Pages

Tuesday, January 17, 2012

நண்பன் - சரக்கு தீர்ந்தவர்களின் சரணாலயம்.ப்ளாக் புதிதாக எழுத ஆரம்பித்த கால கட்டங்களில் மளமளவென்று எழுதி தீர்த்து தள்ளுவோம்..ஒரு காலகட்டத்தில், தினமும் என்றிருந்தது, வாரத்திருக்கொரு பதிவு என்று மாறும்,  பின் மாதம் ஒன்று என்று குறைத்துகொள்வோம், சில நேரங்களில் சப்ஜெக்டே தோன்றாது..ஏதாவது ஒரு பதிவை காப்பி பேஸ்ட் செய்து பதிவு செய்து ஓட்டுவோம்..
அப்படித்தான்...

ஹிந்தியில் தர்மேந்திரா நடித்த "ஜுகுனு" என்ற படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க "குரு" என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது..அந்த படத்தின் அப்பட்டமான தழுவல்தான் ஷங்கரின் முதல் படமான "ஜென்டில் மென்" ..முதல்பதிவே..சாரி முதல் படமே காப்பி அண்ட் பேஸ்ட் செய்த ஷங்கர், தொடர்ந்து ஊழல் பற்றிய கதைகளையே எடுத்து காலத்தை ஓட்டினார்...முதல்வன் படம் வரை அவரிடம் இருண்ட சரக்கு தீர்ந்துவிட, தொடர்ந்து அந்நியன், சிவாஜி, எந்திரன் என்ற போலி வெற்றி படங்களை தந்து தான் ஒரு தோல்விப்பட இயக்குனர் என்று நிரூபித்தார். சிவாஜி மற்றும் எந்திரன் படங்களிலேயே ஷங்கரிடம் சரக்கு இல்லை என்று தெரிந்து விட்டது....அந்த படங்களின் வெற்றி என்பது கூட, ஒரு தோற்றுவிக்கப்பட்ட பிம்பம்தான் என்பதும் உண்மையிலேயே அவைகள் படுதொல்விப்படங்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதனால்தான், ரஜினியும், ஷங்கரும் மீண்டும் இணையவிரும்பவில்லை என்பதும் அப்பட்டமான உண்மை.
எனவே தான், இதற்குமேலும், தனது பருப்பு வேகாது என்றுணர்ந்த ஷங்கர், மீண்டும் காப்பி அண்ட் பேஸ்ட் போல ஹிந்தியில் வெற்றி கண்ட த்ரீ இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்து தன இருப்பை மீண்டும் உறுதிபடுத்திகொள்ள முயற்ச்சித்தார்.

 அதேபோல, கில்லி படத்திற்கு அப்புறம் எத்தனையோ ரீமேக் படத்தில் நடித்தும் அனைத்தும் படு தோல்வி படங்களாகவே அமைய, விஜய்க்கும் ஒரு வெற்றிப்படம் தேவைப்பட்டது..
ஸ்ரீகாந்த், சத்யராஜ் போன்றோருக்கும் இதே நிலைதான்..

சரி படத்தின் கதைக்கு வருவோம்.
பெரிய ஜாமீன் ஒருவரின் மகனின் பெயருக்கு பின்னால் டிகிரி வாங்குவதற்காக - அவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து படிக்கவரும் ஒரு பிராடு ஒருவன் அந்த காலேஜின் பாடத்திட்டங்களி சாடுவதும் அந்த காலேஜ் பிரின்சிபாலின் மகளையே காதலிப்பதும் பிறகு நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடி விடுவதும், அந்த நண்பர்கள் பத்துவருடங்கள் கழித்து சந்திப்பதும், அதுவரைக்கும் அவனும், அவன் காதலியும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு கோமாளித்தனமான கதையே இந்த இடியட்..நண்பனின் கதையும்.

பாண்டிச்சேரி அமைச்சர் ஒருவர்  பத்தாவது தேர்வுக்கு ஆள் மாறாட்டம் செய்து தலைமறைவாக இருக்க, ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாண்டுகள் ஆள்மாறாட்டம்  செய்து, டிகிரியும் வாங்கி, அதன் பிறகும் மாபெரும் விஞ்ஞானியாக அந்த பிராடு இருப்பதை ஏதோ ஒரு தியாகம் போல் காட்டும் இந்த ஏமாற்றுக்கார கூத்தாடிகள் நம்மைதான் முட்டாள்களாக்கி இருக்கிறார்கள்..
கதாநாயகியாக வரும் இலியானா என்பவர் ஒல்லியாக இருப்பதை தவிர வேறு எந்த சிறப்பும் அவருக்கு இல்லை..தந்தையிடம் கல்லூரி அறையின் சாவியை திருடுவதற்காக அவள் குடித்துவிட்டு வருவதாக காட்டுவது கேவலத்திலும் கேவலம்..
அந்த நடிகையின் உடம்பை துகிளுரித்துக்காட்டுவதர்காக, இந்தி படத்தில் இல்லாத ஒரு எக்ஸ்ட்ரா பாடல் காட்சி..அந்த காட்சியில் அந்த நடிகையை தவிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட இடை அழகிகளின் ஆபாச நடனம் இவர்கள்  ஒருக்காலத்திலும் நல்ல படம் எடுக்கமாட்டார்கள் என்பதை காட்டுகிறது.
பிரின்சிபாலாக வருபவர் ஏதோ எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் போல மாணவர்களை அடிக்கிறார்...

