Pages

Tuesday, June 29, 2010

எரிபொருள் விலையேற்றமும், எதிர்கட்சிகளின் போலி வேடமும்...!!!

ஒவ்வொரு வருடமும் எந்த நிகழ்வுகள் நடந்தாலும் பெட்ரோல் டீசல் மற்று காஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மட்டும் மாறாத ஒன்று..வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறைகள் இந்த விலையேற்றம் இருக்கும்...மற்ற பொருட்களின் விலைகளை வருடத்திற்கு ஒருமுறை ஏற்றும் அரசு, இந்த எரிபொருள்களின் விலையை மட்டும், காய்கறிகளின் விலை போல அடிக்கடி ஏற்றி வருகிறது..

இதனால் பாதிக்கப்படுவது சாதாரண பொதுஜனம்தான்..சொல்லப்போனால் நடுத்தர வர்க்கத்தினர்தான்..பணம் படைத்தவனுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை....அடிமட்டத்தில் இருப்பவனுக்கும் அதைபற்றிய கவலை இல்லை..


இன்னும் சொல்லப்போனால் பெரிதும் பாதிக்கப்படும் நடுத்தர வர்கத்தினரும் அதைப்பற்றிய கவலை கொண்டதாகத் தெரியவில்லை..ஏனெனில் பெட்ரோல், டீசல் பங்குகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது, காஸ் சிலிண்டருக்கும் ஆர்டர்கள் குறைந்தபாடில்லை, சாலைகளிலும் அதிகரித்து வரும் வாகனங்களைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்..


இப்படி எவரும் கண்டுகொள்ளாத இந்த விலை ஏற்றைத்தை இங்குள்ள அரசியல்வியாதிகள் மட்டும் அதுவும் எதிர்கட்சிகள் மட்டும் வெறும் போராட்டம் போராட்டம் என்று ஒப்பாரி வைப்பதேன்?

பெட்ரோல் பங்குகள் பெரும்பாலும் இந்த அரசியல் வியாதிகளின் பினாமிகள் தான் வைத்து இருப்பார்கள்..

ஆனாலும் இந்த கபட நாடக வேஷதாரிகள் கூக்குரலிடுவதேன்?

இந்த வேஷதாரிகள் கூக்குரலிட்டு என்றைக்காவது இந்த எரிபொருட்களின் விலைகள் குறைந்துள்ளதா?

ஒவ்வொரு கட்சிக்காரனும் ஆளுக்கு ஐம்பது பேரைக் கூட்டிக்கொண்டு போராட்டம் மறியல் என்றால் அதை யார்தான் மதிப்பார்கள்? சொன்னால் அதுவும் மக்களுக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கிறதே தவிர உபயோகமாக இல்லை..

என்றைக்காவது இது போன்ற பொதுப் பிரச்சினைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி இருக்கின்றனவா? அப்படி ஒன்று கூடினாலாவது ஏதாவது பலன் கிடைக்கலாம் எனலாம்..ஆனால் இவன்களுக்கு? என்ன பலன்?

இப்படி மக்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் இவன்களுக்குதான் லாபம்..அதைவைத்துதான் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்.

ஏனென்றால் இந்த அரசியல் வியாதிகளுக்கும் ஒருமுறை எம்பி அல்லது எம் எல் ஏ பதவி கிடைத்துவிட்டால் போதும்..அப்புறம் இரயில் பயணம், விமானப் பயணம், பஸ் பயணம், தொலைபேசி போன்றவைகள் இலவசமாகி விடுகின்றன..நம்மிடம் ஓட்டுப் பிச்சை எடுத்து நமது வரிப்பணத்தையே கொள்ளையடிக்கும் இந்த பிணந்தின்னிகள் எப்படி நமது நலத்துக்காக பாடுபடும்..?


இதே காங்கிரஸ்காரன் எதிர்கட்சியாக இருந்தாலும் இந்த நிலைதான் ஏற்பட்டிருக்கும்...இந்த அரசியல்வியாதிகள் நடத்தும் ஆட்சி என்றைக்குமே பணக்காரர்களின் ஆட்சிதான்..

