Pages

Tuesday, December 21, 2010

பிரபல நடிகை சுற்றிவளைப்பு...!!!

இவர் யார் தெரிகிறதா?
இவர்தான் முஹம்மத் ஹனீப்..இந்தியரான  இவர் ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் தீவிரவாதி என்று தவறுதலாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து இந்தியாவுக்கே திருப்பி அனுப்பபட்டார்..

இதோ இன்று எல்லாமே சரியாகி விட்டது..மீண்டும் முஹம்மது ஹனீப் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்...ஏறக்குறைய ஒரு மில்லியன் டாலர் நஷ்ட ஈடு தருவதாக ஆஸ்திரேலியா அரசு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இன்று ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்காக சென்றுவிட்டார்..

இது முடிந்து போன விஷயம்..

அடுத்த விசயத்துக்கு வருவோம்...மாலைமலர் என்ற பத்திரிகையில் வந்த ஒரு செய்தி.


"விக்கி லீக் நிறுவனர் அசாங்கேயின் காதல் லீலை: 16 வயது பெண்ணை கர்ப்பம் ஆக்கினார்"

உலக நாடுகளுக்கெல்லாம் ரவுடியாக இருந்து, அணு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக ஒவ்வொரு நாட்டிலும் அத்துமீறி அராஜகம் பண்ணிக்கிட்டு இருந்த அமெரிக்காவின் பொறுக்கித்தனங்களையும், தூதர்கள் என்ற பெயரில் ஒவ்வுறு நாட்டிலும் உளவு வேலை செய்து வந்ததையும் ஆதாரத்தோடு வெளியிட்ட அசாங்கேயை உலகமே ஆச்சரியாமாக பார்க்கும்போது, இங்குள்ள ஆபாசப் பத்திரிகைகளுக்கு கிடைத்த தலைப்பை பார்த்தீர்களா?அமெரிக்காவின் அராஜகங்களையும் அத்துமீறல்களையும் ஒரு செய்தியாகக் கருதாமல், அசாங்கேயைப் பற்றிய செய்தி உண்மையா, இல்லை அமெரிக்க அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையா என்று கூட ஆராயாமல் அவனது கைக்கூலி போலவே செய்தி வெளியிடும் இந்த ஆபாச பத்திரிக்கைகளால் நாட்டுக்கு என்னதான் பிரயோஜனம்?

நாட்டில் விலைவாசி, ஊழல், ரவுடியிசம், , விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம், ஆர் எஸ் எஸ் மதவெறி பயங்கரவாதம் என்று எவ்வளவோ பிரச்சினைகள்  இருக்க..இப்படி அடுத்தவன் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் கேவலத்தை இந்த பத்திர்க்கைகள் செய்கின்றன..

 

ஓகே இப்போ முக்கியமான தலைப்புக்கு வருவோம்...(???)"பிரபல நடிகை முற்றுகை..!!! தர்கா முன் கார் சேதம்..! " இது நான் இன்று இதே மாலை மலர் பேப்பரில் முக்கிய செய்தியாகப் பார்த்தேன்...

சும்மா தலைப்புக்காகத்தான் இதையும் வைத்தேன்..(சீரியஸா தலைப்பு வெச்சா யாரும் பாக்குறது இல்லை..நடிகைன்னா நிச்சயமா வருவீங்கதானே) மற்றபடி இந்த நடிகைக்கும் அந்த தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை.. 

21 comments :

ஆமினா said...

சூப்பர் பதிவுங்க. அந்த டாக்டரை பத்தி புதியதகவல் கொடுத்ததுக்கு மிக்க நன்றி

இரவு வானம் said...

nalla pathivunga

மர்மயோகி said...

நன்றி ஆமினா, நன்றி இரவு வானம்

மங்குனி அமைச்சர் said...

டெக்குனிக்கு ......... நடக்கட்டும் ..நடக்கட்டும்

myth-buster said...

நல்ல பதிவு.

மர்மயோகி said...

நன்றி மங்குனி அமைச்சர் மற்றும் myth-buster

பாலா said...

