Pages

Friday, November 23, 2012

"துப்பாக்கி" - சங்பரிவாரின் "ஸ்லீப்பர் செல்"


இந்த படம் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஒரு பயங்கரவாத செயலை செய்திருக்கிறது என்ற விமர்சனங்கள் வரத்தொடங்கியபோதே, இந்த பன்னாடைகளின் படத்திற்கு ஏன் போகவேண்டும் என்று இந்த படத்தை பார்க்காமல் தவிர்த்து விட்டேன்..

அர்ஜுன், விஜயகாந்த், கமலஹாச்சன் போன்ற கூத்தாடிகளின் துரோகத்தை இந்த ஆபாசப்பட விஜய் என்ற கூத்தாடியும் தொடங்கிவிட்டான் ..எதற்கு இந்த குப்பையை பார்க்கவேண்டும் என்று வாலாவிருந்துவிட்டேன். 

"ஏழாம் அறிவு" என்ற தனது முந்தைய படத்திலேயே தான் ஒரு சிற்றறிவு படைத்தவன்  என்று நிரூபித்த முருகதாஸ் என்ற கூத்தாடிக்கும் , முட்டைபரோட்டா, குத்து பரோட்டா என்று பெற்ற தாயுடன் ஆபாசப் பாடல் பாடி கூத்தடித்த நீலப்பட புகழ் கூத்தாடி விஜய் என்ற  கூத்தாடிக்கும், விடுதலைப்புலிகளின் தயவில் தோல்விப்படங்களை மட்டுமே தயாரித்து வந்த எஸ் தாணு என்ற விளம்பரப்பிர்யனுக்கும் ஒரு வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில், சாதாரண , மகா மட்டமான ஒரு கதையை, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து ஒரு வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் இப்படி ஒரு கேவலமான வேலையில் இறங்கி இருக்கிறார்கள்...

விடுமுறையில்  - பெண் பார்க்க வரும் ஒரு இராணுவ வீரன், குண்டு வைக்கும் தீவிரவாதிகளை கண்டு பிடிப்பதை - இஸ்லாமியர்களுக்கெதிராக படமெடுத்து நடித்த இந்த கூத்தாடிகளின் பண வெறிக்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தீவிரவாதிகளாக் சித்தரிக்கும் தைரியம் வந்திருப்பதற்கு காரணம் இன்னமும் இஸ்லாமிய சமுதாயம் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை பொறுமையுடன் சகித்து வந்திருப்பதுதான் காரணம்.

இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பு தீவிரமானதும், முஸ்லிம் சமுதாயத்தினரை புண்படுத்தும் காட்சிகளை நீக்கிவிட்டதாக இந்த கூத்தாடி கூட்டம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் "அப்பட்டமாக" நடித்ததை நம்பி இந்த படத்தை பார்க்கபோனால், இந்த ஆபாசக்கூத்தாடிகள் எப்படி முஸ்லிம்களை ஏமாற்றி இருகிறார்கள் என்று புலப்படுகிறது.

இஸ்லாத்திற்கெதிரான பகுதிகளை நீக்கி விட்டிருந்தால், நீலப்பட புகழ் விஜயும் - காஜல் அகர்வாலும் காதல் என்ற பெயரில் காம வெறி  பிடித்து அலையும்  காட்சிகள் மட்டுமே மிஞ்சி  கூத்தாடி விஜயின்  நீலப்பட லிஸ்ட்டில் இன்னொன்று கூடி இருக்கும் ...

ஆரம்பம் முதல் கடைசிவரை இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை இந்த ஆபாசக்கூட்டம் செய்து விட்டு அடுத்த படத்தில் நீலப்படப்புகழ்  விஜய் இஸ்லாமியனாக " நடிப்பானாம்".. யாருக்கடா வேண்டும் உங்கள் நடிப்பு...
நீ இஸ்லாமியனாக நடித்துவிட்டால் இஸ்லாத்திற்கு என்ன பெருமை கிடைத்து விடப்போகிரதுடா மடையா ? உனது கூத்தடிக்கும் படங்களில் இன்னொன்று கூடுமே ஒழிய யாருக்கும் எந்த உபயோகமில்லை எனபது தெரியாதா ?