மக்களைக்கெடுக்கும், டிவி, சிகரெட், சாராயம், பான்பராக் போன்ற பொருட்கள் என்றைக்காவது இந்த அளவு விலையேற்றத்தை சந்தித்துண்டா..?

சிகரெட், சாராயம் பான்பராக் போன்ற கேடுகளை ஏன் இன்னும் தடை செய்யாமல் வைத்து இருக்கிறார்கள்?


அத்தியாவசியப் பொருட்களான, காய்கறிகள், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டே இருக்கின்றன.

தேவையற்ற டிவி, போன்ற பொருட்கள் ஒவ்வொரு வருடமும் விலை குறைந்தே வருகிறது..


இலவச அரிசி கொடுக்கிறான். இலவசமான மண்ணெண்ணெய் கொடுக்கிறானா?

இலவச டிவி கொடுத்தான். இலவச மின்சாரம் கொடுத்தானா?இலவச திருமணம் என்கிறான்..ஒரு குடும்பம் வளமாக வாழ வழி ஏற்படுத்தி கொடுக்கிறானா?

இப்படி தேவையற்ற இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறியாக்குவதோடு மட்டுமில்லாமல் குடித்து சீரழிவதற்காக சாராயக்கடைகளை ஆங்காங்கே திறந்து வைத்து அவன் கொடுத்த இலவசங்களை இப்படி பறித்துக் கொள்கிறான்..

பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களை பூச்சி மருந்தாகக் கூட உபயோகிக்கலாம் என்று கூக்குரலிட்ட இந்த அரசியல் திருடர்களும் பத்திரிக்கைகளும், சாராயம், சிகரெட் பான்பராக் போன்ற நேரடி விஷங்களை எதிர்த்து என்றைக்காவது போராட்டங்களை நடத்தியதுண்டா?


பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைத்து இதுபோன்ற விஷங்களுக்கு வரியை அதிகமதிகம் ஏற்றினால் என்ன?

இந்த நாய்களின் ஓலங்கள் கூச்சல்கள் எல்லாம் ஒட்டுபிச்சைக்கான ஒத்திகையே தவிர வேற எந்த நல்லெண்ணங்களும் கிடையாது..


இவைகளை அடையாளம்கண்டு வரும் தேர்தல்களில் புறக்கணித்தால் - இவைகள் திருந்தப்போவது இல்லை- ஆனால் நாம் கொஞ்சமாவது தப்பித்துக் கொள்ளலாம்..

Monday, June 21, 2010

செம்மொழி மாநாடும், தமிழர் பண்பாடும்

தமிழ் செம்மொழி மாநாடு தொடங்க இருக்கிறது...மாநாடு நடக்கவிருக்கும் கோயமுத்தூர் விழாக்கோலம் காணத்தொடங்கி விட்டது..பல்வேறு தமிழறிஞர்கள் கவிஞர்கள் பிரபலங்கள் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பிக்கப் போகிறார்கள்..இதற்க்கு சிறு சிறு எதிர்ப்புகள் இருந்தாலும், தமிழக அரசு தன் பல்வேறு யுக்தியால் இதை சிறப்புற நடத்திக்காட்டும் என்பதில் ஐயமில்லைதான்...

இந்த செம்மொழி மாநாட்டால் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன நன்மை ஏற்படப்போகுது என்பதுதான் இப்போதைய கேள்வி..தமிழக முதல்வருக்கு ஒரு சிறப்பாக அமையும்..ஐந்து நாட்கள் அவர் புகழ் பாடப்படும், எங்கும் தமிழ் என்ற முழக்கம் எழுப்பப்படும்..பிறகு? சரி அதை விடுவோம், தமிழர் பண்பாடு சிறப்புறுமா?

இத்தனைகாலங்களாக தமிழரின் பண்பாடு சிறப்பு என்று நாம் எதைக் கொண்டாடி வருகிறோம் தெரியுமா?

