Pages

Monday, May 30, 2011

இன்னும் இவனை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்?


இந்தியாவில் மைய அரசு என்று ஒன்று செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறதா?

இல்லை பிரதமரின் வேலை வெறுமனே வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதும், அமெரிக்காவின் ஆட்டுவித்தளுக்கு தலையாட்டுவதும்தானா?

2G - அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகூட, கூட்டணிக்கட்சியான திமுகவை மிரட்டுவதற்கு - அதாவது அதிக தொகுதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசின்மீது அளவுக்கதிகமான தலையீடு போன்றவைகளின் காரணமாக அடக்கிவைக்க - மேற்கொள்ளப்பட்ட நடவைக்கைகள் என்றுதான் சந்தேகம் எழுகிறது..அதுவும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டதன் விளைவுதான்..

உண்மையிலேயே தேச நலனில் அக்கறை இருந்தால் தேசத்தை துண்டாடும் வகையில் பேசிவரும் மும்பையின் பயங்கரவாதி சிவசேனாவின் பால்தாக்கரே என்பவனை இன்னும் ஏன் கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவனை சிறையில் அடைக்கவில்லை?

சில மாதங்களுக்கு முன்பு பிரபல கிரிகெட் வீரர் டெண்டுல்கர் - பாதாக்கரேயின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் மும்பை இந்தியாவின் ஒருபகுதி என்று பேட்டி அளித்தார்.

அதற்க்கு பயங்கரவாதி பால்தாக்கரே ஆவேசமாக குதித்தான்..பலரது எதிர்ப்பு காரணமாக அவனது பருப்பு வேகவில்லை..இப்போது அதே பிரச்சினையை எடுத்துக்கொண்டு, மும்பையை எப்படி இந்தியாவின் ஒரு பகுதி என்று டெண்டுல்கர் சொல்லலாம் என்று பால்தாக்கேரே மீண்டும் குதிக்க ஆரம்பித்திருக்கிறான்.

மும்பை இந்தியாவின் ஒரு பகுதி இல்லையென்றால் - ஆப்ரிக்காவின் பகுதியா?

இப்படி தேசவிரோதமாக பேசும் இவனை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்?

இவன் அப்படி என்ன இந்தியாவிற்காக கிழித்துவிட்டான்?

இவனால் ஒவ்வொருநாளும் பயங்கரவாதம் வளர்ந்துகொண்டே இருக்கிறதே தவிர அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை.

இவன் போன்ற பயங்கவாத ரவுடிகளை ஏன் இன்னும் கைது செய்து உள்ளே தள்ளாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்?

இவன் இந்தியாவில்தானே அரசியல் பிச்சை செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறான்?

இவன் என்ன மும்பை சாம்ராஜ்யத்தின் பேரரசனா?

பொறுக்கித்தனம் செய்து பிச்சை எடுத்துகொண்டிருன்தவன்.

இன்று ஏதோ ஒரு சில பொறுக்கிகளின் ஆதரவை வைத்து இந்தியாவையே துண்டாட நினைக்கும் இந்த பயங்கரவாதியை இன்னும் விட்டுவைப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து எனபது ஏன் இந்த அரசுகளுக்கு தெரியவில்லை?தங்களது சொந்த கட்சிக்கு லாபம் இல்லையென்றால் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களா?
Friday, May 27, 2011

இந்தியன் என்றால் இன்னும் அடிமைகள்தானா?


ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு சென்று ஏறக்குறைய அறுபது வருடங்களை தாண்டிவிட்டோம்..

ஆனாலும் அவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த அந்த மனோபாவம் இன்னும் நம்மிடம் இருந்து மாறவில்லை..

அதனால்தான்..நாம் போராட்டத்தின் மூலம் ஆங்கிலேயனை விரட்டியும்கூட, அவர்களிடம் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்றுதான் சொல்கிறோமே தவிர நாம் அவனை விரட்டியதாக சொல்வதில்லை..

தாய்மொழி பேசுவதை விட ஆங்கிலம் பேசுவதுதான் உயர்ந்தது என்று நினைத்துகொண்டு வாழ்கிறோம்.

தமிழ்நாட்டில்கூட திராவிட கட்சிகள் வளர்ந்தது, நமது தாய்நாடு இந்தியாவில் அதிக மக்கள் பேசும் ஹிந்தி மொழியை எதிர்த்துதானே தவிர ஆங்கில மொழியை எதிர்த்து அல்ல..

இன்னும் தமிழ்நாட்டில் ஆங்கில மொழியை வரவேற்று, ஹிந்தியை தார் பூசி அழிக்கிறோம்..

அதனால்தான் பெரும்பாலான தமிழர்கள் சென்னை சென்ட்ரலை தாண்டிவிட்டால் ஹிந்தி தெரியாமல் ஊமை பாஷை பேசவேண்டிய சூழல்..வெள்ளைக்காரனைக் கண்டால் அவன் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவன் போல நம்மவர்கள் அவனுடன் பவ்யமாக பணிந்து பேசும் அவலம் வேறு எங்கும் இல்லை..

நம்மை நாம தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகள் இந்தியாவில்தான் அதிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று நினைக்கிறேன்..என்னதான் இந்தியா  உலகின் வல்லரசுகளில் ஒன்றாகி வருகிறது, பொருளாதாரத்தில் வியக்கவைக்கும் அளவில் முன்னேற்றம் பெற்றிருக்கிறது என்றாலும்,  அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷோ, பில் கிளிண்டனோ, ஒபாமாவோ வந்தால் அவர்கள் கையிலே இந்த நாட்டை ஒப்படைக்கும் கேவலமாக ஆட்சியாளர்களைதான் நாம் பெற்றுள்ளோம்..

