த இணைப்பை பாருங்களேன்..

http://in.omg.yahoo.com/photos/celebs-and-their-eal-names-slideshow/kamal-haasan-photo-1335780084.html

Monday, October 8, 2012

அனுபவக்கவிதை....


அனுபவக்கவிதை....
-------------------------
"பிள்ளைகளை இரண்டு சக்கர வாகனத்தில்
அழைத்துச் செல்கையில்
அருகில், பின்னாடி, எதிரில் வரும்
அனைத்து வாகன ஓட்டிகளும்
ராட்சசர்களாகவே தெரிகிறார்கள்.!"


தப்பு செய்தால்....?
-----------------

கடந்த வாரத்தில்   அண்ணா மேம்பாலத்தை கடக்கையில் அமெரிக்க துணை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அண்ணா மேம்பாலத்திலும் வரிசையாக போலீஸ் பூத்த்கள் போடப்பட்டு காவல் துறையினர் பாத்துகாப்பில் ஈடுபட்டிருந்தனர் ..இன்னும் சிறிது காலத்தில் அண்ணா மேம்பாலம் அமேரிக்கா மேம்பாலம் என்றுகூட அழைக்கப்படலாம்..(தமிழர்களுக்கு அடிமையாவதில் அவ்வளவு மகிழ்ச்சி..)

அதைப்பார்க்கையில் - "என்னதான் உலக வல்லரசாக இருந்தாலும் தப்பு செய்தால் - தான் ஆடாவிட்டாலும் தன சதை ஆடும்" என்றுதான் தோன்றியது ..

கேடுகெட்ட கலாசாரம்.
-----------------------------


இது நமதூர் அழகிகள் டிவியிலும் சினிமாவிலும் டிச்கொத்தேக்களிலும் அவுத்துப்போட்டு ஆடுவது பற்றியல்ல.
சின்னத்திரைகளில், சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர் போன்ற கூத்தடிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு ஓட்டுப்போட - எஸ் எம் எஸ் அனுப்பவும் இணையதளத்துக்கு சென்று வாக்களிக்கவும் என்றும் சமீபகாலமாக அவர்களின் பெற்றோர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள்..இன்னும் இவர்களின் பேராசை எதில் போய்  முடியப்போகிறதோ... தெரியவில்லை...

Thursday, October 4, 2012

புகைப்படம் எடுப்பவன் தீவிரவாதி என்றால் திரைப்படம் எடுப்பவன்? .....

சமீபகாலமாக நமது நாட்டில் நடைபெற்று வரும் கைது சம்பவங்களைப்பார்த்தால் நடப்பது ஒரு காமெடி தர்பார் எனபது போலத்தான் புலப்படுகிறது..

சில வாரங்களுக்கு முன்பு இராணுவ ரகசியங்களை புகைப்படம் எடுத்ததாக அதிராம்பட்டினத்தை சார்ந்த அன்சாரி என்பவரை தீவிரவாதி என்று போலீசார் கைது செய்தனர். சினிமாவில் ஆர்வம் உள்ளவரான அவர் ஒரு வெங்காய வியாபாரி..அவர் எடுத்து வைத்திருக்கும் புகைப்படங்களை விட, கூகுள எர்த்தில் அதிக தகவல்கள் கிடைக்கும். அல்லது பாக்கிஸ்தான் எல்லையிலேயே குடி இருக்கும் - கேப்டன் படங்களில் இருக்கும்..அல்லது, சுப்ரீம் ஸ்டார் அல்லது ஆக்ஷன் கிங் படங்களில் இதை விட அதிக தகவல்கள் இருக்கும்..

இது போன்ற கூத்தாடிகளுக்கெல்லாம் விருதுகளும் வி ஐ பி (ஆபாச விகடன் கூத்தாடிகளுக்கு வழங்கும் பட்டம்) என்ற மரியாதையும் வழங்கிவிட்டு, இது போன்று புகைப்படம் எடுப்பவரை எல்லாம் தீவிரவாதி என்று காமெடி பண்ணுவது போலிஸ் இலாகாவின் அறியாமையைத்தான் காட்டுகிறது

அதே போல "ட்ரீம் லைனர்" என்ற விமானாத்தை புகைப்படம் எடுத்ததற்காக இருவரை தீவிரவாதிகள் என்று கைது செய்திருக்கின்றனர் நமது போலீசார்.