வள்ளுவரின் திருக்குறள்...இதுவரை அதை எழுதிய திருவள்ளுவர் யார் என்று தெரியாது..அவரை பற்றிய கதை ஒன்று..அவர் மனைவி வாசுகி கிணற்றில் நீர் வார்த்துக் கொண்டிருக்கும்போது இவர் தன் மனைவியை அழைத்தாராம்..அள்ளிக்கொண்டிருந்த வாளியைக் கயிறுடன் அப்படியே அவள் விட்டுவிட்டு கணவன் கூப்பிடுகிறாரே என்று ஓடினாளாம்...அந்த கயிறுடன் வாளி  அப்படியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டே இருந்ததாம்..

என்னை பொறுத்தவரை திருக்குறள் என்பது ஒரு தனி மனிதன் மட்டும் எழுதிய குறள் கிடையாது..அந்த கால கட்டத்தில் வாழ்ந்த பல்வேறு அறிஞர்கள் அவ்வப்போது எழுதி வைத்தவையே ஆகும்..உதாரணமாக ஒரு மனிதர் அறத்துப்பால் பற்றிய குறள் எழுதினால் இன்னொருவர் அதைப்போலவே காமத்துப்பால் எழுதி இருக்கலாம்..(இப்போது வரும் தமிழ் திரைப் படங்கலேயே சொல்லலாம்..மதுரை பேச்சு வழக்கில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப் போலவே மற்றவர்களும் படம் எடுப்பது)அப்புறம் கண்ணகி என்றோருவள் தன் கணவன் கோவலன் மாதவி என்ற விலை மாதுவுடன் உல்லாசம் அனுபவிக்க இவள் வழியனுப்பி வைப்பாளாம், அப்புறம் தன் கணவனை தவறான தீர்ப்பால் தண்டனை வழங்கிய பாண்டிய மன்னனை நீதி கேட்டால் அவன் தவறை உணர்ந்து மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வானாம்..இவளும் வெறி அடங்காமல் மதுரையை எரித்துவிடுவாளாம்..இவள் ஒரு உத்தமியாம்..

கணவரை பிற பெண்ணுடன் குலவ உதவி செய்பவளும், ஒருவன் செய்த தவறுக்கு ஊரையே எரிப்பவளும் எப்படி கற்புக்கரசியாவாள்? இந்த காலத்தில் அப்படி ஏதாவது ஒரு பெண் தன் கணவனை இன்னொரு பெண்ணிடம் இன்பம் அனுபவிக்க செய்பவளை நாம் எப்படி மதிப்போம்..?


இன்னொரு மன்னன்..பசுங்கன்று ஒன்றை தேர் ஏற்றிக் கொன்ற மகனை அந்த மன்னனே தேர் ஏற்றி கொன்று விடுவானாம்


இந்த மன்னனை போல ஒரு முட்டாள் இருப்பானா?


 
பாரி என்றொரு மன்னன்..இவன் முல்லைசெடி கீழே விழுந்து கிடக்கிறது என்று அதற்க்கு தனது தேரை வழங்கிடுவானாம்...

இவனை லூசு என்று சொல்லாமல் எப்படி அழைப்பது?

 
முருகன் என்றொரு தமிழ்க்கடவுள் முளைத்து மூணு இல்லை விடவில்லை அதற்குள் தாய் தந்தையுடன் பகைத்துக்கொண்டு தனி உலகம் படைக்கச் சென்று விடுவானாம்..

முதலில் கடவுளுக்கு குழந்தைகள் என்பதே ஏற்றுக்கொள்ளமுடியாத விஷயம்..அதிலும் கடவுளுக்குப் பிறந்தவன் இப்படி அறிவற்றவனாக இருப்பானா?அவ்வை என்றொரு கிழவி ஒரு கனியை - அது அதிசயக் கனியாம், அதை தின்றால் மரணம் வராதாம்..அதை அதியமான் என்றொரு மன்னனிடம் கொடுத்தாளாம்..அதை அவன் தனது பணியைவிட அவ்வையின் கவியாற்றும் பணியே தமிழ் நாட்டிற்கு தேவை என்று அவளிடமே திருப்பிக் கொடுத்தானாம்..

