Pages

Thursday, February 9, 2012

இவனைப் போன்றவர்களுக்கு மரணதண்டனைதான் கொடுக்கவேணும் ....!!!
நினைக்கும்போது குலை நடுங்க வைக்கிறது....
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் - ஒரு பொருக்கி, ஒரு ஆசிரியரை கத்தியால் குத்தி படுகொலை செய்து இருக்கிறான்..
காரணம் அந்த ஆசிரியை பெற்றோர்களிடம் அடிக்ககடி புகார் செய்து வந்தாராம்..

ஹ்ம்ம்ம்..இப்படி கொலைவெறியுடன் அந்த ஆசிரியை கொலைசெய்த அந்த பயங்கரவாதியிடம் இனிமேல் காவல்துறை விசாரிக்கும், நீதிமன்றம் கூட்டி செல்வார்கள் கடைசியில் இவன் சிறுவன், மாணவன், எதிர்கால நலன் கருதி இவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைப்பார்கள்..
இதன்  மூலம் கொல்லப்பட்ட அந்த ஆசிரியையின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்படுமா என்றால் இல்லை..

முதலமைச்சர் வேண்டுமென்றால் தனது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குவார்..

ஆனால் குற்றம் செய்த அந்த கொலையாளி..? 
சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படும் அவனுக்கு, - அந்த ஆசிரியரை கொலை செய்ததை - ஏதோ படித்து பட்டம் வாங்கியதைப்போல - வெளியில் வந்து பெருமையாக சொல்லி, மேலும் ரவுடித்தனம்தான் செய்வான்..
இவன்தான் கொலையாளி என்று தெரிந்த  பின்பு இன்னும் ஏன் விசாரணை? 
மரணதண்டனை விதிக்க வேண்டியதுதானே?
சிலர் கிளம்புவார்கள்..மனித உரிமை என்ற பெயரில்..மாணவன் சிறுவன் என்று..
பத்திரிக்கைகளும் ஏதோ மாணவன், பட்டதாரி, எஞ்சினியரின் மாணவர், என்று சில சொற்பிரயோகங்களை வைத்து ஏதோ இவர்கள் அதிசய பிறவி போலவும், தவறு செய்தால் மன்னிக்க வேண்டும், அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் ஓலமிடும்..
இப்படி அந்த கொலையாளிகளை தப்பவிடுவதால் எந்த விதமான நன்மையையும் விளையப்போவதில்லை..மாறாக குற்றங்கள் இன்னும் அதிகம் பெருகும்..

இதற்க்கு காரணம் இன்றைய காலங்களில் வெளிவரும் சினிமாக்களும் டிவி சீரியல்களும்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆசிரியரை கேலி செய்யும் - கல்லால் அடிக்கும் மாணவனை - குறும்புக்காரன் என்று அந்த சம்பவங்களை நகைச்சுவையாக்கி இதுபோன்ற பயங்கரங்களை தூண்டுகின்றனர்.

ஆசியரை கிண்டல் செய்வது தவறல்ல எனபது போன்ற திரைப்படங்களே...சொல்லப்போனால் அப்படி செய்பவன்தான் ஹீரோ என்பதுபோல உயர்த்திக்காட்டி - சிறுவர்களை வழி கெடுக்கின்றன..

இந்த சிறுவயதிலேயே, எவ்வளவு வன்மம் மனதில் இருந்தால் அந்த பொருக்கி - கத்தியை பள்ளிக்கூடத்திற்கு எடுத்து வந்து ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு துணிந்திருப்பான்...
இவனை விசாரணை என்ற பெயரில் காலங்கடத்தாமல் மரணதண்டனை விதித்து கொல்வதே குற்றங்களை - கொஞ்சமாவது குறைப்பதற்கு வழிகோலும்.!9 comments :

ரஹீம் கஸாலி said...

உங்கள் ஆதங்கம், கோபம் நியாயமானதுதான் நண்பரே...

கோவை நேரம் said...

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ....இப்பவே இவன் கொலைகாரனா,,,,அப்புறம் ஒரு அரசியல்வாதிகிட்ட சேர்ந்து பெரிய ரவடி ஆகிவிடுவான் ..இவன நீங்க சொல்ற மாதிரி தூக்கு தண்டனை தான் தரனும்

மர்மயோகி said...

நன்றி நண்பர் ரஹீம் கஸ்ஸாலி அவர்களே..

மர்மயோகி said...