ஆனால் நமது நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அங்கு சென்றால் - பாதுகாப்பு சோதனை என்று கருதி அவமானப்படுத்தப்பட்டாலும், கை கட்டி வாய்பொத்தி சின்னதாக கண்டனம் தெரிவித்து அமைதியாகி நாம் எப்போதும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைதான் என்று பறைசாற்றியே வருகிறோம்.

அதனால்தான், அமெரிக்காவின் இந்திய துணைததூதரின் மகள் கிருத்திகா பிஸ்வாஸ் என்ற ஒரு சிறுமியை  அநியாயமாக - ஆபாச ஈமெயில் அனுப்பினார் என்று அமெரிக்க அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டிருகிறார். ஒரு நாள் சிறைவாசம் அனுபவித்ததோடு, அளவுக்கதிகமான சித்திரவதையும் அனுபவித்திரிகிறார்.

அந்த பதினெட்டு வயது சிறுமிக்கு, குடிப்பதற்கு குடிநீர் கொடுக்காமலும், திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வைத்தும், எய்ட்ஸ் நோயாளிகள் அருகில் வைத்தும் சித்திரவதை செய்திருக்கிறார்கள் - இவ்வளவும் அவள் செய்திராத தவறுக்கு - ஒரு முறையான விசாரணை இல்லாமல்..


இறுதியில் தவறு செய்தது ஒரு சீன மாணவன் எனத்தெரிந்ததும் அப்பெண் விடுவிக்கப்பட்டாலும், அந்த மாணவன் தண்டிக்கப்படவில்லை..


காரணம் அவன் இந்தியன் அல்ல..சீனன்.

.இந்தியன்தான் அடிமை..இந்தியாவுக்கு அவர்கள் வந்தால் அவர்கள் கையில் நாம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவோம்.

அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கன் சொன்னதை மீறாமல் கையெழுத்திடுவோம்..பாகிஸ்தான் நம்மை தாக்கினால் - திருப்பித்தாக்க வக்கில்லாமல், அமெரிக்காவிடம் முறையிடுவோம்.. ஐ நா சபையில் உறுப்பினராக கூட அமெரிக்காவின் தயவையே எதிர்பார்க்க நேரிடுகிறது..

கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் தேசியக்கொடியை ஆட்டிவிட்டு, அணியும் ஆடைகளில் அமெரிக்க கொடி வரைந்த ஆடைகளை அணிவதே பெருமை என்று நினைக்கு அடிமைகளே இந்நாட்டில் அதிகமதிகம் உலா வருகிறார்கள்.

அமெரிக்கர்கள் சொல்லும் வேலையை இரவெல்லாம் விழித்திருந்து முடித்துவிட்டு, - தாம் கால் சென்டரில் வேலை செய்வதை கவுரமாக கருதும் அடிமைகளே அதிகம்..

பிறக்கும்போதே அமெரிக்காவில் வேலை செய்வதே லட்சியமாக கொண்டு  பிறக்கும்  "மேல்தட்டு" அடிமைகளும் அமெரிக்க தூதரக வாசலில் இரவு பகல் பாராமல் வெயில் மழை பாராமல் அவனுக்கு அடிமை சேவகம் செய்ய ஆவலாய் காத்திருக்கும் அடிமைகளும் இங்குதான் இருக்கிறார்கள்..


இன்னும் நாம் அடிமை மனோபாவத்திலேயே இருப்பதால்தான் இன்னும் குனிய குனிய குட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..

எப்போது எழுந்து திருப்பி குட்டப் போகிறோம்?


Tuesday, May 24, 2011

தமிழ்பதிவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்..

 
மரியம்பிச்சை..!
திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவை தோற்கடித்து ...வெற்றி பெற்றவர்..பணபலம், அதிகாரபலம், அமைச்சரின் செல்வாக்கு போன்றவைகளைக்கடந்து வெற்றிபெற்றவர்..சிறுபான்மை பிரிவு மற்றும் சுற்று சூழல் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றவர்.
பதவி ஏற்ற ஒரே வாரத்தில் அகால மரணமடைந்துள்ளார்.
 
அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் மனிதர். அதுவும் ஒரு முக்கிய பொறுப்பிலிருந்தவர்..அகால மரணமடைந்துவிட்டார்..
நானும் இந்த இரண்டு நாட்களாக பார்த்துகொண்டிருக்கிறேன்..எந்த பதிவராவது அனுதாபம் தெரிவித்து பதிவிடுவாரோ என்று...ம்ஹூம்..அதை வெறும் செய்தியாகத்தான் ஓரிரண்டு பதிவர்கள்  வெளியிட்டு இருக்கிறார்களே தவிர அதைப்பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் வெறும் மொக்கை பதிவுகளும் சினிமா துதிகளுமே நிறைந்திருக்கிறது.
 
சினிமாவில் சம்பாதித்து தற்சமயம் நோய் வாய்ப்பட்டிருக்கும் ரஜினி என்னும் நடிகர் பற்றி - அவர் மீண்டு வந்து விடுவார்..அவருக்கு அந்த சிகிச்சை, அங்கே சிகிச்சை என்று மாய்ந்து மாய்ந்து எழுதியவர்களுக்கு - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்முறையாக அமைச்சராகி - அதை செயல்படத் தொடங்கும் முன்பே அகால மரணமடைந்த ஒரு மனிதருக்கு அனுதாபம் தெரிவிக்ககூடவா தோன்றவில்லை?
 
தமிழ் பதிவர்கள் அந்த அளவுக்கு மனிதாபிமானமற்றவர்களா?
 
பின் குறிப்பு :
அப்படி யாரேனும் பதிவிட்டிருந்தால் - அவர்களுக்கல்ல இந்த பதிவு..
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்..

