Pages

Wednesday, March 3, 2010

சன் டி வி யில் ப்ளூ பிலிம்

நேற்றிரவு முழுவதும் இதே அலப்பறைதான்.. "சன் நியூஸ் தொ(ல்)லைக்காட்சியில் சுவாமி நித்யானந்தா படுக்கையறையில் நடிகையுடன்" பரபரப்புச் செய்தி என்று..மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது..

அப்படி என்னதான் அந்த செய்தியில் வரப்போகிறது என்று ஆர்வமாய்க் காத்திருந்து பார்த்ததில்..சன் டி வி யில் அந்த காட்சி ஒளிபரப்பாகியது..சுவாமி தன் படுக்கையில் படுத்துகொண்டிருக்கிறான் ..ஒரு பெண் சேலை அணிந்து வருகிறாள் ..(அவளது முகம் மட்டும் கிராபிக் முறையில் மறைக்கப்பட்டு காட்சி ஒளிபரப்பபடுகிறது) அந்த பெண்ணை ஒரு பிரபல தமிழ் நடிகை என்றும் "R" இல் பெயர் தொடங்கும் என்றும் செய்தியில் சொல்கிறார்கள்..அந்த பெண் அவனது காலை அமுக்கி விடுகிறாள்.. பின்பு இருவரும் கட்டி அணைத்தபடி புரளுகிறார்கள்..விளக்கு அணைக்கப்படுகிறது..இன்னுமொரு காட்சி..அதிலும் அதே நடிகை இப்போது சுடிதார் அணிந்து வந்து அந்த சாமியாருக்கு ஏதோ தின்பதற்கு கொடுத்து தண்ணீரும் கொடுக்கிறாள் ..(நியூஸ் அறிவிப்பாளர் அதை மாத்திரை என்கிறார்)..பிறகு மீண்டும் சல்லாபம் விளக்கு அணைக்கப்படுகிறது..

இப்படி ஏறக்குறைய ஒரு நீலப்படம் போலவே..அனைத்து குடும்பப் பெண்களும் பார்க்கும் வண்ணம் அதை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி வீட்டுக்குள்ளேயே ஆபாசத்தை கொண்டுவரத்தொடங்கியாச்சு..

சிறுவயதில் மஞ்சள் பத்திர்க்கைகளை குமுதம் ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளின் உள்ளே வைத்து படிப்போம்..இப்போது அந்த மாதிரி பத்திரிக்கைகள் ஒழிந்து ஆனந்த விகடன் குமுதமே அது போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் ஆகிவிட்டன..

அதுபோல் ஆபாச வீடியோக்களை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்
போட்டு பார்ப்போம் ...ஆனால் இப்போது சன் டி வி போன்ற இதர சானல்களையும் அப்படித்தான் பார்க்க நேருமோ என்னவோ..

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் பலமுறை இது போன்ற பாலியல் விவகாரங்களில் சிக்கி அவமானப்பட்ட போதும் அவர்களும், அவர்களை நம்பி ஏமாந்து செல்லும் மக்களும் ஒரு நாளும் திருந்தியதாகத் தெரியவில்லை..இன்னும் திருந்தப்போவதாகவும் தெரியவில்லை. ஏனென்றால் இதுவரை பிரேமானந்தா முதல் காஞ்சி சங்கராச்சார்யார், மற்றும் சமீபத்தில் ஒரு அர்ச்சகர் வரை தொடர்ந்து பல பெண்களுடன் ஆபாசமாக இருந்த செய்திகள் பரபரப்பாக வந்தாலும் சில நாட்களிலேயே அவர்கள் சீக்கிரமே மீண்டும் தமது தொழிலை (ஆமாம் ஆன்மிகம் தொழிலாகத்தானே மாறிவிட்டது?) ஆரம்பித்துவிடுகிறார்கள்..

மனிதர்களை அதற்கு மிஞ்சிய தகுதியில் வைத்துப் பார்க்கும் மூடர்கள் இருக்கும்வரையில் இது தொடரத்தான் செய்யும்..

எழுபது வயதைத்தாண்டிய கவர்னர் ஒருவரே சபலப்பட்டு பல பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும்போது..முப்பது வயதைக்கூட கடக்காத ஒருவனிடம் நாம் இதை தடுக்க முடியாது..காமம் இல்லாத மனிதன் இல்லை....ஆனால்..ஆன்மிகம் என்ற பெயரில் இன்னும் ஏமாற்றி வருவதை நிச்சயமாக அனுமதிக்க முடியாதுதான்..

