Pages

Saturday, March 31, 2012

" 3 " - வக்கிரமான கற்பனை
3 -  என்ற தலைப்பிற்கு  என்ன காரணம் என்று ஆராய்ந்தால் - அசிங்கம், அருவருப்பு..ஆபாசம்.. என்று கொள்ளலாம்..

இந்த படத்தை இவர்கள் வியாபாரம் செய்வதற்காக கொண்ட மலிவான தந்திரங்களை பார்த்தாலே தெரியும் படம் எவ்வளவு கீழ் தரமானது என்று..இது பற்றி ஏற்கனவே - படம் வெளிவரும் முன்பே ஒரு பதிவிட்டிருக்கிறேன்..

ஏற்கனவே எண்களை தலைப்பாகக் கொண்ட படங்கள்  அனைத்தும் படு சொதப்பல் என்னும்போது - இந்தப்படம் மட்டும் விதிவிலக்காக இருக்குமா என்ன?
12B, 180, மற்றும் 6"  போன்ற படங்களைவிட, படு கேவலமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே வெளிவந்த "180", "முப்பொழுதும் உன் கற்பனைகள்", "மயக்கம் என்ன"  போன்ற படங்களை காப்பி அடித்து எடுத்ததாலும் மூன்று என்று பெயர் வைத்திருக்கிறார்களோ என்னவோ..

30 வயதை நெருங்கும் தனுஷும், 25  வயதை கடந்த ஸ்ருதியும்  பிளஸ் டூ மாணவர்களாக நடித்து மாணவர்களை எப்படி வழிகெடுக்க வேண்டும் என்று பாடம் நடத்தி இருக்கிறார்கள்.

ஒருதடவை பார்த்து, ஒருதடவை பேசி, பிறகு அவன் ஒருநாளில் கிளாசுக்கு வரவில்லை என்றதும், கதாநாயகிக்கு கதாநாயகன் மீது காதல் வருவது போன்ற இயற்க்கைக்கு பெருந்தாத  காட்சிகளை எப்போதுதான் கைவிடப்போகிரார்களோ தெரியவில்லை..

இயக்கம் ரஜினிகாந்தின் மகளாம்..பெண் இயக்குனர் போலவா இருக்கிறது? அதுவும் நடிப்பது தன் கணவன் என்பதையே  மறந்து விட்டு, ஒரு சராசரி வியாபாரியை போல  இயக்கி இருக்கிறார்..தனுஷ் - சுருதி சம்மந்தப்பட்ட காட்சிகள் படு ஆபாசம் .

ஒருகாட்சியில் ஸ்கூல் வாசலில் தான் சைட் அடிக்கும் பெண்ணை கதாநாயகன் தனது நண்பனுக்கு காட்டுகிறான்..."டே ஒன்னும் பெரிசா இல்லையே"  என்று அவன் இரண்டு அர்த்தத்தில் சொல்லுகிறான்..

அந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி தான் வீட்டில் தனியாக இருக்கிறேன் வந்து என்கூட (படு) இரு என்று அவனை திருட்டுத்தனமாக வீட்டுக்கு அழைக்கிறாள்..ஏற்கனவே படுமோசமான செக்ஸ் வக்கிரங்கள் அன்றாடம் கேள்விப்பட்டு வருகிறோம்..இப்படி இவர்களின் இந்த ஆபாச வியாபாரத்தால் இன்னும் மாணவர்கள் கெட்டு  குட்டிசுவராத்தான் போவார்கள்..நல்லவேளை படம் படு சொதப்பல். நிச்சயமாக ஓடாது..

தனுஷ் சுருதி சம்மந்தப்பட்ட முதலிரவு மற்றும் காதல் காட்சிகள் "மனைவி கணவனுக்காற்றும் உதவி" 

எல்லாபடங்களைப்போலவும், காதலிக்கும் அக்காவுக்கு அவளது தங்கை உடந்தை...

முதல்காட்சியில் இருவரையும் அறிமுகப்படுத்த, கதாநாயகி ஏழையாம்..அதனால் "தயிர் சாதம்" கட்டி கொடுக்கிறாள் அவளது தாய்..
கதாநாயகன் பெரும் பணக்காரனாம்.."சிக்கன்" கறி கொடுத்தனுப்புகிறாள்..இதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமாம்...எரிச்சலாக உள்ளது...

பெரும் கோடீஸ்வரன் ஒரு தரைப்படை போல நடந்து கொள்கிறான்.. ஏழையான சுருதி இடைவேளைக்கு அப்புறம் வரும்  காட்சிகளில் எல்லாம் அவள் ஒரு பெரும் பணக்கார வம்சத்தை போலவே காட்சிகள் அமைந்திருப்பது- படு சொதப்பலான இயக்கம்..

கதாநாயகனின் தந்தையாக வரும் பிரபு அவர் வரும் காட்சிகளில் எல்லாம்  ஒரு மூலையில் டேபிள் சேர் போட்டு அமர்ந்திருப்பது சிரிப்பாக வருகிறது..

இரு குடும்பமும் ஒப்புக்கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் ஏன் யாருக்கும் சொல்லாமல் சாராயக்கடையில் திருமணம் செய்துகொண்டார்கள் என்று யோசித்தால் இது இயக்குனரின் வக்கிரமான கேவலமான  சிந்தனையே காரணம் என்று அடித்து சொல்லலாம்..

தாலி கட்டும்போது சாரயத்தை சாட்சியாக  வைத்து தாலி கட்டி - சம்பிராதயங்களை கேலிகூத்தாக்கும் இயக்குனர், தொடர்ந்து, கணவனும் மனைவியும் நண்பர்கள் அருகருகே - குடித்துவிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு படுத்துறங்குவது  போன்ற காட்சிகளையும் - காட்டி தனது வக்கிரத்தை தீர்த்துக்கொள்கிறார்..


படத்தில் வரும் பாடல் காட்சிகள் அனைத்திலும், "மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு" என்ற எழுத்துக்கள் நிரந்தரமாகவே வருகின்றன..

ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடலை யு ட்யூபில் வேண்டுமானால் கேட்டுக்கொள்ளலாம்..படமாக்கப்பட்ட விதமும் ரொம்ப சுமார். அதற்கான காட்சியும் வலுக்கட்டாயமாக தேவை இல்லாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது..எந்த ஒரு தாக்கமும் இல்லை..

இடைவேளைக்கு அப்புறம் தனுசை ஒரு பைத்தியக்காரனாக்கி விடுகிறார்கள்..ஏதோ ஒரு பைத்தியக்கார வியாதியைக் காட்டி,  ஒரு நாயை கொல்லவைத்து வைத்து ஒரு சண்டை காட்சியையும் திணித்து, தற்கொலை செய்துகொள்ள வைத்து படத்தை முடித்து விடுகிறார்கள்..

"சீக்கிரம் கழுத்தை அறுத்துக்கொண்டு சாகமாட்டானா" என்று இறுதிக்காட்சியில் கத்தவைத்துவிட்டார்கள்..

இந்த இடத்தில் வேண்டுமானால் "ஒய் திஸ் தற்கொலை வெறி" என்ற பாடலை சேர்த்திருக்கலாம்.

தனுஷ் இறந்ததற்கான காரணம் தெரியாமல் சுருதி தனிமையில் இருக்கிறாராம்...ஆனால் அவன் நண்பன் சொல்லும்  பிளாஷ் பேக் காட்சிகளில் காட்டப்படும் தனுஷுக்கான பைத்தியம் வரும் காட்சிகள் அனைத்தும் சுருதிக்கு சிறிதுகூடவா சந்தேகம் ஏற்படவில்லை?

இறுதிக்கட்ட காட்சிகள் - அனுதாபத்திற்கு பதிலாக திரையரங்கம் முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருப்பது - டைரக்டருக்கும் படத்திற்கும் படுதோல்வி என்பதை உறுதிப்படுத்துகிறது..

படம் விட்டு வெளிவரும்போது "கர்ணன்" படத்திற்காவது டிக்கெட் எடுத்தியா என்று நண்பர்கள் கிண்டலடித்துக்கொண்டதும் அதற்க்கு நல்ல சாட்சி..

படத்தை பெருமளவில் விற்பனை செய்வதற்காக, ஸ்ருதிக்கும் தனுஷுக்கும்  தொடர்பு, என்ற ரீதியில் இவர்கள் வெளியிட்ட மலிவான விளம்பரங்கள் கூட இந்த படத்திக்கு உதவவில்லை...

Thursday, March 29, 2012

கற்பனை கோட்டை தேசிய சின்னமாக்குவதால் என்ன நன்மை?
எந்த ஒரு நல்ல திட்டத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக எதிர்ப்போர் இருந்துகொண்டேதான் இருப்பார்கள் ...

சேது சமுத்திர திட்டத்தை- பெரும் விழா எடுத்து தொடங்கினார்கள்..அது பொறுக்கவில்லை  சில மத வெறியர்களுக்கு...இல்லாத ஒன்றை உருவாக்கினார்கள். அதற்க்கு ராமர் பாலம் என்ற பெயரை சூட்டி,,அந்த திட்டத்தை தடுத்தார்கள்..

சேது சமுத்திர திட்டம் தொடங்குவதற்கு காரணம் நான்தான் என்று விளம்பர மோகம் பிடித்து அலைந்த அரசியல் "வியாதி'களெல்லாம், மதவெறி மிருகங்களின் இந்த திட்டத்திற்கு பலியாகின..

இந்த விஷயத்தை முளையிலேயே கில்லி எறியவேண்டிய நிலையில் இந்த நீதிமன்றங்களும், அந்த மதவெறியர்களின் - வழக்கை விசாரித்து இன்று சேதுசமுத்திர திட்டத்தை எட்டாகனியாக்கி...மேலும் மேலும் சிக்கலாக்கிவிட்டன..

போதாதற்கு இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை அவர் தமிழகத்தின் முதல்வரா இல்லை சங்பரிவாரின் பினாமியா என்று  நினைக்க    வைக்கிறது.
அந்த கற்பனை கோட்டை, தேசிய சின்னமாக்க - நீதி மன்றங்களில் வழக்குகளை தொடர்ந்ததாக பெருமையடித்துக்கொள்ளும் ஜெயலலிதா அதை செயல்படுத்துமாறு பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது.

இந்த உபயோகமற்ற விசயத்திற்காக ஒட்டு பொருக்கி அரசியல் வியாதிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நடத்தி பாராளுமன்ற நிகழ்வுகளை முடக்கி வைத்துள்ளனர்..

பகுத்தறிவுவாதிகள் என்று பீற்றிக்கொள்ளும் தி.மு.கவினரும் இதற்க்கு ஒத்தூதுவதுதான் வேதனைக்குரிய விஷயம்..

சேதுசமுத்திர திட்டம் செயல்பட தொடங்கினால்  நஷ்டம் இலங்கைக்குத்தான்  என்பதால்  இத்திட்டத்தை முடக்க திட்டமிடுவது இலங்கைதான் என்ற ஒரு செய்தி உண்டு..

விடுதலைப்புலிகளுக்காக  - இந்தியாவிற்கே துரோகம் செய்ய துணிந்த தமிழ் பற்று வியாபாரிகள் - இலங்கையை புறக்கணிக்க சொல்லிக்கொண்டும் அலைகிறார்கள்..இந்த விசயத்தில் இங்குள்ள அரசியல் வியாதிகள் இலங்கைக்கு சாதகமான நிலையை எடுத்திருக்கிறார்களே ..இதை இவர்கள் ஆதரிப்பார்களா.?.அப்படி அவர்கள் ராமர் பாலம் என்ற கற்பனை கோட்டை ஆதரித்தார்கள் என்றால் இவர்களின் தமிழ்பற்று நூறு சதவீதம் வியாபாரம்தான் என்று தெளிவாகிவிடும்.