விமானம் கடத்துவது எப்படி? குண்டு வைப்பது எப்படி, ? அரசியல் தலைவர்களை கொள்வது எப்படி? குழந்தைகளை கடத்துவது எப்படி, அவர்களை வைத்து பெற்றோர்களை மிரட்டி பணம் சம்பாதிப்பது எப்படி,? கொலை செய்வது எப்படி ? திருடுவது கொள்ளை எடுப்பது எப்படி,? என்பதை சீரியசாகவும் காமெடி என்ற பெயரிலும் சினிமாப் படங்களை எடுத்து சம்பாதித்து பயங்கரவாத செயல்களை சினிமா மூலமும் டிவி மூலமும் இளைஞர்களுக்கு சொல்லி கொடுத்து வரும் சிநிமாக்கூத்தாடிகளுக்கு அரசு மரியாதை, விருது என்று வழங்கிவிட்டு - இது போன்ற புகைப்படம் எடுப்போரை கைது செய்து என்னத்தை  கிழிக்க போகிறார்கள் இந்த மத வெறியர்கள்?
அதுவும் இவைகளில் சம்மந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் எனும்போது இங்குள்ள ஆபாச ஊடகங்களின் கற்பனைகளை என்னவென்று சொல்வது?Tuesday, September 25, 2012

பில்லா II - என்ன எழவு படம்டா இது...?நல்லவேளை இந்த படம் படுதோல்வி அடைந்து வந்த சுவடு இல்லாமல் போனது...
பொறுக்கிகளை, பயங்கரவாதிகளை, காமுகர்களை, தேச துரோகிகளை ஹீரோவாக்கும் முயற்ச்சியில் இப்படத்தின் முட்டாள் இயக்குனர் தோல்வி அடைந்து இருப்பது ஒரு விதத்தில் திருப்தியே..விடுதலைப்புலிகளை உசுப்பேற்ற - ஒருவேளை அவன்களிடம் பிச்சை எடுத்து படம் எடுத்திருப்பான்களோ? - இந்த டுபாக்கூர் படத்தை ஏகப்பட்ட பில்ட் அப்புகளோடு வெளியிட்டு  மூக்குடை பட்டிருக்கிறார்கள்...
அகதியாக வரும் ஒரு ரவுடியிடம் , முகாமில் கேள்விகேட்கும் அதிகாரியிடம் திமிராக பதில் சொல்கிறான்...
என்ன வேலை பார்க்கிறாய் என்பதற்கு எதற்கு "மயிற புடுன்கிறேன்" என்று பதில் சொல்லவேண்டும்? இங்குள்ள விசிலடிச்சான் குஞ்சுகளை குஷிப்படுத்தவா?
அடுத்த அடுத்த காட்சிகளில் அவன் பெரிய தாதாவாக உருவகப்படுத்தபடுகிறான்..அவனுக்கு முந்தைய பில்லாவில் வந்த அல்லக்கையே துணையாக..

"நாங்க அகதிதான்..அநாதை இல்லை" இது ஒரு வசனமாம்..அகதி என்றாலே ஒரு நாட்டில் இருந்து அனாதையாக வருவதுதான்...இதில் என்ன திமிர்பெச்சு..அடாவடித்தனம்? இவர்கள் போன்றவர்களால் தான் தமிழ்நாட்டில் இன்று குண்டுவெடிப்பும், போதை மருந்து கடத்தலும் பொறுக்கித்தனமும் அதிகமாகி, சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகி உள்ளது...