Monday, May 23, 2011

எங்கேயும் காதல்..! - எங்கேயும் காமம்..!!!இப்படம் வெளியாகும் முன்பே, இப்படம், லவ் ஆஜ்கல் என்ற ஹிந்திபடத்தின் காப்பி என்றொரு பதிவை இட்டிருந்தேன்.

அப்படியேதான் காப்பியடித்து இருந்தாலும் அது தெரியாமலிருக்க சற்று மாற்றி படம் பிடித்து இருக்கிறார்கள்.மற்றபடி படம் முழுவதும் ஆபாசம் விரவிக்கிடக்கிறது.

இருந்தும் இந்தப்படம் பார்க்க நேர்ந்தது..சென்ற ஞாயிற்றுக்கிழமை இப்படத்திற்கான டிக்கெட் சிரமமின்றி கிடைத்ததற்கான காரணம் படம் தொடங்கிய பத்து நிமிடங்களில் தெரிந்துவிட்டது;படத்தின் கதையை அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று இப்படத்தின் இயக்குனர் பிரான்சை காட்டுகிறார்.

பிரான்ஸ் சென்று வந்தவர்களுக்கு தெரியும்..அந்நாட்டில் ஆண்களும் பெண்களும் சிறிதும் வெட்கமின்றி..தெருவோரத்தில் நாய்கள் உறவு கொள்வதுபோல சாலைகளிலும், பூங்காக்களிலும் ஆபாச செய்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.அந்த நீலப்படக் காட்சிகளைத்தான் காதல் என்ற பெயரில் அப்படத்தின் இயக்குனர் நமக்கு அறிமுகப்படுத்தி தன் ஆபாச வக்கிரத்தை தீர்த்துக்கொள்கிறார்.பெரும் தொழிலதிபர் ஒருவன் செக்ஸ் ஆசையை தீர்த்துகொள்வதர்காகவே பிரான்ஸ் வருகிறானாம்..அவனுக்காகவே பிரான்ஸ் நாடு அழகிகள் எல்லாருமே காத்துக் கிடப்பதுபோல் அவனை சுற்றியும் ஆபாச அழகிகளின் கூட்டம். கேவலம்..இந்திய கலாசாரத்திலேயே ஊறிய அழகி கதாநாயகியாம்.

இந்த ஆபாச நாயகனைக் கண்டவுடன் காதல் கொள்கிறாராம்.

அவனும் இறுதிவரை இவள் பெயர் தெரியாமலேயே ஊர் சுற்றுகிறான் கட்டிப்பிடிக்கிறான், சேர்ந்து படமெடுத்துக் கொள்கிறான்.இன்னும் டூயேட் எல்லாம் பாடிவிட்டு எனக்கு காதல் இல்லை என்று சொல்லிவிட்டு ஊர் திரும்புகிறான்.ஒருவருடம் கழித்து ஒரு தண்ணி பார்டியில் இவளை சந்திக்கிறான்.

இந்திய கலாசாரத்தில் ஊறிய அந்த அழகி, இவனை அடைவதற்காக தனக்கு ஏராளமான காதலர்கள் இருப்பதாக கதை கட்டுகிறாள்.


அவனுடன் டேட்டிங் செல்கிறாள். தண்ணி அடிக்க கூப்பிடுகிறாள்..தண்ணியடித்து தள்ளாடி ஓர் இரவு அவன் ரூமிலேயே தங்குகிறாள்..
முன்பு அவள்மீது வராத காதல், அவள் பலருடன் சுற்றுகிறாள் என்று தெரியும்போது இவனுக்கு காதல் வருகிறது..

அதாவது ஒருத்தி பலருடன் சுற்றினால்தான் இவனுக்கு காதல் வருமோ? இதற்க்கு பெயர்தான் காதலா?


டிரயினில் டிக்கெட் எடுக்காமல் போவதற்கு ஆணும் பெண்ணும் ஆபாசமாக கட்டிபிடித்துக்கொண்டிருந்தால் அங்கே விட்டுவிடுவார்கள் என்றும் ஒரு முட்டாள்தனமான காட்சி.படத்தின் கதாநாயகன் பலருடன் ஊர் சுற்றுகிறான்.

அவனது தோழனாக வருபவனும் பெண் பெண் என்று அலைகிறான்.

கதாநாயகி சம்மந்தமே இல்லாமல் கதாநாயகனிடம் காமம் (காதல்?) வயப்படுகிறாள்

கதாநாயகியின் தந்தையின் வேலையே அடுத்தவர்களின் கள்ளகாதலை துப்பறிவதுதான்

பிரான்சில் சாலைகளிலும் பூங்காக்களிலும் காதல் என்ற பெயரில் அனைவரும் ஆபாசமாக படுத்து கிடக்கிறார்கள்..

இப்படி படம் முழுவதும் வருபவர்கள் அனைவரும் காமவெறி  பிடித்து அலைகிறார்கள்..

இந்த குப்பையை படம் என்று எடுத்து காசுபார்க்க நினைத்தவர்களை திகார் ஜெயிலில்தான் களி திங்க வைக்கவேண்டும்..எங்கேயும் காதல் அல்ல.. அல்ல..எங்கேயும் காமவெறி..


Saturday, May 21, 2011

கேட்கமறந்த கேள்விகள்!

கேள்வி 1


ஸ்பெக்ட்ரம் 2 G ஊழல் இன்று பெருமளவில் பேசப்படும் விசயமாக இருக்கிறது..

அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போன்ற பெருந்தலைகள் கைது செய்யப்பட்டு இன்று சிறை வாசம் அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது..


மக்களுக்காக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்ததை சரித்திரமாக சொல்லிவந்த காலம் போய் , இன்றைய அரசியல்வாதிகள் ஊழல் குற்றசாட்டுக்களுக்காக மட்டுமே சிறை செல்லும் அவலம் ஏற்ப்பட்டு இருப்பது இந்திய அரசியலின் கறைபடிந்த வரலாறாகிவிட்டது..