உண்மையிலேயே நல்ல ஐடியாதான். அசாஞ்சே மீதான அந்த செய்தி புரட்டாக இருந்தாலும் அதை படிக்கவாவது பத்திரிக்கை வாங்குவார்களே என்று உங்கள் ஐடியாவையே அவர்களும் பின்பற்றுகிறார்கள்.

//விலைவாசி, ஊழல், ரவுடியிசம், , விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம், ஆர் எஸ் எஸ் மதவெறி பயங்கரவாதம் என்று எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க

ஒன்று கேட்கிறேன் தப்பா எடுத்துக்காதீங்க. அல் கொய்தா, லஷ்கர் இ தொய்பா இவங்கல்லாம் பயங்கர வாத அமைப்புகள் இல்லையா. அவற்றை ஏன் உங்கள் பதிவில் குறிப்பிடவில்லை.

நாங்கள் தமிழர்கள் said...

//விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்//
புலிகள் என்ன பயங்கரவாதம் செய்தார்கள் என்று கூற முடியுமா.. உங்கள் பதிவுகளில் இதுவரை காங்கரசு ஊழல் பற்றி ஒரு வரி கூட வரவில்லையே என்ன காரனம் கூற முடியுமா

Chandran said...

நல்ல பதிவு.டாக்டரை பற்றியும் அறிந்து கொண்டேன்.

பின்னோட்டத்தில் நல்ல தமாஷ்!
//புலிகள் என்ன பயங்கரவாதம் செய்தார்கள் என்று கூற முடியுமா.//

மர்மயோகி said...

நன்றி திரு பாலா, இந்தியாவில் எந்த பயங்கரவாத செயல்கள் நடைபெற்றாலும் அல்கொய்தா , லஸ்கர் - எ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று முதலில் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துவிடுகின்றது..அது மக்களிடம் போய் சேர்ந்தும் விடுகிறது..ஆனால், இந்தியாவுக்கு பகிங்கரமாக துரோகம் செய்யும் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்க்கும் தமிழ்நாட்டில் நேரடி அத்தரவு அளிக்கும் வைகோ, ராமதாசு, நெடுமாறன் போன்றோர்கள் இந்தியாவிலேயே எந்த கட்டுபாடின்றி எல்ல சுதந்திரங்களையும் அனுபவித்து வருகிறார்கள்..பிரபாகரன் ஒரு தேடப்படும் பயங்கரவாதி. விதலைப்புலிகளின் அமைப்பு தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. அதற்க்கு இன்னும் ஆதரவு அளிக்கும் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது?

அப்புறம் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதம்.
பெரும்பாலான மதக் கலவரங்களுக்கும், குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் காரணம் என்று இப்போது வரிசையாக புலனாய்வில் தெரியவருகின்றன..கைதுகளும் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன..அதை எந்த பத்திரிக்கைகளிலாவது முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனவா? குஜராத் கலவரத்துக்கு காரணம் என்று அறியப்பட்ட மோடி என்ற பயங்கரவாதியும் என்பவனும், பாபரி மசிதி இடிக்க காரணமான அடிவானி என்ற பயங்கரவாதியும் உமாபாரதி என்ற பயங்கரவாதிகளும் இன்னும் சுதந்திரமாகத்தானே அலைகின்றன?

மர்மயோகி said...

நாங்கள் தமிழர்கள் said...
//விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்//
புலிகள் என்ன பயங்கரவாதம் செய்தார்கள் என்று கூற முடியுமா.. உங்கள் பதிவுகளில் இதுவரை காங்கரசு ஊழல் பற்றி ஒரு வரி கூட வரவில்லையே என்ன காரனம் கூற முடியுமா//

உங்களுக்கும் நண்பர் Chandran அவர்களது பின்னூட்டமே சரியான பதில்...

வெட்கம் கெட்டவர்களே ...இலங்கையில் நிற்க துணிவின்றி, அடைக்கலம் கொடுத்த இந்தியாவிலேயே குண்டுவெடிப்பு, ரயில் கவிழ்ப்பு, விமான நிலையம் தகர்த்தல், ராஜிவேகாந்தியை கொன்றுவிட்டு, இன்னும் திருட்டு, வழிப்பறி, கள்ளப்பணம் என்று தகாத செயல்களை இன்னும் செய்துகொண்டு, தமிழர் என்று பெருமையா....

