Pages

Saturday, March 17, 2012

பிஞ்சுக்களை கொன்ற மாபாதகர்கள்...- இவர்களுக்கு என்ன தண்டனை?வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.

சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.

இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.

முஸ்லிம்களாகிய நாமும் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும்இ போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..!!


இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14இ844.

யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ வவுனியாஇ மன்னார்இ கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள்இ முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சிஇ மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.


இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர்இ பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள்இ 36 பேர் பெண்கள்இ 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறைஇ முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறைஇ அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம்இ அநுராதபுரம்இ குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.
நன்றி : யாழ் முஸ்லிம்

6 comments :

தமிழ் மாறன் said...

//படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்...
எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின//.

எனக்கு இசுலாமிய சட்ட திட்டம் குறித்து தெரியாது.. அதனால் ஆசாத் என்கிற நண்பர் சிந்திக்கவும் இணையத்தில் எழுதிய கருத்தை உங்களுக்கு பதிலா தருகிறேன். அது இந்த பதிவிற்கு பொருந்தும் என்று நினைக்கிறன்.

இப்போது நடந்து கொண்டிருப்பது புலிகள் குறித்த விடயம் அல்ல. அங்கு பொது மக்கள் கொல்லப்பட்டது குறித்தது. வைகோவும், சீமானும், நெடுமாறனும் உங்களுக்கு என்ன செய்தார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், sdpi போன்ற அமைப்புகள் ஈழத்து மக்களின் படுகொலை குறித்து எதிர்ப்பும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. அது மட்டுமல்ல ராஜீவ் படுகொலையில் சிறையில் இருக்கும் நளினி போன்றோர்களை விடுதலை செய்ய தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

இலங்கையில் இருந்து வரும் இஸ்லாமிய இணையதளங்கள் என்று சொல்லிக்கொண்டு சில இஸ்லாமிய செய்திகளை காப்பி செய்து, பேஸ்ட் செய்து போடும் இணையங்கள் எல்லாம் ஹிந்துதுவாவினுடைய செயல் திட்டத்தின் அடிப்படையில் அல்லது இஸ்லாமிய செய்திகளை காப்பி செய்து போட்டு கொண்டு முஸ்லிம்கள் போல் தங்களை காட்டி கொண்டு முஸ்லிம்களுக்கு ஹிந்துக்களுக்கும் சண்டை முடித்து விடும் வேலையை பார்க்கும் சில விசம இணையதளங்கள் வருசையில் வருபவை என்றே எண்ண முடிகிறது.

ஈழத்திலே ஒரு பாரிய இன அழிப்பு நடந்திருக்கிறது என்பதை பற்றி உலகமே பேசும் போது இந்த சூழலில் புலிகள் செய்த கொடுமைகள் பற்றி பேசி அந்த மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்று ஒரு முஸ்லிமும் எண்ண மாட்டான். அப்படி எண்ணுபவன் முஸ்லிமாகவும் இருக்க மாட்டான். எப்போதும் நியாய தர்மங்களை பேசுபவனே உண்மையான முஸ்லிமாக, மூமினாக இருக்க முடியும். நமக்கு உலகம் முழுவதும் பாதிப்பு நிகழ்ந்தது அதை யாரும் பேசவில்லை அதனால் அவர்களுக்கு பதிப்பு நடக்கும்போது நாம் வேடிக்கைபார்போம் என்று சொல்வதை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை.

உங்களுக்கு ஒருவர்மேல் கொண்ட வெறுப்பு அவர்கள் மீது நீதி செலுத்த தடையாக இருக்க வேண்டாம் என்று இஸ்லாம் படித்து தருகிறது. எங்கே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும் அவர்கள் நமக்கு எந்த உதவியும் செய்யாவிட்டாலும் குரல்கொடுக்க வேண்டும் இது ஈமானின் ஒரு அங்கம். பதிக்காப்பட்ட மக்களை பற்றி பேசுவதை, எழுதுவதைகூட தடுக்க முன்னர் நடந்த கோரசம்பவங்களை நினைவுபடுத்தி தடுப்பது மனிதாபிமானம் அற்ற செயல்.
ஒரு முஸ்லிம் நீதி செலுத்துபவனாக இருப்பான்.

இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் வரலாறு முழுவதும் இடையூறுகளை கொடுத்துவந்த யூதர்கள் இஸ்லாம் கொன்று ஒழித்து விடவில்லை. யூதர்கள் இஸ்லாத்தின் ஆட்சியின் கீழ்தான் உலகில் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது. மக்கா வெற்றிதான் உலகில் ரெத்தம் இன்றி பெறப்பற்ற ஒரு வெற்றியாகும். நபி அவர்கள் ( இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் அவர்கள் மீது) மக்காவில் இஸ்லாமிய படைகள் நுழையும் முன்னரே அறிவித்தார்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் இருப்பவர்கள் மீதும் உத்தம் இல்லை என்று. உலகிலேயே கத்தி இன்றி ரெத்தம் இன்றி ஒரு உத்தம் வெல்ல பட்ட ஒரு வரலாறுகளுக்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள்.

அவர்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்த வேண்டாம். உங்களது அபத்தமான எழுத்துக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் ஈட்டியை பாய்ச்ச வேண்டாம். குழந்தைகளையும், முதியவர்களையும், நேயாளிகளையும், பெண்களையும், போரில் ஈடுபாடாத மக்களையும், சரணடைந்த மக்களையும் இஸ்லாம் கொல்லச்சொல்ல வில்லை. அப்படி இலங்கை அரசு கொன்றது அநீதி, அதை நீங்கள் மறுக்கும் விதமாக இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை இட்டு அதில் சீமானை, நெடுமாறனை, வைகோவை தீவிரவாதி என்று சொல்லி இருக்கிறீர்கள். அவர்கள் இலங்கையில் நடக்கும் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். மற்றபடி புலிகள் செய்த அத்து மீறல்களை கொடூரங்களை நிகழ்த்த சொல்லி இவர்கள் ஒன்றும் அவர்களுக்கு ஆணை பிறப்பிக்க வில்லை.

உங்களது எழுத்துக்களும் சிந்தனையும் மனிதாபிமானம் அற்றது. இதை முஸ்லிம்களுக்காக சொல்வது போல் சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் கருத்துக்களை நியாய உணர்வுள்ள ஒரு முஸ்லிமுக்கும் உடன்பாடு கிடையாது.

அன்புடன்: ஆசாத்: நெல்லை.

ARM said...

ஏதோ முஸ்லிம்களின் மேலே பாசம் உள்ளவர் போல் கட்டிருக்கும் நீகள் இந்ந்தியவில் உள்ள முஸ்லிம்கள் உங்கள் இந்திய அரசு செய்யும் கொடுமைகள் பற்றியும் எழுதவும் கஷ்மீரில் முஸ்லிம்களுக்கு இந்திய இராணுவம் செய்யும் கொடுமைகளை பற்றியும் ஒரு ஐநா விசாரணை வைக்கவும் அதேபோல் ஈழத்தில் இந்திய இராணுவம் செய்த கொடுமைகள் கற்பழிப்புகள் 20000 மேல் பட்ட கொலைகள். பொதுமக்களை தரையில் போட்டு இராணுவ வாகனங்களால் நசுக்கி கொட்றது அதில் கொள்ள பட்ட பிஞ்சு குழந்தைகள் இவை அனைத்துக்கும் விசாரணை வைக்கவும். இந்திய ஈரானுவத்தின் அடிவருடிகள் ஆன வரதராஜபெருமாள், டக்கௌஸ் போன்றவர்கள் செய்த கொலைகள் இவை அனைத்துக்கும் ஐநா விசாரணை வைக்க நீங்கள் தயாரா. இவை நடந்தால் உங்கள் காங்கிரஸ் நாய்கள் பலபேர் துக்கில் தொங்க வேண்டியதுதான். கிழக்கில் நடந்த முஸ்லிம் கொலைகளுக்கு இலங்கை அரசின் சதி இருப்பது முஸ்லிம்களுகே தெரியும். முஸ்லிம்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து எல்லை படைகளை உருவாகி தமிழர்களோடு மோத விட்டு வேடிக்கை பார்த்தது ஸ்ரீலங்கா அரசு இதில் முஸ்லிகள் தமிழர்கல் தெரியாமலே பலியாகி போனார்கள். சமாதான காலத்தில் கிழக்கில் முஸ்லிம் தமிழ் உறவை மேம்படுத்தி பல முஸ்லிம் தமிழ பிணக்குகளை திர்த்து வைத்து அயராது உழைத்த கவுசெல்யேன் போன்ற புலிகளின் பொறுப்பாளர்களை திட்டமிடே படுகொலை செய்தது ஸ்ரீலங்கா அரசு. ஸ்ரீலங்கா அரசை பொறுத்தவரை முஸ்லிம் தமிழர்கள் ஒன்று சேர்தால் தமக்கு பெரும் நெருக்கடி உண்டாகும் என்பதால் எப்போதும் சதிகள் மூலம் பிரிதளுவதை செய்தே வந்தது இதட்கு பல முஸ்லிம் அரசியல் வாதிகளும் துணை போனார்கள். 2001 பேர்ச்சுவர்த்தை போது முஸ்லிம் தலைவரான ரவுப் ஹக்கீம் மிடம் யாழ்ப்பாணத்தில் நடந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினர் புலிகள் அதோடு கிழக்கில் முஸ்லிம் தனி அலகு போன்றவைக்கும் வடக்கில் முஸ்லிம் மீள் குடியேற்றம் போன்றவட்கும் உடன் பட்டார்கள். அனால் இவை அனைத்தும் தெரியாமல் உன்னை போன்ற ஸ்ரீலங்கா அடிவருடிகள் எழுதும் வெப்சைட் இல் உள்ளவற்றை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து வெளியிட வேண்டாம். இவை ஒன்றும் முஸ்லிம்களுக்கு தனியாலகையோ அல்லது உரிமையோ பெற்றுத்தராது. அதோடு இன்று தமிழர்களை கொன்று வேட்டை யாடிய சிங்கள வெறிநாய் நாளை முஸ்லிம் களையும் கடிக்காமல் விடாது.