 இதுவரைக்கும் இந்தியாவிற்கு துளியளவுகூட நன்மையே செய்திராத பயங்கரவாத கட்சியான பார"தீய" ஜனதா கட்சி இந்த ஊழலை வைத்து இலாபம் அடைய பார்க்கிறது.

கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கூட்டணியின் ஊழலை தட்டிக்கேட்பதர்காக, இந்த பயங்கரவாத கட்சியுடன் ஒத்துப்போக நேரிடுகிறது...

1995 ஆம் ஆண்டுகளில் மொபைல் போன் அறிமுகமாகியது... அப்போது காங்கிரசின் பொம்மை பிரதமர் நரசிம்மராவின் கடைசிகாலமாக இருந்தது.

அத பிறகு தேவகவுட, ஐ.கே குஜ்ரால் போன்றோர்கள் குழப்பமான ஆட்சிகாலம்..இந்த கால கட்டங்களில், நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சியை தவிர்த்து, தி.மு.க தொடர்ந்து ஆட்சியில் பங்கெடுத்து வருகிறது..

இந்த காலகட்டங்களில் ஆண்ட மத்திய அரசுகள், செல் போன் சேவையை அரசு நிறுவனமான பி எஸ் என் எல்லுக்கு வழங்காமல் தனியார் செல்போன் சேவை நிறுவனங்களான ஏர்டெல், ஆர் பி ஜி போன்ற நிறுவனகளுக்கு வழங்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதித்ததை அனைவரும் அறிவோம் ..

இன்றைய கால கட்டங்களில் இன்கமிங் கால்கள் இலவசமாகவும், ஒரு அழைப்புக்கு ஒரு செகண்டுக்கு ஒரு பைசாவும் வாங்க செல்போன் நிறுவனங்களுக்கிடையே கடுமையாக நிலவும் போட்டிகளைப்பார்க்கும்போது, போட்டிக்கு நிறுவனங்களே இல்லாத காலகட்டத்தில் , ஒரு அழைப்புக்கு பதினாறு ரூபாய்களும், இன்கமிங் கால்களுக்கு எட்டு ரூபாய்களும் வசூலித்ததை நினைக்கும்போது, அந்த நிறுவனங்கள் எவ்வளவு கொள்ளை இலாபம் பார்த்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போது தலை சுற்றுகிறது..,


அன்று தனியார் நிறுவனங்கள்  அடித்த கொள்ளை பற்றியும், அதற்க்கு அனுமதி அளித்த அரசுகளை பற்றியும் அன்றும் சரி, இன்றும் சரி, ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் என்று அலறும் அரசியல் கட்சிகள் மௌனம் சாதித்தது ஏன் ?

கேள்வி 2
இன்றைய தேதிகளில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் உதாரணமாக ரஜினிகாந்த், கமல் போன்றவர்கள் 1980  களில் எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார்கள்? ..அவர்களுக்கு முன்பு நடித்துக்கொண்டிருந்த நடிகர்களான எம் ஜி ஆர் , சிவாஜி போன்றவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார்கள்? எம் ஜி ஆர்..ஒரு படத்துக்கு அப்போது ஒரு லட்சம் சம்பளமாக பெற்றிருப்பார? சினிமாக்காரர்கள் பாஷையிலேயே சொன்னால் வெள்ளையில் ஒரு லட்சமும் கருப்பில் ஒரு லட்சமும்  வாங்கி இருப்பாரா?

விசயம் இதுதான்..
அப்போது அதாவது எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்த பொது, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத இயக்கத்திற்கு  நான்கு  கோடிகள் தனது சொந்த பணத்தில் இருந்து கொடுத்தாராம்...
அன்றைய கால கட்டங்களில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்பதே அளவுக்கதிகமான தொகையாக இருந்தபோது, முதலமைச்சராக இருந்த ஒருவர், அதுவும் தனது சொந்த பணத்தில் நான்கு கோடிகள் கொடுத்திருக்கிறார் என்றால்..அவரிடம் எவ்வளவு பணம் இருந்திருக்க வேண்டும்..அதுவும் ஒருவர் இதுமாதிரி கொடுக்கிறார் என்றால் அது உபரியான தேவைக்கும் அதிக அதிகமான பணமாகத்தான் இருந்திருக்க வேண்டும்..
அப்படியென்றால் எம் ஜி ஆரிடம் எவ்வளவு பணம் இருந்திருக்க வேண்டும்..அந்த பணம் எங்கிருந்து வந்தது..
மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறி வந்த கருனாநிதியிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று மேடைக்கு மேடை கூப்பாடு போடும் ஜெயலலிதாவும்  , அவரது தற்காலிக கூட்டாளி கருப்பு எம் ஜி ஆர் (?) விஜயகாந்தும் இதைப் பற்றி பேசுவார்களா?

இது கேட்க மறந்த கேள்விகள் என்று சொல்வதைவிட, கேட்காமல் விடப்பட்ட கேள்விகள் என்றுதான் சொல்லவேண்டும்...
அதைவிட ஒரு சுவராசியமான கேள்வி (3)

லத்திகா என்றொரு திரைப்படம் சன் டிவி துணை இல்லாமலேயே இத்தனை நாட்கள் (?) ஓடுகிறது.. ..போதாதற்கு அந்தப்படத்தின் நாயகன் இன்னும் ஏராளமான படங்களில் நடிப்பதாகவும் விளம்பரங்கள் வேறு வந்து பாடாய் படுத்துகிறது..இவருக்கு யார் இவ்வளவு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள்..அல்லது அவரே அத்தனை படங்களையும் தயாரித்து நடிக்கிறார் என்றால் அவருக்கு என்ன பின்புலம்?

