Pages

Tuesday, December 13, 2011

சுப்பிரமணியன் டிஸ்மிஸ்


இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் ‘ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்’ என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.




கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.



சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.



இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது

நன்றி - தட்ஸ் தமிழ் .காம்



1 comments :

veligalukkuappaal said...

அமெரிக்க அடிமைக்கு அமெரிக்காவிலேயேஆப்பா?... வீட்லயிருந்து பொறப்பட்டு திரும்புறதுக்குள்ள எவ்வ்வ்வளவு சிக்கல்கள சந்திக்க வேண்டியிருக்கு!...இக்பால்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?