Pages

Tuesday, December 20, 2011

மம்பட்டியான் - காலத்துக்கு பொருந்தாத கதை!






1980 - களில் வெளிவந்த மலையூர் மம்பட்டியான் கதையை, தூசுதட்டி தன் மகனுக்காக தந்தை இயக்கி இருக்கும் மம்பட்டியான் - தலைவலிக்கு 100 % கேரண்டி..!



அந்த படத்தின் இயக்குனர் ராஜசேகரின் இயக்கத்திற்கும் இந்த படத்தின் இயக்குனர் தியாகராஜனின் இயக்கத்திற்கும் வேறுபாடு ஆறு வித்தியாசங்கள அல்ல..நூறு வித்தியாசங்கள்..



தனயன்களின் மார்கெட்டை தூக்கி நிறுத்துவதர்க்காக இந்த தந்தைமார்கள் பண்ணும் அட்டூழியம் சினிமாக்களில் ரொம்பவே அதிகம்..

தேவையில்லாத பில்டப் காட்சிகளால் படம் மிக செயற்கைத்தனமாக சொதப்புகிறது..

பழைய தியாகராஜனின் தோற்றத்திற்கு அந்த முரட்டுத்தனமான பாத்திரம் பொருந்திய அளவுக்கு இந்த படத்தின் நாயகனுக்கு சிறிதும் பொருந்தவில்லை..படத்தில் நடித்தவர்கள் அனைவரும் ஏதோ வந்தோமோ போனோமோ என்றிருப்பதுபோல தெரிகிறது..



பழைய மலையூர் மம்பட்டியான் படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் அழுத்தம் தெரிந்தது..ஆனால் தன் மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே எடுக்கக்கப்பட்ட இந்த படத்தில் அனைத்தும் சொதப்பலாகவே அமைந்திருப்பது நகைச்சுவைக்குரியது..

அரசியல் புயலில் காணாமல் போன வைகைபுயல் வடிவேலுவின் நகைச்சுவை வெறுப்பேற்றவே செய்கிறது..

கவர்ச்சி நடிகையின் பாத்திரம் அருவருப்பூட்டுகிறது..

 ஒரு தரமற்ற படம் இது..

மேலும் கொள்ளைக்காரர்களை ஆதர்சன நாயகனாக்கும் ஒரு பொறுப்பற்ற நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும்  - இந்த காலத்துக்கு பொருந்தாத கதையினால் ஏதோ தெருக்கூத்து பார்த்த எண்ணமே மேலோங்குகிறது..


2 comments :

அலைகள் said...

மேலும் கொள்ளைக்காரர்களை ஆதர்சன நாயகனாக்கும் ஒரு பொறுப்பற்ற நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் - இந்த காலத்துக்கு பொருந்தாத கதையினால் ஏதோ தெருக்கூத்து பார்த்த எண்ணமே மேலோங்குகிறது..

vels-erode said...

அதான் நாங்க பாக்கல.....நீங்க எதுக்கு அவசர அவசரமா போனீங்கலாம்?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?