"டேய் நான் பொறந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா" என்று வெத்து வசனம் பேசும் அந்த பொருக்கி ரவுடி என்ன மயிற செதுக்குனான்னு தெரியல...வர்றவன் போறவன எல்லாம் போட்டுதல்லினதுதான் தன்னோட வளர்ச்சிக்கு காரணம் என்றால் - வன்முறையை தூண்டும் இந்த படத்தோட டைரக்டர "குண்டர் சட்டத்துல" உள்ளே தள்ளுனாதான் என்ன? 
 இந்த ஆண்ட்டி தான் மாமா மாமா மாமா என்று ரவுடியை கொஞ்சி செத்து போகிறாள் 

முதிர்ச்சியான அத்தை மகள்..மாமா என்று அந்த ரவுடியை அழைப்பது அபத்தமாக இருக்கிறது..
"எனக்கு என்ன மாமா வாங்கிட்டு வந்தே " என்று கேட்கிறாள்...
"உனக்கு இதே வேலையாப்போச்சு..ஒவ்வொரு தடவையும் அவன் வரும்போது இப்படியே கேளு" என்று அவள் அம்மா இவளை திட்டுகிறாள்..
ஒரு அகதி - மாதத்திற்கு ஒருதடவை இங்கே அகதியாக வந்துவிட்டு செல்வானா? 

வர்றவன்  போறவனை எல்லாம் அந்த பொருக்கி அகதி போட்டு தள்ளுகிறான்.. ஆயிரம் பேர் சேர்ந்து ஆயிரக்கணக்கான துப்பாக்கியால் சுட்டாலும் ஒன்னும் புடுங்க முடியாது..இவன் கோட்டுசூட்டு போட்டுக்கிட்டு ஒரு கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு நடந்து கிட்டே இருப்பான்...என்ன ஹீரோயசம்டா இது...
ரெண்டு வார்த்தை தான் பேசுறான்..அதுக்கு இங்குள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் (காசு கொடுத்து கூட்டி வரப்பட்டவை) குதிக்கின்றன...போதாததற்கு, ஆபாச பத்திரிக்கைகள்தான்  வாங்கிய காசுக்கு அதிகமாக கூவுகின்றன என்றால் - பதிவுலக மேதாவிகளும் " தல - முண்டம் " என்று ஜால்ரா அடித்து தமது சினிமா விசுவாசத்தை காட்டுகின்றன..
எதிரியிடம் இருந்து லவட்டிக்கொண்டு வரப்பட்ட  ஆண்ட்டி - இவளும் க்ளோஸ் 
படத்தில் இன்னொரு கிழவியை எதிரியிடம் இருந்து லவட்டிக்கொண்டு வரும் ரவுடி அகதி, அவளை தனது அத்தை மகள் முன்பே கட்டி பிடித்து கொஞ்சுகிரார்ன், அவள் முன்பு இவளை கொஞ்சுகிறான்..நல்ல கலாசாரம்டா..
இரண்டரை மணி நேர படத்தில், ஆபாச பாட்டுக்கள் போக மற்ற நேரங்களில் யாரையாவது எவனாவது கொன்று போட்டுக்கொண்டே இருக்கிரானுங்கள்..டைரக்டரின் அற்புதமான கற்பனை வறட்சியை - படம் வருவதற்கு முன்பு என்னமாதிரி பில்ட் அப் கொடுத்துகிட்டு இருந்தான்?

படம் எடுக்கும்போது, ஒவ்வொரு நடிகநிடமும் " நீ இந்த காட்சியில சாகனும்" என்று சொல்லித்தான் கால்ஷீட்டே வங்கி இருப்பானுங்க போல இருக்கு...
கடைசியில - பொருக்கி அகதியை தவிர- சாகுறது  படம் பார்க்கும் முட்டாள் ரசிகனும்தான்...

நல்லவேளை இந்த படம் படுதோல்வி அடைந்து வந்த சுவடு இல்லாமல் போனது...

Monday, September 24, 2012

அடுத்த வருடம் முதல் ரோமிங் கால் ஃ பிரீயாமே?
இந்தியாவிற்குள் பேசுவதற்கு தற்சமயம் ரோமிங் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது..