மக்கள் நலனை மனதில் கொள்ளாமல், மூடநம்பிக்கை - மதவெறி வியாபாரம் செய்யும் இந்த அரசியல் வியாதிகளாலும், கற்பனை கோடுகளாலும் என்னதான் உபயோகம்?

Friday, March 23, 2012

தமிழ்படங்கள் - சில "ஏன்"கள் - சில "எப்படி" கள்


எப்போதோ ஒரு பதிவில் படித்த ஞாபகம்..


அதாவது தமிழ்படங்களில், கதாநாயகியை வில்லன்கள் துரத்திச்சென்று கற்பழிக்க முயல்கையில் - ஏழு கடல்களுக்கு அப்பால் இருந்தாலும் கதாநாயகன் வந்து காப்பாற்றி விடுவான்...அதே சமயம் அவன் கதாநாயகனின் தங்கை என்றால் அவள் கற்பழிக்கப்பட்டு, தற்கொலை செய்துகொண்டபின்போ..அல்லது தற்கொலைக்கு முயற்ச்சிக்கும் போதோ தான் வருகிறான்..


இதை படித்த பின்பு  நிறைய "ஏன்" கள் "எப்படி" கள் தோன்றியது....


1. கதாநாயகனை தாக்க வரும்  குண்டர்கள், கூட்டமாக வந்தாலும், தனித்தனியாக வந்து அடிவாங்கி செல்வது ஏன்?


2. கதாநாயகன் கிராமத்திலிருந்து அப்போதுதான் வந்து ரயில்வே ஸ்டேஷனிலோ, அல்லது பஸ் ஸ்டாப்பிலோ இறங்கும்போது நவநாகரீக மங்கை அவனுக்காகவே காத்திருப்பது ஏன்?
3. அதே மக்கு கதாநாயகன் திடீரென ஒரு பிரச்சினையில் சிக்கும்போது, - எந்த முன் அனுபவுமும் பயிற்ச்சியும் இல்லாமல், துப்பாக்கியை குறிபார்த்து சுடுவது - அல்லது துப்பாக்கியை லாவகமாக கையாளுவது எப்படி?


4. போலீசாரோ அல்லது வில்லன் கோஷ்டியோ..எத்தனை பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டாலும், இதற்கும் முன் எந்த பயிற்ச்சியும் பெறாத கதானாயகள் துளி கூட காயம் படாமல் தப்பிப்பது எப்படி..?


5. பயங்கரமான இரும்புத்தடியாலும், கடுமையான ஆயுதங்களாலும், மண்டையிலும், முகத்திலும் மரண அடி கொடுத்தும் கதாநாயகன் கடைசி காட்சியில் வசனம் பேசி வில்லனை கொன்றுவிட்டு ராஜ நடை போடுவது எப்படி?6. கதாநாயகன் எவ்வளவுதான் பொறுக்கியாக இருந்தாலும் விழுந்து விழுந்து காதலிக்கும் கதாநாயகி, வில்லன் எவ்வளவுதான் நாகரீகமாக இருந்தாலும் அவனை காரணம் இல்லாமல் வெறுப்பது ஏன்?


7. நகைச்சுவை நடிகர்கள், கதாநாயகனுடன் சேர்ந்து எவ்வளவு திருட்டு வேலை கொள்ளைகள் செய்திருந்தாலும், இறுதிக்காட்சியில் கதாநாயகன் மட்டும் போலீசில் தண்டனை அனுபவிப்பது ஏன்?


8. தண்டனை முடிந்து வெளிவரும் கதாநாயகனை வரவேற்க நகைச்சுவை நடிகன் மட்டும் பெரும்பாலும் சிறைக்கு வெளியே காத்திருப்பது ஏன்?


9. எவ்வளவு பயங்கரமான வெடிகுண்டு வெடித்தாலும்,  நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டும், உடம்பு முழுவதும் கருப்பாக மட்டும் - சட்டை பேன்ட் கிழிந்தும், தலைமுடி நட்டிக்கொண்டும் நிற்பது, உடம்பில் வேறு எங்கும் துளிகூட காயமே படாமல் இருப்பதும் ஏன்?


10. வில்லனை பழிவாங்க சிறையிலிருந்து தப்பி வரும் கதாநாயகன், போலீசாரால் துரத்தப்பட்டு வரும்வழியில் பலநூறு போலீஸ்காரர்களை கொன்றும், கை கால்களை உடைத்தும், போக்குவரத்து குளறுபடி ஏற்படுத்தியும், வாகனங்களை சேதம் செய்தும், இன்னும் வில்லனின் ஆட்கள் பலரை பயங்கர காயப்படுத்தியும், கொன்றும், வில்லனை நெருங்கி கொலை செய்ய முயர்ச்சிக்கும்போது, வேறு ஒருவரோ அல்லது போலிசோ வில்லனை கொன்று விட்டு, கதாநாயகனிடம் " நீ இவனை கொன்று - உன் வாழ்கையை வீனடித்துவிடாதே" என்று வசனம் பேசுவது ஏன்? வரும் வழியில் இவ்வளவு கொலைகள், வன்முறைகள் செய்த்தது கணக்கில் வராதது எப்படி?


11. போலீசாரால் தேடப்படும் கதாநாயகன் தன தாயிடம் அவள் கையால் உணவு வாங்கி வாயில் வைக்கும் சமயம் சரியாக போலீசாரிடம் சிக்குவது ஏன்?12. அதேபோல காடுகளில் ஒழிந்து இருக்கும் கதாநாயகனை போலீசார் தேடும்போது, அங்கே வரும் கதாநாயகி ஒரு பாட்டை பாடுவாள்..அது போலிசுக்கு கேட்காமால் கதாநாயகனுக்கு மட்டும் கேட்பது எப்படி?13. கதாநாயகன் குற்றவாளி என்று ஊரே வெறுத்து ஒதுக்கி  இருக்கும்..தனது பிளாஷ்பேக்கை, ஒருவனிடமோ அல்லது ஒருத்தியிடமோ சொன்னவுடன், ஊரே அதை தெரிந்து, நேரில் பார்த்ததுபோல நம்புவது எப்படி?