Nagarasn said...

Muslim in ThamilElam should think that they are Thamilians. Ihen only they can be any other religion.

THOZHAN said...

ARM & தமிழ் மாறன் said are truth.
by,
iqbhal

மர்மயோகி said...

இணையதளத்தில் எழுதும் சில முஸ்லிம்களுக்கு - விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளிப்பது உலகத்தமிழர்களுக்கு ஆதரவு தருவது என்ற தப்பான அபிப்பிராயம் உள்ளது..விடுதலைப்புலி பயங்கரவாதிகளால் இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட, உறவினர்கள் சொந்தங்களை இழந்த பலரை நான் சந்தித்து அவர்களது உள்ளக்குமுறல்களை அறிந்தவன் நான்...
எனவே விடுதலைப்புலிகள் என்ற பயன்கவாதிகளை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள்..அவர்கள் இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பயங்கரவாத செயல்கள் புரிந்தவர்கள்..அவர்கள் ஒடுக்கப்படவேண்டியவர்க்க..அவரளுக்கு வக்காலத்து வாங்குவோர் தேச துரோகிகள்..அந்நிய நாட்டு பயங்கரவாதிகளை ஆதரிக்க - இந்தியாவையே வெறுக்கும் தைரியம் இந்த தேச துரோகிகளுக்கு எவ்வாறு வந்தது?

PUTHIYATHENRAL said...

http://nellaipopularfront.blogspot.com/2012/03/blog-post_19.html
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஆதரிக்கக் கூடாதாம்-ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது,ஆதரிக்க வேண்டும் - என்கிறது பி.ஜே.பி.

இந்த இரட்டை வேடத்தில் எது உண்மை முகம் புதுடில்லி, மார்ச். 19 இலங்கை அரசுக்கு எதிராக அய்நாவில் அமெ ரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். திடீர் எதிர்ப்பு காட்டி யுள்ளது. சுப்பிரமணியசாமி, சோ போன்ற ஒரு சிலர் தவிர, பிற மாநிலத்தவர் கூட ஈழத்தமிழருக்கு இலங்கைப் போரில் நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்து ஆவேசப்பட்டு வருகின்றனர். மனிதாபி மானமும், தன் சொந்த மக்கள் மேல் அபிமானமும் இல்லாத இலங்கை அரசுக்கு பன்னாட்டு அளவில் பெரிய அளவிலான தண்டனை தரப்பட்டே தீர வேண்டும் என பல நாட்டு மக் களும் கருத்து கூறி வருகின்றனர்.

இலங்கைக்கும் ஈழத் தமிழருக்கும் சம்பந்தமே இல்லாத 23 நாடுகள், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிக்கும் போது, தொப்புள் கொடி உறவு உள்ளதாகக் கூறப்படும் இந்தியா மட்டும் இன்னும் மவுனம் காத்து வருகிறது. அந்த மவுனத்தை உடைத்து, இலங்கைக்கு எதிராக இந்தியா முடிவெடுக்க ப. சிதம்பரம் போன்ற வர்கள் முயன்று வரும் வேளையில், மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இலங் கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?