வரும் 2013 ஆம் ஆண்டு அந்த கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய  தொலை தொடர்பு அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார்.

இந்த இணைப்பை பார்க்கவும் 

Thursday, September 13, 2012

திரிப்பும் திணிப்பும் - ஊடக தந்திரம்....செய்தி ஊடகங்கள் பெருக பெருக, வியாபார நோக்கம் முற்றிப்போய், செய்திகளுக்காக ஆளாய் பறக்கும் ஊடகங்கள் எந்த எழவு செய்தியாவது போட்டு பக்கங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன...

எத்தனையோ சமுதாய மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கையில், அவைகளை எல்லாம் இருட்டடிப்பு செய்திவிட்டு, ரோம் பற்றிக்கொண்டிருக்கையில் பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனைப்போல,  சினிமா ஆபாச செய்திகளுக்கும், கிரிக்கெட் செய்திகளுக்கும் முக்கியத்துவம் (போல) செய்திகள் தந்து, முன் பக்கங்களில் ஆளும்  மற்றும் எதிர் கட்சிகளின் தனிநபர் தாக்குதலுக்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கின்றன...

தினமும் மின்சார பற்றாக்குறையால், அரசை குறை கூறிக்கொண்டிருக்கையில், மின் சார தேவைக்காக, கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இருக்கையில் சில அமெரிக்க அடிவருடிகள், கடைசி நேரத்தில் போராட்டம் என்ற  பெயரில் தங்களது சுய லாபத்துக்காக, மக்களுக்கு தவறான செய்திகளை பரப்பி - பரபரப்பூட்ட முனைகின்றன..
மின் பற்றாக்குரையைப்பற்றி குறை கூறி தலையங்கம் எழுதும் ஆபாச ஊடகங்கள், இதே அமெரிக்க கைக்கூலிகளை ஏதோ தியாகிகள் போல சித்தரித்து மக்களை பீதியூட்டுகின்றன.

எவன் தீக்குளிப்பான் அவன் வீட்டுக்கு சென்று விடுதலைப்புலிகளின் பணத்தை கொடுத்துவிட்டு  புகைப்படத்திற்கு "போஸ்" கொடுத்துவிட்டு வரலாம் என்று காத்திருக்கும் - விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளுக்கு இந்திய நலனுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் உடனேயே அங்கு சென்று ஓலமிட்டு வருவது வாடிக்கை..
வீரத் தமிழன்   செந்தமிழன் ,  பச்சைத்தமிழன்  என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் இந்த "டாஸ்மாக்" தமிழன், உண்மையிலேயே தமிழன் மீது அக்கறை இருந்தால் - பெப்சி, கோகா கோலா போன்ற விஷக்கிருமிகளுக்கு எதிராக களமிறங்கட்டும்..


எத்தனை விஞ்ஞானிகள் அணு உலை பற்றியா பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தாலும்,  இந்த உதயகுமார் குரூப்புக்கு அந்த செய்திகள் உரைக்காது..காரணம் அமெரிக்க விசுவாசம்..
இந்த விஷயத்தை ஊடகங்களும் மக்களுக்கு திரித்து திணிப்பது நயவஞ்சகம் என்பதைத்தவிர வேறு என்ன?

உதயகுமாருக்கும், நெடுமாறனுக்கும் , வைக்கோலுக்கும், கூத்தாடி சீமானுக்கும் இந்த அணு உலை பாதுகாப்புக்கு யார் வந்து உத்தரவாதம் தரணுமாம்? ஒபாமாவா இல்லை இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பிரபாகரனா? 

Thursday, September 6, 2012

இப்படியுமா இருப்பார்கள் ? பிரபல பெண் பதிவரின் லட்சணம் !!!

இப்படியுமா இருப்பார்கள் ? பிரபல பெண் பதிவரின் லட்சணம் !!!