14. கதாநாயகனை துரத்துவதால் போலிசும் வில்லனாக வேண்டுமா?


15. முதல் காட்சியில் ஊரே போற்றும் பெரிய மனிதனாக அறிமுகமாகும் கதாநாயகனுக்கு, முதல் காட்சியில் கிடைக்கும் மரியாதை ஏன் இறுதிவரை கிடைப்பதில்லை..அடுத்த காட்சியில் கூட அந்த மாதிரி யாரும் மதிப்பதில்லை..ஏன்?


16. கதாநாயகி பிரசவகாட்சியில் கதாநாயகன் கைகளை கசக்கியவண்ணம் குறுக்கும் நெடுக்குமாக அலைவது ஏன்?
17. இரவில் கதாநாயகனின் பாட்டுக்காக ஊரே காத்திருக்கும், அதே போல கதாநாயகியையோ, அல்லது கதானயகனையோ கிண்டல் செய்து பாட்டு பாடுவார்கள்..அந்த சமயத்தில் இசையும் கேட்கும்..அந்த இசையை அமைப்பது யார்?


18. மிகப்பிரபலமான  பாடகராகவோ, வித்வானாகவோ இருக்கும் கதாநாயகன் அல்லது கதாநாயகி, ஒரு கச்சேரியில் ஒரு பாடல் மட்டுமே பாடிவிட்டு செல்வது ஏன்?19.  வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, மனதுக்கு பிடிக்காத ஒரு நிகழ்வு ஏற்பட்டால், முழு சாப்பாட்டிலும் தண்ணியை ஊற்றி சாப்பாட்டை வீணடிப்பது ஏன்?


20. கணவன் மனைவியாக வரும்போது, குழந்தை பெறுவதற்கு ரொம்ப மேனக்கேடுவதாக காட்டப்படுவதும்,  காதலிக்கும்போதோ அல்லது கற்பளிக்கப்பட்டாலோ, ஒருமுறை உடலுறவு கொண்டவுடனேயே கற்பமுருவது எப்படி?


21. முதல்  குழந்தைக்கு ஐந்தாறு வயது  இருக்கும்,,இரண்டாவது குழந்தை பெற கதாநாயகன் கதாநாயகியை கெஞ்சுவது போலவும், அவள் பிகு பன்னுவதுபோலவும் காட்சி இருக்கும்...ஏன் இதற்கிடையில் அவர்ளுக்கிடையே செக்ஸ் நடைபெறவே இல்லையா?
22.  முதல் காட்சியில் கதாநாயகியை  பிரியும் கதாநாயகன், இருபது முப்பது வருடங்கள்.,  கழித்து இருவரும் சந்திக்கும்போதும்,  வேறு திருமணமே செய்யாமல் இருவரும் அவர்கள் நினைவாகவே வாழ்வது எப்படி?


23. காதலிக்கும்  கதாநாயகனும் கதாநாயகியும் இதற்க்கு முன்போ, இதற்க்கு பிறகோ வேறு எவரையும் மனத்தால் கூட நினைக்கவில்லை எனபது எப்படி சாத்தியமாகும்?


24. சண்டை காட்சியில் ஒருவன் அடித்தால் அதிகபட்சம் கீழேதான் விழலாம். அதைவிடுத்து அடிவாங்கியவன் குட்டிகரணம் அடிப்பது, இரண்டு மூன்று கிலோமீட்டர் தள்ளிப்போய விழுவது  எப்படி?


இப்படி   இன்னும்  எவ்வளவோ கேள்விகள் இருந்தாலும், இன்னும்  இந்த கேள்விகள் கேட்கப்படாமலேயே இருப்பது ஏன்? 

Tuesday, March 20, 2012

சாதனைகள் - வேதனைகள்..

