Pages

Saturday, May 21, 2011

கேட்கமறந்த கேள்விகள்!

கேள்வி 1


ஸ்பெக்ட்ரம் 2 G ஊழல் இன்று பெருமளவில் பேசப்படும் விசயமாக இருக்கிறது..

அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போன்ற பெருந்தலைகள் கைது செய்யப்பட்டு இன்று சிறை வாசம் அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது..


மக்களுக்காக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்ததை சரித்திரமாக சொல்லிவந்த காலம் போய் , இன்றைய அரசியல்வாதிகள் ஊழல் குற்றசாட்டுக்களுக்காக மட்டுமே சிறை செல்லும் அவலம் ஏற்ப்பட்டு இருப்பது இந்திய அரசியலின் கறைபடிந்த வரலாறாகிவிட்டது..

 இதுவரைக்கும் இந்தியாவிற்கு துளியளவுகூட நன்மையே செய்திராத பயங்கரவாத கட்சியான பார"தீய" ஜனதா கட்சி இந்த ஊழலை வைத்து இலாபம் அடைய பார்க்கிறது.

கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கூட்டணியின் ஊழலை தட்டிக்கேட்பதர்காக, இந்த பயங்கரவாத கட்சியுடன் ஒத்துப்போக நேரிடுகிறது...

1995 ஆம் ஆண்டுகளில் மொபைல் போன் அறிமுகமாகியது... அப்போது காங்கிரசின் பொம்மை பிரதமர் நரசிம்மராவின் கடைசிகாலமாக இருந்தது.

அத பிறகு தேவகவுட, ஐ.கே குஜ்ரால் போன்றோர்கள் குழப்பமான ஆட்சிகாலம்..இந்த கால கட்டங்களில், நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சியை தவிர்த்து, தி.மு.க தொடர்ந்து ஆட்சியில் பங்கெடுத்து வருகிறது..

இந்த காலகட்டங்களில் ஆண்ட மத்திய அரசுகள், செல் போன் சேவையை அரசு நிறுவனமான பி எஸ் என் எல்லுக்கு வழங்காமல் தனியார் செல்போன் சேவை நிறுவனங்களான ஏர்டெல், ஆர் பி ஜி போன்ற நிறுவனகளுக்கு வழங்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதித்ததை அனைவரும் அறிவோம் ..

இன்றைய கால கட்டங்களில் இன்கமிங் கால்கள் இலவசமாகவும், ஒரு அழைப்புக்கு ஒரு செகண்டுக்கு ஒரு பைசாவும் வாங்க செல்போன் நிறுவனங்களுக்கிடையே கடுமையாக நிலவும் போட்டிகளைப்பார்க்கும்போது, போட்டிக்கு நிறுவனங்களே இல்லாத காலகட்டத்தில் , ஒரு அழைப்புக்கு பதினாறு ரூபாய்களும், இன்கமிங் கால்களுக்கு எட்டு ரூபாய்களும் வசூலித்ததை நினைக்கும்போது, அந்த நிறுவனங்கள் எவ்வளவு கொள்ளை இலாபம் பார்த்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போது தலை சுற்றுகிறது..,


அன்று தனியார் நிறுவனங்கள்  அடித்த கொள்ளை பற்றியும், அதற்க்கு அனுமதி அளித்த அரசுகளை பற்றியும் அன்றும் சரி, இன்றும் சரி, ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் என்று அலறும் அரசியல் கட்சிகள் மௌனம் சாதித்தது ஏன் ?

கேள்வி 2
இன்றைய தேதிகளில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் உதாரணமாக ரஜினிகாந்த், கமல் போன்றவர்கள் 1980  களில் எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார்கள்? ..அவர்களுக்கு முன்பு நடித்துக்கொண்டிருந்த நடிகர்களான எம் ஜி ஆர் , சிவாஜி போன்றவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார்கள்? எம் ஜி ஆர்..ஒரு படத்துக்கு அப்போது ஒரு லட்சம் சம்பளமாக பெற்றிருப்பார? சினிமாக்காரர்கள் பாஷையிலேயே சொன்னால் வெள்ளையில் ஒரு லட்சமும் கருப்பில் ஒரு லட்சமும்  வாங்கி இருப்பாரா?