Friday, May 20, 2011

கனிமொழிக்கு ஜாமின் மறுப்பு ; ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவு


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி ரிமாண்ட் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.


ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிக்கிய மாஜி அமைச்சர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஆதாயம் அடைந்த டி.பி., ரியாலிட்டி குழுமத்தின் சினியுக் என்ற நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கனியமாழி கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மனு மீதான தீர்ப்பை அறிவித்தார். கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். இதனையடுத்து அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனி” : சி.பி.ஐ.,வக்கீல் வாதம் ;
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று சி.பி.ஐ.,வக்கீல் யு.யு., லலித் வாதாடினார். மேலும் அவர் வாதாடுகையில் , கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டார் என்றும், கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார். நெருக்கமாக இருந்ததால் கலைஞர் டி.வி.,க்கு எவ்வித ஆவணமும் இல்லாமல் ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் பெற்ற டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் மூலம் எளிதாக ரூ. 214 கோடி கைமாறியது. இதில் இருவரது பங்கும் இருந்தது என்றும் இதனால் கனிமொழியை ஜாமினில் விடக்கூடாது நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் .

கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . ராஜாவுடன் நெருக்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் . இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.,க்கு தொடர்பில்லை என்றும் பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பதும் நம்ப முடியாததாகவே உள்ளது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார்.


“ முழுச்சதிக்கும் ராஜாதான் காரணம் ”;

கனிமொழி வக்கீல் சொன்னது: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில்; இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு 20 சதவீத பங்குதாரர் மட்டுமே .கருணாநிதியின் மகளாக பிறந்ததும், எம்.பி.,யாக இருப்பதும்தான் இவரது துரதிருஷ்டம் நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.


பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டும் பயனில்லாமல் போனது.


நன்றி : தினமலர் இணையதளம்

ச்சீ... ச்சீ.... இந்தப்பழம் (நிஜமாகவே) புளிக்கும்!!!சமீபகாலமாக எனது பதிவுகள் தமிழ்மணம் இணையதளத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை..

மங்குனி அமைச்சரின் பதிவை நீக்கும்போதுகூட அவருக்கு ஒரு ஈமெயில் அனுப்பி தகவல் தெரிவித்து விட்டுதான் அவரது பதிவை நீக்கி இருக்கிறார்கள்..

ஆனால் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு பிறகு எனது பதிவுகளை தமிழ்மணம் இணையதளத்தில் பதியும்போது கீழ்க்கண்டவாறு செய்தி வருகிறதே தவிர எனது பதிவுகள் பதியப்படுவதில்லை..


அப்படியிருந்தும், இன்டலி (தமிளிஷ்), மற்றும் தமிழ் 10 போன்ற இணையதளங்கள் வாயிலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துதான் செல்கிறார்கள்..

மேலும் எனது ஸ்டேட்ஸ் இன்டலி இணையதளத்தின் மூலமாகத்தான் அதிக ஹிட்ஸ்கள் -ஏறக்குறைய தினமும் 600 க்கும் மேல் - வருகின்றன..

தமிழ்மணம் இணையதளத்தின் மூலம் 10 அல்லது 12 ஹிட்ஸ்கள் தான் வருகின்றன..


மேலும் இணையதள தர வரிசையில் (alexa.com) தற்சமயம்

இன்ட்லி Alexa Traffic Rank: 7,831 Traffic Rank in IN: 674


தமிழ்மணம் Alexa Traffic Rank: 20,577 , Traffic Rank in IN: 3,416

ஆக இருப்பதால் தமிழ்மணம் இணையதளத்தில் பதிவதில் எந்த உபயோகமும் இல்லாததால் தமிழ்மணம் இணையதளத்தில் இருந்து விலகுகிறேன்.

பதிவர்கள் யாருக்காவது, தமிழ்மணம் ஒட்டுபட்டையை நீக்கும் முறை தெரிந்தால் தயவுசெய்து எனது ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்தலாம் .

நன்றி..


Wednesday, May 18, 2011

ஆம்..! தோற்றது மக்கள்தான்.. !!!


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது பற்றி திராவிடக்கழக கண்மணி நடிகை குஷ்பு அளித்த ஒரு பேட்டியில் "மக்கள்தான் தோற்றுபோனார்கள்!" என்றதொரு அறிய கருத்தை சொல்லி இருக்கிறார்..

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்..

பதிவுலகிலும் இதுபற்றி பேசப்பட்டு குஷ்புவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..

எனக்கு தெரிந்து குஷ்பு சொன்னதில் தவறொன்றும் இல்லை என்றே தோன்றுகிறது..

ஏறக்குறைய நாற்பதாண்டுகாலமாக சினிமாக்காரர்களின் பிடியில் தமிழகம் இருக்கிறது..

அவர்களிடமிருந்து விடபடமுடியாமல் ஒவ்வொரு தேர்தலிலும் சினிமாக்கூத்தடிகளின் துதிபாடும் கூட்டமாக தமிழக மக்கள் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..

இலவசங்களுக்கு அடிமையாகி, உழைக்கமுடியாத சோம்பேறிகளாக தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..

அப்படியே உழைத்து சம்பாதித்தாலும், சாராயக்கடைகளில் கூட்டம்கூட்டமாக சென்று குடித்து தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..

சினிமாக் கூத்தாடிகளின் நடிப்பை நடிப்பாக பார்க்காமல் வாழ்க்கை வழிகாட்டியாகவும், தமிழகத்தின் தலைவனாகவும் துதிபாடியும் தம் வாழ்கையை தொலைத்தவர்களாய் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..

ஆபாச பத்திரிக்கைகளின் அடிமைகளாக தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..

