Pages

Monday, May 9, 2011

டிவி விளம்பரங்களும் அதன் பயன்களும்


மிரிண்டா குடித்துவிட்டால் ஆட்டோவை எடுத்து கண்டபடி ஊர் சுற்றிவிட்டு காசு கொடுக்க வேண்டாம்..

ஐந்து ரூபாய் கொடுத்து க்ளோசப் பேஸ்ட் வாங்கி பல் தேய்த்தால் ஒரு அழகான பெண் உங்களுடன் காதல் கொண்டு விடுவாள்

மாங்காய் பறிக்க முடியவில்லை என்றால் காம்ப்ளான் குடித்தால் அடுத்தநாளே பலமடங்கு உயரமாகி கையாலேயே மாங்காய் பறித்து விடலாம்

இந்த உலகையே மாற்ற வேண்டும் என்றால் மாதவிடாய்க்கான நாப்கினை வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும்

அடுத்தவன் மனைவியை அபகரிக்க zatak என்ற பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் அவள் முதலிரவன்றே கணவனை விட்டு ஓடி வந்து விடுவாள்

பெப்சி, கோகா கோலா போன்ற பானங்களை குடித்தால் எந்த பேரழகியும் உங்களை பின்னால் வருவாள்

காதலியை ஏமாற்ற ஸ்ப்ரைட் குடிக்க வேண்டும்

பெண்களை அடைய ரொம்பவும் கஷ்ட பட வேண்டாம். பாடி ஸ்ப்ரே அடித்து சென்றால் அவர்களாகவே தமது செல் நம்பரை உங்களுக்கு தருவார்கள்

சுவீட் எடு கொண்டாடு என்பதற்காக சாப்பிடும் முன் சிறு குழந்தை சாப்பிடும் காட்பரீஸ் சாக்லேட்டை பிடுங்கி வயதானவர்கள் சாப்பிடலாம்

ஹீரோ ஹோண்ட பைக் ஒட்டி சென்றால் காரில் செல்லும் பெண் உங்களிடம் மயங்கி உங்களை காதலித்துவிடுவாள்

ஹமாம் சோப்பை உபயோகித்து வந்தால் எந்த புதருக்குள்ளும் சென்று வரலாம் எந்த தோல் வியாதியும் வராது

கில்லட் பிளேடு கொண்டு சவரம் செய்தால் யாரவது அழகிய பெண் உங்களாது கன்னங்களை தடவி விடுவாள்

கார்னியர் தயாரிப்புக்களைக் கொண்டு உங்களை பத்தரமா பார்த்துக்கொள்ளலாம்

ஒரே ஒரு மென்தால் சாக்லேட் சாப்பிட்டு எப்பெர்பாட்ட கொடிய வெப்பத்திலும் குளிர்ச்சியாக உணரலாம்

ஐடியா மொபைல் போன் வாங்கி நடந்துகிட்டே போன் பேசினால் எல்லா நோயும் தீர்ந்து விடும்...டாக்டரெல்லாம் காற்று வாங்கவேண்டியத்துதான்..இன்னும் நெறைய இருக்கு..யாராவது தொடர்பதிவிட்டால் தேவலை..

7 comments :

hasan said...

nice one very funny....!

கக்கு - மாணிக்கம் said...

///ஹமாம் சோப்பை உபயோகித்து வந்தால் எந்த புதருக்குள்ளும் சென்று வரலாம் எந்த தோல் வியாதியும் வராது//


சிரிச்சி முடியல......நல்ல ஐடியாதான். இந்த பொட்டிக்கு முன்னால ஒரு அஞ்சு நிமிஷம் கூட உட்கார முடியில நம்பளால. தொடர்பதிவெல்லாம் நமக்கு டூ மச் . யாராவது எழுதினா படிச்சுட்டு சிரிக்கலாம். நல்லாயிருக்கு.

அலைகள் said...

ஐடியா மொபைல் போன் வாங்கி நடந்துகிட்டே போன் பேசினால் எல்லா நோயும் தீர்ந்து விடும்...டாக்டரெல்லாம் காற்று வாங்கவேண்டியத்துதான்..hi...hi..hii!

சூனிய விகடன் said...

தல ரசிகர்களே...உங்களுக்கு புண்ணியமாப்போகட்டும்.....உங்க தல கிட்ட சொல்லி " கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு குறுக்கு நெடுக்கா பரேடு நடக்கராமாதிரி போறது .....பாட்டு சீன்ல கேமராவைப் பாத்துகிட்டே ஆடுறது.......அப்புறம் எந்த சீனா இருந்தாலும் எழவு வீட்டுக்குப் போனவனாட்டமே மூஞ்சிய வச்சிருக்கறது ...லவ் சீன்ல பேசும் போதும் வாயில வெங்கைக்கல்லை போட்டுக்கிட்டு கொழ கொழன்கிறது "....இதையெல்லாம் மங்காத்தாவில எடிட்டிங்குல கட் பண்ணிடச்சொல்லுங்களேன்.....ப்ளீஸ்...

மர்மயோகி said...

நன்றி hassan
நன்றி கக்கு மாணிக்கம்
நன்றி அலைகள்
நன்றி சூனிய விகடன் (திரு சூனிய விகடன் அவர்கள் பதிவை படித்தாரா அல்லது வேறொரு பதிவிற்கு உள்ள பின்னூட்டத்தை தவறுதலாக இதில் பதிந்துவிட்டாரா அல்லது ஏதும் வஞ்சகப்புகழ்ச்சியா)

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.htm வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Entertainment said...

very good post nice

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?