அல்லது நீ கூத்தடிக்கும் அடுத்த படத்தில் வில்லன்களின் பெயர்களை ஏ ஆர் முருகதாஸ் , எஸ் எ சந்திரசேகரன் எஸ் தாணு என்று பயங்கரவாத வில்லன்களுக்கு பெயர்  வைத்துவிடேன் பார்ப்போம்..?

நீ நடிகன்..கூத்தாடி.!.இஸ்லாம் உண்மை..உன் நடிப்பு எங்களை ஒன்றும் கிழித்து விடாது..

இவன் பன்னிரண்டு பேரை - தீவிரவாதிகள் என்று சுட்டுகொள்ளும் காட்சிகளை பார்த்தால் இந்த பன்னாடைகள் எவ்வளவு மத வெறியை தூண்டும் நாய்கள் எனபது புரியும்...
இஸ்லாமிய மக்கள் அதிகமாக புழங்கும் இடத்தில் தீவிரவாதிகளை இஸ்லாமியர்களாக காட்டி தனது மத வெறி அரிப்பை  இந்த கூத்தாடிகள் தீர்த்துகொள்கின்றன..

இவன் இராணுவ அதிகாரி மட்டும் இல்லையாம்,,,இந்தியாவையே காக்கவந்த  பெரிய லடாவாம்... மூசிய இஞ்சி தின்ற குரங்காட்டம் வைத்துக்கொண்டு, பல்லை கடித்துக்கொண்டுதான் பேசுவாராம். வில்லன்களை பிடித்து வைத்து ஜெயிலில் அடைக்க மாட்டாராம்.தனது வீட்டில் அலமாரியில் வைத்து பூட்டி வைப்பாராம். இன்னும் எவ்வளவுதாண்டா ஏமாத்துவீங்க ?

"ஆயிரம் பெற கொல்றதுக்கு அவங்களே சாகும்போது நாம ஏன் நாட்டுக்காக சாகக்கூடாது?" என்று இந்த பன்னாடை இரண்டு காட்சிகளில் தனது மதவெறி அரிப்பை சொல்கிறது..ஆனால் நாட்டுப்பற்று என்கிற பெயரில் காஜல் அகர்வாலிடம் காம பிச்சை எடுத்து அலைகிறது.

இதில் உயர் அதிகாரியிடம் காமெடி என்ற பெயரில் அராத்து செய்து பார்ப்பவனை எல்லாம் சாகடிக்கிறது.
காஜல் அகர்வாலை தனக்கு பிடிக்கவில்லை என்று நீலப்படப்புகழ்  விஜய் நிராகரித்துவிட, அடுத்த காட்சியில் பெண்களுக்குரிய லட்சனமாக, அந்த பெண் தன தந்தையை கன்னத்தில் அறைகிறாள்,  அரைகுறை ஆடை அணிந்து வெளியே செல்கிறாள், குத்துசண்டை போடுகிறாள், கைபந்து விளையாடுகிறாள், இன்னும் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுகிறாள், - தன்னை அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் தம்மடிப்பேன், தண்ணியடிப்பேன்  என்று சொல்கிறாள்..இதுதான் ஒரு பெண்ணுக்கான திருமணம் செய்வதற்கான தகுதியாடா நாய்களா.? 