மர்மயோகி said...

திரு சந்திரன் அவர்களுக்கு நன்றி..

வழிப்போக்கன் - யோகேஷ் said...

mzalai pathirikkaikalin lachanam ippadithannnnnn

மர்மயோகி said...

நன்றி திரு வழிப்போக்கன் - யோகேஷ் அவர்களே.

நாங்கள் தமிழர்கள் said...

உங்கள் அறிவு இவ்வளவுதான் என்ன செய்வது.
//உங்கள் பதிவுகளில் இதுவரை காங்கரசு ஊழல் பற்றி ஒரு வரி கூட வரவில்லையே என்ன காரனம் கூற முடியுமா//
சரி இதர்க்கு பதில்.........

ஷர்புதீன் said...

லைன பிடிச்சிடீங்க போலருக்கே ...!!

பாலா said...

நண்பரே தங்கள் பதிலுக்கு நன்றி. என் பின்னூட்டத்தில் நான் ஆர் எஸ் எஸ்ஸுக்கு வக்காலத்து வாங்க வில்லையே. நீங்கள் வேண்டுமென்றே இசுலாம் அமைப்புகளை மறந்து விடுவது போன்று தோன்றியதே என் கேள்விக்கு காரணம். அதே போல உங்கள் பெரும்பாலான பதிவுகள் இந்து துவேசத்துடன் எழுதுவது போலவே இருக்கின்றன. இது என் கருத்து மட்டுமே.

பாலா said...

தாங்கள் ஒரு இசுலாமிய சகோதரர் என்பது என் அனுமானம். உங்களைப்பற்றி வேறு எந்த வழியிலும் தெரிந்து கொள்ள வில்லை. உங்கள் பதிவுகளை படித்த பின் இந்த முடிவுக்கு வந்தேன். சரிதானே

மர்மயோகி said...

நாங்கள் தமிழர்கள் said...

உங்கள் அறிவு இவ்வளவுதான் என்ன செய்வது.
//உங்கள் பதிவுகளில் இதுவரை காங்கரசு ஊழல் பற்றி ஒரு வரி கூட வரவில்லையே என்ன காரனம் கூற முடியுமா//
சரி இதர்க்கு பதில்......... //

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் கட்சிகளே சாக்கடைகளே..அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை..

இந்தியாவில் இருந்து கொண்டு, காங்கிரசை எதிர்கிறேன் என்ற பெயரில் இந்தியாவுக்கு துரோகம் நினைக்கும் தமிழர் அமைப்புகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்..?

மர்மயோகி said...

நன்றி திரு ஷர்புதீன்

மர்மயோகி said...

நன்றி நண்பர் திரு பாலா அவர்களுக்கு..நன் ஒரு இஸ்லாமியன்தான் ...

ஆனாலும் தங்கள் அனுமானம் தவறு...நான் ஹிந்து துவேசம் உடையவன் அல்ல..இஸ்லாமும் அதை சொல்லவில்லை...

முஸ்லிம்களை எதிரிகளாகப் பாவித்து, அதனால் நாட்டை துண்டாட நினைக்கும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளைப் பற்றியும், பி ஜே பி போன்ற பயங்கரவாத அமைப்புகளைப் பற்றியும்தான் நான் குற்றம் சொல்கிறேன்..

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று எழுத அனைத்து பத்திரிக்கைகளும் தயாராக இருக்கின்றன..எங்கு எந்த அசம்பாவிதம் நடந்தாலும் சிறிதும் அறிவைப் பயன்படுத்தாமல் உடனேயே இஸ்லாமிய அமைப்புகள் மீது பழிபோட ஏராளமான மீடியா பயங்கரவாதிகளும் இருக்கிறார்கள்..ஆனால் காவி பயன்கவாதத்தைப் பற்றி சொல்ல யார் இருக்கிறார்கள்..எனவே அதுபற்றி அதிகமாக எழுதவேண்டிய நிர்பந்தம்..

இதன்மூலம் தங்களது மனதை தனிப்பட்ட முறையில் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்..

நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?