அதைதின்ற அவ்வை இன்றுவரை உயிரோடு இருக்கணுமே? -

எங்கே அந்த அவ்வை?இன்னும் இதுபோன்ற இப்படி ஏராளமான நம்பமுடியாத- அறிவுக்கு பொருந்தாத கட்டுக்கதைகளை வைத்தே நம் தமிழர் பண்பாடு தமிழர் பெருமை என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

வால்மீகி என்றொரு திருடன் எழுதிய கதையை அப்பட்டமாக காப்பியடித்து - அதில் வரும் கதாபாத்திரங்களை கடவுள்களாக மாற்றி எழுதிய கம்பன் என்றொருவன் எழுதிய கம்ப ராமாயணம் என்றொரு புருடாவை வைத்துகொண்டு கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்றொரு பம்மாத்து வேறு..

கட்டுத்தறி எங்காவது கவி பாடுமா? அப்படி காப்பி அடித்து கதை கவிதை எழுதுபவனை நாம் மதிப்போமா?


சினிமாவில் ஆபாசக்கூத்தடிப்பவனை தலைவன் என்றும் - விபச்சார அழகிகளை நடிகைகளை தலைவி என்று  வைத்து கொண்டாடுவது.

குஷ்பூ என்றொரு விபச்சார நடிகை திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்றொரு கேவலமான கருத்தை - சங்க கால இலக்கியங்களிலேயே இது போன்று சொல்லப்பட்டிருக்கிறது என்று வக்காலத்து வாங்கிய முதல்வர் அந்த நடிகையை தமிழை வளர்க்க தன் கட்சியிலேயே சேர்த்துகொண்டு தமிழ்த்தொண்டு புரிந்திருக்கிறார்..

இலங்கையில் மக்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு சக தமிழர்களையும் தலைவர்களையும் கொன்று வருகிறவர்களை ஆதரிப்பதற்காக நமது தாய் நாடான இந்தியாவுக்கே துரோகம் செய்வதை தமிழ் பற்று என்று கூறிக்கொள்வது....

தேநீர் கடைகள் முழுவதும் கேரளத்துக்காரர்கள்..


தமிழ்நாட்டில் மார்வாடி ஆக்கிரமித்துக்கொண்டு வட்டி கொடுத்து பிழைத்துக் கொண்டிருக்கிறான்

தமிழகத்தை ஆண்ட சில முன்னாள் முதல்வர்கள் தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களே இல்லை (உதாரணம் எம்.ஜி . ஆர். , ஜெயலலிதா )

தமிழனை ஒழிப்பதற்காக மும்பையில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் சிவா சேனா..அந்த கட்சிக்கு தமிழ்நாட்டிலேயே கிளைகள் வைத்து அதற்க்கு சில மிருகங்கள் உறுப்பினராக உள்ளன..

இப்படி வருகிறவனிடம் எல்லாம் முட்டாள்தனமாகவும், இளிச்ச வாய்த்தனமாகவும் ஏமாந்துவிட்டு "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" என்று சப்பைக்கட்டு..

ஏன் மற்ற மாநிலங்களிலோ, நாடுகளிலோ..மற்ற மாநிலங்களை சார்ந்த, மற்ற நாடுகளை சார்ந்த மக்கள் வசிக்கவில்லையா?

இந்தக்கால திரைப்படங்கள் அனைத்துமே விபச்சாரத்தை தூண்டுவதற்கும், நல்ல பண்பாட்டை சீரழிப்பதற்க்குமே உருவாக்கப்படுபவை..


இங்கே அந்த கேவலமான சினிமாவில் நடிக்க வரும் மானம்கெட்ட நடிகைகள் அனைவரும் பல்வேறு மாநிலங்களை சார்ந்தவர்களே..

இங்கே உள்ள ஆபாச பத்திரிக்கைகள் அனைத்தும் இந்த கேவலமான நடிகைகளை வைத்தே பிழைத்துக் கொண்டிருக்கின்றன.. அந்த ஆபாச நடிகைகளை வைத்துதான் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் தங்களை வளர்த்துக்கொள்ள முனைகின்றன..

