Pages

Friday, March 5, 2010

என்ன சொல்ல வருகிறீர்கள்??

இன்னும் ஒரு வாரத்திற்கோ..அல்லது அடுத்த எவனாவது அல்லது எவளாவது கயவாளித்தனம் பண்ணி மாட்டாதவரையில் இந்த நித்யானந்த சாமியை விட முடியாது என்றேதான் நினைக்கத் தோன்றுகிறது..

அப்படியே நாம் மறக்க நினைத்தாலும் இந்த பத்திரிகை குப்பைகள் நம்மை மறக்கவிடாமல் செய்து அதைச் சுற்றியே நமது சிந்தனைகளை ஓடச் செய்து..ஒருவித கவர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறான்கள். இது கூட அந்த சாமியார் செய்ததுபோல ஒரு விதமான மெஸ்மரிசம் தான் எனலாம்.

இத்தனை நாள் அவனையும் அவனுடன் படுத்த நடிகையையும் நன்றாக ஓட்டிவிட்டு, இன்றைய மாலை செய்திகளில்.."நித்யானந்த சாமியை இந்த சிக்கலில் மாட்டிவிட ரஞ்சிதாவிற்கு மூன்று கோடி கொடுக்கப்பட்டது.!" என்றும், "வீடியோ தயாரிப்பில் ரஞ்சிதாவின் பங்கு..!" என்றும் வித விதமான தலைப்பில் செய்திகள் போடுகிறார்கள்..

இதன் மூலம் இந்த ஆபாச வியாபாரிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றுதான் தெரியவில்லை... இந்த வேலையை ரஞ்சிதா செய்யாவிட்டால் அந்த சாமியார் நல்லவன் என்று தொடர்ந்திருப்பான்..நீங்கள் இன்னும் ஏமாந்து இருக்கலாம் என்று சொல்கிறார்களா? அப்புறம் அரசியல்வாதியின் சதி என்றும் போடுகிறார்கள்..அடேய் மடையன்களா...எவன் சதி செய்தாலும் செய்யாவிட்டாலும், ஒருவன் ஆன்மீகப் போர்வையில் மக்களை ஏமாற்றி, பெண்களுடன் இன்பம் அனுபவிப்பது தவறு என்று ஏன் உங்களைப் போன்ற முட்டாள்கள் மக்களுக்கு விளக்க முற்படவில்லை.. ஏதோ தனக்கு வியாபாரம் ஆனால் போகிறது என்று,,ஏதோ சாமியார் தவறே செய்யவில்லை எனபது போலவும், நடிகை மற்றும் அரசியல்வாதியின் சதியால்தான் இப்படி மாட்டிக் கொண்டான் என்றும் ஏன் திசை திருப்புகிறார்கள்..?

அப்புறம் குமுதம் என்றொரு ஆபாச பத்திரிகை..இத்தனை நாளாக இந்த சாமியாரை வைத்து வியாபாரம் செய்து விட்டு, இன்று தனது குமுதம் ரேப்போர்டரிட்டரில் "அவனது பூர்வஜென்ம சரித்திரம் வேறு..! இவனுக்கு நித்யானந்த என்று பெயர் வைத்தது ரஜினியின் குருவாம்..(அவனையும் இழுத்தாகணும் இந்த கழிசடைகளுக்கு) ரஜினி வானத்தில் இருந்து குதித்தான் அல்லவே? அவனே ஒரு கூத்தாடி..சிகரெட், சாராயம் போன்றவைகளின் மொத்த விளம்பரதாரன் இந்த ரஜினிதான்..

அப்புறம் இந்த நித்யானந்த பிறக்கும்போதே யாரோ ஒரு ஜோசியன் சொன்னானாம் இவன் வருங்காலத்தில் ஒரு பெரிய சாமியாரை வருவான் என்று..ஏண்டா அறிவுகெட்ட ஜென்மங்களா...இப்படி சொன்ன அந்த ஜோசியனுக்கும் இவன் இப்படி ஒரு பிரச்சினையில் சிக்குவான் என்று தெரியாதா?

அதை ஏன் அந்த மரமண்டை ஜோசியன் சொல்லவில்லை?



நித்யானந்தன் ஒரு சாதாரண மனிதன். நம்மைப் போலவே உண்பவன், மலஜலம் கழிப்பவன், தூங்குபவன்,..அவன் எப்படி தெய்வ நிலையை அடையமுடியும்,..எப்படி மற்றொருவன் நோயை குணப்படுத்த முடியும்? அவன் என்ன டக்டரா? ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்கவேண்டும்.. அவனை ஏன் கடவுளின் புரோக்கராக பார்கிறீர்கள்? அவன் எப்படி கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்? ஒரு மனிதனை அதற்க்கு மேற்பட்ட தகுதியில்  வைக்கக்கூடாது என்று எப்பொழுது இந்த கழிசடை ஜென்மங்களுக்கு புரிகிறதோ...அன்று வரைக்கும் இது போன்ற சாக்கடைகள் புறப்பட்டுக்கொண்டுதானிருக்கும். ஆபாச வியாபாரம் பண்ணும் குப்பை பத்திரிக்கைகளும் டி விக்களும் நம் பணத்தை சுரண்டிக் கொண்டுதானிருப்பார்கள்..



ஒரு பின் குறிப்பு..



இந்த வாரம் முழுதும் இந்த சாமியார் பற்றி எழுதுவது தவிக்க முடியாததாகிவிட்டது..சீக்கிரமே வேறு ஏதாவது பிரச்சினை வரும் என்று ஆளாளுக்கு வேண்டிக்கொள்ளுங்கள்

0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?