Pages

Monday, September 27, 2010

பாடும்...! பாடித்தொலையும்...!!

எங்கோ கேட்ட வசனம் போல் இருக்கும்...இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில், புலிகேசி மன்னனாக நடிப்பவனிடம், புலவன் ஒருவன், பாடுவதற்காக வருவான்..

எதற்காக இங்கே வந்தாய் என்று மன்னன் கேட்பான்.

அதற்க்கு அந்த புலவன், "தங்களை புகழ்ந்து பாடி, பரிசில் பெறவே வந்தோம்!" என்பான்..

அதற்கு மன்னன் வேண்டா வெறுப்பாக சொல்லும் பதில்தான் மேற்கண்ட தலைப்பு "பாடும்...! பாடித்தொலையும்...!!"

தமிழ் தமிழ் என்று தமிழை வாழவைப்பதாக அலறும் அனைவரும் அந்தகாலத்து புலவர்களை இந்த லெவலில் தான் வைத்துள்ளனர்..அதாவது, புலவர் என்பவர் வறியவர் என்றும், அவர் வேறு எந்த வேலையும் செய்யத்தெரியாதவர் என்றும், அவர்களது வேலையே, ஒவ்வொரு ஊராகச் சென்று, அந்த பகுதியின் குறுநில மன்னனை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து, ஏதாவது பரிசு பெற்று வருவது..இப்படித்தான் சங்க கால இலக்கியங்கள், தமிழ் வளர்க்கும் புலவர்களை இந்த அளவு கேவலப்படுத்தியே சித்தரித்து வந்துள்ளன..

சரி அவர்கள்தான் அவ்வாறு இருந்துள்ளனர், வறியவர்கள் என்று நினைத்தால், தற்காலத்து புலவர்களும் அவ்வாறே உள்ளனர். இவ்வளவுக்கும் அவர்கள் நல்ல செல்வ செழிப்போடும், ஆளும்கட்சிகளின் அரவனைப்போடும்தான் உள்ளனர்..

அந்த நிலையில் உள்ள புலவர்கள்தான், ஆளும் கட்சி மேடைகளிலும், கவியரங்குகளிலும், முதலமைச்சரையும், மற்றும் அவர் சார்ந்த கூட்டத்தினரையும் தேவைக்கு அதிகமான புகழ்ந்து பாடும் அவல நிலையில் உள்ளனர்..

மனிதன் அனைத்து தேவைகளையும் பிறர் துணை இன்றி செய்ய முடியாத நிலையில் உள்ளான்..ஒவ்வொருவனும் ஒவ்வொருவனை ஏதாவது ஒரு வகையில் சார்ந்தே இந்த உலகம் இயங்குகிறது..அப்படிப் பட்ட மனிதர்களை, கடவுளுக்கு நிகராகவும், இன்னும் கடவுளுக்கு மேலேயும் வைத்து துதி பாடும் கேவலம் இங்கே தமிழகத்தில் தான் அதிகம்..
 
அதோடு, சினிமாக் கூத்தடிகளையும் இவர்கள் புகழ்ந்து தம்மையே கேவலப்படுத்திக் கொள்கின்றனர்.


சினிமா எனபது ஒரு ஆபாசங்கள் அருவருப்புக்கள் நிறைந்த கேவலமான வியாபாரம்..அதில் நடிப்பவன்- just  நடிக்கிறான்..அவ்வளவுதான், அதை மிஞ்சி அவனால் ஒன்றும் கிழித்து விட முடியாது..நடிப்புக்குப் பின்னரும், முன்பும் உள்ள அவனது நிஜ வாழ்க்கை மிகவும் கேவலமானது..வாய்ப்புக் கொடுப்பவனிடம் கூழைக்கும்பிடு போடவேண்டும்..

அந்த கேவலமான நடிகனையும் இந்த கவிஞர்கள் என்று அழைத்துக்கொள்ளும் போலிகள் அளவுக்கு அதிகமாக புகழ்வது அருவருப்பை தருகின்றது..

அமெரிக்காவின் ஒபாமாவை பார்க்க ரஜினி என்ற நடிகனும், அமிதாப் என்ற நடிகனும் சென்றார்களாம்..


ஒபாமா ரஜினி என்பவனை கண்டு கொண்டானாம், அமிதாப்பை தெரியவில்லையாம்..


அதே இருவர் வாட்டிகனில் உள்ள போப் ஆண்டவரை சந்திக்க சென்றார்களாம்..அவரும், ரஜினி என்ற நடிகனை மட்டும் அடையாளம் கண்டு கொண்டு பேசினாராம்..அதை விட கொடுமை, அமிதாப் என்ற நடிகனிடம் அருகில் உள்ளவன் கேட்டானாம்," ரஜினியை தெரிகிறது..அவருடன் பேசிக்கொண்டிருக்கும் (போப்) நபர் யாரென்று தெரியவில்லையே " என்றானாம்..

இதை சமீபத்தில் வைரமுத்து என்பவர் ஒரு மேடையில் சொல்லி தன்னை கேவலப் படுத்திக்கொண்டார்..
 
இவர்களைப் போன்றவர்களைத்தான் அந்த மன்னன் அவ்வாறு சொல்லி இருப்பான்..

"பாடும்..! பாடித்தொலையும்...!!

3 comments :

மர்மயோகி said...

யாரும் கம்மேண்ட்ஸ் போடல..அதான் நானே போட்டுகிட்டேன்..

jaisankar jaganathan said...

//யாரும் கம்மேண்ட்ஸ் போடல..அதான் நானே போட்டுகிட்டேன்..
//

நான் இருக்கேன். அடுத்த கமெண்ட் போட . பீல் பன்னாதீங்க

7.FI7TY said...

பட விழாக்கள் எல்லாமே கூழை கும்பிடு காரர்களின் அடி வருடல்கள் தான்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?