அதிமுக என்ற கட்சி முற்றிலுமாக திரைபடங்களில் நடித்தவர்களை வைத்தே வளர்ந்த கட்சி..ஏன் ஏறக்குறைய ஐந்து முறை ஆட்சியையே பிடித்தது..

இவைகளைபோன்று ஏராளமான கூத்துக்களை தமிழ் மொழிப் பற்று..


 என்று பீற்றிகொண்டிருகிறோம்..

இந்த செம்மொழி மாநாட்டில் இந்த மூடத்தனங்கள் களையப்படுமா?


சரி எனக்கு வந்த ஒரு குறுந்தகவல்
அப்பா - முதல்வர்
மகன் - துணை முதல்வர்
இன்னொரு மகன் - மத்திய அமைச்சர்
மகள் - மாநிலங்களவை உறுப்பினர்
பேரன் - மத்திய அமைச்சர்
தமிழன் ? - இளிச்சவாயன்..!

வெல்க தமிழ்!! வாழ்க தமிழகம்..!!!

Saturday, June 19, 2010

ராவணன் - விமர்சனம்

மணிரத்தினம் எந்த ஒரு குப்பையை கொடுத்தாலும் அதை பாராட்டுவதற்கென்றே (அப்படி சொல்வதை பெருமை என்று நினைக்ககூடிய) ஒரு கூட்டம் இருந்து கொண்டுதானிருக்கிறது..

இருட்டிலே படம் எடுப்பது,

கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் இருவரையும் இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரமாக காட்டுவது..

மனிதர்கள் போக முடியாத லொகேஷன்கள்

இன்னும் கலாசாரத்தை சீரழிக்க கூடிய கதைகள்இதயத்தை திருடாதே படத்தில் கதாநாயகனை ஓடிப்போகலாமா என்று கதாநாயகி அழைப்பது ஒரு சிறு உதாரணம்..

அக்னிநட்சத்திரம் படத்தில் கதாநாயகன் மற்றும் கதா நாயகிகளின் தந்தைகள் ஒழுக்க கேடானவர்களாக இருப்பது

நாயகன் மற்றும் தளபதி படங்களில் ரவுடியை நல்லவனாக காட்டுவது..

அஞ்சலி படத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை பெற்றோர் வளர்க்க அஞ்சுவதாக காட்டியது..

குரு படத்தில் கூட அம்பானியின் சட்ட விரோத நடவடிக்கைகளை நியாயப் படுத்திக் காண்பித்தது..இப்படி எல்லாமே மக்களை முட்டாளாக்கும் படமாகவே இவன் எடுத்து வந்து இருக்கிறான்..இப்போது ராவணன்...

அடுத்தவன் மனைவியை அபகரித்து கொண்டு சென்று அவளை காதலிப்பதாகவும், அவளும் அவனது அன்புக்கு கட்டுப்படுவதாகவும் எடுத்திருப்பதாக விமர்சனங்களில் தெரிகிறது...சினிமா எனபது வியாபாரம்..அதில் ஒழுக்காகேடான காட்சிகளை புகுத்தி சம்பாதிக்க நினைப்பது இதுபோன்ற ஆபாச வியாபாரிகளின் தந்திரம்..அவர்களுக்கு பெண் ஒரு ஆபாசப் பொருள்..அது அவர்களது தாயாகட்டும், மகளாகட்டும், மனைவியாகட்டும்,, அவர்களுக்குத் தேவை காசுதான்..இதுபோன்ற குப்பைகளை வரவேற்பது சமூக சீரழிவிற்குதான் வழிவகுக்கும் என்பதை நாம் உணர்ந்தால் எல்லாருக்கும் நல்லது..சரி சென்ற சனிக்கிழமை (18/06/2010) இரண்டு குப்பை படங்களை பார்க்க நேர்ந்தது..

ஒன்று கே டிவியில் முத்து என்கிற மட்டமான படம்..

இன்னொன்று, கலைஞர் டிவியில் குசேலன் என்கிற மிக மட்டமான படம்..முத்துவில் நடிகை மீனா ரஜினியை பார்த்து "இரிக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ" என்பதற்கு அர்த்தம் கல்லிப்பட்டிக்கு வழி எது என்ற அர்த்தம் என்று சொல்லி விட்டிருப்பாள்..