ஆபாச தொலைகாட்சி சீரியல்களிலும் - உபயோகமற்ற மற்ற நிகழ்ச்சிகளிலும் மதி மயங்கி சொந்தங்களை இழந்தும் பிரிந்தும் இன்று முட்டாள்களாக தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..

ஒவ்வொரு தேர்தலிலும் எந்த நடிகன் யாருக்கு ஓட்டுபோட சொல்கிறான் என்ற உபயோகமற்ற விவாதத்திலும் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்..

ஒரு ஆபாச நடிகைக்கு கோயில் கட்டிய தமிழக மக்கள் பகுத்தறிவில் தோற்றுத்தான் போனார்கள்..


நடிகனில் பெரிய பெரிய கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்து மூளை மலுங்கியவ்ர்களாய் தோற்றுத்தான் போனார்கள்..

நடிகனை தலைவனாய் கொண்டாடி - படிப்பறிவில்லாதவன் மட்டுமல்ல , பதிவுலகினரும் தோற்றுத்தான் போனார்கள்..


குஷ்பு ஒரு நடிகை..நடிகைக்கு சொந்தமாக வசனம் பேச தெரியுமா? அவள் மற்றவர்களின் கதையிலும் வசனத்திலும் நடிக்கவே பழக்கப்படுத்தப்பட்டவள்..

2001 இல் திமுகழகம் தோற்றபோது, அப்போதையை தி.நகர் தொகுதி எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட - தற்போது சேப்பாக்கம் எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ. அன்பழகனிடம் பத்திரிக்கையாளர்கள் திமுகழகத்தின் தோல்வி பற்றி கேட்டபோது "தோற்றது நாங்களல்ல..மக்கள்தான்!" என்று சொன்னார்..

அன்று ஒரு எம் எல் ஏ சொன்னதை கவனிக்காமால்..அதையே   ஒரு நடிகை சொன்னபோது அவளது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து  எதிரப்பதாக அவளை மேலும் பிரபலப்படுத்தும் மக்கள்..உண்மையிலேயே தோற்றுத்தான் போய்விட்டார்கள்..
 

Monday, May 16, 2011

முதல் கோணல்..!!!கூட்டணிக்கட்சிகளை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்தபோதே, ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா..

அந்த சமயத்தில் பாரம்பரியமிக்கவர்கள் என்று கருத்தப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் நடிகர் விஜயகாந்த்தின் தலைமையேற்க தயாராகிய கூத்தும் நடந்தது..

இன்று அதிமுக அசுர பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்..

முதலில் ஜெயலலிதா புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்துக்கு செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது ஒரு தலைவருக்குரிய பண்பாக தெரியவில்லை..

அது ஒன்றும் கருணாநிதி தனது சொந்த பணத்தில் கட்டிய கட்டிடமல்ல..

தமிழக மக்களின் வரிப்பணம்..

ஏறக்குறைய 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட அந்த தலைமை செயலகத்தில் ஜெயலலிதா தனது ஆட்சியை தொடர்ந்திருந்தால் அது அவரது பண்பையும் முதிர்ச்சியையும் காட்டி இருக்கும்..

இரவோடிரவாக (அதுதான் "ஜெ" க்கு பிடிக்குமோ?) செம்மொழி ஆய்வு அலுவலகத்தை ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய தலைமை செயலகத்துக்கு மாற்றி இருப்பது சிறுபிள்ளைதனமாக உள்ளது.

கூட்டணி கட்சியினரும், எதிர்கட்சி தலைவரும் வெற்றி "போதை" யில் இருப்பதால் இதை கண்டுகொள்ளவில்லை போலும்..மேலும் இது அவர்கள் பணமா..இழப்பு மக்களுக்குத்தானே..

தனது கல்யாண மண்டபத்தை இடித்தவுடன் மக்களுக்காக போராடிய நடிகருக்கு, மக்களது பணம் இன்று அநியாயமாக "ஒரு புதிய கட்டிடம்" பேய் பங்களாவாக மாறுவதை கண்டுகொள்ளாமல் ரசித்துகொண்டிருக்கிறார்.

ஆபாச பத்திரிக்கைகள் ஜெயலலிதாவின் வெற்றியை ஆ வென வாய் பிளந்து பார்த்துகொண்டிருக்கின்றனவே ஒழிய இந்த வீண் விரயத்தை கண்டித்ததாக தெரியவில்லை.

ஜெயலலிதாவின் எல்லா பிரச்சினைக்கும் NDTV, மற்றும் CNN டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுக்கும் அரசியல் புரோக்கர், கோமாளி "சோ" வும் ஏதும் சொன்னதாக தெரியவில்லை.

இவர்கள் யாருக்காக ஆட்சிக்கு வருகிறார்கள்..?கருணாநிதி கட்டினார் என்பதற்காக அவர் காலகட்டத்தில் கட்டப்பட்ட தலைமை செயலகத்துக்கு போகமாட்டேன் என்று இருக்கும் "ஜெ" நம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயன் கட்டிய "ஜார்ஜ் கோட்டை"க்கு மட்டும் எப்படி முதலமைச்சராக செல்கிறார்..

அடுத்தது.."

இந்தியாவில் ஏறக்குறைய 30 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் உள்ளன..

அவைகளில் எவ்வளவோ திறமைசாலியான முதலமைச்சர்கள் உள்ளனர்..

ஆனால் தனது பதவி ஏற்பு விழாவிற்கு, அனைத்து நாடுகளாலும் வெறுக்கப்பட்ட பயங்கரவாதி "நரேந்திர மோடி" என்பவனை அழைத்து மகிழ்ந்து இருக்கிறார் புதிய முதல்வர்.

இப்படி இருக்கிறது ஆரம்பமே..

முதல் கோணல் முற்றிலும் கோணலாகாமல் இருந்தால் சரி..

Saturday, May 14, 2011

கருவின் குற்றம்.!