இன்னொரு காட்சியில் ஒரு முக்கால் கிழவனை ஒரு அழகி பணத்திற்காக திருமணம் செய்வதாக காட்டி, பெண்களை கேவலப்படுத்துவதை - பெண்ணுரிமை அமைப்புகள் ஏன் கண்டுகொள்ளவில்லை?.காரணம் மத துவேசம் அவர்களது மூளையை மலுங்கடித்துவிட்டதுதான். 
மதவெறியன் நீலப்படப்புகழ் விஜய்  மென்ட்டலாகும் நகைச்சுவை காட்சி ..
இறுதிகட்ட காட்சியில் இந்த நீலப்பட புகழ் விஜய் பண்ணும் அலப்பறை..இவனை கட்டிப்போட்டு அடித்து கையை உடைத்த பிறகு இந்த கூத்தாடி தன்னை அவிழ்த்து விடுமாறு குரைக்கிறது..அவிழ்த்து விடப்பட்டவுடன் அவன் உடைந்து போன கைகளை சரிசெய்துகொள்ளும் காட்சி உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை காட்சி..இவன் என்ன இயந்திரனா? 
அங்கேயே குதித்து குதித்து - ஒரு பைத்தியக்காரனைப்போல தன்னே குணப்படுத்தி பிறகு வில்லனை கொல்கிறான்..

பார்பவனை கேனயனாக்க - படம் முழுவதும் இஸ்லாத்திற்கெதிரான - துவேசத்தை பரப்பி ஒரு பயன்கரவாத்தத்தை செய்யும் இந்த கூத்தாடிகூட்டம், இன்னும் கேனத்தனமாக இந்த இறுதிக்காட்சியை காட்டி ரசிகர்களை நீங்கள் எல்லாம் முட்டாள்கள்தான்..நாங்கள் இப்படிதான் படம் எடுப்போம்..டிவியில் பெரிய பருப்பு மாதிரி பேட்டி கொடுப்போம்..நீங்கள் வந்து பார்த்துதான் ஆகா வேண்டும்..இந்துதான் உங்கள் தலை எழுத்து என்று சொல்கின்றன..

'தசாவதாரம்' என்றொரு படம்..
அந்த கதையில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு நடிகர் நடித்திருந்தால் மிக சாதாரணமான் படம்தான்..ஒவ்வொரு நடிகனும் பத்து நிமிடங்கள்தான் படத்தில் தோன்றி இருக்க முடியும்..அதையே கமலஹாச்சன் என்ற நடிகன் பத்து பாத்திரங்களில் செய்ததால், கதைகளன் பின்னுக்கு தள்ளப்பட்டு பிரம்மாண்டம், பத்து வேடம் என்று ரசிகன் மூளைச்சலவை செய்யப்பட்டு அதுவொரு வெற்றிப்படம்..

அதே தந்திரத்தை இந்த "சிற்றறிவு" கூட்டம் செய்திருக்கிறது..ஒரு இராணுவ வீரன் தீவிரவாத கும்பலை பிடிக்கும் வழக்கமான - அர்ஜுன், விஜயகாந்த் போன்ற குப்பைகளின் கதைதான்..அதையே இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து ரசிகனை மூளை சலவை செய்து கவனத்தை திருப்பினால்? 
அதுதான் சங்பரிவாரின் கட்டளைக்காக காத்திருந்த - "சிற்றறிவு"  எ ஆர் முருகதாஸ், "நீலப்படப்புகள்" விஜய் போன்ற கூத்தாடிகளின் "துப்பாக்கி"

ஸ்லீப்பர் செல் என்றால் பயங்கரவாதிகளின் கட்டளைகளுக்காக காத்திருக்கும் பயங்கரவாத கூட்டம் என்று இந்த சிற்றரிவுகூட்டம் சொல்கிறது...மொத்ததத்தில் துப்பாக்கி - பயங்கரவாத சங்பரிவாரின் "ஸ்லீப்பர் செல்" களின் தயாரிப்பு..
 

Wednesday, November 21, 2012

மதவெறி பால் தாக்கரேயும் - ஊடகங்களும்..


மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே.

இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் ப
ோலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்.

பால்தாக்கரே என்ற இவர் தலைமையேற்று நடத்திய கலவரங்கள் கொஞ்ச நஞ்சமா? அதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்துவிட்டனவா?

மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து, “மும்பையில் பிறந்தவர்களுக்குத்தான் மும்பை சொந்தம்” என்ற ஊர் வெறி கோசத்தை முன்வைத்து, மும்பையில் வாழ்ந்த பிற மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தி சிவசேனா பால்தாக்கரே நடத்திய கலவரங்களையும், அந்த கட்சியின் தீவிரவாதத் தொண்டர்கள் தமிழர்களுடைய சொத்துக்களை சூறையாடியதையும், அதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழ்நாட்டிற்கு ஓடி வந்ததும் இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா?

1993ஆம் ஆண்டு இவர் தூண்டிவிட்டதன் அடிப்படையில் மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே! அந்த கோர சம்பவங்கள்தான் இவர் செய்த தேசத் தியாகமா? அதனால்தான் இவருக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதையா?

பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் நிறுவனங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன . மும்பை கலவரம் குறித்து விசாரணை நடத்திய கிருஷ்ணா கமிஷன், கலவரத்திற்கு காரணம் பால்தாக்கரே என்றும் கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் தன்னை கைது செய்தால் மும்பை நகரம் பற்றி எரியும் என்று இவர் மிரட்டினாரே! இப்படி காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சவால் விட்டதால்தான் இவருக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதையா?

பத்திரிக்கையாளர்களை தாக்கி தீவிரவாதத்தை வெளிக்காட்டிய பால்தாக்கரேயின் தீவிரவாத முகம் அதற்குள்ளாகவா ஊடகங்களுக்கு மறந்துவிட்டது?

மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பீகார்காரர்களையும், வட மாநிலத்தவர்களையும் உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள் என்று கூறி விரட்டிவிரட்டி அடித்தார்களே சிவசேனா தீவிரவாதிகள். ஒரு ஆட்டோ டிரைவர் கூட பிற மாநிலத்தவராக இருந்தால் இங்கு இருக்கக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனச்சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர்தான் ஊடகங்களின் பார்வையில் தேசத்தியாகியா?

மும்பையின் முதலாளிகளை அன்ன தாதாக்கள் என்றும், தென்னிந்தியர்களை லுங்கிவாலாக்கள், கிரிமினல்கள், குண்டர்கள், சூதாடிகள் என்றும் கூறி மும்பை நகரத்தில் கூட்டம், கூட்டமாக நகரை விட்டு தென்னிந்தியர்களை கருவறுத்ததால்தான் தமிழகத்து ஊடகங்கள் இவருக்கு பாராட்டு மழை பொழிகின்றனவா?

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் ஊடகங்களைப் பார்த்து நாம் கேட்க வேண்டியுள்ளது.

இந்த லட்சணத்தில் ஊடகங்களுக்கு இவர் செய்த அநியாயங்களை பட்டியல் போடுவதற்குத்தான் திராணி இல்லை; வாய்மூடி மௌனமாகவாவது இருந்துவிட்டுப் போகலாமல்லவா? அதைவிட்டு விட்டு இவர் செய்த அனைத்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அனைத்து ஊடகங்களும் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளன.

எந்த அளவிற்கென்றால், முதன் முதலில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலைப்படையை 2002 ஆம் ஆண்டு உருவாக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர்தான் இந்த பால்தாக்கரே என்றும், மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முதன்முதலில் முன்வைத்தவர் இந்த பால்தாக்கரேதான் என்றும், இந்த ஊடகம் நடத்துபவர்கள் புகழ்ந்து தள்ளுகின்றார்கள் என்றால் இவர்களை என்னவென்பது?