அந்த லூசு ஒரு பெண்ணிடம் அதைப் போய் கேட்கும்..அவளிடம் அடி வாங்கிய பிறகாவது அது ஒரு தப்பான வார்த்தை என்று புரிந்து கொள்ள வேண்டாமா..மீண்டும் மீண்டும் பலரிடம் கேட்டு அடிவாங்கி தான் ஒரு பைத்தியம் என்பதை நிருபிக்கும்..பத்தாதற்கு இன்னொரு மெண்டல் சாமியார் ஒருவன் அவன் தந்தையாம் . ரெண்டு மூன்று காட்சிகளில்  தோன்றி ஏதோ உளறிவிட்டு போவான். அதற்க்கு என்ன அர்த்தம் அவன் எதற்கு வருகிறான் என்றே புரியாது. மற்றபடி படம் முழுவது குப்பைகளே. மீனா என்றொரு சிறுமியை இரு கிழவர்கள் காதலிப்பதுதான் படத்தின் முழுக்கதை.!..அப்புறம் குசேலன்..இதில் வரும் காட்சிகள் போன்று தமிழக மக்களை கேவலப்படுத்தும் காட்சிகள் எந்த ஒரு படத்திலும் வந்ததில்லை..

ஒரு கூத்தாடி ஒரு ஊருக்கு வந்ததற்காக அந்த ஊர் மக்களே எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இந்த லூஸை பார்பதற்காக அலைவதுபோல் காட்டி இருப்பது மகா கொடுமை..பலபேருடன் அலையும் நயன்தார என்பவள் அவிழ்த்து போட்டு ஆடும் ஒரு பாடல் காட்சியில் துணை நடிகர்கள் எல்லாம் 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியரே..இன்னும் லூசு நடிகரின் நண்பரான சலூன் கடைக்காரர் அந்த நடிகரை தன் நண்பன் என்று சொல்லிவிடுவான்..அதை நிரூபிக்காததால் அந்த ஊரே அவனை ஒதுக்கி வைப்பது போலவும், அவன் குழந்தைகள் கூட அவனை வெறுப்பது போல காட்டுவது கொடுமை..அப்புறம் ஒரு காமெடி என்று ஒரு ஆபாசகுப்பை...

இந்த நடிகனுடன் போட்டோ எடுத்து வந்தால்தான் கணவனுடன் படுப்பேன் என்று சொல்லும் மனைவியும் அதை ஊர் முழுவதும் சொல்லி அந்த காமெடிக்காரன் போட்டோ எடுத்து ஏதோ ஒரு உன்னத லட்சியத்தை அடைந்தவன் போல காட்டுவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..இதற்கு இங்குள்ள ஆபாசப்பத்திரிக்கைகளும் இலவச விளம்பரம் கொடுத்து துணைபோகின்றன ...

Friday, June 18, 2010

திரும்பவரும் முதியோர் கட்சி..

எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் அதிகமாக இடைத்தேர்தல்கள் நடைபெற்று வந்துள்ளது..அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சியான தி மு க வே வென்று வந்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள்..ஒன்று ஆளும்கட்சி அதிக அளவில் பணத்தையும் தனது அதிகார பலத்தையும் பிரயோகித்தது..இரண்டாவது எதிர்கட்சியான அ தி மு க தலைமையின் அகம்பாவமான மனோபாவமும் தோல்வியைக் கண்டு துவண்டு போகும் தன்மையும்..


சமீப காலமாக அதிமுக விலிருந்து திமுக விற்கு வரும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகமாகிவுள்ளது..இதற்க்கு அவர்கள் பல்வேறு காரணங்கள் சொன்னாலும் முக்கியமான காரணம் சம்பாதிப்பதுதான்..ஒவ்வொரு மாதம்மும் ஜெயலலிதா தன் தோழியுடன் கொடநாடு சென்று போய் படுத்து விடுவதாலும், தொண்டர்களையும், மற்றவர்களையும் மதிக்காத போக்கினாலும், அதிமுக ஏறக்குறைய தேய்ந்து வரும் ஒரு கட்சியாகிவிட்டது..அதிமுகவில் முக்கிய பிரமுகர்கலேல்லாம் திமுகவிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.. ஒரே ஒரு மானம்கெட்ட அடிமை மட்டும் அவளுடன் இருக்கிறது..அந்த வைக்கோலைபற்றி பேசுவதால் யாருக்கும் எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை..

அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் எல்லா சுகங்களையும் அனுபவித்தவர்கள் எல்லாம் இப்போது பதவியோ அதிகாரமோ இல்லமால் மதிப்பிழந்து கிடந்து, தமது செல்வாக்கைப் பெறுவதற்காக இப்போது திமுக விற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்...இவர்களின் நோக்கம் சம்பாதிப்பதே..ஆனாலும் அவர்கள் சுறுசுறுப்பாய் பணியாற்றிய காலங்களை இழந்து, தமது வயோதிக காலத்தில் வருவதால் அவர்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைப்பது சந்தேகமே..

ஆனாலும் அவர்களது வயோதிக காலத்தில், ஒரு ஆதரவளிக்கும் முதியோர் இல்லமாக  திமுக இருப்பதால் சற்று ஆறுதல்தான் அடையலாம்..

திராவிட முன்னேற்ற கழகத்தை - திரும்பவரும் முதியோர்கள் கட்சி என்றுகூட அழைக்கலாம்தானே?

Monday, June 14, 2010

ஏவல் நாய்களும் குரைக்கும் நாய்களும்...!

அமைதிப்பூங்கா அமைதிப்பூங்கா என்று நாம் ஒருபக்கம் பீற்றிகொண்டிருக்கிறோம்..அதைக்குலைப்பதற்கு என்றே சில வெறிநாய்கள் அலைகின்றன..


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னைக்கு வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் வண்டியை தகர்ப்பதற்காக - தண்டவாளத்தை குண்டுவைத்து தகர்த்திருக்கின்றன அந்த வெறி பிடித்த ஏவல் நாய்கள்.

ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கின்றார்கள்.

இந்த சம்பவத்தை, இந்தியாவிற்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்ததாக அந்த வெறிநாய்கள் நோட்டீசு மூலம் அறிவித்திருக்கின்றன..அட கூலிக்கு மாரடிக்கும் கேவலம்புடிச்ச நாய்களா.. ராஜ பக்ஷேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கணும் என்றால் அவன் நாட்டுக்கு போங்கடா நாய்களா...நீங்களெல்லாம் ஒழுங்கான பிறவிகளாக இருந்தால் தைரியம் இருந்தால் அங்கே போய் உன் வீரத்தைகாட்டுங்கடா பன்னாடைங்களா...

தமிழனை கொல்றான் தமிழனைக் கொல்றான்னு ஒப்பாரிவைக்கும் நாய்களே...இந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ல பயணம் பண்ணவன் எல்லாம் சிங்களவனா?...ராஜபக்ஷே சொந்தக்காரனா...? இதுலேர்ந்து தெரியுதா இந்த நாய்களின் சுயரூபம் ? இவைகள் கூலிக்கு மாரடிக்கும் ஏவல் நாய்கள் என்று?

விடுதலைப் புலிகள் என்று மிருகங்களை அடையாளமாக வைத்திருக்கும் இந்த மிருகங்களிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்?

இவர்களுக்கு ஆதரவு தந்த தமிழக மக்களுக்கு இந்த மிருகங்களின் நன்றி இப்படித்தானிருக்கும்...

அவைகளுக்காக இங்கே குரைத்துக்கொண்டிருக்கும் மரம் வெட்டிகளும், வைக்கோல்களும், நெடுமரங்கங்கலும் இந்த சம்பவத்திருக்கு பிறகு தமது அனுதாபங்களை தெரிவித்தோ இந்த மிருகங்களுக்கு எதிர்ப்பு  தெரிவித்தோ குரைக்கவில்லை...அப்படி குரைத்தால் இங்குள்ள அந்த குரைக்கும் நாய்களுக்கு வருமானம் போய்விடும்..