நன்றி நண்பர் கோவை நேரம்

ppage said...

உங்கள் உணர்வு புரிகிறது...

வன்முறையும், கொலை செயலும்... மனிதர்களின் இயல்பே அல்ல... அதனால் தான் இங்கனம் தவறு செய்தவர்களை, மனிதர்கள் அல்ல, மிருகங்கள் என முத்திரை குத்தி, கூண்டில் அடைத்து வருகிறோம்...

இன்றும் சிறைச்சாலை என்பது அங்கனம் பூட்டி வைக்கப்பட்ட மிருகங்களின் அகம்தான்....

என்றாலும் அவனை மட்டுமே குறை கூறாமல் ஆழமாய் சென்று, அவனை இங்கனம் செயலாற்ற வைத்த விஷயங்களை புரிந்து கொண்டால் பிற்காலத்தில் இது போன்ற விஷயங்கள் நடக்காமல் தவிர்க்கலாம்...

1. படித்தால் தான் வாழ்க்கை, இல்லேண்ணா எல்லாம் போச்சு... என்பது போல் ஒரு மாயத்தோற்றம் உருவாக்கும் சமூக நிர்ப்பந்தம்...

2. அவனை கொலைக்கு இன்ஸ்பயர் செய்த பொறுப்பற்ற திரைப்படம்.....

3. இவ்வளவு வன்முறைக்கு அவன் தயாராகும் போது, அவனை கவனிக்காத அவனது பெற்றோர்....

4. அன்பால், அரவணைப்பால் மாணவனை திருத்தாமல், பய உணர்ச்சியால் அவனை நெறிப்படுத்த முடியும் என வன்முறையை கை கொண்ட ஆசிரியர்கள்...

இவர்களும் அவனை இன் நிலைக்கு தள்ளியவர்களே...

மர்மயோகி said...

நன்றி திரு ppage

நீங்கள் சொல்லும் காரணங்களை ஏற்றுக்கொள்கிறேன்..
இவைகளை இனிமேல் களைய முயற்ச்சி எடுக்கலாம்தான்...ஆனால் இவைகளையே காரணம்காட்டி கொலையாளிக்கு சாதகமாக கொண்டு வரக்கூடாது. தண்டனை அளிப்பதே இவைகளை களைய ஏதுவாகும்.

வால்பையன் said...

உங்களை நினைத்து சிரிப்பதா அல்லது கோபப்படுவதா என தெரியவில்லை!?

அந்த மாணவனுக்கு மரண தண்டனை தந்தால் அந்த ஆசிரியையின் குடும்பம் சந்தோசப்படும்!

ஏன் அந்த மாணவன் கொலை செய்தான்?

அவனது பெற்றோர்கள் பல முறை ஆசிரியையால் புகார் செய்யப்பட்டும் அந்த மாணவன் திருந்தாது ஏன்?

இந்த கொலைக்கு அந்த மாணவன் மட்டுமா காரணம்?

அவனது உளவியல் சிக்கல் என்ன?

அது அந்த ஆசிரியைக்கு புரியாததின் காரணம் என்ன?

அவனது பெற்றொர்களுக்கு புரியாததின் காரணம் என்ன?

இதையெல்லாம் விட்டுட்டு அவனுக்கு மரண தண்டனை வழங்கனுமாம்!

கொலைக்கு கொலை தீர்ப்பாகுமா?

நானாவது தண்ணி போட்டு உளர்றேன், நீங்க தண்ணி போடாமயே உளர்றிங்களே எப்டி பாஸ் உங்களால மட்டும் முடியுது!

முட்டாளாவே இருப்பதுன்னு முடிவு பண்ணி பதிவு எழுதிறீங்களா?

மர்மயோகி said...

வால்பையன் என்றொரு அதி மேல் தாவி அவர்களுக்கு..
நீங்களாகவே தண்ணி போட்டு உளறுகிறேன் என்று ஒப்புதல் அளித்தபிறகு, உளர்களுக்கு என்ன பதிலை எதிர்பார்கிறீர்கள்?

வால்பையன் said...

மர்மயோகி said...
வால்பையன் என்றொரு அதி மேல் தாவி அவர்களுக்கு..
நீங்களாகவே தண்ணி போட்டு உளறுகிறேன் என்று ஒப்புதல் அளித்தபிறகு, உளர்களுக்கு என்ன பதிலை எதிர்பார்கிறீர்கள்?//


ஆகமொத்தம் பதில் இல்லை!

:)

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?