நமது கேள்வியெல்லாம் இதுதான்..

இந்த வீடியோ காட்சியில் அந்த சாமியாரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் சன் டி வி அந்த நடிகையின் முகத்தை மறைத்தது ஏன்..? தவறு அந்த நடிகையின் மீது இல்லையா..

சினிமாக்களில் கண்ட கண்ட ஆண்களை காட்டி அணைத்து ஆபாச நடனமாடும் பெண்மணியை காட்டாமல் அவரை மறைப்பத்தின் மூலம் இது சன் டி விக் காரர்களின் வேலையோ என சந்தேகம் எழத்தான் செய்கிறது..ஏனென்றால்.. இரண்டு வீடியோக்களிலும் ஒரே நடிகையே வருகிறாள்..எடுக்கப்பட்ட வீடியோவும் மிகத்தெளிவாகவே உள்ளது..

மேலும் இந்த செய்தி சன் டி வி மற்றும் அவர்களது குடும்ப பத்திரிக்கையான தினகரனில் மட்டுமே வெளியாகி உள்ளது..கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் தினத்தந்தி இதை கண்டுகொள்ளவே இல்லை..

அதே சமயம் இந்த சாமியார் இப்படிப்பட்டவன்தான் என்பதில் ஐயம் ஏதுமில்லை..காரணம் இவன் குமுதம் பத்திரிகையில் தொடர்ந்து "கதவை திற காற்று வரட்டும்" என்னும் தலைப்பில் கட்டுரை எழுதி வருகிறான். ஒரு ஆபாச பத்திரிகையில் எழுதுபவனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்..

அதுதான் கதவை மூடியும் காற்று (நாற்றம்)  வெளியாகிவிட்டது..

14 comments :

எம்.ஏ.சுசீலா said...

நல்ல தார்மீகச் சீற்றம் .
என் பதிவையும் காண்க.

ers said...

அடல்ஸ் ஒன்லி
குழந்தைகள் பார்க்க வேண்டாம்.

சாமியாரின் காமக்கதை வீடியோ

தர்ஷன் said...

நடிகை யாரென்பது அவசியமற்றது அவர் மக்களின் நம்பிக்கையை குலைக்கவில்லை
ஆனால் இந்த நாய்தான் தன்னை புனிதன் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி இருக்கிறான். டிவியில் காட்டியது சரியா என யோசிக்கு முன் இவ்வாறு காட்டாமல் தகவல் சொல்லியிருந்தால் மக்களுக்கு இப்போது வந்திருக்கும் கோபம் வந்திருக்காது.

சரண் said...

இதுவரைக்கும் மறைத்து எடுத்தப் படங்களில் (Hidden camera) இவ்வளவு தெளிவான ஒரு படத்தைப் பார்த்ததே இல்லை..
சன் டிவிக்காரனயும் அவ்வளவு சுலபமா நம்ப முடியாது.. இதுல இன்னும் வெவகாரம் இருக்குது...

அதே வேளை சாமியாராகரவனெல்லாம் செம வெவரமானவனுங்களாதன் இருக்கானுங்கைய்யா.. எவ்வளவு திறமையாப் பேசிப் பேசியே மக்களை மயக்கறானுங்க!!

மக்களாப் பாத்துத் திருந்துனாத்தான் ஆச்சு!!

எம்.ஏ.சுசீலா said...

தர்ஷன் சொன்னதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
நடிகை புனிதர் வேடமிட்டுப் பொய் கூறித் திரியவில்லை.
மக்களை ஏமாற்றி முட்டாளாக்கும் காவிகளைப் பற்றித்தான் கவலை கொள்ள வேண்டும்.

மங்குனி அமைச்சர் said...

தப்பு செய்றவன திட்டுறேன்டு அன்னைக்கு நமிதா கவாச்சி படம் உன் ப்ளாக்-ல போட்ட
ஏன் இன்னைக்கு அந்த youtube கிளிபிங்க்ஸ் கிடைக்கலையா ?

மர்மயோகி said...

எம் ஏ சுசீலா, ers, தர்ஷன்,சரண் ஆகிய நண்பர்களுக்கு மிகவும் நன்றி..

ADAM said...

good

மர்மயோகி said...

நன்றி ADAM அவர்களே..

மர்மயோகி said...

அன்புள்ள தர்ஷன் அவர்களுக்கு...

நடிகை யாரென்பது அவசியமற்றது என்று கூறி இருக்கிறீர்கள்..எம் ஏ சுசீலா அவர்களும் இதை ஆதரித்திருக்கிறார்கள்..இதற்கான ஒரு பதிவை சீக்கிரமே பதிந்து விடுகிறேன்..நன்றி

Anonymous said...