 அந்நியன் எதை செய்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு (மூளையையும் கலட்டி வைத்துவிட்டு) அதை அஹா ஓஹு என்று வானளாவப் புகழும் அடிமைபுத்தி இந்தியாவை சேர்ந்த நமக்கு ரொம்பவே உண்டு..
அதனால்தான் இந்தியாவில் எவ்வளவோ கொடுமைகள் செய்த மோடியை - இந்தியாவின் தெகல்கா அம்பலப்படுத்தியபோது கண்டுகொள்ளாமல் இருந்த மனித நேய - வியாபாரிகள், இங்கிலாந்து சானல்4 இலங்கை போர் குற்றங்களை ஒளிபரப்பியவுடன் குய்யோ முய்யோ என்று குதிக்கிறார்கள்..இந்திய டிவி காட்டினால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை..வெளிநாட்டு..அதுவும் வெள்ளைக்காரன் சேனல் காட்டிவிட்டனல்லவா...அதனாலேய அதற்க்கு இந்த வரவேற்ப்பு..
வெள்ளைக்காரன் கண்டு பிடித்த கிரிக்கெட்டுக்குதான் இவர்கள் கொடுக்கும் வரவேற்ப்பையும் அதில் காட்டும் தேசபற்று நாடகத்தையும் பார்த்தாலே தெரியும் இவர்களது அடிமை புத்தி இன்னும் மாறவில்லை என்பதை..
கிரிகெட்டை பார்க்கும்போதெல்லாம் எனக்கு தோன்றுவது - நாயிடம் ஒரு எஜமான் ஒரு பொருளை தூக்கி எறிந்துவிட்டு, அதை எடுத்துவர உத்தரவிடுவானல்லவா..அப்படித்தான் கிரிக்கெட் தோன்றியிருக்ககூடும் எனபது என் அனுமானம்..
நாயிக்கு பதிலாக ஒரு அடிமையை பந்தை எடுத்துவர ஏவி விட இவர்கள் ஆரம்பித்ததுதான் கிரிக்கெட்..தனது அடிமை தனத்தை மேலும் பறைசாற்ற, அதற்க்கு ஜென்டில் மென் கேம் என்று நாம் பேர் விட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்..
அதில் - அந்நிய நாட்டு பெப்சியையும், கோலாவையும் குடிக்க சொல்லி- தனது தேச பற்றை நிலைநாட்டும் டெண்டுல்கர் - நூறு சதம் அடித்து விட்டானாம்..வேலைமெனக்கெட்டு பாராளுமன்றத்திலும் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்..இன்னும் அவனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க விதிமுறைகளை மாற்ற சொல்லும் விவாதம் இன்னும் வலுப்பெறும்.. ஏறக்குறைய இருபத்தி இரண்டு வருடங்களாக முழு கிரிக்கெட்டையும் ஆக்கிரமித்துக்கொண்டு, ரிட்டைர் ஆகவேண்டிய வயதிலும் இன்னும் பணம் பணம் - என்று விளையாடிக்கொண்டிருக்கும் போக்கை, சாதனை என்று ஏற்றுக்கொள்ளும் முட்டாள்தனம் அடிமைகளுக்கு மட்டுமே உரியது..ஒருவன் இருபது வருடங்கள் விளையாடினால் இதெல்லாம் சாதாரணம்..இதில் நூறு சதம் - சதத்தில் சதம் என்று புள்ளிவிவரக்கணக்கை போட்டுக்கொண்டும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கும் அவலம் இங்குதான் நடக்கிறது..
இன்னும் அரை சதத்தில் நூறை கடக்க வேண்டும் என்று இன்னும் ஓரிரண்டு வருடங்கள் தனது இருப்பை நிலை நிறுத்திக்கொண்டும், அதன்மூலம் இன்னும் வருமானம் பெற்றும், வரி செலுத்தாமல் - சலுகைகள் பெற்றும் தனது தேசப்பற்றை டெண்டுல்கர் உறுதி செய்வார்..நாமும் பல்லிளித்துகொண்டு பார்த்துக்கொண்டிருப்போம்..
அடுத்து கின்னஸ் சாதனை என்று கேலிக்கூத்து..
பாவம் ஒரு பெண்..உலகத்திலேயே மிகவும் உயரம் குறைந்த பெண்ணாம்..இது இயற்கையின் கோளாறு..அவளை போய் தினமும் அளந்து பார்த்து. வளர்ந்து விடக்கூடாது என்ற வகையில் அந்த பெண்ணை கொடுமை படுத்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் அந்த பெண் வளராமல் இருப்பதை ஏதோ அந்த பெண்ணே தன்னை வளர் விடாமால் செய்தத்துபோல காட்டி வேடிக்கை செய்து வருகிறார்கள்..
கின்னஸ் சாதனை என்று இன்னும் பல முட்டாள்தனங்களை செய்துகொண்டிருப்பதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்..பின்னாடி நடப்பது, பின்னாடி சைக்கிள் ஓட்டுவது, ஜந்துக்கள், மிருகங்களுடன் வசிப்பது இன்னும் மனிதனுக்கு உபயோகமற்றை செய்து கின்னஸ் சாதனை என்று வியாபாரம் செய்யும் அவலமும் - அதை வெள்ளைக்காரன் செய்வதால் ஏற்றுக்கொள்ளும் -இன்னும் பெருமையாக மதிக்கும் அடிமைத்தனமும் நம்மிடம்தான் மேலோங்கி நிற்கிறது..
இன்னுமொரு வேதனை : சமீபத்தில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு விளையாட்டில் விராத் கோலி என்பவன் அதிகபட்ச ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்ததற்காக, டுவிட்டரில் - ஆபாச நடிகை பூனம் பண்டே என்பவள் தனது ஆபாச படத்தை பரிசாக வழங்கி இருக்கிறாளாம் ..ஹ்ம்ம் என்னதான் சொல்வது ?

Saturday, March 17, 2012

பிஞ்சுக்களை கொன்ற மாபாதகர்கள்...- இவர்களுக்கு என்ன தண்டனை?வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.

சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.

இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.

முஸ்லிம்களாகிய நாமும் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும்இ போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..!!


இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14இ844.

யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ வவுனியாஇ மன்னார்இ கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள்இ முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சிஇ மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.


இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர்இ பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள்இ 36 பேர் பெண்கள்இ 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறைஇ முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறைஇ அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம்இ அநுராதபுரம்இ குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.
நன்றி : யாழ் முஸ்லிம்

Tuesday, March 13, 2012

மின்வெட்டை எப்படி சமாளிக்கலாம்?

கடந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில், மின்வெட்டு இருந்த போது விமர்சித்து, அதன் காரணமாகவே கருணாநிதி ஆட்சியை இழந்தார் என்று கருதியவர்கள் எல்லாம் இன்று வாய் மூடி மௌனியாக - இருக்கின்ற காரணம் என்ன? சென்ற ஆட்சிக்காலத்தை விட, இம்முறை மின் வெட்டு மேலும் அதிகரித்திருக்கிறது...


சென்னையில் தினமும் இரண்டு மணி நேரங்கள் மின்வெட்டு வைத்திருப்பதால் மின்சாரம் சேமிக்கப்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை..காரணம், இரண்டு மணி நேரம் கழித்து மின்சாரரம் வந்தவுடன், காத்திருந்து, ஏசி, பிரிட்ஜ், வாஷின் மெசின் , மின் விசிறி என்று அனைத்தையும் அனைவரும் ஒரு சேர உபயோகிப்பதால், அந்த இரண்டு மணிநேரம் சேமித்த மின்சாரம் அதைவிட அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதே உண்மை..

இதை தவிர்க்க, மின்சாரத்திற்கு ரேஷன் முறையை கொண்டு வரலாம்..
அதாவது, ஒரு வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு யூனிட் மின்சாரம் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அதற்குமேல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அறிவித்தால் மக்களிடையே விழிப்புணர்வும், அதே போன்று மின்சார சிக்கனமும் ஏற்படலாம்..

கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஒரு சில பயங்கரவாதிகள் செயல்படுத்தப்படாமல் செய்து வருவதால் அவர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும்..

இருந்தாலும், நமது தமிழகத்திற்கு  தேவையான மின்சாரத்தின் அளவு 11  ஆயிரம் மெகாவாட் ஆகும்..கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட ஆரம்பித்தாலும், அதன் மூலம் உபரியாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள்..இப்போது தமிழகத்தில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது..எனவே கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படும்போது நமக்கு மேலும் இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது..வரும் காலங்களில் மின்சாரத்தேவை மேலும் அதிகரிக்கும்..மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில்சாலைகள் பெருக்கத்தாலும், புதிய புதிய மின் சாதனங்களாலும், இன்னும் மின்சாரம் அதிகமாக தேவைப்படும்..
சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு திட்டம் தீட்டி இருக்கிறது..அதன் மூலம் ஓரளவு மின்சார தேவைகள் நிறைவேறினாலும், வருங்காலத்தேவைகளை மனதில் கொண்டு..மின்சாரம் ரேஷன் முறையில் விநியோகிப்பது உபயோகமாக இருக்கும் என தோன்றுகிறது...

Monday, March 12, 2012

படையப்பா - விமர்சனம்

ரஜினிகாந்தின் கடைசி ஒரிஜினல் வெற்றிப்படம் என்றால் அது படையப்பாவை சொல்லலாம்..

அந்த படம் ரஜினிக்காக ஓடியதில்லை என்று ரஜினி - மற்றும் அதை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உட்பட அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், வேறு வழியின்றி எல்லா ஜால்ராக்களும் ரஜினியையே புகழ்ந்து வருகின்றன..
படையப்பா முழுக்க முழுக்க ஓடியதன் காரணம், ரம்யா கிருஷ்ணன் - அப்போது தமிழக மக்களின் பெரும் எதிர்ப்பை சம்பாதித்திருந்த ஜெயலலிதாவை இமிட்டேட் செய்து நடித்திருந்ததே காரணம்..
இதில் ரஜினி, சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, அப்பாஸ், ஸ்ரீதேவி போன்றோர் நடித்திருந்தனர்..

இனி விமர்சனத்தை பார்ப்போம்...
படையப்பா படத்தின் காமெடி ஸீன் 1

படத்தின் முதல்காட்சியில் பாம்பு ஒன்றை கண்டு ஊர் மக்கள் பயந்து ஓடுகின்றனர்..வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு வந்த - நீலாம்பரி என்ற கோடீஸ்வரப் பெண் அந்த பாம்பை அடித்துக்கொல்வதர்க்கு ஆட்களை அனுப்புகிறாள்..அது புற்றுக்குள் சென்று விடுகிறது..அந்த புற்றை இடிக்க சொல்லும்போது - கதாநாயகனின் அறிமுகம்..அவர் அந்த புற்றுக்குள் கையை விட்டு (?) பாம்பை பிடித்து முத்தமிட்டு விடுகிறார்..

இதைக்கண்டு வியந்த - நீலாம்பரி அவனது பெயரை கேட்கிறாள்..பெயரைக்கேட்டால் ஒழுங்காக பெயரை சொல்லவேண்டியதுதானே...

"சிங்கத்தை புடிச்சு சொவுத்துல ஏறு..சொவத்துல ஏறி வானத்துல ஏறுன்னு " (சிங்க நடை போட்டு சிகரத்துல ஏறணுமாம்..அப்புறம் வானத்துல ஏறணுமாம்).... ன்னு பாட்ட  பாடிக்கிட்டு ஏதேதோ உளறிக்கொண்டு போகிறான் கதாநாயகன்..

அப்புறம் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட நாலைந்துபேர் அந்த இளைஞனின் (?) நண்பர்கள் என்ற பெயரில் காமடி என்ற பெயரிலும் நம்மை  போட்டு சாகடிக்கிறார்கள்..அது போக அதில் வருவோர் - கல்யானமாகாதோர் என்று காட்டுவது கொடுமையிலும் கொடுமை..
                                                      படையப்பா படத்தின் காமெடி ஸீன் 2

அப்புறம் - நீலாம்பரி வீட்டு வேலைக்காரியும், நீலாம்பரியும் - படையப்பா என்ற கதாநாயகனை போட்டி போட்டு காதலிக்கிறார்கள்..இதற்கிடேயே - ஒரு கட்டத்தில் படையப்பா - நீலாம்பரியின் முறைப்பையன் எனபது தெரியவர அவர் வீட்டுக்கு வரவழைக்கிறார்கள்..அரசியல்வாதியான நீலாம்பரியின் அண்ணன் முன்னாடியே - நீலாமபரி - படையப்பாவை பயங்கரமாக ஜொள்ளு விடுகிறாள்..இதை அறிந்த அண்ணனும் -அதற்க்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒதுன்கிறான்..நமக்கே வெட்கமாக இருக்கிறது..

படையப்பாவின் தந்தையின் (சிவாஜி)  - சித்தியின் மகன் மணிவண்ணன்..சிவாஜியின்  சொத்தை பங்கு கேட்க, மொத்த சொத்தையும் அவரிடமே கொடுத்துவிட்டு, சிவாஜி அந்த ஏக்கத்திலே மரணமடைகிறார்..கவனிக்க சிவாஜினியின் மரணத்திரிக்கு காரணம் அவரது தம்பி மணிவண்ணன்தான்..
இதானால் ரஜினியும் அவரது தாய் மற்றும் தங்கையுடன் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு தந்தையின் சொத்தில் குடிசைகட்டி குடியேறுகிறார்கள்..
                                                      படையப்பா படத்தின் காமெடி ஸீன் 3

அங்கே கிரானைட் கிடைக்கிறது..அதை அறிந்த மணிவண்ணன் அந்த இடத்தையும் ரஜினியிடம் எழுதி கேட்கிறார்..மறுக்கும் ரஜினியை கொல்ல அடியாட்களை ஏவுகிறார்..இதையும் கவனிக்கவும்....அடியாட்களை ஏவினால் கதானாயகனுக்குதான் பல கலைகள் தெரியுமே..அவர்களை அடித்து நொறுக்கிபோட்டு வெளியேறிவிடுகிறார்..

