Pages

Monday, May 23, 2011

எங்கேயும் காதல்..! - எங்கேயும் காமம்..!!!இப்படம் வெளியாகும் முன்பே, இப்படம், லவ் ஆஜ்கல் என்ற ஹிந்திபடத்தின் காப்பி என்றொரு பதிவை இட்டிருந்தேன்.

அப்படியேதான் காப்பியடித்து இருந்தாலும் அது தெரியாமலிருக்க சற்று மாற்றி படம் பிடித்து இருக்கிறார்கள்.மற்றபடி படம் முழுவதும் ஆபாசம் விரவிக்கிடக்கிறது.

இருந்தும் இந்தப்படம் பார்க்க நேர்ந்தது..சென்ற ஞாயிற்றுக்கிழமை இப்படத்திற்கான டிக்கெட் சிரமமின்றி கிடைத்ததற்கான காரணம் படம் தொடங்கிய பத்து நிமிடங்களில் தெரிந்துவிட்டது;படத்தின் கதையை அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று இப்படத்தின் இயக்குனர் பிரான்சை காட்டுகிறார்.

பிரான்ஸ் சென்று வந்தவர்களுக்கு தெரியும்..அந்நாட்டில் ஆண்களும் பெண்களும் சிறிதும் வெட்கமின்றி..தெருவோரத்தில் நாய்கள் உறவு கொள்வதுபோல சாலைகளிலும், பூங்காக்களிலும் ஆபாச செய்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.அந்த நீலப்படக் காட்சிகளைத்தான் காதல் என்ற பெயரில் அப்படத்தின் இயக்குனர் நமக்கு அறிமுகப்படுத்தி தன் ஆபாச வக்கிரத்தை தீர்த்துக்கொள்கிறார்.பெரும் தொழிலதிபர் ஒருவன் செக்ஸ் ஆசையை தீர்த்துகொள்வதர்காகவே பிரான்ஸ் வருகிறானாம்..அவனுக்காகவே பிரான்ஸ் நாடு அழகிகள் எல்லாருமே காத்துக் கிடப்பதுபோல் அவனை சுற்றியும் ஆபாச அழகிகளின் கூட்டம். கேவலம்..இந்திய கலாசாரத்திலேயே ஊறிய அழகி கதாநாயகியாம்.

இந்த ஆபாச நாயகனைக் கண்டவுடன் காதல் கொள்கிறாராம்.

அவனும் இறுதிவரை இவள் பெயர் தெரியாமலேயே ஊர் சுற்றுகிறான் கட்டிப்பிடிக்கிறான், சேர்ந்து படமெடுத்துக் கொள்கிறான்.இன்னும் டூயேட் எல்லாம் பாடிவிட்டு எனக்கு காதல் இல்லை என்று சொல்லிவிட்டு ஊர் திரும்புகிறான்.ஒருவருடம் கழித்து ஒரு தண்ணி பார்டியில் இவளை சந்திக்கிறான்.

இந்திய கலாசாரத்தில் ஊறிய அந்த அழகி, இவனை அடைவதற்காக தனக்கு ஏராளமான காதலர்கள் இருப்பதாக கதை கட்டுகிறாள்.


அவனுடன் டேட்டிங் செல்கிறாள். தண்ணி அடிக்க கூப்பிடுகிறாள்..தண்ணியடித்து தள்ளாடி ஓர் இரவு அவன் ரூமிலேயே தங்குகிறாள்..
முன்பு அவள்மீது வராத காதல், அவள் பலருடன் சுற்றுகிறாள் என்று தெரியும்போது இவனுக்கு காதல் வருகிறது..

அதாவது ஒருத்தி பலருடன் சுற்றினால்தான் இவனுக்கு காதல் வருமோ? இதற்க்கு பெயர்தான் காதலா?


டிரயினில் டிக்கெட் எடுக்காமல் போவதற்கு ஆணும் பெண்ணும் ஆபாசமாக கட்டிபிடித்துக்கொண்டிருந்தால் அங்கே விட்டுவிடுவார்கள் என்றும் ஒரு முட்டாள்தனமான காட்சி.படத்தின் கதாநாயகன் பலருடன் ஊர் சுற்றுகிறான்.

அவனது தோழனாக வருபவனும் பெண் பெண் என்று அலைகிறான்.

கதாநாயகி சம்மந்தமே இல்லாமல் கதாநாயகனிடம் காமம் (காதல்?) வயப்படுகிறாள்

கதாநாயகியின் தந்தையின் வேலையே அடுத்தவர்களின் கள்ளகாதலை துப்பறிவதுதான்

பிரான்சில் சாலைகளிலும் பூங்காக்களிலும் காதல் என்ற பெயரில் அனைவரும் ஆபாசமாக படுத்து கிடக்கிறார்கள்..

