Pages

Monday, October 22, 2012

பேஸ் புக் கவலைகள்சிலவருடங்களுக்கு முன்பு நம்மை ப்ளாக்ஸ்பாட் என்னும் வலைத்தளம் ஆக்ரமித்திருந்தது என்றால் தற்போதைய காலகட்டங்களில் பேஸ்புக் என்ற சமூக இணையத்தளம் பெருமளவு நமது நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருப்பது கண்கூடாக தெரிகிறது..இதற்குமுன் வலைத்தளங்களில் எழுதிக்கொண்டிருந்த பெரும்பாலான பதிவர்கள் தற்போது பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் தத்தமது கருத்துக்களை பதிவதிலிருந்து இதை தெரிந்துகொள்ளலாம்.

காரணம் வலைத்தளங்களில் ஒரு பதிவை பதிவிட எடுக்கும் நேரம் அதிகம்..அனால் பேஸ்புக் வலைத்தளத்திலோ ஓரிரண்டு வரிகளில் சுலபமாக பதிந்துவிட்டு சென்றுகொண்டிருக்கலாம்.

ஆனால் ஒரு விசயம்தான்  புலப்படமாட்டேன் என்கிறது..முன்பு வலைப்பதிவர்கள், ஒட்டுப்போடுங்கள் என்று கேஞ்சிக்கொண்டிருந்ததுபோல தற்போது பேஸ்புக் கில், லைக் போடுங்க ஷேர்  பண்ணுங்க என்று கேஞ்சிக்கொண்டிருக்கிரார்க்க...இரண்டிலும் தாம் வெகுவாக அறியப்படவேண்டும் என்ற ஆவலே மிஞ்சி இருக்கிறது . ஷேர்  செய்வதில் கூட செய்தி பலரை சென்றடையும் என்றாலும் லைக் போடுவதால் என்ன பயன் என்று அறியமுடியவில்லை. யாரும் அறிந்திருந்தால் தயவு செய்து விளக்கவும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதிவிட்டு வருகின்றனர். காதல் கவிதைகள், காமகவிதைகள், சமூக கவலைகள், என்றாலும் பெரும்பாலும் தமிழ்பற்று - கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பு என்ற பெயரில் தேச துரோக ஆதரவாளர்களின் கூக்குரலை காணமுடிகிறது .. சந்தடி சாக்கில் சிலர் சாலையோர வாசிகளைப்பற்றிய அக்கறையையும் வெளியிட்டு தாங்கள் மனித உரிமைக்காவலர்கள் என்று பறை சாற்றுவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

அறிவாளிகள் என்று தம்மைத்தாமே நினைத்துக்கொண்டிருக்கும் இதுபோன்ற மனித உரிமைக்காவளர்கள் (?) சாலையோர வாசிகளைப் பற்றி கவலைப்பட்டால் போதும் என்று நினைத்துக்கொண்டு , அதே சாலையோர வாசிகளால் அவதியுறும் பெரும்பான்மை மக்களை அலட்சியபடுத்தி வருவதோடு சாலையோர வாசிகளின் இந்த நிலைக்கு அரசை குற்றம் சாடும் அரியாமையும் செய்து தம்மை அடையாளப்படுத்த முயல்வதுதான் வேடிக்கை.

வேலை செய்து வாழ்பவன் அனைவரும் உழைப்பாளிதான் இதில் கம்ப்யூட்டர் வேலை என்ன, தள்ளு வண்டி இழுக்கும் வேலை என்ன?அவனவன் தத்தமது திறமைக்கேற்ப உழைத்து வேலை செய்து சம்பாதிக்கிறான்.இதில் அலுவலகத்தில் ஏசி யில் அமர்ந்து வேலை செய்வதால் இவர்களுக்கேன் எரிகிறது?
சாலையோரத்தில் வசித்து கடினமான வேலைகளை செய்யும் அந்த ஏயை(?)கள்  செய்யும் அநியாயம் இவர்கள் கண்ணை மறைக்கிறதா அல்லது அதை கண்டுகொண்டால் தாம் அறிவாளி அல்ல என்று உணரபடுவோம் என்ற பயமா ?
நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டு வெளியே ஆக்கிரமித்துக்கொண்டு அரசின் இலவசங்கள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு - விலைவாசிக்கும் காரணமாவது மட்டுமல்லாமல் - திருட்டு மின்சாரம் திருடி தமது இலவசங்களை - டிவி மிசி கிரைண்டர் என்று நமது வரிப்பணத்தில் வாழும் இவர்களைவிட நடுத்தர மக்கள்தான் உண்மையில் அவதியுறுகிறார்கள் என்று இந்த மடையர்கள் உணர்வது எப்போது?