அதன்பிறகு தனது இடத்தில் கிரானைட் தோண்டி எடுத்து உலகிலேயே பெரும் செல்வந்தனாகவும், தாதாவாகவும் மாறுகிறார்..அதுவும் ஒரே பாட்டின் மூலம்..இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்...ரஜினி தான் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தனது நிலத்தில் கிரானைட் தோண்டி எடுத்து விற்று பணக்காரனாகிறார்..
இதற்க்கு ஜால்றாவுக்கேன்றே பிறந்த வைரமுத்து எழுதுவது - " இன்னோர் மனிதனைக்கொன்று புசிப்பவன் அரக்கனடா...யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்..ஊருக்கே வாழ்ந்து மறைபவன் புனிதன்..நேற்றுவரைக்கும் நீ மனிதனப்பா ..இன்று முதல் நீ  புனிதனப்பா.." என்று ஒரு பாட்டை எழுதி இருக்கிறார்..
இதில் என்ன புனிதத்தை கண்டார்கள்  என்று தெரியவில்லை.. கேவலமாக இருக்கிறது..
இவர் நிலத்தை தோண்டுவதை பார்க்க ஊரே கூடி வந்து நிற்கிறது..வேடிக்கையாக இருக்கிறது..

இதற்கிடையே நீலாம்பரியை கல்யாணம் செய்வதாக கூறி  பெண் பார்க்க வரும் ரஜினியின் தாய், எல்லார் முன்னிலையிலும் அவளை அவமானப்படுத்தி- வேலைக்காரியை கூட்டிக்கொண்டு செல்கிறாள்..இதன் காரணமாக இரு குடும்பத்திற்கும் பகமை வருகிறது..
                                            படையப்பா படத்தின் உச்சகட்ட காமெடி ஸீன் 4

ரஜினியின் தந்தை மரணத்திற்கும் காரணமான , மற்றும் அவரை ஆளை வைத்து கொல்ல முயற்சித்த மணிவண்ணன் பிறகு ரஜினியிடம் கூட சேர்ந்து ஜால்ரா போடுவது  அவரை ரஜினி கூடவே வைத்திருப்பதும் - திரைக்கதையின் ஓட்டை..
இதன் பிறகு ரஜினியின் மகள் -நீலாம்பரியின் அண்ணன் மகனை லவ் பண்ணுவதும் அதன் காரணமாக ரஜினியும் ரம்யா கிரிஷ்ணனும் மீண்டும் சந்திப்பதும் - ஆஸ் யூஷுவல் சினிமா..இதில் எந்த சிறப்பும் இல்லை..
                                                       செயற்கையாக திணிக்கப்பட்ட காட்சி.

ரஜினி அந்த படத்தில் ஒரு பணக்காரரின் மகன், தனது நிலத்தில் கிரானைட் எடுத்து பணக்காரராகிறார்..அவ்வளவுதான்..
ஒரு காட்சியில் மணிவண்ணன் வீட்டை கடனுக்காக காலி செய்யும் மன்சூர் அலிகான், ரஜினியின் எச்சரிக்கையை தொடர்ந்து, " ஐயோ..நானெல்லாம் லோக்கலு,அவரு இண்டர்நஷனல்" என்று அலறி அடித்து ஓடும் அளவுக்கு அந்த கதையில் ரஜினி ஒன்றும் கிழித்து விடவில்லை.. - அந்த படம் வெளிவரும் முன்பு - மன்சூர் அலிகான் ரஜினியை விமர்சித்திருந்த காரணத்திகாக - சம்மந்தமே இல்லாமால் திணிக்கப்பட்ட ஒரு காட்சி அது..


பெற்ற பெண்ணை பலபேர் முன்னிலையில் அங்க அவயங்களை ஆபாசமாக காட்டும் பாரத நாட்டியத்தை  ஆடவிட்டு தாத்தா பாட்டி, தாய், தந்தை, சகோதரன் என்று குடும்பமே ரசிக்கும் "மின்சாரக்கண்ணா" என்ற பாடல் எந்த குடும்பத்தில் நடக்கிறது என்று தெரியவில்லை....


ஒருவன் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இருபது வருடங்களுக்கு மேலாக தனியறையில் உகலத்தொடர்பு இல்லாமல் ஒரு பெண் ஒரு அறைக்குக்குள் அடைப்பட்டு கிடந்தாள் எனபது உலகமகாப்புருடா..அப்படி ஒருத்தி  இருந்தால் அவள் தோற்றமே மாறி, மனநோய் பிடித்துவளாகத்தான் வெளியே வர முடியும்..
                                               20 வருடங்கள் தனிமை சிறையில் அடைபட்டு கிடந்த பெண் 

அதுவும் -தன் அத்தையை  முதன் முதலாக பார்க்கும் ஒருவன்  "அத்தே நீங்க சூப்பர் பிகர் "என்று கம்மென்ட் அடிப்பது படு ஆபாசம்..

ஒரு கட்டத்தில் " ஓஹோ ஹோ ஹோ..கிக்கு ஏறுதே" என்று குடும்பமே குடித்துவிட்டு கூத்தடிக்கும் காட்சியும்  - வயதானவர்கள் ஆடிப்பாடும் வேடிக்கையும் உண்டு..

இதையும் ரஜினியின் முக்கிய படங்களாக இன்றுவரை சொல்வதும் ஆபாச பத்திரிகைகளின் வியாபார தந்திரம்தான்..

Friday, March 9, 2012

மூன்று முகம் - விமர்சனம்...