அதுமட்டுமல்லாமல், இதுவரைக்கும் சுதந்திர இந்தியாவில் பொது இடத்தில் வைத்து எவரது உடலும் தகனம் செய்யப்பட்டதில்லையாம். இந்த தியாகி(?) உடைய உடல் மட்டும்தான் சுதந்திர இந்தியாவில் பொது இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டுள்ளது என்றும் புகழாரம் சூட்டியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், பால்தாக்கரே எந்த அரசாங்கப் பொறுப்பிலும் இருக்கவில்லை. மாறாக அரசாங்கத்திற்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் போர் தொடுத்தார். அப்படிப்பட்டவருக்கு நாட்டின் தேசியக் கொடியை போர்த்தி அழகு பார்த்ததை கண்டிக்க எந்த ஒரு ஊடகங்களுக்கும் துப்பில்லை.

அதிலும் இவருக்கு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலியாம். இதுவரைக்கும் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத ஒரு நபருக்கு அரசு மரியாதையோடு உடல் தகனம் செய்வது இதுவே முதல் முறை என்றும் அதையும் புகழ்ந்து எழுதியுள்ளன நம் நாட்டு காவி கரை படிந்த ஊடகங்கள்.

விட்டால் இவருக்கு தேசத்தியாகி என்ற பட்டம் கொடுத்து இவரது வாழ்க்கையை பாடப் புத்தகங்களில் தனியொரு பாடமாக்கி விடுவார்கள் போலத் தெரிகின்றது.

அதுமட்டுமல்லாமல், குறிப்பாக நமது தமிழகத்து ஊடகங்களுக்கு கொஞ்சம் மொழிப்பற்று(?) அதிகம்.
பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப்பார்வையும்

தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! என்றெல்லாம் வெட்டி பந்தா காட்டுவார்கள்.

பால்தாக்கரே தமிழர்களை கருவறுத்த செய்திகளையாவது குறைந்தபட்சம் இவர்கள் சுட்டிக்காட்டுவார்களா என்று பார்த்தால், அவர்களிடத்திலுள்ள மதவெறி அவர்களது மொழிவெறியை மறைத்துவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழர்கள் குறித்தும் எந்த ஊடகமும் வாய்திறக்கவில்லை.

தமிழனத் தலைவர்(?) என்று பீற்றிக்கொள்ளும் கருணாநிதியும் இவருக்கு இரங்கல் தெரிவித்து புகழாரம் சூட்டி தான் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார்.

இப்படி ஊடகத்துறையே ஒன்று சேர்ந்து தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக களம் கண்ட ஒருவருக்கு ஆதரவாக, அவரைத் தேசத்தியாகியாக சித்தரித்து செய்திகள் வெளிவந்த நிலையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் நமக்கு ஆறுதல் தந்தது.

ஆம்! இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக உள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விடுத்த அறிக்கைதான் அந்த ஆறுதலான விஷயம்.

மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து இந்திய நாட்டினரை துண்டாட முயன்று தேசத்துரோகத்தைச் செய்த பால்தாக்கரேக்கு இரங்கல் தெரிவிக்க இயலாது என்றும், இறந்துவிட்டார் என்பதால் அவரைப்பற்றி நல்ல வார்த்தை கூற தன்னால் இயலாது என்றும் மார்க்கண்டேய கட்ஜு துணிச்சலாக அறிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜுவைப் போல துணிச்சலாக உண்மையைப் போட்டு உடைக்கும் தன்மை அனைத்து ஊடகங்களுக்கும் வரவேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் கோட்சே கூட தேசத்தியாகியாக மாறினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


இன்னும் திருந்தாதா கூட்டம் :

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடக்கையில் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் அவர் கவலைக்கிடமாக இருந்த நாட்களிலும் பதற்றம் காணப்பட்டு மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டே இருந்தன. இது குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினரின் மருத்துவமனையை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

பால்தாக்கரே மரணமடைந்ததையடுத்து மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருந்ததாவது,

தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் லைக் கொடுத்திருந்தார்.

இந்த கருத்து வெளியான 'பேஸ் புக்' கணக்கின் முகவரி ஒரு மூட்டு சிகிச்சை மையத்தின் பெயரில் இருந்தது. இதை மோப்பம் பிடித்த சிவசேனா குண்டர்கள் அந்த மருத்துவமனைக்குத் திரண்டு சென்றனர்.

