Pages

Friday, December 30, 2011

இவங்களுக்கெல்லாம் கிறுக்கா பிடித்திருக்கிறது?


வார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள் எல்லாம் ஆபாச இதழ்கள் என்று ஒதுக்கி விட்டாயிற்று..இருந்து என் கெட்ட நேரம் சென்ற வார குங்குமம் வாங்கவேண்டியதாகி விட்டது..
பள்ளிகாலங்களில்  குங்குமம் வார இதழ் வாசகன்தான் நான்..அப்போது கலைஞரின் "சங்கத்தமிழ்" க்காக என்று அந்த புத்தகத்தை படிக்க வேண்டியிருந்தது..அந்த நேரத்தில் கா.நா.சு என்ற இலக்கிய விமர்சகரின் விமர்சனங்கள், கி.வ. ரா என்ற இலக்கிய எழுத்தாளரின் கதைகள், இன்னும் தெலுங்க எழுத்தாளர், எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில் லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, போன்றோர்களின் எழுத்துக்களை ரசித்திருக்கிறேன்..

நாளடைவில், குமுதம், ஆனந்த  விகடன் போன்ற ஆபாச  சினிமா பத்திரிக்கைகளுக்கு போட்டியாக குங்குமமும் ஒரு ஆபாச சினிமா பத்திரிக்கையாக உருமாரியதன் காரணமாக, அந்த பத்திரிகையையும் நிறுத்த வேண்டியதாயிற்று..இவ்வளவுக்கும், அப்பத்திரிக்கையின் போது மேலாளராக அப்போது இருந்த - இலவசங்களை இணைத்து பத்த்ரிக்கை விற்றார்களே - அந்த நேரத்தில் பொது மேலாளராக இருந்தவர் என் ஆரம்பகால -"கிளாஸ்" மெட்..இப்போது அந்த பழக்கத்தையும் விட்டோழித்தத்தில் அந்த நண்பனின் தொடர்பும் போயிற்று..அப்பத்திரிக்கையின் தலைமை ஓவியர் எனது நெருங்கிய நண்பர்...சரி விஷயம் அதுவல்ல..

சென்ற வார குங்குமம் அட்டைப்படத்தில் போட்டிருந்த ஒரு செய்திதான் தமிழகம் எவ்வளவு கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது..ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட முல்லை பெரியாறு பிரச்சினை தீர வேண்டுமென்றால் "ரஜினிகாந்த் தமிழகத்தின் அம்பாசிடராக வரவேண்டும்" என்று யாரோ ஒரு மத வெறியன் சொன்னதை பெரிதாகப்போட்டு ஒத்தூதி இருக்கும் கேவலமான செயலை குங்குமம் செய்திருக்கிறது..தமிழக முதலமைச்சர், கேரளா முதலமைச்சர் , அரசியல் வியாபாரிகள், மற்றும் தமிழ் பற்று வியாபாரிகளின் - போன்றோரின் அரசியல் வாழ்விற்காக இரு தரப்பினர்களின் உணர்வுகளையும் தூண்டி - குளிர்காயும் இந்த விசயத்த்தில் ஒரு நடிகன் என்ன கிழித்து விடமுடியும்?
அது  போக இந்தியாவை உலகளவில் முன்னேற்ற விளையாட்டுத்துறை அம்பாசிடராகவும் அந்த கூத்தாடியை நியமிக்க வேண்டும் என்று உளறி இருப்பவனை நாடு கடத்தவேண்டும் என்று செய்தி வெளியிடாமல் அந்த முட்டாளின் பேட்டியை வெளியிட்டு காசு பாத்திருக்கிறது குங்குமம்.

தன அடுத்த படத்திலே நடிக்க முடியாமல் கிடக்கும் ரஜினி தமிழக மக்களின் பிரச்சினையில் என்ன கிழித்து விடமுடியும்?
இப்படி எதற்க்கெடுத்தாலும் சினிமாககூத்தாடிகளின் அடிவருடும் தமிழன் - தமிழ் தமிழ் என்று கூக்குரலிடுவது கேவலமாகத்தான் இருக்கிறது.

முல்லைப்பெரியாறு விசயத்தில் தொடர்பு இல்லாத இங்கே வசிக்கும்  கேரலாக்காரர்களின்   கடைகளை  உடைத்து திருடி தமது வீரத்தை காட்டும் மாவீரன் தமிழனுக்கு - இதற்க்கு முன்பும் இப்போதும் தாம் கேரளக்காரனிடம் தொடர்ந்து எமாற்றப்பட்டுகொண்டிருப்பது தெரியாமலிருப்பதுதான் மாபெரும் நகைச்சுவை.

முழு கிளாசில், ஒரு ஸ்பூன் பாலும்,  பல மடங்கு தண்ணீரும் - சிறுது சர்க்கரையும் போட்டு  அரைக்கிளாசுக்க்கும் குறைவாக தேநீர் தந்து விட்டு அதற்க்கு பெயர் சிங்கிள் டீயாம். முழு கிளாசுக்கு பெயர் கப் டீயாம்..இன்னும் மசாலா டீ, ஸ்பெசல் டீ, இஞ்சி டீ, டைமன் டீ, சாதா டீ என்று ஒரே கலவையை பல பெயரில் பல விலைகளில் விற்பவனிடம் - சந்தோசமாக ஏமாந்து விட்டு, இன்று ஏதோ தமிழ் பற்று வியாபாரிகளின் பிழைப்புக்காக மூடத்தனமான செயல்களில் ஈடுபடும் இவங்களுக்கெல்லாம் கிறுக்குதான் பிடித்திருக்கிறது..
நாளைக்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாட - சாராயக்கடைகளுக்கும், நட்சத்திர ஓட்டல்களுக்கும் படை எடுக்கபோகிறான் "வீரத்தமிழன்."

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச நடிகைகளின் அந்தரங்களை தரிசித்து பன்னிரண்டு மணிக்கு "ஹேப்பி நியு இயர்" சொல்லி தம் புது வாழ்வை தொடங்க இருக்கிறான் "சிங்கத்தமிழன்."

"வொய் திஸ் கொலைவெறி" என்று போதையில் பாடி மகிழப்போகிறான் "பச்சைத்தமிழன்"  

கடந்த வருடம் எத்தனை தமிழ்படங்கள் வெளியாகின, எத்தனை வெற்றி பெற்றன, எவ்வளவு கலெக்சன் ஆனது போன்ற அதி முக்கிய  புள்ளி விபரங்களை -ஆபாச பத்திரிக்கைகளில் பார்த்தும்,  வலைத்தளங்களில் எழுதியும், படித்தும், புளங்காகிதம் அடையப்போகிறான் "மறத்தமிழன்"

முல்லைப்பெரியாருக்கு புத்தாண்டு தினத்தில் ஒன்றும் ஆகாது..மேக் அப் போட்டு போராட்டம் நடத்தும் அரசியல் பயங்கரவாதிகளும் நாளைக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி யடைந்து கொள்வான் "சங்கத்தமிழன்".

வாழ்க தமிழ் வெல்க தமிழ்..
                                            wish you happy new year..3 comments :

selvam said...

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

Barari said...

மலையாளிகளிடம் டீ குடித்த்து மட்டுமா ? அவர்களிடம் ஆட்சியை அல்லவா தூக்கி கொடுத்தான் இந்த வீர தமிழன்.

பித்தனின் வாக்கு said...

correctly said. nice

valka thamilan

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?