Pages

Saturday, December 17, 2011

தமிழின வெறி...! - ஒரு நிலையான வியாபாரம்!


தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் நிரந்தரமான சில தலைப்புகளை எப்போதும் போட்டுக்கொள்ளலாம்..அந்த வகையில் "தமிழர்களுக்கு அநீதி..மத்திய அரசின் மெத்தனபோக்கு " என்ற தலைப்பை நிரந்தரமாக வைத்துக்கொண்டு - அந்த அந்த காலகட்டத்துக்கு தேவையானபோது இந்த தலைப்பை பயன்படுத்திக்கொண்டு, தமிழின வெறியை கிளப்பி வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றன.

மக்களிடம், தமது சேவைகளையும், பொதுநலத் தொண்டுகளையும் சொல்லி வோட்டுக்கேட்க வக்கற்ற அரசியல் வியாபாரிகளும் தமிழ்பற்று வியாபாரத்தை கையில் எடுத்துக்கொண்டு- மக்களை உசுப்பெற்றிக்கொண்டு தம் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கின்றன.

திராவிடக்கட்சிகளுக்கு ஆரம்பகாலத்தில் தம்மை தமிழ்நாட்டில் நிலை நிறுத்திக்கொள்ள உதவியாக இருந்த :இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் - பிரதிபலிப்புதான் தமிழின வெறி..

அதை தொடர்ந்து சினிமா கூத்தாடிகளின் மூலம் தமிழ்நாட்டு மக்களை மூளை மலுங்கசெய்து, இன்றுவரை அவனை சினிமா மயக்கத்திலும், சின்னத்திரைகளின் ஆதிக்கத்திலும், சாராய போதையிலுமே வைத்திக்கொண்டு, அவனை சிந்திக்கவிடாமல் செய்து, அவ்வப்போது தமிழ் பற்று வியாபாரத்தின் மூலம் அவனுக்கு உசுப்பேற்றி, தம் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கின்றன ..
 
எங்கோ எதற்கோ நடக்கும் தவறுகளுக்கு இந்தியாவை குற்றம் சாற்றுவது மட்டுமல்ல, இங்குள்ள மக்களுக்கும், பொருட்களுக்கும் சேதம் உண்டாக்கும் புத்தி தமிழனுக்கே உள்ள ஒரு அறிய புத்தி என்று தைரியமாக சொல்லலாம்..


விடுதலைப்புலிகள் அவர்கள் இருக்கும் இலங்கையில் தாக்கப்பட்டால் இந்தியாவை தலையீடு என்று கூக்கரளிட்டுவிட்டு, தலையிட்ட காரணத்தினாலேயே ராஜீவ் காந்தியை கொன்ற அந்த கொடுங்கோலர்களுக்கும் வக்காலத்து வாங்கும் தேச துரோகிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர்.

விடுதலைப்புலிகளால் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட இழப்புகளை அறிவுள்ள எவரும் ஏற்றுகொள்வார்கள்..ஆனால் அவர்களிடம் இரந்து பிழைக்கும் தேச துரோகிகள்தான் ஒவ்வொரு  இணையதளங்கள், புத்தகங்களை மேற்கோள் காட்டி, நம் நாட்டு இழப்புகளை புறந்தள்ளி, அவர்களுக்கு வக்காலத்து வாங்குவார்கள்..


- சி பி ஐ பல வருடங்கள் விசாரணை செய்து, உயர்நீதி மன்றம் தண்டனை வழங்கி, உச்ச நீதி மன்றம் உறுதி செய்து, குடியரசு தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பயங்கரவாதிகளை கூட உத்தமர்கள் என்று ஊளையிடும் பயங்கரவாதிகள், அந்த மூன்று கொலை காரர்களை காப்பாற்றுவதர்காக, உலகத்தில் உள்ள அனைத்து மரணதண்டனையும் ரத்து செய்யப்படவேண்டும், ராஜ பக்ஷே மட்டும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கிறுக்குத்தனமாக உளறுவது ஏன்? காரணம் தமிழ்பற்று வியாபாரம்தான்.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எத்தனையோ மக்கள் பிரச்சினைகளிருக்க,  பயங்கரவாதிகளுக்காக தீக்குளிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று இந்த தேச துரோகிகள் நிதிவுதவி வழங்கி தற்கொலைகளை ஊக்குவிப்பதன் காரணம் என்ன? தமிழ்பற்று வியாபாரம்தான்.

அந்த வகையில் இன்று சமீபத்திய தமிழ்பற்று வியாபாரம்தான் "முல்லைபெரியாறு" போராட்டம்..


இது இரு அரசாங்கமும் சேர்ந்து கூடி பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை, தமிழன் மலையாளி என்று தமிழ் பற்று வியாபாரிகளும், ஆபாச பத்திரிக்கைகளும் வெறியை கிளப்புவது ஏன்?

இங்கே கேரளாகாரன் கடையை உடைத்து விட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடுமா?

இந்த கடைகளை உடைப்பவன் தமிழ் பற்றலோ, மக்கள் நலத்துக்காகவா இப்படி செய்கிறான்? அவன் திருடுவதற்காக ரவுடித்தனம் செய்துவிட்டு இதை தமிழ் பற்று என்று தப்பித்துகொள்வதும், அதற்கு அரசாங்கத்தை குறை கூறுவதும் என்ன ஒரு தமிழ் பண்பு?சரி..

ஒருத்தன் ஒருவனிடம் தகராறு செய்தால் தவறு யாரிடம் என்று ஆராயாலாம்...

ஆனால் ஒருத்தனே எல்லாரிடமும் - அல்லது ஒருத்தனிடமே எல்லாரும் தகராறு செய்தால்...? அப்போ....தவறு யாரிடம் என்று சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்..

இலங்கையில் தமிழன் தாக்கப்படுகிறான்,

மலேசியாவில் தமிழன் தாக்கப்படுகிறான்

கர்நாடகாவில் தமிழன் தாக்கபடுகிறான்

கேரளாவில் தமிழன் தாக்கப்படுகிறான்

ஆந்திராவில் தமிழன் தாக்கப்படுகிறான் என்றால் ..தவறு யாரிடம்..?

வெறும் புனைக்கதைகளையும், காலத்துக்கு ஒவ்வாத  தற்பெருமைகளையும் விட்டு விட்டு தமிழன் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளட்டும்..

இனப்பெருமை கொள்பவன் சோம்பேறி..

சோம்பேறி உழைக்க மாட்டான்..

தன தவறுகளை மற்றவனிடம் சாட்டி இன வெறி கொள்வதை நிறுத்திவிட்டு தமிழன் உருப்படுகிற வழியை காணட்டும்...!


1 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?