கல்லூரி விழா ஒன்றில் அவரையும் அமைச்சர் ஒருவரையும் ஒரு மாணவன் கேவலப்படுத்தி பேசுவது நகைச்சுவை என்ற பெயரில் படு ஆபாசம்.

இரவில் குடித்துவிட்டு திருட்டுத்தனமாக மாடி ஏறி வரும் கதாநாயகனுக்கு, கர்ப்பிணி பெண் தன வயிற்ரை காட்டி "ஆள் ஈஸ் வேல் " என்று சொல்லி தடவ சொல்கிறாள்..தன தங்கையை அவனுக்கு முத்தமிட கூட்டி கொடுக்கிறாள்..இது போன்ற கேவலமான குடும்பத்தின் தலைவர்தான் கல்லூர்ரி பிரின்சிபாலாம்..ஹ்ம்ம்ம்

ஏற்கனவே எந்திரன் என்ற படத்தில் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சி..இந்த படத்தில் பிராடு எஞ்சினியரின் மாணவன் பிரசவம் பார்க்கும் காட்சி..கப்பிக்குள் காப்பி..நல்ல காமெடி..
கதாநாயகன்  காணமல் போன பின் பத்து வருடமாக கல்யாணமே ஆகாமல் கதாநாயகி இருப்பதாக காட்டி இருப்பது நகைச்சுவை என்றால், கதானாயகனைப்பற்றி நண்பர்கள் அறிந்து தேடிப்போகும் வழியில் எந்த ஒரு விசாரணை இன்றியும், இரண்டு வசனங்களை மட்டும் பேசிவிட்டு கதாநாயகி அவர்களுடன் ஓடிப்போவதும் மகா கேவலம்..
இந்த படத்தை ஏன் புகழ்கிறார்கள் என்றே தெரியவில்லை..

நண்பன்....ஆள்மாறாட்டம் செய்த பிராடு. 


14 comments :

Thanansan said...

/*சிவாஜி மற்றும் எந்திரன் படங்களிலேயே ஷங்கரிடம் சரக்கு இல்லை என்று தெரிந்து விட்டது....அந்த படங்களின் வெற்றி என்பது கூட, ஒரு தோற்றுவிக்கப்பட்ட பிம்பம்தான் என்பதும் உண்மையிலேயே அவைகள் படுதொல்விப்படங்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்.*/

100 % I ACCEPT THIS

PRIYADHARSUN said...

unna mathiri muttalugalunga intha mathiri xxx panrathaiye velaiya vachirukeenga. Ithuku per vimarsanam. poda ____. Ithaiyum nee copy paste panniko.

sri said...

pooda punda

மர்மயோகி said...

நன்றி திரு thanansan

மர்மயோகி said...

நன்றி திரு priyadharshan

மர்மயோகி said...

நன்றி திரு sri

Unknown said...

//பெரிய ஜாமீன் ஒருவரின் மகனின் பெயருக்கு பின்னால் டிகிரி வாங்குவதற்காக - அவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து படிக்கவரும் ஒரு பிராடு ஒருவன் அந்த காலேஜின் பாடத்திட்டங்களி சாடுவதும் //
அடடே...ஆமாம் இல்லே?

selvam said...

ஓஹோ..அப்போ சரக்கு தீர்ந்துதான் நீ காப்பி அண்ட் பேஸ்ட் பதிவு போடுறியா?

கார்க்கி said...

ப‌திவெல்லாம் இருக்க‌ட்டும். முத‌ல்ல‌ இந்த‌ லின்க் மெயில் அனுப்பி சாவ‌டிக்கிற‌ வேலையை விட்டுடுங்க‌.வேணும்ன்னா பேன்ட் எல்லாம் இற‌க்கி த‌லைவா நீங்க‌ க்ரெட்னு கூட‌ சொல்றேன்.. த‌ய‌வு செய்து மெயில் அனுப்பாதீங்க‌ பாஸ்

மர்மயோகி said...

நன்றி திரு unknown (?)

மர்மயோகி said...

நன்றி திரு selvam

மர்மயோகி said...

நன்றி திரு கார்க்கி

Colombo Vijaiy said...

attakaasam amarkalam

sample said...

thanks dude.... [URL="http://www.chennaiads.info"]Free classifieds ads[/URL]

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?