விசயம் இதுதான்..
அப்போது அதாவது எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்த பொது, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத இயக்கத்திற்கு  நான்கு  கோடிகள் தனது சொந்த பணத்தில் இருந்து கொடுத்தாராம்...
அன்றைய கால கட்டங்களில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்பதே அளவுக்கதிகமான தொகையாக இருந்தபோது, முதலமைச்சராக இருந்த ஒருவர், அதுவும் தனது சொந்த பணத்தில் நான்கு கோடிகள் கொடுத்திருக்கிறார் என்றால்..அவரிடம் எவ்வளவு பணம் இருந்திருக்க வேண்டும்..அதுவும் ஒருவர் இதுமாதிரி கொடுக்கிறார் என்றால் அது உபரியான தேவைக்கும் அதிக அதிகமான பணமாகத்தான் இருந்திருக்க வேண்டும்..
அப்படியென்றால் எம் ஜி ஆரிடம் எவ்வளவு பணம் இருந்திருக்க வேண்டும்..அந்த பணம் எங்கிருந்து வந்தது..
மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறி வந்த கருனாநிதியிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று மேடைக்கு மேடை கூப்பாடு போடும் ஜெயலலிதாவும்  , அவரது தற்காலிக கூட்டாளி கருப்பு எம் ஜி ஆர் (?) விஜயகாந்தும் இதைப் பற்றி பேசுவார்களா?

இது கேட்க மறந்த கேள்விகள் என்று சொல்வதைவிட, கேட்காமல் விடப்பட்ட கேள்விகள் என்றுதான் சொல்லவேண்டும்...
அதைவிட ஒரு சுவராசியமான கேள்வி (3)

லத்திகா என்றொரு திரைப்படம் சன் டிவி துணை இல்லாமலேயே இத்தனை நாட்கள் (?) ஓடுகிறது.. ..போதாதற்கு அந்தப்படத்தின் நாயகன் இன்னும் ஏராளமான படங்களில் நடிப்பதாகவும் விளம்பரங்கள் வேறு வந்து பாடாய் படுத்துகிறது..இவருக்கு யார் இவ்வளவு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள்..அல்லது அவரே அத்தனை படங்களையும் தயாரித்து நடிக்கிறார் என்றால் அவருக்கு என்ன பின்புலம்?

21 comments :

ஷர்புதீன் said...

நல்ல கேட்கிராங்கய்ய டீடைலு

Kaliyan said...

லூசாப்பா நீ... இத ஏன்யா எல்லாத்துக்கும் மெயில்ல போட்டு உயிர வாங்கற... விடுதலைப்புலிகள இன்னொரு தர தீவிரவாத இயக்கம்னு சொன்னேன்னு வையி பேட்டாவாலயே அடிவிழும் பாத்துக்க...

மர்மயோகி said...

நன்றி திரு ஷர்புதீன்

மர்மயோகி said...

விடுதலைப்புலிகளை தீவிரவாத இயக்கம்னு சொன்னது தப்புதான் Kaliyan

அது ஒரு பயங்கரவாத இயக்கம்..

kaliya நீ அகதி முகாம்ல இருக்கியா? ..எங்க நாட்டு தலைவன கொன்ன்ட்டு, எங்க நாட்டுக்கே பாம் வெச்சுட்டு, எங்க கிட்டேயே ஓசி சோறு திங்கிற உனக்கு இவ்வளவு கொழுப்புன்னா எனக்கு எவ்வளவு இருக்கும்?

மங்குனி அமைச்சர் said...

raittu

selvaraj said...

neenga oru thamizhanaa? india nnu oru naade kidayaadhu. nam inaththai azhikkum anniya congressai purinthu kollungal mudhalil.

அருண் இராமசாமி said...

/// எங்க நாட்டு தலைவன கொன்ன்ட்டு //
Rajiv gandhi oru ayokiyan...

G.Annamalai murugan said...

dAI NAYEA MARMAYOGI......

மர்மயோகி said...

நன்றி திரு மங்குனி அமைச்சர்

மர்மயோகி said...

திரு selvaraj

என்ன உளர்றீங்க..தமிழன் என்றால் எந்த தவறும் செய்யலாமா..

இந்தியா என்றொரு நாடு இல்லையென்றால் அந்த நாட்டோட பாஸ்போர்ட் வைத்திருக்காதீர்கள், அந்த நாட்டின் ரேசன் கார்ட் வைத்திருக்காதீர்கள்..

