Pages

Friday, March 9, 2012

மூன்று முகம் - விமர்சனம்...

எவ்வளவு நாளானாலும், திரைப்பட விமர்சனங்களுக்கு பதிவுலகில் கிடைக்கும் வரவேற்பே தனி...
அதுவும் பழைய படங்களுக்கு இன்று விமர்சனம் எழுதினால் ?
பழமையான நினைவுகள் என்றும் பசுமையாக இருக்கும்போது அதை மீண்டும் அசை போடுவது ஒரு அலாதியான சுகம்தான்...
மூன்றுமுகம் என்ற ரஜினி நடித்த திரைப்படத்தை பலதடவைகள் மீண்டும் மீண்டும் பார்த்தவன் நான்...அப்போது பள்ளி பருவம்..ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு அந்த படத்தை பலமுறை பார்த்து இருக்கிறேன்..
அந்த படத்தில் வரும் அலக்ஸ் பாண்டியன் என்ற கதா பாத்திரம் மிகவும் பிரபலம்..
ஆனால் இப்போது நினைத்தால் அந்த படத்தில் எவ்வளவு பெரிய திரைக்கதை ஓட்டைகள் என்று நினைக்கும்போது, ஆச்சரியமாக உள்ளது..நாம்தான் சிறுவயது பருவமாக இருந்தாலும் அப்போதும் இதே ஆபாச விகடன் குமுதம் போன்ற பலான புத்தகங்கள்
வெளியாகிக்கொண்டுதாநிருந்தன...அவர்களுக்குமா அந்த அறிவு இல்லை? அந்த படத்தை இன்று வரை அஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கின்றன..
இனி மூன்று முகம் விமர்சனம்...
அமேரிக்கா சென்று வரும் தொழிலதிபர் ரஜினி, பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு சாமியாராக மாறி வருகிறார்..அவரை நவீன காலத்து இளைஞனாக மாற்ற, ஒரு பெண் ஒருத்தியை பெற்றோர்கள் ஏற்பாடு (?) செய்கின்றனர்...அது என்ன ஏற்ப்பாடு தெரியுமா? கேவலம்..அவனுக்கு செக்ஸ் ஆசையை தூண்டி குடும்பஸ்தனாக மாற்றுவதுதான்..இங்கேயே திரைக்கதை சறுக்கி விடுகிறது...
அந்த சாமியாரை இன்னொரு செக்ஸ் சாமியாரிடம் கொண்டு சேர்த்து அவரை தன்னை காதலிக்க வைக்கும் பொறுப்போடு ராதிகாவின் பத்திரத்தின் வேலை முடிந்து விடுகிறது..
பிறகு ரஜினிக்கு பிறந்தநாள் பார்டி ஒன்றில் - அவருக்கு தன தந்தையை கொன்றவர்கள் யார் என்று தெரிந்து, அந்த பார்ட்டிக்கு வந்த ஒரு அடியாள் ஒருவனை பிடித்து "நான்தாண்டா அலெக்ஸ் பாண்டியான் - திரும்பவும் பிறந்து வந்துட்டேன்டா " என்று ஆவேசமாகிறார்..
பெற்றோரளுக்கு ஒரே ஆச்சரியம்..எப்படி இவனுக்கு தன தந்தை பற்றி தெரிய வந்தது என்று.. ஏனென்றால். ரஜினியின் தந்தை அலெக்ஸ் பாண்டியன் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி..அவரை ஒரு கள்ள கடத்த கும்பல் கொன்று விடுகிறது..அவர் மரணிக்கும் அதே நேரத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த - அலெக்ஸ்பாண்டியனின் மனைவியும் இறந்து விடுகிறார்...இரட்டை குழந்தைகளில் ஒன்றை தேங்காய் சீனிவாசன் தத்தெடுத்து வளர்க்கிரர்ர்..இன்னொரு பிள்ளை அலெக்ஸ் பாண்டியனின் சகோதரியிடம் பொறுக்கியாக வளர்கிறது..