//தவறு அந்த நடிகையின் மீது இல்லையா..//

எப்படி..எப்படி? அவள் மீது எப்படி தவறு.

அப்பெண் எவரையும் ஏமாற்றவைல்லை. முறையாக விவாகரத்து பெற்றவள். தன்னிச்சையான வாழ்க்கை. மற்றப்பெண்ணின் கணவனோடு உல்லாசம் பண்ணவில்லை.

சாமியாரை இவள் போய் seduce பண்ணிணாளா? இல்லை சாமியார் பணத்தைக்கொடுத்து விலைக்கு வந்த பெண்ணா என்பது உங்களுக்கு தெரியுமா?

அவர் பலரோடு உறவு கொண்டவர் என்பது இப்போது வெளிச்சம். இப்பெண் தன்னை சிலமணினேரத்திற்கு விலைபேசியுள்ளாள்.

அவள் தன்னை யாருக்கும் விலைபேசி காம்சுகத்தை தருவது எப்படி தவ்றாகும். அஃது அவள் வாழ்க்கை. அதை எப்படி தவறென்கிறீர்கள்?

அவள் பொதுயிடத்திலிருந்து செய்தாளா? விபச்சாரம் பொதுயிடத்தில் தவறு. மற்ற்வள் கணவோடு உறவு கொள்வது immoral conduct.

இவ்ள் இவ்விரண்டையும் செய்யாத பட்சத்தில் நீங்கள் ஏன் தவறென்கிறீர்கள்?

Anonymous said...

வீடியோ ந்க்கீரன் எடுத்து சன் டிவிக்கு விலைக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அப்பெண்ணின் முகத்தை இன்று காட்டிவிட்டார்கள் போதுமா?

//மேலும் இந்த செய்தி சன் டி வி மற்றும் அவர்களது குடும்ப பத்திரிக்கையான தினகரனில் மட்டுமே வெளியாகி உள்ளது..கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் தினத்தந்தி இதை கண்டுகொள்ளவே இல்லை..//

நக்கீரனுக்கு லடசக்கணக்கின் பணம் கொடுத்தால்தான் உரிமை தருவார்கள். சன் டிவி கொடுத்தது. தினத்தந்தி கொடுக்கவில்லை.

இது ஊடக உலகில் சாதாரணம்.

எண்டி டிவி வீரப்பன் வீடியோவை தங்களிடம் உரிமை பெறாமல் ஒளிபரப்பியதை நீதிமன்றத்தில் வழ்க்கு போட்டு நட்டயீடு பெற்ற்து தெரியுமா?

எனவே சன் டிவியைத் தவிர எவரும் இந்த் வீடியோவை ஒளிபரப்ப நக்கீரன் விடாது.

எனினும் திருட்டு விசிடியாக இது கிடைக்கும்.

Sen said...

it is not the actress that is the issue. She is entitled to do whatever she wants in her private life. It is people like Nithiyananda's who exploit the community at large needs to be exposed.

தமிழ் மாறன் said...

நீங்கள் செக்ஸ்புக் குமுதத்தில் மறைத்து படிப்பீர்கள், செக்ஸ்படத்தை யாரும் இல்லாத நேரத்தில் பார்த்து ரசிப்பீர்கள். குடும்பப்பெண்கள் மட்டும் மானத்தோட இருக்கணும் நீங்கள ஊர் மெய்வீர்கள்... என்னையா கற்ப்பு என்பது ஆண்பெண் இவர்களுக்கும் பொதுவானது. நீங்கள் சொல்லி இருக்கும் வாசகமே இங்கே தவறு.. நீங்கள் பார்க்கலாம் என்றால் பெண்கள் பார்த்தால் என்ன"? .........

சாமியார் என்று சொல்லி ஊரை ஏமாற்றும் ஒருவனை பற்றி அவனது முகத்திரையை கிழிப்பதில் தவறில்லை. நடிகையை பற்றி இதில் போகஸ் செய்யதேவையில்லை. ஏன் என்றால் அவர் தன்னை யோக்கியமானவர் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கவில்லை. நித்யானந்தா ஒரு தனிப்பட்ட நபராக இருந்தால் அதை சொல்ல தேவையில்லை அவர் தன்னை கடவுளின் அவதாரமாக காட்டி மக்களை ஏமாற்றி கோடிகணக்கில் பணம் சம்பாத்து வருவதால் அவரை அடையாளப்படுத்தியதை தவறு என்று சொல்ல முடியாது.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?