கருவின் குற்றம்.!

இது ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நாஞ்சில் மனோகரன் அவர்களால் கருணாநிதியை -சற்றே சாடி எழுதப்பட்ட ஒரு கவிதையின் தலைப்பு..அப்போதைய காலகட்டத்தில் தி மு கவில் இருந்த ஒரு துரோகியை வெளியேற்ற கருணாநிதி முயற்சித்ததால் அப்படி எழுதி பரப்பாக பேசப்பட்டது..அன்றைக்கு அது பொருந்தியதோ இல்லையோ..இன்றைய தேர்தல் தோல்விக்கு இது முற்றும் பொருந்தும்..எப்படி தி மு கழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கும் அதன் புகழுக்கும் கருணாநிதியின் உழைப்பும் அர்பணிப்பும் காரணமோ..அதே கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும், நிர்வாகத் திறமையின்மையும், ஊழலுக்கு துணைபோனதும்தான் இன்றைய திமுக வின் படுதோல்விக்கு காரணம்.

அதிமுக அடைந்த வெற்றி அக்கட்சியின் வெற்றி அல்ல...நிச்சயமாக திமுகவின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பே காரணம்.

ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களாக, அதிமுக தலைவி எந்த ஒரு பெரிய போராட்டத்தையோ, திமுகவின் இந்த பொறுப்பற்ற ஆட்சி பற்றியோ மக்கள் எழுச்சி பெரும் வண்ணம் ஏதும் செய்துவிடவில்லை..

வெறும் அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தி வந்தார்..

கருணாநிதியோ, சினிமாக்காரர்களின் பாராட்டு விழாவில் மயங்கி கிடக்க, ஒரு பக்கம் விலைவாசி, மக்களை மூச்சுத்திணற செய்தது, மின்வெட்டு வாட்டியது. ரவுடியிசம் பொறுக்கியிசம் அராஜகம் செய்தது..

வருடம் முழுவதும் படிக்காத மாணவன், தேர்வு அன்று இரவில் விழுந்து படித்துவிட்டு, பாசாகியதுபோல ஜெயலலிதா தேர்தல் காலத்தில் மட்டும் தனது அரசியலை நடத்தி ஆட்சியை பிடித்துவிட்டார்..

மற்றபடி இலவசங்களை வாங்கிக்கொண்டு மக்கள் திமுகவிற்கு நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.

இலவச அறிவிப்புகள் இனி ஓட்டை வாங்கிதாராது என்பதை அதிமுக வினரும் உணர்ந்தால் நல்லது.

திமுகவின் இந்த படுதோல்விக்கு, விலைவாசி, மின்வெட்டு, அவர் குடும்ப உறுப்பினர்களின் - அனைத்து துறை - ஆதிக்கம் போன்ற காரணங்கள் மட்டுமேதான் காரணம். மக்களுக்கு முதல்வர் பதவிக்கு வேறு ஒரு நல்ல தலைவன் இல்லை என்ற காரணங்களினாலேயே ஜெயலிதாவுக்கு ஒட்டு போட காரணமே தவிர வேறு எந்த காரணமும் இல்லை..

அரசியல் சாணக்கியர் என்று பத்திரிக்கைகளால் வருணிக்கப்பட்ட கருணாநிதி, - பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு வேளாளர் போன்ற ஜாதிக்கட்சிகளையும், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, குஷ்பூ, வடிவேலு போன்ற சினிமாகூத்தாடிகளையும் நம்பி தான் ஒரு ஜீரோ என்று காட்டிவிட்டார்..இடைத்தேர்தல் அரசர் என்று வருணிக்கப்பட்ட அழகிரியின் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் திமுக முற்றிலும் தோல்வியடைந்து மூக்குடைபட்டிருக்கிறது.


இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு துளிகூட ஆர்வமில்லை என்பதும் இந்த தேர்தல் காட்டிவிட்டது..

விடுதலைப்புலிகளின் தமிழகப் பிரிவான வைக்கோ என்பவனின் மதிமுகவை , ஜெயலலிதா தூக்கி எறிந்தும் அவர் இவ்வளவு பிரமாதமான வெற்றி அடைந்ததே இதற்கு உதாரணம். வைக்கோவை ஜெயலலிதா அடிமையாக வைத்திருந்த காலத்தில் அதிமுக தோல்வி அடைந்திருந்தது.

இன்னும் சொல்லப்போனால் போர்காலங்களில் சாதாரண மக்களும் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்க முடியாதது என்று விடுதலைப்புலிகள் அழிக்கப்படும்போது சொன்னவர்தான் ஜெயலலிதா..

இந்த தேர்தலில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் விடுதலிப்புலிகளின் தமிழக அமைப்பான வைக்கோலின் மதிமுக என்ற கட்சி அடியோடு ஒழிக்கப்பட்டதுதான்.

இன்னும் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் பணத்தை வைத்து அரசியல் செய்யும் அனைத்து இந்திய தேச துரோகிகளும் ஜெயலலிலதா ஆட்சிகாலத்தில் ஒழிக்கப்பட்டு தமிழ்நாடு அமைதி பெரும் என்று நம்புவோம்.

இன்னும் பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு வேளாளர் கட்சி போன்ற ஜாதிக்கட்சிகள் பிரதிநிதித்துவம் இழந்ததும் மகிழ்ச்சியான விசயமே..

இனி பொறுக்கிகளின் ஆட்டம் அடங்கும் என நம்பலாம்..சட்டம் ஒழுங்கு கருணாநிதி ஆட்சியைவிட பரவாயில்லை என்று சொல்லும்படி இருக்கும்.

மற்றபடி ஜெயலலிதா வந்தவுடன் நாட்டில் தேனும் பாலும் ஓடி, மாதம் மும்மாரி பொழிந்து ஆட்சி செம்மையாக இருக்கும் என்று சொல்ல வரவில்லை..