பெரும் பணக்காரனரான தேங்காய் சீனிவாசன் இந்த உண்மை வெளியே தெரியக்கூடாது என்று, அலெக்ஸ்பாண்டியனின் சகோதரிக்குமாதம் மாதம் பணம்  அனுப்பி வருகிறார்...சாமியார் தனமையிளிருந்து மாறி, தேங்காய் சீனிவாசனின் கம்பெனி நிர்வாக பொறுப்பை ஏற்கும் ரஜினிக்கு - இவர் மாதம் மாதம் பணம் அனுப்பவது சந்தேகத்தை தர, அங்கே சென்று - தான் தேங்காய் சீனிவாசனின் மகன் அல்ல, தன தங்கை நேர்மையான டி.எஸ்.பி. என்ற உண்மை அலெக்ஸ் பாண்டியன் எழுதிவைத்த டைரி மூலம்  தெரியவருகிறது..அதனால்தான் அந்த பார்டியில் அந்த அடியாளை - சங்கிலி முருகனை - மிரட்டுகிறார்...பயந்து போன சங்கிலி முருகன் - தன பாஸ் எகம்பரத்திடம் - செந்தாமரை - போய் அனைத்தையும் சொல்லுகிறார்..பிறகு வில்லத்தனமான வேலைகள்,,தன தந்தையை கொன்றவனை ரஜினி பலி வாங்குகிரார்ர்.சுபம்....

இதில் ஒரு மகா முட்டாள்தனமான விஷயம் என்னவென்றால்..அலெக்ஸ் பாண்டியன் - தான் ஏகாம்பரத்தால் கடப்பாரையால் குத்திக் கொல்லப்படுவது, தான் இறந்த பிறகு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது அதில் ஒன்றை தேங்காய் சீனிவாசன் தத்தெடுப்பது உட்பட - அனைத்தையும் டைரியில் எழுதி வைத்திருப்பதுதான்..ஒருவன் தான் கொல்லப்படும்போதும், செத்துப்போன பிறகுமா டைரி எழுதிக்கொண்டிருப்பான்?

இந்த படத்தைதான் ஆபாசப் பத்திரிக்கைகளும், ரஜினி ஜால்ராக்களும் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை போற்றிக்கொண்டிருக்கின்றன...ஹ்ம்ம் என்ன சொல்வது...?


6 comments :

mahi said...

Super Marmayogie, Mudinthal 1985 apuram vantha ella Rajini padathayum ezthungal. Mothamey oru 5 padangal thaan urupadiyanavai .But even that the credit goes to the Director. Romba varudangalaga 25-30 varuda youth aga nadithu kondirukiran intha Pombula Poriki. Ivanuku oru padam tholvi endral takunu Hindi la Amitabh oda padathoya ila Andhravil Chiranjeevi naditha padathayo remake seithu Kalathai otiyavan. Ipozthu Vijay antha kariyathai semmaiyana seikigraan. Inum kooda Rajini Ozhungaga tamizh mozhiyai ozhungaga ucharipathillai. Ithuvey other state la poi oru Tamizh nadigan Hindi, Telugu & Malayalam thapaga pesi nadika mudiyathu.

ஜெய்லானி said...

ஏங்க இந்த கொல வெறி உங்களுக்கு ...அவ்வ்வ்வ்வ் முடியல .. :-)))

ஹாலிவுட்ரசிகன் said...

சின்ன வயசுல ரொம்ப ரசிச்சுப் பார்த்தப் படங்களில் ஒன்று. இப்போது விமர்சனத்தை வாசித்த பின் தான் மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன்.

மர்மயோகி said...

நன்றி திரு mahi..

ரஜினியின் ஜால்ரா பாலச்சந்தர் உட்பட பலர் தயாரித்த - இயக்கிய ரஜினி படங்கள் அனைத்தும் - அண்ணாமலைக்கு பிறகு..இண்டர்வல் வரையிலும் சோத்துக்கே வழியில்லாத கதாநாயகனாகவும் அதே சமயம் அனைவரும் விரும்பும் ஒருவனாகவும் ரஜினி வருவார்....இண்டர்வெலுக்கு அப்புறம் - உலகத்தையே விலைக்கு வாங்கும் மாபெரும் கோடீஸ்வரராக வலம்வருவார் அதுவும் ஒரு பாட்டிலேயே...இப்படி ரஜினி ரசிகர்களை பழக்கப்படுத்தி முட்டாள்களாக்கி வைத்திருக்கிறார்கள்..

மர்மயோகி said...

நன்றி ஜெய்லானி...இதுக்கே இப்படின்னா எப்படி..இன்னும் இருக்கே...

மர்மயோகி said...

நன்றி திரு ஹாலிவுட் ரசிகன்..

திரு mahi அவர்களுக்கும்

// Mudinthal 1985 apuram vantha ella Rajini padathayum ezthungal.//
மிகப்பெரும் காமெடி படமான (?) படையப்பா என்ற படத்தின் விமர்சனத்த நீங்கள் சீக்கிரம் எதிர்பார்க்கலாம்..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?