யார் ஃபேஸ் புக்கில் இந்தக் கருத்தை எழுதியது என்று கேட்டு மிரட்டவே, 21 வயது பெண் ஒருவர் வந்து, 'என் மனதில் பட்டதை தவறுதலாக பேஸ் புக்கில் வெளியிட்டேன். அந்த கருத்தை நீக்கி விடுகிறேன்'. என்று கூறி வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இருந்தாலும் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்தக் கருத்தை ஆமோதித்து 'லைக்' கொடுத்த இன்னொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். 2 பெண்கள் மீதும், மத உணர்வுகளை காயப்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமெண்ட் போட்ட பெண் அதை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டபோதிலும் பால்கர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் மருத்துவமனையை சுமார் 2,000 சிவசேனா தொண்டர்கள் சேர்ந்து அடித்து, நொறுக்கியுள்ளனர்.

பால்தாக்கரே செய்த தேச விரோதச் செயல்களை அந்தப் பெண் பட்டியல் போடவில்லை. இவர் இறந்ததற்கு எதற்கு கடையடைப்பு நடத்த வேண்டும் என்று கேள்வி கேட்ட பெண்ணையும், அதை லைக் என்று கிளிக் செய்த பெண்ணையும் மாநில அரசாங்கம் கைது செய்துள்ளது.

அந்த அப்பாவிப் பெண்கள் மீது எந்தப் பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர் என்பதைக் கேட்டால் உலகமே காரித்துப்பும். அதாவது மத உணர்வுகளை காயப்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அந்த அப்பாவிப் பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குப்போட்டுள்ளார்களாம்.

சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேயும், அவர்களது காட்டுமிராண்டி தொண்டர்களும் எத்தனை பேருடைய மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பார்கள்? அது இந்த மாநில அரசுக்குத் தெரியவில்லை. மாறாக அந்தப் பெண் கேட்ட நியாயமான கேள்வி இவர்களது மனதை புண்படுத்திவிட்டதாம்.

இவ்வளவுக்கு அந்தப் பெண் தான் எழுதியதற்காக மன்னிப்புக் கேட்ட பிறகும் அந்தப் பெண்ணின் உறவினரது மருத்துவமனையை சூறையாடியுள்ளனர் இந்த குண்டர்கள்.

அதே நேரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய சண்டாளர்களை காவல்துறை ஒன்றும் செய்யவில்லை. இத்தகைய மிகக்கேவலமான நிலைதான் இந்நாட்டில் நிலவுகின்றது எனும்போது இன்னும் பல கோட்சேக்கள் தேசத்தியாகிகளாக ஆவதற்கு இந்நாட்டில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

கோட்சேக்களுக்கு கொண்டாட்டம்தான்.

நன்றி : www.facebook.com/islmapj

டிஸ்கி :

இன்னமும் தினத்தந்தியை தமிழ் பற்று இதழ் என்று யாரும் நம்பினால் அவரைப்போன்ற முட்டாள் இல்லை என்றுதான் கூறவேண்டும்:
தமிழர்களை விரட்டுவதற்காகவே சிவசேன என்ற இயக்கத்தை தொடங்கிய மும்பை ரவுடி பால் தாக்கரேவுக்கு தேர்தல் கமிஷன் - 1999 முதல் 2005 வரை தேர்தலில் நிற்கவோ, வாக்களிக்கவோ தடை விதித்திருந்தது..

இவ்வளவு கேவலப்பட்டு போன அந்த ரவுடியைத்தான் ஒரு தேசிய தலைவரைப்போல இந்த கீழ்த்தரமான தினத்தந்தி தாங்கி பிடித்திருகிறது

"தேர்தல் கமிஷன் - 1999 முதல் 2005 வரை தேர்தலில் நிற்கவோ, வாக்களிக்கவோ தடை விதித்திருந்தது....அதே தேர்தல் கமிஷனே 2005 ஆம் ஆண்டு அந்த தடையை விளக்கி கொண்டது" என்று முட்டாள்தனமாகவோ அல்லது ஒரு கருத்து திணிப்பாகவு இந்த செய்தியை அந்த தினத்தந்தி என்கிற ஆபாச பத்திரிகை வெளியிட்டு தன அரிப்பை தீர்த்துக்கொள்கிறது .