மேலும் ஒரு கவலையளிக்கும் ஒரு விஷயம் - எதிர்கட்சியாக விஜயகாந்தின் தேமுதிக என்ற ஒரு ஆபத்தான கட்சி வந்திருப்பதுதான்.

எந்த ஒரு தியாகம், அனுபவம், கஷ்டம் இல்லாமல், வெறும் சினிமா பின்னணியை வைத்து மட்டுமே வந்திருப்பது தமிழ்நாடு இன்னும் உருப்படாமல் போகும் என்றே தோன்றுகிறது..

குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க திமுகவை தோற்கடித்த மக்கள்..கட்சியை தொடங்கும்போதே குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியை கொடுத்து ஆரம்பித்த ஒரு சினிமாகூத்தாடியை எதிர்கட்சியாக தேர்ந்தெடுத்திருப்பது தமிழ்நாட்டிற்கு மகா கேவலம்.

பழம்பெருமை மட்டுமே பேசிவரும் தமிழக மக்கள் எப்போது இந்த சினிமா மாயையில் இருந்து விடுபடப்போகிரார்கள் என்று தெரியவில்லை.


இந்த தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மக்கள் இன்னும் தெளிவான பார்வையில் ஒட்டுபோட்டதாக தெரியவில்லை..

அந்த மாற்றம்கூட, ஆளுங்கட்சிக்காரன் பணக்காரனாக இருக்கிறானே என்றதொரு பொறாமையின் வெளிப்பாடுதான்..

அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து ஜெயலலிதா கொள்ளையடித்து விட்டார் என்று திமுக என்ற கொள்ளைக்காரனை மீண்டும் ஆட்சியில் அமர்த்ததான் போகிறார்கள்..

ஒரு மெகா ஊழலை விரட்ட மக்கள் இன்னுமொரு மகா ஊழல் ராணிக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள் - அவ்வளவுதான்..Monday, May 9, 2011

டிவி விளம்பரங்களும் அதன் பயன்களும்


மிரிண்டா குடித்துவிட்டால் ஆட்டோவை எடுத்து கண்டபடி ஊர் சுற்றிவிட்டு காசு கொடுக்க வேண்டாம்..

ஐந்து ரூபாய் கொடுத்து க்ளோசப் பேஸ்ட் வாங்கி பல் தேய்த்தால் ஒரு அழகான பெண் உங்களுடன் காதல் கொண்டு விடுவாள்

மாங்காய் பறிக்க முடியவில்லை என்றால் காம்ப்ளான் குடித்தால் அடுத்தநாளே பலமடங்கு உயரமாகி கையாலேயே மாங்காய் பறித்து விடலாம்

இந்த உலகையே மாற்ற வேண்டும் என்றால் மாதவிடாய்க்கான நாப்கினை வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும்

அடுத்தவன் மனைவியை அபகரிக்க zatak என்ற பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் அவள் முதலிரவன்றே கணவனை விட்டு ஓடி வந்து விடுவாள்

பெப்சி, கோகா கோலா போன்ற பானங்களை குடித்தால் எந்த பேரழகியும் உங்களை பின்னால் வருவாள்

காதலியை ஏமாற்ற ஸ்ப்ரைட் குடிக்க வேண்டும்

பெண்களை அடைய ரொம்பவும் கஷ்ட பட வேண்டாம். பாடி ஸ்ப்ரே அடித்து சென்றால் அவர்களாகவே தமது செல் நம்பரை உங்களுக்கு தருவார்கள்

சுவீட் எடு கொண்டாடு என்பதற்காக சாப்பிடும் முன் சிறு குழந்தை சாப்பிடும் காட்பரீஸ் சாக்லேட்டை பிடுங்கி வயதானவர்கள் சாப்பிடலாம்

ஹீரோ ஹோண்ட பைக் ஒட்டி சென்றால் காரில் செல்லும் பெண் உங்களிடம் மயங்கி உங்களை காதலித்துவிடுவாள்

ஹமாம் சோப்பை உபயோகித்து வந்தால் எந்த புதருக்குள்ளும் சென்று வரலாம் எந்த தோல் வியாதியும் வராது

கில்லட் பிளேடு கொண்டு சவரம் செய்தால் யாரவது அழகிய பெண் உங்களாது கன்னங்களை தடவி விடுவாள்

கார்னியர் தயாரிப்புக்களைக் கொண்டு உங்களை பத்தரமா பார்த்துக்கொள்ளலாம்

ஒரே ஒரு மென்தால் சாக்லேட் சாப்பிட்டு எப்பெர்பாட்ட கொடிய வெப்பத்திலும் குளிர்ச்சியாக உணரலாம்

ஐடியா மொபைல் போன் வாங்கி நடந்துகிட்டே போன் பேசினால் எல்லா நோயும் தீர்ந்து விடும்...டாக்டரெல்லாம் காற்று வாங்கவேண்டியத்துதான்..இன்னும் நெறைய இருக்கு..யாராவது தொடர்பதிவிட்டால் தேவலை..

Sunday, May 8, 2011

புதிதாக வெளிவர இருக்கும் புதிய ரூபாய் நோட்டு


இந்திய வலைப்பூக்களில்  முதல்முறையாக

வெளிவரும் முன்பே  நமது மர்மயோகி வலைப்பூவில்..

அகில இந்தியாவை மட்டுமல்ல அகில உலகையே கலங்கடித்த

ஸ்பெக்ட்ரம் 2 G  ஊழல் சாதனையை முன்னிட்டு..

மத்திய அரசு புதிதாக வெளியிட இருக்கும் புதிய ரூபாய் நோட்டு

--

---

----

----

-----

-------

--------

---------

-----------

-----------