எவ்வளவு நாளானாலும், திரைப்பட விமர்சனங்களுக்கு பதிவுலகில் கிடைக்கும் வரவேற்பே தனி...
அதுவும் பழைய படங்களுக்கு இன்று விமர்சனம் எழுதினால் ?
பழமையான நினைவுகள் என்றும் பசுமையாக இருக்கும்போது அதை மீண்டும் அசை போடுவது ஒரு அலாதியான சுகம்தான்...
மூன்றுமுகம் என்ற ரஜினி நடித்த திரைப்படத்தை பலதடவைகள் மீண்டும் மீண்டும் பார்த்தவன் நான்...அப்போது பள்ளி பருவம்..ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு அந்த படத்தை பலமுறை பார்த்து இருக்கிறேன்..
அந்த படத்தில் வரும் அலக்ஸ் பாண்டியன் என்ற கதா பாத்திரம் மிகவும் பிரபலம்..
ஆனால் இப்போது நினைத்தால் அந்த படத்தில் எவ்வளவு பெரிய திரைக்கதை ஓட்டைகள் என்று நினைக்கும்போது, ஆச்சரியமாக உள்ளது..நாம்தான் சிறுவயது பருவமாக இருந்தாலும் அப்போதும் இதே ஆபாச விகடன் குமுதம் போன்ற பலான புத்தகங்கள்
வெளியாகிக்கொண்டுதாநிருந்தன...அவர்களுக்குமா அந்த அறிவு இல்லை? அந்த படத்தை இன்று வரை அஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கின்றன..
இனி மூன்று முகம் விமர்சனம்...
அமேரிக்கா சென்று வரும் தொழிலதிபர் ரஜினி, பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு சாமியாராக மாறி வருகிறார்..அவரை நவீன காலத்து இளைஞனாக மாற்ற, ஒரு பெண் ஒருத்தியை பெற்றோர்கள் ஏற்பாடு (?) செய்கின்றனர்...அது என்ன ஏற்ப்பாடு தெரியுமா? கேவலம்..அவனுக்கு செக்ஸ் ஆசையை தூண்டி குடும்பஸ்தனாக மாற்றுவதுதான்..இங்கேயே திரைக்கதை சறுக்கி விடுகிறது...
அந்த சாமியாரை இன்னொரு செக்ஸ் சாமியாரிடம் கொண்டு சேர்த்து அவரை தன்னை காதலிக்க வைக்கும் பொறுப்போடு ராதிகாவின் பத்திரத்தின் வேலை முடிந்து விடுகிறது..
பிறகு ரஜினிக்கு பிறந்தநாள் பார்டி ஒன்றில் - அவருக்கு தன தந்தையை கொன்றவர்கள் யார் என்று தெரிந்து, அந்த பார்ட்டிக்கு வந்த ஒரு அடியாள் ஒருவனை பிடித்து "நான்தாண்டா அலெக்ஸ் பாண்டியான் - திரும்பவும் பிறந்து வந்துட்டேன்டா " என்று ஆவேசமாகிறார்..
பெற்றோரளுக்கு ஒரே ஆச்சரியம்..எப்படி இவனுக்கு தன தந்தை பற்றி தெரிய வந்தது என்று.. ஏனென்றால். ரஜினியின் தந்தை அலெக்ஸ் பாண்டியன் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி..அவரை ஒரு கள்ள கடத்த கும்பல் கொன்று விடுகிறது..அவர் மரணிக்கும் அதே நேரத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த - அலெக்ஸ்பாண்டியனின் மனைவியும் இறந்து விடுகிறார்...இரட்டை குழந்தைகளில் ஒன்றை தேங்காய் சீனிவாசன் தத்தெடுத்து வளர்க்கிரர்ர்..இன்னொரு பிள்ளை அலெக்ஸ் பாண்டியனின் சகோதரியிடம் பொறுக்கியாக வளர்கிறது..

பெரும் பணக்காரனரான தேங்காய் சீனிவாசன் இந்த உண்மை வெளியே தெரியக்கூடாது என்று, அலெக்ஸ்பாண்டியனின் சகோதரிக்குமாதம் மாதம் பணம்  அனுப்பி வருகிறார்...சாமியார் தனமையிளிருந்து மாறி, தேங்காய் சீனிவாசனின் கம்பெனி நிர்வாக பொறுப்பை ஏற்கும் ரஜினிக்கு - இவர் மாதம் மாதம் பணம் அனுப்பவது சந்தேகத்தை தர, அங்கே சென்று - தான் தேங்காய் சீனிவாசனின் மகன் அல்ல, தன தங்கை நேர்மையான டி.எஸ்.பி. என்ற உண்மை அலெக்ஸ் பாண்டியன் எழுதிவைத்த டைரி மூலம்  தெரியவருகிறது..அதனால்தான் அந்த பார்டியில் அந்த அடியாளை - சங்கிலி முருகனை - மிரட்டுகிறார்...பயந்து போன சங்கிலி முருகன் - தன பாஸ் எகம்பரத்திடம் - செந்தாமரை - போய் அனைத்தையும் சொல்லுகிறார்..பிறகு வில்லத்தனமான வேலைகள்,,தன தந்தையை கொன்றவனை ரஜினி பலி வாங்குகிரார்ர்.சுபம்....

இதில் ஒரு மகா முட்டாள்தனமான விஷயம் என்னவென்றால்..அலெக்ஸ் பாண்டியன் - தான் ஏகாம்பரத்தால் கடப்பாரையால் குத்திக் கொல்லப்படுவது, தான் இறந்த பிறகு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது அதில் ஒன்றை தேங்காய் சீனிவாசன் தத்தெடுப்பது உட்பட - அனைத்தையும் டைரியில் எழுதி வைத்திருப்பதுதான்..ஒருவன் தான் கொல்லப்படும்போதும், செத்துப்போன பிறகுமா டைரி எழுதிக்கொண்டிருப்பான்?

இந்த படத்தைதான் ஆபாசப் பத்திரிக்கைகளும், ரஜினி ஜால்ராக்களும் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை போற்றிக்கொண்டிருக்கின்றன...ஹ்ம்ம் என்ன சொல்வது...?