அந்த நாட்டில் அகதியாக இருக்காதீர்கள்..அந்த நாட்டை எங்களுக்கு உதவி தேவை என்று அலறாதீர்கள்..

மர்மயோகி said...

திரு அருண் இராமசாமி

ராஜீவ் காந்தி அயோக்கியன் என்றால், சக தமிழ் தலைவர்களே கொன்ற பிரபாகரன் அயோக்கியனுக்கேல்லாம் அயோக்கியந்தானே?

மர்மயோகி said...

G.Annamalai murugan என்ற ஒரு சினிமாகூத்தாடியின் நாய் ஒன்று குரைத்திருக்கிறது..பதிலுக்கு குரைக்க தேவை இல்லை.

G.Annamalai murugan said...

DAI NEE ENNA ELLAM THERINJA PERIYA KUTHHIYA....

MUTTAKUTHI VANTHEN VETTIPUDUVEN....

G.Annamalai murugan said...

MUDINJA TENKASI PAKKAM VAA....

BY
Annamalai murugan.....

G.Annamalai murugan said...

ammam nee panni thana.....unakku kuraikka theriyathu.....

G.Annamalai murugan said...

dai BJP ethuvum pannlannu eppadida solra....panniku pirantha panni

G.Annamalai murugan said...

anyway.....nalla time pass aachu....papoma da........eluthum pothu therinchu eluthu.....
sariya.....cuttralam seasonakku....vantha.....tenkasi kku va......

G.Annamalai murugan said...

sorry nanba....neeyum naanum tamilargal..nama varthaiyal sanda poda vendam ....thappu en melthan.........appdi comment potturukka kudathu....sorry....nanba

என் நடை பாதையில்(ராம்) said...

//*இதுவரைக்கும் இந்தியாவிற்கு துளியளவுகூட நன்மையே செய்திராத பயங்கரவாத கட்சியான பார"தீய" ஜனதா கட்சி*// அண்ணே! பா.ஜ.க ஆட்சியில தான் Rs16/min ல இருந்து ரேட் எல்லாம் கம்மி ஆச்சு. bsnl கிட்ட உரிமைய கொடுத்திருந்தா 2020 ல தான் நீங்க இன்டர்நெட் எ use பண்ணிருந்திருப்பீங்க. அவங்க ஆண்ட அந்த ஆறு வருஷத்துல கிடச்சதுதான் எல்லாமே. அரசியலே தெரியாமே ஏதும் எழுதாதீங்க.....!

மர்மயோகி said...

திரு என் நடைபாதையில்(ராம்)

அய்யா. இந்த தொலைதொடர்பில் ஏற்பட்டுவரும் புரட்ச்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..எந்த ஆட்சி நடைபெற்றுவந்தாலும், இது போன்ற தொலைதொடர்பு முன்னேற்றங்கள் வந்தே தீரும்..

அப்படியே உங்க பார "தீய" ஜனதா தான் காரணமென்றால்...மொபைல் போன்களால் நன்மைகளைவிட ஆபத்துகளும் தீமைகளும்தான் அதிகம்..அதற்கும் பயங்கரவாத பார "தீய" ஜனதாதான் காரணம் என்பதையாவது ஏற்றுக்கொள்கிறீர்களா?

SENTHILKUMARAN said...

ஆடுகளம் தேசிய விருது அம்பலமாகும் உண்மைகள்..

எம்.ஜி.ஆருக்கு அகில இந்திய சிறந்த நடிகர் பட்டம் கிடைத்தபோது அதை சிபாரிசு செய்தது தாமே என்று திமுக கூறியது. அதனால் கலையடைந்த எம்.ஜி.ஆர் அதன் பின்னர் அந்தப் பட்டத்தை பாவிக்காமலே விட்டார் என்பது அனைவரும் அறிந்த கதை. சன் பிக்சர்ஸ் ஆடுகளமும் அப்பட்டமான அரசியல் சிபாரிசு என்பதை மெல்ல மெல்ல போட்டுடைக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்த உண்மைகள் தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இன்று தமிழகத்தில் வெளியான தற்ஸ்தமிழ் செய்தி :

யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.

சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.

படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.

காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.

களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் – இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.

அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.

இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.

அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.

பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.

இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.

இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?