Pages

Friday, January 6, 2012

கொலையை கண்டித்து கொலை செய்யும் கொலைகாரர்கள்..



ஒரு கொலையை கண்டித்து பல கொலைகள் செய்யும் அவலமும் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கமுடியாத, கையாலாகாத  சட்டமும் நமது நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது..
நேற்று சென்னை நகரத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டி, சட்டத்தின் அவல நிலையைத்தான் காட்டுகிறது.
ராஜீவ்காந்தி கொலையில் தேடப்பட்டு வந்த முதல் குற்றவாளி பிரபாகரன் புகைப்படத்துடன், விடுதலைப்புலிகளுக்காக - வாழ வக்கின்றி கோழைத்தனமாக தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமார், வாசுகி போன்ற விடுதலைப்புலிகளை வீரர்கள் என்று வர்ணித்து ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டி அமைத்தவர்களை இன்னும் கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது கேவலத்திலும் கேவலம்.
உனக்கு தைரியமிருந்தால் ஒரு சிங்கள ராணுவ வீரனை கொன்றுவிட்டு செத்துப்போயிருக்கவேண்டும்..அதை விடுத்து, இந்தியாவில் தனது கோழைத்தனத்தை வீரம் என்று பேர் வாங்குவதற்காக தற்கொலை செய்து கொண்டவர்களை ஊக்குவிக்கும் ஒவ்வொரு பயங்கரவாதியும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே..
இந்திய குற்றவியல் சட்டப்படி, தற்கொலை முயற்ச்சி  செய்வது ஒரு தண்டனைக்குரிய குற்றம். அப்படி தற்கொலை செய்பவர்களை மாவீரனாக சித்தரித்து - விடுதலைப்புலிகளிடம் காசு பெற்று தற்கொலை செய்வதற்கு நிதி உதவி செய்து, தற்கொலைகளை தூண்டும் மாபெரும் குற்றத்தை இங்குள்ள சில தேச விரோதிகள் - விடுதலைப்புலிகளின் அடிவருடிகள் செய்து வருகின்றன. அதற்க்கு தமிழ்பற்று வியாபார போர்வையை போர்த்திக்கொண்டு செய்யும் இந்த தேச துரோகிகள் நாடு கடத்தப்படவேண்டியவர்கள்..

இதேமாதிரிதான், தவறான சிகிச்சை வழங்கியதால், தனது மனைவி இருந்ததற்கு காரணம் என்று டாக்டர் சேது லக்ஷ்மி என்பவரை ஒரு வெறியன் கொன்றிருக்கிறான். அதற்க்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..
ஆனால், இதை காரணம் காட்டி, தமிழகத்தில் மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திருப்பது உச்சக்கட்ட பயங்கரவாதம். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதினால் எத்தனை உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் எனபது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
இந்த கொலைக்காக வேலை நிறுத்தம் என்ற பெயரில் இவர்கள் செய்திருக்கும் இந்த மறைமுக கொலைகளுக்கு பழி  வாங்க என்று யாராவது புறப்பட்டால், தமிழ்நாட்டில் டாக்டர்களுக்கு பஞ்சம்தான் ஏற்படும்..

இந்த முட்டாள்தனமான செயலை செய்த மருத்துவர்கள்  அனைவரும் சட்டத்தின் முன் குற்றவாளிகளே..சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே.


0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?