இப்படி படம் முழுவதும் வருபவர்கள் அனைவரும் காமவெறி  பிடித்து அலைகிறார்கள்..

இந்த குப்பையை படம் என்று எடுத்து காசுபார்க்க நினைத்தவர்களை திகார் ஜெயிலில்தான் களி திங்க வைக்கவேண்டும்..எங்கேயும் காதல் அல்ல.. அல்ல..எங்கேயும் காமவெறி..


5 comments :

Boss said...

//பிரான்ஸ் சென்று வந்தவர்களுக்கு தெரியும்..அந்நாட்டில் ஆண்களும் பெண்களும் சிறிதும் வெட்கமின்றி..தெருவோரத்தில் நாய்கள் உறவு கொள்வதுபோல சாலைகளிலும், பூங்காக்களிலும் ஆபாச செய்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.//

உங்களுக்கு நம்ம ஊரைப்பற்றி தெரியாதென்றே நினைக்கிறேன்.
நம் ஊரில், பஸ்ஸில் 'கை' போடுவது, Parkல் புதரில், ATM Centerக்குள் குஜால் பண்ணுவது Beachஇல் குடைக்குள் குடும்பம் நடத்துவது,
இதெல்லாம் என்னவாம். ஏன் வெளிநாடு என்றால் 'அது' மட்டும்தான் தெரிகிறது. எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கிறது

மர்மயோகி said...

நன்றி திரு Boss
நானும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன்..ஆனால் பிரான்ஸ் சென்றதில்லை..அங்குள்ள நண்பர்களும், சென்றுவந்தவர்களும் அந்நாட்டைப் பற்றி இந்த கருத்தைதான் சொல்கிறார்கள்..மேலும், நான் இந்த படத்தில் காட்டப்படும் காட்சிகளும் அங்கு அதுமட்டும்தான் நடக்கிறது என்பதுபோல காட்டுவதையும்தான் சொல்லி இருக்கிறேன்..
நம் நாடும் அதைப்போன்றுதான் இருக்கிறது என்பதில் மாற்றுகருத்து இல்லை..

nirvana said...

Entha padam matum ila, ella Tamizh padangilulum , velinaatil vazhum Indiargal matrum Velinaatil vazhubavargalai epozthum 24 manineramum ullasamaga vazhkai vazhuvathaga katuginrana. Antha mathiri kumbal 1% erunthaley jaasthi. The films always focus on that 1% group. Naan London la thaan eukaaen. Perumbalana Europa nadugaluku senrulaen. Paris mattum 10 thadavai melaga senrulaen. Entha padathil kanbipathu pol makkal anaivarum epozhtum kaama kali attangalil edupadavathilai. Engula European nadugalil 6/8 mathangaluku kadum kuliraga erukum , Elarum thalai muthal kaal varai pothi kondu thaan sela vendum. Veyil kalangilum velaiku,kaloori selbavargal ellam ozhungaga thaan udai aninthu erupaargal.

SENTHILKUMARAN said...

ஆடுகளம் தேசிய விருது அம்பலமாகும் உண்மைகள்..

எம்.ஜி.ஆருக்கு அகில இந்திய சிறந்த நடிகர் பட்டம் கிடைத்தபோது அதை சிபாரிசு செய்தது தாமே என்று திமுக கூறியது. அதனால் கலையடைந்த எம்.ஜி.ஆர் அதன் பின்னர் அந்தப் பட்டத்தை பாவிக்காமலே விட்டார் என்பது அனைவரும் அறிந்த கதை. சன் பிக்சர்ஸ் ஆடுகளமும் அப்பட்டமான அரசியல் சிபாரிசு என்பதை மெல்ல மெல்ல போட்டுடைக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்த உண்மைகள் தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இன்று தமிழகத்தில் வெளியான தற்ஸ்தமிழ் செய்தி :

யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.

சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.

படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.

காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.

களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் – இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.

அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.

இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.

அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.

பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.

இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.

இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா

madawala said...

i hate this movie டிரயினில் டிக்கெட் எடுக்காமல் போவதற்கு ஆணும் பெண்ணும் ஆபாசமாக கட்டிபிடித்துக்கொண்டிருந்தால் அங்கே விட்டுவிடுவார்கள் என்றும் ஒரு முட்டாள்தனமான காட்சி.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?