இதுவே வேறொரு இயக்கம் இந்த செயலை செய்திருந்தால் இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் எப்படியெல்லாம் குரைத்து இருக்கும்? மும்பையில் ஏராளமான மக்களைக் கொன்றான் அஜ்மல் கசாப் என்பவனை எப்படி எல்லாம் திட்டினார்கள்...அவன் வெளிநாட்டுக்காரன்...அவனிடம் நம் நாட்டின் மீது மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது..ஆனால் நமது நாட்டில் பிழைத்துக்கொண்டு, நமது நாட்டில் ஒட்டுபிச்சை எடுத்துக்கொண்டு, இங்கே எல்லா சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு, இந்த தேச துரோக நாய்களைப் பற்றி இங்குள்ள ஆபாசபத்திரிக்கைகள் மட்டுமல்ல, அரசும் ஏன் கண்டு கொள்ளவில்லை?

தனது மகள் கர்ப்பமானால் கூட பாகிஸ்தானை குற்றம் சாட்டும் அத்வானி என்கிற அரசியல் நாயும் ஆர் எஸ் எஸ் நாய்களும் இதைப்பற்றி ஒன்றும் குரைக்கவில்லை..

வைக்கோ, ராமதாசு, நெடுமாறன் போன்ற தேச துரோகிகள் இந்த மிருகங்களுக்காக ஓலமிடுவதால் தான் இவ்வளவு அராஜகமும் செய்ய முடிகிறது..


விடுதலைப் புலிகள் என்ற மிருகங்களிடம் இரந்து பணம்பெற்று, சொந்த நாட்டுக்கு துரோகம் செய்து நம் நாட்டு மக்களை கொன்று குவிக்க துணை போகும் இந்த கூலிக்கு மாரடிக்கும் ஏவல் நாய்களையும், குரைக்கும்  நாய்களையும் மக்களும் அரசும் அடையாளம் கண்டு கடுமையாக தண்டிக்க வேண்டும்..

Friday, June 11, 2010

கிறுக்கல்கள்....

நீண்ட நாட்களாகிவிட்டது பதிவிட்டு...பல்வேறு வேலைகள், கமிட்மெண்ட்கள்....பத்திரிகைகளில் வரும் செய்திகளை திட்டி எழுதியே பழகியும் விட்டதால்...- பத்திரிக்கைகளை படித்தாலும் மனதில் பதியாததால்...- எதையும் திட்டியும் எழுதமுடிவதில்லை...!. சினிமாக்களும் பார்த்து நாட்களாகி விட்டது..அதனால் விமர்சனமும் எழுதமுடிவதில்லை... இனிமேல் எனது பாணியை மாற்றவே முயற்ச்சிக்கிறேன்..

பதிவுலகைப் பொறுத்தவரை, கிறுக்கல்களுக்கே ஆதரவு அதிகம்...இந்தியனாக இருந்து இந்தியாவை கேவலமாகப் பேசவேண்டும், - இந்தியாவின் ஒரிஜினல் எதிரி விடுதலைபுலிகளுக்கு ஆதரித்து தேச துரோகம் செய்யவேண்டும், ஏழைகள் எல்லாம் நல்லவர்கள்..பணம் படைத்தவர்கள் எல்லாம் கொடுமையானவர்கள் என்றொரு மூடத்தனமான எண்ணம் இருக்கவேண்டும்..இப்படி ஏராளமான மூடத்தனங்களை பின்பற்றினால் சிறந்த பதிவராகலாம்...அதிக ஓட்டுக்களைப் பெறலாம்..எல்லோரும் சொல்லும் ஒரு பழமொழியை இதற்கும் உதாரணமாகச் சொல்லவேண்டும்...ஆடையில்லாத ஊரில் கோவணம் கட்டியவனைப் பைத்தியக்காரன் என்பார்களாம்..


நான் பைத்தியக்காரனாக இருக்க விரும்பவில்லை..ஆனால்..விடுதலைப்புலிக்கு வக்காலத்துவாங்கும் தேச துரோக நாய்களை அடையாளம் காட்ட விரும்புகிறேன்..இனி தொடர்வேன்..