இது எனக்கு ஆச்சரியத்தை அளித்ததது..நாம் பதிவர்களைப் பற்றி எவ்வளவு உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்... ஆனா இதை பார்க்கும்போது நமக்கே ஆச்சரியாமாக உள்ளது..

இந்த பதிவை பாருங்கள் தெரியும்....!!!!

Tuesday, September 4, 2012

ஆஹா..இதுவல்லவோ தமிழர் பண்பாடு....!!!


ந்தாரை வாழவைக்குமாம் தமிழ்நாடு..இது காலங்காலமாய் சுயபெருமை பேசும் தமிழர் கோஷங்களில் ஒன்று...

ரத யாத்திரை என்ற பெயரில் - இந்தியா முழுவதும் பெரும் கலவரங்களை தூண்டி, ஏராளமான் உயிர்களை குடித்த மதவெறியன் அத்வானி எப்போது வேண்டுமானாலும் தமிழகம் வரலாம்..அவர் வரும் வழியில் - சங்பரிவாரை திருப்தி படுத்தும் விதமாக வழியில் குண்டு கண்டுபிடிக்கப்படும், குண்டை வைத்தவர்கள்   ஏதாவது இஸ்லாமிய இயக்கத்தின் பெயர் சூட்டப்படும்...

குஜராத்தில் திட்டமிட்டு இஸ்லாமியர்களை கருவறுத்த மத வெறி மிருகம் பயங்கரவாதி நரேந்திர மோடி  தமிழ்நாட்டின் முதலமைச்சரின் நிரந்தர விருந்தாளி.. பல்வேறு வெளிநாடுகளில் விசா மறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டாலும் - அடுத்த முதல்வன் என்ற அளவுக்கு தமிழ்நாட்டில் அவனுக்கு மரியாதை..

உலகமெங்கும் இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து தாக்கி அழித்து வரும் உலமகா பயங்கரவாதிகள் அமெரிக்காவை சேர்ந்த யார் வந்தாலும், - அவர்கள் நமது நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களை அவர்ளது நாட்டில் வைத்து பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்ஹ்டினாலும் - நமது நாட்டுக்கு வந்தால் நமக்கெல்லாம் ஜென்ம சாபல்யம் கிட்டியதுபோல - அவர்களிடம் நமது நாட்டின் பாதுகாப்பையே ஒப்படைத்து சரணாகதி அடைகிறோம்..

ராஜீவ்காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளுக்கு கைக்கூலிகளாக இருக்கும் "லேட்டஸ்ட் தமிழ்பற்று வியாபாரிகளை" இன்னும் இங்கே சுதந்திரமாக உலாவ விடுகிறோம்..

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும் இன்னும் ஐபிஎல்லின் பங்கேற்கும் பல அணிகளிலும் இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகிறார்கள்....

ஆனால் இங்கே - கால்பந்து விளையாட்டு பயிற்ச்சிக்காக வந்த இலங்கை வீரர்களை விரட்டியடிக்கும் தமிழர் பண்பாடு எந்தவகயை சேர்ந்தது என்று விளங்கவில்லை..இப்படி செய்துவிட்டால் விடுதலைப்புலிகளுக்கு தனி நாடு கிடைத்துவிடுமா..?

டிஸ்கி...:

குஜராத்தில் பயங்கவாத செயல்களில் ஈடுபட்ட 32 பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், பயங்கரவாத பிஜேபி ஆளும் கரநாடக மாநிலத்தில் 10  பேரை பிடித்து  தீவிரவாதிகள் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை தகர்க்க திட்டம் என்றும் பரபரப்பூட்டுகிரார்கள்..

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஒழித்துக்கட்டுவதர்க்குதான் அமெரிக்காவை சேர்ந்த உதயகுமார், லேட்டஸ்ட் தமிழ்பற்று வியாபாரிகள் வைகோ, நெடுமாறன் மற்றும் கூத்தாடி சீமான் இருக்கையில் இவர்களுக்கு ஏன் இந்த வேலை என்ற கேள்வி எழுகிறது...

இதையும் படியுங்கள்....