மீன்பாடி வண்டிகளையும் ரிக்ஷா   வண்டிகளையும் வாகனங்களுக்கு   இடையே  புகுத்தி பெரும் டிரபிக்க் நெரிசல்களுக்கு காரணம் இந்த சாலையோர வாசிகளின்  முரட்டுத்தனமான பொறுக்கித்தனம்தான் என்று   இந்த மாமேதைகளுக்கு ஏன் உரைக்க  மாட்டேன் என்கிறது?

நெரிசலான பகுதிக்குள் அதிகபாரம் ஏற்றிக்கொண்டு மாட்டுவண்டிகளையும், மீன்பாடி  வண்டிகளையும் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், மக்களையும் வாகனங்களையும் - இடித்து காயப்படுத்தியும் , பெரும் நெரிசலையும்  உண்டுபண்ணிவிட்டு கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமால் திமிர்த்தனமாக செல்வதற்கு என்ன பெயர் ?

இந்த மழைக்காலத்தில் சாலைகளில் சாக்கடைகள் தேங்கி நிற்பதற்கு யார் காரணம்? சாலைகளில் வசித்துக்கொண்டு அங்கேயே குளித்தும் அசுத்தம் செய்தும் குடித்தும் கும்மாளமிட்டும் - கோவில் திருவிழா என்ற பெயரில் முழு சாலைகளையும் ஆக்கிமித்துக்கொண்டும் அநியாயம் செய்வது யார்.

ஆயுத பூஜை என்ற பெயரில் - சாலைகளில் பூசணிகாயை உடைப்பது தேங்காயை உடைப்பதும் யார்?
 இதானால் ஏற்படும் விபத்துக்களுக்கும் உயிரிழப்புக்களுகும் காரணம் யார்?
எல்லவற்றையும் மறந்து அவர்கள் ஏயைகள்  (தரைப்படைகள் ஏழையை அவ்வாறுதான் அழைக்கும் ) என்று வக்காளத்து வாங்குவதால் நீங்கள் அறிவாளியாகிவிடமாட்டீர்கள் அறிவாளிகளே...

4 comments :

Arif .A said...

சில நேரம் உண்மை சுடும்,சில நேரம் உண்மை நிழலில் இழப்பாறும்.மேலே சொன்ன கூற்று அனைத்தும் சரியே.

Manickam sattanathan said...

எல்லாம் சரிதான்.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க பெரும்பாலும் இவர்களைத்தான் நம்பியுள்ளன. என்னையும் உங்களையும் அல்ல தோழரே. இதுதான் சூட்சமம்.இவர்கள் இவ்வாறு இருத்தலே அவர்களுக்கு பலம். நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ. அவர்கள் அப்படித்தான் இருக்க வைக்கப்பட்டுள்ளார்கள். அப்படித்தான் இருப்பார்கள். இதை நான் சொல்லவில்லை, அவர்களின் ரட்சகனாக தங்களை காட்டிக்கொளும் "தலிவர்களின் " கருத்தும் இதுதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

முகநூல் பக்கம் அதிகம் செயல்வதில்லை... (பதிவை இணைக்கும் சமயம் தவிர)

கேள்விகள் அனைத்தும் நச்... நச்...

நன்றி...

Shankar said...

Dear Marmayogie,'While I am NOT in agreement with some of your earlier postings, I am fully endorsing your views. One must have guts to speak their mind out in such issues. While we can be sympathetic towards the downtrodden and the less privileged,I think in most cases they are themselves to be blamed.I too hail from a lowe middle class family who live most of my formative life in a single room house( NOT single bedroom house), but due to hard work and and some bold decisions I am okay today.
The homeless think it is their right to be arrogant and brash. The local low level politicians patronise them and also encourage them. I have a lot of respect for the working class and their children, but their attitude sucks.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?