1999 லிருந்து  2005 வரை ஆறு வருடங்கள் ஆனதால் அது இயற்கையாகவே அந்த தடை நீங்கி விடுகிறது..மக்களை முட்டாலாக்குவதர்க்காக, தமிழின விரோதியை ஒரு வெற்றி வீரனாய் காட்டுவதால் தினத்தந்திக்கு தமிழை விட மத வெறிதான் முக்கியம் என்று தெரிகிறது.

இவன் வேலை கள்ளத்தொடர்பு செய்திகளையும் கொலை கொள்ளை செய்திகளும் நடிகைகளின் அந்தரங்க செய்திகளும் தானே..? மும்பை ரவுடி இரண்ட்ததர்க்கு எதற்கு தமிழ்நாட்டில் பரபரப்பு செய்தி?

Friday, November 16, 2012

அம்மாவின் கைப்பேசி - நாட் ரீச்சபிள்


பணத்திற்கு பேராசைப்பட்டு,  தீயவர்களுடன் சேர்ந்து - கொலை செய்து - பணத்தை கொள்ளையடித்துவிட்டு   - அதன் காரணமாக மனது உறுத்தி பணத்தை  உரியவர்களிடம் சேர்த்துவிட்டு பிரயாச்சித்தம் தேடும் ஒரு படிக்காதவனின் கதை.

ஆரம்பகட்ட காட்சிகளில் வெளிப்படும்  செயற்கை தன்மை, மற்றும் நாடகத்தன்மை, படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை குலைத்துவிடுகிறது.

நடிகர்கள் தேர்விலும் - நடிப்பிலும் படு செயற்கை..

கதாநாயகனாக வரும் தங்கர் பச்சான் படம் முழுவதும் ஒரு பேக்கில் நெறைய பணத்தை வைத்துக்கொண்டு அலைகிறார்..
தங்கர் பச்சானின் ம மனைவியாக வரும் மீனாள் , சிலநேரம் அழுதுகொண்டும் சிலநேரம் கணவனிடம் சண்டையிட்டுக்கொண்டும் ஒரு கவர்ச்சிப்பாட்டும் பாடிவிட்டு செல்கிறார்

திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு, ஊரை விட்டு விரட்டப்படும் சாந்தனு, நடிக்கத்தெரியாமல் பலரிடம் வேலை செய்து பணக்காரராக உயர்கிறார்.

கல் குவாரி முதலாளியாக வரும் அழகம் பெருமாள் ஏமாந்த சோனகிரியாக இருக்கிறார்.

கல்குவாரி முதலாளியை ஏமாற்றும் குவாரி சூப்பர்வைசராக வரும் வடநாட்டு வில்லன் ஒருவர் ஆரம்ப காட்சியில் பெரிய மைனராகவும் இறுதியில் ஒரு வழிப்பறி திருடனாகவும் ஆகிறார்.

அம்மாவின் கைப்பேசி என்ற தலைப்பிற்காக - வயதான பெண் ஒருவருக்கு அவர் மகன் செல்போனே ஒன்றை அனுப்பி - ஒருகாட்சியில் அவருடன் பேசிவிட்டு மற்ற காட்சிகளில் தனது மாமன் மகளும், முன்னாள் காதலியும் தற்சமயம் திருமணம் ஆனவருமான ஒரு பெண்ணுடன் பேசி அழுது  கொண்டிருக்கிறார்கள்

அழகி, சொல்லமறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் போன்ற படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிஜம்.

அம்மாவின் கைப்பேசி - நாட் ரீச்சபிள்..